நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கீழத்தெரு முஹல்லா அமீரக நிர்வாகிகள் தேர்வு... 2

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, செப்டம்பர் 30, 2011 |

அல்லாஹ்வின் திருப் பெயரால்....


அஸ்ஸலாமுஅலைக்கும்,

கீழத்தெரு முஹல்லாவினர் சார்பாக 22-09-2011 டேரா துபாய் அப்பாஸ் அவர்களின் அறை மேல் மாடியில் கீழத்தெரு முஹல்லா அமீரக வாசிகள் அனைவரும் ஒன்று கூடி முஹல்லாவின் நலனைக்கருதி UAEல் ஓர் அமைப்பை ஏற்படுத்தி அவ்வமைப்பு சிறப்புடன் இயங்க கூடியிருந்த நண்பர்களாலும் நேரில் வரமுடியாத நண்பர்களின் ஆதரவோடு குரல் கொடுக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு M அப்துல் ஜலீல் அவர்களை அமீராக (தலைமை) பொறுப்பை ஏற்க செய்து கீழத்தெரு முஹல்லா கூட்டம் சிறப்புடன் நடைப்பெற்றது. 

இக்கூட்டத்தில் நிறைவாக எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1. தலைவர்
          - M அப்துல் ஜலீல்

2. உதவி தலைவர் மற்றும் ஆலோசகர்
           - T ஜியாவுதீன்

3. செயலாளர்கள்
            - P.O. பக்கீர் முஹம்மது

    உதவி செயலாளர்கள்
            - A.W. நஜ்முதீன்,   T.  ஹைதர் அலி

4. பொருளாளர்கள்
            - K. தமீம் அன்சாரி,  N. முஹம்மது புஹாரி

5. மக்கள் தொடர்பாளர்கள்
            - S.ஹபீப் ரஹ்மான்
              F.குத்புதீன் (அசீம்)
              S.ஷஃபீக் அப்துல்லா
              N.நவாஸ்கான் 
                                   
6 செயற்குழு உற்பினர்கள்

கீழத்தெரு
              - A. ஹபீப்
                T.M.H. நெய்னா முஹம்மது
                A. நெய்னா முஹம்மது

காட்டுப்பள்ளித் தெரு
                - M.முகைதீன்
                  G.சேக் நசுருதீன்
                  S.சாதிக்

புதுக்குடி
               - முஹம்மத் அலி
                 A.B.சஹுல் ஹமீது
                 M.ஜெஹபர் சாதிக்

காலியார் தெரு
               - B.ஹாஜா முஹைதீன்
                 R.சாதிக்

வெற்றிலைக்காரத் தெரு
               - செய்யது முஹமது
                  S.அரபாத்

பிலால் நகர்
                - ராஜிக்
                  A.பரோஸ்கான்

குறிப்பு:-

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பிற்காக தேர்தெடுக்கப்பட்டவர்கள் :-

                 - S.மீரான் முபீன்
                    J.பஹுருதீன்
                   S.ஹபீப் ரஹ்மான்

நமது முஹல்லா, நமதூர் அனைத்து முஹல்லா கூட்டமைப்பும் இரண்டும் திறமையுடன் செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்தவர்களாக ஜனாப் ஜியாவுதீன் அவர்களின் நன்றி உறையுடன் கூட்டம் நிறைவுபெற்றது 

இப்படிக்கு,

கீழத்தெரு முஹல்லாவாசிகள்
துபாய், U.A.E.

தகவல் : அப்துல் ஜலீல்

சுற்றித் திரியும் வாலிபமே ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், செப்டம்பர் 29, 2011 | , ,

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! நம் அனைவரின் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.

வாலிபமென்பது வயதை முன்னால் வைத்து வழக்காடும் சொல் மட்டுமல்ல ! உங்களின் உள்ளங்களையும் உடல் ஆரோக்கியத்தியத்தையும் மையப்படுத்தி சுழலும் ஒரு சூறாவளி, அது அடிக்கும் திசை எதுவென்று தெரிந்து கொள்ள முடியாத கண நேரத்தில் எல்லாமே முடிந்துவிடும் அங்கே தடம் புரண்டால்.

நம்மில் பெரும்பாலோர் பொருள் ஈட்டுவதற்காக பெரும்பாலும் அயல் நாடுகளுக்கோ அல்லது அயலூர்களுக்கோ சென்று சில வருடங்கள் அல்லது சில மாதங்கள் கழித்து விடுமுறை கிடைக்கும் காலங்கள் ஊருக்கு திரும்பி வருகிறோம். அதற்கான உன்னத நோக்கம் தாய், தந்தை, மனைவி, மக்கள், மற்றும் குடும்பத்தார்களையெல்லாம் கண்டு அவர்களோடு உண்டு பாசமிகு நேசங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் இன்னும் அல்லாஹ் அனுமதித்த செயல்களில் ஈடுபடவுமே. இச்சூநிலையில் நம்மில் பலபேர். தாயகம் வந்தவுடன் நண்பர்களோடு விதவிதமாக சமைத்து உண்டு ஜாலியாக சுற்றவேண்டும். என்ற நோக்கில்தான் தாயகம் வருவதை வாயால் சொல்லாமல் செயலால் நிரூபித்து காட்டுகிறார்கள்.

விடுமுறையில் வந்திருக்கக்கூடிய அந்த நாட்களை எப்படி பயன்படுத்துகிறார்கள்! மனைவி, மக்களோடா? நண்பர்களோடா? நண்பர்களோடு என்றுதான் சொல்லவேண்டும். வீண் பேச்சுக்களிலும், அடுத்தவர்களை பற்றி பேசுவதில் அலாதியான தனி இன்பம் கொண்டவர்களாகவும். பேச்சுலர் உல்லாசப் பயணம் பயணித்து வருவதையும் காணுகிறோம்.

இந்த ஆக்கத்தை படிக்கக்கூடியவர்களே! இவைகள் பொறாமையினால் எழுதப்பட்டவை என்று எண்ணிவிட வேண்டாம். சமுதாயத்தின் மீதுள்ள பொறுப்புணர்வுடன் என் கருத்துக்களை எழுதுகிறேன் என்பதை தயைகூர்ந்து நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.

பொன்னான நேரத்தையும் திரும்பி வராத வயதையும் சேர்த்து. அதிக நேரத்தை நண்பர்களோடு கழித்திடும் அன்பர்களே! கொஞ்சம் சிந்தியுங்கள்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் : "மனிதர்களே! நாம் உங்களை வீணுக்காகவும்  விளையாட்டுக்காகவும் படைக்க வில்லை. மாறாக நீங்கள் என்னை வணங்க வேண்டும். என்பதற்காகவேயன்றி வேறில்லை."

நம் வணக்கத்திற்கு வைத்திருக்கின்ற அளவு கோல், தொழுகையில் அல்லாஹ் அக்பர் என்று தக்பீர் கட்டியதிலிருந்து சலாம் கொடுக்கும் வரைதான் என தவறான கண்ணோட்டத்தில் தொழுது முடித்தவுடன். அவசர அவசரமாக எதையோ சாதிப்பது போல் எழுந்து ஓடுகிறோம். எதற்காக? நண்பர்களோடு ஊராரைப் பற்றி கதைத்து கரைத்து விட்டு வந்ததை மீண்டும் மீட்டெடுப் பதற்காக.

நாம் வாகனத்தை ஓட்டுகிறோம் என்று சொன்னால். மேடு பள்ளம் வளைவுகளை பார்த்து அதற்கு ஏற்றாற்போல்.வாகனத்தை ஓட்டிச் சென்றால்தான் சரியான இலக்கை அடைய முடிகிறது.

மாறாக வாகனத்தை ஓட்டுகிறோம் என்று சொல்லி மேடு பள்ளங்களை பார்க்காமல் நண்பர்களோடு ஜாலியாக கூத்தும் கும்மாளமும் அடித்து வாகனத்தை ஓட்டினோம் என்று சொன்னால் பெரும் விபத்திற்குள்ளாகி சின்னா பின்னமாகி விடுவோம்.

அது போலதான் குடும்பத்தை வழி நடத்திச் செல்வதற்கு நம்மை அல்லாஹ் நல்ல வழிகாட்டியாக ஆக்கி இருக்கின்றான். அதை சரியான முறையில் பயனுல்ல வகையில் இயக்கவில்லை என்றால் பெரும் விபத்துக்குள்ளான நரக படுகுழியில் விழுந்து நாசமாகி விடுவோம். அல்லாஹ் நம் அனைவரையும் காப்பானாக.

இன்று பிள்ளைகள் மீதுள்ள. அளவுக்கு அதிகமான பாசத்தின் காரணமாக.காசு பணத்தையும் கொடுத்தும் அவர்கள் எதை வாங்கி கேட்டு அடம் பிடிக்கிறார்களோ அதை வாங்கி கொடுத்துவிட்டு அழகுபார்ப்பதோடு. பிறகு அழுதும் புலம்புகிறார்கள். 

ஆம்! குறிப்பிட்ட வயதை வந்து அடைந்த மகன் கியர் டூவீலர் வாகனம். வாங்கி கேட்டு அடம் பிடிக்கிறான் என்றவுடன் அவர்களின் மீதுள்ள பாசம் மேலோங்க மனமில்லாமல் வாகனத்தை வாங்கி கொடுக்கிறார்கள் பரிதாபத்திற்குரிய அந்த பெற்றோர்கள்.

அவர்களோ குறிப்பிட்ட நேரங்களில் சக நண்பர்களை சேர்த்துக் கொண்டு ஆகாயத்தில் கழுகு இரைக்காக வட்டம் அடிப்பது போல் முக்கியவீதிகளை  வாகனத்தில் வட்டமிட்டு காதல் வெறி கொண்டு கன்னி பெண்களை குறி வைத்து குடும்ப பெயர்களை கேட்டு நாலு பேர் சிரிக்கும் அளவுக்கு வித்தைகள் காண்பிக்கிறார்கள் விளங்காத வாலிபர்கள் . 

இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும், கற்களும். எரிபொருளாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் . உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் மீது,கடும் சீற்றமுடைய வானவர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். 

நம் வாழ்க்கை ஒரு நீர் குமிழி போன்றது. அதை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எந்த நேரத்தில் உடையுமென்று தெரியாதது போலவே. நாம் உலக ஆசையில் மிதந்து கொண்டிருக்கும் போதே நம்மை விட்டு உயிர் பட்டென்று பிடுங்கப்படும்.

ஜன்னத்துல் பிர்தௌஸ் சொர்க்கத்தின் பாதையில் நம் குடும்பங்களோடு சேர்த்து. சீரான வாழ்க்கையெனும் வாகனத்தை கவனமாக ஓட்டிச் செல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்தருள்வானாக. ஆமீன் ... !   

- லெ.மு.செ.அபூபக்கர்

அமீரகவாழ் அதிரை மக்களே தயாராகிவிட்டீர்களா? 3

Unknown | வியாழன், செப்டம்பர் 29, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


அன்பான அமிரக வாழ் அதிரை நேசங்களே,

நாளை துபாய் அல்கிஸ்ஸஸ் பகுதியில் உள்ள கிரசன்ட் பள்ளிக்கூட வளாகத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைபின் அறிமுகம் மற்றும் பொது குழு கூட்டம் முதன் முதலாக நடைப்பெற உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.


நடைப்பெற இருக்கும் இந்த முக்கிய நிகழ்வுக்கு குடும்பத்துடன் அமீரகத்தில் உள்ள அதிரை மக்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

--அதிரைநிருபர் குழு

நிஜமா நிஜாம்? 12

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், செப்டம்பர் 28, 2011 | , , ,

தரை மிரண்டு போகும் படி
கரை புரண்டு ஓடும் நதி
நுரை ஒழுகச் சப்புக் கொட்டி
இரை விழுங்கும் நாக்கை நீட்டி

குதி என்று சொன்னதா சதி
மதி மயக்கிக் கொன்றதா விதி
பதி யின்றி வாடுதே சகி
கொதி கொண்ட தீயென கதி

இருபது மணி நேரம்
இழுத்து வைத்து வதைத்த நதி
பயிற்றுக்குப் பாயும் வழி
உடல் துப்பிச் சென்றதைய்யா

காத்திருக்கும் மனைவியின் கணவன்
பார்த்திருக்கும் பெற்றவளின் பிள்ளை
சீராட்டிய அக்காள்களின் தம்பி
துணைக்கென்ற அண்ணனுக்குத் தம்பி
உனைவளர்த்த உம்மம்மாவுக்குப் பேரன்
உணவூட்டிய மாமனுக்கு மருமகன்

உறவு முறையெல்லாம்
நதி அழித்துப் போனதைய்யா
உன்பெயர் திருத்தி மையத்து ஆனதைய்யா

ஆற்றுக்கு நீர் வராது போனால்
ஊற்றிருக்கு உயிர் கொடுக்க
பற்றுண்டா பாசமுண்டா
ஈரமிருக்கும் நதிக்கு இரக்கமுண்டா

கல்யாண ஒடை அடித்துச் செல்லவா
கல்யாண ஆடை உனக்கு அணிவித்தேன்

பாலகன் கூட பாய்ந்து குளிக்கும்
பாலக்கண் உன்னை ஓய்த்த தென்ன

கழட்டி வைத்த கோட்டும் ஷூட்டும்
காய்ந்து போன மாலையும் செண்டும்
கண்டு கண்டு மருகுதைய்யா
கண்டு உயிர் உருகுதைய்யா

வயிற்றுக்குள் உயிர் விதைத்து
ஆற்றுக்கு உனைக் கொடுத்தாய்
ஊற்றுக் கண் ஆனதைய்யா உன் சகிக்கு
நீரற்றுப் போனதைய்யா அழுதழுது

இங்கினி நீ எங்களோடு
இல்லாமல் போனது
நிஜமா நிஜாம்?

அவனிடமிருந்தே வந்தோம்
அவனிடமே மீளுவோம்
மீளு மந்த நாள் வரை
நீளு மைய்யா உன் நினைவு!

- 'சபீர்' சாச்சாஒற்றுமையும் (தேர்தலில்) ‘ஒட்டு’ மையும் - விவாதக்களம் 9

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், செப்டம்பர் 28, 2011 | , ,

அன்பிற்கினிய அதிரைப்பட்டினத்து தேர்வு நிலை பேரூராட்சி வாக்காளப் பெருமக்களே !

சாரலும் தூறலுமாக இருந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் தற்போது டாப் கியரில் சூடு பிடித்துக் கொண்டு பயணிக்க ஆரம்பித்துவிட்டது !

கடந்த சில நாட்களாக நமதூரில் நடந்தேறும் சமுதாய ஒற்றுமை முயற்சிகளும் அதற்கான ஆயத்த பணிகளின் செயல்பாடுகளும் அன்றாடம் அதிரைமணம் கமழும் வலைத்தளங்களில் கண்டு வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ் !

ஒற்றுமை பற்றி நிறைய பேசிவருவதாலும், இன்னும் பேச வேண்டியவர்கள் பேசி ஒருமித்த முடிவுக்குள் வருவதற்குண்டான எல்லா முயற்சிகளும் எடுத்து வரும் இந்தத் தருணத்தில் சகோதரர்களின் அந்த சீரிய முயற்சிக்கோ அல்லது அவர்களின் செயல்பாடுகளுக்கோ பங்கமாக இல்லாமல் சிந்திக்க சில வரிகளை இங்கே பரிமாறிக் கொள்வோம் !

அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் விரல்களில் ஒட்ட இருக்கும் "மைய்"க்கு இன்று நாம் ஒற்றுமையைப் பற்றி சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்!, சரி இவைகள் அத்தோடு முடிந்து விடுமா ? இல்லை விரல்களில் ஒட்டிய மைய் காயும் வரைதான் இந்த ஒற்றுமையா ?

வாருங்கள் விவாதிப்போம் நியாமான காரணங்களை முன்னிருத்தி பேரூராட்சி மன்றத்திற்கான தலைவரை அதுவும் ஒற்றைத் தலைவரை எவ்வாறு தேர்ந்தெடுக்கப் போகிறோம்? உங்களால் சுட்டிக் காட்டப்படும் தகுதியானவர் யார் ? முடிந்தால் ஆலோசனைகளை இல்லையேல் ஆதங்கங்களை பகிர்ந்திடுங்கள் எல்லாமே வரம்புக்குள் இருந்திடட்டுமே!

இந்த விவாத மேடையின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் தெரிந்தவர்கள்தான் நீங்கள் இருந்தாலும், நாங்களே எழுந்திருச்சி சொல்லிடுறோம்... சபை நாகரிகம் கருதி நளினமாக தனிமனித தாக்குதலின்றி தக்க காரணங்களுடன் தெம்பாக பேசுங்க (விரிச்சுவல் சோடாவுக்கு ஆர்டர் செய்யப்படும்)!

- அதிரைநிருபர் குழு

அடுக்குத் தொடர்… ஒடுக்கு இடர்! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், செப்டம்பர் 27, 2011 | , ,

திடீர்திடீர் என வரும் மனக்கஷ்டம்
தினந்தினம் செய்யும் திக்ரே குணம்
சும்மா சும்மா உண்ணும் தப்பான பழக்கம்
காலங்காலமாய்த் தொடர்வது உடலின் பலஹீனம்

பளிச்பளிச்சென்று மின்னினாலும்
மின்னமின்ன மதிப்பில் குறையாத்தங்கம்
என்றென்றும் சிரித்த முகத்திற்கு
பற்பலரிடம் நன்மதிப்பு உண்டு என்றும்

சிறுசிறு சேமிப்புகள்
பெருகப்பெருக பெருமதிப்பு
குளிரகுளிர நேசிக்கும் உறவுக்கு
காலங்காலமாய் நன்மதிப்புண்டு

வருகவருக என அழைக்கும் பாங்கொலி
நெருங்க நெருங்க தழைக்கும் நன்மை
வாவா என் அழைக்கும் மண்ணறை
போபோ எனத் தள்ளும் இளமை

யார்யார் பேசினாலும்
மிகமிக எடுபடுவது கனிவே
திடீர்திடீர் என்ற வளர்ச்சி
செல்லச்செல்ல சில வீழ்ச்சி

அடிக்கடி செய்யும் திக்ர்
தினந்தினம் கேட்கும் பாங்கொலி
 வாராவாரம் வரும் குத்பா
வருடாவருடம் ரமலான் நம் வழக்கங்கள்

நான் நான் என்ற ஆசை ஒழித்து
காலங்காலமாய் சொல்லபட்ட ஒற்றுமையை
அலைஅலையாய் ஒன்றாய் சங்கமத்தில்
வாழ்க வாழ்க என ஒன்றிய அதிரை எப்போது?

- M.H.ஜஹபர் சாதிக்

மறைந்த அதிரை அறிஞர் பஷீர் ஹாஜியார் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு - மீள்பதிவு 1

Unknown | செவ்வாய், செப்டம்பர் 27, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பானவர்களே, நேற்று மாலை காலமான அதிரை அறிஞர் தமிழ்மாமணி அஹ்மது பஷீர் ஹாஜியார் அவர்கள் இந்த வருடம் அதிரையில் நடைப்பெற்ற கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான சொற்பொழி அனைவராலும் நல்ல வரவேற்பு பெற்றது. அனைவரும் மீண்டும் ஒரு முறை கேட்டு பயன்வேண்டும் என்ற எண்ணத்தில் மீள்பதிவு செய்கிறோம்.

மறைந்த அஹமது பஷீர் ஹாஜியார் அவர்களின் ஆஹிரத்து நல் வாழ்வுக்காக நாம் எல்லோரும் துஆ செய்வோம்.

-- அதிரைநிருபர் குழு.


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பானவர்களே, அதிரையில் கடந்த ஜனவரி 14 மற்றும் 15ம் தேதிகளில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைப்பெற்றது எல்லோரும் அறிந்ததே. இந்த மாநாட்டில் கானொளியை முதன் முதலில் நம் அதிரைநிருபர் வலைப்பூவில் வெளியிடுகிறோம். அதிரைநிருபர் குழு சகோதரர்களின் வேலை பளுவுக்கு நடுவில் இந்த கானொளி பதிவேற்றம் நடைப்பெற்று வருகிறது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளின் பகுதி-1 உங்கள் பார்வைக்காக தருகிறோம். முடிந்தவரை நல்ல தரத்தில் தந்திருக்கிறோம், பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். அல்லாஹ் போதுமானவன்.

தலைமையுரை: அதிரை அறிஞர்,  தமிழ்மாமணி  அஹமது பஷீர் ஹாஜியார் அவர்கள் 


இரண்டாம் உரை:அதிரை அறிஞர்,  தமிழ்மாமணி  அஹமது பஷீர் ஹாஜியார் அவர்கள்

இந்த கானொளி தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. இந்த கானொளியை எல்லோரும் தங்களின் வலைத்தளங்களில் வெளியிட்டு எல்லா மக்களும் பயனைடைய செய்யலாமே.


-- அதிரைநிருபர் குழு
மற்றும் அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டு குழு


கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் தமிழ்மாமணி பஷீர் ஹாஜியார் அவர்களின் உரை.. 12

அதிரைநிருபர் குழு | Saturday, February 05, 2011 | ,

அன்பின் நேசங்களுக்கு,

நமதூரில் வெற்றிகரமாக நடந்தேறிய கல்வி விழிப்புணர்வு மாநாட்டின் நிகழ்வுகளால் எடுத்திருக்கும் காரியத்தின் முதல்படியை ஸ்திரப்படுத்தியிருக்கிறது அதே சிந்தனையிலிருக்கும் நமக்கு அன்றைய தினங்களில் நடந்தேறிய நிகழ்வுகளை அசைபோடுவதிலும் நினைவுக்குள் நிலை நிறுத்துவதிலும் சந்தோஷமே அவ்வகையில் தமிழ்மாமணி அதிரை அறிஞர் புலவர் பஷீர் ஹாஜியார் அவர்களின் உணர்ச்சி மிக்க நினைவலைகளை அன்று அவர்களது உரையில் எடுத்து வைத்தார்கள் அதோடு ஆயிமாயிரம் கேள்விகளும் கேட்டும் வைத்தார்கள் இதோ எங்கள் மனம் வென்ற அவர்களின் ஆற்புதமான உரையை எழுத்தில்.

-அதிரைநிருபர் குழு


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரகாத்துஹு, வஃபிரத்ஹூ ஆகிரத்ஹூ..

இந்த நாளினுடைய இரண்டாவது நிகழ்ச்சியாகிய இந்த வேலையில் வரக்கூடிய அனைவரையும் நாங்கள் வருக வருக என்று இந்த அவையினரின் சார்பாக வரவேற்கிறோம்.

ஆசிரியர்கள் நான்கு வகைப் படுவார்கள், முதலாவது வகை பாடத்தை படிக்கிறவன் நீயும் படின்னு மாணவர்களைப் பார்த்து சொல்றவன், இரண்டாவது வகை அந்தப் பாடத்தை சற்று விளக்குவான் அவ்வளவுதான் அவனுக்குத் தெரியும், மூன்றாவது வகை அந்தப் பாடத்தை செய்து காண்பிப்பான் அதன் மூலமாக மாணாவர்களையும் செய்யச் சொல்வான், நான்காவது வகை வாழ்க்கைக்கு வழிகாட்டுவான் இந்த நான்கு வகையான ஆசிரியர்களில் a poor teacher tells அவ்வளவுதான் ஒரு சாதாரன ஆசிரியர் சொல்லுவான் மாணர்வகளுக்கு பாடத்தை, an average teacher explain கொஞ்சம் விளக்குவான், a good teacher demonstrate அவன் செய்து காண்பிப்பான், a great teacher inspires மிகப் பெரிய ஆசிரியர் இருக்கிறானே அவன் தன்னுடைய உள்ளத்திலே எழுகின்ற உணர்வுகளை மாணவர்களுக்கு ஊட்டி உணர்வெழச் செய்வான் இதுதான் ஆசிரியர் பணியில் நான் கண்ட வழிமுறைகள்.

பாடத்தை நடத்துபவர்கள் எல்லோரும் ஆசிரியராக மாட்டார்கள், பேராசிரியர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள் அவர் பெயர் ஆசிரியர் அவ்வளவுதான் பேராசிரியர் என்பது வேறு பாடத்தை விளக்கி செய்து காட்டி வாழ்கையை இவ்வாறுதான் வாழ வேண்டுமென்று வழிகாட்டுகிறானே அவன் தான் மிகப் பெரிய பேராசிரியன் இதைத்தான் இன்றைய மஃரிபுக்கு முன்னால் பார்த்தோம். பேராசிரியர் பரக்கத் சார் அவர்கள் இது சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடிய நல்ல வேலையைச் செய்து கொண்டிருக்கிற காரணத்தினால் அவர்கள் மாணவர்களுக்கு உள்ளுணர்வை ஊட்டி சிறந்த சமுதயமாக வாழ வைக்க வேண்டும் முயன்று நடந்து கொண்டிருக்கிறார்கள்.

அதிராம்பட்டினம் பல கல்வியாளர்களைக் கொண்டது கல்வி மாண்டவர் கயன்று பயின்றிட பல செல்வி மாண்டர் என்று புகழ்ந்து பாடப்பட்டது. நெருக்கமாக அறிவாளிகள் இருப்பார்களாம் அதிராம்பட்டினத்தில் இதைத்தான் கடந்த காலத்திலே நாம் பார்த்தோம் மக்தூம் சின்ன நெய்னா லெப்பை ஆலீம் என்று ஒருவர் இருந்தார் வானயியலில் கெட்டிக்காரர் கஃபாவைப் பார்த்து அந்த கட்டிடத்தைப் பார்த்து குத்பா பள்ளியை கட்டினார்கள் என்று சொல்வார்கள்.

அதைவிட மிகச் சிறிய ஒரு கருத்து மக்கள் மனதிலே பரவாமல் இருக்கிறது அதுதான் வானயியலிலே வல்லவர்களாக அவர்களது குடும்பத்தினர் விளங்கினார்கள் கோல்களுடைய நிலமையை அறிந்து தெரிந்து எந்த திசையில் எந்த இடம் இருக்கும் என்பதை ஆய்ந்து உணர்ந்து வல்லவர்களாகிய அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைதான் மக்தூம் சின்ன நெய்னா லெப்பை ஆலிம் என்று சொல்லக்கூடியவர்கள் இன்றும் இந்த ஊரிலே அந்தப் பெயரைத் தாங்கியவர்கள் இருக்கிறார்கள் மக்தூம் மக்தூம் என்று சொல்லக்கூடிய பெயர் இருக்கிறது அந்த மக்தூம் சின்ன நெய்னா லெப்படி ஆலிம் கட்டிய கட்டிடம் மிக வருத்தத்திற்குரிய இடம் இன்று கான்கிரீட் கட்டிடமாக இருக்கிறது.

நீங்கள் கீழக் கரையிலே பாருங்கள் அவர்கள் கட்டிய பள்ளி இருக்கிறது கடற்கரையிலே தெற்கு மேற்காக இருக்கக் கூடிய தென் வடக்காக இருக்கக் கூடிய பழைய பள்ளி ஒன்று உண்டு ஆனால் மக்தூம் சின்ன நெய்னா லெப்பை ஆலிம் அவர்கள் இங்கேயிருந்து போய் அங்கே கட்டிய குத்பா பள்ளி சரியான முறையிலே நம்முடைய ஊரினுடைய அமைப்பிலே எப்படி இருந்ததோ அதே போல அந்த கிப்லாவனது வகுக்கப் பட்டிருக்கிறது அதேப் பள்ளியினை வேதாளம் என்ற ஊரிலும் பார்க்கலாம். இப்படிப்பட்ட வின்வெளி ஆராய்ச்சியளர்களாக இருந்தவர்கள் அவர்கள், அவர்கள் வழியிலே வந்தவர்கள் நாம் என்று மார்தட்டிக் கொள்கிறோம் மக்தூம் மக்தூம் என்று இன்னும் இருக்கிறது புதுமனைத் தெருவிலே.

சோழர்களுடைய ஆட்சிக் காலத்திலே நாணயங்களுக்கு வடிவமைத்துக் கொடுத்து அந்த நாணயங்களை வெளியிட்டு செலாவனிக்கு கொண்டுவந்தவர் உதுமான் மரைக்காயர். நாணயக்காரர் என்ற பெயரைப் பெற்றவர் அவர்கள் வழியிலே வந்தவர்கள் நாங்கள் என்று சொல்லிக் கொள்ளலாம் அந்தப் பழைய நாணயங்களுக்கு வடிவமைத்து கொடுத்த அந்த உதுமான் மரைக்காயருடைய புகழைப் பெற்றவர்கள் யார் என்று கேள்வி எழுகிறது.

என்னுடைய பாட்டனார் பள்ளியிலே மதரஸாவில் பாடம் படித்துக் கொடுக்கும்போது நான் ஒரு தொடையிலும் என்னுடைய தமக்கையார் மற்றொரு தொடையிலுமாக என்னுடைய பாட்டனாரின் உடம்பிலே படுத்திருந்தவர்கள் நாங்கள். பூலோக உருண்டையை சுழற்றி சுழற்றி அவர்கள் ஒவ்வொரு நாட்டையும் காட்டி காட்டி பாடம் நடத்துவார்கள் அந்த மொய்மீம் ஆலிம்சா என்று சொல்லக்கூடியவர்கள் முஹம்மது மொய்தீன் ஆலிம்சா என்ற பெயரைத் தாங்கியவர்கள் பலபேர் இருக்கிறோம் ஆனால் இன்றைய ஆலீம்கள் அப்படி பூலோக உருண்டையை உருட்டி உருட்டி அந்த நாடுகள் எங்கே இருக்கிறது என்று காட்டி காட்டி பாடம் நடத்தக் கூடியவர்கள் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை geography என்று சொல்லக்கூடிய அதனை ஜொகராஃபி என்று சொல்வார்கள் அது நடத்தக்கூடிய ஆசிரியர்கள் இன்று இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

முத்துப்பேட்டை வீதியிலே வந்து கொண்டிருக்கும்போது ஒருவர் முன் பகலுக்கு நடுவாக வானத்தை அன்னாந்து பார்த்து இது நேரம் எது என்று கணித்து தன்னுடைய கைக் கடிகாரத்தின் மணியை சரிபார்த்துக் கொண்டிருக்கிறார், அவரைப் பார்த்து பின்னால் வரக் கூடியவர் கேட்கின்றார் நட்சத்திரத்தை பார்த்து நேரம் குறிப்பதைப் பார்த்திருக்கின்றேன் இதென்ன சூரியனைப் பார்த்து நேரம் கணிக்கிறீர்கள் ? அப்போது ஷேகுனா லெப்பை என்று சொல்லக் கூடிய அவர்கள் சொல்கிறார்கள் இதைப் பற்றிய கல்வி அறிவு ஒன்று இருக்கிறது இதனைப் படிக்க வேண்டுமென்று சொன்னால் நீ அதிராம்பட்டினம் வா அங்கே நான் கற்றுத் தருகிறேன் என்று சொல்லி இந்த நாடு முழுவதும் அந்தக் கலையை பரப்பினார்கள்.

அஃப்லாக் அஃப்லாக் என்று சொல்லக் கூடிய அந்தக் கல்வியை அதை ஷேகுனா அவர்கள் துல்லியமாக நேரம் கணித்து மக்களுக்கு பாடம் நடத்தினார்களே அப்படி பாடம் நடத்தியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற கேள்வி என்னிடம் எழத்தான் செய்கிறது.


இந்த அதிராம்பட்டினத்தின் வரலாறு ஆங்கிலேயர்கள் காலத்தில் நான் உங்களைப் பார்த்து கேட்கின்றேன் “சாம்சன்” என்று சொல்லி ஒரு பட்டம் வாங்கிய பெருமகனார் இருந்தார் யர் அவர் ? சாம்சன் என்ற ஒரு பெயரை ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டு இருந்த ஒரு பெருமகனார் அந்தப் பெருமகனாரின் பேரப் பிள்ளைகள் இதோ என் எதிரே இருக்கிறார்கள், பெண்களிலே பேத்திமார்கள் அங்கே இருக்கிறார்கள். அந்த சாம்சன் என்று சொல்லக் கூடியவர் யார் ? என்ற கேள்வியை எழுப்புகிறேன் ! விடை தெரிந்தால் சொல்லுங்கள, தெரியவில்லை ! சாம்சன் என்று சொல்லக் கூடிய அந்த பெருமகனார் பெரிய் ஆலிம்சா என்று போற்றக் கூடிய முஹம்மத் அப்துல் காதர் அலிம்சா அவர்கள்.

அவர்கள் சட்டக் கலையிலே வல்லவர்களாக இருந்தார்கள் இஸ்லாத்தைப் பற்றியிருந்தாலும் சரிதான் மனிதயியலைப் பற்றியிருந்தாலும் சரிதான் இந்த உலகத்தில் பின்பற்றக் கூடியவைகளை ஆய்ந்து தெரியக்கூடியவர்களாக இருந்தார்கள் எனவே அவர்களைப் பார்த்து ஆங்கிலேயன் சொன்னான் extraordinary man of the knowledge என்று சொல்லி strength என்று சொல்லி அவருக்கு சாம்சன் என்ற அந்தப் பட்டத்தை வழங்கினான்.

சான்சம் என்பது ஹிப்ரு மொழிச் சொல் மிகப்பெரிய வல்லுநர்களுக்கு வழங்கப்படக்கூடிய ஒரு சொல், அந்தச் சொல்லை யாருக்கு வழங்கினான் சாட்டங்களை கறைத்துக் குடித்து மக்களை தெளிவான வழியில் நடத்திச் சென்ற முஹம்மது அப்துல் காதர் ஆலிம்சாஹிப் என்று சொல்லக் கூடிய அந்தப் பெருமகனாருக்கு அளித்தான் சாம்சன் என்ற பட்டத்தை அந்த அப்துல் காதர் ஆலிம்சாஹிம் அவர்களுடைய பேரப் பிள்ளைகள் இங்கே என்னுடைய எதிரிலே இருக்கிறார்கள் பேத்திமார்கள் அங்கே இருக்கிறார்கள் உடல் பலம் வாய்ந்தவர்களுக்கு சாம்சன் என்று ஹிப்ரு மொழியிலே கொடுத்தான், ஆனால் அறிவாற்றலிலே வல்லவர்களாகிய அப்துல் காதர் ஆலிம்சா, பெரிய ஆலிம்சா வீடு இங்கேதான் வாய்க்கால் தெருவிலே இருக்கிறது அவர்களுக்கு சாம்சன் என்ற பெயரை அழைத்தான் யாருக்கும் தெரியுமா ?

அதேபோல இலக்கிய உலகிலே குழந்தை இலக்கியம் குழந்தை இலக்கியம் என்று சொல்லப் படுவதுண்டு நான் அதிலே ஆராய்ச்சி பன்னியவன் தமிழகத்திலே குழந்தை இலக்கியம் பற்றி முதன் முதலிலே ஆராய்ந்தவன், ஆனால் என்னுடைய பாட்டனார்களில் ஒருவர் முஹம்மது உவைஸ் நெய்னா பிள்ளை ஆலிம் என்பார், உவைச் நெய்னா பிள்ளை என்ற பெயர் நிறைய பேருக்கு இருக்கிறது ஆனால் !

பாலகரே பாலகரே !
பலன்தரும் வேலையிலே !
கால நேரத் தோடே
கற்றுக் கொள்வீர் முக்கியமாய் !
புத்திரியே புத்திரியே - என்
பொருத்தமுள்ள புத்திரியே !
புத்தியுடன் என் சொல்லை
பொருந்திக் கொள்வாய் புத்திரியே !

என்று சொல்லி குழந்தை இலக்கியத்தை வடித்துக் கொடுத்த முதன் முதலாக குழந்தை இலக்கியத்தை தமிழகத்திலே எழுதியனுப்பிய இந்த உவைஸ் சின்ன நெய்னா பிள்ளை ஹாஜியார் என்ற அந்த பெருமகனைப் போல இன்று யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

அதிரைக்கும் யெனுக்கும் (Yemen) இடையே கடலை குறுக்காக கடந்து வழி அமைத்து வாழ்க்கை நடத்திய நஹுதா மரைக்காயர்கள் வாழ்ந்த இடம் இந்த கடற்கரைத் தெருவிலே இருக்கக் கூடிய வத்தக் காரத் தெரு, எத்தனை நஹுதா மரைக்காயர்கள் இன்று தோன்றியிருக்கிரார்கள் ? யெமனுக்கும் அதிரைக்கும் இடையே கடல் கடந்து செல்லக் கூடிய கப்பல் வாணிகம் செய்யக் கூடியவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

புரான உலகத்திலே புரண்டு எழுந்த அண்ணாவியர்கள் எத்தனையோ இதிகாசங்களைப் பாடியவர்கள் தேவையிருக்கிறதோ இல்லையோ பாடியவர்கள் அவர்களை இஸ்லாத்தின் பக்கத்திலே வரவழைத்து பாட வேண்டும் என்ற நெறிமுறையை அப்துல் காதர் ஆலிம்சா அவர்கள் அவர்களுடைய முன்னோர்கள் கோஸ் நெய்னா பிள்ளை ஆலிம் அவர்கள்.

மரைக்காப் பள்ளியிலே சென்றால் இடப்பக்கமாக இருக்கக்கூடிய ஒரு கப்ரு இருக்கும் அதிலே கருங்கல் மிஷான் பலகை ஒன்று இருக்கும் அந்த கோஸ் முஹம்மது ஆலிம்சாஹிப் அவர்கள் கடற்கரைப் பள்ளியை நிர்மானித்தவர்கள் அவர்களுடைய மனமாற்றத்தின் காரணமாக அந்த அண்ணாவியர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் சட்ட மேதைகளாக தெளிந்து ஃபிக்ஹு மாலை என்று சொல்லக் கூடிய சட்டங்கள கொஞ்சம் கூட வேற்றுக் கருத்துக்கள் கலவாத படி கற்பனைகள் கலவாதபடி அந்த ஃபிக்ஹு மாலையை பாடி அளித்த காதர் முகைதீன் அண்ணாவியர் வாழ்ந்தது இந்த அதிராம்பட்டினம். ஆக! கல்வி மேதைகள் சிறந்து விளங்கிய இந்த அதிராம்பட்டினத்தில் எத்தனை கல்வி மேதைகள் இன்று இருக்கிறார்கள்.

அஃப்லாக் என்று சொல்லக் கூடிய அந்த வானயியலை பரப்பக் கூடியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் பூமி உருண்டையை சுழற்றி சுழற்றி பாடம் நடத்தக் கூடிய ஆலிம்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் ? அதே மாதிரி ஃபிக்ஹுகளில் நாங்கள்தான் வல்லவர்கள் என்று மார்தட்டக் கூடியவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் ? ஆக! இவ்வளவும் நம் கண் முன்னால் ஏற்படக் கூடிய கேள்விகளாக இருக்கின்றன.

விழிப்புணர்வு விழிப்புணர்வு என்று சொன்னால் எல்லாத் துறைகளில் மாஸ்டர் பீஸ் master piece என்று சொல்லக் கூடிய ஒவ்வொரு துறையிலும் வல்லவர்களாக இருந்தார்கள் எந்தத் துறையிலும் இளைத்தவர்களாக அவர்கள் இல்லை. அந்த ஒவ்வொரு துறையிலும் வல்லவர்களாக இந்த அதிரையின் குடிமக்கள் விளங்க வேண்டும் மாணவர்கள் வரவேண்டும் என்று சொன்னால் இந்த விழிப்புணர்வு கூட்டங்கள் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் வந்து கொண்டேயிருக்க வேண்டும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்துகின்றோம்.

ஆக ! இந்த உலகத்தில் பெண்கள் சொல்லலாம் எங்களுக்கு என்ன தொழில் இருக்கிறது !? எந்தப் பெண்ணும் இந்த அதிராம்பட்டினத்தில் நான் அறிய சிறு பிள்ளையாக இருக்கும்போது சும்மா இருந்திடவில்லை ஏதேனு தொழில் செய்து கொண்டிருப்பார்கள். ஒரு பெண் தூணிலே சந்து கொண்டு கிதாபுகளை படித்து படித்து மார்க்கச் சட்டங்களை விளக்கிக் கொண்டிருப்பார் அருகிலே இருக்கக் கூடிய பெண்கள் குட்டான் மொடைவார்கள், பொட்டி மொடைவார்கள், தொப்பி பின்னுவார்கள், மால் முடி என்று சொல்லக் கூடிய சிறிய சிறிய வலைகள் பின்னுவார்கள் நான் கண்ணாற பார்த்திருக்கிறேன், எத்தனை பேர் அப்படிப் பட்ட தொழிகளை செய்திருக்கிறார்கள் தெரியவில்லை.

இரண்டரை வயது பிள்ளையை பள்ளிக் கூடத்திலே கொண்டுபோய் விட்டு விடுகின்றோம் கேட்டால் சொல்வார்கள் எங்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது "கெட்டுப் போவான்” (தொலைக்காட்சிகள்) எத்தனையோ சீரியல்களை போட்டுக் கொண்டே இருக்கான் எதையும் பார்க்கிறதுக்கு எங்களுக்கு நேரம் இருக்க மாட்டேங்கிறது, இந்தப் பிள்ளையை எப்படி நாங்க வளர்ப்போம் என்று இந்தா ஒப்படை என்று சொல்லி மழலையர் பள்ளியில் கொண்டு போய் விடுகிறார்கள். நேரமானால் டியூசனுக்கு தனிப்படிப்பிலே கொண்டுபோய் விடுவார்கள் இவங்களுக்கு வேலையிருக்கும்போது தனிப் படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியருக்கு வேலையில்லையா ? அவர்களும் அப்படித்தான் படி படி என்று சொல்லி படிக்க விட்டுவிடுவார்கள் ஆக அவர்கள் கூட இவர்களுக்கு வேலையிருப்பதுபோல அவர்களுக்கும் வேலையிருக்கும் எத்தனை சீரியல்கள் வருகின்றது அதனைப் பார்த்துக் கொண்டு கடைசியில் விரட்டி விடுவார்கள் இதுதான் நடக்கிறது.

ஆக ! விழிப்புணர்ச்சி விழிப்புணர்ச்சி என்று சொல்லும்போது நாம் நம்முடைய குழந்தைகளுக்கு ஆசிரியர்களாக மாற வேண்டும், நம்முடைய குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும் எனக்குத் தெரியாது என்று சொல்ல வேண்டியதில்லை ஏனென்று சொன்னால் உங்களுக்குத் தெரியாது என்ற விஷயம் அந்தக் குழந்தைக்குத் தெரியாது. எடுங்கள் புத்தகத்தை எடு என்ன எழுதினாய் படி என்று வேலை வாங்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் இப்படித்தான் நம்முடைய குழந்தைகளை மடைமாற்றம் செய்து வளர்க்க வேண்டியவர்களாக பொறுப்பிலே இருக்கின்றோம். ஆகவே இந்தக் கருத்துக்களை உங்கள் முன்னால் நான் வைப்பதனுடைய காரணம் விழிப்புணர்ச்சி உள்ளாவர்களாக நாம் மாறி விட வேண்டும் ஏமாற்றம் உள்ளவர்களாக ஆகிவிடக் கூடாது இந்த சமுதாயம் ஏலத்தால் மலிந்திருக்கக் கூடிய சமுதாயம் காலத்தால் நிறைந்திருக்கக் கூடிய சமுதாயம் ஏமாந்த சமுதாயமாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் நாம் இத்தனை பேர்களை எடுத்துக் காட்டுகின்றேன். எத்தனை ஆலிம்களை சொல்லியிருக்கிறேன் அத்தனை ஆலிம்களும் தனித் திறமை பெற்றவர்களாக திகழ்ந்தார்கள்.

இப்படியாக இரண்டாவது அமர்வில் அவர்களின் எழுச்சியுரை சென்று கொண்டிருக்கும்போது தவிர்க்க முடியாத நிர்பந்தத்தினால் சகோதரி உமர் கனி அவர்களை பேச அழைத்ததால் அப்படியே பாதியிலே நிறைவு செய்து கொண்டார்கள் நமது கவிமாமணி புலவர் பஷீர் அஹ்மத் ஹாஜியார் அவர்கள்.

எங்களின் ஏக்கம் இன்னும் உங்களது உரையை தொடர்ந்து கேட்க வேண்டும் மேலும் அறிவுரைகள உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

நீங்கள் இனிமேல் நாங்கள் நடத்தும் இல்லை இல்லை நீங்களே முன்னின்று நடத்தும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை மேல்கல்வி விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியாக அந்த மேடைகளிலும், களங்களிலும், பேச்சாலும் எழுத்தாலும் தாங்கள் ஆளுமை செய்ய வேண்டும் அதற்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருந்திடுவோம் இன்ஷா அல்லாஹ்…


- அபுஇபுறாஹீம்

'அதிரை அறிஞர்' புலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள் மரணம் 18

Unknown | திங்கள், செப்டம்பர் 26, 2011 |

இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன்!

அன்புச் சகோதரர்களே,

சற்று முன் வந்த செய்தி!

நம் 'அதிரை அறிஞர்' புலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு இறப்பெய்திவிட்டார்கள் என்ற செய்தி, அன்னாரின் அன்பு மகனார் அஹ்மது ஆரிப் அவர்களிடமிருந்து கிடைத்தது!  மறைந்த மேதையவர்களுக்காக துஆ செய்யுங்கள்.

அன்னாரின் நல்லடக்கம் நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு சென்னை, ஆழ்வார்திருநகர் சாதிக்பாஷா நகர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

வேதனையுடன்,

-- அதிரை அஹ்மது
---------------------------------------------------------------------


இஸ்லாமிய புலவரவர்!. இறைவனடி சேர்ந்திட்டார்!!.

அதிரையின் புலவரவர், அமைதியான புலவரவர்.
அதிரை மண்ணைத்தாண்டி அறிந்தவரவர்,
இன்று விண்ணைத்தாண்டி செல்கின்றார்.
நாவடக்கம் பேணியவரின், நல்லடக்கம்
இன்று சென்னையிலே நடந்திடுதே!.

தன் இஸ்லாமிய அடையாளத்தை,
தமிழ் புகழடைந்தும் சிறிதேனும் இழக்காதவர்.
தமிழ் இலக்கிய நடையதனை,
தூய இஸ்லாத்தோடு இணைத்தவரர்.


இலக்கியத்தில் செம்மல் அவர்,
புதுமை இலக்கணத்தில் கலக்கியவர்.
தலைக்கனம் இல்லா நல்லவரவர்.
கல்வியில் பல படிகளை கண்டவர்.


படி, படி என பலகனவுகளை கண்டவரவர்.
கல்வியில் ஒரு கோமான்,
சொல்லிலும் அதே சீமான்.
மணிமணியாய் இலக்கிய தமிழ் மொழிந்து,


தமிழ்மாமணி பட்டமதை தனதாக்கி கொண்டவரவர்.
இழந்தது தமிழ்பண்டிதர் ஆதலால், இனி
தஞ்சை தமிழ்பல்கலைக்கழகமே அழுதிடுமோ!.
தேய்பிறைபோல் இஸ்லாமிய தமிழ் புலவர்களை,


அவர்தம், தரமறியாமல் நம் இழக்கின்றோம்!.
அவர்களின் தொடர்பில்லாமல் நாம் இருக்கின்றோம்.
வளர்பிறைபோல் இளம் புதியவரை உருவாக்க,
அதிரை மண்ணிலதில், என்னத்தை நாம் செய்திட்டோம்?.

- அதிரை முஜீப்.கடந்த ஜனவரி மாதத்தில் அதிரையில் நடைப்பெற்ற கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் புலவர் பஷீர் ஹாஜியார் கலந்துக்கொண்டார்கள், அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.


வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 12 6

Unknown | ஞாயிறு, செப்டம்பர் 25, 2011 | , ,

... எனக்கும் உமருக்கும் அமீரகத்தில் இப்போது உறவும் இல்லை, வரவும் இல்லை; அதனால் எந்தப் பற்றும் இல்லை! எல்லாப் பணிகளையும் முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து ”எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று சொல்லிக் கொண்டு வரவேற்பறையில் அமர்கிறோம். அன்று தேதி செப்டம்பர் 11 2001. புறப்படுவதற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன! அந்த நான்கு நாட்களில் உறவினர்களையும் நண்பர்களையும் நேரில் காணவேண்டும்; அல்லது தொலைபேசியில் அவர்களுடன் பேசவேண்டும். வீட்டுக்குத் தேவையான சில பொருள்கள் வாங்க வேண்டும். மீதி நாட்களில் உடலுக்கும் உணர்வுகளுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறோம்.


உமர் சோபாவில் அமர்ந்து தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் என் சிந்தனையைப் பின்னோக்கி ஓடவிடுகிறேன்! பள்ளி, கல்லூரி அளவிலும் மாநில அளவிலும் சித்திரத்தின் சரித்திரத்தில் முதல் இடம் பிடித்து, அறுபது வயது வரை கவலை இல்லை என்று சொல்லக் கூடிய தூய ஆசிரியர் பணியில் இருந்துகொண்டு, ஷெர்ஷாவையும் ஷாஜஹானையும் நடத்திச் சென்ற நான், அன்று இருந்த அரபு நாட்டுப் பயண அலையால் உந்தப்பட்டு துபாய் வந்ததையும், அடுத்த ஆறு மாதத்தில் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் எங்கள் குடும்பத்தின் தூணாக விளங்கிய, எங்கள் மரியாதைக்குரிய மச்சான் (சகோதரி கணவர்) S.M. முஹம்மது பாரூக் அவர்கள் திடீரென இறந்து போனதையும், அதனால் எங்கள் குடும்பம் தடுமாறியதையும், இப்போது அவர்களின் குடும்பத்தின் சுமை என் மீதும் உமர் மீதும் விழுந்ததையும், பட்டுக்கோட்டையில் சுதந்திரமாக இருந்த உமரை துபைக்கு வரவழைத்ததையும், கராமா கிளையில் உமர் தனி மனிதனாகப் பணி புரிந்ததையும், உமர் அஃல்பத்தைமுக்கு மாறும் வரை, நான் சத்வாவிலிருந்து மாலையில் கராமா வந்து உமரையும் கூட்டிக்கொண்டு டாக்சியிலும் படகிலும் சென்றதையும், உமர் அமீரகம் வந்து இரண்டு ஆண்டுகளுக்குள், வயதான எங்கள் தாய் தந்தையரை மீண்டும் பார்க்க முடியாமல் போனதையும், இந்தக் காலக் கட்டத்தில் பிரமச்சாரி அறையில் தங்கி இருந்ததையும், அதனால் உமர் அடைந்த கசப்பான அனுபவங்களையும் மன உளைச்சல்களையும் எண்ணிப்பார்க்கிறேன்.
 
 
உமர் அல்ஃபத்தைமில் பணியில் சேர்ந்து, குடும்ப விசா கிடைத்தும் அந்த நேரத்தில் இந்தியாவில் நிலவிய கெடுபிடி காரணமாக குடும்பம் வர ஓர் ஆண்டு தள்ளிப் போனதையும், திடீரென்று உமர் அபுதாபிக்கு மாற்றப் பட்டதையும், உமர் வாரம் ஒருமுறை என்னைப் பார்ப்பதற்காக துபாய் வந்து சென்றதையும், குடும்பம் வந்த பிறகு ஒவ்வொரு வியாழனும் நான் அபுதாபி சென்று விடுவதையும், எனக்குக் கதவு திறந்து விடுவதற்காக சிறுவர் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வருவதையும், சனிக்கிழமை காலை அபுதாபியிலிருந்து நான் என் துபாய் அலுவலகத்திற்குச் செல்லும்போது, உமரின் இரண்டாவது மகன் என்னை அண்ணாந்து பார்த்து, தன் இனிய மெல்லிய குரலில் ”பெரியப்பா! வரும் வியாழக்கிழமை வருவீர்களா?” என்று கேட்டு என்னை வழி அனுப்பி வைப்பதையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
 
 
உமர் துபாய்க்கு மாற்றப்பட்டதும் பையன்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும், துள்ளளையும், தனிமை நோயால் வாடிக் கொண்டிருந்த உமரின் மனைவிக்கு மனத் தெளிவும் மகிழ்ச்சியும் ஏற்பட்டதையும், எங்கள் சகோதரிகளின் மக்கள் வருகையால் உமர் குடும்பம் மேலும் குதூகலத்தை அடைந்ததையும், அமீரகத்திலிருந்து நானும் உமரும் குடும்பத்தோடு ஹஜ் கடமையை நிறைவேற்றியதையும் அசைபோட்டுபார்க்கிறேன்!
 
 
“அட! இது என்ன புகையும் நெருப்பும்? கட்டிடமல்லவா எரிந்துகொண்டிருகிறது!” – ஓர் அலறல்! நான் திடுக்கிட்டேன்! எனது எண்ண அலைகள் சிதறிவிட்டன! “இங்கே வந்து பாருங்கள்! அமெரிக்காவின் வணிக வளாகத்தை! இரட்டைக் கோபுரங்களில் ஒன்று சரிந்துவிட்டது!” என்று உமர் கத்தினார், தன்னை மறந்து! இப்போது உமரோடு சேர்ந்து நானும் தொலைக் காட்சியைப் பார்த்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு விமானம் மற்றொரு கோபுரத்தின்மீது மோதியது! புகையும் நெருப்பும் கறுப்பும் சிவப்புமாகத் தெரிந்தன! கறுப்பு-சிவப்பு என்றாலே கஷ்டமும் நஷ்டமும் தானா? நான்கு நாட்களுக்கு நிம்மதியாக, சுதந்திர மனிதர்களாக இருக்கலாம் என்று எண்ணி இருந்த எங்களுக்கு மேலும் சோதனைகள்! 15- ஆம் தேதிக்கு டிக்கட் முடிவாகவில்லை. உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு முன்னறிவிப்புகள் கொடுக்கப்பட்டன! எங்கள் பயணம் தள்ளிப் போடப்பட்டு விடுமோ என்று நாங்கள் அஞ்சினோம்!
 
 
நல்ல வேலை, டிக்கட் தேதி உறுதி செய்யப்பட்டது. குறிப்பிட்டபடி செப்டம்பர் 15-ல் புறப்பட்டோம். இந்த முறை எங்களிடம் பொருள்கள் அதிகம் இல்லை. விசாவை ரத்து செய்துவிட்டு வருவதால் விமான நிலையத்தில் குடியுரிமைப் பிரிவில் முத்திரை பெற்று எங்கள் நிறுன ஊழியரிடம் தர வேண்டும். நானும் உமரும் ஒரே ஜன்னல் வழியாகப் பாஸ்போர்டைக் கொடுத்தோம். தந்தை பெயர், ஊர் பெயர் எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியாக இருந்ததால், அதிகாரி எங்களை ஏற, இறங்கப் பார்த்தார்! புத்திசாலி! புன்முறுவல் பூத்தார்! நாங்கள் முத்திரை பெற்ற தாள்களை எங்கள் நிறுவனங்களின் நபர்களிடம் கொடுத்து அவர்களிடமிருந்து விடை பெற்றோம்.
 
 
அனுமதிச் சீட்டு பெற்று விமானத்தில் ஏறினோம். எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். உமர்தம்பிக்கு சென்ற முறை ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வந்தது. அந்த நிகழ்ச்சி எப்படி நடந்து என்பதை எனக்கு மீண்டும் விளக்கினார். ஊரிலிருந்து அதே ஜம்போஜெட் ஏர்இந்தியா விமானத்தில் உமர் துபாய் வந்தபோது விமானப் பணிப் பெண்கள் அவரிடம் நலம் விசாரித்ததையும் சொன்னார். எதையும் விடாமல் ஒப்புவிக்கும் பழக்கம் உமரிடம் இருந்தது. சிறு வயதிலிருந்தே ஒரு செய்தியை என்னிடம் விளக்கி முடித்தால்தான் அவர் ஆறுதல் அடைவார். “நான் சொல்வதைக் கவனிக்கிறீர்களோ இல்லையோ, ‘ஊம்! அப்படியா!’ என்றாவது சொல்லிக் கொண்டிருங்கள்” என்பார்.
 
 
விமானம் தொடர்பான அத்துணை செய்திகளையும் உமர் அறிந்து வைத்திருந்தார். என்ன என்ன வகையான விமானங்கள் இருக்கின்றன்; அவைகளின் அமைப்பு எப்படி; எவை பாதுகாப்பானவை; எவை ஆபத்தானவை; என்றெல்லாம் அறிந்து வைத்திருந்தார். தான் ஏறி அமர்ந்திருக்கும் விமானம் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாய் இருப்பார். விமானம், எப்படி வடிவமைக்க பட்டிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பார்! இரண்டு மூன்று முறை நான் அவரோடு பயணம் செய்திருக்கிறேன். ஒரு முறை அவருடன் பயணம் செய்து கொண்டிருக்கும்போது அவர் என்னிடம் கேட்டார், “நாம் இப்போது. பயணம் செய்துகொண்டிருப்பது என்ன வகை விமானம் தெரியுமா? DC10 !” DC10 விமானம் பற்றி உமர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது வெற்றிகரமான விமானம் அல்ல! எங்காவது விமான விபத்து நடந்தால், “அது DC10 ஆக இருக்கவேண்டுமே” என்பார் உமர். அவர் சொன்னது சரியாக இருக்கும்! எங்கள் விமானமும் இந்த வகைதான் என்று அறிந்ததும் நான் மனதிற்குள் சொல்லிக்கொண்டேன், ’தம்பி உள்ளான் இ(எ)தற்கும் அஞ்சான்’ என்று!
 
 
DC-10 என்ற விமானம் McDonnell Douglas என்ற அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இது மூன்று இயந்திரங்களுடன் அமைக்கப்பட்ட மிகப்பெரிய விமானமாகும். அதிகப்பட்சம் 380 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது! 1968 முதல் 1988 வரை DC-10 வகையில் 446 விமானங்கள் தயாரிக்கப்பட்டு, விமானக் கம்பெனிகளுக்குக் கொடுக்கப்பட்டன. DC-10 அதிக அளவில் பயன்படுத்துவது FEDEX சரக்குகள் விமானப் பணிக்காகத்தான். இப்பொழுதெல்லாம் அநேகமாகப் பயணிகள் போக்குவரத்துக்கு DC-10 பயன்படுத்தப் படுவதில்லை. இவ்வகையான விமானம் 19 முறை விபத்திற்குள்ளாகி இருக்கின்றன!ஒரு முறை உமர் சிங்கப்பூர் வழியாக ஊர் சென்றார். பயணம் செய்த விமானம் Dc 10 வகை! இந்த எண்ணம் அவர் உள்ளத்தில் பதிவாகிவிட்டது! தொழுகை நேரம் வந்ததும் விமானத்தின் பின் பகுதிக்குச் சென்று அங்கே தொழுதார். அப்போது விமானம் ஆடியது. உமர் ஏதோ ஒன்று ஆகிவிட்டது என்று பயந்துவிட்டார்! சற்று நேரத்தில் ஆட்டம் நின்றுவிட்டது. வேறு ஒரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் இருவரும் தொழுகை நேரம் வந்ததும் முன் பகுதிக்குச் சென்று தொழுது இருக்கிறோம். இறைவனை நினைக்கும் சரியான நேரமும் இடமும் அதுதானே! இறைவனிடமே தன்னை ஒப்படைத்துவிட்ட ஒருவருக்கு திடீர் விபத்து, உடனடி வெகுமதி! புவனம் கை விட்டுப்போனால், சுவனம் கை நீட்டி அழைக்கும்! இன்ஷா அல்லாஹ்!இறைவனருளால் வானூர்தியில் சென்னை வந்து, புகைவண்டியில் ஊர்ந்து ஊர் வந்து சேர்ந்தோம் அல்ஹம்துலில்லாஹ்!

... தொடரும்
 
 
 
-- உமர்தம்பி அண்ணன்

சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக வேட்பாளர்கள் அறிவிப்பு 5

Unknown | ஞாயிறு, செப்டம்பர் 25, 2011 | , , ,

வரும் உள்ளாட்சித் தேர்தலில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட ஆறு வார்டுகளில் வேட்பாளர்களை போட்டியின்றி தேர்ந்தெடுப்பது தொடர்பாக இன்று(25/09/2011)காலை 10 மணிக்கு சம்சுல் இஸ்லாம் சங்கக் கட்டிடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . அப்துல் லத்திப் ஆலிம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வார்டுகளில் போட்டியிட மனு செய்த 33 பேர் கலந்துகொண்டனர். இஸ்லாமிய அடிப்படையில் வார்டுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள்.

01வது வார்டு. சுரைக்கா கொல்லை, சகோதரர் ஷேக் அஷ்ரப் அவர்கள்

12வது வார்டு புதுத்தெரு, சகோதரர்  ஹனீபா அவர்கள்


13வது வார்டு நடுத்தெரு கீழ்புறம், சகோதரர் சம்சுதீன் அவர்கள்


14வது வார்டு நடுதெரு மேல்புறம்,சகோதரர் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள்


19வது வார்டு புதுமனைத் தெரு, சகோதரி செளதா அவர்கள்


21வது வார்டு C M P லேன், சகோதரர் இப்ராஹிம் அவர்கள்

நன்றி: அதிரை பிபிசி


மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தை  தொடர்ந்து ஒற்றுமையை வழியுறுத்தி ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனனவருக்கும் வாழ்த்துக்கள். ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இந்த முயற்சியை நாம் எல்லோரும் நிச்சயம் பாராட்ட வேண்டும். இது போன்று மற்ற சங்கங்களும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும், மேலும் போரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் அனைத்து சங்கங்களும் ஒன்று சேர்ந்து ஒரே வேட்பாளாரை நிறுத்தி நம் ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டும் என்பதே அதிரைவாசிகள் அநேகரின் ஆவல். அல்லாஹ்விடம் நாம் அனைவரும் துஆ செய்வோம்.

-- அதிரைநிருபர் குழு

நாம் இந்த மண்ணில்தான் பிறந்தோம்!!! 7

Unknown | சனி, செப்டம்பர் 24, 2011 | , ,

ADIRAIMANAM

நாம் இந்த மண்ணில்தான் பிறந்தோம்!
இந்த வாழ்க்கை நிரந்தரமா?
பணம், புகழ் நிரந்தரமா?
அதிகாரம், ஆணவம் நிரந்தரமா?
வாலிபம் நிரந்தரமா?
எதுவுமே நிரந்தரம் இல்லை
சிந்திக்க மறந்து விட்டோம்!

மண் என்றால் பிறந்த ஊரைப்பற்றி
பெருமையாக நினைக்கிறோம்!
மனிதன் பெருமைப்பட்டுக்கொள்ள
இந்த உலகில் நிரந்தர சொந்தம்
என்று எதுவும் கிடையாது!
வல்ல அல்லாஹ்வின் பூமியில்
அவன் நமக்கு வழங்கிய
அறிவு, ஆற்றல், பொருள் என்று
அத்தனை வசதிகளுடன் வாழ்ந்து
கொண்டு என்னால் வந்தது
என்று பெருமை பட ஒன்றுமே இல்லை!

மனிதர்களின் மனங்கள் மாறவில்லை!
ஊர் பெருமை! தெரு பெருமை!
குலப்பெருமை! பணப்பெருமை!
என்ற மறுமைக்கு
உதவாத சிந்தனைகள்
மனதை விட்டு அகன்றால்
மனிதன் மாறிவிட்டான்
மனிதனாக என்று மகிழ்வடையலாம்!

அறிவால் பெருமை இல்லை!
ஆற்றலால் பெருமை இல்லை!
இன்பத்தால் பெருமை இல்லை!
ஈகையால் பெருமை இல்லை!
உறவால் பெருமை இல்லை!
ஊரால் பெருமை இல்லை!
என்னால் என்ற பெருமை இல்லை!
ஏணியாக உயர்ந்துவிட்டேன் என்ற பெருமை இல்லை!
ஐங்காலம் தொழுதேன் என்ற பெருமை இல்லை!
ஒற்றுமை என்ற பெருமை இல்லை!
ஓடுவதாலும் பெருமை இல்லை!

ஒரே அல்லாஹ் என்று பெருமைபடலாம்!
அல்லாஹ் நம்மை இஸ்லாத்தை
ஏற்றுக்கொள்ள வைத்ததற்கு பெருமைபடலாம்!
இவ்வுலகில் எந்த சமுதாயத்திற்கும் கிடைக்காத
உத்தமர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை
நாம் தலைவராக பெற்றதற்கு பெருமைபடலாம்!
குர்ஆனை! வல்ல அல்லாஹ் நமக்கு
வழங்கியதற்கும் பெருமைபடலாம்!
இதைதவிர மனிதர்களுக்கு பெருமைபட
இவ்வுலகில் ஒன்றும் இல்லை!

நாம் இம்மண்ணில்தான் பிறந்தோம்!
இம்மண்ணில்தான் மறையப்போகிறோம்!
வாழ்க்கை நிரந்தரம் இல்லை!
மரணம் ஒருநாள் வரும்!
பல பட்டங்கள் பெற்று அழகிய
பெயருடன் நடமாடிய
நம் பெயரும் அப்பொழுது மாறும்!
மையத் (பிணத்)தை எடுத்தாச்சா?

நபி(ஸல்) அவர்கள் இந்த உலகில்
மனிதா! நீ! விருந்தினரைப்போல்
இருந்துக்கொள்  என்று சொல்லி இருக்க!
மனிதர்களோ மரணம் தழுவாமல்
வாழ்வோம் என்ற (அவ) நம்பிக்கையில்
ஆடம்பரங்கள், தலைக்கணங்களுக்கு
சொந்தக்காரர்களாக மாறி விட்டதால்தான்
அவலங்களும் அதிகமாகிவிட்டது!

நாம் அனைவரும் வல்ல அல்லாஹ்வின்
அடிமைகள் என்பதை மனதில் வைத்து
இம்மைக்கு சொந்தக்காரர்கள் நாம் இல்லை!
மறுமைக்கு சொந்தக்காரர்கள் ஆவதற்கு
குர்ஆனும், நபி(ஸல்) அவர்களும் காட்டித்தந்த
தூய்மையான மார்க்கத்தை
தெளிவாக விளங்கி பின்பற்றி
சொர்க்கம் செல்லக்கூடிய மக்களாக
வாழ நாம் முயற்சிப்போம்! இன்ஷாஅல்லாஹ்!

(முஹம்மதே) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான். அவ்வாறில்லை! தன்னைத் தேவையற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான். உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு. (அல்குர்ஆன் : 96: 1-7)
-- அலாவுதீன்


ஷம்சுல் இஸ்லாம் சங்கம் - அமீரக கிளை நிர்வாகிகள் தேர்வு 6

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, செப்டம்பர் 24, 2011 | , ,

பிஸ்மில்லாஹிர்ரஹ்மனிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்

புகழுக்குரியோன் அல்லாஹ்வின் பேரருளால் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பில் இணைவதற்காக ஷம்சுல் இஸ்லாம் முஹல்லாவின் அமீரக உறுப்பினர்களால் ஷம்சுல் இஸ்லாம் அமீரக கிளையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வு 22-09-2011 வியாழன் இரவு 9:30 மாணியளவில் துபை தேரா லேண்ட்மார்க் ஹோட்டலில் நடத்தப்பட்டது, அல்ஹதுலில்லாஹ்.

அமீரகத்தில் வாழும் சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவிற்கு உட்பட்டவர்களுக்கு பொது அறிவிப்புச் செய்து கூட்டப்பட்ட கூட்டத்தில் அழைக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் கலந்து கொண்டனர். கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின் படி இனிதே நடந்தேறியது.

இடையில் தேநீர் விருந்துடன், அத்துனை பேர்களிடமும் ஆலோசனைகள், கருத்துரைகள் கேட்கப்பட்டன. ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் செயற்பாடுகளைப் பாராட்டியும், இன்னும் செய்யப்பட வேண்டிய செயற்பாடுகள் பற்றியும் திரண்டிருந்தவர்களில்  சிலரின் கருத்துரைகள் பெறப்பட்டன. அவற்றிற்கு உடனுக்குடன் ஜனாப் S.ஜமீல் காக்கா (அஜ்மான்) அவர்களால் மறுமொழியும் தரப்பட்டது.

கால அவகாசம் கருதி அனைவரின் கருத்துகளும் கேட்க இயலாமற் போனதால் அடுத்த நிகழ்வாக அனைவரின் விருப்ப அடிப்படையில் நிர்வாகக் குழுவினரைத் தெரிவு செய்வதற்கான வேண்டல்/விருப்பம் விடப்பட்டது. அனைவரும் ஒருமித்து நிர்வாகக் குழுவை அமைப்பாளார்கள் தெரிவு செய்வதையே அமைக்கலாம் என்று உற்தி செய்தவண்ணம், கீழ்கண்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
சகோ.ஜமாலுதீன் (மேலத் தெரு) அவர்கள் நன்றியுரை நவின்று கஃப்பாரா துஆ ஓதினார்கள். இத்துடன் நிகழ்ச்சி இறையருளால் இனிதே நிறைவேறியது. இன்ஷா அல்லாஹ் மீண்டும் வரும் 30-09-2011 அன்று துபை அல்கிஸசில் (AL-GHUSAIS) நடைபெரும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதற் பொழ்துக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இவண்
நிர்வாகிகள்
ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (அமீரக கிளை)

ஆட்டு மூளை வறுவலும், ஆஸ்பத்திரி டோக்கனும் ! 34

ZAKIR HUSSAIN | வெள்ளி, செப்டம்பர் 23, 2011 | ,சமீபத்தில் ஒரு சகோதரியின் வலைத்தளத்தில் "ஆட்டு மூளை வறுவல்" செய்யும் முறை பற்றி கொஞ்சம் தலைவாரியாக எழுதியிருந்தார். [இதற்கு விலாவாரியாக என்று எழுதுவது சரியில்லை என நினைக்கிறேன்... விலாவாரி என்றால் "கிட்னி வறுவல்" சார்ந்தது].

இதற்கு சிலபேர் பின்னூட்டமாக 'நல்லா இருந்துச்சி" என்ற ரேஞ்சில் எழுதியிருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்டது சமயல் குறிப்பா? அல்லது வறுவலா எனத் தெரியவில்லை. எனக்கு உள்ளுர பயம் தான். நாமும் வெள்ளைக்காரன் மாதிரி. "Good!!! taste nice!!' என்று எழுத மனசு வராமல் நானும் எழுதினேன் இப்படி:

இதை சாப்பிட்டால் [கொலெஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள்] 'ஹிந்து'வாக இருந்தால் "சங்கு" நிச்சயம். 'முஸ்லீமாக' இருந்தால் "தலைமாட்டில் ஊதுபத்தி" நிச்சயம்.

ஆனால் என் நண்பனிடமிருந்து [Sabeer Ahmad-Dubai] வந்த மின்னஞ்சல் இப்படி இருந்தது;

"ஏன்டா, நீ ஜோக்கடிக்கறியா பயம் காட்டுறியா?"


"ஏன் கேட்கிறேன்னா, நம்ம பாய்கள் பலபேர் ரசித்து ருசித்து சாப்பிடும் அயிட்டம்டா இது. நான் துபாயில் இருக்கும்போது பெரும்பாலும் உணவகங்களில் இரவு உணவுக்காக காத்திருக்கும்போது காதில் விழுந்த அயிட்டங்களின் பெயர்களில் சிலவற்றையாவது உன் கைல சொல்லலேன்னா நான் சாப்பிடறது செரிக்காது . மூளை ஃப்ரை (fry) , குடல் வறுவல், பல்குத்தி fry (நாம செவரொட்டிம்போம்), கொத்துப் பரோட்டா (அதுவும் பீஃப் (beef) கொத்து, மட்டன் கொத்து, சிக்கன் கொத்துன்னாதான் கொஞ்சம் மரியாதையா பாப்பான். சாதா கொத்துன்னா கழுவாத டம்ள்ரில்தான் தண்ணீரே தருவான்.) ஆட்டுக்கால் பாயா, ஈரல் ஃப்ரை (fry), இப்படி சாப்ட்றாங்னா. அதுவும் உங்கூரு palm oilலதான் செய்வாய்ங்க (கட்ட தோசையும் சட்னியும் ஆர்டர் பண்ணிட்டு wait பன்ற என்னை ஏதோ செத்த எலிய பார்க்கிற மாதிரிதான் பார்ப்பாய்ங்னா).


"தலைமாட்டில் ஊதுபத்தி' நிச்சயம் பயம் காட்றியப்பா."

சமீபத்தில் ஒரு டயட்டிசியனிடம் [National Heart Institute-Kuala Lumpur] பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சொன்னது' இறைச்சி தாராளாமாக் சாப்பிடலாம், சாப்பிடும்போது இறைச்சி மட்டும் 5, 6 துண்டு அதாவது ஒரு துண்டு ஒரு தீப்பெட்டி அளவு என்றார், மனதுக்குள் சிரித்துக் கொண்டேன் எப்படி சொல்வது இந்த் உண்மையை இங்கு ஒவ்வோருவரும் ஒரு விருந்து என்று வந்து விட்டால் ஒரு தீப்பெட்டி தொழிற்ச்சாலையே சாப்பிடுகிறார்கள் என்று.
எனக்கு தெரிந்த ஒரு டாக்டர் சொன்னது: [ Dr. Bala Subramaniam. Cardiologist osler diagnostic center  Chennai] "பொதுவா மட்டன் சாப்பிடலாம்சாப்பிடும்போது, "பார்ட்ஸ்" தவிர்த்து விடுங்கள்.


" பார்ட்ஸ்னா என்ன டாக்டர்?"

"ஆர்கன்... கிட்னி / ஈரல்...."

"பார்ட்ஸ் சாப்பிட்டா என்னா ஆகும் டாக்டர்?"

"உங்க பார்ட்ஸ் கெட்டுடும்'

இதைவிட தெளிவான பதில் யாரும் சொல்லமுடியாது. பொதுவாக சுவரொட்டி, ஈரல் இவைகளுக்கு என்ன விதமான பட்டை , கிராம்பு, நெய் சேர்க்கலாம் என யோசிக்கும் முன் அதன் செயல்பாடுகள் [உடலில்] என்ன என்பதை தெரிந்து கொள்வது நல்லது. மற்றும் அன்றைக்கு [Physiology] "உடல் உறுப்புகள் பயன்பாடுகள்" க்ளாஸ் நடக்கும் போது சந்தனக்கூடு பார்த்துட்டு தூங்கிட்டேனப்பா' னு புலம்பவும் கூடாது.
எனக்கு தெரிந்து ஆட்டு மூளையில் என்ன இருக்கிறது என ஒரு பேத்தாலஜி [Pathology] ரிப்போர்ட் பார்த்தால் 'இருப்பது எல்லாம் கொலஸ்ட்ரால்... கொலஸ்ட்ராலை தவிர ஏதுமில்லை' என்று விசாரனைக்கூண்டில் சொல்வது போல் உண்மை சொல்லும். பேத்தாலஜி [Pathology] ரிப்போர்ட் எந்த சூழ்நிலையிலும் பேத்தாது. பொதுவாக கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவு செரிக்க 3 மணி நேரத்துக்கும் மேல் ஆகலாம். [சைவ] சாதாரண உணவு செரிக்க 2 மணி நேரம் ஆகலாம்.

தொடர்ந்து வயிற்றுக் கோளாறு உள்ளவர்களுக்கு நெய்யில் செய்த உணவுகள் செறிக்க சில மணி நேரம் ஆகலாம். அதுதான் சமயத்தில் ‘உர்” சத்தம் வயிற்றிலிருந்து வரக்காரணம். இதைத்தான் தமிழ் சினிமாவில் “ எனக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டி எழுப்பிட்டே’னு கண்ணு சிவக்க பேசராய்ங்களா??..

நாம் தினமும் 3 வேலை சாப்பிடுகிறோம். ஆனால் இது வரை எத்தனை முறை ஒரு டயட்டிசியனை பார்த்து பேசியிருப்போம்.?

பொதுவாக இதுபோல் ஈரல் சாப்பிட்டால் நம் ஈரலுக்கு நல்லது கிட்னி சாப்பிட்டால் கிட்னிக்கு நல்லது என நம்பிக்கை உண்டு, இதுவரை நம் ஊர் ஆட்கள் சாப்பிட்ட ஆட்டு முளைக்கு இதுவரை குறைந்த பட்சம் பத்து ஐன்ஸ்ட்டீன் , எட்டு ராமானுஜம், ஆறு தாமஸ் ஆல்வா எடிசன் இது வரை நம் ஊரில் இருக்க வேண்டும், எங்கே போனாணுங்க??

“அதெல்லாமா கதைக்கு ஆவப்போவுது... முன்னேயெல்லாம் இதல்லாம் பார்த்தா சாப்டாங்க?” என சொல்லும் ஊர் பெரிசுங்களை தாராளமாக 3 மண்டலத்துக்கு "அன்னம் தண்ணி யாரும் தரப்டாது" என சொல்லி ஊரை விட்டு தள்ளி வைக்கலாம் [யாரோ சொம்பை லவட்டிடானுங்க.. அவனுக்கு என்ன தீர்ப்பு??]

"நான் தான் இதுவெல்லாம் சாப்பிடுவேனே  எனக்கு ஒன்னும் செய்யாதே!" என அடம்பிடித்தால் தனியாக வங்கியில் கணக்கு வைத்துக்கொள்ளவும். வயதான காலத்தில் தஞ்சாவூருக்கும் , பட்டுக்கோட்டைக்கும் ஆஸ்பத்திரி டோக்கன் வாங்க வரிசையில் நிற்க  வேண்டிவரும். கையில் ஆளுக்கு ஆள் ஒரு பைலுடன் இன்டெர்வியுக்கு போகிற மாதிரி அலைவது காலக்கொடுமை.
உங்களுக்கு வயது 40ஐ தான்டிவிட்டதா?.. உங்கள் மனைவி  இரவு சாப்பாட்டுக்கு
ஆட்டுமூளை / பாயா என சமைத்து வைத்து விட்டு "நீங்களே சாப்பிட்டுருங்க.. நான் காலையில் உள்ள இட்லி மிஞ்சிடுச்சு.. அதை சாப்பிடுகிறேன்" என்று சொல்கிறார்களா.. உங்கள் கல்யாணப் பத்திரிக்கையில் உங்கள் மனைவியின் பெயருக்கு முன்னால் 'தீன் குலச்செல்வி / திருநிறைச் செல்வி" என்று இருக்கும் அதை  'தீத்துக்கட்டும் செல்வி" என்று திருத்தி வாசிக்கவும்.
- ZAKIR HUSSAIN

இந்த ஆர்டிக்கில் நான் போன வருடம் எழுதியது, This is just for your reading pleasure.


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு