Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன்று ஒரு தகவல் ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | January 31, 2012 | , , ,


சில சுவராஸ்யமான தகவல்களைத் தருவதுதான் இந்த சிறு தொகுப்பின் நோக்கம். சும்மா போட்டு அறுக்கிறானே என்று அலுத்துக்கபிடாது. சோற்றில் அஞ்சுகறியையும் வச்சு சுவையாக பரிமாறுவதுதான் நோக்கமே தவிர. வேறெதுவும் இல்லை, இரண்டு கறிதான் இங்கே இருக்கு மத்த மூணு எங்கேண்டு கேட்காதீங்க. நேரம் கிடைச்சா வரும் (ஆனா வராது)..

நடைபயிற்சி

அக்குபஞ்ச்சர் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள், இது சைக்கிள் டயரை பஞ்ச்சர் செய்வதுபோல,நம்முடைய பாதத்தை பஞ்ச்சர் செய்து சில வியாதிகளை பக்குவப்படுத்துவதுதான் அது அல்லாஹ் நம் பாதத்தை நடப்பதற்காகத்தான் படைத்து இருக்கின்றான்..நடக்காமல் நந்திபோல் இருப்பதால் என்னென்ன வியாதிகள் வரும் என்பதை நாம் பார்த்து / அனுபவித்து கொண்டு இருக்கின்றோம்.அல்லாஹ் காப்பானாக அமீன்

நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஒரு சென்சர் (sensor)  புள்ளி நம் பாதத்தில் உண்டு,அங்குதான் அதன் நரம்புகள் முடிவடைவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன, கீழே உள்ள படத்தைப் பார்த்தால் உங்களுக்கு புரியும், இதயம் வலப்புற பாதத்தில் உள்ளதை அறியலாம்,அந்த சென்சார் புள்ளிகளை மசாஜ் செய்வது மூலம்,அதன் வலிகளை குணப்படுத்த முடியும் என்று பஞ்ச்சர் செய்பவர்கள் கூறுகிறார்கள்.


அல்லாஹ் நாம் நடக்க பாதத்தை வைத்து அதன் மூலம் நம் உறுப்புகளை சுறுசுறுப்படைய செய்கின்றான் அதனால் தொடர்ந்து உறுப்புகளை மசாஜ் செய்வோமா அட அதாங்க “வாக்கிங்” போவமா நண்பர்களே

இரத்தவகையும், குணங்களும்

முயற்சிதான் மெய் வருத்தக்கூலிதரும் என்ற சொல்லுக்கு ஏற்ப, நாம் எந்த் அளவிற்கு தூய்மையான எண்ணத்துடன் முயற்ச்சி செய்கிறோமோ அந்த அளவிற்குத்தான் வெற்றி கிட்டும், அடுப்பே எரிக்காமே அல்லாஹ் சோறு தருவான் என்றிருப்பது மடமையின் உச்சகட்டம்

ஒரு சில ஆராய்ச்சியின் முடிவில் கிடைத்த தகவல்கள் படி வெவ்வேறு இரத்த குருப்பை சேர்த்தவர்களின் குணாதிசியங்கள் எப்படி இருக்கு என்று பார்ப்போம். இது உங்கள் குணங்களுடன் ஒத்து போகவில்லையென்றால் எனக்கெதிரா எதுவும் கேஸ் போட்டுராதீங்க.. !

‘O” டைப்

எதற்க்கும் தலைமை தாங்க வேண்டும் என்ற விருப்பம், குறிக்கோளை அடைய வேண்டும் என்ற தாகம் அதனை அடையும் வரை களைப்படையாத முயற்ச்சி,உங்களை நம்பலாம் அவ்வளவு நல்லவரு நீங்க,ஆனா சாதனைகள் செய்தாலும் பெருமை அடித்துக்கொள்வீர்கள் கொஞ்சம் பொறாமையும் உங்களிடம் உண்டு

‘A” டைப்

உங்களுக்கு ஒற்றுமை, அமைதி, ஒருங்கிணைப்பு ரொம்ப அதிகம்,மற்ற ஆள்கள் கூட பழகkகூடிய,பொறுமையாக உள்ள அன்பானவங்க நீங்க கொஞ்சம் பிடிவாத குணமும்,பரபரப்பாகவும் திரிவீங்க நீங்க

’B” டைப்

நீங்க கொஞ்சம் அப்படியும் இப்படியும் உள்ள நபர்தான், முகத்திற்கு நேரா பேசக்கூடிய ஆள்தான் உங்க வழியிலயே எல்லாத்தையும் செய்ய விரும்புவீங்க.கிரியேட்டிவிட்டியும் உங்களிடம் உண்டு ,ஆனால் நீங்க தனியாக சும்மா கம்பு போல நின்று செயல்களை செய்ய வேண்டும் என்ற குணம் உங்களை சில சமயம் துன்பத்திலும் மாட்டிவிடும்

“AB” டைப்

கூலான / கட்டுப்பாடனா ஆள்தான் நீங்க.எல்லாருக்கும் உங்களை பிடிக்கும், இயற்கையாகவே மற்றவர்களை மகிழ்ச்சிபடுத்த வேண்டும் என்ற குணம் உங்களிடம் மேலோங்கி இருக்கும்,ஆனா உங்களக்கு நட்ப்போட பழகத்தெரியாது, ஒரு விசயத்தில் 'டக்'கென்று முடிவெடுக்கவும் தெரியாது

என்னங்க! தகவல்கள் நல்லா இருந்துச்சா இல்லை புளிச்சமாவை அரைத்த கதைதானா!?

-முஹம்மது யாசிர்

21 Responses So Far:

Shameed said...

தகவல் நல்லா இருக்கு ஆனா ஒன்னு மிஸ்ஸிங் உங்க இரத்த குருப் என்ன என்று சொல்லி இருந்த நீங்க சொன்ன கருத்தும் உங்க குணமும் ஒத்து போவுதான்னு சரி பார்த்து இருக்கலாம். (இததான் தீட்டிய மரத்தில் பதம் பார்ப்பது என்று சொல்வார்கள்)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

யான் யாசரு, நம்ம கால் பாதத்துலெ ஏஹப்பட்ட விசயங்கள் அடங்கி இருப்பதால் (தர்ஹாவுடன் ஒப்பிட்டு யாரும் கொந்தளிச்சிட வேண்டாம்) நம் உடல் என்னும் கம்ப்யூட்டருக்கு நம்ம கால் தான் CPUண்டு சொல்லலாமா?

நல்ல தமாசா எழுத கத்துக்கிட்டியெலே எப்புடி?

Yasir said...

//உங்க இரத்த குருப் என்ன // என்னுடையது "A1+" காக்கா...இது “A" குரூப்பிற்க்கு சமம்...ஆனால் ஒன்னு (1) சேர்ந்ததால என்னவோ கொஞ்சம் பிடிவாத குணம் கம்மி..ஆனால் வேலையில் நாங்க பயனுள்ள வகையில் பரபரப்பா செய்து காரியத்தை முடித்து விடுவோம்..ஆமா உங்களுக்கு குரூப் என்ன இது உங்களுக்கு ஒத்து வருதா ??

Yasir said...

//நல்ல தமாசா எழுத கத்துக்கிட்டியெலே எப்புடி?// உங்களை போல உள்ள அனைத்து அதிரை நிருபர் பதிவாளர்களின் மூச்சு காத்து பட்டுதான்

சேக்கனா M. நிஜாம் said...

இதிலே நண்பர் யாசிர் எந்த டைப் ?

Yasir said...

To Sabeer Kakka
மாலிக்கின் சென்ற வார சந்திப்பில் அவர் ரூமில் நடந்தது
இண்டெர்நெட காலிங் கார்டு விற்ற ஒருவரை ஷார்ஜா போலீஸ் பிடித்து கேஸ் போட்டு சிறிது நாட்கள் வைத்துவிட்டு பிணையில் விடுதலை செய்து இருந்தது,அவர் அங்கு வந்து சோகமாக அமர்ந்திருந்தார்....அப்பொழுது மாலிக்கின் வேறொரு ரூம்மேட் கவலையாக மாலிக்கிடம் ...” நானா இந்த கேஸ் எப்ப முடியும்” என்று கேட்க அதற்க்கு மாலிக் “ ரெண்டு பெரிய சட்டியில மட்டன் பிரியாணி போடுங்க கேஸ் முடிந்துவிடும் “ என்று அடுப்பு கேஸையை சம்பந்த படுத்தி சொல்லியது கேட்டவர் அடிக்க பாய்ந்து விட்டார்...கேஸில் மாட்டியவர் சோகத்தையும் மறந்து சிரித்து விட்டார்

Anonymous said...

அன்பு மருமகனார் யாசிர் அவர்களே!



அப்படி போடு அரிவாளை என்பதுபோல் போட்டு இருக்கிறீர்கள்.

தகவலும் நடையும் அப்படியே பஞ்சனையில் படுத்துக்கொண்டு , பேத்தி பேரன்கள் பிஞ்சுக்கரங்களால் நமது பாதங்களை பிடித்துவிடும்போது வருமே ஒரு சுகம் ( இதிலும் அனுபவம்தான் பேசுகிறது) அது போல் இருக்கிறது.

மற்றவையும் வருமா வராதா?

இபுராகிம் அன்சாரி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நண்பர் யாசிர்,

தகவல் சூவரஸ்யமாக இருந்தது.

வாங்க நடக்கலாம் என்று அழைத்துச் சென்று ஒரு வகுப்பே எடுத்திட்டியலே. சார் எனக்கு ஒரு சந்தேகம் இந்த இரத்த குண ஆராய்ச்சி எந்த நாட்டு மக்களிடம் எடுக்கப்பட்டது?

வேண்டுகோள்: இந்த பதிவுக்காகவாது ரபீக் காக்காவின் கருத்தை கேட்டு பதியுங்கள் யாசிரே.

ZAKIR HUSSAIN said...

To Brother Yasir,

இங்கு அளவுக்கு அதிகமான FOOT REFLEXOLOGY CENTERS இருக்கிறது. பெரும்பாலான டூரிஸ்ட் கூடும் இடங்களில் வேறு விதமான தொழிலுக்கு இந்த சென்டர்கள் பயன்படுத்துகிறார்கள்.

முறையான FOOT REFLEXOLOGY செய்தால் உடம்பில் உள்ள TOXIC வெளியாகும். இதை FOOT REFLEXOLOGY செய்தவுடன் சிறுநீர் கழிக்கும்போது அதன் நிறம் Dark yellow வாக இருப்பதில் தெரியும்.


"ரத்த ஜோசியம்" புதுமை [ படித்திருக்கிறேன் ] இனிமேல் யாரும் யாசிர் வீட்டுக்கு போகும்போது ' எட்டுமுழ வேட்டி / அரிசி ஒரு படி / வெடக்கோழி / யெல்லாம் கொண்டு போய் கொடுத்து "விசா எப்ப வரும் கொஞ்சம் பார்த்து சொல்லு வாப்பா" என கேக்கப்டாது.

Yasir said...

//இரத்த குண ஆராய்ச்சி எந்த நாட்டு மக்களிடம் எடுக்கப்பட்டது?//ஜப்பான் நாட்டு மக்களிடமும் என்று தகவல்

ZAKIR HUSSAIN said...

ரத்தத்தை பற்றி ஒரு அதிசயம்:

ரத்தத்தை தனித்தனியாக அதன் மூலக்கூறுகளை [ In pathological lab] பிரிக்கலாம்.

ஆனால் அவற்றை ஒன்றாக சேர்த்தால் ரத்தம் ஆகாது.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ.யாசிர் எப்போ ஜோசியம் கத்துக்கிட்டிங்க.

// A” டைப்
உங்களுக்கு ஒற்றுமை, அமைதி, ஒருங்கிணைப்பு ரொம்ப அதிகம்,மற்ற ஆள்கள் கூட பழகkகூடிய,பொறுமையாக உள்ள அன்பானவங்க நீங்க கொஞ்சம் பிடிவாத குணமும்,பரபரப்பாகவும் திரிவீங்க நீங்க//

எனக்கு A + டைப் அதுனாலே அதகமா பிடிவாதம் குணம் இருக்குமோ ?

Shameed said...

Yasir சொன்னது…
//ஆமா உங்களுக்கு குரூப் என்ன இது உங்களுக்கு ஒத்து வருதா ?? //

நாங்க ‘O” டைப்.இதுலே நாங்க ஒத்து போறோமா இல்லையா என்பதை எங்கள் குணம் அறிந்த நீங்கள் தான் சொல்லணும்

Yasir said...

//நாங்க ‘O” டைப்// என் முத்த மகளும் “O” தான்.....உங்களை ரொம்ப நல்லவரூண்டு நாங்க சொல்லித்தான் தெரியுனுமா உங்க சுறுசுறுப்பு எங்கள் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே...

sabeer.abushahruk said...

அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்களை அள்ளிதந்த தம்பி யாசிருக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

நகைச்சுவை இழையோடும் எழுத்துகள் எப்போதும் சுவாரஸ்யமாகவே இருக்கும். உங்கள் எழுத்தில் அது கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது.

என்னதான் நல்லதைச் சொன்னாலும் கடுசாச் சொன்னா கூட்டங்கலைஞ்சிடும். 
இப்படி தேன் தடவித் தந்தால்தான் எடுத்துப்போம். 

ஆனால், ஆடிக்கு ஒருதபா அமாவாசைக்கு ஒரு தபான்னு எழுதும்     டைப்பை மாத்துங்க யாசிர்.

sabeer.abushahruk said...

ஆமா, அதுல உள்ள சில (நல்ல)பழக்கங்களில் பாதியும் இதுல உள்ள சில (நல்ல) பழக்கங்களில் பாதியும் கலந்து செய்த கலவையாக இருப்பதுபோல் எனக்குத் தோன்றுகிறதே நான் எந்த குரூப்புன்னு சொல்றது?

க்ளூ: யாசிரின் இளைய மகளுக்கும் மூத்த மகனுக்கும் இடையிலுள்ளது யாரோ அவங்க குரூப்புத்தான் நானும்.

இப்புடித்தான் ஒரு கேள்வியில் "நேருவுக்குப் பிடித்த பூ எது?" என்ற கேள்விக்கு க்ளூ கேட்க, " முதல் எழுத்து ரோ கடைசி எழுத்து ஜா, இடையில் எழுத்தே இல்லை" என்றாய்ங்களாம்.

sabeer.abushahruk said...

யாசிர்,
அந்த கேஸ் ஜோக் படிச்சிட்டு சப்தமா சிரிச்சத கேட்டு வல்லரசு கிச்சென்லேர்ந்து ஓடி வந்து 'தலைக்கு வட்டு பிடிச்ச பிராந்தனை" பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு போனாங்க.

நீங்க செம லக்கி. இந்த மாதிரி ஃப்ர்ஸ்ட் கிலாஸ் ஜோக்கெல்லாம் உங்களுக்குத்தான் ஃப்ரெஷ்ஷாக் கிடைக்குது.

அந்த டைமிங்கில் அடித்தவருக்கு என் பிரத்யேக ஷொட்டு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நடக்கட்டும் நடக்கட்டும் !

இரத்தம் பிழியும் முதலாளிங்கிற மந்திரவாதிக்கு ஏதாவது பலன் இருக்கா ?

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,

அவனென்ன ரெத்தக் காட்டேரியா? எங்க சந்து பக்கம் வரட்டும். பின்னாலேயே வந்து சொடேர்னு அவன் பிடரியில் ஒன்னு குடுத்துட்டு ஒர்ர்ரே ஓட்டம் ஓடிடறேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

விந்தையான தகவல்களுக்கு நன்றி!

அப்துல்மாலிக் said...

கால் பாதத்துலே இவ்வளவு விசயம் இருக்கா, தகவலுக்கு நன்றி

மேலும், ஜோசியம் சொல்வது மாதிரி சொல்வது அதை படிக்கும்போது 80% ஒத்துப்போறதுமாதிரி இருக்கும், எல்லாம் நெனப்புதான் பொழப்ப கெடுக்குது...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு