சேர்மேன் வாடி அருகே யானை பிடிக்க குழி வெட்டி வைத்துள்ளார்களோ !?
தக்வாபள்ளியின் சுற்றுசுவரில் ஏற்பட்ட காயம் அதிரையர்களின் மனதில் ஆறாத சுவடு !
இப்படியோ போய் லெஃப்ட்ல திரும்புனா மாட்டுக்கறி கடை இது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ நம்ம ஊரு தலைங்களுக்கு நல்லவே தெரியும் என்பது சொல்லித்தான் தெரியனுமா ?
இனி இந்த கேட்-கிப்பருக்கு ரெஸ்ட் தான் (அது சரி வேலை இருந்தப்ப மட்டும் என்ன கிளிச்சாங்களாம்)
மஃக்ரிப்புக்கு நேரமாச்சு
எந்த பூவாக இருந்தாலும் நமது கவிங்கர்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை புதைந்திருக்கும் கவிதைகளை கோர்த்து மாலையாக்கித் தாக்கிடுவாங்க.
புகையும் போச்சு வண்டியும் (நின்னு) போச்சு நிலையம் மட்டும் நிலைத்து இருக்கு அகன்ற அலைகற்றுபோல் இல்லாமல் அகன்ற பாதை(கள்) வருமென்று காத்துகிட்டு இருக்கு !
நல்லா காயப்போடுறாங்க கருவாடு
கை கட்டு கால் கட்டு அந்த வரிசையில் இது படகு கட்டு...
தமிழ் நாட்டின் கடைசி மீட்டர் கேஜ் இதுதான்
Sஹமீது
24 Responses So Far:
ஒவ்வொரு படத்திலும் ஊரில் மறக்கமுடியாத சம்பவங்களைச் சொல்லும் சுவடு தெரிகிறது !
அனைத்து படங்களும் "கிளிக்"கிய விதம் அருமை
ஐந்தாம் படம் ஒரு பள்ளியின் புதுமையான தோற்றம் அசத்தல்
அனைத்து படங்களும் அருமை,
முதல் படத்தில் லோகநாதன் சார் போறார், ஹும் இன்னும் அந்த டிவிஎஸ் புழு கலர்தான் வச்சிஇருகார்!.
பேசும் படம் வாயடக்க வைத்துவிட்டது.. அசத்தும் புகைப்படங்கள்...உங்களுக்கு இது கேமராவந்த கலை
naina al-khobar சொன்னது…
//முதல் படத்தில் லோகநாதன் சார் போறார், ஹும் இன்னும் அந்த டிவிஎஸ் புழு கலர்தான் வச்சிஇருகார்!.//
அதெப்படி அவர்தான்னு கரெக்டா !? :) :)
படங்களை வைத்து கதை சொல்வது கேள்விப்பட்டிருக்கிறேன். படங்களை வைத்து இளமையை புதுப்பிக்கும் கலையை சாகுல் அறிந்திருப்பதுதான் புதுமை. [ ரொம்ப பாராட்டனும்னுதான் தோனுது..அடக்கியே வாசிப்போம் / எழுதுவோம் ]
ரயில்வே கேட்:
நினைவுகளின் தொடக்கம்...காற்றில் கலந்து வரும் மரமல்லிகை வேறோடு சாய்ந்தாலும் நம் இளம்காலத்தின் ஆரம்பங்களில் படர்ந்தே இருக்கும்.
ரயில்வே ஸ்டேசன்:
இந்த புதிய முகத்தில் எனக்கு அவ்வளவு தொடர்பில்லை. இருப்பினும் மீட்டர் கேஜ் தண்டவாளங்கள் கழட்டப்பட்டாலும் இன்னும் என் முக்கிய நிமிடங்களும் , பரீட்சையின் பயமும் இங்கிருந்துதான் ஆரம்பித்தது.
லைன்மேன் ரூம்: வெயிலில் காயாமல் படிக்க உதவிய குடை.[ இவ்வளவு கவனமாய் இருந்தும் "செவப்பா' ஆக முடியலியே!!]
ZAKIR HUSSAIN சொன்னது…
லைன்மேன் ரூம்: வெயிலில் காயாமல் படிக்க உதவிய குடை.[ இவ்வளவு கவனமாய் இருந்தும் "செவப்பா' ஆக முடியலியே!!]
மனசு வெள்ளையா இருக்கே அதுபோதும்
பள்ளி:
அந்தி வேலையும்
அந்தப் பள்ளியும்
புகைப்படத்தைவிட
கோணம் அமைத்த
ஹமீதின்
ரசனை அழகு
பூ:
கதைவைத் தட்டியதும்
இதழ்கள்
திறந்தது கண்டு
பறந்தது வண்டு
தண்டவாளம்:
கடைசிவரை
கைசேரப்போவதில்லை
இருப்பினும்
அதோ அங்கே சேர்வதுபோல
காட்சிப்பிழை.
பேசும் படதில் மரியாதைகுறிய கனித ஆசான் உலகநாதன் சார் அவார்கலை பார்ததும் 10 ம் வகுப்பின் மறக்கமுடியாத நினைவலைகள் இயல்பாய் வந்து பல விசயங்கலை முன் கொன்டு வந்தது.
ஆசான் அவர்கள் வகுப்பிற்கு வந்ததும் ஆம் சொல்லு சொல்லு சூத்திரம் சொல்லு என்று கம்ப வெச்சுகிட்டு வருசயா ரைடு வருவாரு பாருங்க மனுசன் மழைகாலதுலயும் வேர்வய கொட்ட வெச்சுடுவாரு அல்லாட உதவியால அந்த பயம் தான் பாஸ்பன்ன வெச்சுச்சு ஆசானுக்கு நன்றியும் வாழ்துக்கலும்
அப்பரம் ஆசான் வகுபில் அடிகடி கன்டிபுடனும் தமாசாகவும் சொல்லும் வார்தை என்ன டெரியுமா?
ஓன் கொப்பன் சொல்லிட்டான் தலயயும் கண்ணயும் விட்டுட்டு எங்க வெனுன்டாலும் அடிசிகிடுங்க சாருன்டுட்டான் அப்புடின்டு சொல்லிட்டு கண்ணாடிய கலடிட்டு மூக்கு பொடிய போட்டுக்கிட்டு அறகை சட்டையே தூக்கிகிட்டு பார்பாரு பாருங்க அப்ப நமக்கு வில்லன் நம்ம ஆசாந்தான் ஆனா இப்ப உன்மையான ஹிரோவில் என் ஆசான் உயர்திரு உலகநாதன் சாரும் ஒருவர் தான் நன்றி அய்யா.
அனைத்து படங்களும் super
“முக்கூடல்” சாலை(சேர்மன் வாடி) எங்களின் முகப்புச் சாலை.
வண்ணப் பூவொன்றுக்
கிளையிலிருந்து விழுந்து
வண்ணத்துப் “பூ”ச்சியாக
கீழிருந்து மேலாகப் பறந்துப்
பூவிதழகளைக் கவ்விப்
பூ முத்தம் இடுவதால்
செவ்விதழாய் மாறியதோ?
அதனால் இதழ்த் தேன் பருகி
அடைந்த மயக்கத்தில்
உடைந்த சத்தம் தான்
முத்தத்தின் மெல்லிசையோ?
தற்பொழுதுப் புகைபிடிப்போர் மட்டும் பயன்படுத்தும் “புகை(வண்டி)நிலையம்(?)”
உப்பளமும் காயும் மீனும் பக்கத்தில் இருப்பதால் ஆயத்தக் கருவாடு ஆச்சிகளின் கூப்பாடு.
சிங்களவரிடம் அடிவாங்கும்
எங்களவர்களை ஏறெடுத்தும்
பார்க்காத அரசாளுபவர்கட்கும்
உண்ண “ருசியான” மீனை தியாகம்
என்னும் வலைவீசிக் கொண்டு வரும்
மீனவ நண்பர்களின்
உற்ற நண்பர்கள்
இந்தத் தோணிகள்;
அவர்களின் வாழ்க்கையை
மட்டும் கரைசேர்க்காமல்......
பழைமைகள்;
காலம் நடந்து சென்றக்
காலடிச் சுவடுகள்!
கம்பன் என்னும்
கணவன் வரும்வரைக்
கன்னிப் பெண்ணாய்க்
காத்திருக்கும்
தண்டவாளம்;அரசியலாரின்
வண்டவாளம்
வரதட்சனையாக நெருக்க
ஏக்கப் பெருமூச்சே
அடிக்கடி “சுனாமியாய்”
இரயிலடி வரைக்குமாய்..........
அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…
//தற்பொழுதுப் புகைபிடிப்போர் மட்டும் பயன்படுத்தும் “புகை(வண்டி)நிலையம்(?)”//
தற்பொழுது புகை(படம்) பிடிப்போர் மட்டும் பயன்படுத்தும் “புகை(வண்டி)நிலையம்(?)
தொடர்வண்டி என்கின்றார்கள்; ஆனால் நம்மை இன்னும் தொடாமலும்- தொடராமலும் இருந்தாலுமா? “தொடர்வண்டி?”
//லைன்மேன் ரூம்: வெயிலில் காயாமல் படிக்க உதவிய குடை.[ இவ்வளவு கவனமாய் இருந்தும் "செவப்பா' ஆக முடியலியே!!]லைன்மேன் ரூம்: வெயிலில் காயாமல் படிக்க உதவிய குடை.[ இவ்வளவு கவனமாய் இருந்தும் "செவப்பா' ஆக முடியலியே!!]//
அட ! இந்த ரகசியம் தெரியாம போச்சே !
//"செவப்பா' ஆக முடியலியே!!//
உளவியல் மருத்துவர் ஜாஹிர் அவர்கள் “சிவப்பாக” இருப்பார் என்றல்லவா நினைத்தேன்; அதுவும் இதமான வானிலை உள்ள மலாய் மண்ணில் வாழ்பவர்;எப்பொழுதும் “ஏசி”யில் குடியிருப்பவர் சிவந்த மேனிக்குச் சொந்தக்காரர் என்றெல்லாம் நினைத்திருந்தேன். கவலைப்பட வேண்டா.
மேற்கில் மறையும்
சூரியக் கதிரகளால்
வானப் பெண்ணுக்குப்
பொன்னாடை!
மேற்கு நோக்கித்
தொழுமிடமாம்
அதிரையின் நுழைவாயிலில்
அழகுடன் திகழும் பள்ளிவாயிலைச்
சுட்டும் விழிச்சுடரில் பதித்தவர்க்குக்
கிட்டும் எங்களின் அன்பெனும் பொன்னாடை!
பல தகவல்களைச் படமாய்ச் சொல்லும் பாங்கு அழகு!
ஒவ்வொரு படத்திலும் ஊரில் மறக்கமுடியாத சம்பவங்களைச் சொல்லும் சுவடு தெரிகிறது
nice pictures.
மீட்டர் கேஜ் படம் பேசாமல் என்னவெல்லாமோ சொல்லுது, வாழ்த்துக்கள் காக்கா
உண்மையில் இவை உண்மை பேசும் படங்களே.
என்றும் இனிக்கும்
தேனிலவு
புகைப்படங்கள் !
நிமிர்த்த முடியாது
படுத்திருக்கும் ஏணி
தண்டவாளம் !
Post a Comment