Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மாப்ளே ! வரதட்சனைக் கொடுமைடா ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | January 14, 2012 | , , ,


இன்றைய நவீன உலகம் விரல் நுனியில் விந்தைகள் செய்தாலும் பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளும், பாலியல் பலாத்காரங்களும் குறைந்தபாடில்லை. மாறாக அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இருப்பினும் இவைகளை சட்டமும், சமூகமும் குற்றமென்றே அடையாளப்படுத்தி இருக்கிறது. ஆனால் சமூக அங்கீகாரத்தோடு, குற்றமென்று கூட இணங்காட்டப்படாமல் ஒய்யாரமாய் உலாவி வரும் பெருங்குற்றம், பெண்களுக்கெதிரான வன்மையான கொடுமை வரதட்சனையென்றால் அது மிகையாகாது.

ஒவ்வொரு ஆண்மகனும்(?) தனக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையினைச் சொல்லி பெருமிதம்(?) கொள்ளும் நிலை இன்றும் இருக்கத்தான் செய்கிறது.

சுமார் 10 ஆன்டுகளுக்கு முன்பு என் நண்பன் ஒருவனோடு நடந்த உரையாடல் இது. 

நண்பன் "மாப்ளே! வரதட்சனைக் கொடுமடா!"

உடனே நான் (பதறிப்போய்) "என்னடா சொல்லுறே?"

"ஆமான்டா,  ஒரு லெச்சந்தான் குடுத்தாளுவோ"

நான் "!?!?!?"

இப்படி குறைவாகக் கொடுக்கப்படுவதைத்தான் சமூகம் வரதட்சனை கொடுமை என இனம் கண்டதோ? இது போன்ற கொள்ளைப் பேர்வளிகளுக்கு எனது வரிகளால் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தினால் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே, குறைகளிருப்பின் அது என்னைச் சாரும்..

சந்தை நிலவரம்
தந்தை சொல்ல
விட்டம் பார்த்து
வியந்து நின்றாள் தாய்!

கைகளால் எழுத தெரியாதாம்
கைக்கூலி மட்டும் இலட்சமாம்
பத்தாம் வகுப்பு படித்தவனாம்
ஐந்து இலட்சத்திற்கு குறையாதாம்

பட்டமும் படித்திருப்பதால்
இலட்சங்கள் பத்தாதாம்
பொறியியல் மாப்பிள்ளைக்கு
இருபதுக்குக் குறையாதாம்

இலட்சியங்கள் இல்லாதவர்கள்
இல்லறங்களுக்கு விலை வைக்கிறார்கள்

வைத்தியம் படித்தவனின்
விலை கேட்டு
பைத்தியம் பிடிக்கிறது

வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு
விலையில் வெளிச்சந்தை
வீழ்ச்சியொன்றுமே இல்லையாம்

உள்ளூர் மாப்பிள்ளைக்கு
உத்தியோக மில்லையாம்
உண்ணவும் உடுத்தவும்
பெண் வீடே கொடுக்கனும்

விசா எடுத்து வெளிநாட்டில்
வேலை வாங்கிக் கொடுக்கனும்
இத்தனைக்கும் மாப்பிள்ளை
இலவசமாய்க் கிடைக்காதாம்

இப்படியே
நீள்கிறது பட்டியல்
இந்த ஆண்-(மை)பூசிய
முகத்திற்கு !

அட!
ஆண் மகனே
அவள் போட்டிடும்
பட்டியலைப் பார்

இளமையை இலவசமாய்
பகிர்ந்திடும் இவளோ !

இல்லறம் இணைய
ஒரு தொகை

இல்லம் காத்திட
ஒரு தொகை

உறவை வளர்க்க 
ஒரு தொகை

கருவைச் சுமக்க 
ஒரு தொகை

குழந்தை வளர்க்க
ஒரு தொகை

குடும்பம் காக்க
ஒரு தொகை

கற்போடு காத்திருக்க 
ஒரு தொகை

என்று ஒவ்வொன்றாய்
கணக்குப் போட்டால் 

உன்
கல்யாண வாழ்க்கை
கனவாகிப் போகுமய்யா !

உனக் கென்ன !
நான் கணக்குப் 
பாடத்தில் மக்கு
தப்பிக்க முயல்வாய்
தாய் தந்தையரே
அதில் கில்லாடி 
என்றும் சொல்வாய் !

ஆண்மகனே... !
எல்லாம் இருக்கட்டும்
உன் 
உயிருக்கும் உடைமைக்கும்
உத்திரவாதம் ஏதும்
உண்டா ?

பெரும் ஜாம்பவான்கள் களம் காணும் இவ்வலைச் சோலையில் இந்த எளியோனின் வரிகளில். குறை கண்டிருப்பின் நிவர்த்திக்க உதவிடுக ! 

-அபு ஈசா

16 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல விழிப்புணர்வுமிக்க கட்டுரையுடன் கூடிய கவிதை!

//குறை கண்டிருப்பின் நிவர்த்திக்க உதவிடுக !//

குறைகளை ஆண்-(மை)பூசிய அவன்கள் தான் நிவர்த்திக்க முற்படவேண்டும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ அபு‍ ஈஸா அருமையாய் வடித்தெடுத்திருக்கிறீர். செப்பையில் அறையும் படி இங்ஙனம் செம்மையாய் பலர் கவிதைகள் வடித்திருந்தாலும் வரதட்சிணை வாங்கிய ஒருவன் தன் மகளுக்கு திருமண சமயத்தில் அந்த பிண/மணமகன் வீட்டில் கேட்பதை வேண்டா வெறுப்பாய் கொடுத்து மாரடிக்கும் பொழுது தான் முன்பு வாங்கியதன் உண்மை வருத்தம் விளங்கும் இவ‌னுக்கு.

வினை விதைத்தவன் வினையைத்தானே அறுக்க முடியும்?

அவரையை விதைத்து விட்டு துவரையை எதிர்பார்க்கலாமோ?

க‌ண் மூடி எம்மை ம‌ண் மூடும் முன் விழித்தெழுவோம் செழித்து வாழ்வோம்....

வாழ்த்துக்கள்...

Muhammad abubacker ( LMS ) said...

// குறைகளை ஆண்-(மை)பூசிய அவன்கள் தான் நிவர்த்திக்க முற்படவேண்டும்.//

சபாஷ் அதே.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

என்னுடைய அறிவுக்கு எட்டியது "பொம்புளப்புள்ளெ பொறந்தா பரக்கத்து" என்று சொல்வது எங்கு சாத்தியம் என்றால் பெண்பிள்ளைகளை பெற்று முறையே வளர்த்து தீன், துனியா கல்வி புகட்டி, ஆளாக்கி மஹர் வாங்கி அதற்கு திருமணம் முடித்து மணமகன் வீட்டுடன் அனுப்பிய‌ பிறகு அவர்கள் இருவரின் இல்லற வாழ்க்கையில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்.

வீடு கொடுத்து, பணம் கொடுத்து, சீர் கொடுத்து, நகை செய்து கொடுத்து, வீட்டில் வருடக்கணக்கில் உக்கார வைத்து சாப்பாடு போட்டு, சகலமும் செய்து, மாப்பிள்ளைகளுக்கு விசாவும் அடித்து கொடுத்து பிறகு வேலையும் வாங்கி கொடுத்து பிறகு இவனுக்கு பிறக்கும் பெண் பிள்ளைக்கு சாத்தியப்படுமா? என்பதை நம் சிந்தனைக்கே விட்டுவிடுவோம்.

ZAKIR HUSSAIN said...

//ஒவ்வொன்றாய்
கணக்குப் போட்டால்

உன்
கல்யாண வாழ்க்கை
கனவாகிப் போகுமய்யா !//

உண்மைதான்...பசங்க படிக்காமல் வெட்டியாக திரிவதும், பெண் பிள்ளைகள் நல்லபடியாக படிப்பதும் இந்த "நல்ல காலத்தை" கொண்டுவரும்

KALAM SHAICK ABDUL KADER said...

இப்படிப்பட்ட அற்புதமான - எழுச்சியூட்டும் கவிதைகளை எழுதும் திற்னை அல்லாஹ் உங்கட்கு வழங்கியுள்ளான். தொடர்ந்து எழுதுங்கள். சமுதாயப் பிரச்னைகள் என்னும் சமுத்திரப் பிரளயங்களச் சிரட்டை அளவேனும் அள்ளித் தடுப்போம்;கவிதைகளால் அறைகூவல் விடுபோம்.

வாருங்கள் வளர்கவி அபூஈசா!
தாருங்கள் கவிதைகளைத் தமிழ்நேசா!!

நற்கவிதைகள் ஆகும் என்றும் நச்சுக்கவிதைகள் ஆகாவென்றும் எல்லாரும் விளங்கிக் கொண்ட பின்னரும் விலகிச் செல்ல வேண்டா.

இதே அ.நி. வலைத்தளத்தில் “வயசு வந்து போச்சு” என்ற என் கவிதையினை மற்ற இணைய தளங்களிலும் பதிவு செய்தேன்;அதனைக் கண்ணுற்ற ஓர் ஆடவன்,”வரதக்‌ஷணை வாங்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வைத்தது உங்கள் கவிதை” என்று குவைத்திலிருந்துத் தொலைபேசி மூலம் சொன்னது என் கவிதைக்குக் கிடைத்த நற்சான்று. அதுவேப்போல், உங்களின் இக்கவிதையின் மூலம் ஓர் ஆடவன் திருந்தினால் கூட உங்களின் எண்ணம் ஈடேறும். வாழ்க! வளர்க!!


ஓசைநயத்தில் உள்ளத்தை ஓர்மைப்படுத்தி
கவிலயத்தில் கருத்துக்களைக் கூர்மைப்படுத்திக்
“கவியன்பனாய்” வாழும் அடியேன்
அன்பால் அரவணைக்கக் காத்திருக்கின்றேன்

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// உள்ளூர் மாப்பிள்ளைக்கு
உத்தியோக மில்லையாம்
உண்ணவும் உடுத்தவும்
பெண் வீடே கொடுக்கனும் //

நச்சுகளுக்கு பாடம் கற்று தரும் நச்சென்ற வரிகள். சகோ அபு ஈசா இன்னும் வரிஞ்சி கட்டுங்க.

லெ.மு.செ.அபுபக்கர்

மட்டுறுத்தலுடன் பதியப்பட்டிருக்கிறது - நெறியாளர்

Anonymous said...

அபூ ஈசா பிளந்து எடுத்து விட்டார். வரிக்கு வரி யதார்த்தம்.

நிதர்சனத்தின் தொகுப்பு
நிஜங்களின் படபடப்பு.

கடந்த வாரம் அபூஹஷிமா என்ற எனது நாகர்கோயில் நண்பர் ஒருவர் எழுதிய இந்த கவிதையும் படிக்க நேரிட்டது.

கல்யாண வியாபாரம்
களைகட்ட ஆரம்பித்தது!
மாடிவீட்டு மைம்பாத்துமா
லேசுபட்ட ஆளில்லை!
தன்னிடம் இருக்கும்
நூறு பவுனு நகையைவிட
பக்கத்து வீட்டு
அசம்பீவியிடம் இருக்கும்
முப்பது பவுனு நகையைப் பார்த்து
பொச்சரிப்பு கொண்டவள்!
ஊரிலே பெரும் பணக்காரி என்ற
பெருமை கொண்டவள்!
தரகர் எச்சரிக்கையோடு
பெண்ணின் படங்களைக் காட்ட
பையனின் உம்மா மைம்பாத்துமா
கண்களால் எடைபோட
ஆரம்பித்தாள்!

"ஒய் தரகரே,
பொண்ணு கருப்போ வெளுப்போ
கவலையில்லை!
நெட்டையோ குட்டையோ
எதுவாக இருந்தாலும்
பரவாயில்லை!
பையன் தௌஹீதாக்கும்
பணம் ஒண்ணும்
வாங்க மாட்டான்......"
பெருமையோடு வந்த வார்த்தைகளில்
தரகர்
வாய் பிளந்து நிற்கும்போது
மைம்பாத்துமா சொன்னாள் -
"கண்டிசன் ஒண்ணே ஒண்ணு!
கோடீஸ்வரத் தகப்பனின்
ஒரே மகளாயிருக்கணும் பொண்ணு !

இப்படியும் இருக்கத்தான் செய்கிறது.

Ibrahim Ansari

Anonymous said...

மாப்பிள்ளை வரதட்சனைக் கொடுமை பெரும் கொடுமையாக இருக்கிறது கல்யாணம் முடிக்கிற மாப்ளேக்கு தெரியாமல் வரதட்சணை வாங்கிவிடுகிறார்கள். இப்போ உள்ள சிறுவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் அப்படி இருந்தும் வீட்டில் உள்ள பெற்றோர்கள் தன்னுடைய பிள்ளைகளுக்கு தெரியாமல் பெண்வீட்டாரிடமிருந்து வரதட்சணை கேட்டு பாடைய் படுத்துகிறார்கள். பெண் வீட்டாரை கரும்பு பிழிகிற மாதிரி பிழிந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பெண்ணை பெற்ற தகப்பன் அவர்களுக்கு வெளிநாட்டிலையை காலமும், நேரமும், வயதும், கழிந்து கொண்டே போகுது. மாப்பிள்ளை வீட்டார்களுக்கு இடை தரகர்கள் பெண் வீட்டில் இவ்வளவு பணம் வாங்கு சீர், சீராட்டு கேல் என்றல்லாம் தூண்டி விடுவார்கள். மாப்பிள்ளை பெற்ற பெற்றோர்கள் சும்மா இருந்தாலும் இடையில் உள்ளவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் எதாவது கிளப்பிவிட்டுட்டே இருப்பார்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n): சும்மா(தான்) கேட்டு வைக்கிறேன்... நேரமிருந்தால் வாங்களேன் இந்தப் பக்கம் !

? - வரதட்சனைன்னா என்னாங்க !

? - ஏனுங்க அது அவ்வ்வ்வ்ளோ கொடுமையாங்க !

? - அத குத்தம் மட்டுமே சொல்றாங்களே அதை கொஞ்சம் திருத்த என்னதாங்க வழி !

? - வரனுக்கு தட்சனை வழங்குபவர்கள் முஸ்லீம்கள் இல்லை என்பது தெள்ளத் தெளிவு அப்புறம் ஏனுங்க அந்த கொடுமை நம்ம ஏரியாவுல ஆடுது ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இ.அ.காக்கா: அழகான கவிதை...

கவிதையின் நிறைவில் கண்டிஷன் !

எங்கும் எதிலும் என்றும் ஒரே ஒரு கொள்கை ! :)

sabeer.abushahruk said...

அபு ஈஸா,
அவசியாமானதொரு சப்ஜெக்ட்டை எடுத்து அருமையான சொன்னதில் உங்கள் சமூக அக்கறை தெரிகிறது.

வாழ்த்துகள்.

அப்துல்மாலிக் said...

வரதட்சனையை விடுங்க அது காசா 5-10 லட்சம் தலைய அடமான வெச்சு கொடுத்துடலாம், இதையும் கொடுத்து பொண்ணுக்கு வீடு (நெலம் வாங்கி, அதுலே வீடுகட்டி(அதுவும் மணமகன் விருப்பத்துக்கு)) அப்போ அறும் பாருங்க பெற்றோரின் தாலி இதுதாங்க கொடும. இந்த நிலம் வாங்க, வீடு கட்ட பேங்க் வாசலில் நகைய அடமான வெச்சு காசாக்க காத்துக்கிடக்கு நம் சமூகம், இதுக்கிடையே பேங்க் காரன் படுத்தும் பாடு இருக்கே.. எதை சொல்ல எதை விட...

நிச்சயம் இதுக்கெல்லாம் மாற்றம் நம் இளைஞர்களின் கையிலெதான் இருக்கு, அல்லாஹ் போதுமானவன் நம் சமூக பெண்களை காக்க...

அப்துல்மாலிக் said...

வரிகள் ஒவ்வொன்றும் செறுப்பால் அடித்தாமாதிரி இருக்கு சகோ. அபு ஈஸா

இவனுங்களுக்கென்ன அந்த அடியையும் வாங்கிட்டு ரொம்ப வலித்தால் கோடாலிசெப் தடவிக்கிட்டு போய்ட்டே இருப்பாங்க....

Yasir said...

ஆண்-(மை)பூசிய
முகத்திற்கு ! i like it....superb brother

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நான் எழுப்பிய ஐயங்களுக்கு MSM(n)டமிருந்து பதிலைப் பெற்றேன் அதனை விரைவில் தனிப் பதிவாக பதிவுக்குள் இன்ஷா அல்லாஹ்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு