Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

லண்டனில் கந்தூரி ! 29

அதிரைநிருபர் பதிப்பகம் | October 03, 2012 | , , , ,


அட ! தலைப்பை பார்த்து தடுமாற வேண்டாம், தலைப்பிற்கான அர்த்தம் "ஒன்றுகூடும் விழா" அவ்வளவு தான். இடம்:  லண்டன். இங்கே ஷிர்க் இல்லை இணை வைப்புக்கான சூழல் இல்லை, கப்ரு வணக்கம் இல்லை (விழா நடக்குமிடத்தில் யாருடைய அடக்கஸ்தலமேதும் இல்லை)

இந்த இடம்  மஸ்ஜித் & இஸ்லாமிய தாவா செண்டருக்கு சொந்தமான பெரிய  இடம். இந்த சென்டர் 2 மஸ்ஜிதை நிர்வகிக்கிறது. மஸ்ஜிதுக்கு வெளியே அவ்வப்போது டேபிள்கள் போட்டு தாஃவா பணி செய்வார்கள். இந்த சென்டரின் கீழ் நர்சரி ஸ்கூல், மேல் நிலைப் பள்ளி மற்றும் ஹிஃப்ளு மதரசா ஆகியவை இயங்குகின்றன. இது வருடாந்திர விழாவாக நடக்கும் இடத்தின் ஒரு பகுதியில் பெரிய அளவில் கல்லூரி கட்டும் திட்டமும் இருக்கிறதாம் இன்ஷா அல்லாஹ்.

இதனை மேலாண் செய்பவர்கள் குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நம் சகோதரர்களே. இங்கே வருடந்தோரும் ஒரு நாள் மட்டும் பெரிய அளவில் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட கடைகளை அனுமதித்து குடும்பத்தோடு இங்கு வந்து ஒரு நாளை சந்தோசமாக களிக்கின்றனர். அதோடு சிறுவர்களின் மகிழ்வுக்காக ராட்டினம் போன்ற பல்வேறு விளையாட்டு அம்சங்களும் உண்டு. சிறுவர்களுக்கு கால்பந்து விளையாட்டு நடத்தி பரிசளித்து ஊக்கப்படுத்துவதும் உண்டு. மேலும் பிள்ளைகளை கழுதையில் ஏற்றி சவாரி செய்தல் (நம்மூரில் யானையில் ஏறுவது போல) மற்றும் முக பெயின்ட்டிங்,மருதானி  இடுதல் போன்ற பல்வேறு அம்சங்களும் உண்டு.

இதன் நோக்கம் நம்மவர்கள் பல்வேறு கலாச்சார அனாச்சார  நிகழ்வுகளுக்கு செல்லாமல் வருடத்தில் ஒரு நாளாவது இவ்வாறு கூடட்டுமே என்ற சேவை மற்றும் பொழுது போக்கு அம்சமாக செய்கின்றனர். ஆண்களும் பெண்களும் தனித்தனியாக  தொழ ஒழு செய்யும் வசதியுடன் வேளைக்கு தொழுகையும் இங்கேயே நிறைவேற்றுகின்றனர். இங்கே வர நுழைவுக் கட்டணமும் உன்டு.

இந்தாண்டு சுமார் 5000 பேர் இங்கே கூடினர்.உள்ளே வர குட்டைப் பாவாடைகளுக்கு அனுமதியில்லை.இஸ்லாமிய அங்கீகரிப்பு ஆடை அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.அனைத்து நிகழ்வுகளும் மார்க்க வரம்புகுட்பட்டே நடை பெறுகிறது. நான் சில வருடங்களாக விழாக்கமிட்டி சார்பாக தன்னார்வலராக நம்ம ஊரவர் சிலருடன் தொடர்ந்து கலந்து வருகிறேன். நம்மூரில் நடக்கும் இரு நிகழ்வையும் இது மாதிரி மார்க்க நெறிக்கு உட்பட்டு நடத்தினால் மறுமைக்கும் நலமாயிருக்குமே!-- 

கந்தூரி காட்சிகளின் புகைப்பட அணிவகுப்பு இதோ :-M.H.ஜஹபர் சாதிக்

29 Responses So Far:

Ebrahim Ansari said...

தம்பி M. H.J. அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

இப்படித்தான் ஒரு தேனீ போல் சுற்றித் திரிந்து புத்தம்புது தேன் துளிகளை - சிந்தனைகளாக தருபவர்களே எழுத்தாளர்கள். நல்ல ஆக்கம். அத்துடன் முடிவுரையில் தந்திருக்கும் ஆலோசனை அனைத்துமே பாராட்டுக்குரியவை.

அதிரை சித்திக் said...

தான் பார்த்து ரசித்ததை

நம்மவர்களுக்கும் பார்க்க

ரசிக்க சுவைக்க தந்த ஜாபருக்கு

நன்றிகள் பல எங்க ஊரிலும் எப்போது

நடக்குமோ ...தெரியல ..

Aboobakkar, Can. said...

ஆஹா..............கிளாம் பீட்டாரய்யா.........தம்பி...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

முதலில் வந்த மூத்தவர்கள் மூவரையும் முகமன் கூறி வரவேற்கிறேன்.
மூவருக்கும் நுழைவுக் கட்டணம் இலவசம்.
வருக! வருக!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

படமும் எழுத்தும் சொல்லும் ரசனையின் தரத்தை !

வாழ்த்துக்கள் MHJ !

Ebrahim Ansari said...

http://englishthrutamil.blogspot.com/2012/09/blog-post.html

ஆங்கிலம் பேச உதவும் ஒரு புதிய தளம். வேண்டுமானால் பயன்படுத்தலாம்.

Shameed said...

நல்ல சிந்தனையுடன் கூடிய ஆக்கம்

அதிரை நிருபரில் அதிக படங்களை (19 ) பதிந்த முதல் ஆள் என்ற பட்டத்தை தட்டி சென்றுவிட்டீர்கள் வாழ்த்துக்கள்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

///////////இங்கே ஷிர்க் இல்லை இணை வைப்புக்கான சூழல் இல்லை, கப்ரு வணக்கம் இல்லை (விழா நடக்குமிடத்தில் யாருடைய அடக்கஸ்தலமேதும் இல்லை)

இங்கே வருடந்தோரும் ஒரு நாள் மட்டும் பெரிய அளவில் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட கடைகளை அனுமதித்து குடும்பத்தோடு இங்கு வந்து ஒரு நாளை சந்தோசமாக களிக்கின்றனர்.

இதன் நோக்கம் நம்மவர்கள் பல்வேறு கலாச்சார அனாச்சார நிகழ்வுகளுக்கு செல்லாமல் வருடத்தில் ஒரு நாளாவது இவ்வாறு கூடட்டுமே என்ற சேவை மற்றும் பொழுது போக்கு அம்சமாக செய்கின்றனர். //////////////////


இப்படியெல்லாம் அழகிய முறையில் செய்வதற்கு ஆட்களும் இல்லை, ஏக்கர் கணக்கில் இடமும் இல்லை.

நமது ஊர்களில் குழந்தைகள் பொழுது போக்க பூங்காக்களும் இல்லை. பொது இடங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில்.

இது மட்டுமா? இல்லை! நிறைய இல்லை......

அழகிய படங்களுடன் பகிர்ந்ததற்கு வாழ்த்துக்கள்!

Shameed said...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

//முதலில் வந்த மூத்தவர்கள் மூவரையும் முகமன் கூறி வரவேற்கிறேன்.
மூவருக்கும் நுழைவுக் கட்டணம் இலவசம்.
வருக! வருக! //

அதான் பிறகுவந்த இளையோர்களையும் நுழைவுக் கட்டணம் வசூலித்து வரவேற்றுவிடுங்களேன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஹமீதாக்கா சொன்னாக!

//அதான் பிறகுவந்த இளையோர்களையும் நுழைவுக் கட்டணம் வசூலித்து வரவேற்றுவிடுங்களேன் //

அடுத்தடுத்து வந்தவர்களும் அதே தகுதியில் இருப்பதால் அவர்களுக்கும் அதே சலுகை உண்டு. வாங்க. வாங்க.

// அதிக படங்களை (19 ) பதிந்த முதல் ஆள்//

19 அல்ல மொத்தம் 25
ஆனால் அது சென்சார் நெறியாளரால்!
(அது ரொம்ப பரபரப்பை ஏற்படுத்தக் கூடியதாம்)

sabeer.abushahruk said...

அருமையான புகைப்படஙகள் எம் ஹெச் ஜே. நேர்த்தியான வர்ணனையும்கூட.

இதேப் போல கந்தூரி சவுதி ஹா(ல்)ஃப் மூன் பீச்சிலும், இங்கு துபையில் க்ளோபல் வில்லேஜிலும் (ஆனா, ரொம்ப் க்ரேன்ட்) மற்றும் அஜ்மானிலும் இருக்கிறது. ஒரு ரைடுக்கு 25 திர்ஹம் ச்சார்ஜ் கேட்கும் ரைடுகளும் உண்டு.

அனுமதி இலவசம் என்று சொல்லி உள்ளே நெறைய ச்சார்ஜ் செய்வீங்களோ?

பேங்க் ஹசன் said...

நம்மூரு ஆளோடு வந்து நானும் கலந்து கொள்ள மிஸ் பண்ணிட்டேனே!

படங்கள் அழகு

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சபீர் காக்கா இப்படி சொல்றாக!

//அனுமதி இலவசம் என்று சொல்லி உள்ளே நெறைய ச்சார்ஜ் செய்வீங்களோ?//

நுழைவாயிலில் இலவச அனுமதி என் பொறுப்பு
அதுக்கு மேலே உள்ளே உங்க பொறுப்பு

Shameed said...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது
//19 அல்ல மொத்தம் 25
ஆனால் அது சென்சார் நெறியாளரால்!
(அது ரொம்ப பரபரப்பை ஏற்படுத்தக் கூடியதாம்) //

நான் அனுப்பிய சில புகைப்படங்கள் கூட புகைச்சலை உண்டு பண்ணும் என்று நெறியாளர் மட்டுமே பார்த்ததுடன் மற்றவர்கள் பார்வைக்கு விட வில்லை (சென்சார் ஆளுங்க எல்லாம் அப்படித்தான் இருப்பங்களோ )

KALAM SHAICK ABDUL KADER said...

கவிவேந்தர் சபீர், துபையில் நடந்த PEACE மாநாட்டை இங்குக் குறிப்பிட்டிருக்கலாம்.

ஒரு தேர்ந்த எழுத்தாளர், நிருபர், காமிரா கலைஞர், இளங்கவிஞர் ...இப்படியாகப் பல அவதானியாக வலம் வரும் உங்கட்கு என் உளம் கனிந்த வாழ்த்துகள்!

எல்லார்க்கும் இலவச நுழைவுச் சீட்டுக் கொடுத்து விட்டு, எனக்கு ”விசாவும்” வானூர்திப் பயணச்சீட்டும் விரைவாக அனுப்பி வைப்பீர்கள் தானே?

Anonymous said...

கிரவுண்டு பச்சபசேலென்று இருப்பதனால் நெறியாளரின் தலை உருளுதோ !?

மீண்டும் உற்றுப் பாருங்கள் இருபத்தி ஒரு படங்கள் இருக்கனுமே !

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

என்ன ஜஹபர் நம்ம சர்பத் கடை போட இடம் கிடைக்குமா? அங்கேயும் பணக்கார பசங்க நிரைய இருப்பாங்களே சில்லரை தட்டுப்பாடும் அதிகமோ
அனிகுன்டு சுருட்ட ஆங்கில பேப்பர் சரி வராதே?

லன்டன் ரபிக் said...

last last of Saturday we are went enna? jafer bhai

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நெறியாளர் சொன்னதில்

//மீண்டும் உற்றுப் பாருங்கள் இருபத்தி ஒரு படங்கள் இருக்கனுமே !//
19 என்பது 21 ஆனதில் எதோ மர்மம் நடந்திருக்கு!
ஹமீதாக்கா ஆதரவு தேவை.

Shameed said...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

நெறியாளர் சொன்னதில்

//மீண்டும் உற்றுப் பாருங்கள் இருபத்தி ஒரு படங்கள் இருக்கனுமே !//
//19 என்பது 21 ஆனதில் எதோ மர்மம் நடந்திருக்கு!
ஹமீதாக்கா ஆதரவு தேவை. //

ஆமாம் இடை(சொருகல்)யோ ஏதோ நடந்துள்ளது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆமாம் இடை(சொருகல்)யோ ஏதோ நடந்துள்ளது//

'இடை'யிடையே வெளிக்காட்டாமல் இருக்கவே !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும்+

இனிப்பான கருத்தளித்த இப்ராஹிம் அன்சாரி காக்கா, அலாவுதீன் காக்கா, தமிழூறும் சித்தீக் காக்கா, சபீர் மச்சான், கனடா அபூபக்கராக்கா, தம்பிகள் ரபீக் & ஹசன் மிக்க நன்றி.

மேலும் கந்தூரி கலைகட்ட காரணமாயிருந்த ஹமீதாக்கா, நெய்னா தம்பி காக்கா, கவிஞர் சபீர் காக்கா, கவிஞர் கலாம் காக்கா, ரொம்ப நன்றி

சபீர் மச்சான் இப்படி கேட்டுட்டாக!

//நம்ம சர்பத் கடை போட இடம் கிடைக்குமா? அங்கேயும் பணக்கார பசங்க நிரைய இருப்பாங்களே சில்லரை தட்டுப்பாடும் அதிகமோ
அனிகுன்டு சுருட்ட ஆங்கில பேப்பர் சரி வராதே?//

என்ன நமக்கு இல்லாத இடமா?
பாக்கி காசு கொடுக்காமே யெல்லாம் வெலையாட முடியாது. சரியான சில்லரையை தருவானுங்கள். சில்லரை பிரச்சனை அறவே இல்லை. அனிகுண்டுக்கு அனுமதி இருக்காது. சந்தேகத்திற்குரிய லிஸ்டிலே சேர்த்திடுவானுங்கோ.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

என்ன எம் .ஹெச் ஜெ.போன பதிவில் ஹமீது காக்கா காட்டு பள்ளிக்கு போக தானே தக்வா பள்ளிக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் வழி காட்டி போர்டை காட்டினார்கள்.வழி தெரியாம கந்தூரிக்கு எல்லாம் அங்கே வந்துட்டாங்களா?

பரவாயில்லை ஒருவகையில் நல்லதுதான்.அந்த இடத்தில் யாரும் அடங்காமே இருந்தார்களே!

ஆமா இரண்டாவது படத்தில் வெள்ளை டி சர்ட்டில் ஊதா கோடு போட்டு இருக்கும் நபர் சலீம் தம்பி முஹம்மது மாதிரி தெரியுதே?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

என்ன எம் .ஹெச் ஜெ.போன பதிவில் ஹமீது காக்கா காட்டு பள்ளிக்கு போக தானே தக்வா பள்ளிக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் வழி காட்டி போர்டை காட்டினார்கள்.வழி தெரியாம கந்தூரிக்கு எல்லாம் அங்கே வந்துட்டாங்களா?

பரவாயில்லை ஒருவகையில் நல்லதுதான்.அந்த இடத்தில் யாரும் அடங்காமே இருந்தார்களே!

ஆமா இரண்டாவது படத்தில் வெள்ளை டி சர்ட்டில் ஊதா கோடு போட்டு இருக்கும் நபர் சலீம் தம்பி முஹம்மது மாதிரி தெரியுதே?

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜாபரு, ஊரில் இருந்து வந்தாலும் பசியான நேரத்தில் உன் கட்டுரையை படிக்க நேர்ந்ததால் என் கண்களுக்கு லண்டனில் தந்தூரி என்று தவறுதலாக படித்து விட்டேன். நமதூர் அனைத்து முஹல்லா சார்பாக ஏதேனும் குடில் அங்கு அமைத்தீரா? இல்லையா? வருவோர் போவோருக்கு சர்வத்தும், பேரீச்சம்பழமும் கொடுத்து இருக்கலாமுல்லெ? அதான் கேட்டேன்.

உன்னைப்போல் கட்டுரைகள் எழுத ஆசை தான். ஆனால் லேப்டாப்பில் (மடிக்கணினி)அடிப்பது அவ்வளவு சவுகரியப்படவில்லை எனக்கு. ஏதோ அரிக்கும் தலைக்கு பேண் பார்ப்பது போல் இருக்குது. சடப்பா ஈக்கிது.....

தலைப்புண்டா சொல்லட்டா......." பந்து விளையாடப்படும் மத்திய ரயில்வே துறையும், பரிதவிக்கும் மாநில மின்சாரத்துறையும்"

வேணும்டாக்கா நீ எழுத முயற்சிப்பண்ணு மச்சான்.

மு.செ.மு.நெய்னா முஹம்மது

Yasir said...

ரொம்ம லேட்டா வந்துட்டனோ...கூடு எல்லாம் முடிஞ்சுடுச்சா....ஆமா இந்த கந்தூரி கடையில இ.எம்,ஹனீபா பாட்டு, ரால்வச்ச வைடை, பஜ்ஜி சொஜ்ஜிலாம் ஒலிக்குமா,கிடைக்குமா...? லண்டன் ஹலான கந்துரியை தந்தூரி சிக்கன் போல கமகமக்க எழுதிய சகோ.ஜஹபர் சாதிக்குக்கு வாழ்த்துக்கள்

Shameed said...

நாங்கெல்லாம் கூடு பாத்துட்டு தூன்குறோம் யாருப்பா அது கடைசியா வந்து டிஸ்டர்ப் செய்றது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சலாம்+

முதலில், கடைசியாக வந்த சகோ. யாசிருக்கு நன்றி. (அதுவும் ஹமீதாக்காவை டிஸ்டர்ப் செய்துவிட்டு வந்தது தூக்கம் போச்சாம். தஹஜ்ஜத்தும், சுபுஹும் தொழ காத்திருக்கார்களாம். அதனால் யாசிருக்கும் நன்மை உண்டு.

இன்னும் மு.செ.மு. மச்சான் நெய்னா, லெ.மு.செ. பக்கருக்கும் இன்னும் ரசித்த நல்லவர்களுக்கும் நன்றி.

காதிலும் கருத்திலும் எட்டியதிலிருந்து:-
"""""""""""""""""""""""""""""""""""""
இஸ்லாமிய நாடுகளில் இது போல நடக்கிறதென்றால் அது பெரிய விசயமல்ல. அங்கே கூட பெரும்பாலும்(சில இடங்களைத் தவிர) காதில் ஒரு புறம் இசை ஏறிக் கொண்டே இருக்கும், உரித்த கோழிகள் உல்லாசமாக செல்வதில் கண் பாவம் ஏற்படும், காசை கரியாக்கும் பட்டாசுகளில் அலரலும் சீரலும் அவ்வப்போது இருக்கும், இன்னும் வேறு சில சிறு தவறுகளும் நடக்கத்தான் செய்கின்றன.

ஆனால் இங்கே இக் கந்தூரியில் (பல பலே! கலாச்சாரங்களும் மிகுந்த நாட்டில்) என் அறிவுக்கு புலப்பட்டு இஸ்லாமிய நெறிக்கு மாற்றமாக எதுவும் நடந்ததாக புலப்பட வில்லை.

எனவே இதை பார்வைக்கு அனுப்பியதன் நோக்கம் படிப்பினை என்ற ஒரு நோக்கமே!

சும்மா ரசனைக்காக படம் போடுவதென்றால் எதையும் எல்லா பகுதியில் நடப்பதையும் போடலாம்.

நானும் (வெளியிடுவார்களா என்ற) சந்தேகத்துடன் தான் அனுப்பினேன். அதை சரி யென நெறியாளர் வெளியிட்டமைக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.
M.H.J.


.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு