மக்களுக்கேற்ற மார்க்கம்
"அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! கபீரா! லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்! வ லில்லாஹில் ஹம்து!"
"இறைவனின் இறுதித்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தை இது நினைவூட்டுகின்றது, ஹஜ் எனும் புனிதப் பயணத்தின் இறுதியும் உச்ச கட்டமுமாகிய 'அரஃபாத்'தில் அனைவரும் ஒன்று கூடும் இத்தருணத்தை விடப் பொருத்தமான வேறு அனைத்துலகச் சமாதான ஒன்றுகூடல் எங்கேனும் உண்டா ?"
"கருப்பர், வெள்ளையர், மஞ்சள் நிறத்தவர், மாநிறங் கொண்டோர், அரசர்கள், ஏழைகள், பணக்காரர்கள் - அனைவருமே ஒரே உடையில், ஒரே குரலில், ஒரே இறைவனைப் புகழ்ந்து இறைஞ்சும் புனிதக் கூட்டமைப்பன்றோ இது?!?
"மனிதர் அனைவரும் அமைதியை, சமாதானத்தை விரும்புகின்றனர். அது உண்மையில் இங்கல்லவா கிடைக்கின்றது?! இதைவிடப் பொருத்தமான தருணம் வேறு என்ன இருக்கிறது?"
இவைதாம், அப்போது பேறு பெற்ற பெண்மணியின் இதயக் குரல்கள்.
அது 1931ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் அரச பதவி வகிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த செல்வி ஐரீன் ஜேன் வென்டவொர்த் ஃபிட்ஸ்வில்லியம், மதங்களின் ஒப்பீட்டுக் கல்வி (Study of Comparative Religions) பயில்வதற்காக எகிப்துக்குப் பயணமானார்.
அங்கே சென்று படிப்பைத் தொடங்கிய சில நாட்களிலேயே, இஸ்லாம் எனும் உண்மை மார்க்கம் இவரது இதயத்தை ஈர்த்தது. அதே ஆண்டிலேயே முஸ்லிமாக மாறி 'ஆயிஷா' என்ற பெயரைச் சூட்டிக் கொண்டார்!
1935ஆம் ஆண்டு ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றினார் ஆயிஷா, ஹஜ்ஜில் காணப்படும் அனைத்துலக ஒற்றுமை உணர்ச்சியைக் கண்டு வியந்து அடிக்கடி கூறுவார் ஆயிஷா. தன் தங்கை எவலினுக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்து, அவரை இஸ்லாத்தை தழுவச் செய்தார்.
அண்ணல் பெருமானார்(ஸல்) அவர்களின் அழகான அறிவுப் பூர்வமான - துணிவான உண்மை மார்க்கப் பிரச்சாரத்தைப் பற்றி அடிக்கடி வியந்துரைப்பார் ஆயிஷா.
"எனது தாய்நாட்டு மக்களுக்குத் தேவையான அவர்கள் பின்பற்றத் தகுந்த துணிவு, நேர்மை, கழிவிரக்கம், அநீதியிழைத்தோரை அற்புதமாக மன்னிக்கும் தன்மை ஆகிய அனைத்தும் அப்பெருமகனாரிடம் குடிகொண்டிருந்தன. அவர்களிடம் இயல்பாக அமைந்திருந்த துணிவும், வல்ல இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுமே, அவர்களை வெற்றிக் கொடி நாட்டச் செய்தன எனக் கூறினால், அது மிகையாது.
அந்த இறுதித் திருநபி அவர்கள்தாம் முதன்முதலாக எம் பெண்களின் சமூகத் தகுதியையும் மதிப்பையும் உயர்த்தியவர். இன்று கூடச் சில ஐரோப்பிய நாடுகளில் காணக் கிடைக்காத பெண்ணுரிமையினை 1400 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் இந்த நபியவர்கள்தாம்!
அயர்லாந்தின் அரச குடும்பக் கோட்டையைத் துணிவுடன் திறந்து வந்து, இஸ்லாமிய இன்பச் சோலையில் புகுந்த ஆயிஷா வென்டவொர்த் ஃபிட்ஸ்வில்லியம் பேறு பெற்ற பெண்மணிகளுள் ஒருவர்தானே!
இது ஒரு மீள்பதிவு
அதிரை அஹ்மது
புகைப்படங்கள் : Sஹமீது
ஹஜ் - பேசும் படங்கள்
Sஹமீது
4 Responses So Far:
பேரு பெற்ற அப்பெண்மணியின் துணிவும்,
அஹமது சாச்சாவின் எழுத்தும்
மூன்றாம் கண் ஹமீது காக்காவின் படங்களும்
எங்களுக்கு பெருநாள் பரிசு.
அல்லாஹ் பெரியவன்.
இந்த நாட்களிலே இப்படிப்பட்ட ஒரு ஆக்கத்தை இணைந்து தந்திருக்கிற இந்தக் குடும்பத்து மூத்த சகோதரர் அஹமது காக்கா அவர்களுக்கும் எனது அன்பான மருமகன் சாகுல் ஹமீதுக்கும் இறைவன் நீடித்த ஆயுளும், நிறைந்த செல்வமும், நிம்மதியான வாழ்வும் தர இறைஞ்சுகிறேன்.
இன்றைக்கு இந்தப் பதிவு வந்திருப்பது மிகவும் பொருத்தம். நெறியாளரைப் பாராட்டுகிறேன்.
பொருத்தமான பதிவுகள்
மனதுக்கு நிறைவான படங்கள்.
நன்றி சாவண்ணா!
Post a Comment