Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

American Adirai Forum - உதயமானது ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | October 30, 2012 | , , ,


அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு - American Adirai Forum [A A F]

சிறப்புரை: ஷைக் நஜீர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும்.

அமெரிக்கா வாழ் அதிரையர்களின் கூட்டமைப்பு வெற்றிகரமாக இன்று  28-Oct-2012 (ஞாயிற்றுக் கிழமை) துவங்கப்பட்டது. இந்நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியதற்கு வல்லமை நிறைந்த அல்லாஹ்வின் உதவியே காரணம் அன்றி வேறில்லை.

முக்கிய இந்நிகழ்வுக்கு குடும்பத்துடன் வந்து சிறப்பித்த அனைத்து அதிரை சகோதரர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன் ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

மேலும் வல்லேஹோ மஸ்ஜிதில் சிறப்புடன் ஏற்பாடு செய்த சகோதரர்கள் அப்துல் மாலிக், மதீனா, ஷேக் அலி இவர்களின் முயற்சிக்கும் பங்களிப்பிற்கும் எனது தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


சகோதரர்களின் சந்திப்பின் நிறைவாக கீழ்கண்ட சகோதரர்கள் பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:-

அமெரிக்கா அதிரை சகோதரர்களின் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள்

தலைவர் : சகோ. ஹக்கீம்

துணைத் தலைவர் : சகோ. ஷிப்ளி முஹம்மது

செயலாளர் : சகோ. ஷைக் நஸீர்

இணை செயலாளர் : சகோ. தமீம்

பொருளாளர் : சகோ. இக்பால் M.ஸாலிஹ்

Peer Assistant Leader : சகோ. ஜுபைர்

இறைவன் நாட்டப்படி விரைவில் மண்டல பொறுப்பாளர்களை அந்தந்த பகுதி வாரியாக தேர்ந்தெடுக்கப்படும்.கூட் டமைப்பின் நெறிமுறைகள்:-

1. நம் சமூகத்திற்கு (அமெரிக்க அதிரையர்கள்) சேவை செய்வதே முக்கிய குறிக்கோளாகும்.

2. சந்தாதாரர் மட்டுமே கூட்டமைப்பின் சகல வசதிகளையும் பெறமுடியும், சந்தாதாரர் அல்லாதவர்களுக்கு கூட்டமைப்பின் நலன்களில் பங்களிப்பு இல்லை.

3. மாதம் டாலர் 25/- சந்தாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

4. அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு, நம் சமூக சகோதரர்களின் இறப்பு மற்றும் அதற்கான இறுதிக் கடமைக்கான (கஃபன், நல்லடக்கம்] செலவினங்களை சந்தாதரர்களுக்கு மட்டுமே ஏற்கும்.

5. உறுப்பினர்களுக்கிடையே ஒருவருக்கொரு உதவிபுரிதல், எதிர்பாராத விபத்துக்கள் அல்லது இடர்களுக்கு உதவுதல்.

6. அதிராம்பட்டினத்தில் வாழும் நலிந்த மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் செழிக்க பாடுபடும்

7.  A.A.F..தனது முழு ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பை அதிரை பைத்துல் மால் வழியாகவே செய்யும் அதுவும் AAFன் செயற்குழு அனுமதி பெற்ற பின்னரே செயல்படுத்தும்.

8. ஜகாத், தர்மங்கள், ஃபித்ரு சதக்கா முறையாக வசூல் செய்யப்பட்டு அதனை தேவையுடைய மக்களுக்கு வழங்குவ து.

9. ஆகுமாக்கப்பட்ட  (ஹலால்) சம்பாத்தியமே நிரந்தரம் என்பதை உறுப்பினர்களுக்கு கட்டாயமாக வழியுறுத்தி அதன்படியே செயல்பட தூண்டுவது.

10. AAF புதிதாக அமெரிக்கா வரும் அதிரை சகோதரர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகள் தங்குமிட வசதி, வேலை வாய்ப்பு ஆகியவைகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்னின்று உதவுவது.

11. சமூக கட்டமைப்பு உருவாக்குவது (சமூக கூடல், பொழுது போக்கு விடயங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் ஒன்று கூடல்)

12. இளைஞர்களுக்கு அவர்களின் எதிர்காலத்தினை செப்பனிட வழிகாட்டுவது.

13. AAF எவ்வகையிலும் நேரடியாக பள்ளிவாசல் கட்டிட நிதிக்காக பொருளாதார உதவியினை அதன் பொருளாதரத்திலிருந்து வழங்காது. உறுப்பினர்கள் தங்களின் சொந்த முயற்சியில் தனியாகவோ அலல்து கூட்டாகவோ நேரடியாக நிதி திரட்டுவதில் AAF எவ்வகையிலும் தலையிடாது.

14. AAF ஏழைக் குமர்களுக்கு அல்லது திருமண நிதி உதவிகள் செய்யாது.

15. அதிரை அல்லாத சகோதரர்கள் கூட்டமைப்பில் இணைந்து செயல்படலாம், அவர்கள் அமெரிக்காவில் அதிரையர்களுக்கு என்ன சலுகைகளோ அவையனைத்தும் பெறுவார்கள். ஆனால், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அந்த உதவி நீட்டிக்கப்படமாட்டாது.

16. கூட்டமைப்பின் நிகழ்வுகளை யாரும் முன் அனுமதியின்றி நேரடியாக மீடியாவிற்கு அனுப்பக்கூடாது அல்லது மின்னஞ்சல் பகிர்வுகள் செய்யக்கூடாது.

17. இறைவன் நாடினால், ஒவ்வொரு வருடமும் (முஹர்ரம் - துல்ஹஜ்) இஸ்லாமிய கால அட்டவணைப்படி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்


நிழ்வின் நிரலாக:- Meeting minutes:

நிகழ்வு சரியாக லுஹர் தொழுகைக்கு பின்னர் துவங்கியது. அனைவருக்கும் கோழி பிரியானி மற்றும் தந்தூர் கறி (ஃப்ரிமோண்ட்லிருந்து ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜசாகல்லாஹு கைரன்!

தகவல் : இக்பால் M.ஸாலிஹ்

16 Responses So Far:

aa said...

மாஷா அல்லாஹ் நல்ல முயற்சி. சம்பந்தப்பட்ட சகோதரர்களின் இஹ்லாஸான நிய்யத்திற்கு அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இறையச்சமும், நேர்த்தியும், நிர்வாகத் திறனும் பளிச்சென தெரிகிறது.வெகுசில தீர்மானங்களில் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருந்த போதிலும், முழுமனதாக வரவேற்கப்பட வேண்டிய முயற்சி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்ஹம்துலில்லாஹ் . சரியான தருணத்தில் மலர்ந்த இயக்கம்.ஹலால் சம்பாத்தியத்தின் அவசியம் குறித்து ஒரு ரூல்சாகவே போட்டிருப்பது வரவேற்க்கத்தக்கது. எந்த அமைப்பும் செய்யாதது. அல்லாஹ் வெற்றி நல்குவானாக

இப்னு அப்துல் ரஜாக் said...

Please provide contact numbers, emails Ids for those who elected.

Abdul Razik said...

Masha Allah
I really applaud the guys who were responsible to bring this organization. The aim of AAF are high valued, predominantly point No. 1, 4 and 10. Please fight to bring a harmony amongst us and help our penurious folks and unemployed youths. Allah will bless and pour his pity to grow up this organization and to stable as ceaseless.

Abdul Razik
Dubai

Unknown said...

அஸ்ஸாலமு அலைகும்
வாழ்துக்கல் சேவைகள் தொடரட்டும்

Shameed said...

அல்ஹம்துலில்லாஹ் வரேவேர்க்க தக்க விஷயம்.#சரத்து நான்கை மட்டும் கொஞ்சம் மறு பரிசிலினை செய்தால் நல்லது

(4. அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு, நம் சமூக சகோதரர்களின் இறப்பு மற்றும் அதற்கான இறுதிக் கடமைக்கான (கஃபன், நல்லடக்கம்] செலவினங்களை சந்தாதரர்களுக்கு மட்டுமே ஏற்கும்.)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சேவையில் சாதனை புரிய வாழ்த்துக்கள்!

நாட்டுக்கு நாடு அமைப்பின் நெறிமுறையில் மாறுபட்டாலும் "AAF" ... M ஐயும் சேர்த்து AAMF ஆக இருந்தால் ஏற்கெனவே அதிரையிலும் மற்ற சில நாடுகளில் துவங்கப்பட்ட AAMF க்கு உறுதுணையாக ஒரு பவர்Fபுல் அமைப்பாக இருக்குமே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ்...

புகைப்படத்தில்.. சிப்ளியை அடையாளம் காண முடியவில்லை, ஒருவேலை புகைப்படத்தித் எல்லைக்குள் சிக்காமல் இருந்திருக்கலாம். மாலிக் அடையாள தெரிகிறது, அட ! கிரவ்ன்(னு)... நல்லாயீங்களாப்பா !?

வேற... வேற.... !

Yasir said...

வாழ்த்துக்களும் துவாக்களும்...

Yasir said...

வாழ்த்துக்களும் துவாக்களும்...

Unknown said...

பதிவுக்கு நன்றி.இறைவனின் அருளால் உலகமெங்கும் வாழும் அதிரையர்கள் தங்களுக்குக்கான ஊர் சார்ந்த பொதுவான அமைப்பு அவசியமென்று உணர்ந்து செயல்பட்டு வருகிறார்கள் மாஷா அல்லாஹ். புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எண்ணங்களை மேன்படுத்தி செயல்களுக்கு வெற்றியை தருவானாக,,, AAF அமைப்பு விதிகள் அருமையான முறையில் வரையறுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சில விஷயங்கள் முன்னிறுத்தி செயல்படலாம். கல்வி, மார்க்க விழிப்புணர்வு,சுகாதாரம்,சமூக கட்டமைப்புக்கு உதவி புரிதல் போன்றவற்றை சேர்க்கலாம் என்பது என்னுடைய விருப்பம். மேலும் அதிரை AAMF யுடன் இணைந்து புரிந்துணர்வு அடிப்படையில் செயல்பட உலகமெங்கும் உள்ள அணைத்து அதிரை முஹல்லாகள் முன்வர வேண்டும். AAF வருடாந்திர நிர்வாகிகள் தேர்தல் முறை வரவேற்புக்குரியது.இதை அனைவரும் பின்பற்ற வேண்டும். பைத்துல்மால் நிதிஉதவி வழங்குவதற்கான தனி பிரிவு AAMF மேற்பார்வையில் செயல்பட வேண்டும் .மேலும் ஊரில் உள்ள AAMF யின் செயல்பாடுகளில் அனைவரும் சுயநலம் தவிர்த்து செயல்பட வேண்டும்.AAF என்பதை விட AAMF ( அதிரை அணைத்து முஹல்லா கூட்டமைப்பு ) என்பது சரியாக இருக்கும் என்று எல்லா அதிரை சகோதரர்களும் விரும்புவதால் அமைப்பின் நிர்வாகிகள் இக்கருத்தை ஏற்று மசூரா செய்து அமைப்பின் பெயரை பரிசீயிலனை செய்யலாம்.
,,,,,,,,,,,,
இம்ரான் கரீம்.M
அமீரக மக்கள் தொடர்பு செயலாளர்
சமூகநீதி அறக்கட்டளை
imran2mik@gmail.com

رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128

Canada. Maan. A. Shaikh said...

வாழ்த்துக்களும் துவாக்களும்..

Ebrahim Ansari said...

ஒற்றுமையே பலம். பாராட்டுக்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு