அளவற்ற
அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) - (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!).
ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் மேலும் சினிமா
டைரக்டரின் மகன், ''இஸ்லாத்திற்கு'' வந்த அனுபவத்தை ஒரு பயான் நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.
சில வருடங்களுக்கு முன் அவர் பேசிய சிடியை கேட்க வாய்ப்பு கிடைத்தது. அவரின் அனுபவத்தை
முதல் மற்றும் இரண்டாம் அத்தியாயத்தில் விளக்கியிருந்தேன். இப்பொழுது இந்த அத்தியாயத்தில்
தொடர்ந்து அவர் பேச்சைக் கேட்போம் வாருங்கள்.
இன்னைக்கு இந்த கிராமத்தில் பிறமதத்தைச் சேர்ந்த
இத்தனைப் பேர் 'இஸ்லாத்தை' ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள் என்றால், அதற்கு ''மார்க்கத்தில்''
நீங்கள் காட்டும் ஆர்வமும், அவர்களோடு பழகும் விதமும்தான் காரணம்.
நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் இறக்கப்பட்டதற்குப்
பிறகுதான் அவர்கள் நபியானார்கள் இல்லையா! அல்லாஹ் என்ன சொன்னான்: 'இக்ரஹ் பிஸ்மிக்கல்லதீ கலக்' அல்லாஹ் என்ன சொல்கிறான்:
''இக்ரஹ் - படி'' என்றான், படித்து மக்களுக்கு
வழிகாட்டியாக இருக்கிறார். 'ஹஸனத்துல் உஸ்னா' நமக்காக ஒரு 'பெஸ்ட் பெர்சனாலிட்டி' 'ஒரு எக்ஸாம்பிள்' என்று
அல்லாஹ் அறிவிக்கிறான். அவருக்கு மேல் யாரும் இல்லை உலகத்திலே!.
பாருங்கள்! ரஸூல் (ஸல்) அவர்களுக்கு, அல்லாஹ்
வந்து 'தியரி' சொல்லி இருக்கிறான் ''தி பிராக்டிக்கல் வி ஆர் ப்ரூவ்டு ஆஸ் ய ஹியுமன்பியிங்''. உலகத்தில் மனிதர்களை சூப்பர்
பெர்சனாலிட்டியாக ''அல்லாஹ்'' உருவாக்கியிருக்கிறான். நாம் 'நமக்கு நாமே' ''கொசுவை''
விட மட்டமாக மாறிவிடுகிறோம். நாம் நம்முடைய அறிவைப் பயன்படுத்த வேண்டும்.
''நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்'' (அல்குர்ஆன் : 2:208) என்று ''அல்லாஹூதஆலா அறிவிக்கிறான்'' என்று
முன்பே சொன்னேன்.
பாருங்கள்! என்னுடைய சகோதரர்களே! 'முஸ்லிம் சமுதாயத்திற்கு' என்று அறிவிக்கவில்லை.
'நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு', அல்லாஹ் அறிவிக்கிறான்:
''முழுமையான இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள்'' என்று. யார், முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த இஸ்லாத்தைப்
பின் பற்றி வாழ்கிறீர்களோ, அவர்கள்தான் உண்மையான முஸ்லிமாக வாழ முடியும்.
இன்னைக்குப் பாருங்கள் ''உலகத்தில் முஸ்லிம்களை
தீவிரவாதிகள்'' என்று அழைக்கிறார்கள் எதனால், ''குர்ஆனை நாம் ஒழுங்காக பின்பற்றாத காரணத்தால்தான்''
மற்றவர்கள் நம்மை தவறாக விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ளும் படியாகிவிட்டது.
'360 சிலைகளை' வைத்து வணங்கிய
சமுதாயத்தில் பிறந்தவர்கள்தான் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள். அவர்கள் காட்டித்தந்த வழிமுறை
யாரிடம் இருக்கு இன்றைக்கு. அப்படி இருந்தால் உலகம் முழுவதும் இஸ்லாமாக மாறி இருக்கும்.
நமக்கு சொல்லிக் கொடுப்பதற்கு 'வாத்தியார்களே!' கிடையாது. 'தெரியாது, தேவையில்லை' என்று நினைத்து விட்டோம். என்னடா? தொப்பி போட்டுக்கோ!, தாடி வுட்டுக்கோ!, தொழுதுக்கோ! அவ்வளவுதான்
போதும் நீ யாரோ? நான் யாரோ? இல்லை 'வரலாறை' எடுத்துப் பாருங்கள். 360 தெய்வம் கொண்ட கோயில்
''கஃபத்துல்லாஹ்'' ஒன்னுதான் உலகத்திலே. ஒரு நாளைக்கு ஒரு தெய்வம் என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள். கணக்குப் போட்டுப் பாருங்கள். ஒரு வருடத்திற்கு 365 நாட்கள். ஒவ்வொரு தெய்வத்திற்கும்
'ஒரு நாள்' என்று '360 தெய்வம்' போக பாக்கி இருக்கும் நாட்கள் திருஷ்டிக்கு - இப்படி வணங்கிக்
கொண்டு இருந்த சமுதாயத்தில் பிறந்தவர்கள்தான்
நபி(ஸல்) அவர்கள் - இன்று ''நபி(ஸல்) அவர்கள் பெஸ்ட் மேன் இன் தி யுனிவர்ஸ்.''
மிகப்பெரிய வரலாற்று
ஆய்வாளார் 'தி ஹன்டர்டு என்ற புக்கை
எழுதியவர், ''முஹம்மத் (நபி)ஸல்
அவர்கள் போல் வேறு ஒரு மனிதரே கிடையாது'' என்று சொல்கிறார்.
ஏன் ''அவர்கள் ஒரு வழிகாட்டி மனிதர்களுக்கு'', தாயார் எப்படி இருக்க வேண்டும், தந்தை பிள்ளைகளுடன்
எப்படி நடந்து கொள்ள வேண்டும் பிள்ளைகள் எப்படி தாய், தந்தையை கவனிக்க வேண்டும், பண்பாக எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தது 'நபி(ஸல்)' அவர்கள்.
மனிதர்களே! ''மனிதர்கள் போல் வாழுங்கள்'' என்று கற்றுக் கொடுத்தது யார்? 'நபி(ஸல்)' அவர்கள்.
மருத்துவம், சட்டம் எங்கிருந்து
வந்ததது, குர்ஆனில் இருந்து வந்ததது. மனிதன், மனிதனாக எப்படி
வாழ வேண்டும் என்ற பண்பாட்டைக் கற்றுக் கொடுக்கிறது குர்ஆன். ''இறைவனுக்கு இப்படி வணங்கு, அப்படி வணங்கு'' என்று சொல்லவில்லை.
கஷ்ட்டப்பட்டு சம்பாரித்து வாழ்வது, பிறரை ஏமாற்றாமல் வாழ்வது
''இறைவனுக்கு நன்றி செலுத்தும் காரியம்'' என்று அல்லாஹ் சொல்கிறான்.
பிற சமுதாயம் இந்து, கிறித்தவர்கள் ஏன்
இஸ்லாத்திற்கு வரவில்லை? காரணம் ''நாம் முழுமையான இஸ்லாத்தை அவர்கள் முன் வைக்கவில்லை''.
எத்தனையோ பேர் எனக்கு இஸ்லாத்தைச் சொன்னாலும், ''உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்''
எனக்குச் சொன்னதால்தான் 'இஸ்லாத்திற்கு' வந்தேன்.
உண்மையான இஸ்லாத்தை முஸ்லிம்கள் அறிந்திருந்தால்
'ஒருவர் - இருவர்' என்று எண்ண வேண்டிய
அவசியம் இருக்காது. ஊர் - ஊராக, முழுவதுமாக இஸ்லாத்திற்கு மாறி இருப்பார்கள். வராததற்கு
காரணம், ''நாம் அறியாத சமுதாயமாக இருப்பதால்'',
பிறமதக்காரர்களுக்கு 'இஸ்லாம்' தெரியாமல் இருக்கிறது.
நீங்கள் நினைத்துப் பாருங்கள்! இஸ்லாத்தை
சாதாரணமான முறையில் எத்தி வைக்கலாம். ''தாவா (அழைப்பு பணி)'' என்பது கஷ்டமான
வேலை கிடையாது. இந்துவாக இருந்தாலும், கிறித்தவர்களாக இருந்தாலும் என் சகோதரர்களே!
பாருங்கள் நமக்கு கண்கள் கொடுத்தது யார்? நம்மை படைத்த இறைவன்
யார்? வாய் கொடுத்தது யார்? கை கொடுத்தது யார்?.
இது எல்லாத்துக்கும்
மேலே 'பகுத்தறிவை' கொடுத்திருக்கிறானே!.
தாயை - தாய் ஸ்தானத்திற்கு வைப்பதற்கு, அக்காவை - அக்கா ஸ்தானத்திற்கு
வைப்பதற்கு, தங்கையை - தங்கை ஸ்தானத்திற்கு
வைப்பதற்கு, மனைவியை - மனைவி ஸ்தானத்திற்கு
வைப்பதற்கு என்ற பகுத்தறிவை கொடுத்திருக்கிறானே! அந்த இறைவனுக்கு எப்பொழுதாவது நன்றி
செலுத்தியிருக்கிறீர்களா? என்று கேட்டுப் பாருங்கள்.
'யார் அந்த இறைவன்?', ''படைத்தது யார்?'' என்று யோசிப்பார்கள்! ''எல்லா சமுதாயத்திற்கும்
இந்த சிந்தனை வரும்''. நாம் அறியாத சமுதாயமாக
இருப்பதால்தான், பிறமதக்காரர்களும் அறியாத சமுதாயமாக இருக்கிறார்கள்.
இன்ஷாஅல்லாஹ் வளரும் ...
அலாவுதீன்.S
9 Responses So Far:
இவரின் இஸ்லாமிய இணைவு நமக்கு நல்ல படிப்பினை.
உண்மையான இஸ்லாத்தை அறிந்து அதன்படி முழுமையாக நடந்து நாமலும் நாலு பேருக்கு எத்திவைக்கனும். இன்சா அல்லாஹ்.
ஜஷாக்கல்லாஹ் ஹைர் அலாவுதீன் காக்கா!
இன்ஷா அல்லாஹ் நமக்கும் இஸ்லாத்தை கற்று தாவா செய்ய அல்லாஹ் அருள்வானாக
“அஸ்ஸலாமுஅலைக்கும்.
இன்ஷா அல்லாஹ் நமக்கும் இஸ்லாத்தை கற்று தாவா செய்ய அல்லாஹ் அருள்வானாக
இன்ஷா அல்லாஹ், நமக்கும் இஸ்லாத்தை முழுமையாக கற்று தாவா செய்ய அல்லாஹ் அருள்வானாக!
Assalamu Alaikkum,
Muslims are called extremist or terrorist because of they are afraid of islamic way of life (Islamophobia) by lack of knowledge. By islamic teachings muslims are extremely sentimental and sensitive in respecting The Prophet Mohammed Sallallahu Alaihi Wasallam, we muslims are sensitive in maintaining true brotherhood (because each muslim know very well that the other muslim brother sister is similar to parts of a same body) so this kind of sensitivity can make big impact in their thinking and behaviour. So the non-muslim brothers sisters who may not aware of such teachings in Islam are just awkward. They don't know how to call this situation. So they just call muslims are 'terrorists' which is poor judgement without real knowledge.
What they have to realize is that in every community there are real evil terrorists who are real threat to human beings. I think this is fair way of identifying terrorists.
So I strongly object the below mentioned statement in the article.
//இன்னைக்குப் பாருங்கள் ''உலகத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகள்'' என்று அழைக்கிறார்கள் எதனால், ''குர்ஆனை நாம் ஒழுங்காக பின்பற்றாத காரணத்தால்தான்'' மற்றவர்கள் நம்மை தவறாக விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ளும் படியாகிவிட்டது.//
Rabbi Zidni Ilmah- "O Allah enrich our knowledge"
Dear brothers and sisters, we can share whatever we know about islam in this moment(now itself) to non-muslim brothers and sisters around us. Due the course our way of presenting about Islam will become effective. Lets do it from now, inshaAllah.
MaAssalamah
நல்ல விசயம், முதலில் நாம் இஸ்லாத்தை பற்றி விளங்கிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ்
மார்க்கத்தில் புதிதாக இணையும் சகோதர/சகோதரிகளுக்கு இருக்கும் அறிந்துகொள்ளும் ஆர்வமும் ஈமானும் பிறப்பிலேயே முஸ்லிமான நம்மைப் போன்றவர்களுக்கு இருந்தாலே மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்துவிடும்
//மார்க்கத்தில் புதிதாக இணையும் சகோதர/சகோதரிகளுக்கு இருக்கும் அறிந்துகொள்ளும் ஆர்வமும் ஈமானும் பிறப்பிலேயே முஸ்லிமான நம்மைப் போன்றவர்களுக்கு இருந்தாலே மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்துவிடும்//
absolutely.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!
Post a Comment