Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

விரைவில் விரைவு எக்ஸ்பிரஸ் - கம்பன் ஏமாந்தான் ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | November 02, 2012 | , , , , , ,


அதிரையின் மனம் கவர்ந்த மண்வாசனை எழுத்துக்குச் சொந்தக்காரர் மண்ணின் மைந்தன் அதிரைநிருபரில் வழக்காடு சொல்லால் வசீகரிக்கும் மு.செ.மு. நெய்னா முஹம்மது அவர்கள் சமீபத்திய கருத்தாடல் ஒன்றில் கீழ் கண்டவாறு கூறினார்கள்.

"மக்களின் உள்ளம் எல்லாம் அகன்றே இருக்கிறது அந்த அகன்ற ரயில் பாதையைத்தவிர."

அதிரை மக்களின் உள்ளம் பரந்து விரிந்த மனைகள்போல் இருக்கிறது ஆனால் அரசியல் சூழ்ச்சிக் காரர்களின் எல்லைக் கல் ஆங்காங்கே ஊன்றியிருப்பதால் எவர் எல்லை அவர் எல்லை என்று விளையாட்டுகள் தண்டவாளத்தில் ஏறி ஓடுகிறது.

அவை ஒருபக்கம் இருக்கட்டும், செல்லும் ஊர்களிலெல்லாம் காணும் இந்த இரயில் சப்தம் அன்றுபோல் என்றுமே அதிரையிலும் அதிகாலையிலும் அந்திமாலையிலும் கேட்காதா என்ற ஏக்கத்தில் எழுந்த கற்பனையே இந்தக் காணொளி....

சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளத்தானே அன்றி ஆனந்தபடுவதற்கு அல்ல...!

இது பண்பட்ட செயலா ? அல்லது கூனியப்பார்வையில் பண்படாத செயலா ?



அதிரைநிருபர் குழு

18 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

இந்த முன்னோட்டம் நடைமுறையில் நடந்தால்...நினைக்கவே சந்தோசமாக இருக்கிறது.

இரயில் பயணம் வாழ்க்கையோடு ஒன்றிய ஒரு விசயம் என்பது எல்லோருக்கும் தெரிகிறது....ரயில்வே நிர்வாகத்துக்கு மட்டும் கடைசிவரை தெரியவில்லையோ???

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இந்த சிறியோனின் பெயரை இந்தக்கட்டுரையில் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றிகள்.

"சென்ட்ரல்லெ அஞ்சி வருச ஆட்சியிலெ பதினஞ்சி தடவை ரயில்வே துறை மந்திரியை மாற்றினால் இந்த அகலப்பாதை திட்டமெல்லாம் அலிலப்பர் கொண்டு அழிக்கப்பட்ட பாதையாகி விடாதா என்ன?"

மொதல்ல ஒரு உருப்படியான மந்திரியை இத்துறைக்கு நிரந்தரமாக நியமித்த பின் பிறகு கனவு காணுங்கள் மக்களே! என்று சொல்கிறார்களோத்தெரியவில்லை.

இன்ஷா அல்லாஹ்! வர்ர லீவுலெ ஊருக்கு வரும் பொழுது என் குடும்பம், பிள்ளைகளைக்கூட்டிக்கொண்டு நம்மூர் ரயிலடிக்கு ஒரு மினி டூர் ஏற்பாடு செஞ்சி அங்கு அழைத்துச்சென்று இது தான் "நீன்ல்லாம் பொறக்குறதுக்கு முன்னாடி" கம்பன் என்று சொல்லிக்கொண்டு ஒரு ரயில் ஓடிய இடம் இது என்று காமிச்சிட்டு வரலாண்டு இருக்கிறேன்.

Anonymous said...

அதிரையின் குறுகிய ரயில் பாதையை தூக்க முன்னாடியை உன் குடும்பத்தையும்,பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு போய் சுற்றி காட்டு. இந்த ரயில் நிலைய பயணத்தை நிற்பாட்டி விடாதே. இப்போ உள்ள பிள்ளைகளுக்கு கம்பன் என்று சொன்னால் எல்லாம் தெரியாது. அதிரை ரயில் நிலையத்துக்கு மினி சுற்றலா போய் இங்குதான் கம்பன் எக்ஸ்பிரெஸ் ஓடியது என்று உன் லீவில் பிள்ளைகளுக்கு காட்டு. அதிரை நகருக்கு அகல ரயில் பாதையை இனி வருவது கடினம் தான். இன்ஷா அல்லாஹ் அகல ரயில் பாதை வருவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்வோமாக.

இந்த தகவலை தந்தமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

sabeer.abushahruk said...

இட்லி..வடே...ட்டீ...ட்டீயே

கொஞ்சம் பொட்டிய தள்ளி வச்சுக்கோங்க காக்கா

தம்பி இந்தப் பைய கொஞ்சம் மேலே வைங்களேன்

டே அப்புறம் உன் பெர்த்துக்கு போயிக்கலாம் இப்ப இங்கே உட்காரு.

பஜ்ஜீ..போன்டா... சுளியேன்...காப்பீ

சாப்பிட என்னாக் கொண்டாந்தே

இட்லி அப்பா

இடியப்பமும் எறச்சானமுமா

இல்ல, இட்லியும் சட்னியும் அப்பா

ரொட்டியும் காரியுமா

அட, இட்லிதான் அப்பா

பொராட்டாவும் பாயாவுமா

செவிட்டு அப்பா இட்டெலெயப்பா... இட்டேலீஇ

ப்பூ இட்டெலியா? மொதல்லயே சொல்லவேன்டியதுதானா

வண்டி எடுத்துட்டான் கீழே எறங்கு.

ட்டீயீ...ட்டீ...ட்டீயீ...

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன்! & அதிரை நிருபர் குழு மக்களே! பாராட்டுக்கள்.

வல்லோருக்கு புல்லும் ஆயுதம் என்பதைப் புரிந்து கொண்டேன்.



Ebrahim Ansari said...

நல்லதையே நினைப்போம். அகல இரயில பாதையும் கம்பன் இரயிலும் அதிரைக்கு வரவே போகிறது. இன்ஷா அல்லாஹ்.

திருவாரூர் - பட்டுக்கோட்டைக்கு இடையே ஓடிக்கொண்டு இருந்த மீட்டர கேஜ் ரயில்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் அகல ரயிலுக்கான தண்டவாளங்கள் வந்து இறங்கிவிட்டன. நிதி அமைச்சகம் பணம் ஒதுக்கி விட்டது. பாலங்கள் கட்ட டெண்டர்கள் கோரப்பட்டுவிட்டன.

கவலைப்படாதே மனமே!இந்தக் கனவு நிஜமாகும் ஒரு தினமே!

sabeer.abushahruk said...

அகலப் பாதை!

நல்ல பிள்ளையென
நீண்டு 
பூமி துளைத்து
சிலதும்
'சவலைப்பிள்ளையென
சோனியாய்த் தொங்கிக்கொண்டு
சிலதும்
விழுதுகள்....
ஆலமர நிழலில்
ஆளமர முடியாமல்
சிமென்ட் பெஞ்சில்
பறவை எச்சங்கள்...
நினைவில் மிச்சங்கள்!

மேல்திசையின் ஒளிப்பொட்டும்
மெல்லிய இறைச்சலும்
கொஞ்சம் கொஞ்சமாக
விட்டம் வளர்த்தும்
சப்தம் கூட்டியும் 
நிலையம் வந்து...
பெட்டி படுக்கையோடு
வாப்பாவை ஏற்றிகொண்டு
கீழ்திசை நோக்கி
கருப்புச் சதுரம்
கடுகென குறைந்து
மறைந்த பொழுதுகள்...
மறையாது நினைவுகள்!

அதே 
கீழ்திசையிலிருந்து
அடைமழை காலத்து
பிறை நிலவென
மெல்லத் தோன்றி
கருப்பு தேவதை
மூச்சிறைக்க
நிலையம் வந்து
வெளிநாட்டுப் பொருட்களோடு 
வாப்பாவை இறக்கிச் சென்ற
அதிகாலை...
ஆனந்தத்தில்
அழுத பொழுதுகள்!

தனக்கான உணவு
தானிழுக்கும்
வண்டிக்கடியில்
வைத்திருப்பதறியாது
வாயசைத்துக் கொண்டிருந்த குதிரை.
மின் கம்பத்தின்
கட்டுப்பாட்டில் 
உணவை அசைபோட
மனதோ நினைவுகளை...!

க்ளைடாஸ்கோப்பும்
கித்தாச் செருப்பும்
செஸ் போர்டும்
சாக்லேட்டும் அடங்கிய
பெட்டியை சுமந்த
கூலியும்
தர்காமுன் ஃபாத்திஹாவும்
பகிர்ந்தளித்த இனாமும்
நினைவுச்சின்னங்களின்
சுவர் கிறுக்கல்களாக
நினைவில் மிஞ்ச

அத்தனை இருப்புப் பாதைகளும்
தொடர்பறுந்து போய்விட
அடுத்த பட்ஜட்டின்
அகலப் பாதை
திட்டத்திற்கான
நிதி ஒதுக்கீட்டுக்காக
கைம்பெண்ணாய் காத்திருக்கிறது
எங்கள் ஊர்
ரயில் நிலையம்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உண்டாகி இருக்கும் பிள்ளைக்கு பெயர் நினைத்து வைப்பது போல, அதற்கு ஆசைப்பட்டு சில பொருள் முன் கூட்டி வாங்கி வைப்பது போல இருக்கிறது. அது போல கரு ரெடி. இன்சா அல்லாஹ் நம் அகன்ற மனமும் நன்னம்பிக்கையும் நல் அணுகுமுறையும் விரைவில் 'ட்ரைய்னை' ஓடச்செய்யும்.

நான் எழுத நினைத்ததை (முதல் பத்தி) அப்படியே மரியாதைக்குரிய இ. அ. காக்கா எழுதி விட்டார்கள்.
(நல்லதையே நினைப்போம். அகல இரயில பாதையும் கம்பன் இரயிலும் அதிரைக்கு வரவே போகிறது. இன்ஷா அல்லாஹ்.)

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.இந்த அகல ரயில் பாதையின் நினைவுகள் நமக்கு என்றும் அகலா நினைவாகவே இருப்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.இதை பற்றி சும்மாஒரு ஹைக்கூ எழுதி பார்த்தேன்.பிழை இருப்பின் பெரியவர்கள் மன்னிக்கவும்.

திட்டம் என்னவோ அகல ரயில் பாதை திட்டம்தான் செயல் பாடுதான் குறுகிவிட்டது.

ZAKIR HUSSAIN said...

//திட்டம் என்னவோ அகல ரயில் பாதை திட்டம்தான் செயல் பாடுதான் குறுகிவிட்டது. //

என்ன சகோ.கிரவுன்....கவிதைக்கு உரிய விசயத்தை மறந்துட்டீங்களா??

வார்த்தைக்கு
கீழ்
வார்ததை போட்டு
எழுதுவதுதானே
கவிதை??

அப்டீனு பட்டுக்கோட்டை பிரபாகர் ஒரு நாவலில் எழுதியிருப்பார்.

[ கொஞ்சம் இருங்க....யாரோ வெளக்கமாத்தை தூக்கிட்டு என்னைய அடிக்க வர்ர மாதிரி தெரியுது...ரொம்ப பழகுன மொகமா தெரியுது]

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//திட்டம் என்னவோ அகல ரயில் பாதை திட்டம்தான் செயல் பாடுதான் குறுகிவிட்டது. //

என்ன சகோ.கிரவுன்....கவிதைக்கு உரிய விசயத்தை மறந்துட்டீங்களா??

வார்த்தைக்கு
கீழ்
வார்ததை போட்டு
எழுதுவதுதானே
கவிதை??

அப்டீனு பட்டுக்கோட்டை பிரபாகர் ஒரு நாவலில் எழுதியிருப்பார்.

[ கொஞ்சம் இருங்க....யாரோ வெளக்கமாத்தை தூக்கிட்டு என்னைய அடிக்க வர்ர மாதிரி தெரியுது...ரொம்ப பழகுன மொகமா தெரியுது]
Reply வெள்ளி, நவம்பர் 02, 2012 9:46:00 pm
------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.உங்களுக்காக மாற்றிக்கொள்கிறேன்.
(எனக்கு இதில் எல்லாம் உடன் பாடு இல்லை மேலும் நான் கவிஞனுமில்லை,இதுகவிதையும் இல்லை. குட்டி கவிதை என இரண்டு,மூன்று வரிகளில் சுட்டப்படும் ஹைக்கூ என நான் சும்மா உலறிவைத்தது இது).மேலும் விளக்கும் ஆற்றல் உள்ள உங்களிடம் யாரும் விளக்கமாற்றை தூக்கி வர மாட்டார்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவன்(னு): உன்னிடமிருந்து எந்த வார்த்தையிருந்தாலும் அங்கே ஹைகூ இருக்கும்(டா)ப்பா !

ஜாஹிர் காக்கா சொன்னது... அவங்க தோஸ்த்தை சீண்டி விடுறாங்க... வருவார் பாரு சீறிகிட்டு ! :)

சரி அதெல்லாம் இருக்கட்டும் ஏன் இப்பொவெல்லாம் மவுனாமா இருக்கே !?

Shameed said...

//சரி அதெல்லாம் இருக்கட்டும் ஏன் இப்பொவெல்லாம் மவுனாமா இருக்கே !? //

ஸ்டார் பின்னுடக்காரர் இப்பவெல்லாம் ஸ்டாருக்கு மட்டுமே.....


crown said...

m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…
சரி அதெல்லாம் இருக்கட்டும் ஏன் இப்பொவெல்லாம் மவுனாமா இருக்கே !?
-----------------------------------------------------------------------இதைவிட நான் உங்களிடம் எல்லாவிசயத்திலேயும் சம்மதமாய் இருக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்ல வேறு வழித்தான் உள்ளதோ?





m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவன்(னு):

அட ! தெரியும்(டா)பா !

உன் மவுனம் கூட கவிதை என்று ! :)

இப்னு அப்துல் ரஜாக் said...

கம்பன் வந்தாலும்
போனாலும்
அதை வைத்து
கதை பண்ணியும்
கவி புனைந்தும்
அசத்தும்
எல்லா காக்காமார்களுக்கும்
நன்றிங்கோ

Ebrahim Ansari said...

கம்பன் எக்ஸ்பிரஸ் வராவிட்டால் என்ன?
கைகாட்டி சாய்க்காமல்
கல்ர் கொடி ஆட்டாமல்
கவிதை எக்ஸ்பிரஸ் வந்துவிட்டதே.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கம்பன் எக்ஸ்பிரஸ் அகல ரயில் பாதையை நம் ஊர் வழித்தடத்தில் வராமல் தன் சுய நலத்திற்காக தன் ஊர்ப்பக்கம் திசை திருப்பிய ஒரு முக்கிய புள்ளி வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் தான் வென்ற தொகுதியை கைவிட்டு விட்டு தஞ்சை தொகுதியை குறி வைப்பதாக ஊடகங்கள் பல அண்மையில் வெளிச்சம் போட்டுக்காட்டியது நாம் எல்லோரும் அறிந்ததே.

எந்த மொஹரையை வைத்துக்கொண்டு நம்மூர் பக்கம் ஓட்டு கேட்டு வரப்போகிறார்களோ?


(நம்மூர்)ஆண் காக‌ம் : இந்தாவுள‌, கொஞ்ச‌ம் இந்த‌ த‌ண்ட‌வாள‌த்து மேலெயே நிண்டுக்கிட்டு இரி. கொஞ்ச‌ம் குச்சி,சுள்ளி பொற‌க்க்கிக்கிட்டு வ‌ந்துர்ரேன்.

பெண் காக‌ம் : எதுக்குங்க‌?

ஆண் காக‌ம் : இந்த‌ ஊரு ம‌னுச‌ர்வொ ஊடு க‌ட்ரேண்டு சொல்லி நெறையா ம‌ர‌த்தை வெட்டிப்போட்டுட்டாங்க‌. அதுனாலெ இந்த‌ ரெண்டு த‌ண்ட‌வாள‌த்துக்கு எடையிலெ நாம‌ த‌ங்குர‌த்துக்கு ஒரு கூடுக‌ட்ட‌த்தான். பாதுகாப்பா ஈக்கிம்முல்லெ....

பெண் காக‌ம் : என்னாங்க‌....லூசா நீங்க‌, ர‌யிலு வ‌ந்து ந‌ம்ம‌ளை அற‌ச்சிட்டு போயிராதா?

ஆண் காக‌ம் : ஹிஹிஹிஹிஹி....பெர‌லி ப‌ண்ணாத‌வுளெ என‌க்கு சிரிச்சிசிரிச்சி வ‌யிறு வ‌லிக்கிது.......வேற‌ யாராச்சும் இங்கெ வ‌ந்து கூடு க‌ட்டுற‌த்துக்கு முன்னாடி நாம சட்டுபுட்டுண்டு ஒரு கூடு க‌ட்ட‌ணும்வுளெ...சுருக்க‌ன‌ வா.....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு