கர்ப்பினிகளுக்கு அரசு ரூ 12,000 / உதவி !
குழந்தை பிறந்தவுடன் : BCG / Oral Polio / HEPB
6 வது வாரத்தில் : DPT / Oral Polio / HEPB / HIB
10 வது வாரத்தில் : DPT / Oral Polio / HIB
14 வது வாரத்தில் : DPT / Oral Polio / HEPB / HIB
9 வது மாதத்தில் : Measles
15 வது மாதத்தில் : MMR
18 வது மாதத்தில் : DPT / OPV / HIB Booster
2 வது வருட தொடக்கத்தில் : TYPHOID
தமிழக அரசின் நலத்திட்டங்களில் ஒன்றான “ டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் “ கீழ் கர்ப்பமுற்ற சகோதரிகளுக்கு ரூ 12,000 / அரசின் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
அரசின் உதவி பெற விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி :-
1. அரசு மருத்துவமனை – அதிராம்பட்டினம்
2. அரசு ஆரம்ப சுகாதார மையம் – ராஜாமடம்
பிறந்த குழந்தைகளுக்கு இலவச நோய் தடுப்பு ஊசி !!
மேலும் பிறந்த குழந்தைகளுக்கு டாக்டர்களின் ஆலோசனைகளின் பேரில் கீழ் கண்ட நோய் தடுப்பு ஊசிகளும் மேற்கண்ட மருத்துவமனைகளில் இலவசமாக போட்டுக்கொள்ளலாம்.
6 வது வாரத்தில் : DPT / Oral Polio / HEPB / HIB
10 வது வாரத்தில் : DPT / Oral Polio / HIB
14 வது வாரத்தில் : DPT / Oral Polio / HEPB / HIB
9 வது மாதத்தில் : Measles
15 வது மாதத்தில் : MMR
18 வது மாதத்தில் : DPT / OPV / HIB Booster
2 வது வருட தொடக்கத்தில் : TYPHOID
"பெண்டா வேலண்ட்" தடுப்பூசி :
குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி, நிமோனியா காய்ச்சல், மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களுக்காக தமிழக அரசால் ஒரே தடுப்பு மருந்தாக “ பெண்டா வேலண்ட் “ என்ற தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்களால் போடப்படுகின்றன.
சகோதரிகளே !
அரசு மருத்துவமனைகளில் செலுத்தும் நோய் தடுப்பு ஊசிகள் மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்பட்டு, வீண் விரயமாகும் நம்முடைய பணமும் சேமிக்கப்படுகிறது. ஆகையால் தங்களின் குழந்தைகளுக்கு மேற்க் கண்ட நோய் தடுப்பு ஊசிகளை செலுத்த நமது ஊர் அரசு மருத்துவமனை மற்றும் நமது ஊர் அருகில் உள்ள ராஜமடத்தில் இருக்கிற அரசு ஆரம்ப சுகாதார மையத்தை அணுகி பயனடையுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு வாரம் ‘செவ்வாய் கிழமை’ தோறும் கருவுற்ற சகோதரிகளுக்கும், ‘புதன் கிழமை’ தோறும் குழந்தைகளுக்கும் நோய் தடுப்பு ஊசிகள் போடப்படுகின்றன.
இறைவன் நாடினால், தொடரும்...
- சேக்கனா M.நிஜாம்
9 Responses So Far:
தலைப்பு?
அப்படியா அப்பொ நாங்க வரலெ!
எம் ஹெச் ஜெ,
இது ட்டூ மச்!
மகளிர் மட்டும் வேண்டும்
மகளிருக்கு மட்டும் வேண்டாமா?
ஒழுங்கு மரியாதையா இங்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களைப் படித்து வீட்டுக்காரம்மாவுக்குச் சொல்லிப்போடுங்க!
அப்புறம், அங்கேயும் கவிதை எழுத எதிர்ப்பா? சமீபத்தில் உங்களிடமிருந்து ஒண்ணயும் காணமே?
“ அதிரை சகோதரிகளுக்கு மட்டும் “ என்ற விழிப்புணர்வு அறிவிப்பை அனைத்து சகோதரிகளும் பயன்பெறும் வகையில் “ மகளிர் மட்டும் ! “ என்று தலைப்பிட்ட அதிரை நிருபர் - நெறியாளர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் !
//மகளிருக்கு மட்டும் வேண்டாமா?//
வேண்டும்!
ஆனால்
மகளிரோடு இருப்பவர்களுக்கு!
//கவிதை எழுத எதிர்ப்பா?//
எதிர்ப்பையும் மீறி தீர்ப்பு வரும் உங்களுக்கு சப்போட்டாக!
ரொம்ப கடைந்தெடுத்து ஆராய்ந்தால் தமிழே கூடாதென்று வந்துவிடும்.
காலம் உள்ளவரை நீங்கள் கவிஞர்தான்,நம் மொழி தமிழ் தான். நம் வேதம் குர்-ஆன் தான்.
பயன் தரும் தகவல், இவ்வாறான உதவித் தொகை பெறுவது பற்றி செய்தித் தாள்களில் விளம்பரங்கள் வந்தாலும் தேவையுடைய பெண்கள் எத்தனை பேர் இதனைக் கொண்டு பலன் அடைகிறார்கள் ?
இதனை வாசிக்கும் நண்பர்கள் தேவையுடையவர்களுக்கு எடுத்துச் சொல்லி பயனடையச் செய்ய வேண்டும்.
நன்றி நண்பர்களே,
பெண்களுக்கான சலுகைகள் ஏராளம் அரசுகளால் வழங்கப்பட்டாலும், அதன் அடிப்படை தேவை கருதியேனும் அதனை முறையாக பெற்றுக் கொடுக்க நீங்களெல்லாம் உதவேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
நிஜாம் காக்கா அவர்கள் மிக அழகாக பயனுள்ள தகவல்கள் தந்துள்ளார்கள் இதை மக்கள் அனைவரும் பயனடையவும். இந்த வாயிப்புகளை நலுகவிடாதீர்கள். பிள்ளைகளுக்கு ஊசியை சரியான நேரத்திலும், நாட்களிலும் போட்டுக்கொள்ளுங்கள் அதையும் தவற விடாதீர்கள் மேலே கொடுத்த வாரங்கள், மாதங்கள் இவைகளை சரியாக கணக்கு வைத்து பிள்ளைகளுக்கு ஊசியை போட வேண்டும்.
அபூபக்கர் - அமேஜான்
அரசு உதவிகள் நிறைய இருந்தும் நினைவில் வைத்துக் கொள்ளும்படியாக இதுவரை நாம் தான் அவைகளை கண்டு கொள்ளவில்லையா ? அல்லது இலவசங்களை பெற்றால் இளக்காரமாகிவிடுவோமோ ? என்ற அச்சமா !?
நல்ல பயனுள்ள தகவல்களை அதிரை வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் சகோதரர் சேக்கனா M.நிஜாம் என்றும் நினைவில் நிற்பார், அவர் சமுதாய அக்கறை கொண்ட நலன்விரும்பி மட்டுமல்ல நாம் வாசிக்கத் தவறிய அலல்து நம் கண்களுக்கு எட்டாத விடயங்களை தேடிப் பிடித்து தருகிறார்.
நம்மில் பெரும்பாலோர் ஆளாளுக்கு அவரவர்களுகு பிடித்தவைகளை மட்டுமே தேடலாக வைத்திருக்கும்போது இவ்வாறான விழிப்புணர்வுகளுக்கும், சமுதாய மக்களின் நலனுக்கும் முன்னுரிமை கொடுப்பதை வரவேற்கிறேன் அதோடு மனதார பாராட்டுகிறேன்.
அதிமுக்கியமாக கல்வி - தேடலில் அலைபாயும் மனங்களோடு எங்கே? எப்படி? எதனை? ஏன்? முடியுமா? என்றெல்லாம் தவிக்கும் டீன்ஏஜ் மாணாக்களுக்கு தேவையான வழிகாட்டலையும் தொடரவேண்டும் இன்ஷா அல்லாஹ்...
நம் சமுதாயத்தைப் பொறுத்த மட்டில் கோடு ஒருவர் போட்டால் அங்கே ரோடுபோட ஒன்றுக்கு மேற்பட்ட அல்லது அதற்கு மேலோ வருவார்கள் அதன் பின்னர் அங்கிருந்து பல்வேறு ரோடுகள் கிளைகளாக பிரியும் அனைத்தும் ஒரே கருவை கையில் எடுத்துக் கொண்டு விரும்பிய பெயர்சூட்டலுடன் தண்ணீரில் விட்டெரிந்த கல்லாக அலை எழுப்பிவிட்டு அப்புறம் அந்தக் கல் தண்ணீர் தேக்கத்தின் அடியில் சென்றுவிட்டால் அசைவுகள் தானாக அடங்கிவிடும். அவ்வப்போது அட அன்று விட்டெரிந்த கல் எங்கே சென்றது என்று மற்றொன்றை விட்டெரிந்தால் அதே அலை எழும் அடுத்து அடங்கிவிடும்.
இதில் ஒரு சில சமுதாய நல்லெண்ண நோக்கோடும், மார்கத்தின் தெளிவு நம்மிடையே ஊட்டுவதற்கும் செயல்படும் அதிரை அமைப்புக்களைத் தவிர.
விமர்சனம் என்ற போர்வையில் தான் தோன்றித்தனமாக மதியின் மூதாதையர் தாங்கள்தான் என்று அரைத்த விஷயத்தையே போட்டு அரைப்பதும், ஆலோசனை என்ற பேரில் தன்னால் செயலில் இறங்கிச் செய்ய முடியாததை அடுத்தவர்களின் மீது தினிப்பதும் வழக்கமாகிவிட்டது.
Usefull information.
thanks
Post a Comment