Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேசும் படம் தொடர்கிறது ! 30

அதிரைநிருபர் பதிப்பகம் | October 14, 2012 | , ,


அதிரைநிருபரில் மொழி கற்க மொட்டுக்களுக்கும், மழலை மொழி கற்றரிய ஆரம்ப பாடமும் இங்குண்டு, அதனை போற்றிச் சீராட்டும் பண்புகளுடங்கிய மூத்தோர் தம் குணமும் உண்டு இங்கே. கற்றரிந்த மேதைகளும், அறிஞர்களும் சரளமாக உலாவரும் நந்தவனத்தில் எங்களைப் போன்ற கண்களால் கண்டதையெல்லாம் எழுத முடியாவிட்டாலும் காட்சிகளாக படைத்திட மிகச் சரியான தளமாக இது இருப்பதில் எனக்கு மட்டுமல்ல என்னை போன்ற வாசகர்களுக்கும் பெருமையே..


நார்த்தங்காயின் முகம் சீவி உப்பு புளி பட்டை மிளகாய் தினித்து பிழிந்தெடுத்து சார் குடித்தால் எப்படி இருக்கும். 


அதிரைப்பட்டினத்தில் மழை பெய்தால் நெல் விளையும் வெயில் அடித்தால் உப்பு விளையும்.


விபரம் தெரிந்த நாட்களில் இருந்து கடலுக்கு போகும்போது இந்த பாலத்தை கண்டு வருகின்றேன் இதன் வயது தெரியவில்லை. இப்போது இந்த பாலத்தை பார்த்தால் பரிதாபமா இருக்கு !


இந்தப்படத்தில் உள்ள டெக்னிக் என்ன தெரியுமா? காட்ட வேண்டிய பொருள் மட்டும் தெளிவா தெரியும் மற்றவை எல்லாம் மங்கலாக (அவுட் ஆஃப்  ஃபோகஸ்)   தெரியும் இதுபோன்ற போட்டோவை பார்ப்பவர்களின் கவனம் அந்த எலுமிச்சையில் மாட்டுமே இருக்கும். 


கிணறு வெட்டினோம் மரம் வளர்க்க இப்போ மரத்தை வெட்டினோம் இருக்கும் கிணற்றை பாதுகாக்க.


கொக்கி ஓடு, நாட்டு ஓடு இரண்டும் சேர்ந்த வீடு இப்போ இதுபோன்ற வீடுகளை பார்ப்பது மிக அரிதாகிவிட்டது, எல்லாம் சரி பக்கத்து வீடு யார் வீடு!? 


இந்த பள்ளி கூடத்தில்  படித்தவங்க எல்லாம்  கொஞ்சம் பழைய நினைவுகளை நினைவு கூறுங்களேன், வாக்காளர் அட்டை இல்லாதோர் இங்கே வாருங்கள் என்று வரவேற்கும் கூடமிது.


இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியில் இங்கே படிச்சவங்க கொஞ்சம் பழசை நினைவு கூறுவதோடு, சுவர் ஓரமாக இருக்கும் பள்ளி கூரையை யார் உடைத்தது என்று கேட்கவில்லை ஆனால அதை சரி செய்து கொடுத்துவிடுங்கள் ப்ளீஸ்!.


நமது ஊரில் வாகன குறுக்கீடு இல்லாமல் ஃபோட்டோ எடுப்பவருக்கு இந்திய ரூபாய் பல்லாயிரம் பரிசு அறிவிக்கலாம். 


அதிரையின் கட்டிடக் கலைக்கு முத்தாய்ப்பாக அமைந்த அழகிய பள்ளிவாசல் இது, ஏராளமானவர்களின் உள்ளக் கிடக்கையில் அசைபோடும் நினைவுகளுக்கு உறைவிடம் இந்தப் பள்ளிவாசல் அதன் அருகிலிருக்கும் குளத்தில் தெளிந்த நீர் இருந்தால் இதன் அழகு இரட்டிப்பாகும்.


இந்த திறந்த வழி எங்கே என்று என்னிடம் கேட்டுவிடாதீர்கள் ! உரிமையுடைய நிர்வாகம் சுவற்றை நிமிர்த்தி வைத்திருப்பதை இன்றைய நிலையில் அங்கே சென்று பார்ப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். 

Sஹமீது

30 Responses So Far:

Yasir said...

கொள்ளை அழகு உங்கள் கேமிராபட்டவிடமெல்லாம் மின்னுகிறது,
ஏன் உங்களுக்கு இந்த ஓர வஞ்சனை கேமராவை கொஞ்சம் திருப்பி இருந்தால் மரைக்கா வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் எங்க வூடு கொஞ்சம் நல்லா தெரிஞ்சு இருக்கும் அல்ல....வெகஷன் வேட்கையை தணிக்கும் படங்கள்....சூப்பர் காக்கா

Ebrahim Ansari said...

ஊரில் இருக்கும் போது காமிராவைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு சுற்றும்போதே எனக்குத்தெரியும் இப்படி சில மூன்றாம் கண்கள் திறக்குமென்று.

சுடுதண்ணி மரைக்காயர் வீடு இன்றுள்ள நிலையைப் பார்க்கும்போது அன்று எங்களின் சிறுவயதில் இந்த வீட்டில் விடிய விடிய மவுலூது ஓதப்பட்டதும், மறுநாள் காலையில் ஒமளிலும், மல்லா சட்டியிலும் நார்சா சோறு ஊர் முழுதுக்கும் வழங்கப்பட்டதும் தேவை இல்லாமல் நினைவுக்கு வருகிறது.

இதே போல் முத்துப் பேட்டையிலும் முன் காலத்தில் புகழ்பெற்ற மவுலூது ஓதிக்கொண்டிருந்த ஒரு வீடும் இன்று பாழடைந்து போய் கிடக்கிறது.

இவை ஏன்? Anything Fishy?

Yasir said...

//இவை ஏன்? Anything Fishy?// சிம்பிள் மாமா சிர்க்கு சிறப்பை சரியவைக்கும்,சீர்குலைக்கும்

Shameed said...

Yasir சொன்னது…

//ஏன் உங்களுக்கு இந்த ஓர வஞ்சனை கேமராவை கொஞ்சம் திருப்பி இருந்தால் மரைக்கா வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் எங்க வூடு கொஞ்சம் நல்லா தெரிஞ்சு இருக்கும் அல்ல//


எந்த பேங்க்கில் கேமராவை அடகு வைத்தேன் திருப்புவதற்கு

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஹமீதாக்கா சலாமுடன்,
இப்படி படத்தெ போட்டு தட்டி தொட்டு பதிய வச்சுட்டியலே!

நார்த்தங்காய்: அதன் சாரும் சரி வடமாய் மாறிய ஊறுகாயும் சரி மகத்துவமே தனி.

விளையும்: ஆமாம் இங்கே உப்பும் நெல்லும் விளையும் தேர்தல் வந்தால் ஒற்றுமையும் குலையுதே!

பாலம்: இது அன்னிய சக்திகளின் விளைவுகளை எதிர்கொள்ளும் எலும்புக் கூடு.

டெக்னிக்: இதெல்லாம் உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஐட்டம் அழகா தெரியுது வாய் ஊறுது. அது போதும் எங்களுக்கு!

கிணறு: பாதுகாப்புக்கு போட்ட மரங்கூட இளைய சக்திகளால் அது கிணற்றுக்குள்ளே போகக் கூடுமே!

நாட்டு ஓடு வீடு: எந்த வீடானாலும் கிடைக்காத வீடு. சகோ யாசிரை வாங்கி போட சிறந்த வீடு.

பள்ளிக்கூடம்: இங்கே படிக்கவே இல்லை. வாக்காளர் அட்டை வாங்கி என்ன செய்ய? வாக்கு பெற்றவர்கள் கைவிரிப்பவர்களாக இருக்கார்களே!

இமாம் சாஃபி பள்ளி: இங்கேயும் படிக்கலை அதனாலெ அந்த செலவுக்கெல்லாம் நான் வரலை.

பல்லாயிரம் பரிசு: சஹர் நேரத்திலே{கரண்டு தான் கண்டிப்பா இருக்காது} மெழுகுவர்த்தியோடு வந்து (காத்திருந்து) வாகன குறுக்கிடு இல்லாமெ போட்டா எடுத்து பரிசை பெறுவோமே! ஆனா வண்டிப் பேட்டை பள்ளி கம்பீரமாய் காட்சி அளித்ததை கூட இன்று தெரிய விடாமெ கட்டிடம் குறுக்கிடுதே!

அதிரைத் தாஜ்மஹால்: இங்கே நீர் நிரம்பினால் அருகிலிருக்கும் ஆழ்கிணறுகள் இதன் நீரை அபகரிக்கும், அது வற்றினால் விளையாட்டு வீரர்களால் நிரம்பி இருக்கும்.

சித்தீக் பள்ளி வழி:
அது முன்பு தேங்காய் வாடியாக இருந்து அது வழியாகி பள்ளி இடமென நிரூபித்து தேங்காய் மரமாய் மொளச்சுருச்சு, அது சுவர்களால் பாதுகாக்கப் பட்டிருக்கு! இப்ப தண்ணி ஊத்த மட்டும் அனுமதி!

Yasir said...

//வீடு. சகோ யாசிரை வாங்கி போட சிறந்த வீடு.// அந்த இடம் கிடைத்துவிட்டால் எனக்கு ரொம்ப நல்லதா இருக்கும் முயற்ச்சியும் செய்தோம் முடியவில்லை..அந்த கதை உங்களுக்கு தெரியுமா...அந்த மரைக்காவீடு தஞ்சையை ஆண்ட ஒரு அரசனால் மரைக்கா அவர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்ட வீடு அதனை அவர்கள் ஆண்டு(வாழ்ந்து) அனுபவிக்கலாம் ஆனால் விற்கமுடியாது...இப்ப அங்கே இருந்த மரைக்கா குடும்பங்கெல்லாம் வேறு தெருவிற்க்கு சென்றுவிட்டன...இப்ப இங்கே குட்டியும் குஞ்சுமா இருப்பது பெருச்சாலிகளும்,தேள்களும்,கீரிப்பிள்ளைகளும்தான்......ஒரு காலத்தில் ரொம்ப ரம்மியமாக இருந்த வீடு இன்று நாதியற்று கிடைக்கின்றது....காலம் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கின்றது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நண்பர் யாசிர்,
வரலாறு தெரிகிறது,
காலங்களும், சட்டங்களும் அதை வென்று அந்த இடம் உங்களுக்கே ஒருகாலம் கிடைக்க ஆவல். இன்சா அல்லாஹ்!

sabeer.abushahruk said...

ஹமீது,

உங்கள் புகைப்படங்கள் ஒன்று அழகாயிருக்கின்றன அல்லது அன்பாயிருக்கின்றன.

அன்பாய்? அதெப்படி?

நம்மூரின் தெருக்களையும் பள்ளியையும் பாலத்தையும் இத்தனை தத்ரூபமாய்க் காட்டியிருக்கிறீர்களல்லவா இவாற்றைக் காணும்போது மனத்துள் நிலவும் உணர்வு அன்பல்லாது வேறென்ன?

எலுமிச்சையில் பயன்படுத்தியிருக்கும் ட்டெக்னிக் டெப்த் ஆஃப் ஃபீல்டுக்கான செட்டிங், சரியா?

நைஸ் வொர்க் ஹமீது.

(பொட்டி மடையானை இப்படியாவது சுட்டிருக்கலாம். நமக்குள்ள பேசிக்கிட்டது யாசிர்ட்ட யார் சொன்னது?)

அப்துல்மாலிக் said...

ஆஹா உள்ளம் கொள்ளைப்போகுதே இதையெல்லாம் கண்டு... வாழ்த்துக்கள் சகோ.......

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமீத் காக்கா.

முதல் படத்தையும் இரண்டாம் படத்தையும் பார்த்தவுடன் நாக்கு ஊரிடுச்சி.

யாசிர் தங்களின் வீட்டிற்கு அடுத்த வீட்டிற்கு இவ்வளவு வரலாறு இருக்கா? இப்ப அங்கே குட்டியும் குஞ்சுமா இருக்கும் பெருச்சாலிகளும்,தேள்களும்,கீரிப்பிள்ளைகளை சேர்த்து ஹமீத் காக்காவின் கேமராவில் சிக்க வைத்திருக்கலாமே.. அட மிஸ்ஸாயிடுச்சே..

அனைத்து புகைப்படங்களை காணும்போது, ஊர்லே இருந்தே ஊர் சுற்றிய உணர்வு.

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//எலுமிச்சையில் பயன்படுத்தியிருக்கும் ட்டெக்னிக் டெப்த் ஆஃப் ஃபீல்டுக்கான செட்டிங், சரியா?//

மிகச்சரியோ


//(பொட்டி மடையானை இப்படியாவது சுட்டிருக்கலாம். நமக்குள்ள பேசிக்கிட்டது யாசிர்ட்ட யார் சொன்னது?)//

யாரோ (பொட்டி மடையானை) சுட்டு யாசிர் கிட்டே குடுத்துட்டாங்கோ!!!

Shameed said...

Yasir சொன்னது…

//உங்களுக்கு தெரியுமா...அந்த மரைக்காவீடு தஞ்சையை ஆண்ட ஒரு அரசனால் மரைக்கா அவர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்ட வீடு அதனை அவர்கள் ஆண்டு(வாழ்ந்து) அனுபவிக்கலாம் ஆனால் விற்கமுடியாது//

உங்களுக்கு தெரியுமா...அந்த மரைக்கா கடற்கரைதெரு மையத்தாங்கரைக்கு அவர் பெயரில் பட்ட எடுத்து வைத்துள்ளார் ஆனால் அவரால் அவரது வீட்டிற்கு பட்டா எடுக்க முடியவில்லை இது எப்படி இருக்கு!!!!

Ebrahim Ansari said...

//மையத்தாங்கரைக்கு அவர் பெயரில் பட்ட எடுத்து வைத்துள்ளார் //

பட்டா எடுத்து வைத்துள்ளாரா ? கொஞ்சம் இலக்கணம் சொல்லு. நிகழ் காலமா? இறந்த காலமா?

Shameed said...

தாஜுதீன் சொன்னது…

//அனைத்து புகைப்படங்களை காணும்போது, ஊர்லே இருந்தே ஊர் சுற்றிய உணர்வு.//

வலைக்கும் முஸ்ஸலாம்

ஊரில் பலரும் பல விசயங்களுக்கு துப்பில்லாமல் துப்பு கொடுத்துக்கொண்டிருகிறனர் .ஆனால் நீங்கள் எனக்கு அந்த மறைக்க வீட்டை போட்டோ எடுங்கள் என்று துப்பு கொடுத்தது இங்கு அந்த போட்டோ தான் ஹை லைட்

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…

//பட்டா எடுத்து வைத்துள்ளாரா ? கொஞ்சம் இலக்கணம் சொல்லு. நிகழ் காலமா? இறந்த காலமா? //

நிகழ்காலத்திற்கு இவர் vao விடம் மையத்தான்கரைக்கு இவர் பெயரில் பட்டா போட்டு வைத்துள்ளார்

அலாவுதீன்.S. said...

அழகிய புகைப்படங்கள். வாழ்த்துக்கள்!

KALAM SHAICK ABDUL KADER said...

ஊறுகாய்க்கு விருப்பம்
உள்ளமும் கிளறும்
ஊருகின்ற தெருக்கள்,
உப்பளம், கிணறு

கெட்டுச் சிதையும்
கட்டிடச் சொத்தை,
சுட்டும் விழியால்
சுட்டவுன் வித்தை

தப்படித்த குளத்தில்
தண்ணீரும் வராமல்
எப்படித்தான் வளரும்
என்னூரின் மரமும்

யான்படித்த பள்ளியின்
ஞாபகத்தைச் சொல்லியே
தேன்குடித்த இன்பமாய்த்
தேடுதேயென் உள்ளமே


இறையில்லம் எழிலறிய
இயலாமல் மனைகளாலே
மறைத்துத்தான் எழுப்புவதேன்
மதியாத வினைகளாலே


Ebrahim Ansari said...

வைத்துள்ளார் ஒ கே. வைத்து, உள்ளாரா?

அதிரை சித்திக் said...

அழகிய புகை படம் ...
தம்பி யாசிர் கூறியது போல்
வெகேசன் வேட்கையை தணிக்கும்
படங்கள் ..பின்னூட்டங்கள் மூலம்
அன்சாரி காக்கா கூறிய தகவல்
அதற்கு ஹமீது காக்கா கூறிய
மைய வாடி பட்டா விவரம் ...
நல்ல சுவராஸ்யம் ...
தந்தை மகன் உறவு என்ற தொடரில்
ஹமீது காக்காபின்னூட்டம்
இட்டு இருந்தீர்கள் அந்த
உறவு மூன்றாம் கண் மூலம்
படைப்பு தருவேன் என்றீர்கள்
எதிர் பார்க்கலாமா..?

Shameed said...

அதிரை சித்திக் சொன்னது…
//ஹமீது காக்காபின்னூட்டம்
இட்டு இருந்தீர்கள் அந்த
உறவு மூன்றாம் கண் மூலம்
படைப்பு தருவேன் என்றீர்கள்
எதிர் பார்க்கலாமா..? //

ஒ அதுவா அது உங்கள் வீடு பேசும் படத்தில் வரும் (நடுதெருவின் நடுத்தெரு போட்டோ பார்க்கவில்லையா ?)என்பதை அப்படி சொல்லி இருந்தேன்

ZAKIR HUSSAIN said...

நார்த்தங்காயும், எலுமிச்சையும் இர்ஃபான் அலி பக்கத்தில் இருக்கும்போது எடுத்த படமா? [ அவர்தான் எப்போதும் ப்ரக்னன்ட் மாதிரி சாப்பிடுவார்]

மரைக்கா வீட்டை நானும் போட்டோ எடுத்தேன் என்று ஞாபகம்.

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும் சவன்னா!!
எனக்கு நன்றாக் நினைவு இருக்கிறது, உன் ஆரம்ப காலங்களில், நீ அமெச்சூர் புகைப்படக் கலைஞனாக இருக்கும் போது, பேரா.இராஜமாணிக்கம் சார் அவர்கள் தன் வீட்டு விசேசத்திற்கு என்னைப் புகைப்படம் எடுக்க அழைத்தபோது, என்னால் அங்கு செல்லமுடியாத சூழ் நிலையில் உன்னை வேண்டிக்கொண்டு நான் பயன்படுத்தும் Canon காமிராவை உன்னிடம் கொடுத்துப் புகைப்படம் எடுக்கச் சொன்னேன். உன் புகைப் படம் எடுக்கும் திறனைக் கண்டு பேராசிரியர் உனது நண்பராக்வே மாறிவிட்டார்.
இப்போது நினைத்தாலும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உனது புகைப்படக்கலைத் திறமை எனக்கு நன்கு பரிச்சயம். ஆனால் உனது அருமையான எழுத்து நடை தான் என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. நல்ல ஊடகம் கிடைத்துள்ளது. உனது ஆக்கம் மென்மேலும் வளரட்டும். எனக்குப் பெருமையே.
wassalam.
N.A.Shahul Hameed

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அதிரையின் கட்டிடக் கலைக்கு முத்தாய்ப்பாக அமைந்த அழகிய பள்ளிவாசல் இது, ஏராளமானவர்களின் உள்ளக் கிடக்கையில் அசைபோடும் நினைவுகளுக்கு உறைவிடம் இந்தப் பள்ளிவாசல் அதன் அருகிலிருக்கும் குளத்தில் தெளிந்த நீர் இருந்தால் இதன் அழகு இரட்டிப்பாகும்.//

அது மட்டுமா ? அதிரைக்கு சிகரமாய் மிளிரும் இந்தப் பள்ளியில் கம்பீரமாக கோலோச்சிய பெரியவர்களை மறக்கத்தான் முடியுமா ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆனால் உனது அருமையான எழுத்து நடை தான் என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. நல்ல ஊடகம் கிடைத்துள்ளது. உனது ஆக்கம் மென்மேலும் வளரட்டும். எனக்குப் பெருமையே.//

NAS சார்: எங்களுக்கும் பெருமையே !

S.O.S.தாஜுதீன் சாகுல் ஹமீது said...

இதையெல்லாம் காணும்போது, ஊர்லே இருந்தே ஊர் சுற்றிய உணர்வு.
அழகிய புகைப்படங்கள். வாழ்த்துக்கள்!

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அனைத்து புகைப்படமும் அருமையான கிளிக்... அசத்தயுள்ளீர்கள் எனக்கும் மிகுந்த அர்வம் இதுபோன்று வித்தியாசமான பாணியில் கேமராவிற்குள் இதுபோன்ற புகைப்படங்களை திணிக்க

படம் 1 & 4 : சுபுஹனல்லாஹ் பசுமையான தோற்றம்

படம் 2 : நெற்வயல் போல் காட்சியளிக்கும் உப்பளம் ("கிளிக்"கியவருக்கு ஒரு பாக்கெட் உப்பு பொட்டலம் கொடுங்கப்பா)

படம் 3 : மக்கள் அதிகம் நடமாடும் சாலையோர பாலங்களையே கண்டுகொள்ளாத அரசு இதுபோன்ற பாலங்களை கண்டு கொள்ளுமா என்ன?...(இவ்விடத்தில் அரசியல் பேசாதீர்! என்று யாரோ முனங்குவது கேட்கிறது)

படம் 5 : ஒரு காலத்தில் CMP வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நேரத்தில் இக்கிணற்றில் தண்ணீர் வழிந்தோடும் அதில் பெல்டியடித்து விளையாண்டது இன்னும் நினைவில் மறையாத ஒரு நினைவு

படம் 6 : \\ எல்லாம் சரி பக்கத்து வீடு யார் வீடு!? // சரியாக புடிக்காமல் யாரு வீடு என்ற கேட்டால் அதான் நம்ம யாசிர் காக்காவிற்கு கோபம்.

படம் 7 : இரண்டாம் நம்பர் பள்ளியின் தோற்றம் காண்பதற்க்கு அழகு பள்ளிக்கூடத்திற்க்கு அடித்த பெயின்ட் முன்னே இருக்கும் காம்பவுண்ட்க்கு அடிக்க மறந்து விட்டார்களா? அல்லது பெயின்ட் தீர்ந்து விட்டதா? அடித்தால் மட்டும் என்ன திரும்ப படப்போஸ்ட் மற்றும் அரசியல் அறிவிப்பு நோட்டிஸ்களால் திரும்பவும் அவ்விடத்தை அசிங்கமாக்குவார்கள் என்று என்னியிருப்பார்களோ?

படம் 8 : இமாம் ஷாஃபி பள்ளி நான் பயின்ற பள்ளி பல நினைவலைகளை கண்முன் கொண்டுவந்த ஹமீது காக்காவிரற்க்கு நன்றி

படம் 9 : நெடுஞ்சாலைத்துறைக்கு இம்மரமிருப்பது தெரியவில்லையா இருவழி சாலை என்பது அந்த மரவியாபாரிக்கு எடுத்து சொல்லிருகலாமே ஹமீது காக்கா (எதற்கு வம்புன்னு கண்டுக்காம வந்துடிங்களா? ஹா...ஹா..)

படம் 10 : செக்கடிப்பள்ளியின் என்றென்றும் ஜொலிக்கும் கிளிக்

படம் 11 : எங்கேயோ பார்த்த இடம் இப்பொழுது முழுவதும் மாறுபட்ட இடம் மேலும் சர்ச்சைக்குள்ளான இடம் (எத்தனை "இடம்" அடுக்கடுக்காக வந்தாலும் அது அல்லாஹ்விற்க்கு சொந்தமான இடமே...) அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வோம்

வேறு வேறு கோணங்களில் பல பல புகைப்படங்களை எதிர்பார்த்தவனாக..

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//நார்த்தங்காயும், எலுமிச்சையும் இர்ஃபான் அலி பக்கத்தில் இருக்கும்போது எடுத்த படமா? [ அவர்தான் எப்போதும் ப்ரக்னன்ட் மாதிரி சாப்பிடுவார்]//


இப்போ ஊர் போய் இருந்தப்போ நமக்கு புல் கம்பெனி இர்பான் அலி காக்காதான் அதன் தாக்கம்தான் இந்த எலுமிச்சை


நார்த்தங்காய் போட்டோவெல்லாம்

Shameed said...

N.A.Shahul Hameed சொன்னது…
//உன் புகைப் படம் எடுக்கும் திறனைக் கண்டு பேராசிரியர் உனது நண்பராக்வே மாறிவிட்டார்//

பேரா.இராஜமாணிக்கம் சார் அவர்கள் இப்போதும் கூட எங்கு கண்டாலும் உரிமையுடன் டேய் சாவன்னா நல்ல இருக்கியாப்பா என்று நலம் விசாரித்துவிடுவார்

Shameed said...

அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது
//வேறு வேறு கோணங்களில் பல பல புகைப்படங்களை எதிர்பார்த்தவனாக//

இன்ஷா அல்லாஹ்

Shameed said...

இங்கு வந்து கருத்து சொல்லி ஆர்வமூட்டிய அனைவருக்கும் என் நன்றியும் துவாவும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு