விளக்கினை ஏற்றிவிட்டு
.. விசிறியால் வீசுவாரோ
அழுக்கினை நீக்கிவிட்டு
.. அசுத்தமும் பூசுவாரோ?
தேசியம் பேசுகிறார்
.. திருடுகள் பண்ணுகிறார்
ஆசியும் கூறுகிறார்
.. அழிவையே எண்ணுகிறார்
வேலியே பயிரைத்தான்
.. வேகமாய் மேய்தற்போல்
போலிகள் இவர்கள்தாம்
.. போதனைச் சாயத்தில்
என்ன மனிதரிவர்?
.. எளியவர்க்கு நல்லவராம்
அன்னார் நடித்திடுவார்
.. அரசியலில் வல்லவராம்
ஓரங்க நாடகம்
..ஒவ்வாத பாத்திரம்
யாரங்குக் கேட்பது
...எல்லாமே சாத்திரம்
என்னென்ன ஒப்பனை
...எளியோரின் வேதனை
எண்ணாமற் போதனை
....எளிதாய்ப்பொய் விற்பனை
அரிதாரம் இவர்களின்
....ஆதாரம் ஆனது
புரியாத பதங்களே
...பூமாலை ஆனது
இல்லாத ஒத்திகை
..எழுதாத வசனம்
பொல்லாத செய்திகள்
..பொழுதானால் விசனம்
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
.. விசிறியால் வீசுவாரோ
அழுக்கினை நீக்கிவிட்டு
.. அசுத்தமும் பூசுவாரோ?
தேசியம் பேசுகிறார்
.. திருடுகள் பண்ணுகிறார்
ஆசியும் கூறுகிறார்
.. அழிவையே எண்ணுகிறார்
வேலியே பயிரைத்தான்
.. வேகமாய் மேய்தற்போல்
போலிகள் இவர்கள்தாம்
.. போதனைச் சாயத்தில்
என்ன மனிதரிவர்?
.. எளியவர்க்கு நல்லவராம்
அன்னார் நடித்திடுவார்
.. அரசியலில் வல்லவராம்
ஓரங்க நாடகம்
..ஒவ்வாத பாத்திரம்
யாரங்குக் கேட்பது
...எல்லாமே சாத்திரம்
என்னென்ன ஒப்பனை
...எளியோரின் வேதனை
எண்ணாமற் போதனை
....எளிதாய்ப்பொய் விற்பனை
அரிதாரம் இவர்களின்
....ஆதாரம் ஆனது
புரியாத பதங்களே
...பூமாலை ஆனது
இல்லாத ஒத்திகை
..எழுதாத வசனம்
பொல்லாத செய்திகள்
..பொழுதானால் விசனம்
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
30 Responses So Far:
போலிகளால் நீண்ட நாட்கள் போட்டி போட திரானி இருக்காது !ஒரு குறிப்பிட காலம் வரைதான் வண்டி ஓடும் அதன் பிறகு புலம்பும் புலப்பமே அவர்களை அடையாளம் காட்டி விடும்
பொட்டிலடித்ததுபோல ஒரு உணர்வைத் தருகிறது இக்கவிதை.
மொழியைப் படைகளாகவும் கவிதையை ஆயுதமாகவும் கொண்டு போலிகளுக்கெதிரான யுத்தம் கவியன்பனை ஒரு தளபதியைப்போல் சித்தரிக்கிறது.
வாழ்க!
பொட்டிலடித்ததுபோல ஒரு உணர்வைத் தருகிறது இக்கவிதை
ஒரு கவிதையரங்கத்தில் வாசிக்க கூடிய அளவுக்கு மிகத்தரம் வாய்ந்த கவிதை உங்களுடையது.
கை கொடுங்கள் கவியன்பன் அவர்களே! புயல் வங்கக் கடலில் உருவாகவில்லை. உங்களின் வார்த்தைகளில் உருவாகி இருக்கிறது.
பாராட்டுக்கள்.
விளக்கினை ஏற்றிவிட்டு
.. விசிறியால் வீசுவாரோ
அழுக்கினை நீக்கிவிட்டு
.. அசுத்தமும் பூசுவாரோ?
-----------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இப்படி போலிகளை முதல் வரிகளிலேயே வாரு,வாருன்னு வாரிவிட்டார் கவிஅன்பன் காக்கா!விளக்கினை ஏற்றி விட்டு!!! ஏற்றிவிடுவதும் தூண்டிவிடுவதே எனவே இவர்கள் தீ(யதை)தூண்டிவிடுபவர்கள்.இவர்களுக்கும் சில விசிறிகளும் இருப்பதால்தான் சமூகத்தில் கூடங்களில் புழுக்கத்தால் சில பொல்லாத கொப்பளங்கள் வருகிறது.இவர்களே நோயும், நோயின் காரனியும்.
தேசியம் பேசுகிறார்
.. திருடுகள் பண்ணுகிறார்
ஆசியும் கூறுகிறார்
.. அழிவையே எண்ணுகிறார்.
------------------------------------
ஏசியும், பேசியும் திருந்தாத ஜென்மங்கள்.அதனால்தான் நாட்டில் வெளிச்சம் இல்லாமல் பல பகுதிகள் மங்கலாக தெரிகிறதோ????
ஓரங்க நாடகம்
..ஒவ்வாத பாத்திரம்
யாரங்குக் கேட்பது
...எல்லாமே சாத்திரம்.
---------------------------------
இந்த மகா நடிகர்களின் நடிப்பினால்தான் நாட்டில் பலர் ஏந்துகிறார்கள் பிச்சை பாத்திரம். ஏழைகளிடம் என்றும் கானாமல் பத்திரமாய் இருப்பதே இந்த பாத்திரங்கள் தான். ஏழைகள் நடிக்காத நிச பிச்சைகாரர்கள். இந்த போலிகளோ பிச்சைகாரர்களாய் நடிக்கும் தனவந்தர்கள். இவர்களின் நடிப்பில் நிஜபிச்சை காரர்களே பிச்சை எடுக்கனும்.
என்னென்ன ஒப்பனை
...எளியோரின் வேதனை
எண்ணாமற் போதனை
....எளிதாய்ப்பொய் விற்பனை
அரிதாரம் இவர்களின்
....ஆதாரம் ஆனது
புரியாத பதங்களே
...பூமாலை ஆனது
------------------------------
பொய் பேச்சில் கெட்டிக்காரர்கள் இவர்கள், மலடியின் மூத்தமகன் என்று சொல்லி நம்பவைப்பவர்கள். நடிப்பில் அப்பன்!அதனால்தான் ஒப்பனையும் அவர்கள் ஒப்பனை ஒத்திருக்கும்.இவர்களின் வாரிசும் அரிதாரம் பூசும் அப்பனின் (ஒப்பனின்)ஒப்பனையை மிஞ்சும் வாழயடி வாழைகள் இவர்கள். ஊரின் பணதில் வாழை இலை சாப்பாடும், அதை கொடுத்தவர்களுக்கு ஒரு கவலமேனும் ஈயாதவர்கள் இவர்கள்.
கவியன்பன் அவர்களின் கவிதையை அலசி அருமையான பின்னூட்டங்கள் தந்துள்ள தம்பி கிரவுன் அவர்களுக்கு அன்பான பாராட்டுக்கள்.
போலியே பயிரைத்தான்
.. வேகமாய் மேய்தற்போல்
போலிகள் இவர்கள்தாம்
.. போதனைச் சாயத்தில்/////
போலியே பயிரைத்தான் என்பது போலியா அது வேலியா வார்த்திபிழையா அல்லது நான் புரிந்தது பிழையா விளக்கவேண்டும் கவிஞ்ஞர் அவர்கள்
கவிதையும் சரி... கருத்தும் சரி...
போலி க்கு போலியோ சொட்டு போடுறாங்க ! :)
பதிவு / பதிவர் / கருத்தாடல்களில்
நல்லாயிருக்கு - ஜால்ரா அடிக்கிறாய்ங்க !
நல்லாயில்லை - பொறாமை பிடிச்சவய்ங்க !
பரவாயில்லை ரகம் - தலைக்கனம் பிடிச்சவய்ங்க !
பதிவுக்கு உடன் கருத்திட்டால் - வேலை இல்லாதவய்ங்க !
உரிமையோடு பாராட்டினால் - சொந்தக்காரய்ங்க !
இப்படி சொன்னாலுமா போலி ?
மொழியைப் படைகளாகவும் கவிதையை ஆயுதமாகவும் கொண்டு போலிகளுக்கெதிரான யுத்தம் கவியன்பனை ஒரு தளபதியைப்போல் சித்தரிக்கிறது.
உண்மைதான். தளபதி கவியன்பன். நல்ல புதிய பெயர்!
//// விளக்கினை ஏற்றிவிட்டு
.. விசிறியால் வீசுவாரோ
அழுக்கினை நீக்கிவிட்டு
.. அசுத்தமும் பூசுவாரோ?
ஓரங்க நாடகம்
..ஒவ்வாத பாத்திரம்
யாரங்குக் கேட்பது
...எல்லாமே சாத்திரம் ////
போலிகளைப் பற்றிய
தெளிவான கவிதை!
சகோ.கவியன்பன் அபுல்கலாம்
அவர்களுக்கு - வாழ்த்துக்கள்!
போலிகள் பற்றிய அழகு கவிப்பொழிவு!
------------------------------------
//பதிவு / பதிவர் / கருத்தாடல்களில்
நல்லாயிருக்கு - ஜால்ரா அடிக்கிறாய்ங்க !
நல்லாயில்லை - பொறாமை பிடிச்சவய்ங்க !
பரவாயில்லை ரகம் - தலைக்கனம் பிடிச்சவய்ங்க !
பதிவுக்கு உடன் கருத்திட்டால் - வேலை இல்லாதவய்ங்க !
உரிமையோடு பாராட்டினால் - சொந்தக்காரய்ங்க !//
கண்டனம் கூடி விட்டதும் தூக்கிட்டாங்க!
"போலியே பயிரைத்தான்
வேகமாய் மேய்தற்போல்
போலிகள் இவர்கள்தாம்
போதனைச் சாயத்தில்"
'போலியே' என்பது 'வேலியே' என்றுதான் இருக்கவேண்டும்.
இந்தத் தவற்றைக் கவிஞருக்குத் தனியஞ்சலில் சுட்டிக் காட்டிவிட்டேன். அவர் இன்னும் அதைப் பார்க்கவில்லை போலும்.
//'போலியே' என்பது 'வேலியே' என்றுதான் இருக்கவேண்டும்.
இந்தத் தவற்றைக் கவிஞருக்குத் தனியஞ்சலில் சுட்டிக் காட்டிவிட்டேன். அவர் இன்னும் அதைப் பார்க்கவில்லை போலும்.//
சகோ சஃபீர்/அஹ்மது காக்கா,
உங்களிருவருக்கும் முன்னாலேயே நான் கவியன்பனுக்கும் நெறியாளருக்கும் தனி அஞ்சலில் சுட்டிக்காட்டிவிட்டேன். :-)
//போலியே பயிரைத்தான் என்பது போலியா அது வேலியா வார்த்திபிழையா அல்லது நான் புரிந்தது பிழையா விளக்கவேண்டும் கவிஞ்ஞர் அவர்கள்//
“வேலியே பயிரைத்தான்” என்று திருத்தி வாசிக்க வேண்டுகின்றேன்
தட்டச்சுப்பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.
இப்பாடல் இயற்றிய வேளையில் மீள்பார்வைக்கு உட்படாமல் அனுப்பி விட்டேன்;இன்று வெளியான வேளையில் இதுபற்றித் தனிமடலிலும், அலைபேசியிலும் அன்புடன் தெரிவிக்கப்பட்டது என்பாலும் என் கவிதையின் பாலும் நேசம் கொண்டுள்ளோரை அடியேனுக்குச் சகோதரர்களாக- ஆசான்களாக அல்லாஹ் அமைத்துக் கொடுத்துள்ளான் என்று எண்ணி. அவ்வண்ணம் பிழைத் திருத்தம் அறிவித்துக் கொடுத்த அன்பின் ஆசான் மற்றும் சகோதரர்கட்கு ”ஜஸாக்கல்லாஹ் கைரன்”
உடன் இப்பொழுது அலைபேசியில் நெறியாளர் அவர்களைத் தொடர்பு கொண்டு திருத்தம் செய்து வெளியிட வேண்டிக் கொண்டேன்.
//'போலியே' என்பது 'வேலியே' என்றுதான் இருக்கவேண்டும்.
இந்தத் தவற்றைக் கவிஞருக்குத் தனியஞ்சலில் சுட்டிக் காட்டிவிட்டேன். அவர் இன்னும் அதைப் பார்க்கவில்லை போலும்.//
நானும் கவிஞர் கவியன்பன் அவர்களை அலைபேசியில் அழைத்துச்சொன்னேன்.
m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…
//போலி க்கு போலியோ சொட்டு போடுறாங்க ! :) //
சொட்டு மருந்தும் பட்டு பட்டுன்னு போடுறாங்க!!!!
அன்பின் ஆசான் மற்றும் சகோதரர்கட்கு , அஸ்ஸலாமு அலைக்கும்.
மின்வெட்டு மற்றும் இணையத்திற்கான சந்தா முடிவு ஆகியன இன்று என்னால் கணினி முன்னால் அமர முடியாமல் செய்து விட்டன. அத்னாற்றான், ஆசான், கவிவேந்தர் ஆகியோரின் தனிமடல்கட்கு மறுமொழி உடன் இடவில்லை. மன்னிக்க வேண்டுகின்றேன். காலையில் அக்கறையுடன் அலைபேசியில் டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கள் இவ்வெழுத்துப் பிழையைப் பற்றிச் சொன்ன என்னால் உடன் சென்று கணினியைத் திறந்து என் இரண்டு கண்களைக் கட்டிப் போட்டன. இன்ஷா அல்லாஹ் மின்வெட்டில்லை என்றால், இன்றிரவு பின்னூட்டங்கட்கான ஏற்புரையை வழங்குவேன். ”ஜஸாக்கல்லாஹ் கைரன்”
அலைபேசியில் உடன் தொடர்பு அடியேன் சொல்லிய வண்ணம் பிழைத் திருத்தம் செய்து இப்பாடலைப் பிழையின்றி வெளியிட்ட அன்பு நெறியாளர் அபுஇப்றாஹிம் அவர்கட்கு என் உளம்நிறைந்த நன்றி:’ஜஸாக்கல்லாஹ் கைரன்”
சாண்டி புயலின் வேகம்...ஹைட்ரஜன் குண்டுகளின் சக்தி...அதனை வார்தைகளில் கோர்த்து கவிதையாக வடித்த கவியன்பன் அவர்களின் சாதுர்யம்...அப்பப்பா திறமைகளின் குவியல் நீங்கள்....
அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவர்க்கும் “ஜஸாக்கல்லாஹ் கைரன்”
ஏற்புரை:
சுட்டும் விழிச்சுடர் ஷா.ஹமீத்
மிக மிக உண்மை. ஏமாற்றும் போலிகளின் காலம் எண்ணப்படுவது அறியாமல் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் என்று பார்ப்போம்.
கவிவேந்தர் சபீர்:
ஆஸ்தான கவிஞரின் ஆத்மார்த்தமான “தளபதி” என்னும் அழைப்புப் பெயரும் கிட்டுவது யான் பெற்ற பேறென்பேன். நீங்களும், என் ஆசான் அஹ்மத் காக்கா
அவர்களும், மு.செ.மு.சபீர்(திருப்பூர்)அவர்களும் மற்றும் டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களும் சுட்டிக்காட்டிய பிழையைப் பார்த்து மறுமொழி உடன் இடல் என் கடன் என்றாலும், மின்வெட்டு மற்றும் இணையச் சந்தா முடிவு ஆகியனவற்றால் இன்று காலை கணினி முன் எதுவும் காண இயலாமற் போனதற்கு வருந்துகிறேன்; மன்னிப்புக் கோருகிறேன்.
அன்புத்தம்பி அர.அல:
இப்பாடல் உங்களின் வலைத்தளம் “பேனா முனை” யில் இன்ஷா அல்லாஹ் பதிகின்றேன். உங்களின் வருகையும் வாழ்த்தும் என்னை மேன்மேலும் உயர்த்தும்,
உளவியல் மருத்துவர் ஜாஹிர் ஹூஸைன்:
உண்மையில் கவியரங்கத்தில் அடியேன் பாடியப் பாடல் என்பதை ஊகித்து விட்டீர்! எத்துணை அபாரமான ஊகிக்கும் ஆற்றல்!!
டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா:
காலையில் உங்களின் அக்கறையுடன் கூடிய அலைபேசி அழைப்பில், இப்பாடலில் ஏற்பட்ட தட்டச்சுப்பிழையைச் சுட்டிக் காட்டிய விதம் உங்களின் பாசப்பிணைப்பைச் சுட்டிக்காட்டியது. மேலும், மகுடக் கவிஞர்-க்ரவுன் அவர்கட்கு என் சார்பாக முற்கூட்டியே பாராட்டுகள் வழங்கிய உங்களின் நல்லுள்ளம் பார்த்து, என் வாழ்த்து!
மகுடக் கவிஞர்-க்ரவுன்:
அன்பும் ஆதரவும் என்றும் உங்களின் அடுக்கடுக்கானப் ”பா”ராட்டுகளில் மிளிர்கின்றன; அடுக்குமொழி வசனங்களில் ஒளிர்கின்றன!
அன்பு நெறியாளர் அபுஇப்றாஹிம்:
பதிவுக்கு நன்றி; கருத்துரைகள் என்னை ஊக்கப்படுத்தும் விதம்; அற்புதம்’; உங்களின் சொற்களின் ‘பதம்”.
தொழிலதிபர் மு.செ.மு. சபீர் (திருப்பூர்):
தட்டச்சுப்பிழையால் “வேலி”, “போலி” யானது; பிழை கண்டு திருத்தியமைக்கு நன்றி.
அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் சாலிஹ்:
உங்களின் மனம் பொருத்தம் கண்டு, கவிவேந்தர்- ஆஸ்தான கவிஞர்-சபீர் அவர்களின் பின்னூட்டத்தில் கண்ட “தளபதி” என்னும் அழைப்புச் சொல்லுக்கு அடியேன் தகுதி உடையவனாக மீள்பார்வையுடன் நீங்கள் பரிந்துரையும் செய்திருப்பதில் எனக்கு வருத்தம் இல்லை; உங்களின் பொன்மனம் சொல்வதை ஏற்கும் என்மனம்.
மார்க்க போதகர் அலாவுதீன்:
மார்க்கத்திற்கு முரண்பாடில்லாத என் பாடல் உங்களால் புகழாரம் பெற்றிருப்பது, அடியேன் எடுத்து வைக்கும் கவனமான அடிகட்குக் கிட்டிய அங்கீகாரம்.
இலண்டன் இளங்கவிஞர் மு.செ.மு.ஜெஹபர் சாதிக்:
நீங்கள், கவிவேந்தர் சபீர் மற்றும் தொழிலதிபர் சபீர்(திருப்பூர்) ஆகியோர் வனைந்த “அவனாயிரு-இவனாயிரு-எவனாயிரு” வரிசையில் என் பாடல் “போலிகள்” சமுதாயச் சாடல்.
அன்பின் ஆசான் அதிரை அஹ்மத் காக்கா:
தட்டச்சுப்பிழையைச் சுட்டிக்காட்டினீர்கள்; மிக்க நன்றி; உடன் தங்களின் மடல் காண இயலாமல் மின்வெட்டு மற்றும் இணையச் சந்தா முடிவு என்னைக் கட்டிப்போட்டன. தவற்றுக்கு வருந்துகிறேன். இனிமேல், மீள்பார்வைக்குப் பின்னரே பதிவுக்கு அனுப்புவேன். “பதறாத காரியம் சிதறாது|” பட்டறிவின் பாடம்.
கல்வியாளர் யாசிர்:
புயல் கரையைக் கடந்து விட்டது அல்ஹம்துலில்லாஹ்.!
செயல் நலமாகச் செய்யுள் எனும் பாடல் செய்யும் இத்தகைய சாடல்!
அப்பாடா! மின்வெட்டும் இல்லாமல் தப்பித்தேன்; ஏற்புரையைத் தட்டச்சுச் செய்து விட்டேன், அல்ஹம்துலில்லாஹ்!!
hmmmmmmmmmmm excellent............ nice poetry....
mr abdul kalam bhai........... u wrote a poetry..?.. all people's thinking reply..... (comment) came in another Duplicate poem.. hahahahh haahah..
போலியே ..பயிரை மேய்ந்தது ,,,
ஆம் ..போலியான வேலி..கவிஞரின்
கருத்தில் குற்றமில்லை ..போலிகள்
என்றுமே அதன் வேலையை செய்வதில்லை
கவிதைக்கு கவியன்பன் எழுத்தழகு ...!
Post a Comment