Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பயணங்களில் பரவசம்...! குறுந்தொடர் - 3 27

அதிரைநிருபர் பதிப்பகம் | October 19, 2012 | ,


செங்கோட்டை ரோட்டில் உள்ள ரஹ்மத் ஹோட்டலுக்கு மாலை 6:30 மணிக்கு வந்தடைந்தோம்.'டீ வடையுடன்'பகல் சாப்பாட்டை (அப்போது கிடைக்காததால்) நிறுத்திக் கொண்டதால் பசியின் தாண்டவம் அதிகமானது. பசிக்கு தோதாக நாட்டுக்கோழி கடையில் ‘சாப்பாடு ரெடியாக இன்னும்  அரைமணி நேரமாகும்’ என்று சொன்னார்கள்.




பக்கத்தில் இருந்த பழக்கடையில் நம்ம விவரமான(!!?) நண்பர் ஐந்து கிலோ மங்கனம் பள்ளி மாம்பழம் வாங்கி கடைக்காரரிடம் தோல் சீவ சொன்னார். நாங்களும் 'முதல் பசிக்கு இதை நண்பர் தயார் செய்கின்றார்’ என்ற எண்ணத்தில் மாம்பழம் தோள் சீவி முடித்ததும் மாம்பழத்தை சாப்பிட ரெடியானோம்.

நண்பரோ உரத்தக் குரலில் “யாரும் மாம்பழத்தை இப்போ தொடக்கூடாது” என்று கண்டிஷன் போட்டு விட்டார்.

இதற்கிடையே ‘கோழி ரெடி’ என்று சாப்பாட்டு கடை உள்ளேயிருந்து வந்த சத்தம் காதில் விழும் முன்னர் வயிற்றுக்கு தெரிந்து விட்டது. அவ்வளவுதான் ‘ஒளியை விட வேகமா !’ கடை உள்ளே நுழைந்தோம் கடைக்கார பாய் அருகில் வந்து அன்புடன் “என்ன சாப்புடுரிய?” என்று கேட்டதும் விவரமான(!!?) நண்பர் ஆர்டர் செய்தார்.

“என்னென்ன வெரைட்டி இருக்கோ அதுலே எல்லாம் இரண்டு செட்டு கொண்டு வாங்க” என்று ஆர்டர் கொடுத்தார்.

நானும் அவரிடம் “இதெல்லாம் அதிகமல்லவா?” என்று கேட்டதற்கு.

அவரோ “காலையில் சாப்பிட்டது  எங்கே போனது என்றே தெரியவில்லை, பகலும் சாப்பிடாமல் ஏறாத மலை  எல்லாம் ஏறி இறங்கியாச்சு அதனால் ஒட்டகம் தண்ணீர் குடிப்பதுபோல் இப்போ நாம் சாப்பாட்டை போட்டுத் தாக்க வேண்டியதுதான்  யாரும் மிச்சம் இருக்கும் என்று கவலைபட வேண்டாம் நான் இருக்கேன்”  என்று ஆறுதல் வேறு சொல்லிக் கொண்டார்.

அவ்வாறு சொன்னதோடு  அல்லாமல் “எல்லோரும் நல்லா சாப்பிடுங்கோ நெஞ்சு கரிப்பு நெஞ்சு எரிச்சல் செரிமான கோலருக்கெல்லாம் ஒரு நல்ல மருந்து வைத்துள்ளேன்” என்று சொல்லி மேலும் மேலும் சாப்பிடும் வேகத்தையும் தூண்டினார்.

சிறிது நேரத்தில் வந்திறங்கியது நாட்டுக்கோழி வறுவல் பெரட்டல் பொரியல் மற்றும் முன்பே ஆர்டர் செய்த வீச்சு பரோட்டவும்  படு-சூடாக டேபிலுக்கு மேல் வந்து இறங்கியது.  கரும்பு காட்டுக்குள் புகுந்த யானையை  போல் கோழியும் பரோட்டோவையும்  துவைத்து எடுத்தோம் மேலும் விரல் இடுக்கில் சிக்கி சின்ன பின்னம் ஆனது. வீச்சு பரோட்டாவெல்லாம் சிறிது நேரத்தில்  கொத்துப்பரோரோட்டாவானது அங்கிருந்த ஆனம் தந்த சுவையும் கோழியின் ருசியும் கண்ணா பின்னா வென்று  உள்ளே சென்றது.

இதற்கிடையோ பக்கத்து டேபிளில் சாபிட்டுக் கொண்டிருந்ததை கவனித்த நண்பர் கடைக்கார பாயை  அழைத்து “அந்த டேபிளில் என்ன அது வித்தியாசமா இருக்கே” என்று கேட்டார். 

சாப்பட்டுக் கடை பாய் “அது நாட்டு கோழியின் ஈரல்  இரைப்பை பெரட்டல்” என்றார்.

“அதில் இரண்டு ப்ளேட் கொண்டு வாருங்கள்” என்று நண்பரும் ஆர்டர் கொடுத்தார்.

மேற்சொன்ன அனைத்தையும் சாப்பிட்டு முடித்ததும் “இந்தாங்கப்பா நான் கொண்டு வந்த செரிமான மருந்து” என்று சொல்லி தோள் சீவிய மாம்பழத்தை டேபிளில் வைத்தார் குடலில் சந்து பொந்துகளில் இருந்த கொஞ்ச நஞ்சம்   இடத்தையும்  இந்த மாம்பழம்  போய் அடைத்துக் கொண்டது.

சாப்பிட்டு முடித்தவுடன் புறப்படுவதற்காக காரில் ஏறி அமர்ந்ததும் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தேன் ‘கார் ஸ்டேரிங் சற்று முன்னே வந்ததுபோல் இருந்தது’ சற்று நிதானமாக கவனித்ததும் தான் தெரிந்தது ‘அட! நம் வயிரு தான் முன்னே வந்து  ஸ்டேரிங்கை டச் செய்து கொண்டிருந்தது’. சரி, டிரைவர் சீட்டை கொஞ்சம் பின்புறம் தள்ளி வைப்போம் என்று சீட்டை பின்புறம் நகர்த்தினேன் பின்னால் இருந்த நண்பர் “ஏம்பா சீட்டை நகத்துறே சீட் வயிற்றில் வந்து தட்டுது" என்றார். ஆகா நமக்கு மட்டும் அல்ல இந்த பிரச்னை எல்லோருக்கும் தான் என்று நினைத்துக் கொண்டு கார் வேகம் எடுத்து குற்றாலத்தை நோக்கி புறப்பட்டது.

இரவு நன்றாக தூங்கி முழித்து குற்றால அருவிகளில் தண்ணீர்  இல்லாததால் எங்கு போகலாம் என்று யோசிக்கையில் நண்பர் சொன்ன ‘அச்சன் கோயில் அருவி போகலாம்’ என்று முடிவானது.  பெயரை கேட்டதுமே இது கேரளா என்பது ‘மனசிலாயி’ அச்சன் கோயில் அருவிவியை நோக்கி இன்னோவா விரைந்தது. தமிழ்நாடு எல்லை முடிந்து கேரளா எல்லை தொடங்கியதும் சொல்லி வைத்தாற்போல் பசுமையும் குளுமையும் கொஞ்சி குலாவிக் கொண்டிருந்தது மலைப் பாதையில் வளைவு நெளிவுகளில் வண்டி வளைந்து நெளிந்து போய்க் கொண்டிருந்தபோது  ஒரு இடத்தில் மேகமூட்டம் ரோட்டை மறைத்து பாதையே தெரியாமல் வண்டியை நிறுத்திவிட்டேன் கூட வந்த ஏர்வாடி(!!!) புகழ் நண்பர் சொன்னார் “நேர் வலிதான்ம்பா நேரா போ… போ…” என்றார் இன்னொரு நண்பர் சொன்னார் “ரைட்டில்  திருப்பு” என்றார்.

பணி மூட்டம் கொஞ்சம் குறைந்ததும்  அரைகுறையாக தெரிந்த ரோட்டைப் பார்த்தால் ஹேர் பின்வளைவு என்பது புரிந்தது கடைசி சீட்டில் இருந்த நண்பர் புலம்ப ஆரம்பித்தார்  “ஆண்டவன் காப்பதுனான் இவனுவ பேச்சை கேட்டு நீ வண்டியை திருப்பி இருந்தா நேற்று இரவு சாப்பிட்ட கோழிதான் கடைசி சாப்பாடா இருந்து இருக்கும்” என்றார்.






சரி இந்த இடம் நல்ல லொக்கேசனா இருப்பதால் காரை ஓரம் கட்டிவிட்டு மூன்றாம் கண்ணை கையில் எடுக்கவும் சூரிய ஒளி மூடி  மேகத்தின் ஊடே புகுந்து வந்த காட்சி கண்ணைப் பறித்ததால் மூன்றாம் கண் அந்த காட்சிகளை சுட்டுத்தள்ளியது. இது அவசர அவசரமா எடுத்ததால் கேமராவில் சமயம் (நேரம்) செட் செய்யக் கூட சமயமில்லாமல் போய் விட்டது ஆனால் காட்சிகள் கிடைத்து விட்டது.

அச்சன் கோயில் காலை சாப்பாடு பழம் பூரியும் கடக்கு சாயும்தான் தான் அருவிக்கு குளிக்க போகும்போது. கேமரா எடுத்து சென்றால் கேமராவிற்கு பாதுகாப்பு இல்லை (மனுஷனுக்கு மட்டும் என்ன பாதுகாப்பாம்!!!!) என்பதால் மூன்றாம் கண் காருக்குளேதான் சுருண்டு கொண்டது.

அருவியில் குளித்து முடித்துவிட்டு பாலருவி (அதுவும் கேரளா) நோக்கி புறப்பட்ட நாம் போகும் வழியில் ஒரு டேம் இருக்கும் என்று கேரளத்து குஞ்சு சொன்ன அந்த டேமை நோக்கி புறப்பட்டோம். போகும் வழி இருபுறமும் வயலும் பசுமையாக இருந்தது அதையும் நம் மூன்றாம் கண் கிளிக்கிக் கொண்டு டேமை சென்றடைந்தோம். பகல் நேரம் என்பதால் சூடு அதிகமா இருந்தது அங்கும் கொஞ்சம் மூன்றாம் கண்ணுக்கு விருந்தளித்து விட்டு பால் அருவியை நோக்கி வண்டி பயணப்பட்டது…
தொடரும்...
Sஹமீது

27 Responses So Far:

Ebrahim Ansari said...

உனது ஒவ்வொரு கட்டுரைகளும் படங்களும் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே போகின்றன.
ஒருவேளை இவ்வளவு அருவிகளில் குளித்ததால் இருக்குமோ?

sabeer.abushahruk said...

சரியாகச் சொன்னீர்கள் ஈனா ஆனா காக்கா.

ஆனா, ஒன்னு கவனிச்சீங்களா? இவிங்க எங்கே போனாலும் சாப்பாட்டு மேட்டர்ல தனி கட்டுரை எழுதுமளவுக்கு கட்றாய்ங்க.

ஹமீது, இப்டி ஃபோட்டோலாம் போட்டா எனக்கு எந்த வேலையும் செய்ய ஓடாது. ஒக்காந்து கவுஜ எழுத ஆரம்பிச்டுவேன். அப்புறம் வீட்ல திட்டுவாங்க.

நன்னா வந்திருக்கு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Ebrahim Ansari சொன்னது…
உனது ஒவ்வொரு கட்டுரைகளும் படங்களும் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே போகின்றன. ஒருவேளை இவ்வளவு அருவிகளில் குளித்ததால் இருக்குமோ?//

எனக்கும் அதே டவுட்டுதான் காக்கா !

இருந்தாலும் என்னுடைய இபுறாஹிமுடைய டூர் பற்றி போடலாம்னு பார்த்த மனை ஸாரி இடம் கிடைக்க மாட்டேங்கிறதே ! உட்டுடுவோமா? போட்டே தீர்வதுன்னு முடிவாயிடுச்சு !

அடுத்து... ஒன்று ரெடியாகிறது... சான்பிரான்சிஸ்க்கோவிலிருந்து செக்கடி மோடு வரை ! யாரா ? இருக்கும் !?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நானெல்லாம் இத மாதிரி ஒரு ஃபோட்டோ எடுத்து போட்டா !?

"அட இவெனெல்லாம் எடுதிருக்க மாட்டான்... எல்லாம் அந்த மூன்றாம் கண்ணோடு இருக்கும் ஒருத்தர் எடுத்ததாகத்தான் இருக்கும்" ஒரு பேச்சு அடிபடும்..

இருந்தாலும் விடுவதாக இல்லை !

என்னுடைய சின்ன மாமா (தேனீ உமர் தம்பி) அவர்கள் எடுத்த அந்தக் கால படங்கள் சில என்னிடம் இருக்கிறது அதன் கருப்பு வெள்ளை நெகட்டீவும் இருக்கிறது... என்று சொன்னா அதெல்லாம் எதுக்கு இப்போன்னு கேட்கவா போறீங்க ?

N.A.Shahul Hameed said...

Assalaamu Alaikkum Savanna!!!
Simply superb. Your uncle Ibrahim Ansari has rightly pointed out that you are becoming more and more versatile in your creativity in writing and professionalism in exposing.
I laughed aloud forgetting where I am when I read your narration of driving the car after having food at Chengottai. Hahahahahaha. The persons behind you too had the same inconvenience, clearly depicts your sense of humour.
But unfortunately when I see the photo u all standing, I could not see your belly very BIG. I think you took the picture after evacuating your stomach.
Alhamdhulillah. Had I been there in India, I too would have accompanied you. I miss our golden memories of all our tours.
Sabeer remember Upper Kothayar days?
Wassalam
N.A.Shahul Hameed

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…

//உனது ஒவ்வொரு கட்டுரைகளும் படங்களும் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே போகின்றன.
ஒருவேளை இவ்வளவு அருவிகளில் குளித்ததால் இருக்குமோ?//

உங்களைப்போன்றோர் இங்கு வந்து பின்னுட்டமிட்டு உற்சாகப்படுத்துவதால் தான் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே போகின்றது மாமா

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//ஆனா, ஒன்னு கவனிச்சீங்களா? இவிங்க எங்கே போனாலும் சாப்பாட்டு மேட்டர்ல தனி கட்டுரை எழுதுமளவுக்கு கட்றாய்ங்க//

நம்ம கிட்டதான் சாப்பாடு மேட்டருக்குன்னு ஒரு தனி டிப்பார்ட்மேன்டே இருக்கே .ஜனாப் AJ தாஜுதீன் காகா வீட்டு கல்யாணத்தில் அத்தனை பெரிய விருந்தை லாவகமா கையாண்டு விருந்தை சிறப்பா முடித்தது நினைவிருக்குமே உங்களுக்கு

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அருமை, இனிமை, சுவை!

கண்ணுக்கு வண்ண உணவு,
கல்புக்கு தேன் தமிழுணவு,
குடலுக்கு கோழியுடன் உணவு,
கேமராவுக்கும் இயக்க உணவு.

அதிரை சித்திக் said...

கருத்தை கவரும் படங்கள்
மனதை கவரும் ஆக்கம் ..
மேலும் பல நாடுகள் சென்று
பல ஆக்கம் வெளி வர வாழ்த்துக்கள்
மீண்டும் அதிரை வளம் வருவீர்களா ...?

Ebrahim Ansari said...

Prof. Janab. N A S said

//But unfortunately when I see the photo u all standing, I could not see your belly very BIG. I think you took the picture after evacuating your stomach.// எங்களுக்கெல்லாம் இப்போது தெரிகிறது சாகுல் பயிற்சி பெற்ற பட்டறை எது என்று.

Anonymous said...

முன்றாம் கண் புகழ் சித்திரக் கட்டுரையாளர் சகோதரர் Sஹமித் அவர்களின் அடுத்த பதிவு ஒரு முக்கித்துவம் பெறுகிறது !

படைப்பாளிகளின் ஆர்வமும் அவர்களின் நேர்த்தியான எழுத்தாற்றலும் எண்ணற்ற வாசகர் வட்டங்களை விரிவடையச் செய்திருப்பது எங்களுக்கு மகிழ்வான ஒன்றே !

விரைவில்... !

Unknown said...

//சாப்பிட்டு முடித்தவுடன் புறப்படுவதற்காக காரில் ஏறி அமர்ந்ததும் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தேன் ‘கார் ஸ்டேரிங் சற்று முன்னே வந்ததுபோல் இருந்தது’ சற்று நிதானமாக கவனித்ததும் தான் தெரிந்தது ‘அட! நம் வயிரு தான் முன்னே வந்து ஸ்டேரிங்கை டச் செய்து கொண்டிருந்தது’. சரி, டிரைவர் சீட்டை கொஞ்சம் பின்புறம் தள்ளி வைப்போம் என்று சீட்டை பின்புறம் நகர்த்தினேன் பின்னால் இருந்த நண்பர் “ஏம்பா சீட்டை நகத்துறே சீட் வயிற்றில் வந்து தட்டுது" என்றார்.//

வயிறு குலுங்குது.....

ZAKIR HUSSAIN said...

//சாப்பிட்டு முடித்தவுடன் புறப்படுவதற்காக காரில் ஏறி அமர்ந்ததும் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தேன்//

ஊர்லெ நெறைய பேர் இப்படித்தான் இருக்காங்க....It is not surprising!!

Shameed said...

Adirai Ahmad சொன்னது…

//வயிறு குலுங்குது..... //

வயறு பற்றிய செய்திக்கு வயிறு குலுங்குது.. நல்லதொரு மேச்சிங் பின்னுட்டம்

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…

// எங்களுக்கெல்லாம் இப்போது தெரிகிறது சாகுல் பயிற்சி பெற்ற பட்டறை எது என்று. //

சரியாய் சொன்னிங்க மாமா எங்களுக்கான பயிற்சி பட்டறை தொடங்கப்பட்ட வருடம் 1981 ஜூலை மாதம் அன்று நம் ஊர் காலேஜில் 7 ஆர்க்கஸ்ட்ர என்ற குழுவினரால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது அன்று இரவு ஒன்பது மணி இருக்கும் சபீர் மற்றும் சாச்சா (அல் நூர் ஹஜ் சர்வீஸ் )முஹம்மது அலி இவர்கள் கூட முதன்முதலில் அண்ணன் NAS அவர்களை பிசிக்ஸ் லேபில் சந்தித்தேன் அன்று தொடங்கிய பழக்கமும் பயிற்சிம் இறைவன் உதவியால் இன்றுவரை தொடர்ந்து கொண்டு வருகின்றது (கவி காகா இதெல்லாம் நினைவிருக்கா உங்களுக்கு )

sabeer.abushahruk said...

என் ஏ எஸ் ஸார்,

அப்பர் கோதையாறுல நாம செய்த "€£¥#%*><}{¥£€&$@&$" எல்லாம் நெனச்சிப்பார்த்தா இப்பவும் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கு ஸார்.

(என்னா செஞ்சோம்னு தெளிவா சொல்ல முடியலீங்க சார். பின்னிடுவாய்ங்கல்ல)

ஹமீது,

நெனப்பிருக்கு. வாடகை சைக்கிளும் "பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகளெல்லாம் ஞாபகம் வருதே" என்னும் பின்னணி வரிகளும் தேவைப்படுது.

KALAM SHAICK ABDUL KADER said...

சுட்டும் விழிச்சுடர் ஹமீத்,
அஸ்ஸலாமு அலைக்கும்,

”இதயம் பேசுகிறது” உங்களின் நகைச்சுவையுடன் ஏழுசுவை விருந்தில்.
நீங்கள் படம்பிடித்த இடம் அழகா? உங்களின் படம்பிடித்த விதம் அழகா என்று தீர்ப்புச் சொல்ல அடம்பிடித்த என் மனத்தின் இயலாமையுடன் எழுதுகின்றேன்...

Shameed said...

அதிரை சித்திக் சொன்னது…

//மீண்டும் அதிரை வளம் வருவீர்களா ...? //

இன்ஷா அல்லாஹ்
கண்டிப்பா வளம் வருவோம் அதிரை நிருபர் தளத்தில் நம்(எல்லோருடைய ) ஆக்கங்கள் வைடிங்க்கில் இருக்கு

Shameed said...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

அருமை, இனிமை, சுவை!

//கண்ணுக்கு வண்ண உணவு,
கல்புக்கு தேன் தமிழுணவு,
குடலுக்கு கோழியுடன் உணவு,
கேமராவுக்கும் இயக்க உணவு. //

ஆகா பின்னுட்டத்திலும் கவித்துவமா !!!!

Shameed said...

அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது…
சுட்டும் விழிச்சுடர் ஹமீத்,
அஸ்ஸலாமு அலைக்கும்,

//”இதயம் பேசுகிறது” உங்களின் நகைச்சுவையுடன் ஏழுசுவை விருந்தில்.
நீங்கள் படம்பிடித்த இடம் அழகா? உங்களின் படம்பிடித்த விதம் அழகா என்று தீர்ப்புச் சொல்ல அடம்பிடித்த என் மனத்தின் இயலாமையுடன் எழுதுகின்றேன்...//

உங்களின் மடை திறந்த மனதில் இயலாமை என்ற பேச்சுக்கே இடமில்லை கடல் வற்றுமா !!!!!

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அருமை Sஹமீது காக்கா ஒவ்வொரு தொடரிலும் ஏதோவொன்று புதுமையாக இருக்கும் இத்தொடரிலே அவ்வருசையில் முதன்மையாக இருப்பது உணவு ஆஹா நம்மூர் ஆளுங்களுக்கு சொல்லவா வேணும் ஜமாயங்க காக்கா..

கூட வந்தவர்கள் அனைவரும் கடுப்பாகிடுவாங்க ஏன்னெனில் பல இடத்தில் நிறுத்தி உங்களின் மூன்றாம் கண்ணை அப்போ அப்போ திறப்பதினாலேயே...

தாங்களின் "புகை"ப்படம் சூப்பர் சூப்பர்..., நீங்கள் மொத்தம் ஐந்து பேர் சென்ற இன்னோவவே வயிறு இடிக்கிறதென்றால் உங்களுக்கெல்லாம் பழைய ஸ்டாண்டர்ட் வேன்லே தான் டூர் போகவேணும் காக்கா

Shameed said...

அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…

//கூட வந்தவர்கள் அனைவரும் கடுப்பாகிடுவாங்க ஏன்னெனில் பல இடத்தில் நிறுத்தி உங்களின் மூன்றாம் கண்ணை அப்போ அப்போ திறப்பதினாலேயே...//

இல்லை இல்லை இவர்களால் எனக்குத்தான் தொந்தரவு காரணம் ஆங்காங்கே வண்டியை நிறுத்தி போட்டோ எடுக்க சொல்லி அத்தனை தொந்தரவு ஒரு டூர் போனதில் 8 GB மெமோரி கார்ட் நிறைந்து விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்

Iqbal M. Salih said...

அருமையான புகைப்படங்கள்.

குறிப்பாக, அந்த வயல்வெளி வரப்புகள்.

அருமை!

இப்னு அப்துல் ரஜாக் said...

நகைசுவையுடன் நீங்கள் எழுதும் இத்தொடர் நயாகராவின் குளுமையை விட அற்புதம் ஹமீது kaakkaa

Yasir said...

போஃட்டோ கலையில் போட்டு வாங்குகின்றீர்கள் ...அதெப்படி பரவசம் தொடராக எழுது எங்களையெல்லாம் உங்கள் வசப்படுத்துகின்றீர்கள்....உங்கள் புகைப்படங்களை போல எழுத்தும் அழகு...வாழ்த்துக்கள் காக்கா

KALAM SHAICK ABDUL KADER said...

//மடை திறந்த மனதில் இயலாமை என்ற பேச்சுக்கே இடமில்லை //

மடைதிறக்க முடியாமல் உங்களின் காமிரா கவிதைகளும்; அதன் கருவான சுற்றுச் சூழலின் எழிலும் என் மனத்தை இறுக்கமாய்க் கட்டிக் கொண்டன.

”நதியில் குளிர்ச்சியா?
நதியில் நிலவின் ஒளி விழுந்ததால் குளிர்ச்சியா”

என்ற என் கவிதை வரிகள் (முன்பு முகநூலில் “கவிதைமுகம்” குழுவில் நான் எழுதிய “நதியிலாடும் நிலவு”) நினைவலைகளில் வந்து போயின; அதுவேபோல், உங்களின் படம்பிடிக்கும் கலையழகா? அப்படம் எடுக்கப்பட்ட இடம் அழகா? என்ற விடையறியா வினாவில் என் இயலாமை என்று குறிப்பிட்டேன்.

உங்களையும், மு.செ.மு. நெய்நா அவர்களையும் காணலாம் என்று இருந்தேன்; மீண்டும் வாய்ப்புத் தவறிவிட்டது!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு