ஒற்றுமையும் (தேர்தலில்) ‘ஒட்டு’ மையும் - விவாதக்களம்

அன்பிற்கினிய அதிரைப்பட்டினத்து தேர்வு நிலை பேரூராட்சி வாக்காளப் பெருமக்களே !

சாரலும் தூறலுமாக இருந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் தற்போது டாப் கியரில் சூடு பிடித்துக் கொண்டு பயணிக்க ஆரம்பித்துவிட்டது !

கடந்த சில நாட்களாக நமதூரில் நடந்தேறும் சமுதாய ஒற்றுமை முயற்சிகளும் அதற்கான ஆயத்த பணிகளின் செயல்பாடுகளும் அன்றாடம் அதிரைமணம் கமழும் வலைத்தளங்களில் கண்டு வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ் !

ஒற்றுமை பற்றி நிறைய பேசிவருவதாலும், இன்னும் பேச வேண்டியவர்கள் பேசி ஒருமித்த முடிவுக்குள் வருவதற்குண்டான எல்லா முயற்சிகளும் எடுத்து வரும் இந்தத் தருணத்தில் சகோதரர்களின் அந்த சீரிய முயற்சிக்கோ அல்லது அவர்களின் செயல்பாடுகளுக்கோ பங்கமாக இல்லாமல் சிந்திக்க சில வரிகளை இங்கே பரிமாறிக் கொள்வோம் !

அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் விரல்களில் ஒட்ட இருக்கும் "மைய்"க்கு இன்று நாம் ஒற்றுமையைப் பற்றி சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்!, சரி இவைகள் அத்தோடு முடிந்து விடுமா ? இல்லை விரல்களில் ஒட்டிய மைய் காயும் வரைதான் இந்த ஒற்றுமையா ?

வாருங்கள் விவாதிப்போம் நியாமான காரணங்களை முன்னிருத்தி பேரூராட்சி மன்றத்திற்கான தலைவரை அதுவும் ஒற்றைத் தலைவரை எவ்வாறு தேர்ந்தெடுக்கப் போகிறோம்? உங்களால் சுட்டிக் காட்டப்படும் தகுதியானவர் யார் ? முடிந்தால் ஆலோசனைகளை இல்லையேல் ஆதங்கங்களை பகிர்ந்திடுங்கள் எல்லாமே வரம்புக்குள் இருந்திடட்டுமே!

இந்த விவாத மேடையின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் தெரிந்தவர்கள்தான் நீங்கள் இருந்தாலும், நாங்களே எழுந்திருச்சி சொல்லிடுறோம்... சபை நாகரிகம் கருதி நளினமாக தனிமனித தாக்குதலின்றி தக்க காரணங்களுடன் தெம்பாக பேசுங்க (விரிச்சுவல் சோடாவுக்கு ஆர்டர் செய்யப்படும்)!

- அதிரைநிருபர் குழு

9 கருத்துகள்

U.ABOOBACKER (MK) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்
அதிரையில் சங்கங்களின் ஒற்றுமை முயற்சிக்கு கட்டுப்பட்டு போட்டியிலிருந்து விலகியவர்கள் பாராட்டுகுரியவர்கள். ஆனால் ஊர் சங்கத்திற்கு கட்டுப்படாமல் தாங்கள் சார்ந்த கட்சிக்குதான் கட்டுப்படுவோம் என்று போட்டியிடுபவர்களில் ஒருவரைதான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது சங்கத்தின் தோல்வியல்லவா? அவர்களுக்கு தண்டனையாக சங்கமே ஒரு நல்ல வேட்பாளரை நிறுத்தி வெற்றியடைய் முயற்சிக்கலாமே?

அன்புடன்
முகி அபுபக்கர்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

நிச்சயமாக, மூன்று பெரிய கட்சிகள் மல்லுக் கட்டுவதை தவிர்க்க முடியாததே ! அதிலும் மற்றொமொரு உதிரிக் கட்சியாக உருவெடுத்திருக்கும் தே.மு.தி.க.வும் அடங்கும்.

அவர்கள் திரும்ப பெறாததற்கு பின்னனி காரணங்கள ஆயிரம் இருக்கலாம். இனி ஒருவரை தேர்ந்தெடுத்து நிறுத்தி ஆதரவு கோருவது சாத்தியமா ? அல்லது இருப்பவர்களில் இவரைவிட அவர் பெட்டர்னு நம்மை நாமே தேற்றிக் கொள்வது சரியாகுமா ?

Muhammad abubacker ( LMS ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த விவாத மேடைக்கு என்னுடைய இரண்டாவது ஓட்டை பதிய வந்தவனாக.

ஒற்றுமையை பற்றி பேசிக்கொண்டிருக்கும் இத் தருணத்தில்.உள்ளாட்சி தேர்தலைமுன்னிட்டு.
தெருக்கள்.கட்சிகள்.இயக்கங்கள்,ரீதியாக பிளவு பட்டு போய் கொண்டிருக்கிறோம் உண்மை.

தேர்தலுக்கு முன் அது செய்வேன் இது செய்வேன்.என்று வாக்குகளை தந்து விட்டு.ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன்.கண்தெரியாத குருடனை போல்.கண்டுக் கொள்ளாமல் இருந்து விடுகிறார்கள்.

35 .வருடங்களுக்கு மேலாக ஒரே சாரார் கையில் பேரூராட்சி நிர்வாகம் இருப்பதால் நாங்கள் போடுவதுதான் சட்டம் எங்களை யாரும் கேட்கமுடியாது என்ற போக்கி போய் கொண்டிருக்கிறார்கள்.

இன்று அதிரையில் பரவலாக பேசப்படும்.குப்பைகளை சரியாக அல்லப்படாததை பற்றி இந்த நிலைமை
எல்லா இடங்களிலுமா என்றால் இல்லை.குறிப்பிட்ட தெருக்களை மட்டும் வஞ்சிக்கப் படுகிறது.

இந்த அவலங்கள் மாறவேண்டு என்று சொன்னால் அதிரையில் உள்ள ஏழு சங்ககளிருந்து ஒரு நபரை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவருக்கு.சேர்மன் பதவியை கொடுத்தால் நிச்சயமாக.
அதிரையில் பெரும் மாற்றத்தை காணலாம் என்பது என்னுடைய வாதம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

மூவரின் நெருக்கம் காரணமாக தனிப்பட்ட முறையில் எதுவும் கூற மனம் தயக்கம்.(குறுகிய காலத்தில் மகா வளர்ச்சி பெற்ற செய்யது காக்கா தலைமையின் முடிவு மைல்கல்,மிகவும் போற்றப்படவேண்டியவர்கள்)
பகைமை,பண அழிவு தவிர்க்கப்படவேண்டும்.
எனவே அருமை மூவர்களே காலம் ஒன்றும் கடந்துவிடவில்லை.நீங்கள் யாரும் வித்தியாசகோணத்தில் இருப்பவர்களல்ல.தோளோடு தோல் கோர்க்கும் ஒரேவயது சகாக்கள்.எப்படி மல்லுகட்டினாலும் நாளை வரப்போவது ஒரு சேர்மன் தான்.அப்படி உங்களை வரச்செய்ய (நாளை உங்களுக்குள் உறவு எப்படி இருக்கும் என்று எங்களுக்கு தெரியாது)நிச்சயம் எங்களுக்குள் பல பகைமைகள் வரவேண்டிய கட்டாயம்.எனவே நீங்கள் உடன் மனதால் ஒன்று சேருங்கள்.செக்கடிமோட்டுக்கு சொந்தக்கார சேர்மன் நம்மாலு இவர் இருக்கட்டும் என்று( அஸ்லம் காக்கா,அஜீஸ் காக்கா,முனாப் காக்கா) இன்றே முடிவெடுங்கள்.
ஒன்றுபடுங்கள் உடனே!
செக்கடிமோட்டு சொந்தக்கார சேர்மனாகுங்கள் இன்றே!!
இது உங்களால் மட்டுமே முடியும்!!!

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

இஸ்லாமா(ஒற்றுமை, சமுதாய நலன்)? கட்சியா (சுயநலன், கவுரவம்)? என்பதை சேர்மன் வேட்பாளர்கள் முடிவு செய்துக்கொள்ளட்டும்.

உள்ளாட்சி தேர்தலுக்காக அரசியல் கட்சிகளுக்கு சீட்டுக்காக பல லட்சங்கள் கொடுத்த அந்த பணத்தை வைத்து தேர்தலில் தனியாக நின்று மக்களுக்கு சேவை செய்யலாமே.

கட்சிகளை தவிர்த்து பொது வேட்பாளரை அனைத்து சங்கங்களும் மீண்டும் ஒன்று கூடி ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்பது வெளிநாட்டு வாழ் அதிரைவாசிகளின் விருப்பம். ஊரை ஆட்சி செய்தவர்கள் செய்யாதவர்கள் என்ற வரட்டு கவுரவ சிந்தனை பேச்சுக்கள் விட்டொழிய வேண்டும்.

ஒன்று மட்டும் புரியவில்லை.

ஒருவர் வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர், ஒருவர் சென்னையில் வியாபாரம் செய்பவர், ஒருவர் சமுதாயத்தில் பல பல பல பொறுப்புகளில் இருந்து வக்கீல் தொழிலுடன் தன் சொந்த தொழில் செய்பவர், மற்றொருவர் ஊரில் தொழில் செய்பவர் மற்றும் அரசியல் வாரிசு. இவர்களில் யார் சேர்மன் பதவிக்கு தகுதியானவர்?

படித்தவரா? பணக்காரா? அரசியல்வாதியா?

தெளிவான விடைதெரியாத ஆயிரம் அதிரைவாசிகளில் நானும் ஒருவன்.

இல்லை.. இல்லை.. எங்கள் தெரு ஆளு, எங்கள் கட்சி ஆளு என்று தம்பட்டம் அடித்துக்கொண்டே சென்றால் பாதிப்படையப்போவது யார் என்பதை நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.

அல்லாஹ் நம் எல்லோரையும் காப்பாற்றுவானாக.

அதிரைநிருபர் பதிப்பகம் சொன்னது…

மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------

வர இருக்கும் உள்ளாச்சி மன்றத்தேர்தலில் நாம் கட்சிகளுக்கு முக்கியத்துவம் கண்டிப்பாக தரப்பட வேண்டியதில்லை. காரணம் பிரதான கட்சிகளே தன் கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிட்‍டு மக்கள் பிரச்சினை மட்டுமே பிரதான குறிக்கோள் என்று சொல்லி வரும் தேர்தல் மூலம் தனக்கு வேண்டியதை சாதிக்க நினைக்கின்றன அத‌ற்கான‌ காய்க‌ளை க‌ச்சித‌மாக‌ ந‌க‌ர்த்தி வ‌ருகின்ற‌ன‌.

அப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில், நாம் பாரம்பரியம், வாரிசு அரசியல், தெருப்பாகுபாடு, கட்சிகள் என்று வரும் தேர்தலுக்காக‌ பிளவுபட்டு நிற்காமல் சேர்மன் ஒருவரே வர முடியும் என்ற சூழ்நிலை இருப்பதால் இவர் வந்தால் நிச்சயம் சுயநலமின்றி ஊருக்காக நல்லது செய்வார், ஊரின் பிரதான பிரச்சினைகளுக்கு வழி காண்பார், அரசு மூலம் நம் ஊருக்காக ஒதுக்கப்பட்ட நிதி மூலம் நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து சேர்ப்பார், ஊர் அமைதிக்கு அவ்வப்பொழுது பங்கம் விளைவிக்கும் மதச்சாயம் பூசப்பட்ட கலவரங்கள் வராமல் துரித நடவடிக்கை மூலம் (ஆரோக்கியமான அமைதி பேச்சு வார்த்தை மூலம்) ஏற்பட இருந்த‌ உயிர், பொருள் சேத‌ங்க‌ளை த‌டுக்க‌ முய‌ல்வார், எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ள் செய்ய‌ உள்ள‌த்துணிச்ச‌ல் அதிக‌ம் கொண்ட‌வ‌ராக‌ இருப்பார், நீதி, நேர்மை தவறாது இறையச்சம் கொண்டு செயல்படுவார் என்று ஊரே கை காட்டும் ஒருவ‌ரை எல்லோரும் சேர்ந்து தாராள‌மாக‌ தேர்ந்தெடுத்து அழ‌குபார்த்து ந‌ல்ல‌ ப‌ல‌ திட்ட‌ங்க‌ளை அனுப‌விக்க‌ முய‌ற்சிக்க‌லாம்.

மேற்க‌ண்ட‌ த‌குதிக‌ளும், திற‌மைக‌ளும் ஊரில் ஒருவ‌ருக்கும் இல்லை என்று வாதிடுப‌வ‌ராக‌ நீங்க‌ள் இருந்தால் அந்த பதவிக்கு நீங்க‌ளே வேட்பு ம‌னு தாக்க‌ல் செய்து உங்க‌ளை வெளியுல‌குக்கு வெளிக்காட்டிக்கொள்ள‌லாம்.

எதையும் செய்ய‌ மாட்டேன். க‌ருத்துக்க‌ளை ம‌ட்டும் க‌ச்சித‌மாக‌ சொல்லி வ‌ருவேன் என்ப‌வ‌ராக‌ இருந்தால் உங்க‌ளுக்கு பிடித்த‌ ந‌ல்ல‌வ‌ரை தேர்ந்தெடுக்க‌ ஓட்டு போட‌வும், அவ‌ருக்கு ஓட்டு போட‌ச்சொல்லி உங்க‌ள் குடும்ப‌த்தின‌ரை தூண்டுப‌வ‌ராக‌வாவ‌து இருந்து விட்டு போங்க‌ள்.

எது எப்ப‌டியோ த‌ய‌வு செய்து வார்டு மெம்பராக இருந்தாலும் சரி அல்லது ஊர் சேர்மனாக இருந்தாலும் சரி ந‌ல்ல‌வ‌ர்க‌ளை ம‌ட்டும் தேர்ந்தெடுக்க‌ முய‌ற்சி செய்யுங்க‌ள் இல்லையேல் "ந‌ல்ல‌ குண‌ம் இல்லாத, மார்க்க‌ ப‌ற்ற‌ற்ற, வரதட்சிணை கொடுமை செய்யும், மது/மாதுக்கு அடிமையான, உழைத்து ச‌ம்பாதித்து அத‌ன் மூல‌ம் குடும்ப‌ம் ந‌ட‌த்த‌ லாய‌க்கு இல்லாத‌ ஒரு போக்கிரியை த‌ன் வீட்டிற்கு ம‌ரும‌க‌னாக‌ எடுத்து கால‌மெல்லாம் க‌ஷ்ட‌ப்ப‌டும் அவ‌ல‌த்திற்கு ஆளாகும் நிலை போல் ஆகிவிடும்" மோசமானவர்களை வரும் தேர்தலில் நாம் தவறாக தேர்ந்தெடுத்து விட்டால்...(அல்லாஹ் பாதுகாப்பானாக‌....)

எச்ச‌ரிக்கை.......எச்ச‌ரிக்கை.....எச்ச‌ரிக்கை.....

இதுவே என் ஆணித்த‌ர‌மான மற்றும் உங்களின் கவன‍ஈர்ப்பு க‌ருத்தும் ஆகும்...

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//மேற்க‌ண்ட‌ த‌குதிக‌ளும், திற‌மைக‌ளும் ஊரில் ஒருவ‌ருக்கும் இல்லை என்று வாதிடுப‌வ‌ராக‌ நீங்க‌ள் இருந்தால் அந்த பதவிக்கு நீங்க‌ளே வேட்பு ம‌னு தாக்க‌ல் செய்து உங்க‌ளை வெளியுல‌குக்கு வெளிக்காட்டிக் கொள்ள‌லாம். //

என்னைய மனசுல வச்சுகிட்டு எழுதலையே ! NRIக்கு அனுமதியுண்டன்னு கேட்டு சொன்னா நன்றாக இருக்கும் ! ஏன்னா விராப்பா பேசலாமே !!
:))

//எதையும் செய்ய‌ மாட்டேன். க‌ருத்துக்க‌ளை ம‌ட்டும் க‌ச்சித‌மாக‌ சொல்லி வ‌ருவேன் என்ப‌வ‌ராக‌ இருந்தால் உங்க‌ளுக்கு பிடித்த‌ ந‌ல்ல‌வ‌ரை தேர்ந்தெடுக்க‌ ஓட்டு போட‌வும், அவ‌ருக்கு ஓட்டு போட‌ச்சொல்லி உங்க‌ள் குடும்ப‌த்தின‌ரை தூண்டுப‌வ‌ராக‌வாவ‌து இருந்து விட்டு போங்க‌ள்.///

சரியான போடு ! நம்மால ஆனதுன்னு !

கிள்ளி உட்டுட்டு, அப்புறம் தொட்டிலையும் ஆட்டிவுட்டா என்னாதான் செய்வாங்க பாவம் !

Unknown சொன்னது…

சகோ. நெய்னாவின் கருத்துகள் ஆக்கபூர்வமானவை. இதை தனிப்பதிவாககே இடவேண்டும் என்று அவரிடம் அனுமதி கோரி அதிரை எக்ஸ்பிரஸில் பதிந்துள்ளோம்.

http://adiraixpress.blogspot.com/2011/09/me_9218.html

நன்றி.

அப்துல்மாலிக் சொன்னது…

அரசியல் கட்சிகளின் துரித வளர்ச்சியாலும், நம் மக்கள் தன் சுய தொழில் வளரவும், சுயநலத்துக்காகவும் அந்ததந்த கட்சிகளை சார்ந்தே இருக்கவும் பழகிக்கொண்டார்கள், இனிமேலும் சுயேட்சை என்ற ஒரு சொல் வரலாறாகிப்போகின்ற நிலமைதான் இருக்கு. திறமையானவர், நல்லவர், அல்லாஹ்விற்கு பயந்து எதையும் செய்பவர், நேர்மையானவர், படித்தவர் இப்படி ஒட்டுமொத்த தகுதியையும் உடையவர் கைவிட்டு எண்ணக்கூடியளவில்தான் இருக்கு, அதிலேயும் அவர்கள் பதவிக்கு வருவதற்கு பெரும் தயக்கம் காட்டுகிறார்கள். விட்டுக்கொடுத்தல், ஒற்றுமை, ஒரு தலமைக்கு கீழ் வருவது, எந்த பிரச்சினையையும் எளிதாக முடித்துவைப்பது இப்படியெல்லாம் ஒன்று உருவானால் ஒழிய இந்த பாலாய் போன அரசியல் கட்சிகள்தான் நம்மை ஆட்சி செய்யும் என்பதில் மாற்றுக்கருதில்லை...

இன்ஷா அல்லாஹ்.. இனியாவது இதற்கான முயற்சியில் ஈடுபட்டால் அடுத்த உள்ளாட்சி மன்றத்தேர்தலில் நாம் நினைத்ததை சாதிக்கலாம்.. அல்லாஹ் நன்கறிந்தவன்..