விலைவாசி உயர்வால், செலவைக் குறைப்பதற்காகவும், அதிகமான லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் விதம் விதமாய் கலப்பட உத்திகளை கையாள்கிறார்கள். இதனால் உடல் அளவிலும், மனதளவிலும், பொருளளவிலும் பாதிக்கப்படுவது பொதுமக்களாகிய நாம்தான்.
இதில் பாலில் நீர் சேர்ப்பதும், அரிசியில் கல் இருப்பதும் அறிந்திருப்பீர்கள். பிற விஷயங்கள் ஆச்சரியப்படுத்தும் !! சில அதிர்ச்சியளிக்கும் !!!
இதோ... !
உணவுப்பொருட்களும் அதனுள் கலக்கபடும் பொருட்களும்
பால் - தண்ணீர், ஸ்டார்ச்
அரிசி - கல்
பருப்பு - கேசரி பருப்பு
மஞ்சள் பொடி - lead chromate
தானியா பொடி - சானி பொடி, ஸ்டார்ச்
நல்ல மிளகு - காய்ந்த பப்பாளி விதைகள்
வத்தல் பொடி - செங்கல் பொடி, மரப்பொடி
தேயிலை - மரப்பொடி, பொடிசெய்யப்பட்ட உளுந்து தோல், ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட தேயிலை
பெருங்காயம் - மண், பிசின்
கடுகு - ஆர்ஜிமோன் விதைகள்
சமையல் எண்ணை - மினரல் எண்ணைகள், ஆர்ஜிமோன் எண்ணை
வெண்ணை பிற கொழுப்புகள்
பச்சை பட்டானி - பச்சை சாயம்
நெய் - வனஸ்பதி
ஆட்டிறைச்சி - மாட்டிறைச்சி
மிளகு - பப்பாளி விதை
புதியதாக தயாரித்த புரோட்டவுடன் - பழைய புராட்டாவை
சர்பத் – ஜூஸ்களில் - சாக்கிரீன்
ஹோட்டல்களில் சோறு விறைப்பாக வர - சுண்ணாம்பு
இப்படி இன்னும் பல…நாம், அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுப்பொருள்களில் மீது கலப்படங்களை சேர்க்கிறார்கள்.
அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வில்லை என்று குறை கூறிக்கொண்டு இருக்காமல், சகோதர, சகோதரிகளே ! நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக நாம் பொருட்கள் வாங்கும்பொழுது அதனுடைய தரம், உற்பத்தி செய்த நாள் மற்றும் பயன்படுத்தக்கூடிய கால அவகாசம் ஆகியவைகளை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சட்டம் ஒன்றை மத்திய அரசு 2006 ‘ ல் இயற்றியுள்ளது. இதில் சில முக்கியமான பொருட்களில் செய்யப்படுகின்ற கலப்படத்திற்காக ஆயுள் தண்டனை வரை வழங்க வாய்ப்பு உள்ளது. மேலும் சட்டத்தின்படி கலப்பட உணவுப் பொருள் உற்பத்தியாளர்கள் மீது கலப்படப் பொருளின் தன்மைக்கேற்ப ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம். மாவட்ட துணை ஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரி இந்த அபராதத்தை நிர்ணயிக்கலாம்.
உணவு பொருட்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் நகராட்சி பகுதிகளில் நகராட்சி உணவு ஆய்வாளர் அல்லது நகராட்சி ஆணையர் அவர்களுக்கும் கிராமப்பகுதிகளில் துணை இயக்குனர் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.
புகார் தெரிவிக்க வேண்டிய முகவரி :
Food Safety Commissioner : Sh. Girija Vaidyanathan ( IAS )
Contact Details : Chennai - 600 003
TEL : 044 24320802, 24335075, FAX : 044 24323942
E-mail : dphpm@rediffmail.com
Status of Laboratories: Food Analysis Laboratory, Medical College Road,
Near Membalam, Thanjavur - 673001
Food Safety Officer for Thanjavur District : Mr. S. Raj Kumar , Mr. N. Chandra Mohan
இறைவன் நாடினால், தொடரும்... !
- சேக்கனா M.நிஜாம்.
16 Responses So Far:
கலப்படங்களை பற்றி கலக்கிய சகோ:நிஜாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கலப்படம் இல்லாத உணவுப் பொருள்கள் சரியான விலையில் சுதந்திர இந்தியாவில் ஒரே ஒரு காலக்கட்டத்தில் மட்டுமே மக்களுக்கு கிடைத்தன. அதுதான் EMERGENCY PERIOD (1975-1977). ஆனால் ஜனநாயக நாடான நம் இந்தியாவில் அது போன்ற காலத்தை மக்கள் விரும்பவில்லை போலும்.
Noor Mohamed
இதற்கு முன்னர் இருக்கும் பதிவில் கலர் படம் பார்த்து விட்டு இங்கே கலப்படம் என்ற பட்டியலைப் பார்த்ததும் கலக்கமா இருக்கே !
விழித்திருப்பதா ? விசும்பிக் கொண்டிருபதா என்று தெரியவில்லை...
இருப்பினும் விழிப்புணர்வு தொடரட்டும் !
"நம்மூர் கடெத்தெருவுலெ பெரிய பண்ணா மீனை துண்டு போட்டு கொடுவா பிஸுக்குண்டு வித்துற்றாங்களே? அதெ பத்தி தெரியாதா ஒங்களுக்கு?"
"ஸ்வீட்லெ செர்ரி பழமுண்டு சொல்லி பப்பாளிக்காயை சிறிய சதுரமாக வெட்டி விரும்பிய கலர் போட்டு மேலே தூவி வித்துற்றாஹளே தெரியாதா?"
"வெள்ளாட்டை புடிச்சி அறுத்து நல்லா தோளை சுத்தமா உறிச்சிட்டு முன் சப்பையை மட்டும் கடையிலெ கட்டி தொங்க உட்டுட்டு செம்மறி ஆடுண்டு சொல்லி சோக்கா வித்துற்றாஹளே தெரியாதா?"
"மொரட்டு முத்துன சேவலை புடிச்சி அறுத்து நல்ல வெடக்கோழிண்டு சொல்லிண்டு சொல்லி வித்துற்றாஹளே இது தெரியாதா?"
"போண்டாக்கோழி முட்டையை டீத்தூளில் போட்டு கொஞ்சம் கலரை மாத்தி நாட்டுக்கோழி முட்டை ஒடம்புக்கு நல்லதுண்டு சொல்லி வித்துற்றாஹளே தெரியாதா நம்ம ஊரைப்பத்தி?"
இன்னும் விசத்தில் மட்டும் தான் இவர்கள் கலப்படம் செய்ய வில்லை என்று நினைக்கிறேன். பூச்சிக்கொல்லி மருந்துகளில் கூட கலப்படம் செய்வதால் பூச்சிகளெல்லாம் மருந்து அடித்ததும் மாண்டு போவதற்கு பதில் பூரித்துப்போய் நிற்கின்றன.
இது மாதிரி எக்கச்சக்கமா ஈக்கிது சகோ. நிஜாம் அவர்களே.....ஒரு நல்ல விழிப்புணர்வு அன்றாட நம் உணவுப்பொருட்கள் பற்றி...
நெய்னாக்கா,
கடைத்தெருவிலே “பண்ணா மீன்” ஈக்கீதே..... விலை கூடுதலா ஈக்கிது....... கொடுவா மீனுன்னு சொல்லி பெரிய கத்தாலை மீனை அதுவும் கருங்கத்தாலையை கூறு போட்டு வித்துற்றாங்க................. அதையும் நம்மாளுக வாங்கிட்டு போய் வீட்டுக்காரம்மாட்டே காட்டும்போது.........இதே ஏண்டா வாங்கிட்டு வந்தான்னு திட்டும், அடியும் வாங்கிக்கிறாக.............ஆனமும் கடுத்து கெடக்குது.............நாக்கு வறண்டுடுது
அதிரையில் அதிரை எக்ஸ்பிரஸ்சில் இருந்து பிரிந்தவர்கள் மற்றும் எழுத்தார்வமுள்ள இளைய சமுதாயத்தினர்கள் என பல்வேறு தரப்பு மக்களும் இன்று வலைபூக்களை உருவாக்கி வீட்டுக்கு ஒரு ஊடகம் என்ற அளவில் வலைப்பூக்கள் பெருகி வந்துகொண்டிருக்கின்றன என்பதை வாசகர்கள் அனைவரும் அறிவர்.
அதனை ஒருங்கிணைத்து ஒரே வலைதளத்தில் தரவேண்டும் என நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட அதிரை மனத்திற்கு நமது அதிரை குரலின் தொடுப்பையும் கொடுக்க வேண்டி பல மெயில் அனுப்பியும் இது வரை தொடுப்பு கொடுப்பதற்கு மனம் வரவில்லை போலும்.
காரணம் என்ன வென்று பதில் மெயிலும் அனுப்ப வில்லை ஏன் இந்த பாரபட்ச்சம்? நீடூர் சீசன்ச்க்கு கொடுக்கப்பட்ட முன்னுரிமையை அதிரை சார்ந்த தளங்களுக்கும் தரலாமே .
நான் எனது முழு விபரங்களுடன் கீழ் காணும் தகவலை அதிரை மனம் நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளேன் .
adirai kural
8/7/11
to adiraimanam
அன்பார்ந்த அதிரை மனம் நிர்வாகத்தினருக்கு தங்களின் அதிரை மனம் வலைப்பூவில் எனது வலைபூவையும் இணைபுகொடுக்க வேண்டுகிறேன் .நான் கடந்த ஓராண்டாக இதை ஆரம்பித்து நிர்வகித்து வருகிறேன் .
நம்மூர் கடைத்தெருவுலெ இன்னொரு டெக்னிக்கையும் ஃபாலோப்பண்றாங்க...அது என்னாண்டாக்கா...புதிய மீனு வெட்டும் பொழுது வரும் ரத்தத்தை எடுத்து பழைய/கிட்டத்தட்ட நாறிப்போன மீனின் மீதும் அதன் செவுளிலும் தடவி கடல்லேர்ந்து நேரா கடைத்தெருவுக்கு கொண்டு வந்த மீனு மாதிரி சொல்லி விக்கிறாங்க....பாத்தியளா?
மனிதர்களிலும் கலப்படம்/ஏமாற்று வேலை செய்கிறார்கள்...அது எப்படி? கலியாணத்திற்கு முன் ஒரு ஆண் மகனை டாட்டா, பிர்லா ரேஞ்சுக்கு உயர்த்திப்பேசி மணப்பெண் வீட்டிலிருந்து காசுபணம், நகை நட்டுகளையும், வீட்டையும் எழுதி வாங்கி விட்டு கலியாணத்திற்குப்பிறகு அந்த ஆண் மகனின் (அப்புடீண்டு சொல்லிக்கிட வேண்டியது தான்) வண்டவாளம் (தராதரம்) எல்லாம் தண்டவாளத்தில் ஏறி பின் வாழ்க்கையே தடம் புரண்ட சம்பவங்கள் எத்தனை? எத்தனை?
To Brother சேக்கனா M.நிஜாம்.,
கலப்படம் செய்பவர்களை தட்டிக்கேட்காதற்கு
"பணம் அபராதம்" = மெடிக்கல் பில்
இன்னும் விசயங்களை தேடி எழுதுங்கள். எல்லோருக்கும் பயன்படட்டும்.
சகோதரர் மு.செ.மு நெய்னா வெளிநாட்டில் இருந்தாலும் அவருடைய சேட்டிலைட் டிஸ்க் ஆன்டனா அதிராம்பட்டினத்தை நோக்கி இருக்கிறது என நினைக்கிறேன்.
ஆமா.............ஆமா.............நிறைய நடக்குது.........மீன் மார்க்கெட் மறுபக்கத்தைப் பத்தியும் சீக்கிரம் ஒரு கட்டுரையை போட்டுடுவோம்.....
வரதட்சனை.............இது பெரிய கொடுமை......லண்டன் மாப்பிள்ளைக்கு ஒரு ரேட்டு.........அமெரிக்கா மாப்பிள்ளைக்கு ஒரு ரேட்டு........துபாய் மாப்பிள்ளைக்கு ஒரு ரேட்டு..........சென்னை மாப்பிள்ளைக்கு ஒரு ரேட்டு.......நம்மூர் மாப்பிள்ளைக்கு ஒரு ரேட்டு........
அதுவும் சீர்வரிசை இருக்கே.............. புது டிரண்டா நடக்குது..............இதப்பத்தியும் சீக்கிரம் ஒரு கட்டுரையை போட்டுடுவோம்.....
////அதிரை மஜ்லீஸ் சொன்னது…
அதிரையில் அதிரை எக்ஸ்பிரஸ்சில் இருந்து பிரிந்தவர்கள் மற்றும் எழுத்தார்வமுள்ள இளைய சமுதாயத்தினர்கள் என பல்வேறு தரப்பு மக்களும் இன்று வலைபூக்களை உருவாக்கி வீட்டுக்கு ஒரு ஊடகம் என்ற அளவில் வலைப்பூக்கள் பெருகி வந்துகொண்டிருக்கின்றன என்பதை வாசகர்கள் அனைவரும் அறிவர்.
அதனை ஒருங்கிணைத்து ஒரே வலைதளத்தில் தரவேண்டும் என நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட அதிரை மனத்திற்கு நமது அதிரை குரலின் தொடுப்பையும் கொடுக்க வேண்டி பல மெயில் அனுப்பியும் இது வரை தொடுப்பு கொடுப்பதற்கு மனம் வரவில்லை போலும்.
காரணம் என்ன வென்று பதில் மெயிலும் அனுப்ப வில்லை ஏன் இந்த பாரபட்ச்சம்? நீடூர் சீசன்ச்க்கு கொடுக்கப்பட்ட முன்னுரிமையை அதிரை சார்ந்த தளங்களுக்கும் தரலாமே .
நான் எனது முழு விபரங்களுடன் கீழ் காணும் தகவலை அதிரை மனம் நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளேன் .
adirai kural
8/7/11
to adiraimanam
அன்பார்ந்த அதிரை மனம் நிர்வாகத்தினருக்கு தங்களின் அதிரை மனம் வலைப்பூவில் எனது வலைபூவையும் இணைபுகொடுக்க வேண்டுகிறேன் .நான் கடந்த ஓராண்டாக இதை ஆரம்பித்து நிர்வகித்து வருகிறேன் .
Reply Tuesday, January 10, 2012 4:22:00 PM ////
அஸ்ஸலாமு அலைக்கும்,
அதிரை மஜ்லீஸ், அதிரை குரல் வலைப்பூ நிர்வகிக்கும் சகோதரரே..
தங்களின் ஆதங்கம் நியாயமானதே என்றாலும், கடந்த வருடம் ஜூன் மாதத்திற்கு பிறகு எந்த ஒரு வலைப்பூவையும் அதிரைமணத்தில் இனைக்கவில்லை. காரணம் அதிரையில் 40க்கும் மேற்பட்ட வலைப்பூக்கள் உள்ளது என்ற பல அதிரை சகோதரர்களின் ஆதங்கத்தாலும் இவ்வாறு முடிவு செய்தோம்.
அதிரைமணத்தில் இணைவதால் உங்கள் வலைத்தளத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. வலைப்பூக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில் மட்டுமே புதிய வலைப்பூக்களை அதிரைமணத்தில் இனைக்கவில்லை. மற்றபடி எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை.
அதிரைமணத்தில் இருக்கும் நீடூர் சீசன் வலைப்பூ அதிரைமணம் ஆரம்பித்த காலத்திலிருந்தே இருந்து வருகிறது, அதிரைமணத்தை ஊக்கப்படுத்தியவர்களில் நீடூர் சீசன்ஸ் நிர்வாகியும் ஒருவர் என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறோம்.
தம்பி.. கொஞ்சம் பொறுத்திருங்கள் அதிரைமணம் இன்னும் சில வாரங்களில் புது பொழிவுபெற உள்ளது. நிச்சயம் உங்கள் வலைப்பூ இடம்பெறும். முடிந்தவரை சொந்தமாக எழுதி பதிய முயற்சி செய்யுங்கள்.
தயவுசெய்து உங்கள் வலைதளத்தில் தற்போது உள்ள பதிவில் அதிரைமணத்தை பற்றி அவதூறு சொல்லியிருக்கும் பின்னூட்டத்தை தயவு செய்து நீக்குங்கள்..
பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டமாக இருந்தாலும், அதிரைமணம் மீது வந்த விமர்சனத்திற்காக எங்கள் பதிலை இங்கு பின்னூட்டமிடுகிறோம்.
-- Adiraimanam Team
கலப்படங்கள் நிறைய புழங்குகின்றன நாம் எவ்வளவு சொன்னாலும், கேட்டாலும் விற்பவர்கள் என்ன சொல்வார்கள் வாங்கிட்டு போங்க மறைக்கா நல்ல கொடுவா மீனு, காலமீனு என்றல்லாம் சொல்வார்கள். காலமீனு, கத்தாலமீனு, இதையெல்லாம் கூறு கட்டி கொடுவா என்று விற்பனை செய்கிறார்கள். பாவம் மீனை பற்றியை தெரியாதவர்கள் என்ன செய்வார்கள் நல்ல கொடுவாமீனுதானை இதை நாம் வாங்கிவிட்டு போனா தான் என்ன? விற்பவர்கள் என்ன சொல்வார்கள் போய் மீன்ஆனம் வைத்து சமைத்து பாருங்கள் ரொம்ப ருசியாக இருக்கும் என்று. தேசபொடிமீனில் காத்தாலைமீன், நகரமீன் இவைகளையெல்லாம் கலந்து தேசபொடி என்று விற்பனை செய்வார்கள். எல்லா பொருட்களிலும் கலப்படம் இருக்கத்தான் செய்கிறது எதிலும் கலப்படம் இல்லாமல் இல்லை. அப்படி சொன்னாலும் நம்புவதற்கு இல்லை விற்ப்பவர்கள் எதையும் சொல்லி விற்றுவிடுவார்கள் நாம் உஷாராக இருக்க வேண்டும் ஏமாளியாக இருக்கக்கூடாது. மாடுக்கறியைக்கூட கொத்தி கொத்து போராட்டாவில் போட்டு ஆட்டுக்கறி என்று சொல்கிறார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நல்லதொரு விழிப்புணர்வு ஆக்கம்!
-- திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதாம்!
-- அதுபோல் கலப்படக்காரனாய் பார்த்து திருந்தாவிட்டால் கலப்படத்தை ஒழிக்க முடியாதாம்!
-- லஞ்சத்தை ஒழிக்க வந்தவர்களுக்கே லஞ்சமாம்!
-- இப்படி புலம்பி காலம் ஓடிக்கொண்டு இருக்கிறது.
-- மனிதர்கள் பணத்தையே குறிக்கோளாக கொண்டு வாழ்வதால் இதுபோன்ற தீமைகள் தொடரவேச் செய்யும்.
-- மறுமையின் வேதனையை நினைத்தால் இறையச்சம் ஏற்படும். தீமைகள் ஒழியும்.
கலப்படத்தை விட மிக பயங்கரமானது காலம் கடந்த காலாவதியான மருந்துகள். சென்ற ஆண்டு பல மருந்து கம்பெனிகளை மூடினார்கள். உரிமையாளர்களை கைது செய்தார்கள். எதற்கெல்லாமோ அர்த்தமற்ற போராட்டம் நடத்தும் அரசியல் வாதிகள் இதற்காக ஒரு போராட்டமும் அன்றைக்கு நடத்தவில்லை. சட்ட மன்றத்திலும் யாரும் ஆழமான குரல் கொடுக்கவில்லை. முடிவோ, மூடிய கம்பெனிகள் திறக்கப் பட்டன. கைதான உரிமையாளர்களும் ஜாமீனில் வெளிவந்து விட்டனர்.
-Noor Mohamed
சகோ.சேக்கனா நிஜாமின் விழிப்புணர்வு பதிவுகளுக்காக அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்
வாழ்த்துகள் சகோ.
அதிரை விழிப்புணர்வின் விடிவெள்ளி சிற்பி சகோ. நிஜாமின் படைப்புகளால் பலன் பெறுவது நிச்சயம்.வாழ்த்துக்கள்.
கலப்பட உணவுகளை சாப்பிடுவதால்தான் உடல் ஆரோக்யம் கெடுது, அதை சரிசெய்ய ஆஸ்பத்திரி படையெடுக்கிறோம், அங்கேயும் காலாவதியான மருந்து உயிரைக்குடிக்குது.... இப்படி எத்தனையோ சவால்கள் நிறைந்த ஒலகமடா இது........
விழிப்புணர்வுக்கு நன்றி சகோ
Post a Comment