Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள்... ! 38

அதிரைநிருபர் பதிப்பகம் | January 10, 2012 | , , , ,


நீங்கள் முன்னேறுபவராய் இருக்கிறீர்கள் அல்லது பின்னடைபவராக இருக்கிறீர்கள். இரண்டுக்கும் இடைப்பட்டதாக இருப்பதாக சொல்வது நம்மை நாம் சமாதானப்படுத்திக் கொள்வதுதான்.

வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களின் முதல் குணம். அவர்கள் உண்மையை எதிர் கொள்பவர்கள். You must have the guts to face the truth.

உங்கள் குணம் / தரம் உங்களுக்கு தெரியவில்லையா..? அல்லது நீங்க... ரொம்ப(வே) நல்லவன்னு நினைத்துக் கொண்டிடுக்கிறீர்களா...? நீங்கள் உண்மையிலேயே யார் என்பதற்கு ஒரு சின்ன பயிற்சி இருக்கிறது. இதை Mirroring Technique  என்று சொல்வார்கள். இதை ஷாவ்லின் [Shaolin]  பயிற்சிகளில் பயன்படுத்துவார்கள். உங்களோடு இருப்பவர்கள் உங்கள் முகத்தை நேருக்கு நேர் பார்த்து ' நீ ஒரு சோம்பேரி, நீ சொல்றவன,.செய்றவன் இல்லெ... நீ ஒரு மிகப்பெரிய காலம் தாழ்த்துபவன்...' இப்படி அடுக்கி கொண்டே போவார்கள். அவர்களின் விமர்சனம் உண்மையில்லாத பட்சத்தில் ஒன்றும் இருக்காது. அது உண்மையாய் இருந்தால் அழுகை கியாரன்டியா வரும். உண்மையை சந்திக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணீர் வரும்.

இதை கார்ப்பரேட் ட்ரைனிங் இல் எப்படி பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?. உங்களுடன் ட்ரைனிங் வந்தவர்கள் ஒரு 10-பேர் என வைத்துக் கொள்வோம். எல்லோர் கையிலும் ஒரு பேப்பர் கொடுத்து உங்களைப்பற்றி கருத்து எழுத  சொல்வார்கள் [உண்மை மட்டும்] அதில் எழுதியவர்கள் பெயர் இருக்காது.  அந்த 10 பேரின் கருத்தில் எது ரிப்பீட் ஆக வருகிறதோ அது நிச்சயம் உடனே கவனிக்கபட வேண்டிய விசயம். அது உங்களின் பிரதிபலிப்பு.

மேற்சொன்ன இரண்டு பயிற்சிகளிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.
முதலில் கற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் நல்ல கல்வி எங்கிருந்து கிடைக்கிறது என்பது முக்கியமல்ல. நாம் எதைக் கற்றுக்கொண்டால் நமக்கு பயன்படும் என்பது முக்கியம். இப்படித்தான் யூதர்களை சிலர் வெறுத்து அவர்கள் கண்டுபிடித்த பல மருத்துவ கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ளவே இல்லை. நஷ்டம் முஸ்லீம்களுக்குதான் என்பதை இதுவரை இந்த சில பிடிவாதக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

அமைதியில்லாத மனம் எதையும் தொடர்ந்து சாதிக்காது. நம்மிடம் உள்ள மிகப்பெரிய பொக்கிஷம் தொழுகை. இதன் மூலம் பல சுபிட்சங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தெளிவாக முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து “CREATION” நீங்கள் இதுவரை உங்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளில் சில முடிவுக்கு வந்திருக்கும் சூழ்நிலை. இதில் மாற்றம் ஏற்படும் என தெரிந்திருக்க வேண்டும். இதை Personal creation என சொல்லப்படுகிறது.

உங்களின் இயக்கத்தில் (செயல்களில்), எண்ணத்தில் இது உங்களுக்கே தெரியாமல் சுற்றி சுற்றி ஒரு பிளாஸ்டர் மாதிரி ஒட்டி இருக்கும். உங்கள் வார்த்தையில் செயலில் நிச்சயம் இது தெரியும். உதாரணத்துக்கு பல விசயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்ததை சொல்லலாம். சின்ன வயதில் வெளியூரில் படம் பார்க்க போனதற்கு ஒப்பாரி வைத்த பெரியவர்கள். நீங்கள் மதித்து நின்று கொண்டிருக்கும்போது நீங்கள் ஒரு உதவாக்கரை என்று லேசாக மனதில் ட்ரில் செய்திருப்பார்கள். உங்கள் புது முயற்சி அனைத்திலும் இந்த 'உதவாக்கரை' கமர்சியல் ப்ரேக் அடிக்கடி வந்து போகும்.

முதலில் வாழ்க்கையில் சேர்ந்த குப்பைகளை முதலில் மனதிலிருந்து தூக்கி எறிய கற்றுக்கொள்ளுங்கள்.  குப்பைகளை அகற்றாமல் அதில் அழகான வீடு கட்ட நினைப்பதை எப்படி சொல்வது...

எல்லாம் எனக்கு தெரியும் என்ற மனம் எதையும் கற்றுக்கொள்ள விடாமல் எப்போதும் உங்களுக்கெ தெரியாமல் ஒரு மாதிரி 'ஹேங்' ஆன கம்ப்யூட்டர் மாதிரி இருக்கும். கம்ப்யூட்டர் ஹேங் ஆகி விட்டால் நீங்கள் சரி செய்து விடலாம் நீங்கள் ஹேங் ஆகி விட்டால்.??

 If you think your training is finished You are FINISHED.

தொடர்ந்து எதற்கு சக்தி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களோ அது பிறகு உண்மையாகிவிடும். எனவே வாழ்க்கையில் எது உங்களுக்கு தேவையில்லையோ அதில் அனாவிசயமாக உங்கள் சக்தியை செலவழிக்காதீர்கள். உதாரணம்; இல்லாத நோய் இருப்பதாக நினைத்து கவலைப்படுவது. / உங்களின் தொழிலில் நீங்கள் செய்த முயற்சிக்கு பலன் இருக்காது என ரிசல்ட் தெரியுமுன் திருவாய் மலர்வது. / தன்னை ஒரு வயதானவன் என்று சொல்லிக்கொண்டிருப்பது.... இதேபோல் வெளிநாட்டில் இருந்து கொண்டு ஊரில் பெண்களுக்கு இடையே நடந்த சண்டைக்கு பஞ்சாயத்து பன்ன நினைப்பது. இதில் லாபம் அடைவது செல்போன் கம்பனிதான் என்பது நேற்று நிலோபர் / ராஜேஸ்வரி மகப்பேரு மருத்துவ மனையில் பிறந்த பிள்ளைகலுக்கு கூட தெரியும்.. இது தொடர்ந்து உங்கள் செயல்களை குறைத்து விடும். அடுத்து வீட்டில் மதிக்காத சூழ்நிலையை சொல்லி அழும் எபிசோட் ஆரம்பித்து விடும்.



காயப்படுத்திய உறவுகளை எதிரியாக பார்ப்பதும் உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும். இன்னும் மனதில் இருக்கும் பாரத்துடன் எவ்வளவு தூரம் உங்களால் நடக்க முடியும்.

சில நடவடிக்கைகளையும் பார்போம். தன்னை சுத்தமாக வைத்துகொள்வது, சரியாக வைத்துக்கொள்வது பொது மக்கள் தொடர்பு உள்ள அனைத்து தொழிலில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். உங்களின் பெல்ட் பக்கிள் தேய்ந்து போய்விட்டதா?. உங்களின் டூத் பிரஸ் சுருளும் அளவுக்கு பயன்படுத்துபவரா?. நிதம் சேவிங் செய்யாமல் மூக்கு முடி வெளீயே தெரிய கஸ்டமர்களை பார்க்க ஆரம்பிக்கும் டைப்பா நீங்கள்.... முதலில் மாற்றிக்கொள்ளுங்கள். நேர்த்தி இல்லாத மனிதனை உலகம் அவ்வளவாக பார்ப்பதில்லை. மென்மையான வாசனை உங்களுக்கு நல்லது. பல்லவன் பஸ்சில் ஏறும்போது 'நேத்திக்கடனுக்கு' நேந்து விட்ட கிடாய் மாதிரி வியர்வை நாறும் எந்த மனிதனும் தொழிலில் சத்தியமாக முன்னேர முடியாது. தன்னை சரி செய்து கொள்ளாதவன் எப்படி தொழிலை சரியாக செய்ய முடியும். அதற்காக அத்தர் போடுகிறேன் என்று ரொம்ப சீப்பாக உள்ள பாட்டில் [இங்கெல்லாம் 5 வெள்ளிக்கு 2 விற்கிறான்] அதை போட்டு பக்கத்தில் இருப்பவர்களுக்கு சைனஸ் பிரச்சினையயை கொடுத்து விடாதீர்கள்.
தொடராக வரும் (இன்ஷா அல்லாஹ்)....
- ZAKIR HUSSAIN


38 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அங்கே ஏணியின் நிழல் சாய்ந்த படிகள் ஒடைந்திருப்பதை படம் போட்டு ஒரு விஷயம் சொல்ல எத்தனித்தேன் ஆனால் இங்கே எல்லாத்தை தூக்கி நிறுத்தும் அற்புதமான படிக்கட்டுகளுக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறீர்கள்...

படிக்கட்டுகளில் இது முதல் படி என்று நம்புகிறேன் இனிமேல் நிறைய படிகள் கட்டுவீர்கள் என்றும் எதிர்பார்க்கிறேன்...

"வெற்றியின் ரகசியம் - இந்த ஆக்கமே ஒரு ஊக்கம்"

எவ்வளவு நாளைக்குத்தான் "Boost is secret of my energy" எத்தனை நாட்களுக்கு இதையே சொல்றது !

sabeer.abushahruk said...

இம்முறையும் பிரச்னையையும் தீர்வுகளையும் ஆழமாகவே சிந்தித்திருக்கிறாய்.

கற்றுக்கொள்ளவும் தெரிந்துகொள்ளவும் விரும்புபவர்கள் எப்பொழுதும் திறந்திருக்கவேண்டும். பலர், தமக்கு எல்லாம் தெரியும் என்று மிதப்பில் மூடியே இருக்கிறார்கள். அவர்களை தட்டியெழுப்பும் உன் எழுத்து.

உர்த்த சிந்தனைக்காரர்கள் போல ஆழமாக சிந்திக்கிறாயே, வயசாயிடுச்சா?

கொலவெறி கேட்டாச்சா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சிந்தனை, சிறப்பு, சிரிப்பு, செறிந்த சீரியல்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜாஹிராக்கா,

அழகான கட்டுரையை அதிகாலையில் படிப்பதில் எவ்வளவு ஊக்கமும், உற்சாகமும் உள்ளத்தில் கரைபுரண்டு ஓடுகிறது தெரியுமா?

காக்கா இங்கு என் வாழ்க்கையிலும் இன்னும் பலர் வாழ்க்கையிலும் நடந்து வரும் ஒரு அசெளகரியமான சூழ்நிலையை பகிர்ந்து கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன்.

நம்மில் பலர் பயந்து, பயந்து வாழ்வில் கிடைக்க இருந்த பல செளகரியமான சூழ்நிலைகளையும், வசதி வாய்ப்புகளையும் இழந்து விட்டோம் மற்றும் இழந்து கொண்டிருக்கிறோம்.

குறுக்கு வழிக்கு வரும் துணிச்சலும், தைரியமும் நேரான வழிக்கு வர தயங்குவது ஏனோ?

வாழ்வில் இது வ‌ரை எவ்வித‌ வியாபார‌மும் செய்த‌தில்லை கால‌மெல்லாம் (வந்தாலும் வரும் வராமலும் போகலாம்) ந‌ஷ்டத்தைப்பற்றி சிந்தித்து, சிந்தித்தே வாழ்க்கையை தொலைத்து வைத்திருந்த காசையும், திறமையையும் பயன்படுத்தாமல் ம‌டிந்த‌வ‌ர்க‌ள் எத்த‌னை பேரோ?

இது போன்ற‌ க‌ட்டுரைக‌ள் அடிக்கடி ப‌டிப்ப‌து இன்னும் எஞ்சி இருக்கும் வாழ்நாளில் ஈருல‌கில் செள‌பாக்கிய‌ம் அடைய‌ ஏதாவ‌து செய்து விட்டு செல்ல‌ வேண்டும் என்ற‌ உந்துத‌லை ஏற்ப‌டுத்துகிற‌து.

படத்தில் தன்னம்பிக்கையை தூண்டிலிலிட்டு லாபம் என்ற மீனையடைய கால்வலியின்றி காத்திருக்கும் அந்த மீனவனின் படம் ரொம்ப புடிச்சிருக்கு.

ஒரு முறை டிவியில் நேசனல் ஜியாக்ரஃபி சேனல் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஏதோ ஒரு நாட்டின் (பெயர் தெரியவில்லை) காட்டுப்பகுதி காண்பிக்கப்பட்டது. அங்கு ஒரு கருத்த மேனியுடைய ஆட்டிடையன் ஆடுகளை மேய்த்துக்கொண்டு சென்றிருந்தான். அவன் கையில் ஒரு சிறு பலகை இருந்தது. அதை அருகில் காட்டும் பொழுது அதில் "ஆயத்துல் குர்ஷி" அரபியில் எழுதப்பட்டு அதை ஓதிக்கொண்டு சென்றுகொண்டிருந்தான் அந்த ஆட்டிடையன். அவன் மனனம் செய்து கொண்டு சென்றானா? இல்லை எழுதிப்பழகிக்கொண்டிருந்தானா? எனபது எனக்கு தெரியவில்லை. இருப்பினும் அவனுடைய ஆர்வம் என்னை அசரவைத்தது. படிப்பதற்கு பள்ளிக்கூடம் தான் செல்ல வேண்டுமென்பதில்லை ஆர்வமிருந்தால் நடுக்காட்டிலும் படித்துக்கொள்ள இயலும் என்பதை உரக்க உணர்த்தியது சுபஹானல்லாஹ்...

சொல்லிக்கிட்டே இருங்க‌க்காக்கா....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

சேக்கனா M. நிஜாம் said...

இளைஞர்களுக்கான நல்ல படிப்பினை கட்டுரை.....தங்களுக்கு வாழ்த்துக்களுடன் தொடரை எதிர் நோக்கும்.......

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சீராக படிகள் ஏற ஜாகிர் காகா போட்ட அஸ்திவாரம் தரம்.அடுத்த வேலையை வேகமாக ஆரம்பிங்கள்.

// அதற்காக அத்தர் போடுகிறேன் என்று ரொம்ப சீப்பாக உள்ள பாட்டில் [இங்கெல்லாம் 5 வெள்ளிக்கு 2 விற்கிறான்] அதை போட்டு பக்கத்தில் இருப்பவர்களுக்கு சைனஸ் பிரச்சினையயை கொடுத்து விடாதீர்கள்.//

என் கடையில் நல்ல அத்தர் இருக்கிறது யாரு கேட்ட சொல்லுங்க.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பு தம்பி ஜாகீர்,

தங்களின் ஆக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது. அதேநேரம் பெருமையாக இருக்கிறது.

இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் செய்திகளை முன்னேறிய இளைஞர்கள் சொல்வது நல்ல விளைவுகளைத்தரும் .

சமுதாய புனரமைப்பின் நாட்டத்தில் நல்ல செய்திகளை உங்களைப்போல் இளைஞர்கள் பரிமாறிக்கொள்வது மிக்க மகிழ்வைத்தருகிறது.

உங்களின் அன்பு தந்தை அவர்களால் சிறுவயதில் அறிவுரைகள் கூறப்பட்டு வளர்ந்த எங்களைப்போன்றவர்கள் உங்களை எண்ணி பெருமைப்படுகிறோம்.

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி.

Anonymous said...

சுய பரிசோதனை செய்ய நல்ல கட்டுரை ஜாகிர் காக்கா.......

அஸ்ஸலாமு அழைக்கும்

பக்கர்... சைடு கேப்புல கடை விளம்பரம் :)

Abdul Rahman - harmys

Muhammad abubacker ( LMS ) said...

வ அலைக்கு முஸ்ஸலாம்

அப்துர் ரஹ்மான் நலமா? உன் புனை பெயரினால் நீ யாரென்று புரியாமல் இருந்தது. எம்.ஹெச்.ஜகாபர் சாதிக் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன்.

// பக்கர்... சைடு கேப்புல கடை விளம்பரம் :) //

வியாபாரத்தில் கண்ணும் கருத்தா இருக்கனும்லே அதான்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

யான் பக்கரு, சைக்கிள் கேப்புளெ செண்டடிச்சி உட்டுட்டியளே....

"கண்ணும் கருத்துமாக" என்று சொல்கிறார்களே கண்ணுக்கும், கருத்துக்கும் என்னா சம்மந்தம்? கண் இருந்தால் தானே கருத்து எழுத முடியும் என்பதாலோ? என்னவோ?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒரு சின்ன தமாசு...

ஒரு முறை என்னுடைய நண்பரைப்பார்க்க தம்மாம் சென்றிருந்தேன். அவரைப்பார்க்க அவருடைய நண்பர் ஒருவர் வேறொரு இடத்திலிருந்தும் வந்திருந்தார். சந்திப்பிற்கு பிறகு நாங்கள் மூவரும் தம்மாம் "சீக்கோ" என்று சொல்லப்படும் கடைவீதி வழியாக சென்று கொண்டிருந்தோம். வழியில் நடைபாதைக்கடையில் ஒருவர் வருவோருக்கும், போவோருக்கும் தன்னிடம் உள்ள செண்ட்டை அடித்துக்காட்டி விற்றுக்கொண்டிருந்தார். அது போல் எங்களுக்கும் அடித்தார். என்னுடைய நண்பரின் நண்பருக்கும் அடித்தார். அதை முகர்ந்து "செண்டுக்கே செண்டா?" என்றார். உடனே சிரித்து விட்டோம். காரணம் இவரும் சைடு பிஸினஸாக அத்தர் வியாபாரம் செய்கிறாராம்.....

சொல்லவா வேனும் மூவரும் அதிரைக்காரர்கள் அல்லவா? ஒருவருக்கொருவர் சொல்லி சொல்லி சிரித்துக்கொண்டோம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

லெமுசெ.பக்கர் சொன்னதிலிருந்து...

//என் கடையில் நல்ல அத்தர் இருக்கிறது யாரு கேட்டா சொல்லுங்க.//

என்னமோ நல்ல மாப்ளெ பொன்னு இருக்கென்று சொல்லுற மாதிரி இருக்கு.

அலாவுதீன்.S. said...

அன்புச் சகோதரர் ஜாகிர்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/// முதலில் வாழ்க்கையில் சேர்ந்த குப்பைகளை முதலில் மனதிலிருந்து தூக்கி எறிய கற்றுக்கொள்ளுங்கள். குப்பைகளை அகற்றாமல் அதில் அழகான வீடு கட்ட நினைப்பதை எப்படி சொல்வது...
அமைதியில்லாத மனம் எதையும் தொடர்ந்து சாதிக்காது. நம்மிடம் உள்ள மிகப்பெரிய பொக்கிஷம் தொழுகை. இதன் மூலம் பல சுபிட்சங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தெளிவாக முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
காயப்படுத்திய உறவுகளை எதிரியாக பார்ப்பதும் உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும். இன்னும் மனதில் இருக்கும் பாரத்துடன் எவ்வளவு தூரம் உங்களால் நடக்க முடியும்.

நேர்த்தி இல்லாத மனிதனை உலகம் அவ்வளவாக பார்ப்பதில்லை.. தன்னை சரி செய்து கொள்ளாதவன் எப்படி தொழிலை சரியாக செய்ய முடியும். ///

இவை அனைத்தும் உண்மையே!

மாஷா அல்லாஹ்! படிக்கட்டுகள் : அழகிய தன்னம்பிக்கை தொடர்.

நட்புடன் ஜமால் said...

சுயபரிசோதனைக்கு நல்ல வழி காட்டல்

இன்ஷா அல்லாஹ் தொடருங்கள்

Give some tips on Time management also ...

அப்துல்மாலிக் said...

அடுக்கடுக்கான சிந்தனைகள், தெளிவான சீர்நோக்கு பார்வை பின்பற்றினால் நிச்சயம் வெற்றியும், நல்ல தோழமைகளும் கிடைக்கும்...

Yasir said...

ஒரு மனோதத்துவ நிபுணருடன் பத்து நிமிடம் உட்கார்ந்து நம்மை நாமே அறிந்து கொண்டது போன்ற பீலிங்....சிறந்த சிந்தனை ஆக்கம் காக்கா...தொடரட்டும் உங்கள் இப்பணி

நட்புடன் ஜமால் said...

அமைதியில்லாத மனம் எதையும் தொடர்ந்து சாதிக்காது. நம்மிடம் உள்ள மிகப்பெரிய பொக்கிஷம் தொழுகை. இதன் மூலம் பல சுபிட்சங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தெளிவாக முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.


The most important ...

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நெய்னா எம்.எஸ்.எம் சொன்னது.

// யான் பக்கரு, சைக்கிள் கேப்புளெ செண்டடிச்சி உட்டுட்டியளே....

"கண்ணும் கருத்துமாக" என்று சொல்கிறார்களே கண்ணுக்கும், கருத்துக்கும் என்னா சம்மந்தம்? கண் இருந்தால் தானே கருத்து எழுத முடியும் என்பதாலோ? என்னவோ? //

சைக்கிள் கேப்புலே தண்ணித்தான் அடிக்க முடியும்.செண்டு அடித்தா கட்டுபடியாகாது.

கண்ணு இருந்து கை இல்லை என்றாலும் கருத்து எழுத முடியாது.எழுத கூடிய மை கருப்பா இருந்தால்தான் கருத்து எழுத முடியும்.

Muhammad abubacker ( LMS ) said...

எம்.ஹெச்.ஜகபர் சாதிக் சொன்னது:

// என்னமோ நல்ல மாப்ளெ பொன்னு இருக்கென்று சொல்லுற மாதிரி இருக்கு.//

லண்டன் போய் எவ்வளவு நாளாச்சு ? உனக்கு ஞாபகமெல்லாம் எங்கேயோ இருக்கிறது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாஹிர் காக்கா..

இது போன்ற சிந்தனை ஆக்கம் உங்களைப் போன்றவர்களால் மட்டுமே எழுத முடியும்... தன்னம்பிக்கையூட்டும் அருமையான பதிவு.. எனர்ஜி பானத்தை காசு கொடுத்து குடிப்பது முட்டாள்தனம் இது போன்ற பதிவை படித்த பிறகு.

உரத்த சிந்தனைக்காரர்கள் போல ஆழமாக சிந்திக்கிறாயே, வயசாயிடுச்சா? என்ற சபீர் காக்காவின் கேள்வி ஜாஹிர் காக்காவின் உள்ளத்திற்கு அல்ல என்பது மறுக்க முடியாத உண்மை.

//அமைதியில்லாத மனம் எதையும் தொடர்ந்து சாதிக்காது. நம்மிடம் உள்ள மிகப்பெரிய பொக்கிஷம் தொழுகை. இதன் மூலம் பல சுபிட்சங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தெளிவாக முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.//

அநேக மக்கள் அனுப்பவரீதியாக கண்டுவரும் உண்மை காக்கா..

(தன்னம்பிக்கையூட்டி மேலும் சாதனை படைக்க தூண்டி பாராட்டி கருத்துக்கள் பரிமாறிக்கொள்வது முகஸ்துதியா?)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களின் முதல் குணம். அவர்கள் உண்மையை எதிர் கொள்பவர்கள். You must have the guts to face the truth.//

மேலும் அடுத்தவருக்காக, போலித்தனத்தில் வாழ்க்கையை ஓட்டுபவர் யாராக இருந்தாலும் முன்னேறவே முடியாது... ரியலிஸ்டிகாக வாழ்பவர்கள் நாம்மூர் போன்ற ஊர்களில் குறைவு...

//உண்மையை சந்திக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணீர் வரும்.//

உண்மை ஜாஹிர் காக்கா..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா ஒரு சில டவுட்டு(கள்) :

எதைச் செய்தாலும் எள்ளலவேனும் appreciation வார்த்தையளவில் கூட காடாமல் தொட்டதெற்கெல்லாம் குறை சொல்வதும், நிர்ணயித்த நேரத்திற்கு முன்னரே வேலையை முடித்தாலும் குத்திக் கொதறிக் கொண்டிருப்பது எவ்வகை பாஸ் ?

ஏன் அப்படி தனக்கு கீழ் அல்லது தனது நிறுவனத்தில் வேலை செய்பவர்களை கடித்துக் கொதறிக் கொண்டே இருப்பதோடு சரி ஆனால் துறைசார்ந்த (discipline measures) நடவடிக்கைகள் ஏதும் கொதறப்படுவர் மீது எடுப்பதில்லை இவர்கள் எந்த ரகம் ?

எதற்கெடுத்தாலும் comparison அடுத்தவனை / வளைச் சுட்டிகாட்டியே உன்னைவிட பன்மடங்கு மேல் இப்படியாக சொல்லிச் சொல்லியே நொங்கெடுக்கும் பெருந்தலைகள் எந்த ரகம் ?

ஏன்னா படிக்கட்டு கட்ட ஆராம்பிச்சாச்சு அதிலிருக்கும் கலவைகளையும் சொல்லித் தந்தா நன்னா (நன்றாக) இருக்குமாம் !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

All they are to be mobilized to Quantanamo instead of living in the company as a boss. Whoever தற்சமயம் உங்களை கொதருகிறாரோ, once upon a time all they were பலரால் கொதரப்பட்டவராவார்.

Editorakka, this is my simple answer for your queries. Jahir kaka can explain it very well than me for your questions.

சும்மா லைட்டா.....

sabeer.abushahruk said...

ஜாயிரு,

தொடர்-னு நீதான் போட்டியா இல்ல இந்த அ.நி.க்காரய்ங்க இழுத்து விட்றாய்ங்களா?

(ஏன்னா, தொடர் எழுதப்போறதா என் கைல நீ சொல்லவே இல்லையே)

ZAKIR HUSSAIN said...

இந்த ஆக்கத்துக்கு கருத்து தெரிவித்திருக்கும் அனைவருக்கும் நன்றி,....இன்றைக்கு க்ரூப் மீட்டிங் போகும்போது பல விசயங்கள் எழுத ஆர்வம் வந்ததற்க்கு காரணம்....உங்கள் அன்பு. சபீரையும், அலாவுதீனையும் தவிர யாரும் என்னைப்பார்த்ததில்லை என நினைக்கிறேன். இறைவன் நம்மை எல்லாம் ஒன்று சேர்த்துவைத்தமைக்கு நன்றி செலுத்துவோம்.

To Brother Jamal...i will definitely write on time management in future episodes. FIRST lesson in time management is you must learn to say "NO" to people who are disturbance to you and continuously. least care about your developments

To Sabeer,

வயசாயிடுச்சா...கேள்விக்கு பதில் ..தாஜூதீன் விளக்கம் & என் எழுத்தை சரியா படி..வயசானாதாக புலம்புவதை எழுதியிருப்பேன்.

To Brother Ibrahim Ansari,

உங்களைப்பார்த்து வெகு நாட்களாகி விட்டது. இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்.

To brothers Abubakar & Jahubar Sadik, Abdul Malik, Yasir, Nizam, Abdul Rahman-Harmy, MSM Naina...i will write a lot on this subject. Insha Allah.

To Abu Ibrahim...

//தைச் செய்தாலும் எள்ளலவேனும் appreciation வார்த்தையளவில் கூட காடாமல் தொட்டதெற்கெல்லாம் குறை சொல்வதும், நிர்ணயித்த நேரத்திற்கு முன்னரே வேலையை முடித்தாலும் குத்திக் கொதறிக் கொண்டிருப்பது எவ்வகை பாஸ் ?//
//ஏன்னா படிக்கட்டு கட்ட ஆராம்பிச்சாச்சு அதிலிருக்கும் கலவைகளையும் சொல்லித் தந்தா நன்னா (நன்றாக) இருக்குமாம் ! //

எரிந்து விழுபவர்களை சரி செய்வது மிக, மிக, மிக எளிதான விசயம்.

இவர்களின் கடந்த காலத்தை ரீவைண்ட் செய்து பார்த்தால்...அன்புக்கு ஏங்கும் பாவப்பட்ட ஜென்மங்கள். பொசிசன் கிடைத்தவுடன் கொஞ்சம் நெஞ்சு நிமிர்த்துவது இயற்கை.

சின்ன டிப்ஸ்:

ஒரு சின்ன கிஃப்ட் [ அவருக்கு பிடித்தது...உ-ம். நல்ல பெர்ஃப்யூம், லெதர் கேசிங்] வாங்கி...பாஸ் இதைப்பார்த்தவுடன் உங்கள் நினைவு வந்தது / உங்களுக்கு பிடிக்குமே என வாங்கினேன் / ஏர்போர்ட்டில் வாங்கினேன் இப்படி ஏதாவது சொல்லிகொடுத்துபாருங்களேன்.....நிச்சயம் அடுத்த முறை ஒரு நல்ல மாற்றம் தெரியும்.

நான் எல்லோரிடமும் நல்லபடியாக நடந்து கொள்வேன் அதனால் எனக்கு இதுபோல் பரிசுகள் அடிக்கடி யாராவது தந்து கொண்டிருப்பார்கள் என உங்களுக்கு கிடைப்பதுமாதிரி சொல்லிப்பாருங்கள்...இதுதான் ரிவர்ஸ் சைக்காலஜி [ திருந்துடா வெண்னே..என்று சொல்லாமல் சொல்வது ]

ZAKIR HUSSAIN said...

To Sabeer,

தொடர்.."வாசகர்கள் விரும்பினால் தொடரலாம்" என எழுதினேன்...நாமே இழுத்து வச்சி படினு இம்சை படுத்துறது எனக்கு பிடிக்காதுனு உனக்கு தெரியும்.

அ.நி தொடரும்னு போட்டுட்டாப்லெ...வாசகர்களும் விரும்புவதால் எழுதலாம் என இருக்கிறேன்.

Anonymous said...

//அ.நி தொடரும்னு போட்டுட்டாப்லெ...வாசகர்களும் விரும்புவதால் எழுதலாம் என இருக்கிறேன்//

ஆம் ! அப்படியே... நிச்சயம் தொடரத்தான் வேண்டும் இது எங்களின் அவா !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட ! இதைக்கூட ஆரம்பிச்சுடலாமே... கேளுங்கள் ஐயங்களை தெளிவுகள் தொடரும் என்று...

அசத்தல் காக்கா உங்களின் அனுபவக் கோர்வை சொல்லித்தரும் பாடம் அழகே !

சந்தடி சாக்கில் அத்தர் வியாபாரி உடனே இங்கேயே ஆரம்பித்து விட்டார் பார்த்தீர்களா ? :) நல்ல தாக்கம் எழுத்திலோடும் ஊக்கம் !

sabeer.abushahruk said...

ஐயம் - தெளிவா?
தெளிவாச் சொன்னாலே ஐயம் கொள்ளும் சகோதரர்களை எப்படி சமாளிப்பதாம்.

என்னோட முதல் ஐயம், உங்கள் அசத்தல் காக்காவுக்கு,

ஏன்டா ஃபோன் பண்ணல?

KALAM SHAICK ABDUL KADER said...

வண்டியும் வாழ்க்கையும்
வண்டியைச் சீராக ஓட்ட
வேகக் கட்டுப்பாடு
வாழ்கையைச் சீராக்க
விவேகம்

வண்டியை ஓட்டவும்
வாழ்க்கையை நகர்த்தவும்
வேண்டியது ஒன்றே
திறமை

வண்டிப் பயணமும்
வாழ்க்கைப் பயணமும்
சுகமாக அமையும் குறைவான
சுமைகளால்

வண்டிப் பயணத்திலும்
வாழ்க்கைப் பயணத்திலும்
கண்டிப்பாகத் தேவை
கவனித்து உதவும்
தோழமை

வண்டிக்கு ஊற்றும்
எண்ணையிலும்
வாழும் உடலுக்கான
உண்டியிலும் தேவை
தரம்


வண்டியில் மின்கலன்
வாழ்கையில் உடல்நலன்
கண்டிப்பாக ஏற்றுக
மறுசக்தி

வண்டிப் பயணத்திலும்
வாழ்க்கைப் பயணத்திலும்
எட்டும் இலக்கில் வேண்டும்
திட்டம்

வண்டியின் பராமரிப்பு
வாழ்க்கையின் பாதுகாப்பு
நாடோறும் காட்டும்
சுயசோதனை

--

Anonymous said...

ஜாகிர் காக்கா எழுதியுள்ளார்கள் படிக்கட்டுகள் என்று இது எத்தனையாவது படிக்கட்டுகள் இன்னும் எத்தனை படிக்கட்டுகள் கட்ட போகிறீர்கள். அப்படி கட்டும் போது நல்ல ஸ்ட்டாங்கா அஸ்திவாரத்தை போடுங்கள். லெ.மு.செ. அபூபக்கர் அத்தருக்கு நல்ல விளம்பரம் கொடுக்கிறார். ஜாகிர் காக்காவுடைய படிக்கட்டுகள் தொடரட்டும்.

// கண்ணு இருந்து கை இல்லை என்றாலும் கருத்து எழுத முடியாது.எழுத கூடிய மை கருப்பா இருந்தால்தான் கருத்து எழுத முடியும்.//

மை கருப்பாக இல்லாவிட்டாலும் ஊதா, பச்சை அல்லது சிவப்பு மையில் கருத்து எழுத முடியும். கருத்து எழுத கருப்புத்தான் வேண்டும் என்று அடம் பிடித்தால் ஒன்றும் செய்ய முடியாது.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அழைக்கும்.

// சந்தடி சாக்கில் அத்தர் வியாபாரி உடனே இங்கேயே ஆரம்பித்து விட்டார் பார்த்தீர்களா ? :) நல்ல தாக்கம் எழுத்திலோடும் ஊக்கம் ! //


மாஷா அல்லாஹ் உண்மையில் நல்ல தாக்கம்தான் இன்று கடையை திறந்த உடனேயே இரண்டு கஸ்டமர் முதலில் அத்தர்தான் வாங்கினார்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஆகையால் கருத்துக்களுடன் வியாபாரமும் கச்சிதமாக நடந்துவருதுண்டு சொல்றியெ.....

சட்டையில் அழுக்குப்பட்டால் (சோப்பு வியாபாரிக்கு) நல்லது தானே?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// ஆகையால் கருத்துக்களுடன் வியாபாரமும் கச்சிதமாக நடந்துவருதுண்டு சொல்றியெ.....//

அல்ஹம்துலில்லாஹ் உங்கள் போல் கஸ்டமர்களின் துஆ பரக்கத்தால்.

Shameed said...

பல படிகளை தாண்டி (வேலை பளு) வந்து பின்னுட்டம் இட தாமதமாகி விட்டது மேலும் நீட்டா இருக்கணும்ன்னு சொல்லிடீங்க அதுனால மூ மு எல்லாம் கட்பன்னிட்டு வர்றதுக்கு தாமதமாகி விட்டது

கட்டு ரையீன் ஒவ்ஒரு வரியும் கான்கிரெட் படிகளாக இருந்தது.மேலும் பல படிகளை எதிர் பார்த்துள்ளோம்

Yasir said...

//கட்டு ரையீன் ஒவ்ஒரு வரியும் கான்கிரெட் படிகளாக இருந்தது.மேலும் பல படிகளை எதிர் பார்த்துள்ளோம்//

அதெப்”படி”
நீங்க இப்”படி”
சொக்கும்”படி” கருத்து எழுதுரீங்க

Shameed said...

Yasir சொன்னது…

//அதெப்”படி”
நீங்க இப்”படி”
சொக்கும்”படி” கருத்து எழுதுரீங்க//

எல்லோரும் படி படி இன்னு சொன்னதாலே இப் "படி"

bin kamal said...

வாழ்kaiயில் எத்தனை எத்தனை சோதனைகள், எல்லாம் நம்மை புடம் போட்டு எடுப்பதற்காக அல்லாஹ் செய்யும் ஏற்பாடுகள். எதையும் கண்டு கலங்க வேண்டாம் எல்லாம் நன்மைக்கே என்று சொதனைஎன் பொது நினைத்து பாருங்கள் மனம் புது உற்சாகம் பெரும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு