அளவற்ற
அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
மனைவியிடம்
கணவனின் உரிமைகள்:
சிலரை
விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள்.
(அல்குர்ஆன்:4:34)
''ஒருவன்
தன் மனைவியை இல்லறத்திற்கு அழைத்து, அவள் வரமறுத்து, இதனால் அவள் மீது அவன் கோபமாக இருந்தால், விடியும் வரை வானவர்கள் அந்தப் பெண்ணை சபிப்பார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 281)
''ஒரு பெண், அவளின் கணவன் ஊரில் இருக்கும் சமயம் அவனின்
அனுமதியின்றி (நபில்) நோன்பு வைத்தல் கூடாது. மேலும் அவனின் அனுமதியின்றி அவனது
வீட்டினுள் (எவரையும்) அனுதிக்கக் கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 282)
''நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களாவீர். உங்களில் அனைவரும்
அவரது பொறுப்புப்பற்றி கேள்வி கேட்கப்படுவீர். ஒரு தலைவர் பொறுப்பாளியாவார். ஒரு மனிதர், தன் குடும்பத்தாருக்கு பொறுப்பாளியாவார்.
ஒரு பெண் தன் கணவனின் வீடு, மற்றும்
குழந்தைக்கு பொறுப்பாளியாவாள். நீங்கள் அனைவரும்
பொறுப்பாளர்களாவீர். உங்களில் அனைவரும் தன் பொறுப்புப் பற்றி கேள்வி கேட்கப்படுவீர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 283)
''ஒரு மனிதரை மற்றொரு மனிதருக்கு 'ஸஜ்தா' செய்ய நான் கட்டளையிடுதாக இருந்தால் ஒரு பெண்ணை
அவளின் கணவனுக்கு 'ஸஜ்தா' செய்யும்படி கட்டளையிட்டிருப்பேன்'' என நபி(ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 285)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ்
வளரும்...
அலாவுதீன்.S
5 Responses So Far:
//சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன்:4:34)//
Of course, A woman is a fragrant flower in a garden. Her husband is the fence around it!
பொறுப்புடன் வழங்கப்பட்ட அருமருந்து !
ஜஸாக்கல்லாஹ் ஹைர் ! காக்கா...
குரான் தொடாத சப்ஜெக்ட் இல்லை
குரான் ஒரு வாழும் அற்புதம்
மாறுகின்ற உலகில் என்றும் மாறாத
அற்புத வேதம்
Unchanging code
In the changing world
அருமருந்து தந்து குணப்படுத்திவரும் அலாவுதீனுக்கு ஃபீஸாக, நன்றியும் துஆவும்.
அவசியம் வாராவாரம் தேவைப்படும் இன்சுலின் அலாவுதீன் காக்காவின் அருமருந்து
Post a Comment