வித்தியாசமான பாதையில் பயணிக்க எத்தனித்த இணையம் - இன்னும் பச்சிளம் குழந்தைக்கு தெரிந்ததையே சொல்லிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தால் இந்த ஜெனெரேஷன், “இவய்ங்கள நாடு கடத்துங்கப்பான்னு எச்சரிக்கை விடுக்கும். அதனால, இன்னும் பச்சப் புள்ளையாகவே இருக்கிற நம்ம உளவு பிரிவு மதி(ல்)மேல் அதிகாரிகளிடமும் (அனு)மதி தேடும் அதிகாரிகளிடமும் இணையத்தில் வலை வீச்சு'ன்னா அது ஒரு துப்பரியும் புது டெக்னாலஜின்னு சொல்லி ஒரு புதுசா வார்த்தை பதத்தைக் கொடுத்து இனி பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் தீனி போடலாம்.
உளவு அகராதி !
இணையம் - இண்டெர் நெட் : தொடர்பற்று இருப்பவர்களையும், யாரென்றே அறியாதவர்களை இணைப்பது, எந்த வகையிலும் சம்பந்தமில்லாதவர்களை இல்லாத ஒன்றோடு ஒன்றுபடுத்தி, பின்னிப் பினைந்து மட்டற்ற, கட்டற்ற இணைப்பை ஏற்படுத்துவது. 'உளவு' 'பிரிவால்' வாடும் மக்களை எந்த வகையில் நிம்மதியாக இருக்க விடாமல் அவர்களை ஒன்றோடு மற்றொன்றாக பினைத்து வைப்பது.
எஸ்.எம்.எஸ் : நிம்மதியைத் தேடும் மக்கள் மத்தியில் அவர்களுக்கு நிம்மதியின்பால் ஆர்வத்தை ஊட்டுவதற்கு குழப்பமே நிம்மதிக்கு வழி என்ற தலையாய கோட்பாட்டை கையில் எடுத்துக்கொண்டு கொஞ்சலில் ஆரம்பித்து, மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் பயன்படுத்தும் ஓர் ஆயுதம். இதனால் உளவு பிரிவின் நிம்மதி தொலைந்ததாக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஈமெயில் : மொட்டக் கடுதாசிகள் புழங்கிய காலம் தொட்டே போஸ்ட்மேனிடமே அது வந்த இடமெது என்று சுற்றி வந்து மொட்டக் கடுதாசியைக் கண்டுபிடித்து பழக்கப்பட்ட உளவு (மொட்டக் காடுதாசிகளின்) பிரிவால். புதிதாக மின்னஞ்சல்களாக வெளிவரும். இது மிகப் பெரிய கொடிய ஆயுதம். எங்கேயாவது சத்தம் கேட்டாலோ, பொருட்கள் சிதறினாலோ, உடணடியாக உளவு (தனது) பிரிவின் துயரத்தை கட்டவிழ்த்து விடும். ஏற்கனவே முடிவெடுத்து வைத்த பெயர்களில் ஒன்றை தெரிவாக உருவாக்கி அல்லது அந்த பிரிவால் உருவாக்கப்பட்ட குழுவுதான் என்று முடிவுக்கும் வரப்படும். இதுவும் மிகக் கொடிய ஆயுதம் இதனை பயன்படுத்துபவர்கள், வீட்டு சமையலறையில் வைத்திருக்கும் கடுதாசி திறக்கப் பயன்ப்டும் கத்தி போன்றது, கோபம் வந்தால் கத்தி கத்தி பேசாமல் இந்த கத்தி பேசும் என்பது உளவு பிரிவால் வாடும் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
சிம் கார்டு : வாங்க வாங்க டோமோ, போமோ, பொக்கோடா, இக்காடா, என்று புதுப் புது வகையாக கடைவிரித்து யார் வேனும்னாலும் எத்தனை வேனும்னாலும் வாங்கலாம் வச்சுக்கலாம். உளவு பிரிவால் வாடும் மக்களிடம் மட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட, ஏராளமான இந்த பிளேடு வகை ஆயுதம் சிக்கியதாக எழுத்தாலும், காணொளி கண்காட்சியாலும் பசிப் பினியில் இருக்கும் ஊடகங்களுக்கு சரியான விருந்து போட உதவும் மிகவும் கொடிய ஆயுதம்.
மடிக் கணினி : ஆஹா ! இதுவல்லவா சிம்ம சொப்பனம் உளவுக்கு (உழவுக்கல்ல) வந்தணம் செய்வோர் உதைப்பவர்களை உயர்வாக கொண்டாடுவர், என்று சில்லுப்பாட்டு பாட வைக்கும் ஆயுதமிது. உலக உருண்டையைச் சுருட்டி இதில் பதுக்கி வைத்துக் கொண்டு உளவு பிரிவை உறங்காத உத்தமர்களாக காட்ட உதவும் உயர்தர ஆயுதம். இதனைக் கொண்டு எல்லா ஊமைக் 'கதை'களையும் கலர் கலராக கடலில் கரைக்கலாம். உளவு பிரிவை தாங்க முடியாத மக்களுக்கு இதுவெல்லாம் ஒரு வரப்பிரசாதம்.
மெமரி கார்டு : மனுசனுங்க மறதியை மூலதனமா வைத்து தயாரிக்கப்பட்ட அதிநவீன அபாயகரமான ஆயுதம், இதனை ஒருவரிடமிருந்து கைப்பற்றினால் அவர்தான் உலகிலேயே மிகக் கொடியவன், இது பல்வேறு சைஸில் இருக்கும், மாத்திரை வடிவில் இருக்கும் இதனைக் கொண்டு உளவு பிரிவின் துக்க ஸாரி தூக்க இழப்பை சரி கட்ட முடியும். இதனை கண்டுபிடிக்க நிலவில் மேற்படிப்புகள் படித்த திறமையான துப்பறியும் வேவு பார்பவர்களால் மட்டுமே முடியும்.
இதேபோன்று இணையத்தில் வீசி தேடிப் பிடிக்கும் ஆயுதங்களின் அகராதியை சமீபத்திய உறங்காத பிரிவு, உறவுகளுக்கு பிரியா விடை கொடுக்கும் உள(தூய்மையற்ற)வு வின் ஈகைக் குணங்களை இனிவரும் பதிவுகளில் காணலாம்.... அதோடு, மேற்சொன்ன ஆயுதங்களை ஒவ்வொன்றைப் பற்றி விரிவாக தொடர்ந்து பார்ப்போம்.
தொடரும்...
அபுஇபுறாஹிம்
7 Responses So Far:
Well done, what a outstanding and funny definition!!!. Expect your subsequent articles swiftly.
Abdul Razik
Dubai
வலைவீச்சு செய்திகள்
குழை நடுங்கவைக்கின்றன
தொடர்ந்து வீசுங்கள் கொடுவா இல்லாட்டியும் கூனி ராலாவது கிடைக்கும்
வலை வீச்சில் எளவு (உளவு ) பிரிவு பற்றி நிறைய கெண்டை மீனும் கூறல் மீனுமா சிக்குதே !!
கண்டு பிடிப்புகளின் பலன் ஆக்கப் பூர்வமுள்ளதாக இருக்கட்டும்,
வலை வீச்சு தொடரட்டும்! சிக்குவது எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கட்டும்!!
முன்னேற்ற வலை பயனுள்ள கடல் உணவுகளை பெற பயன்பட வேண்டுமே ஒழிய ஆவாத அர்த்தமில்லாத பாம்பு தவளை நத்தைகளை பிடித்து மாசக் கடைசியில் கணக்கு காட்டுவது போல் இருக்கக்கூடாது.
useful informations.
good to share, keep update
Post a Comment