(பாகம் -1)
அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர்களே!!!
அல்லாஹ்வின் வல்லமையை நாம் விளங்கிக்கொண்டால் நாம் இந்த அற்ப வாழ்கையைவிட மறுமையைதான் நாம் தேர்வு செய்வோம்...அல்லாஹ்வை அறிவது என்பது ஒரு முக்கியமான காரியம் நமக்கு ஒவ்வொரு தருணத்திலும்...! இதை ஒவ்வொன்றாக நாம் ஆராய்ந்து சிந்தித்து விளங்குவோமா??? வாருங்கள்....!!
பறவைகளும் விலங்குகளும் ஆறாவது அறிவு உள்ளவை என்பதை நாம் ஒத்துக்கொள்வோமா?? நிச்சயமாக நம்மில் பெரும்பாலானோர் இதனை மறுப்போம்...மாறாக நாம் இவைகளுக்கு ஐந்து அறிவே உள்ளது என அறுதியிட்டு கூறுவோம்... ஆனால் நிலைமை இவ்வாறு இல்லை!!! :
அறிவியல் உலகத்தில் மிக விரைவில் உண்மைபடுதப்படகூடிய விடயம் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஆறாவது அறிவு உள்ளது என்று ...!! ஒரு மேற்கத்திய அறிவியல் விஞ்சானி பல வகையான பறவைகளுக்கு மனித மொழிகளை கற்று கொடுத்து உள்ளார்..அதன் விளைவாக அந்த பறவைகள் பல வகையான நுண்ணறிவு கலை பெற்று இருப்பதாக அந்த ஆராய்ச்சியாளர் கூறுகிறார்...
"Indeed,based on our research we trained various birds. Some birds like lyre bird learnt the language in just 5 days and some birds like blue bird learn the language in just 14 days and some in a month...it is amazed to see that these birds has got high sophisticated intellect in the way of thinking and reasoning like that of humans.Certainly,Nature has got several lessons that we have to learn lot from...."
(உண்மையில் நம் குழு ஆராய்ச்சியில் பல பறவைகளை நாம் பயிற்றுவித்தோம்.. சில பறவைகளான ளிர் பறவை 5 நாட்களில் கற்று கொண்டது.. சில பறவைகளான நீல பறவைகள் 14 நாட்களில் கற்று கொண்டது..சில பறவைகள் ஒரு மாதத்தில். நாம் பார்த்த வரையில் இந்த பறவைகள் மனிதனின் சிந்தனைபோல் நுண்ணறிவையும், சிந்தனை திறனையும் பார்க்கும் போது மிகவும் வியப்பாக உள்ளது. நிச்சயமாக இயற்கையின் படைப்பில் நாம் கற்று கொள்ள வேண்டியது மிகவும் அதிகமே.)
ஆச்சரியம்தான்!!!
நமக்கெல்லாம் தெரியும் விமானத்தை இயககும் விமானி இயக்கு அறையில் [control room] இருந்து தனக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலே விமானத்தை இயக்குகிறார் நாடு விட்டு நாடு செல்ல !! அந்த இயக்கு அறையில் அணைத்து விசயங்களான வானிலை அறிக்கை, விமானத்தின் உயரம், காற்றுகளின் வேகம் அனைத்தையும் விமானி பெற்று கொள்வது மட்டும் இல்லாமல் எவ்வாறு விமானத்தை இயக்குவது அந்த தருணத்தில் என்பதையும் பெற்றுக்கொள்வார்...உண்மைதானே?? உண்மைதான்!!!
ஏன் என்றால் விமானியால் வழிகளை வானில் அறிய முடியாது....!!!
சிந்திப்போமாக நாம்!
எவ்வாறு பறவைகள் கண்டம் விட்டு கண்டம் தொலை தூர பயணத்தை மேற்கொள்கிறது?? இவ்வாறு தொலை தூரப்பயணம் பறவைகள் மேற்கொள்வது என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல.. மாறாக அந்த பறவைகளுக்கு தான் செல்லும் வலி, தாநீர் இருக்கும் இடம், வானிலையின் நிலை, குறுக்கு வலி [shortest path], உணவு இவைகளை பற்றி மிகவும் ஆழமான அறிவு தேவை... அப்படி இருந்தால்தான் அவை தொலை தூர பயணத்தை மேற்கொள்ள முடியும். எந்த இயக்கு அறையும் [control room] அதற்கு கிடையாது தகுந்த தகவல்களை கொடுப்பதற்கு!
பறவைகள் சூரியனின் இருப்பையும் [sun's position], பூமியின் காந்த அலைகளின் [earth's magnetic field] தன்மையை வைத்தும் மிகவும் நுன்னறிவாக குறுக்கு பாதைகளை தேர்ந்து எடுப்பதும் மட்டும் இல்லாமல், செல்லும் பதியின் வானிலையையும் தெரிந்து கொள்கிறது. ஆச்சர்யமாக இல்லை..! சுபுஹானல்லாஹ்! :) . நவீன தொழில் நுட்பத்தின் விளைவாக கண்டு பிடிக்க பட்ட அதி நுட்பமான GPS-global positioning system மற்றும பூமியின் காந்த அலைகளின் நிலைமையை அறியும் Gaussemeter எனப்படும் கருவியின் உதவியை நாடி செல்லும் பெரும் கைதேர்ந்த மனித தேடிகளும், கடல் தடிகளும் [Human Explorers and sea farers] இக்காலத்தில் திணறுகிறார்கள்...அறிவியல்வாதிகள் இந்த பறவையின் அதிநுட்பமான அறிவுகளை பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள். எந்த வித கருவியும் இல்லாமல் இவை எவ்வாறு தொலைதூர பயணத்தை மேற்கொள்கிறது என்று...!! சிந்திக்க வேண்டிய விசயமே இவை!!!
சில கடல் பறவைகளான அல்பட்ரோஸ்[albatross] எனப்படும் பறவை இனம் தொடர்ச்சியாக எங்கும் நில்லாமல் சுமார் 15000 km பயணம் மேற்கொள்கிறது. அந்த தொலை தூர பயணத்தால் இவைகள் சோர்வு அடைவதும் இல்லை...ஏன் என்றால் அவை தொலை தூர பயணம் மேற்கொள்ளும் முன் அதிக கொழுப்பு சத்துகளை கொடுக்கும் உணவை மேற்கொள்கிறது...மட்டும் அல்லாமல் அதனால் அதன் உடல் பருமன் குறைந்தது 20 % அதிகபடுகிறது... இந்த உணவு கலையை எங்கிருந்து எவ்வாறு பெற்று கொண்டது என்பது ஆச்சர்யமானதாக தான் உள்ளது... இன்று நம் இளைஞர்கள் கல்லூரி சென்று இக்கல்வியை [Dietrician] வருடக்கணக்கில் கற்கிறார்கள்..ஆனால் இப்பறவைகள் தான் உலகத்திற்கு வரும்போதே இக்கல்வியை பெற்றுள்ளது...அது மட்டும் அன்றி அவை சராசரியாக 80 km வேகத்தில் பறக்க கூடியவை. இந்த தொலை தூர பயணத்தில் ... சிந்தியுங்கள் சகோதரர்களே!!! சுபுஹானல்லாஹ்...!!
அல்லாஹ் தன் திருமறையில்...
"(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.இன்னும் வானங்களுடையவும் பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்விடமே இருக்கிறது; அல்லாஹ்வின் பக்கமே (யாவரும்) மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது. [24 :41,42].
"பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற [அறிவு படைத்த] இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்."[6:38].
நாம் நம் இறைவனாகிய அல்லாஹ்வின் வல்லமையை விளங்கி அவனால் ஆட்சி செய்யப்படும் அனைத்து படைபினங்களும் அவனை தான் துதி செய்து கொண்டு இருக்கின்றன என்பதை விளங்கி அவன் போதனைகளை பின்பற்றுவோமாக...!! மறந்து விட வேண்டாம்!! அவனிடம் தான் நம் மீட்சி உள்ளது ....!! அறிந்து கொள்ளுங்கள் இந்த உலக வாழ்க்கை வீண் விளையாட்டும் வேடிக்கையுமே அன்றி வேறு இல்லை..!!! இன்ஷா அல்லாஹ ! மீண்டும் சந்திப்போம்...!!!
நன்றி : Kayal-News
பரிந்துரை : அதிரை அஹ்மது
10 Responses So Far:
////நாம் நம் இறைவனாகிய அல்லாஹ்வின் வல்லமையை விளங்கி அவனால் ஆட்சி செய்யப்படும் அனைத்து படைபினங்களும் அவனை தான் துதி செய்து கொண்டு இருக்கின்றன என்பதை விளங்கி அவன் போதனைகளை பின்பற்றுவோமாக...!! மறந்து விட வேண்டாம்!! அவனிடம் தான் நம் மீட்சி உள்ளது ....!! அறிந்து கொள்ளுங்கள் இந்த உலக வாழ்க்கை வீண் விளையாட்டும் வேடிக்கையுமே அன்றி வேறு இல்லை..!!! ///
நாமும் விளங்கி பின்பற்றி மறுமையில் வெற்றியடைய முயற்சி செய்வோம்.இன்ஷா அல்லாஹ்! பதிவுக்கு நன்றி!
அலைக்கும், வழி, தண்ணீர், நுண்ணறிவு போன்ற எழுத்துப்பிழைகளை சரி செய்துகொள்ளவும்.
மற்றபடி, தலைப்பும் விளக்கமும் சுப்ஹானல்லாஹ்! மிகவும் அருமை.
கண்னுக்கு சிரிது விருந்து படைத்த போது
காதுக்கும் ஈயப்படும்
அல்லாஹூ அக்பர்-- உணர்ச்சிகளை பொங்க செய்து,மறுமை பயத்தை உண்டாக்கும் ஆக்கம்...தொகுத்தளித்தமைக்கு துவாக்கள்...யாஅல்லாஹ் உடலில் கடைசி மூச்சு உள்ளவரை உன்னை வணங்கும் கூட்டத்தாரில் எங்களையெல்லாம் ஆக்கியருள்வாயாக ஆமீன்
மனித, ஜின், போன்று விலங்கினதிற்கும் ஆறறிவு உண்டு என்பது தான் நிதர்சனம். இருப்பினும் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.
விலங்கினத்திற்கு அது சார்ந்த (நன்மை தீமை) பற்றிய அறிவை அல்லாஹ் அவற்றின் மரபனுக்களிலேயே பதித்துள்ளான். இதற்கு உதாரணம் இந்த கட்டுரையில் எடுத்துக்காட்டிய பறவைகளின் செயல்பாடுகளிலிருந்து நாம் விளங்கி கொள்ளலாம்.
"(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.இன்னும் வானங்களுடையவும் பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்விடமே இருக்கிறது; அல்லாஹ்வின் பக்கமே (யாவரும்) மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது. [24 :41,42].
ஆனால், மனித மற்றும் ஜின் இனத்திற்கு அவன் சார்ந்த நன்மை தீமைகளை அல்லாஹ் மரபணுக்களில் பதிக்காமல்
அவன் முன் எடுத்துக்காட்டி இது நேர்வழி, இது வழிகேடு.
இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுக்க போகின்றாய் என்று அவனிடமே விட்டு விட்டான்.
(நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா? 90:10

அறிவியல் சார்ந்த அழகிய அறியப்பட வேண்டிய செய்தி
பிரபஞ்ச அத்தாட்சிகளை குர்ஆனிய அத்தாட்களின் அடிப்படையில் விளங்குவது நம்மை இறைவனை முன்னோக்கி வாழும் முஹ்ஸீன்களாக்கும். அந்த வகையில் உங்கள் கட்டுரையின் ஆரம்பமே சிறப்பாக உள்ளது. அலஹம்துலில்லாஹ்.
Post a Comment