Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர். (3) 18

அதிரைநிருபர் பதிப்பகம் | October 06, 2012 | , , , , , ,


இந்தியா சுதந்திரம் பெற்றதும் அரசியல் நிர்ணய சபையில் பசுவதை பற்றி பெரிய விவாதமே நடந்தது. பண்டிட் தாகூர் தாஸ், சேட்  கோவிந்த தாஸ்,ஷிவன்லால் சக்சேனா, ராம் சகாய் போன்றவர்கள் எல்லாம் பசுவதை தடையை அரசியல் அமைப்பு  சட்டத்தின் அடிப்படை உரிமைகளின் பட்டியலில் ( LIST OF FUNDAMENTAL RIGHTS ) சேர்க்கவேண்டுமென்று “ மாட்டுவால் சூப் “ குடித்தவர்கள் போல், வாதிட்டனர்; போரிட்டனர். ஆனால் டாக்டர். அம்பேத்கார் மற்றும் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாட்டுக்கறியை மிளகுபோட்டு வறுத்து( PEPPER FRY) சாப்பிட்டது போன்ற  தெம்புடன்  ஓரணியில் நின்று பசுவதை தடையை மாநிலங்களின் உரிமை என்கிற பட்டியலில் சேர்த்து “அம்போ” என்று விட்டனர் . இல்லாவிட்டால் பேச்சுரிமை, சொத்துரிமை போல பசுவதை தடையும் அடிப்படை உரிமைகள் என்கிற பட்டியலில் வந்து இருக்கும்.

11.3 It is apparent from the debate, that the Members were keen on including the provision in the chapter on Fundamental Rights but, later as a compromise and on the basis of an assurance given by Dr. Ambedkar, the amendment was moved for inclusion as a Directive Principle of State Policy. 

( Ref: Lensch. Propleme Dr. Chapter 44. Prospects of Cattle Husbandry in India )

மாட்டை அறுப்பதும், மாட்டுக்கறி உண்ணுவதும் தவறு என்று வாதிடும் கூட்டத்தார் அந்த மாட்டுக்கு கொடுக்கும் மரியாதை  என்ன என்பதை அவர்கள் அன்றாடம் சென்று   கும்பிடும் கோயில் கோபுரங்களில்  இருக்கும் சிலைகள், சிற்பங்கள் நமக்கு சொல்லும். அவைகளை அவர்கள்  கண்ணால் கண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. பல பெண்களும் இந்த தளத்தில் வரும் கட்டுரைகளை படிக்கிறார்கள் என்பதால் அவையடக்கம் கருதி சிலவற்றை அவிழ்த்துவிட முடியவில்லை. தூரத்தில் இருக்கும் கஜுரோக போக  வேண்டாம் பக்கத்தில் இருக்கும் வேதாரண்யம் சென்று மட்டும் ஒருமுறை பாருங்கள்.   

பசுவை தாய் என்போர் பெற்ற தாயை முதியோர் இல்லத்திலும் , பசுக்களை பராமரிப்பு இன்றி நடுத்தெருக்களிலும், சாலைகளிலும்  அலைய விடுவது ஏன்? சானா பாநாவின் சகோதர கட்சி ஆளும் மாநிலங்களிலாவது இந்த காட்சிகல்  மறைந்து  இருக்கின்றனவா?

பசுவதை கூடாது என்கிற  மதரீதியான வாதம்  அடிப்படை இல்லாமல் அடிபட்டுப்போகிறது. பொருளாதார ரீதியாக பார்த்தாலும் பொருளற்றுப் போய்விடுகிறது. எந்த ஒரு விவசாயியும், தனது வயலில் உழுதுகொண்டிருக்கும் மாட்டை- தனக்காக வண்டி இழுக்கும் மாட்டை- தனக்காக பால் கறந்து தரும் மாட்டை பிடித்து அறுத்து சாப்பிட நினைப்பதில்லை. தனக்கு உபயோகப்படாது இந்த தொத்தை  மாடு என்கிற நிலைக்கு வந்தபின்  காயலாஙகடைக்குப் போகவேண்டிய நிலைக்கு இருப்பதை விற்று அல்லது அறுத்து  தனது உணவுத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் தவறில்லை என்கிற பொருளாதார வாதம் ஏன் சில அடிமாடுகளுக்குப் புரியவில்லை என்பது நமக்குப் புரியவில்லை. இப்படி பயன்படுத்த முடியாத  நிலையில் இருக்கும்   கால்நடைகளை – பால் வற்றிப்போன மாடுகளை வைத்து ஏழை  விவசாயியால் காலத்துக்கும் கட்டிப்போட்டு, பராமரித்து தீனி போட முடியுமா? அல்லது அந்த மாடுகள் உணவின்றி சாவது இவர்களுக்கு சம்மதமா?

உண்ண உணவில்லாத  ஒரு நாட்டில் – ஊட்டச்சத்து இல்லாமல் ஒலிம்பிக்குகளில் ஓடமுடியாத மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் -புரதச்சத்து மிகுந்த ஒரு உணவைத் தடைசெய்ய தத்துவ ரீதியாகவோ ,தார்மீக ரீதியாகவோ என்ன  முகாந்திரம் இருக்கிறது?. நான் உயர்ந்த சாதி நான் என்ன சொன்னாலும் ஏன் என்று எதிர்கேள்வி கேட்காமல்   நீ அடிபணிந்து நடக்கவேண்டுமென்கிற ஆதிக்க சக்திகளின் பூஷ்வா மனப்பன்மையைத்தவிர வேறு என்ன இருக்கிறது? முஸ்லிம்களும் தாழ்த்தப்பட்டோர்களும் உண்ணும்  ஒரு வசதியான, இலகுவில் கிடைக்கக்கூடிய ஒரு உணவில் மண்ணை அள்ளிப்போட  வேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேறு என்ன இருக்கிறது?    

பத்தொன்பதாம் நூற்றாண்டில் துறவி விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த போது மாட்டிறைச்சி தின்றார். மாட்டிறைச்சி தின்ன மாட்டோம் என்று கூறும் ஆச்சாரம் மிகுந்த இந்துக்கள் மருத்துவத்திற்காக மாட்டிறைச்சி சூப்  குடிப்பதைக் காந்தியடிகள் பலமுறை கேலி செய்திருக்கிறார். ( REF: DR. D. N JHA- THE MYTH OF HOLY COW )

கேரளத்தில், உயர்ந்த, தாழ்ந்த எல்லா  சாதிகளையும் சேர்த்து மொத்தம்  எழுபத்திரண்டு சாதிகள் இருக்கின்றன.   ஆட்டிறைச்சியின் விலை அதிகம் என்பதால் இந்த அத்தனை சாதிகளைச் சார்ந்தோரும்  மாட்டிறைச்சியைத் தான் விரும்பி  தின்கிறார்கள். அச்சாதிகளை எல்லாம் இந்துத்துவா சக்திகள் கடிந்து கொள்ளவில்லை. இதே கேரளத்தில்தான் புகழ்பெற்ற அனந்த பத்மநாத சுவாமி கோயிலும் , குருவாயூர் கோயிலும், ஐயப்பன் கோயிலும் இருக்கின்றன. இந்த கோயில்களுக்கு  அருகாமையிலேயே போத்துக்கறி வியாபாரம் கொத்துக்கறி போட்டு அமோகமாக நடக்கின்றது. அத்துடன் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலிருந்து மாடுகள் லாரி லாரியாக தினமும்  கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கேரளத்தில் சானா பானா திறந்து வைத்திருக்கிற அரசியல் கடை இன்னும் முதல் போனிகூட ஆகாமல்  இருப்பதற்கு அது வலியுறுத்தும்  பசுவதை தடை கொள்கையும் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

அதே போல் மேற்கு வங்காளத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மாட்டிறைச்சி ஒரு பிரதான உணவுப்பொருளாகும். எல்லா மலைசாதி மக்களுக்கும் மாட்டிறைச்சி ஒரு விலைகுறைந்த இலகுவாக கிடைக்கக்கூடிய இன்றியமையா உணவுப்பொருளாகும். அதே போல் தலை நகர்  டில்லியில் சந்து சந்தாக மாட்டிறைச்சி தொங்குவதை சந்து பொந்துகளிலும்  காணலாம். பம்பாயில் சிவாஜி நகர் ( கோவண்டி) பகுதியில் மாட்டை அறுப்பதற்காக நவீன இறைச்சிக்கூடம், அங்கிருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வசதிகளுடன் இருப்பதைக்காணலாம்.  மத்திய அரசு அதிகமான மாட்டிறைச்சி தொடர்பான உணவுப்பொருள்களை உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மிகவும் ஊக்கம் கொடுத்து வருகிறது. இதற்கு இளஞ்சிவப்பு புரட்சி  என்று பெயரிட்டு இருககிறார்கள்.( PINK REVOLUTION). இந்த இளஞ்சிவப்பு புரட்சியின் மூலம் அந்நிய செலாவணி குவிவது சில காவிகளுக்குப் பிடிக்கவில்லை. 

குஜராத், ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் வட்டிக்கு வாங்கி ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் சில இனத்தவர்கள் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்கிற கோஷத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். அவர்களிடம்  ஏழைகளிடமிருந்து சுரண்டிய வட்டிப்பணம் நிறைய இருக்கிறது அதைவைத்து பாதாமும் பிஸ்தாவும் சாப்பிட முடியும்; லஸ்ஸியும் லட்டும் பருகவும் தின்னவும் முடியும். ஏழை உணவான மாட்டுக்கறியில் இப்படி ஏன் கைவைத்து ஏழைகளின் அடிவயிற்றிலும் அடிப்படை உரிமையிலும் இடி  இறக்க எத்தனிக்க வேண்டும்?               

பசுக்களை காப்பற்ற விரும்பும் காவிகள் முதலில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்து கொண்டிருக்கும் மாடுகளை பராமரிக்க தங்கள் சானா பானா சக்திகளை தூண்டட்டும். குப்பை கூளம் கொட்டும் இடங்களில் கூட்டமாக மேயும் மாடுகளை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பட்டும். சாப்பிடுவது என்பது ஒரு தனி மனித உரிமை. என்ன சாப்பிடுவது என்று தீர்மானிக்க வேண்டியது  தனி மனிதனே அன்றி சட்டமன்றம் அல்ல. . அறிவியல் ரீதியாக ஆபத்து இல்லாத ஒன்றை அரசாங்கம் தடை செய்ய நினைப்பது, அல்லது தூண்டுவது, அதற்காக போராடுவது என்பது கேலிக்கூத்து. சாராயக்கடையை விடவா சால்நா கடை தீங்கு விளைவிக்கிறது? 

உயிர் வதை செய்தல் கூடாது என்று கூக்குரல் இடுவோர் முதலில் தன்னை கடிக்கும் கொசுவை , இரவில் தன் மேல் ஊறும் மூட்டைப்பூச்சியை , தெருவில் கடிக்க வரும் வெறிபிடித்த நாய்களை, நோய் பரப்பும் பன்றிகளை, விவசாயப் பயிர்களை தின்று தீர்க்கும்  வெட்டுக்கிளிகளை, எலிகளை, தண்ணீரில் குடி இருக்கும் பாக்டீரியாக்களை, கொத்தவரும் பாம்பை, கடிக்க வரும் பூரானை, கொட்ட வரும்   தேளை என்ன செய்கிறார்கள்? பாலூட்டி பழம் கொடுத்து    வளர்க்கிறார்களா? வாழ்த்துப்பா  பாடுகிறார்களா? மலேரியா மற்றும் டெங்குக் காய்ச்சளைப்பரப்பும் கொசுக்களைக் கொல்லாமல் குருமாவும் புரோட்டாவுமா கொடுக்க முடியும்? கொல்லாமை எல்லா இடத்திலும் சாத்தியப்படுமா? அப்படி சாத்தியப்பட்டால் தண்ணீரைக் கூட தண்ணீராகவோ வெந்நீராகவோ குடிக்க முடியுமா? 

மாட்டின் இறைச்சிக்கு ஒரு நியாயம் வைத்திருப்போர் அதன் பாலுக்கு என்ன நியாயம் வைத்து இருககிறார்கள்? மாட்டின் மடி சுரக்கும் பால் நமக்கா அதன் கன்றுக்கா? அந்தப்பாலைக் குடம் குடமாக குடிக்கும்போது வராத பச்சாதாபம் அதன் கறியை சாப்பிடும்போது மட்டும் எங்கிருந்து பொத்துக்கொண்டு வருகிறதாம்? பாலைக்கறந்து குடித்து பசுவின் கன்றுக்கு பச்சை துரோகம் செய்யலாம்;  எருதின் கழுத்தில் கலப்பையைப்  பூட்டி வெயிலில் போட்டு வதைக்கலாம்; இழுக்க முடியாத சுமைகளை ஏற்றி காளைகளை வண்டி இழுக்கச் செய்யலாம். ஆனால் இயலாத நிலையில் இந்த மாடுகளை இன்னும் போட்டு வதைக்காமல் உணவாக உபயோகப்படுத்த மட்டும் கூடாதா? இந்த கருத்தை சொன்னால் அது அரசியலா? மத உணர்வை மதிக்கவில்லை என்கிற பட்டமா?

முதலாவதாக பசுவதை தடை மசோதா என்கிற பெயரே ஒரு கடைந்தெடுத்த மூடுமந்திரச்சொல்  ஆகும். .  இந்த பசுவதை என்பது வெளி உலகுக்கு மட்டுமே பசுவைக் காப்பாற்ற. ஆனால் உண்மையிலேயே இந்த வார்த்தைக்குள்  காளை, எருமை முதலிய எல்லா கால்நடைகளும் அடக்கம். மராட்டியத்தில் சட்டமாக்கப்பட்டு நடைமுறையில் அமுல் படுத்தப்படாத/ முடியாத  இந்த மசோதா  ஒட்டுமொத்த  இந்தியாவுக்கும் பொருந்தாது. இதை வைத்து மக்களின் உணர்ச்சியைத்தூண்டும் பித்தர்களின் சித்துவேலைகள் வெற்றி பெறாது. பசுவதை தடை சாத்தியம் இல்லாத தத்துவம். இது ஒரு செத்துப்போன பிணம். இதைக்கொண்டுபோய் புதைக்காமல் இன்னும் ஒப்பாரி வைப்பது சானாபானவின் சறுக்கும் அரசியல் சரித்திரம். எனவே நாம் எல்லோரும்  மாட்டுக்கறிக்கு ஒட்டுப்போடுவோம்.  

குறுந்தொடர் நிறைவுற்றது.
இபுராஹீம் அன்சாரி

18 Responses So Far:

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

ஜசக்கல்லாஹ் ஹைர் இப்ராகிம் காக்கா

பல நல்ல தகவல்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம், தங்களின் பதிவு வெகு விரைவாக நிறையிற்றது வருத்தமே

இன்ஷா அல்லாஹ் வேறொரு தொடரில் தாங்களை பதிவின் மூலமாக எதிர்ப்பார்க்கும் குழுவில்/பட்டியலில் நானும் ஒருவனே

அதிரை சித்திக் said...

நல்ல தகவல்களை
அள்ளி தந்த அன்சாரி காக்காவின்
அடுத்த தொடர் கானா ஆவலுடன்
உள்ளோம் ..அதிரை நிருபரை
அலங்கரிக்க வாருங்கள்

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum!
Ibrahim Ansari kakka, it is indeed awesome and amazing to read your research and analysis. It is wonderful in many aspects. You showed that each and every point in your argument is authentic, logic, justifiable and reasonable.
Further I am really moved to see the lucid style of your Tamil. It is flawless and honestly speaking I was reading all these postings to point out at least one grammar or spelling mistake. Hardly I found any mistake.
It is a loss to an academic institution, to miss a knowledgeable, deliverable lecturer like you. I console myself that your brother and my adopted son Mahaboob Ali is replacing you in some aspects.
Alhamdhu lillah. Jazakkallahu Hairen.
Expecting your further research in yet another area.
Wassalam
N.A.Shahul Hameed

KALAM SHAICK ABDUL KADER said...

//மாட்டின் இறைச்சிக்கு ஒரு நியாயம் வைத்திருப்போர் அதன் பாலுக்கு என்ன நியாயம் வைத்து இருககிறார்கள்? மாட்டின் மடி சுரக்கும் பால் நமக்கா அதன் கன்றுக்கா? அந்தப்பாலைக் குடம் குடமாக குடிக்கும்போது வராத பச்சாதாபம் அதன் கறியை சாப்பிடும்போது மட்டும் எங்கிருந்து பொத்துக்கொண்டு வருகிறதாம்? பாலைக்கறந்து குடித்து பசுவின் கன்றுக்கு பச்சை துரோகம் செய்யலாம்; எருதின் கழுத்தில் கலப்பையைப் பூட்டி வெயிலில் போட்டு வதைக்கலாம்; இழுக்க முடியாத சுமைகளை ஏற்றி காளைகளை வண்டி இழுக்கச் செய்யலாம். ஆனால் இயலாத நிலையில் இந்த மாடுகளை இன்னும் போட்டு வதைக்காமல் உணவாக உபயோகப்படுத்த மட்டும் கூடாதா? இந்த கருத்தை சொன்னால் அது அரசியலா? மத உணர்வை மதிக்கவில்லை என்கிற பட்டமா?//

பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு!!
பாலாபிஷேகத்தால் எத்தனை ஏழைக் குழந்தைகட்குச் சேர வேண்டிய பால் வீணடிக்கப்படுகின்றது; ஆனால், குர்பானிக்காக அறுக்கப்பட்ட இறைச்சியால் எத்தனை ஏழை மக்கள் பயனடைகின்றார்கள்! சிந்திக்க மறுப்பதேன்!?

KALAM SHAICK ABDUL KADER said...

//It is a loss to an academic institution, to miss a knowledgeable, deliverable lecturer like you//

Prof.NAS,

Assalamau alaikkum,

I have already requested him as you noted in these lines. Anyway, he is now called Doctor Ibrahim kakka which is honourable title given by brother Iqbal bin Mohamed Salih.

அலாவுதீன்.S. said...

////பசுக்களை காப்பற்ற விரும்பும் காவிகள் முதலில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்து கொண்டிருக்கும் மாடுகளை பராமரிக்க தங்கள் சானா பானா சக்திகளை தூண்டட்டும். குப்பை கூளம் கொட்டும் இடங்களில் கூட்டமாக மேயும் மாடுகளை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பட்டும். சாப்பிடுவது என்பது ஒரு தனி மனித உரிமை. என்ன சாப்பிடுவது என்று தீர்மானிக்க வேண்டியது தனி மனிதனே அன்றி சட்டமன்றம் அல்ல....////


நெத்தியடிதான்! கோவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்யும் இவர்களின் வீட்டு வாசலில் கொண்டு போய் விட்டு விடலாம் எதற்கும் உதவாத பசுவை!.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மாட்டின் இறைச்சிக்கு ஒரு நியாயம் வைத்திருப்போர் அதன் பாலுக்கு என்ன நியாயம் வைத்து இருககிறார்கள்? மாட்டின் மடி சுரக்கும் பால் நமக்கா அதன் கன்றுக்கா? அந்தப்பாலைக் குடம் குடமாக குடிக்கும்போது வராத பச்சாதாபம் அதன் கறியை சாப்பிடும்போது மட்டும் எங்கிருந்து பொத்துக்கொண்டு வருகிறதாம்? பாலைக்கறந்து குடித்து பசுவின் கன்றுக்கு பச்சை துரோகம் செய்யலாம்;//

அதெப்படி ! குடம் குடமாக தலையில் ஊற்றி ஓடுமே ! அப்போ என்னாவாம் ?

அது பால் இல்லையா ? இலே சந்து பவுடாரா ?

எது எப்படி இருந்தாலும் ! மாட்டுக்கறிக்கு எனக்கு ரொம்ப தூரம்னு சொன்னா "இவனப்பாரு புதுசா சொல்ல வந்துட்டான்னு" சொன்னா நான் என்ன பன்னுறதாம் !?

Shameed said...

அத்தியாயம் : 2
அல் பகரா - அந்த மாடு
மொத்த வசனங்கள் : 286


அல் பகரா என்ற அரபுச் சொல்லின் பொருள் அந்த மாடு. திருக்குர்ஆனிலேயே மிகப் பெரிய அத்தியாயம் இது தான். இந்த அத்தியாயத்தில் 67 வது வசனம் முதல் 71 வது வசனம் வரை மாட்டுடன் தொடர்புடைய அதிசய நிகழ்ச்சி ஒன்று கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இடம் பெற்றதன் காரணமாகவே "அந்த மாடு'' என்ற பெயர் வந்தது.


காளை, பசு இரண்டையும் இச் சொல் குறித்தாலும், பெயர் வரக் காரணமான 67-71 வசனங்களைக் கவனித்தால் காளையையே குறிக்கிறது என அறியலாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

'சந்து' வை 'சாந்தா'க வாசிச்சுட்டா வெள்ளையா தெரிஞ்சுடும்...ப்ளீஸ்!

sabeer.abushahruk said...

மாட்டுக்கறி சாப்பிடாதவங்களையும் ச்சப்புக்கொட்டி சாப்பிடத் தூண்டிப்போட்டதுங்க உங்கப் பதிவு. இனி ஹோட்டலுக்குள் நுழைந்ததும் பீஃப் ஃப்ரை கேட்கத் தோணும்.

பர்கரில் மாட்டுக்கறி ட்டேஸ்ட்டா ச்சைனீஸ் ஸ்ட்டேக்கில் ட்டேஸ்ட்டா என்று ஒரு பட்டிமன்றம் வைக்கவேணும்.

அடுத்த அடி எப்போ காக்கா.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா

ZAKIR HUSSAIN said...

நேபால் நாட்டில் தெருவெல்லாம் எருமை மாட்டு இறைச்சிகடை. பசுவை கொன்றால் சிறைத்தண்டனை.

கறுப்புதான் எனக்கு பிடிக்காத கலரு!!! என்று இவர்கள் இனிமேல் பாடலாம்.

நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மதம், ஹிந்து. இதில் எப்படி நாட்டுக்கு நாடு கோட்பாடுகள் வேறுபடுகிறது??

KALAM SHAICK ABDUL KADER said...

//நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மதம், ஹிந்து. இதில் எப்படி நாட்டுக்கு நாடு கோட்பாடுகள் வேறுபடுகிறது??//

மனிதச் சட்டங்கள் வளையும்;அசையும்;நீளும்;சுருங்கும், ஆனால் அல்லாஹ்வின் இறுதி வேதச் சட்டம்- என்றும் இறுதியானது; உறுதியானது. இஃதே உண்மை!

Shameed said...

மாட்டுக்கறியை சூடு (லேட்டா)ஆறி வந்து படித்தாலும் (சாப்பிட்டாலும்)அதான் மனம் குணம் சுவை மாறவில்லை அழகிய (சுவையான) கட்டுரை

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

எங்கள் வாக்கு சல்லிசும், சுவையும் நிறைந்த மாட்டுக்கறிக்கே!

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜனாப் இ.அன்சாரி காக்கா.தாங்களின் குறுந்தொடர் நிறைவுபெற்றது வார்த்தையை படித்ததும் என்மனம் நிறைவு பெறவில்லை.

// உயிர் வதை செய்தல் கூடாது என்று கூக்குரல் இடுவோர் முதலில் தன்னை கடிக்கும் கொசுவை , இரவில் தன் மேல் ஊறும் மூட்டைப்பூச்சியை , தெருவில் கடிக்க வரும் வெறிபிடித்த நாய்களை, நோய் பரப்பும் பன்றிகளை, விவசாயப் பயிர்களை தின்று தீர்க்கும் வெட்டுக்கிளிகளை, எலிகளை, தண்ணீரில் குடி இருக்கும் பாக்டீரியாக்களை, கொத்தவரும் பாம்பை, கடிக்க வரும் பூரானை, கொட்ட வரும் தேளை என்ன செய்கிறார்கள்? பாலூட்டி பழம் கொடுத்து வளர்க்கிறார்களா? வாழ்த்துப்பா பாடுகிறார்களா?//

தாங்கள் பிடித்த மாட்டை ரொம்ப நேர்த்தியாக அறுத்து இருக்கிறீர்கள் கொஞ்சமாவது தலையை தூக்க வாய்ப்பே இல்லை . ஜஜாக்கல்லாஹ் ஹைரன்.

Iqbal M. Salih said...

பாடபுத்தகத்தில் வைக்கப்படவேண்டிய தகுதி பெற்றது இந்தக் குறுந்தொடர்.

சாட்டையை சுற்றிக் கையில் வைத்திருக்கும் டாக்டர் அவர்கள், அடுத்து எதை நோக்கி சுழற்றப்போகின்றார் என்ற எதிர்பார்ப்புகளுடன்,

Yasir said...

தாங்கள் சின்ன வெங்காயமும் நாட்டு தக்காளியும் போட்டு ஆக்கிதந்த மாட்டுக்கறி ஃபிரை நல்ல கமகம மென்ற மனத்துடனும்,ருசியாகவும் இருந்தது

Ebrahim Ansari said...

அன்பானவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

பின்னூட்டத்தில் முகமன் கூறிய அனைவருக்கும் வ அலைக்குமுஸ்ஸலாம்.

ஆக்கித்தந்த மாட்டுக்கறியை ருசித்துப் புசித்து ஊக்கம் தரும் பின்னுட்டம் தந்துள்ள தம்பி இர்பான், ( எங்கே ரெம்ப நாட்களாய்க் காணோம்- மாட்டுக்கறிக்காக வந்தீர்களா? ) சகோதரர் அதிரை சித்தீக், என்றென்றும் எம்முடன் இருக்கும், கவிகள் சபீர், கவியன்பன், தம்பிகள் அபூ இப்ராஹீம், ஜாகிர் ஹுசைன், ஜகபர் சாதிக், இக்பால், எல் எம் எஸ் அபூபக்கர் மற்றும் அலைபேசியில் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

அன்பர். அலாவுதீன் அவர்களுக்கும், அவர்களின் பாராட்டுக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி.

மருமகனார் யாசிர் அவர்கள் கறியில் சேர்த்து இருந்த பச்சை மிளகாயையும், மிளகுத்தூளையும் விட்டுவிட்டீர்களே! மருமகன் சாகுல் அணுஅணுவாய் ருசித்ததுபோல் தோன்றுகிறது.

மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்த பின்னுட்டம் தந்துள்ள மரியாதைக்குரிய பேராசிரியர் Janab. N.A.S. அவர்களுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். தங்களிடம் படிக்கும் மாணவர்களைத் தத்து எடுத்து போஷிக்கும் தங்களைப்போல ஆசிரியர் திலகங்களைப் பெற்றிருந்தது, இறைவன் எங்களுக்கும் எங்களின் ஊருக்கும் அளித்த பெரும் பாக்கியங்களில் ஒன்றாகும். நான் தங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்படவில்லை. ஆனால் உங்களைப் பற்றிய பல நல்ல வார்த்தைகளை இங்கும் துபாயிலும் பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். மாஷா அல்லாஹ். நீங்கள் என் மேலும் என் தம்பி மகபூப் அலியின் மேலும் வைத்திருக்கும் அன்புக்கு எங்களை என்றென்று அருகதையுள்ளவர்களாக வல்ல நாயன் ஆக்கி வைப்பானாக.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு