மனுநீதி மனித குலத்துக்கு நீதியா - திகுதிகுவென வளர்கிறது !
அதிரைநிருபரில் ஏராளமான வாசர்களின் பேராதரவைப் பெற்ற தொடர் !
சாட்டையாகச் சுழன்ற "மனுநீதி மனித குலத்துக்கு நீதியா!?" தொடர்!
சகோதரர் இபுராஹீம் அன்சாரி M.com., அவர்களால் எழுதி சமீபத்தில் வெளிவந்து - நிறைவடைந்த தொடர் !
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளையும், மனு நீதி என்றொரு வஞ்சக வலைப் பின்னலில் எண்ணிடலங்கா சிக்கல்களை ஒவ்வொன்றாக எடுத்தாய்ந்து எளிமையாக எடுத்துச் சொல்லும் ஆத்திச்சூடியாக வெளிவந்த தொடர்!
புத்தகவடிவில் உருவெடுக்கும் பனிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, சான்றோர்களின் கரம் பட்டு கம்பீரமாக வெளிவர இருக்கிறது இன்ஷா அல்லாஹ் !
விரைவில் புத்தக வெளியீட்டு நாள் அறிவிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் !
மற்றுமொரு இனிப்பு - அதிரைநிருபர் பதிப்பகம் பிரசவிக்கும் முதல் புத்தகம் இன்ஷா அல்லாஹ் !
அன்புடன்,
அதிரைநிருபர் குழு
27 Responses So Far:
//அதிரைநிருபர் பதிப்பகம் பிரசவிக்கும் முதல் புத்தகம் இன்ஷா அல்லாஹ் !//
அல்ஹம்துலில்லாஹ்!
டாக்டர் இப்றாஹிம் காக்கா அவர்களின் நூலைத் தொடர்ந்து என் கவிதைத் தொகுப்பு நூலுருவில் வெளியிட உங்களின் மேன்மைக்குரிய அதிரை நிருபர் வலைதளத்தின் இரண்டாம் புத்தகம் என்ற தகுதியை அடைய வேண்டி, இன்ஷா அல்லாஹ் உங்களிடம் வழங்கலாம் என்று விழைகின்றேன்.பலமுறை தடையாகிக் கொண்டே வந்த என் கவிதைத் தொகுப்பு உங்கள் கரங்களால் பதிப்பிக்கப்பட வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டமாகும்! மாஷா அல்லாஹ். இன்ஷா அல்லாஹ் பெருநாள் விடுப்பில், யான் யாத்து வைத்துள்ளவற்றைக் கோத்து ஒரு கோப்பில் இட்டுத் தருவேன். ஏற்கனவே, என் ஆசான் அவர்களின் கருத்துரையைப் பெற்று வைத்துள்ளேன்.
கோவை,சென்னை என்று திசை மாறிச் சென்ற என் கவிதை நூலின் பதிப்புரிமை இன்று இவ்வறிவிப்பைக் கண்டதும் உங்களின் புதிய பதிப்பகத்தில், அடியேன் பிறந்து, கலவி கற்றப் பாடசாலையாம் அதிரைப்பட்டினத்திலிருந்து வெளியாகிவிட்டால் அதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உங்களின் கருத்தை எதிர்பார்க்கின்றேன்.
இன்ஷா அல்லாஹ் டாக்டர் இப்றாஹிம் காக்கா அவர்கட்கு நேரில்- ஊரில் கண்டு வாழ்த்தினைச் சொல்ல ஓர் அரிய வாய்ப்பாக இவ்வறிவிப்பைக் கருதுகின்றேன்;ஜஸாக்கல்லாஹ் கைரன்.
மப்ரூக்!
பாரக்கல்லாஹு ஃபீக்கும்!
மப்ரூக்!
பாரக்கல்லாஹு ஃபீக்கும்!
வாழ்த்துக்கள்...
அருமையான தொடர்!
அல்ஹம்துலில்லாஹ்...
வாழ்த்துக்கள்! அதிரைநிருபர் குழு
ஜஸாக்கல்லாஹ் ஹைர் டாக்டர் இப்றாஹிம் காக்கா.்
`வலை தளத்தில் வரவேற்ப்பை
பெற்றது போல் நூல் வடிவிலும்
வெற்றியடைய வாழ்த்துக்கள்
புத்தகம் பதிப்பில் சாதனை படைக்க, அதன் முழு நிய்யத் நிறைவேற வாழ்த்தும், துஆவும்.
மப்ரூக். பாரக்கல்லாஹு ஃபீக்கும்.
கடன் வாங்கலாம் வாங்க - அலாவுதீன்
கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை - அதிரை அஹமது
கவியன்பனின் கவிதைகள்
படிக்கட்டுகள் - ஜாகிர் ஹுசேன்.
சகோதரியே - அலாவுதீன்
நபிமணியும் நகைச்சுவையும் - இக்பால் ஸாலிஹ்
ஆஹ்ஹா...அதிரை நிருபர் ரொம்ப பிஸி?
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்.சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்களின் இந்த புத்தகம் நிச்சயம் மிகப்பெரிய சமுதாய விழிப்புணர்வை தரும்.
இந்த புத்தகம் சமூக அநீதியை தட்டிக்கேட்கும் Non Governmental Organisations [NGO] இடமும் போய் சேர்ந்தால் நல்லது. மக்கள் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி இவைகளிலும் பேசப்பட்டால் அந்த புத்தகம் எழுதப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். அதிகமான மக்களை போய் சேரும்.
அன்பான சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜசக்கல்லாஹ் ஹைரண்.
இதுவரை கருத்துத் தெரிவித்த உங்கள் அனைவரின் அன்புக்கும், வரவேற்புக்கும் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறோம்.
தம்பி ஜாகிர் ஹுசைன் அவர்களின் ஆலோசனைப்படி இந்த நூலை அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியிலும் நாம் தொடர்ந்து ஈடுபடுவோம். சகோதரர் ஜெமீல் அவர்களின் நேரடியான ஆலோசனையின்படி புத்தகம் வெளியிடப்பட்டதும் தமிழகத்தின் முக்கிய பத்திரிகைகள் அனைத்துக்கும் மதிப்புரைக்காக அனுப்பி வைக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
தம்பி கவிஞர் சபீர் அவர்கள் பட்டியளிட்டுள்ளபடி அதிரை நிருபர் பதிப்பகத்தில் இருந்து தொடர்ந்து நூல்கள் வெளிவர இருக்கின்றன.
இவற்றுள் தம்பி சபீர் அவர்கள் எழுதியுள்ள தேன் கவிதைகளின் தொகுப்பும் அடங்க வேண்டுமென்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.
அனைவரின் து ஆக்களை வேண்டி நிற்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும். இந்த மேதையின் புத்தகவடிவிற்கு வாழ்த்துக்கள். அல்லாஹ் வெற்றியைத்தருவானாக ஆமின். பல மாற்று மத சகோதர்களுக்கு இதன் மூலம் ஹிதாயத்கிடைக்க அல்லாஹ் அருள்வானாக ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த மேதையின் புத்தகவடிவிற்கு வாழ்த்துக்கள்.
அல்லாஹ் வெற்றியைத்தருவானாக ஆமின்.
பல மாற்று மத சகோதர்களுக்கு இதன் மூலம்
ஹிதாயத்கிடைக்க அல்லாஹ் அருள்வானாக ஆமீன்.
அதிரை நிருபரின் முதல் குழந்தை ஆரோக்கியமாகவும் புஸ்டியகவும் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை
காரணம் அறிஞரின் எழுத்தை அதிரை அறிஞர்களின் மேற்பார்வையில் வெளியிட இருப்பதால்
மாஷா அல்லாஹ், வாழ்த்துக்கள் அ.நி.குழுவுக்கு,
வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் நாம் சிந்திக்கும் நிறைய தொடர்கள் வெளிவந்துக்கொண்டிருக்கிறது, அவற்றையும் புத்தக வடிவில் வெளிவிட வேண்டுகிறேன், குறிப்பாக “படிக்கட்டுகள்” எனக்கு முதல் பதிப்பு வேண்டும்...
//குறிப்பாக “படிக்கட்டுகள்” எனக்கு முதல் பதிப்பு வேண்டும்... //
இன்ஷா அல்லாஹ் !
//கடன் வாங்கலாம் வாங்க - அலாவுதீன்
கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை - அதிரை அஹமது
கவியன்பனின் கவிதைகள்
படிக்கட்டுகள் - ஜாகிர் ஹுசேன்.
சகோதரியே - அலாவுதீன்
நபிமணியும் நகைச்சுவையும் - இக்பால் ஸாலிஹ்
ஆஹ்ஹா...அதிரை நிருபர் ரொம்ப பிஸி?//
ஆம் ! ஒவ்வொன்றாக இன்ஷா அல்லாஹ் ! தற்போதைய கன்னி முயற்சியாதலால் அதிரைநிருபர் தளத்தில் வெளியான தொடர்களுக்கும், கட்டுரைகளுக்கும் "அதிரைநிருபர் பதிப்பகம்" வெளியீடுகளுக்கு முன்னுரிமை என்ற மசுரா முடிவை அமல் படுத்தி வருகிறோம் இன்ஷா அல்லாஹ் ! அதனைத் தொடர்ந்து இன்னும் பிற பயனுள்ள பதிப்புகள் வெளிவரும் !
இன்ஷா அல்லாஹ் !
When I was reading one of his article, I thought as why don’t he publish as a book? This is the time, we should support him to issue the treasured information by his valuable articles as a book and it must be reached all sort of people.
Abdul Razik
Dubai
இந்த புத்தகத்தின் சிறப்பம்சம் !
1. அட்டைப்படமே சொல்லும் மனுநீதி எவ்வாறென்று!
2. ஒவ்வொரு அத்தியாயத்தினைத் தொடரும் புதுமையான முயற்சி!
3. தொடர் வெளிவரும்போது மவுனமாக வாசித்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் புதுமை...
இன்னும் நிரம்ப இருக்கிறது... பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக !
ஸலாம் கூறிய அனைத்து நண்பர்களுக்கும் அலைக்குமுஸ்ஸலாம்.
நெறியாளர் அறிவிப்பு செய்ததுமே குவிந்து வரும் ஆதரவுகளைப் பார்த்து இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். பிழை திருத்தல், அச்சு வேலை, பைண்டிங்க் ஆகிய வேலைகள் இல்லாமல் ஒரு நூலைத் தரமுடியுமென்றால் இன்றே ஓடிவந்து உங்கள் கரங்களில் தந்துவிட ஆசைதான்.
அவ்வளவு ஆர்வத்தை அனைவரும் தந்து இருக்கிறீர்கள்.
மிகக் குறுகிய காலங்களே உங்கள் அனைவருடனும் தொடர்பு வைத்து பதிவுகளைத் தரும் எனக்கு, அதிரை நிருபர் பதிப்பகத்தின் முதல் நூலை வழங்கும் பெரும் பேற்றினைத் தந்து இருக்கிறீர்கள். இந்தப் பெருமை கிடைக்கச் செய்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
தரமான பதிவுகளைத் தயாராக தன்னகத்தே வைத்திருப்பதால் அதிரை நிருபர் பதிப்பகம் பீடு நடை போடும்.
இந்த நேரத்தில், இந்த நூல் வெளியீட்டுக்காக இரவு பகல் பாராமல் உழைப்பை நல்கும் அருமைத் தம்பி தாஜுதீன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைக் கூற ஆவலுருகிறேன் .
மீண்டும் அனைவருக்கும் நன்றி நண்பர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்களே!
அல்ஹம்துலில்லாஹ்.
ஜஸாக்கல்லாஹ் கைரன்
கற்றவர் சபையில் எனக்கோர் இடமளித்து, என் கவிதைத் தொகுப்பும் ஆன்றோர்களின் ஆக்கங்கள் நூலுருவில் அச்சிடப்படும் பட்டியலில் உண்டென்று அறிவித்து என்னை மகிழ்வித்த அதிரை நிருபர்க் குழுவினர்க்கு நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும். வாழ்த்துக்கள். இந்த புத்தகத்தை முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம்,கலைஞர், குமரிஅனந்தன், கவிஞர் வைரமுத்து ஆகியோருக்கு அனுப்பி வையுங்கள் தம்பி ஜாகிர் சொன்னதுபோல்இந்த புத்தகம் சமூக அநீதியை தட்டிக்கேட்கும் Non Governmental Organisations [NGO] இடமும் போய் சேர்ந்தால் நல்லது. மக்கள் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி இவைகளிலும் பேசப்பட்டால் அந்த புத்தகம் எழுதப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். அதிகமான மக்களை போய் சேரும்.
அலைக்குமுஸ்ஸலாம்.
ஜனாப். அப்துல் வாகித் அண்ணாவியார் அவர்களுக்கு, ஜசக்கல்லாஹ் ஹைரன். தங்களின் அன்பான ஆலோசனையை ஏற்று அதன்படி செய்கிறோம்.
இன்ஷா அல்லாஹ்.
ஒரு சிறந்த மனிதரின் சிறப்பான கட்டுரை...சிறந்துவிளங்க போகின்ற அ.நி பதிப்பகத்திலிருந்து வெளியிடப்போவது எங்களுக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி
வாழ்த்துக்களும் துவாக்களும் மாமா
அன்பான மருமகனார் யாசிர் அவர்களே!
ஒரு விதத்தில் இதற்கெல்லாம் முதலில் உங்களைப் பாராட்ட வேண்டும். அதிரை நிருபரில் பதிவுகளை அனுப்ப வேண்டுமென்று என்னைத் தூண்டியவர்கள் நீங்கள். வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்கள் தொடங்கிவைத்தது இப்போது ஒரு வெற்றிப் பாதையில் தொடர்கிறது.
//இப்போது ஒரு வெற்றிப் பாதையில் தொடர்கிறது.// உங்கள் வெற்றிநடையின் பின்னால் நாங்கலெல்லாம் வீறுநடைபோட்டு வருகின்றோம்
அதிரை நிருபரின் பாக்கியம் உங்களைப்போன்ற சமுதாயப் புரட்சியை ஏற்படுத்துபவர்களை பதிவர்களாக கொண்டது...அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்வைத்தந்து இந்த சமுதாயத்தின் பிணிகளை உங்களின் எழுத்திக்களின் மூலம் நீக்க துணைபுரிய தூவாச்செய்கின்றோம்
// என்னைத் தூண்டியவர்கள் நீங்கள்// இந்த பண்பு உங்களின் மீதான மரியாதையை மேலும் ஒரு படி உயர்த்தி இருக்கின்றது..உருண்டோடுகின்ற நல்ல ஆற்று தண்ணீர் பல இடங்களில் சென்று பயன் அளித்துகொண்டு இருக்கும்போது...ஏன் அ.நி-யில் கூடாது என்று கருதி சிறு வரப்பை நான் தோண்டினேன்...ஆனால் இன்று அந்த நீர் எங்களுக்கு எதிர்பார்த்தைவிட பலனையையும்,நன்மதிப்பையும் பெற்று தந்துகொண்டு இருக்கின்றது
வாழ்த்துக்கள் இப்ராஹீம் அன்சாரி காக்கா..நமதூர் எழுத்தாளர்களின் சேவைக்க்கு மீண்டும் நன்றி.
Post a Comment