Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

லக்கேஜும் நானும் ! 50 வது பதிவு ! 37

அதிரைநிருபர் பதிப்பகம் | October 29, 2012 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் 

அதிரைநிருபர் வலைத்தளம் பலரின் வாழ்த்துகளுடன் சிறப்புடன் வளர்ந்தோங்கி வருகிறது. இதன் தொடக்க  காலத்திலிருந்து இந்த தளத்துடன் நான் கைகோர்த்து வருபவன் என்கிற உரிமையில் மட்டுமல்ல - இந்தப் பதிவு அதிரைநிருபர் தளத்தில் முத்தாய்ப்பாக எனது ஐம்பதாவது பதிவு என்கிற முறையில் மிகவும் சந்தோஷப் படுகிறேன். 

அரை நூறு என்பது அனைவரின் வாழ்விலும் ஒரு மறக்க முடியாத மைல்கல். இந்த தருணம் என்னைப் பொருத்தவரை மகிழ்வான தருணம். இந்த மகிழ்ச்சியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வது இன்னும் மகிழ்வான தருணமாக எனக்குள் உணர்கிறேன். 

ஒரு புகைப்படக் கலைஞனாக ஊடகத்துறையில் ஊடுருவிய நான் பல்வேறு தருணங்களில்,  பல்வகையான காட்சிகளை எனது பேசும்படத்தின் மூலம் காட்சிப் படுத்திக் காட்டி இருக்கிறேன். 

நமது பிறப்பிடமான அதிரை, அது குற்றாலமோ, கொடைக்கானலோ அல்ல. ஆனாலும் அதிரையிலும் குளுமை உண்டு என்று பலமுறை காட்டிய ஆத்ம சந்தோசம் எனக்குண்டு.

அதேபோல் தமிழகம் உட்பட நாட்டின், உலகின் பலபகுதிகளை சுட்டிக்காட்ட - சுட்டுக்காட்டிய உள்ளார்ந்த ஆத்ம திரும்ப்தியும் எனக்குண்டு.

பழங்களை, பறவைகளை, ஊற்று நீரை, ஓடும் ரயிலை, உப்பலங்களை, ஊற்று நீரை,  தென்னந் தோப்புகளை, தெருக்களை, மீன்பிடிக் காட்சிகளை, மிதக்கும் படகுகளை, சுட்ட நண்டுகளை, சூடு மாறாத கோழிகளை இப்படி பலவற்றை படம் பிடித்து  எனது நாற்பத்தி ஒன்பது பதிவுகளை அலங்கரித்து இருக்கிறேன். 

அத்துடன் அவ்வப்போது எனது சிற்றறிவுக்கு எட்டிய சில கருத்துக்களை கட்டுரைகளாகவும் பகிர்ந்து இருக்கிறேன். நான் படிக்க நேர்ந்த சில அறிவியல் ஆக்கங்களுக்கு என் பாணியில் உங்கள் அனைவர் கவனத்துக்கும் தந்து மகிழ்வித்தும், எச்சரித்தும் இருக்கிறேன். பகிர்ந்து கொள்ளப்பட்ட இன்பம் இரட்டிப்பு ஆகுமென்பதை அறிந்தவனாகையால் நான் சந்திக்க நேர்ந்த நகைச்சுவையான நிகழ்வுகளை பகிர்ந்து இருக்கிறேன். 

இத்துடன் ஐம்பது பதிவுகளும் அரங்கேற உறுதுணையாக இருந்த வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த அதிரைநிருபரின் நெறியாளர், நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் என் ஆக்கங்களுக்கும் பேசும் படங்களுக்கும் பின்னுட்டமிட்டு என்னை உசுப்பேத்திய அனைவருக்கும் நான் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன். பல கவிஞர்கள், அறிஞர்கள் கோலோச்சும் இந்த தளம் மென்மேலும் வளர்ந்து சமுதாயப் பனியாற்ற துஆச்செய்தவனாக எனது ஐம்பதாவது பதிவை இங்கே பதிவு செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் !


லக்கேஜும் நானும் ! 50 வது பதிவு !

விடுமுறை நாட்கள் ஓடிய ஓட்டம் எந்தப்பக்கம் என்று திருப்பிப் பார்க்கும் முன்னறே எங்கள் விடுமுறையும் நிறைவுக்கு வரும் நாளும் நெருங்கியது. அதுவும் சவூதிக்கு என்றது எடுத்து செல்ல சாமான்களும் கூடியது 26 ஆகஸ்ட் பகல் திருச்சியிலிருந்து கொழும்பு வழியாக தமாமுக்கு விமான டிக்கெட் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததை உறுதி செய்து கொண்டு, அன்று இரவு சாமான்களை எடை போட்டு பார்த்ததில்  மொத்தம் 70  கிலோ இருந்தது ஏர்-லங்காவில் 35 கிலோ தான் அனுமதி பெட்டி கட்டும்போதே தலை சுத்தி வாந்தி  மயக்கம்  எல்லாம் சேர்ந்தாற் போல் வந்தது.  ஒரு குருட்டு கணக்கில் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஏர்போர்ட் போவது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற, இரவே அனைத்தையும் சாமான்களையும் ரெடி செய்து வைத்து விட்டேன் .

வாடகைகார் காரரிடம்  காலை  பத்து மணிக்கு வந்துவிட சொல்லி விட்டேன் அப்போ தானே  பத்தரைக்காவது வருவார் என்ற எண்ணத்தில். ஆனால் மனுஷன் சரிய பத்துமணிகெல்லாம் வீட்டிற்கு  வந்து விட்டார் வந்ததும் வராததுமா ஏம்பா “நீ பொறபுட்டு போற ஆளா தெரியலையே” என்று குதர்க்கமா பேசி லக்கேஜ் டென்சன் பத்தாதற்கு இவரும் BP (!!?)யை ஏற்றிவிட்டார் அப்போதுதான் விளங்கியது சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டது 

அனைத்து சாமான்களையும் எடுத்துக்கொண்டு (அள்ளிக்கொண்டு) அரக்க பரக்க காரில் ஏறி அமர்ந்ததும்  கார் புறப்பட்டது புறப்பட்ட சிறிது நேரத்தில் நமக்கு வியர்த்து கொட்ட ஆரம்பித்தது.

டிரைவரிடம் “காகா AC யை கொஞ்சம் போடுங்களேன்” என்றதும் 

அவர் “A /C போட்டால் வாடகை கூடுமே” என்ற தத்துவத்தை உதிர்த்தார்.

“வாடகை கூட தாரேன் முதலில் A/C யை போடுங்கள்” என்றேன்.

அதற்குள் பெட்ரோல் பம்ப் வந்தது  டிசல் போட வண்டியை நிறுத்தினார். நம் ஊரில் காரும் சரி ஆட்டோவும் சரி வாடகைக்கு எடுத்துப் போனால் போகும் போதுதான் எரிபொருள் நிரப்புகின்றனர் முன்பே  யாரும் எரிபொருள் நிரப்பி வைப்பதில்லை அந்த பெட்ரோல் பங்க் போற வரைதான் எரிபொருள் வைத்துள்ளனர்.


வாடகை வாகனங்களை அவசரத்திற்குத்தான் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், நம் ஊரை பொறுத்தவரை பாம்பு கடித்து சாகும் நிலையில் உள்ளவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து போனால் கூட வாகன ஓட்டுனர்கள் பெட்ரோல் பங்க்  போய் பெட்ரோல் / டிசல் போட்டுக் கொண்டுதான் ஆஸ்பத்திரிகே போவார்கள்!!

சரி விசயத்திற்கு வருவோம் கார் டிசல் போட்டுக் கொண்டு திருச்சி நோக்கி புறப்பட்டது A/C போடுவதும் அமத்துவதுமாக காரை ஓட்டிக் கொண்டு வந்தார். செல்லும் வழியில் மாடு ஒன்று குறுக்கே புகுந்தது. என்னுடன் துணைக்கு வந்த நாண்பர் “மாடு காக்கா” என்று சத்தம் போட்டதும்  ‘பிரேக்’ அடித்து வண்டியை நிறுத்தி மாடு போன பின்பு வண்டியை எடுத்தார் "பகலில் பசு மாடு தெரியாதவருக்கு இரவில் எப்படித்தான் எருமை மாடு தெரியப் போவுதோ"  ஒருவழியாக திருச்சி ஏர்போர்ட் வந்து சேர்த்தார். 

ஏர்போர்ட் உள்ளே போவதற்கு சாமான்களை சிறிய தள்ளு வண்டியில் ஏற்றி கொண்டு சாமான்கள் இல்லாமல் யாரும் தம்மாம் போகிறார்களா என்று தேடியதில் ஒருவர் சிக்கினார், இல்லை இல்லை நாம் அவரிடம் சிக்கினோம். லகேஜ் இல்லாதவரிடம் சலாம் சொல்லி நம் லகேஜ் விவரம் சொன்னதும் உடன் சரி சொன்னவர் ‘ரூபாய் இரண்டாயிரம் பணம் வேண்டும்; என்று பேரம் பேச ஆரம்பித்தார். 

உடன் வந்த நண்பர்கள் அவரிடன் ஒருவாறாக பேசி ஆயிரத்திற்கு ஒப்புக் கொண்டார் பணத்தை கையில் வாங்கி பக்கத்தில் நின்ற அவர் மனைவி வசம் கொடுத்தார் மனைவிக்கு கணவரை பிரியும் சோகமெல்லாம் மறந்து பணம் முகத்தில் மலர்ச்சியை ஏற்ப்படுத்தியது. நமது லகேஜை  வாங்கிக் கொண்ட அவரின் விமான டிக்கெட்டை வாங்கி பார்த்தால் திருச்சியில் இருந்து அவருக்கு 4:30க்கு  தான் மிஹென் லங்கா  விமானம். நமக்கு 3:30க்கு ஸ்ரீலங்கன் விமானம் ஆனால் இருவருக்கும் கொழும்பில் இருந்து மாலை 6:50 மணிக்கு ஒரே விமானம் தான்.

நம் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு போர்டிங் வேலை அனைத்தையும் முடித்துவிட்டு விமானத்தில் அமர்ந்ததும் விமானம் புறப்பட்டு மாலை நான்கு முப்பது மணிகெல்லாம் கொழும்பு ஏர்போர்ட் வந்தடைந்தோம். நம் லக்கேஜ் கொண்டு வருபரின் விமானம் ஐந்து முப்பதுக்கெல்லாம் கொழும்பு  வந்து இறங்கியது கேட் நம்பர் எட்டு தமாம் போவதற்கான வாயில் நாம் காத்திருந்தும் நாம் சாமான் கொடுத்தவர்  வந்த பாடில்லை விமானம் புறப்படுவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.ஆகா இதற்கு  மேல் தாமதித்தால் சரியா வராது என்று கொழும்பு ஏர்போர்ட்டில் லகேஜ் கொடுத்தவரை தேட ஆரம்பித்தேன் ஆள் கிடைக்கவில்லை ஆனால் அங்கு ஸ்ரீலங்கன் ஆபீஸ் வாசலில் ஒரு கும்பல் ஆக்ரோசமாக ‘சப்தம்’ போட்டு  கொண்டிருந்தது அங்கு சென்று பார்த்ததில் நம் லகேஜ் ஆளும் நின்றார் விவரம் கேட்டதற்கு கொழும்பு தமாம் விமானத்தில் இவருக்கும்  இன்னும் ஒரு இருபது பேருக்கும் இடம் இல்லையாம் இரண்டு நாள் தங்கி மூன்றாவது நாள் ரியாத் ஏர்போர்ட்டிற்கு தான் அனுப்பி வைப்பார்களாம் என்றார்.

இதற்கிடையே விமான ஊழியர்கள் இந்த இருபது பேருக்கும் அடுத்த முறை போக வர விமான டிக்கெட் இலவசம் என்று சொல்லி ஒரு டிக்கெட் பிட்டை போட்டதால் நாம் லகேஜ் கொடுத்த ஆள் மிக கூலா சொன்னார் “நான் ரியாத் வந்து பிறகு தம்மாம் வருவேன் அப்போ உங்க லகேஜ்ஜை வந்து தந்து விடுகின்றேன்” என்றார். அடப்பாவி அதற்குள் அதன் உள்ளே இருக்கும்  இரண்டு ஆட்டுத் தலை அதன் கூட  நம் ஊர் ஆட்டு இறைச்சி, பிளாஸ்டிக் டப்பாவில் ஒரு பெரிய கொடுவா மீன் வெட்டியது, இது இரண்டையும் இரண்டு நாட்களுக்கு முன் ப்ரோசன் செய்து பாதுகாப்பாக வைத்து கொண்டு வந்தது எல்லாம் கூல் போய்  வீணாகி நாறிப்போய் விடுமே. குப்பென்று வேர்த்த்து உடனே அவர் கையில் இருந்த பாஸ்போர்ட் டிக்கெட் மற்றும் லக்கேஜ் போட்டதற்கு கொடுத்த பார்-கோடு டிக்கெட் அனைத்தையும் வாங்கிக் கொண்டு அங்கு பணியில் இருந்த ஆபீஸ்சரை நோக்கி போனேன் 

அவரிடம் போய் “இவர் என் பிரதர் இவருக்கு டிக்கெட் கன்ஃபாம் இல்லை இவரை நாளைக்கோ அல்லது நாளை மறுநாளோ  சவுதிக்கு அனுப்புங்கள். ஆனால், இவர் கொண்டு வந்த லகேஜ் மட்டும் நான் போகும் விமானத்தில் ஏற்றி விடுங்கள் காரணம் அதில் நிறைய ப்ரோசன் பொருட்கள் உள்ளது” என்றேன். அந்த ஆபீஸர் உடனே நம் கையில் இருந்த பார்-கோடு டிக்கட்டை அனைத்தையும் வாங்கி பார்த்து விட்டு இன்டெர் காமில் செய்தியை சொல்லிவிட்டு நீங்கள் புறப்படுங்கள் அந்த லக்கேஜ் தம்ம்முக்கு உங்கள் கூட வந்துவிடும் என்றார். 

அவருக்கு நன்றியை சொல்லி விட்டு தம்மாம் செல்லும் விமான கேட்டை நோக்கி தலை தெறிக்க ஓடினேன் (இதே போன்று ஒரு சம்பவம் நம் நாட்டு ஏர்போர்ட்டில் நடந்து இருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும்) நான் வந்து போர்டிங் போட்டு விட்டு அங்கிருந்த ஆபீஸ்சர் வசம் நமது லகேஜ் ஏறிவிட்டதா என்று பார்க்க சொன்னதும் அவர் உடனே பார்த்துவிட்டு லகேஜ் உங்களுடன்தான் வருகின்றது என்று சொன்னதும் தான் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது காரணம் அந்த கொடுவா மீனும் நம் ஊர் ஆட்டுத்தலை மற்றும் இறைச்சியும்… ருசி கண்ட நாக்கு சும்மாவா விட்டுச்சு !?

Sஹமீது

37 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பலாப்பழம் மாதிரி உங்க பார்சல் கதை சுவை!

விரைவில் டபுளாகி நூறாண்டு வாழ வாழ்த்துக்கள்!

மண்டையும் மீனும் உங்களுக்கே வசப்பட்டது போல்
உங்கள் காலங்களும் உங்களுக்கு வசப்பட்டு இனிதே கடக்க இறைவன் அருள் புரியட்டும்.

Yasir said...

மாஷா அல்லாஹ்...
எழுச்சியும்,மகிழ்ச்சியும்,கண்களுக்கு விருந்து படைக்கும் உங்கள் மூன்றாம் கண்...
முதிர்ச்சியும்,தகவகளும்,நகைச்சுவையும்,சிறந்த மதிமயக்கும் எழுத்துநடையும் கொண்ட உங்கள் ஆக்கங்கள்..
இதற்க்கெல்லாம் மேல் நல் சிந்தனை கொண்ட உங்கள் மனம்,உண்மையை பேச உளறல் கொள்ளாத உள்ளம்.
அ.நி-யின் வளர்ச்சியில் உங்களின் பங்களிப்பு மிகவும் அதிகம்...இன்னும் சிறந்து விளங்க தூவாக்களும் - வாழ்துக்களும் காக்கா..

Yasir said...

சென்ரல் பேங்குக்கே பணப்பிரச்சனை என்பதுபோல ..ஒரு கார்கோ கம்பெனி முதலாளிக்கே லக்கேஜ் பிரச்சனையா....லக்கேஜூம் அதன் நீங்கள் எழுதியவிதமும் அருமை...அப்புறம் கொழும்பில் நீங்கள் செய்த ஸ்மார்ட் ஐடியா...ஆட்டு மூளை சாப்பிட்டால் மூளை நல்லா வேலை செய்யுமாக்கும் :) ( ஜாஹிர் காக்கா மன்னிக்கவும்)...எல்லாம் சரி அவரிடம் இருந்து 1000 ரூபாயை திருப்பி வாங்குனீங்களா :)

Shameed said...

Yasir சொன்னது…

//எல்லாம் சரி அவரிடம் இருந்து 1000 ரூபாயை திருப்பி வாங்குனீங்களா//

அது திருச்சி ஏற்போர்டிலையோ ஹலால் சொல்லியாச்சு

KALAM SHAICK ABDUL KADER said...

சுட்டும் விழிச் சுடரால் கட்டிப்போடும் உங்களின் காமிரா கவிதையைப் போல், உங்களின் நாவில் ஊறியச் சுவையை நகைச்சுவையாய்க் கட்டுரைக்குள் எங்களைக் கட்டிப்போட்ட நீங்கள் பெட்டிக் கட்டும் வணிகத்தில் உள்ளவர் என்ற செய்தியால் “கட்டிப்போடும்” கலையில் வல்லுநர் என்பது உறுதியாகி விட்டது. உங்களின் இவ்வாக்கம் கண்டதும் எனக்கும் பயண அனுபவங்கள் எழுதலாம் என்ற எண்ணம் தூண்டுகோலாக உந்துகின்றது. குறுவிடுப்பில் தாயகம் வந்துள்ள அடியேனும் “ஸ்ரீலங்கன் ஏர்வேஸ்” விமானத்தில் அபுதபி-கொழும்பு-திருச்சி வந்தேன். லக்கேஜில் ஏற்படும் சிரமங்களைக் கண்டு , இன்ஷா அல்லாஹ் இனிமேல் அதிகச் சுமையுடன் பயணிப்பதைத் தவிர்க்கலாம் என்றே எண்ணியுள்ளேன்.

Shameed said...

இங்கே பல எழுத்தாளர்களும் (பலா)பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இருக்கின்றார்கள் இவர்கள் எல்லாம் தங்களது ஆக்கங்களை எண்ணிக்கொள்ள நேரம் இல்லாமல் முன்னேறி கொண்டுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

KALAM SHAICK ABDUL KADER said...

//இங்கே பல எழுத்தாளர்களும் (பலா)பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இருக்கின்றார்கள் இவர்கள் எல்லாம் தங்களது ஆக்கங்களை எண்ணிக்கொள்ள நேரம் இல்லாமல் முன்னேறி கொண்டுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது //

தன்னடக்கமாய்த் தெரிகின்றது. ஐம்பது பதிவகள் என்பது ஒரு சாதனை; இவ்வெண்ணிக்கை எங்கட்குப் போதனை என்றே எண்ணிக்கொள்கின்றேம்.ஆம். அதிரை நிருபரில் தொடர்ந்து ஐம்பது பதிவுகள் என்பது எண்ணம் குளிரும் முன்னேற்றம். அடியேன் இன்னும் அதிரை நிருபரின் “பங்களிப்பாளர்களின் பட்டியலில்” இடம் பெற இன்னும் எத்தனை ஆக்கங்கள் பதியப்பட வேண்டும் என்று அறியேன். நீண்ட வரிசையில் காத்திருக்கும் என் கவிதைகள் உங்களைப் போல் “ஐம்பது” என்ற ஓர் இலக்கை எட்டும் காலம் வரும் என்று காத்திருக்கின்றேன்.

Shameed said...

அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது…

//அடியேன் இன்னும் அதிரை நிருபரின் “பங்களிப்பாளர்களின் பட்டியலில்” இடம் பெற இன்னும் எத்தனை ஆக்கங்கள் பதியப்பட வேண்டும் என்று அறியேன்.//-

அதிரை நிருபரின் பங்களிப்பாளர்கள் பட்டியலில் உங்கள் பெயருக்கு கிழே தான் என் பெயர் இருக்கின்றது கவிஅன்பருக்கு கிழே என் பெயர் இருப்பது பெருமையோ காரணம் பூவோடு சேர்ந்த நாராக நான் இருக்கின்றேன்

ZAKIR HUSSAIN said...

All the best for your 50th article.

போட்டோ எடுத்தாலும் , ஆர்டிக்கிள் எழுதினாலும் எப்போதுமே அதிசயிக்க வைக்கும் உங்கள் ஸ்டைல். நானும் N.A.S அண்ணனும் இன்னும் ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

....

ஊரில் பெட்ரோல் போடும் டிரைவர்களை பற்றிய கமென்ட்ஸுக்கு வாய் விட்டு சிரித்தேன். மன்மோகன் சிங் வந்து வாடகைக்கு கார் கேட்டாலும் வண்டிப்பேட்டையில் பெட்ரோலுக்கு அவரிடம் பணம் வாங்கி பெட்ரோல் போட்டுதான் புறப்படுவார்கள். [ பிரதமர் என்பதற்காக ஊர் பழக்கத்தை மாற்ற முடியுமா? ]

sabeer.abushahruk said...

ஹமீதின் 50 வது பதிவிற்கு வாழ்த்துகள்.

மென்மேலும் கலக்க துஆவும் எதிர்பார்ப்புகளும். 

sabeer.abushahruk said...

ஏர்போர்ட்டில் லக்கேஜுக்காக ஆளாய்ப் பறந்ததைக் கற்பனை செய்து பார்த்தால் மூச்சு வாங்குது.

ஃபோட்டோவுல கருப்பாத் தெரியிற முடியெல்லாம் வேர்வைலயே வெளுத்துப்போய் மண்டை சாம்பல்ல விழுந்த இடியப்பம் மாதிரி போயிருக்கும். நல்லவேளை நீங்க டை அடிக்கிற பார்ட்டி இல்லை(அரை கிலோ அல்வா கார்கோ பண்ணிடுங்க ஹமீது)

sabeer.abushahruk said...

ஸார்,

உங்களுக்கு லக்கேஜில் உதவ வந்தவர் வேலைக்கு வந்தவரா அல்லது ஏதும் ஸியாரத் நேர்த்திக்கடனா? இவ்வளவு ஊர் சுத்தறாரு?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஹமீத் காக்காவிற்கு கூடுதல் லக்கேஜ்ஜுக்காக திருச்சி விமான நிலையத்தில் உதவ வந்தவர் தன் மனைவிக்கு கூட பயணக்காசு கொடுக்காத கருமியாக இருப்பாரோ? பாவம் அந்த பொம்பளைக்கு ஹமீத் காக்காவிடமிருந்து வாங்கி கொடுத்த அந்த ஆயிரம் ரூபாய் நோட்டு தன் கணவனை பிரிய இருக்கும் வேதனையைக்கூட கவாப் மாதிரி மென்று சப்பி சாப்பிட்டு விட்டதே....

தங்களின் 50வது பதிவிற்கு என் வாழ்த்துக்களும், வரவேற்பும்.

கண்ட ஊருக்கும் கணெக்ட்டிங் ஃப்ளைட் வச்சிர்க்கிறதுனாலெ சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நல்லா காசு பாக்குறானுவோ.....இந்த சூச்சியம் எல்லாம் ஏர் இந்தியாவுக்கு தெரியாமப்போச்சு...அப்படி தெரிஞ்சிருந்தா இவ்வளவு ஸ்டைரக்கும், இழுபறியும், கேன்சல்களும் இருக்காது. ஜாஹிர் காக்கா கூட ஏர் இந்தியா என்னும் வெங்காய லாரிக்கு பதில் ப‌ற‌க்கும் ப‌ர‌வ‌ச‌ம் என்று க‌ட்டுரை எழுதியிருப்பார்க‌ள். என்னா நா சொல்ற‌து ச‌ரியா?

ZAKIR HUSSAIN said...

//ஜாஹிர் காக்கா கூட ஏர் இந்தியா என்னும் வெங்காய லாரிக்கு பதில் ப‌ற‌க்கும் ப‌ர‌வ‌ச‌ம் என்று க‌ட்டுரை எழுதியிருப்பார்க‌ள். என்னா நா சொல்ற‌து ச‌ரியா?//

அப்படி எழுத ஏர்-இந்தியா வாய்ப்பே தராது. காரணங்களை அடுக்கினால் ஏர்-இந்தியா சுமந்து செல்லும் கார்கோ கேரியரை விட கனமாக இருக்கும்.

கனெக்டிங் ஃபிளைட் மட்டும் இருந்தால் போதாது. செக்டர் எல்லாம் காசு கொட்டும் செக்டராக இருக்க வேண்டும். எல்லா முதன்மை விமான நிறுவனமும் 20 வருடமெல்லாம் ஒரே விமானத்தை பயணிகளுக்கு இயக்குவதில்லை.


ஏர்-இந்தியா இதுபோல் பழைய விமானங்களை இயக்குவதாக பல நாள் குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

ஏர் -இந்தியாவுக்கு தேவை ஒரு Re-Structuring Plan...மற்றும் ஒரு சிறந்த C.E.O


Ebrahim Ansari said...

அன்புள்ள மருமகன் ஷாகுல்! மிகவும் பெருமையாக இருக்கிறது. உனது பதிவுகள் அரை நூறைத் தொட்ட செய்தி அறிய மிகவும் மகிழும் உனது நலம் விரும்பிகள், நண்பர்கள் ஆகியோரின் வாழ்த்துக்களுடன் எனது வாழ்த்தையும் இணைத்துக் கொள்கிறேன்.

இன்று பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி மெசி என்ற கால்பந்து விளையாட்டு வீரர் தனது முன்னூராவது கோலைதாண்டி இன்னும் ஒரு கோல் அடித்து சாதனை புரிந்தார் என்பதாகும். அ.நி. யின் நெறியாளர், நிருபர் குழு, வாசகர்கள், நல்லுள்ளம் படைத்த அறிஞர்கள் ஆகிய அனைவருக்கும் உனது சாதனையும் ஒரு சாதனையாகவே நினைக்கத்தோன்றும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! (வயது ஐம்பதா?)

லக்கேஜை தேடி விறுவிறு -- பதட்டமான பதிவு!

எனக்கும் சில விமான நிலையங்களில் பதட்டங்கள் அதிகமாகவே நிகழ்ந்துள்ளது.

அப்ப உங்கள் அனுபவத்தையும் எழுதுங்கள் என்று கைதூக்கி விடாதீர்கள். ஏற்கனவே நேரமின்மை!

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்புச் சகோதரர் சாஹுல் ஹமீது (காக்கா):

மனித இயல்பான கர்வம் சற்றே எழும்போதெல்லாம் தன்னடக்கம் என்ற தனித்துவம் தாழ்ப்பாள் போட்டு அடக்கி வாசிக்கவேச் சொல்கிறது தங்களின் ஒவ்வொரு வளர்ச்சி பற்றி எழுதுவதற்கு.

அன்றைய ஆரம்ப கால எழுச்சியும் உங்களின் ஆர்வமும், கால நேரம் பார்க்காமல் பதிவுகளுக்கும், பிரச்சினைகளை பதிவுக்கு பின்னாலிருந்து அலசி ஆராயும் விவாதமும், மறுக்கத்தான் முடியுமா ?

அதிரைநிருபர் ஆரம்ப காலம் தொட்டே மழலை பேசும் மொழியாக வயது பேதமின்று மதி மயக்கும் அறிவார்ந்த ஆய்வுகளும், திறமையான, திடமான அசத்தும் மொழியாடலும், உள்ளத்தில் ஊடுருவும் கலாய்க்கும் கருத்தாடல்கள் என்று தொடர்வதற்கு அதன் ஒவ்வொரு பங்களிப்பாளர்களின் பங்களிப்பும், வாசகர்களின் தொடர் ஆதரவும் வெற்றிப் பாதையில் நேர் கொண்ட பார்வையும் நிமிர் நடை போட வைத்திருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

உங்களின் ஒவ்வொரு பதிவுக்குள்ளும் அதிரைநிருபர் குழு உறுப்பினர்களும், குறிப்பாக நெறியாளர் என்ற முறையில் அதில் எனக்கு ஈடுபாடும் இருக்கும்.

ஐம்பதாவது பதிவு என்பதைவிட... முதல் ஐம்பதாவது பதிவு என்று சொல்வோம் அடுத்தடுத்து இரண்டாவது, மூன்றாவது, நான்காவது ஐம்பதாவது பதிவு என்று ஒவ்வொரு ஐம்பதாக தொடர வாழ்த்துகிறோம்

அன்புடன்,

நெறியாளர்
www.adirainirubar.in
editor@adirainirubar.in

Shameed said...

அலாவுதீன்.S. சொன்னது…

//அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! (வயது ஐம்பதா?)//


வலைக்கும் முஸ்சலாம் இன்னும் தொடவில்லை காகா

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…


(அரை கிலோ அல்வா கார்கோ பண்ணிடுங்க ஹமீது)

நான் உங்களுக்கு அல்வா கொடுத்தா நல்லா இருக்காது ஆகவே ஒரு பலா பழம் அனுப்பித்தரவா ???

இப்னு அப்துல் ரஜாக் said...

அருமையான நகைசுவை படிக்க படிக்க சிரிப்பு உங்களிடம் கற்க வேண்டியுள்ளது நிறைய உள்ளது காக்கா

sabeer.abushahruk said...

//வலைக்கும் முஸ்சலாம் இன்னும் தொடவில்லை காகா //

அதுக்கு ஏன் பம்முறிய?

நாற்பத்தி ஒன்பதே முக்கால்ரைக்கா வீசம்னு போட்டு உடைக்கவேண்டியதுதானே?

Iqbal M. Salih said...


உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் சாவண்ணா.

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//ஃபோட்டோவுல கருப்பாத் தெரியிற முடியெல்லாம் வேர்வைலயே வெளுத்துப்போய் மண்டை சாம்பல்ல விழுந்த இடியப்பம் மாதிரி போயிருக்கும். நல்லவேளை நீங்க டை அடிக்கிற பார்ட்டி இல்லை//

தலைக்கு உள்ளே உள்ளது சரியா இருக்கான்னு பாருங்க வெளியோ வெழுத்தா என்ன பழுத்தா என்ன

ஜலீல் நெய்னா said...

ஐம்தாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

சரியான தருனத்தில் லங்கா ஏர்போர்டில் லக்கேஜை இனைத்துக் கொண்டது
சாதுர்யமான‌ வேலைதான்.

சும்மாவா ஆட்டுத்தலையும் கொடுவாமீனும் அல்லவா?

சாவ‌ண்ணா குறியீடு பெயரை: ஷமீது என்பதை எஸ்.ஹமீது என்று எழுதவும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அப்பாடா! நானும் சாதனை செஞ்சிட்டேன். உங்களின் ஜெட்வேக ஐம்பதுக்கு கருத்து எழுதுவதில் நான் 25ம் நபர்! ஐம்பதில் பாதி! இதுமாதிரி சாதனைதான் என்னால் படைக்க முடியும்!மாஸாஅல்லாஹ் !உங்களின் ஓவ்வொரு ஆக்கமும் துடிப்புடன், நகைச்சுவை தாங்கிய படைப்பாக இருப்பதில் என்றும் நீங்கள் நீங்கா இளமைதான். வாழ்த்துக்கள்.

crown said...

25 வது கருத்து என கொள்தல் நலம்!

mulakkam said...

உங்கள் கட்டுரையை மூன்று விதமாக பிரிக்கலாம் ! ஓன்று வழக்கமா காலம் காலமாக வாகனம் ஓட்டுனர் வாடகைக்கு வாகனம் எடுத்தவுடன் சவாரி
ஏரியவுடன் மண்டகபடி மாதரி முதலில் பெட்ரோல் ஸ்டேஷன்னை தொட்டுவிட்டுதான் போகவேண்டிய இடத்துக்கு போவான்.
அதிரையின் நாக்கு ருசி லக்கேய்ஜி உங்களை ஒரு பாடபடிதிடிச்சி .மொத்தத்தில் உங்கள் பயண தொகுப்பு அருமை !!! எனவே உங்களுடைய 50 வது பதிவிற்கு வாழ்த்துகள்.

அப்துல்மாலிக் said...

முன்றாம் கண்ணை முத்தாய்ப்பாய் வழங்கிக்கொண்டிருக்கும் தாங்களின் பதிவுகள் தொடரட்டும்....

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஹமீத் காக்கா... அஸ்ஸலாமு அலைக்கும்,

விஞ்ஞானியாக்கா என்று சொல்லி encourage பண்ணும்போது சும்மா உசுப்பேத்தாதியே என்று தன்னடக்கத்துடன் சொல்லிச் சொல்லியே 50 பதிவுகள் வந்துவிட்டது. மாஷா அல்லாஹ். 100 வது பதிவை நோக்கி வெற்றிநடை போடுவீர்கள் என்று நம்புகிறோம்.

இங்கு நான் தனிப்பட்ட முறையில் முக்கிய செய்தி ஒன்றை குறிப்பிட வேண்டும். அதிரைநிருபர் தளம் இவ்வளவு வளர்ச்சியடைவதற்கு ஹமீத் காக்காவின் மூலம் ஏற்பட்ட நட்பால் கிடைத்த நிறைய பங்களிப்பாளர்களும்,வாசகர்களும் முக்கிய காரணம் என்று சொன்னால் மிகையில்லை. இது பற்றி எழுதினால் ஒரு தனிபதிவே போடலாம்.

அல்லாஹ் தங்களுக்கு நல்லருள் புரிவானாக..

sabeer.abushahruk said...

இப்படிக் கதம்பமென பல தரப்பட்ட ரசனையும் திறமையும் உள்ளவர்களால் மட்டுமே...
ஐ ரிப்பீட் "மட்டுமே" ஒரு பொது ஊடகமாக கிளர்ந்தெழ முடியும். 

ஒற்றை ரசனையோ ஓரிரெண்டு திறமைகளையோ வைத்துக்கொண்டு அதிரை நிருபர் ஜல்லியடித்திருந்தால், ஹமீதும் சரி அதிரை நிருபரும் சரி இத்தகு உயரங்களை எட்டவியலாது.

மார்க்கம், உளவியல், புகைபடங்கள், கணினியறிவு, பயணக்கட்டுரைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நாட்டு நடப்பு, உலகம், கட்டுரைகள், கவிதைகள் என்று பல விஷயங்களில் கவனம் செலுத்துதலே பொது ஊடகத்தின் தகுதிகள்.

மேலும், தமிழில் உள்ள எல்லா தளங்களோடும் பொறாமையின்றி அதிரை நிருபர் போட்டிபோட வேண்டும்.  

அதிரை நிருபரின் வெற்றிக்குப் பதிவர்கள் காரணம் அன்ட் வைஸ்வெர்ஸா.

Shameed said...

தாஜுதீன் சொன்னது…

//இங்கு நான் தனிப்பட்ட முறையில் முக்கிய செய்தி ஒன்றை குறிப்பிட வேண்டும். அதிரைநிருபர் தளம் இவ்வளவு வளர்ச்சியடைவதற்கு ஹமீத் காக்காவின் மூலம் ஏற்பட்ட நட்பால் கிடைத்த நிறைய பங்களிப்பாளர்களும்,வாசகர்களும் முக்கிய காரணம் என்று சொன்னால் மிகையில்லை. இது பற்றி எழுதினால் ஒரு தனிபதிவே போடலாம்//

எல்லாம் இறைவன் நாட்டம்.அன்று நீங்கள் ஒற்றையாக நின்று நியாயத்திற்கு போராடிய குணம்
எனக்கு உங்கள் மேல் ஒரு உந்துதலை ஏற்ப்படுத்தியது அந்த உந்துதல் கொஞ்சம் கொஞ்சமா நம்மை இந்த அளவிற்கு உயர்த்தியது .எல்லாம் இறைவன் செயல்.

தனிபதிவு எப்போன்னு யாசிர் கேட்பதுபோல் ஒரு பிரம்மை

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…


//ஒற்றை ரசனையோ ஓரிரெண்டு திறமைகளையோ வைத்துக்கொண்டு அதிரை நிருபர் ஜல்லியடித்திருந்தால், ஹமீதும் சரி அதிரை நிருபரும் சரி இத்தகு உயரங்களை எட்டவியலாது//

சரியாக சொன்னீர்கள்//மார்க்கம், உளவியல், புகைபடங்கள், கணினியறிவு, பயணக்கட்டுரைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நாட்டு நடப்பு, உலகம், கட்டுரைகள், கவிதைகள் என்று பல விஷயங்களில் கவனம் செலுத்துதலே பொது ஊடகத்தின் தகுதிகள்.//

ஆகா இத இப்படி பப்ளிக்கா சொல்லிடியலே இத எல்லோரும் செய்ய ஆரம்பிச்சுட போறாங்க!!!

Abu Easa said...

மாஷா அல்லாஹ்!
அல்லாஹ் உங்களுடைய செயலைப் பொருந்திக்கொள்வானாக!
மேலும் அவன் பொருந்திக்கொள்கிற நற்செயல்களில் நம்மை அதிகமதிகம் ஈடுபடுத்துவானாக! மேலும் அதில் நம்மை ஒன்றுபடுத்துவானாக

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ரெண்டு நாளா நம்மூரு வானம் பொத்துக்கிட்டு ஊத்துது. லேசா தூறுனாலே பவர் கட்டாகும் நம்மூரில் அதிசயமா இப்போ ஒன்னும் ஆகல. இன்னிக்கு நேரங் கெடச்சி, இதப் படிச்சு முடிச்சேன்.

"எதுலயும் கான்ஸ் & ப்ரோ பாக்கணும்"னு ஜாஹிர் மாதிரி தத்துவ ஆளுங்க சொல்லியிருக்காங்க. அதுனால மொதல்ல கான்ஸ்:

35 கிலோ எக்ஸ்ட்ரா லக்கேஜுக்கு ஒதவி செஞ்சவரு உண்மையிலேயே ரொம்ப நல்லவரு. ஏரோப்ளேன்காரன் கொளறுபடி செஞ்சதுக்கு அவரு என்னா செய்வாரு? அவரு இதப் படிக்க வாச்சுதுன்னா என்னா நெனப்பாருன்னு யோசிச்சியா? 35x... = எவ்வளவு கட்டவேண்டியிருக்கும்? வெறும் ஆயிர ரூவா ... அத நீயி வளச்சி எழுதியிருக்க வேணாம்.

மத்தபடி ப்ரோன்னு பாத்தா,

கலக்கிட்டே மவனே!

Shameed said...

ஜமீல் சாச்சா உங்கள் பின்னுட்டம் பார்த்தேன் 'ஊரில் நல்ல மழையாமே"

Shameed said...

எனது ஐம்பதாவது பதிவிற்கு கருத்து சொன்ன மற்றும் கருத்து சொல்ல நேரம் இல்லாத அனைவருக்கும் என் சலாம் மற்றும் துவா

Ebrahim Ansari said...

உனது ஐம்பதாவது பதிவைப் படித்துப் பாராட்டியவர்களின் பட்டியலில் இந்தப் பெயரையும் சேர்த்துக்கொள்.

ஜனாப். எஸ். முகமது பாரூக். உன் அன்புத் தந்தை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு