குண்டு வைப்பது முஸ்லிம்கள் -தா.பாண்டியன் தள்ளாடும் பாண்டியனாகிறார்...!


அஜ்மல் கசாப் குறித்த கேள்விக்கு பதிலளித்த, தா.பாண்டியன் "தொழுகை நிலையங்களில் குண்டு வைக்கும் முஸ்லிம்களுக்கு இதுபோன்ற தண்டனைகள் தேவை" என்று கூறி முஸ்லிம் சமூகத்தின் மீது "பொய்ப்பழி" சுமத்தி விஷத்தை வித்திட்டுள்ளார். இன்று ( காலை 7.30 மணிக்கு தூக்கிலடப்பட்ட அஜ்மல் கசாப் குறித்து "புதிய தலைமுறை தொலைக்காட்சியில்" தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன், இந்த விஷமக்கருத்தை பதிவு செய்தார்.

அதாவது, முஸ்லிம்கள், தங்கள் மத தொழுகை நிலையங்களிலேயே குண்டுவைத்து மக்களை கொன்று குவிப்பதாக கூறியுள்ளார். கசாப் குறித்து அவர் பதில் சொல்லியிருந்தால் அதில் தவறில்லை. ஆனால் உண்மைக்கு புறம்பான தகவலை கூறியுள்ளது, மிகவும் கண்டிக்கத்தக்கது. தொழுகை நிலையங்களில் குண்டு வைத்தது "ஹிந்துத்துவ தீவிரவாத கும்பல்" என்று வெட்ட வெளிச்சமாக பல வழக்குகளில் தெளிவாகிவிட்ட பின்பும், கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்பில் உள்ள தா.பாண்டியனுக்கு தெரியாமல் போனது ஏன்?

தொழுகை நிலையங்களான மசூதிகளில் மட்டுமல்ல, ரயில் நிலையங்களிலும் - ஓடும் ரயில்களிலும் குண்டு வைத்த "ஹிந்துத்துவ தீவிரவாதம்" பற்றி பேச இந்த நாட்டில் எந்த கட்சிகளும் தயாரில்லை, என்பது வேதனையான விஷயம். பா.ஜ.க.வாக இருந்தாலும், காங்கிரசானாலும், கம்யூனிசம் பேசும் கட்சிகளானாலும் முஸ்லிம்கள் விஷயத்தில் எப்படி நடந்துக்கொள்கிறார்கள், என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அதிரை முஜீப்
பரிந்துரை : அதிரைநிருபர் குழு

12 கருத்துகள்

Ahamed irshad சொன்னது…

முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிக்கப்படாத ஆலோசகர் போல செயல்படும் இவரின் பேச்சு தண்ணீரில் எழுதின பேச்சு... அசல் காம்ரேட் இப்படியெல்லாம் பேச நான் காணவில்லை... முகநூல் உட்பட சோஷியல் நெட்வொர்க்குகளில் கிழிந்து தொங்குகிறது இவரின் முகத்திரை...

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

ஆமா இர்ஷாத் சரியாச் சொன்னேப்பா !

ஆங்காங்கே கிழித்து தொங்கவிட்டிருக்காங்க இவரோட சாயத்தை வெளுத்து !

நெஞ்சுரமற்ற பேடிகளுக்கு வாய்த்திருப்பது முஸ்லீம் என்ற சொல்லை எங்கு வெடித்தாலும், இடித்தாலும் அடைமொழியாக அதற்கு முன்னால் போடாமல் இருக்கமுடியாது இந்த சந்தர்ப்பவாத அரசியல் அயோக்கியர்களுக்கு !

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.தூ.........பாண்டியன்!ஜெ.யின் கைகூலி!இந்த துக்கடா பாண்டியன் எக்கேடாவது கெட்டு தொலையட்டும் அக்கடான்னு இருக்கிற நம்ம கிட்ட ஏன் மூக்கை நுழைக்கனும்? ஒரு காலத்தில் நல்ல காம்ரேட்டா இருந்த இவர் இப்படி அனியாயத்துக்கு ரேட்(விலை)போய்விட்டார்.

Unknown சொன்னது…

தா.பாண்டியனின் பேச்சு கண்டிக்கத்தக்கது.ஐயராத்து அம்மாவின் பின்னால் செல்லும் இந்த போலி பொதுவுடமைவாதின் வாந்தி எடுத்த பேச்சு ஒன்றும் வியப்பில்லை.ஊழல்,கொலைவழக்கு என்று ஜனநாயத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த கம்யூனிஸ்ட்களை நாட்டைவிட்டே துரத்த வேண்டும்.முஸ்லிம்களின் தயவில் உள்ள 3 சதவிகித வாக்குகளையும் இழக்க நேரிடும்.இறக்குமதி செய்யப்பட்ட கொள்கையை கொலைசெய்ய பயன்படுத்தும் இந்த அரசியல் கோமாளியின் விசபேச்சுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.ஒட்டு பெறுக்கும் இவர்களுக்கு உரிமையை விட்டுகொடுத்து வாழும் நாம் தக்க பாடம் புகட்டவேண்டும்.
,,,,,,,,,,,,,,,,,,
இம்ரான்Mயூஸுப்

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

தூ ! பாண்டியன்

sabeer.abushahruk சொன்னது…

இந்தாள்லாம் கருத்துச் சொல்லி அத எந்தக் காலத்ல யார் கவனிச்சாய்ங்க?

தா பாண்டியா
தப்புப் பாண்டியா
நமக்கு விளங்காதவற்றைப் பற்றி
கருத்துக் கேப்பாய்ங்க
சொல்லக்கூடாது
எதையுமே சொல்லக்கூடாது
அடிச்சுக் கேப்பாய்ங்க
அப்பவும் சொல்லக்கூடாது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

குண்டு வைப்பவர்களெல்லாம் முஸ்லிம்கள் மட்டுமே என்ற நோக்கில் கூறிய இந்தாளுக்கும் தண்டனை தேவை.

Unknown சொன்னது…

If politicians have really misunderstanding out of their ignorance then we can boldly invite them for the discussion or debate to clarify, instead of becoming emotional.

But if they are deliberately, blindly blaming muslims as terrorists for gaining political gain, then God Almighty is there to them give punishment through either by emotional muslims or even by non-muslims.

Ignorance is forgivable, but deliberate blaming on a particular community is punishable.

அதிரை சித்திக் சொன்னது…

தூ ! பாண்டியன்

அப்துல்மாலிக் சொன்னது…

ஒருத்தருமே கண்டுக்காத நம்மை பற்றிய பிரபலம் வேண்டுமா? கையிலெடு “முஸ்லிம் தீவிரவாத்தை” என்ற போக்கை இப்போதைக்கு உலகம் முழுதும் எல்லோருக்கும் தெரிந்த வித்தையாகிவிட்டது. காலம் பதில் சொல்லும் இன் ஷா அல்லாஹ்..

புதுசுரபி சொன்னது…

தன்னுடைய சொத்து விபரத்தினை தேர்தல்கமிஷனிடம் அளிக்கும் போது தில்லுமுல்லு செய்து, உண்மையினை மறைத்த தா.பாண்டியனுக்கு உலகத்தில் நடக்கும் உண்மையினை உணரும் உணர்வு இல்லாமல் போனது ஆச்சர்யம்ல்ல, கம்யூனிஸ்டின் கொள்கைக்கும் சித்தாந்த்தற்கும் அப்பாற்பட்ட தலைவர் அக்கட்சியில் இருப்பது துரதிர்ஷ்டமே!

Ebrahim Ansari சொன்னது…

விவசாயிகளுக்கு நெல் அறுக்க வேண்டிய கதிர் அரிவாள்
போயஸ் தோட்டத்தில் புல் அறுக்கிறது. - பேராசிரியர். தி .மு. அ.காதர்.