Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை... - 2 36

அதிரைநிருபர் பதிப்பகம் | October 31, 2012 | , , ,

தொடர் - 2

மகள் சொன்னதை கேட்டு பதறிய எனக்கு ஞாபகத்திற்கு வந்த இந்த குர்ஆன் வசனத்தை என் மகள்களுக்கும், மனைவிக்கும் சொன்னேன்.

بسم الله الرحمن الرحيم

   أَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ مُسَخَّرَاتٍ فِي جَوِّ السَّمَاءِ مَا يُمْسِكُهُنَّ إِلَّا اللَّهُ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ

"வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன." - அல்குர்ஆன் - 16:79

ஆகையால், இந்த அலுமினியப் பறவை விழுந்து விடாமல் காப்பவனும் அல்லாஹ்வே என்று ஆறுதல் கூறினேன்.

விமானம் சென்று கொண்டே இருந்தது, விமானத்தின் திரையில் சான்பிரான்சிஸ்கோ புறப்பட்டு, கனடா எல்லை வரை சென்று - ஜப்பானின் டோக்கியோ மேலே (பசிபிக் மேலே) பறந்தது விமானம். நீண்ட பயணத்தின் முதல் கட்டமாக ஹாங்காங் வந்து சேர்ந்ததை காட்டிக் கொண்டே வந்தது (சுமார் 14 மணிநேரப் பயணம்). இடையிடையே நேரத்தைக் கணித்து இருக்கையிலேயே தொழுது கொண்டோம். பிறகு 1 1/2 மணிநேர இடைவெளியில் மீண்டும் பயணம் சிங்கப்பூர் நோக்கி. சிங்கப்பூர் வந்தடைந்தபோது வெள்ளிக்கிழமை காலை 11:20 மணி.


சிங்கப்பூர் நெருங்க, நெருங்க பச்சைப் பசேல் என்ற பசுமையான போர்வைக்குள் அழகான குட்டிக் குழந்தை தூங்குவது போல் கண்களுக்கு தெரிந்தது இந்த சிங்காரச் சிங்கப்பூர்.

அன்று ஜும்மா தினம் இன்ஷா அல்லாஹ் ஜும்ஆ தொழ வேண்டும் என்கிற எண்ணம் அலைமோதியது, அடுத்த சென்னை ஃபிளைட் இரவு 08:30 மணிக்குத்தான். எனவே, டெர்மினல் மாறினோம் வெளியில் செல்ல இமிக்ரேஷன் முடிக்க வேண்டும். அமெரிக்க பாஸ்போர்ட்களுக்கு சிங்கப்பூர் விசா எடுக்க வேண்டிய தேவையில்லை. இமிகிரேஷனில்! நான் ஒரு நாள் மட்டும் விசா போதும் என்றேன், மூன்று மாதங்களுக்கு தந்தார்கள்.

அந்த பிரமாண்டமான சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் ஈத் பெருநாளைக் குறிக்கும் வண்ணம் அழகாக ஜோடித்திருந்தார்கள்.


Money exchange சென்று சிறிது சிங்கப்பூர் டாலர் மாற்றிக் கொண்டு வெளியில் வந்தோம். லேசான தூறல் ஆரம்பித்திருந்தது, ஏர்போர்ட் வாசலில் ரெடியாக இருந்த டாக்ஸியில் ஏறி சிறிது முஸ்தபா செண்டர் வந்தடைந்தோம். சிங்கப்பூர் வெள்ளி 21.40 வந்தது அதைக் கொடுத்து விட்டு அருகில் பள்ளிவாசல் இருக்கிறதா ? என்று விசாரித்தோம்.

''அங்குளியா மஸ்ஜித்" இருக்கிறது என்று சொன்னார்கள். அங்கு சென்றபோது தமிழில் பயான் நடந்து கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் தமிழ் பேசும் முஸ்லிம் பெருமக்கள் நிம்மதியாக 'ஜும்ஆ" தொழுதுவிட்டு, அருகில் உள்ள ஹலால் ரெஸ்டரண்டில் பகல் உணவை முடித்துக் கொண்டு, அங்கேயிருக்கும் கடைகளில் சில பொருட்களை வாங்கினோம். சிங்கப்பூர் விலைவாசி பற்றிய என் கருத்து 'பல பொருட்கள் இந்தியா, அமெரிக்காவை விடவும் அதிகமாகவே இருந்தது. அமெரிக்காவிலிருந்தே தேவையான பொருட்களை வாங்கி வந்து விட்டதால் இங்கு வேறு அதிகமாக வாங்காமல் திரும்பிவிட்டோம்.

இனி ஏர்போர்ட்டுக்கு போகலாம் என வெளியிலே வந்தபோதுதான் கண்ணில் பட்ட அந்த காட்சி அதிர்ச்சியாக இருந்தது.
தொடரும்...
A.R.அப்துல் லத்தீஃப்

36 Responses So Far:

Ebrahim Ansari said...

தம்பி அர.அல. ! அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்களின் இந்தப் பயணப் பறவை அமைதியாகப் பறக்கிறது. அதனால் படிக்கும் எங்களுக்கும் பரவசமாக இருக்கிறது.

sabeer.abushahruk said...

சிங்கப்பூர்...
நெருங்க நெருங்க
பச்சைப் பசேல் என்ற
பசுமையான போர்வைக்குள்
அழகான குட்டிக் குழந்தை
தூங்குவது போல்
கண்களுக்கு தெரிந்தது!
-அர அல

ஆஹா ஆஹா...

உங்கள் பார்வையில் சிங்கப்பூரே இப்படித் தோன்றினால்...னம்மூரு எப்படித்தோன்றும்.

தொடர்க. வாழ்த்துகள்

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புக்குரிய மூத்த சகோதரர் Ibrahim அன்சாரிகாக்கா அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு சத்து டானிக் jasakkallah Khair

ஹபீப் HB said...

ஒரு அழகான அமைதியான பயணம் பதிவுக்கு நன்றி.

Iqbal M. Salih said...

மாஷா அல்லாஹ்!

சூழலுக்கு ஏற்ற மிகப் பொருத்தமான

திருமறை வசனங்கள்!

இப்னு அப்துல் ரஜாக் said...

சபீர் காக்கா சிங்கப்பூரைப் பற்றியஅந்த வர்ணனை பிளைட்டிளிருந்து கீழே பார்க்கும்போதும் போட்டோ கிழிக்கும் போதும் என் எண்ணத்தில் உதித்தவை. ஆனால் சிங்கப்பூர் உள்ளே சென்று அதை பார்த்தவுடன் மலைத்துவிட்டேன், அதிர்ந்துவிட்டேன்.அது பற்றி அடுத்த எபிசோடில் வருகிறது. அதை இப்போ சொன்னா நெறியாளர் பயர் பண்ணிடுவார்.

இப்னு அப்துல் ரஜாக் said...

To bro habeeb
To bro Iqbal
Thanks for your comments and encourage

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புள்ள நெறியாலராக்கா ஒரு நாள் மட்டும் விசாபோதும் என்றேன் என இருக்க வேண்டும். கவனிப்பீர்களா?

Anonymous said...

//ஒரு நாள் மட்டும் விசாபோதும் என்றேன் //

ஒரு மாற்றம் செய்யப்பட்டுவிட்டது :)

இப்னு அப்துல் ரஜாக் said...

நன்றி அபூ இப்ராஹீம் காக்கா உடனடி ஆக்ஷனுக்கும், அமைதியான பயணத்துக்கு கோடு போட்டதுக்கும்

Shameed said...

ஆகா பயணக்கட்டுரை கலை கட்டுதே . எதிர் பார்ப்புக்கள் கூடிக்கொண்டே போகுது

Shameed said...

//சிங்கப்பூர் விலைவாசி பற்றிய என் கருத்து 'பல பொருட்கள் இந்தியா, அமெரிக்காவை விடவும் அதிகமாகவே இருந்தது//

வெளிநாட்டினர் இங்கு வாங்கும் பொருட்களுக்கு (GST ) என்று சொல்லப்படும் கவர்மெண்ட் டாக்ஸ் திருப்பித்தரப்படும் நாம் வாங்கும் ஒவ்ஒரு பொருளுக்கும் இந்த டக்ஸ் சமாச்சாரம் சிங்கபூரில் உண்டு


இப்னு அப்துல் ரஜாக் said...

வாங்க ஹமீது காக்கா insha அல்லாஹ் உங்க எதிர்பார்ப்பு வீண் போகாது. அமெரிக்காவிலும் எல்லா வற்றுக்கும் டேக்ஸ் உண்டு மேலும் வெளிநாட்டினர் போகும்போது தாங்கள் வாங்கிய பொருட்களுக்குண்டான டேக்சை திரும்பி வாங்கி கொள்ளும் முறை உள்ளது.

mulakkam said...

so far journey is going smooth. i hope you give us more interesting occurred. thanks mabrook.ibrahim meeran

இப்னு அப்துல் ரஜாக் said...

To Machan
Yes,it is.There is more to come and I hope everyone will enjoy it.jasakkallah Khair for your comments.

அதிரை சித்திக் said...

அன்பு தம்பி அப்துல் லத்தீப்,

தங்களின் பயண அனுபவத்தை

சுவையாக தருவதுடன் அடுத்த அத்தியாயம்

எப்போது என்று ஆவல் தூண்டும் தங்களின்

எழுத்து திறமையை பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள்

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோ siththik காக்கா உங்கள் எழுத்தும் சீரிய பாங்கும் என்னைக் கவர்ந்தவை நான் சிறியேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தோழா உங்களின் கலைநயமிக்க பயணத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

நன்றி தோழா உன்னிப்பாக நீங்கள் கவனிப்பதால் இன்னும் முயற்சி செய்து நன்கு எழுத ஆசை துவா செய்யுங்கள்

ZAKIR HUSSAIN said...

To Bro Ara Ala,

உங்கள் பயணக்கட்டுரை நல்ல வர்ணனையுடன் இருக்கிறது. இருப்பினும் இன்னும் அதிகம் எழுதலாம். ஒரு எபிசோட் எழுத வேர்டில் 4 அல்லது 5 பக்கம் எழுதினால் சரியாக இருக்கும்,

படங்கள் குறைந்தது 4 இருந்தால் இன்னும் நன்றாக வரும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோ ஜாகீர் காக்கா, புறப்பட்டு ஊர் வந்தவரை உள்ள விஷயங்களை பேப்பரில் எழுதி கொடுத்து வந்தேன் அத்துடன் அடுத்த எபிசோடுவில் என்ன இருக்கிறது என ஒரு ஆர்வம் வர வேண்டும் என்பதற்காக நிறுத்த வேண்டிய கட்டாயம்.இன்ஷா அல்லாஹ் மற்ற கட்டுரைகளில் கவனம் செலுத்துகிறேன்.( அ நி வாசகர்கள் மாட்டிக்கிட்டீங்க). போட்டோ என்னால் நான்கு மட்டுமே சப்ளை பண்ண முடிந்தது.நெறியாளர் காக்கா கவனிக்கவும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

ஜாகிர் காக்கா சொல்ல மறந்துட்டேன், நான்காவது பகுதியில் உங்களைப் பற்றி ஒரு குறிப்பு எழுதியுள்ளேன், ஊகியுங்களேன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸ‌லாமு அலைக்கும்.

ச‌கோ. அர‌.அல‌.,வுக்கு

உங்க‌ளின் ப‌ய‌ண‌க்க‌ட்டுரை ம‌யிலிற‌கின் மேல் அம‌ர்ந்து மேக‌த்தின் மேல் மித‌ப்ப‌து போன்று ஓர் இதமான உண‌ர்வைத்த‌ருகிற‌து.

ந‌ல்லாயீர்ப்பிய‌ அடுத்த‌ த‌ட‌வை பயணம் போவும் பொழுது
நம்ம ஹமீத் காக்காவையும் கூட கூட்டிக்கிட்டு போங்க. எக்கச்சக்கமான போட்டோவை தினுசு,தினுசா எடுத்து தள்ளிர்வாஹ......

வ்ளோவ் நாளுச்செண்டு ஊருக்கு வந்து சட்டுபுட்டு திரும்பி போயிட்டியலே.........

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அழகான பயணக் கட்டுரை!
வாழ்த்துக்கள்! சகோதரரே!

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோ நெய்னா,உங்கள் ஊர் பழக்க பேச்சும் அன்பினாலே கட்டுண்ட வார்த்தைகளும் என் இதயத்தோடு பேசுவது போல உள்ளது.என்னா செய்றது மாப்புள, எங்க இருந்தாலும் நமக்குன்னு சோலி இருக்கில்ல,என்னா நான் சொல்லுறது.இன்ஷா அல்லாஹ் நோம்புக்கு வர எண்ணம்.துவா செய்யவும்

Yasir said...

வர்ணனைகளும்,வாய் பிளக்க வைக்கும் எழுத்துநடையும்..கலக்குறீங்க அர.அல...துவாக்களும்- வாழ்த்துக்களும்

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோ அலாவுதீன் காக்கா, சகோ யாசிர் தங்களின் துவாக்களுக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி jasakkallah க்ஹைர்

அப்துல்மாலிக் said...

பயணக்கட்டுரை எழுதுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும் அதுவும் அதை எல்லோரும் விரும்பி படிக்கும் அளவுக்கு இருக்கனும், அது இந்த கட்டுரையில் இருக்கு........

KALAM SHAICK ABDUL KADER said...

இத்துணை அழகான கவித்துவ வர்ணணைகளை உள்ளத்தில் வைத்துக் கொண்டிருப்பதாற்றான், உங்களையும் மீறிச் சொல்லோவியமாகப் பயணக்கட்டுரை மிளிர்வதைக் கண்டு, அடியேன் உங்களிடம் மன்னிப்புக் கேட்கத் தூண்டியது என் மனம்.

Shameed said...

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

//வ்ளோவ் நாளுச்செண்டு ஊருக்கு வந்து சட்டுபுட்டு திரும்பி போயிட்டியலே//

ஊரில் இருந்த நேரத்தைவிட விமானத்தில் பறந்த நேரம் கூடுதலா தெரிகின்றதே !!!

Unknown said...

//வ்ளோவ் நாளுச்செண்டு ஊருக்கு வந்து சட்டுபுட்டு திரும்பி போயிட்டியலே.........//

இப்னு அப்துல் ரஜாக் said...

மிக்க நன்றி மாலிக்காக்கா இன்னும் எழுத துவா செய்யுங்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

கலாம் காக்கா அப்படி சொல்லாதீர்கள் உங்கள் அறிவுக்கும் நல எழுத்துக்கும் நான் ஒரு பொடிப்பயல்

இப்னு அப்துல் ரஜாக் said...

ஹமீது காக்கா,அஹமது சாச்சா உண்மைதான்.நீண்ட நாட்கள் கழித்து வந்தும், உடனே திரும்ப வேண்டிய சூழ்நிலை. Man proposes and God Allah disposes.

crown said...

அர அல சொன்னது…

மிக்க நன்றி மாலிக்காக்கா இன்னும் எழுத துவா செய்யுங்கள்.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைகும். சகோ.மாலிக் எனக்கே தம்பி என் இருக்கும் பட்சத்தில் தமக்கு கன்டிபாக தம்பிதான்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு