Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறு மீள்பதிவாகட்டும்! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | November 24, 2012 | , , , , ,


இஸ்ரவேலர்களுக்கு
இதரவேலை இல்லை
பாலஸ்தீனத்தில்
பாவம் செய்வதைத் தவிர

கான்க்ரீட் கட்டடங்கள்
கற்குவியலாகின்றன
இடிபாடுகளுக்கிடையே
இஸ்லாமிய உடல்கள்
குற்றுயிரும் குலையுயிருமாய்க்
குழந்தைகள்

இந்தக்
கொலை நிகழ்ச்சிகளைக்
கலை நிகழ்ச்சிகளாய்க்
கண்டு களிக்கின்றன
அண்டை நாடுகள்;
மென்று விழுங்குகின்றன
உலக ஊடகங்கள்

காக்கை குருவிகளைப்போல்
காஸா தெருக்களில்
சுட்டு வீழ்த்தப்பட்ட
சனங்கள்
செங்குருதிச் சேற்றில்
சிதறிக் கிடக்க
அங்கஹீனம் செய்கிறார்கள்
பாலஸ்தீனத்தை

நாக்கைச் சப்புக்கொட்டி
நரபலி செய்து
நரமாமிசம் உண்ணும்
நயவஞ்சக நரிகள்...
நிலங்களை அரித்தனர்;
நிஜங்களை அழித்தனர்

தட்டிக் கேட்டவரை
அதட்டி வைத்தனர்
அமெக்க அரக்கனின்
ஆதரவோடு
பசித்த வயிறுகளுக்கு
ரவை புகட்டினர் -
துப்பாக்கி ரவை!

அருளாளனை நம்பியோர்க்கு
பொருளாதாரத் தடை
வயிறு பசித்தாலும்
வற்றுமோ வீரம்?
நாவினில் நீர்த்தாகம்
நெஞ்சிலே வேறு தாகம் - அது
நாட்டின் விடுதலைத் தாகம்

மாத்திரை மருந்துகளை
யாத்திரையின்போது கொண்டுசெல்லத்
தடை செய்ததால்
கொசுக்கடிகூட அங்கு
விஷக்கடியானது

தலைவெட்டைச் சற்று
தாமதப் படுத்தி
உலகின்
கண்கட்டும்போது
மின்வெட்டைக் கொண்டு
துன்புறுத்தினர்
கஸ்ஸாவிகளுக்கு
கற்கால வாழ்க்கை
தற்காலத்தில்!

மூச்சுக்காற்றை மட்டும்
முடக்க முடியுமெனில்
கஸ்ஸாவிகள் காலம்
கடந்தகாலம் ஆகியிருக்கும்

ஐநாவில் உறுப்பினர்களாய்
ஆணுமுண்டு, பெண்ணுமுண்டு
ஆனால் அவர்தம் ஆற்றலிலே
அடக்க ஆண்மையில்லை
அரவணைக்க பெண்மையில்லை

வருடக் கணக்கிற்குள்
வற்றிவிடும் இந்த
இம்மைக் கணக்கை
இறைவனிடம் சாட்டி
இருகரம் ஏந்துவோம்
வான்வழி வரலாறொன்றை
மீள்பதிவு செய்து
இஸ்ரவேலை ஆள்வதற்கு
இஸ்லாம் வரும்நாள்
வெகுதூரம் இல்லை!

சபீர்
நன்றி : சத்தியமார்க்கம்.com
http://www.satyamargam.com/2050

16 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆயிரம் குண்டுகளை விட சக்தி மிகுந்த தாக்குதல் !

//அருளாளனை நம்பியோர்க்கு
பொருளாதாரத் தடை
வயிறு பசித்தாலும்
வற்றுமோ வீரம்?
நாவினில் நீர்த்தாகம்
நெஞ்சிலே வேறு தாகம் - அது
நாட்டின் விடுதலைத் தாகம்//

விடியும் இன்ஷா அல்லாஹ் !

//ஐநாவில் உறுப்பினர்களாய்
ஆணுமுண்டு, பெண்ணுமுண்டு
ஆனால் அவர்தம் ஆற்றலிலே
அடக்க ஆண்மையில்லை
அரவணைக்க பெண்மையில்லை//

ஈனப்பிறவிகள் !

உருக்கும் கவிதை...!

KALAM SHAICK ABDUL KADER said...

பாலஸ்தீனமா
பாலகர்க்கீனமா

//அருளாளனை நம்பியோர்க்கு
பொருளாதாரத் தடை
வயிறு பசித்தாலும்
வற்றுமோ வீரம்?
நாவினில் நீர்த்தாகம்
நெஞ்சிலே வேறு தாகம் - அது
நாட்டின் விடுதலைத் தாகம்//

ஐநா சபை
பொய்நா சபை

ஆனால்,
அல்லாஹ்வின் தீர்ப்பு
வரும் என்பதே
அனைவரின் எதிர்பார்ப்பு

Shameed said...

//ஐநாவில் உறுப்பினர்களாய்
ஆணுமுண்டு, பெண்ணுமுண்டு
ஆனால் அவர்தம் ஆற்றலிலே
அடக்க ஆண்மையில்லை
அரவணைக்க பெண்மையில்லை//

சரியாக சொன்னீர்கள் அப்போ அவங்க எல்லாம் எட்டுக்கும் பத்துக்கும் இடைப்பட்டது

இப்னு அப்துல் ரஜாக் said...

வரலாறு மீள்பதிவாகட்டும்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இந்தியாவின்
இந்நிலை கண்டு
கண்ணீரே வடிகிறது.

அரபு நாடுகள்
அத்தனையும்
அமெரிக்காவுக்கு
அடிபணிகின்றன.

ஐநா இனி
அவசியமில்லை
அது ஒரு
அமெரிக்க கைப்பாவை

அல்லாஹ்வை அணுதினமும்
அஞ்சி இறைஞ்சுவதை கொண்டே
அந்நாடு சுபிட்சம்
அடையட்டும்.


ZAKIR HUSSAIN said...

பாலஸ்தீன மக்களுக்காக மலேசியா முழுக்க சிறப்புதொழுகை நடத்தப்பட்டது . 24/11/2012 வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பிறகு.

இத்தனை நாள் கொடுமையால் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் அவலங்களுக்கு தீர்ப்பை இறைவன் வழங்குவான் என்று எதிர்பார்ப்போம்.

இதுபோன்ற உன்கவிதைகள் அதிகம் பிரசுரிக்கப்படவேண்டும் என்பது என் ஆசை. இருப்பினும் தமிழில் இருப்பதால் தட்ட வேண்டிய கதவை தட்ட முடியுமா என்று சிந்திப்பதுண்டு.

தட்டுவதற்கு தகுதியுள்ளவர்கள் தமிழர்களாய் இருந்து விட்டால் அவர்களின் மனதை இந்த கவிதை நிச்சயம் தட்டி எழுப்பும்.




crown said...

தட்டிக் கேட்டவரை
அதட்டி வைத்தனர்
அமெக்க அரக்கனின்
ஆதரவோடு
பசித்த வயிறுகளுக்கு
ரவை புகட்டினர் -
துப்பாக்கி ரவை!
----------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.
ஆமாம் கவிதையாக சொல்லக்கூட மன வெதும்பும் பரிதாப நிலை! ரவைகளை உணவாக்கியவர்கள் அந்த ரவையின் மூலம் நம் இளம் சமுதாயத்தையும் வருத்தெடுக்கும் கொடூரம். அவர்கள் இரவையும் பகல் போல் ஆக்கினர் குண்டு பொழிந்து பகலையும் இருட்டாக்கினர்.ஐ. நா ஐய(ம்) கொண்ட நா" நமக்கு பரிந்துபேசாத நா". நாணயம் இல்லாத நா' இதற்கெல்லாம் இன்சாஅல்லாஹ் ஒரு விடியல் பிறக்கும்.அன்று பாலஸ்தீன முழுவதும் நம் தேசமாய் இருக்கும். ஆமீன்.

Iqbal M. Salih said...

இமாம் மஹ்தியின் தலைமையில் அனைத்து முஸ்லிம்களும் ஒருங்கிணையும் காலம் வெகுதூரத்திலில்லை!

Yasir said...

உலகம் இவ்வளவு வளர்ச்சி அடைந்தும்...காசாவை 40 வருடம் பின்தங்கி வைத்து ஒரு திறந்த சிறைச்சாலையாக வைத்து ஒருக்கின்றது...இந்த பிலாய் பிடித்த இஸ்ரேல்....இன்னொரு ஹிட்லர் பொறக்காமேயா போகப்போறான்....நெஞ்சை பிழியும் கவிதை

KALAM SHAICK ABDUL KADER said...

போர்கள் மற்றும் கலவரத்தின் போது

اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اللَّهُمَّ اهْزِمْ الْأَحْزَابَ اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(B), ஸரீஅல் ஹிஸாபி(B), அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப்(B), அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும்.

இதன் பொருள் :

இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக!

ஆதாரம்: புகாரி 2933, 4115

அல்லது
اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الْأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(B) வமுஜ்ரியஸ் ஸஹாபி(B) வஹாஸிமல் அஹ்ஸாபி(B) இஹ்ஸிம்ஹும் வன்ஸுர்னா அலைஹிம்.

இதன் பொருள் :

இறைவா! வேதத்தை அருளியவனே! மேகத்தை நடத்திச் செல்பவனே! எதிரிகளைத் தோல்வியுறச் செய்பவனே! இவர்களைத் தோல்வியுறச் செய்! எங்களுக்கு உதவி செய்!

ஆதாரம்: புகாரி 2966, 3024

Anonymous said...

ஆம்ஸ்டர்டாமில் நடந்த காஸா போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் (17.11.12) முன்வரிசையில் கலந்து கொண்ட யூத மதகுரு.

இஸ்ரேல் என்பது யூதர்களின் தாயகம் என்றும், அது பாலஸ்தீனர்களை மட்டுமே அடக்குவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால், உலகில் எத்தனையோ யூதர்கள், இஸ்ரேல் என்ற தேசத்தையும், சியோனிசக் கொள்கையையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் இஸ்ரேலில் வாழ்ந்தால், அரசு சிறையில் போட்டு சித்திரவதை செய்கின்றது. வெளிநாடுகளில் வாழ்ந்தால், வாயை அடைக்க வைக்க பல்வேறு வழிகளில் முயல்கின்றது. மாறுபட்ட அரசியல் கொள்கை காரணமாக, இஸ்ரேலிய அரசினால் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட யூத மதகுரு ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அவர் இறுதியில் விடுதலை செய்யப்பட்டு, நெதர்லாந்து வந்து சேர்ந்து, தற்பொழுது ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கின்றார ஆனால், அவரின் மனைவியையும், மகனையும் இஸ்ரேலிய அரசு தடுத்து வைத்திருப்பதால், அவர்களை பிரிந்து வர வேண்டிய அவலம் நேர்ந்தது. இன்று வரையில், தனது மனைவியும், மகனும் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாமல் தவிக்கிறார்.

Josef Antebi என்ற யூத மதகுரு, ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்த, "காஸா போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்" கலந்து கொண்டார். அப்போது தான் முதன்முதலாக அவரைப் பற்றி நான் கேள்விப் பட்டேன். ஆர்ப்பாட்டத்தில் முன்வரிசையில் நின்ற அவரை படம் எடுத்து, அதனை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். அந்தப் படம், பலரைக் கவர்ந்திருந்தது. (அந்தப் புகைப்படத்தை இங்கே இணைத்துள்ளேன்.) காஸா போர் எதிர்ப்பு பேரணி என்றால், அரேபியர்கள், அல்லது முஸ்லிம்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்திருப்பார்கள் என்பது பலரின் எதிர்பார்ப்பு. ஆனால், ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பல்லின மக்கள் பங்களித்திருந்தனர். பெருமளவு (இடதுசாரி) டச்சுக் காரர்களும் வந்திருந்தனர். ஆனால், யூதர்கள் அதிலும் மதகுருக்கள் கலந்து கொள்வார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இங்கேயுள்ள படத்தில் காணப்படும், ஜோசெப் என்ற யூத மதகுரு, வருகிற திங்கட்கிழமை காஸா போகப் போவதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு தான், அவரைப் பற்றிய தகவல்கள் பல எனக்குத் தெரிய வந்தன.

இன்றைய இஸ்ரேலில் வாழும், 90 சதவீதமான யூதர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தேறிய குடிகள் ஆவர். அன்றைய பிரிட்டிஷ் காலனியான பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்கள், இன்று சொந்த நாட்டில் சிறுபான்மையினராக உள்ளனர். ஐரோப்பிய யூதர்கள் குடியேறும் வரையில், பாலஸ்தீனத்தில் யூதர்களும், அரேபியர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கிடையில் இனப்பகை சிறு துளியேனும் இருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சியோனிசம் என்ற கொள்கை வழி நடந்த தேசியவாத யூதர்கள், பாலஸ்தீனத்தில் வந்து குடியேறினார்கள். இரண்டாம் உலகப்போருக்கு முன்னும், பின்னும் ஆயிரக்கணக்கான ஐரோப்பிய யூதர்கள் வந்து குடியேறியதால், அவர்களுக்கான வசிப்பிடங்களை உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டது. அதுவே பிற்காலத்தில், "இஸ்ரேல் என்ற தேசத்திற்கான சுதந்திரப் போர்" என்று அழைக்கப் படலாயிற்று. வந்தேறுகுடிகளான ஐரோப்பிய யூதர்கள், பாலஸ்தீனத்தில் வாழ்ந்த அரேபியரின் நிலங்களை அபகரித்து, குடியேற்றங்களை உருவாக்கினார்கள். நில அபகரிப்பை எதிர்த்த அரேபியரை தாக்கினார்கள். அப்போது அங்கு வாழ்ந்த "பாலஸ்தீன யூதர்கள்", அரேபிய அயலவரின் பக்கம் நின்று போராடினார்கள்.

தொடரும்... 1/2

Anonymous said...

தொடர்கிறது.... 2/2

தற்பொழுது ஆம்ஸ்டர்டாமில் வசிக்கும் யூத மதகுருவான ஜோசெப், ஒரு பாலஸ்தீன யூதராக, பாலஸ்தீனத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் தனது வாழ்க்கை கதையை, சுருக்கமாக கூறினார்:
"நான் ஒரு பாலஸ்தீன யூத குடும்பத்தை சேர்ந்தவன். பாலஸ்தீன விவசாயிகளுடன் சமாதானமாக வாழ்ந்து வந்தோம். யூதர்கள் அல்லாத பாலஸ்தீனியர்கள் மீதான சியோனிச தாக்குதல்களை ஒன்று சேர்ந்து எதிர்த்து வந்தோம். அதற்காக நான் பெரியதொரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. என்னைப் போன்ற, பாலஸ்தீனத்தில் பிறந்த யூதர்கள், சியோனிசத்தை எதிர்த்து போராடுவதை இஸ்ரேலிய அரசினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னை கடத்திச் சென்று, சிறையில் அடைத்து வைத்தார்கள். சித்திரவதை செய்தார்கள். கடைசியில் நாட்டை விட்டு வெளியேறினேன். நான் எனது மனைவியை இழந்தேன். எனது மகனை பதினெட்டு வருடங்களாக பார்க்கவில்லை. அதனால் இப்போதும் வருந்திக் கொண்டிருக்கிறேன். பிறந்த இடத்தை விட்டு வெளியேறுவது எத்தனை வேதனையானது என்பது எனக்குத் தெரியும். பிள்ளையை இழப்பது எந்தளவு வலி எடுக்கும் என்பது எனக்குப் புரியும். அதனால் தான், காஸாவில் அல்லலுறும் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக, நான் அங்கே செல்லவிருக்கிறேன்."

வருகிற திங்கட்கிழமை, ஆம்ஸ்டர்டாமில் இருந்து செல்லும் குழுவில் ஜோசேப்பும் இடம்பெருகிறார். அந்தக் குழுவினர் முதலில் எகிப்து சென்று, எல்லை கடந்து காஸாவினுள்ளே நுழைய இருக்கின்றனர். இஸ்ரேலியப் படைகளின் முற்றுகைக்குள் சிக்கியுள்ள காசாவில், அவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு மனிதக் கவசமாக தங்கியிருப்பார்கள்.

கீழேயுள்ள வீடியோவில், யூத மதகுருவான ஜோசெப் சியோனிசத்திற்கு எதிராக போராடுவதற்கான காரணங்களை முன்வைக்கின்றார்:

http://www.youtube.com/watch?v=DIT9sLz29iQ&feature=player_embedded
இஸ்ரேலில் தடுத்து வைக்கப் பட்டுள்ள மனைவியையும், பிள்ளையையும் இழந்து தவிக்கும் யூத மதகுரு ஜோசெப் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி:

http://www.youtube.com/watch?v=6S8ZDtaK8Pc&feature=player_embedded
--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

Anonymous said...

இஸ்ரேல்:ஃபலஸ்தீன் போராட்ட வரலாற்றில் முக்கிய தினமாக கடந்த வியாழன் (15/1
1/2012) அன்று அமைந்தது, ஃபலஸ்தீன் போராளிகளின் தீரமிக்க நாயகன் அஹ்மத் ஜஃபரி கடந்த புதன்கிழமை 14112012சியோனிச பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார், அவரது இரத்தக்கறை உலரும் முன்னரே பதிலடி கொடுத்தது ஹமாஸின் ராணுவ பிரிவான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம். ஹிஜாரத்துஸ்ஸிஜ்ஜீல் என்ற பதிலடித் தாக்குதலில் ராக்கெட்டுகள் சரமாரியாக இஸ்ரேலின் தலைநகரான டெல் அவீவை தாக்கின....

டெல் அவீவின் இதய பகுதியை ஃபலஸ்தீன் போராளிகளின் ராக்கெட்டுகள் தாக்கும் என்பதை இஸ்ரேல் மக்களோ, அரசோ கனவில் கூட எண்ணவில்லை, கடந்த 16/11/2012 அன்று 300க்கும் மேற்பட்ட ராக்கெட்டுக்களை அல் கஸ்ஸாம் இஸ்ரேல் மீது ஏவுயுள்ளது, இதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர், பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர், ஒரு உளவு விமானம் வீழ்த்தப்பட்டுள்ளது என்பது அங்கிருந்து வரும் செய்தியாகும்,

தாங்கள் பாதுகாப்பானவர்கள் என்பது அண்மைக்காலமாக இஸ்ரேல் மக்கள் கருதியிருந்தனர், அமெரிக்க-மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்ற எங்களை ஏழ்மையில் வாடும் ஃபலஸ்தீனர்களின் எதிர்ப்புப் போராட்டம் என்ன செய்துவிடும் ? என்று மனப்பால் குடித்தனர், ஆக்கிரமிப்பு அரசான இஸ்ரேல் உருவாகி 64 ஆண்டுகள் நிறைவுறுகின்றன,

அதனிடையில் கடந்த 40 ஆண்டுகளாக டெல் அவீவை ஒரு ராக்கெட் கூட தொட்டதில்லை ஆனால் தற்போது வரலாறு திசை திரும்பியுள்ளது, அல் கஸ்ஸாமின் ராக்கெட்டுகள் டெல் அவீவின் நெஞ்சை பிளந்துள்ளது, கடந்த சில பத்தாண்டுகளுக்கு பிறகு டெல் அவீவில் முதன் முதலாக அபாயமணி முழங்கியுள்ளது, ஃபலஸ்தீன் எதிர்ப்புப் போராட்ட போராளிகளின் ராக்கெட்டுகள் தங்களின் இதய பகுதியில் தாக்கியதால் ஏற்பட்ட மரண ஓலத்தின் அதிகாரப்பூர்வ குரலாக அபாயமணி ஒலித்தது,

தாக்குதல் நடக்கும் வேளையில் சியோனிச ராணுவத்தின் தலைமையகத்தின் உள்ளே பதுங்கி இருந்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தனது இரண்டு உதவியாளர்களுடன் பாதுகாப்பு மையத்தை நோக்கி உயிரைக் காப்பாற்ற ஓடினார் பிரதமர் என்று சியோனிச இணையதள பத்திரிகையான Yedioth Ahronot கூறுகிறது,

இஸ்ரேல் - ஃபலஸ்தீன் போராட்ட வரலாற்றில் முதன் முறையாக டெல் அவீவில் ராக்கெட்டுகள் தாக்கியதை கண்டு சியோனிச சமூகம் அஞ்சி நடுங்கியதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன, டெல் அவீவில் அபாய மணி ஒலித்ததும், ஓலமிட்டவாறும், அழுதுகொண்டும் மக்கள் அங்குமிங்கும் ஓடியதாக குத்ஸ் ப்ரஸ் கூறுகிறது.

தொடரும் 1/2

Anonymous said...

தொடர்கிறது... 2/2

டெல் அவீவில் ஆசிரியரான உஸாமா பர்ஹம் இவ்வாறு கூறுகிறார்: நான் வழக்கமாக காணும் தைரியத்தையும், கோபத்தையும் இஸ்ரேலிய ராணுவ வீரர்களின் முகத்தில் காணமுடியவில்லை. மாறாக அழுகையும், துக்கத்தையும் தான் பார்க்க முடிந்தது.

அதுமட்டுமல்ல, காஸ்ஸாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளில் இருந்து தங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி டெல் அவீவில் இஸ்ரேலிய குடிமகன்கள் போராட்டத்தை நடத்தினர். அபாயத்தைக் குறிக்கும் சிவப்பு உடையை அணிந்துகொண்டு அவர்கள் நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பேர் கலந்துகொண்டனர்.

சொந்த குடிமக்களின் பாதுகாப்பிற்கு கூட உத்தரவாதம் இல்லாத இஸ்ரேல் அரசின் கபடவேடத்தை அம்பலப்படுத்தும் விதமாக டெல் அவீவில் ராக்கெட்டுகள் தாக்கிய சம்பவம் வெளிப்படுத்துவதாக எகிப்தின் முன்னாள் ராணுவ அதிகாரியும், தற்போதைய ராணுவ நிபுணருமான ஸஃப்வத் ஸய்யாத் கூறுகிறார். இஸ்ரேல் ராணுவத்தால் காஸ்ஸாவின் மீது ஆக்கிரமிப்பை நடத்தவியலாது என்று ஸஃப்வத் ஸய்யாத் கருத்து தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தலைமையை ’மீண்டும் தோல்வியை தழுவிய முட்டாள்கள்’ அவர் வர்ணித்துள்ளார்.

அதேவேளையில், காஸ்ஸாவின் நிலை மாறுபட்டதாகும். இரத்த சாட்சிகள் அவர்களுக்கு புதிதல்ல. அல் கஸ்ஸாமின் புதிய தாக்குதல் காஸ்ஸா மக்களுக்கு புத்துணர்ச்சியையும், தன்னம்பிக்கையையும் அளித்துள்ளது. தங்கள் மீது வட்டமிடும் இஸ்ரேலின் போர் விமானங்களுக்கு அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவில்லை. தற்போதைய தாக்குதலில் பதினேழுபேர் ஷஹீதான பிறகும் காஸ்ஸா மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

வரலாற்றில் முதன் முறையாக சியோனிஸ்டுகளின் தலைநகரை கஸ்ஸாமின் ராக்கெட்டுகள் தாக்கியது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் நவீன உலோக பாதுகாப்பு கவசத்தை உடைத்து அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது கஸ்ஸாமின் ராக்கெட்டுகள். உலக ஆயுத சந்தையின் உரிமையைக் கொண்டாட தக்க காரணமாக உலோக கவசத்தைக் குறித்து இஸ்ரேல் தம்பட்டம் அடித்தது. அல் கஸ்ஸாமின் ஃபஜ்ர் ராக்கெட்டுகளின் முன்னால் இஸ்ரேலின் எல்லாவித பெருமைகளும் தகர்ந்துவிட்டன.

எதிர்ப்பு போராட்டத்தின் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதை காஸ்ஸா மக்கள் தெரிவிக்கின்றனர். வேதனையில் மூழ்கியிருக்கும் காஸ்ஸா மக்களுக்கு உள்ளத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தும் நிகழ்வே டெல் அவீவில் ராக்கெட்டுகள் தாக்குதல்கள்.

இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்று வரும் அஹ்மத் கூறிய வார்த்தைகள் காஸ்ஸா மக்களின் நிலைகுலையாமைக்கு உதாரணமாகும். அஹ்மத் கூறுகிறார்: ”எங்களுக்கு வேதனை இருக்கலாம். ஆனால், நாங்கள் உறுதியாக நிற்போம். ஃபலஸ்தீன் விடுதலைக்காக எங்கள் இதயத்தை பறித்து வழங்குவோம். நாங்கள் அழுவதற்கு எதுவுமில்லை.”

ஆம், ஃபலஸ்தீன் மக்கள் எதிர்த்துப்போராட்டத்தை தொடரத்தான் செய்வார்கள். பழைய கால அரபு ஆட்சியாளர்களிடமிருந்து மாறுபட்டு துணிச்சல் மிக்க அரசுகள் தற்பொழுது அவர்களுக்கு உதவ தயாராக இருக்கின்றார்கள். இது ஓர் நற்செய்தியாகும். எகிப்து ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாகவே உள்ளது. ஆட்சியில் அமர்ந்த உடனேயே எகிப்திய அரசு அவசரமாக இரண்டு செய்திகளை அனுப்பியது.

முதல் செய்தி ஃபலஸ்தீன் மக்களுக்கு. தடையால் வாடும் மக்களுக்கு எகிப்து அனைத்து வித உதவிகளையும் வழங்கும் என்பதே அச்செய்தி. 2-வது செய்தி இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது. அதில், ஃபலஸ்தீனை தாக்கும்பொழுது எகிப்து கையை கட்டி வாயைப் பொத்திக்கொண்டு பார்வையாளராக இருக்காது என்ற எச்சரிக்கையாகும். காஸ்ஸாவிற்கு நிவாரணப்பொருட்களை அளிப்பதற்காக, அவர்களுடன் இருக்கிறோம் என்ற ஒற்றுமை உணர்வை அறிவிப்பதற்காக தங்கள் நாட்டு பிரதமரின் தலைமையில் ஒரு குழுவை காஸ்ஸாவிற்கு அனுப்பியுள்ளது எகிப்து.
--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

KALAM SHAICK ABDUL KADER said...

பாலஸ்தீன நாடு இன்றைக்கு உலகத்திற்கே வழிகாட்டும் அளவிற்கு ஓர் அரசியல் புரட்சியைச் செய்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைக்குக் காசா ஸ்டிரிப் எனப்படும் பகுதியும், மேற்குக் கரை எனப்படும் பகுதியும் சேர்த்து ஒரு சிறு பகுதி மட்டுமே பாலஸ்தீன நாடாகக் கருதப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக விளங்கும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் பக்கத்து நாடு. பாலஸ்தீனம் இஸ்ரேலின் பக்கத்து நாடு என்பதால் தினசரிப் பாலஸ்தீனத்தை எட்டிப்பார்ப்பது தான் இஸ்ரேலின் வேலையாக இருக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்துப் பாலஸ்தீனத்தின் மீது இராணுவ நடவடிக்கைகளை எடுப்பதும், இராணுவத் தாக்குதல் நடத்துவது தான் இன்றைய அன்றாட நிகழ்வுகளாக இருக்கின்றன. பாலஸ்தீனத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகள் அந்தத் தேசத்தை மேலும் மோசமாக்கியிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் தான் மேற்குக் கரைப் பகுதியில் உள்ள அல்லார் என்ற 9000 பேர்கள் மக்கள் தொகைக் கொண்ட சிறு நகரத்தின் நகராட்சி மேயராகப் பதினைந்தே வயதானப் பள்ளிக்கூடம் செல்லும் இளம் பெண் பஷீர் ஒத்மான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என்பது பாராட்டுதற்குரியது - போற்றுதற்குரியது. ஓர் இளம் பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என்பது, இளைஞர்கள் மத்தியில் ஆளுமைக் குணத்தையும், தலைமைப் பண்பையும் வளர்க்கும் கூடிய முற்போக்கானச் சிந்தனையாகும்.
மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பஷீர் என்ற அந்தப் பெண்ணை வெறும் சம்பிரதாயமாகவோ பெயரளவிலோ மேயராக அலங்கரித்து அழகு பார்க்காமல், நகராட்சி அதிகாரங்களை அந்தப்பெண்ணின் கையில் கொடுத்திருப்பது என்பது பாராட்டுதற்குரியது. அந்தப் பெண்ணே தன்னிச்சையாக நகராட்சி அலுவல்களைக் கவனிக்கிறார். கோப்புகளில் கையெழுத்திடுகிறார். நகராட்சிக் கூட்டங்களைத் தலைமைத் தாங்கி நடத்துகிறார். மக்களைச் சந்தித்துக் குறைகளைஜ் கேட்கிறார். மக்கள் கூட்டங்களில் சுதந்திரமாகப் பேசுகிறார். பொது விழாக்களில் கலந்துகொள்கிறார். இவைகளுக்கு நடுவில் இந்தப் பெண் படிப்பதற்குப் பள்ளிக்கும் சென்று வருகிறார்.
மிகப்பெரிய மக்கள் பணியைச் செய்யும் பஷீர், மக்களைக் கவர்ந்திழுக்கும் பலம் வாய்ந்தத் தலைவராகத் திகழ்கிறார் என்று மேற்குக் கரைப் பகுதி மக்கள் சொல்கிறார்கள். அந்த மக்கள் இவரைப் பெரிதும் விரும்புகிறார்கள். எதிர்காலத்தில் தன் நாட்டை ஆளக்கூடிய பெரிய தலைவராக வரவேண்டும் என்பதே பஷீரின் ஆவலும், கனவும், இலட்சியமும் ஆகும். உலகத்திலேயே சிறு வயது மேயரான பஷீர் ஒத்மான் தனது இலட்சியத்தில் வெற்றிபெற நாமும் வாழ்த்துவோம்.

KALAM SHAICK ABDUL KADER said...

வென்றதுப் பலஸ்தீன்! தோற்றன அமெரிக்காவும் இஸ்ரேலும் !!


அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் பலத்த எதிர்ப்பையும் மீறி ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடல்லாத பார்வையாளர் அந்தஸ்தினைப் பலஸ்தீன் நேற்று தனதாக்கிக் கொண்டது.

193 நாடுகளில் பலஸ்தீனுக்கு ஆதரவாக 138 நாடுகளும் எதிராக 9 நாடுகளும் வாக்களித்தன. 41 நாடுகள் வாக்களிப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

நேற்று நியூயோர்க் நகரில் இடம்பெற்ற ஐ.நா. கூட்டத்தொடரில் உரையாற்றிய பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், பலஸ்தீனை அங்கீகரித்து அதற்கான பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்காக வாக்களிக்குமாறுச் சகலரிடமும் வேண்டிக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார் .

பலஸ்தீனுக்குக் கிடைத்த இந்த அங்கீகாரமானது, மேற்குக் கரை, கிழக்கு ஜெரூசலம், காஸா பள்ளத்தாக்கு என்பனப் பலஸ்தீனின் நிர்வாகத்திற்குட்பட்டப் பகுதிகளே என்பதற்காக மறைமுக அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த அங்கீகாரத்தின் மூலம் பலஸ்தீன், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திலும் ஐ.நா. முகவர் நிறுவனங்களுடனும் இணைந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல், கனடா, செக் குடியரசு, மார்ஷல் தீவு, மிக்ரோனேசியா, நாஉரு, பலாஉ, பனாமா ஆகிய 9 நாடுகளே பலஸ்தீனுக்கு எதிராக வாக்களித்தவையாகும்.

பலஸ்தீனுக்கு ஐ.நா.வில் உறுப்பு நாடல்லாத பார்வையாளர் அந்தஸ்து க்கிடைத்ததைத் தொடர்ந்து அங்குப் பாரிய மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மக்கள் வீதிகளில் இறங்கி ஆடிப் பாடியும் பலஸ்தீனக் கொடிகளை அசைத்தும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நேற்றைய தினம் வாக்கெடுப்பு இடம்பெறுவதை முன்னிட்டுப் பலஸ்தீனிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் பலஸ்தீனுக்கு ஆதரவானப் பாரியப் பேரணிகள் இடம் பெற்றிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.



குறிப்பு: என் முகநூல் நண்பர் இலங்கையிலிருந்து எனக்கு அன்னுப்பிய இச்செய்தியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு