Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 18 5

அதிரைநிருபர் பதிப்பகம் | November 09, 2012 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய 
அல்லாஹ்வின் திருப்பெயரால். . . 

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!. 

அனாதைகள், பெண்கள்,  பலவீனர், ஏழைகள் ஆகியோரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுதல்: 

தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா?  அவனே அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை. (அல்குர்ஆன்: 107:1,2,3)

'தனக்குரிய அல்லது தனக்குத் தெரியாத ஒரு அனாதையைப் பொறுப்பேற்றவனும், நானும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். மாலிக் இப்னு அனஸ் என்ற அறிவிப்பாளர் தன் ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் காட்டி சமிக்ஞை செய்தார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 263)

''மக்களைச் சுற்றி வந்து, ஒரு கவளம், இரு கவளம் ஒரு பேரீத்தம் பழம், இரண்டு பேரீத்தம் பழம் ஆகியவற்றைப் பெற்றுச் செல்பவர் ஏழை அல்ல. எனினும் தனக்கு போதுமான செல்வத்தைப் பெறாது இருந்து, அது பற்றி பிறர் அறியப்படாத அளவுக்கு (வெளிக் காட்டாமல்) உள்ளவரே ஏழை ஆவார். (அவர் பற்றி தெரிந்தால்) மக்கள் அவருக்கு தர்மம் வழங்கி இருப்பர். அவரும் யாசகம் கேட்க மக்களிடம் நின்று இருக்க மாட்டார்' என்று நபி(ஸல் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 264)

''விதவைக்கும், ஏழைக்கும் உழைப்பவர், இறைவழியில் பாடுபடுபவர் போலாவார்''  என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் "சடைவடையாது நின்று வணங்குபவர் போலாவார். நோன்பை முறிக்காது (தொடர்ந்து) நோன்பு வைத்தவர் போலாவார்'' என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள் எனவும் எண்ணுகிறேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 265)

''(உண்ண) வந்தவர்கள் (ஏழைகள்) தடுக்கப்பட்டும், (உண்ணவர) மறுப்பவர்கள் (வசதியுள்ளோர்) அழைக்கப்படும் திருமண உணவு தான் உணவில் கெட்டதாகும். விருந்தை ஏற்க மறுப்பவர், அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் மாறு செய்தவராவார்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 266)

ஒருவர் தன் இரு பெண் மக்களை அவர்கள் பருவ வயதை அடையும் வரை நல்லவிதமாக பராமரித்தால், நானும் அவரும் மறுமையில் இவ்வாறு வருவோம்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, தன் இரண்டு விரல்களை இணைத்துக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 267)

(ஒருமுறை) இரண்டு பெண் குழந்தைகளைச் சுமந்து  கொண்டு ஒரு ஏழைப் பெண் என்னிடம் வந்தாள். மூன்று பேரீத்தம் பழங்களை அவளுக்குக் கொடுத்தேன். அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் ஒரு பேரீத்தம் பழம் கொடுத்தாள். தனக்குரியதை சாப்பிடுவதற்காக தன் வாய் அருகில் அதைக் கொண்டு சென்றாள். அதையும் அவளின் இரு பெண் மக்களே உண்ணக் கேட்டனர். அவ்விருவருக்கும் தான் சாப்பிட நாடியிருந்த அந்த பேரீத்தம் பழத்தைப் பிளந்துக் கொடுத்தாள். அவளின் செயல் எனக்கு ஆச்சரியத்தை எற்படுத்தியது. நபி(ஸல்) அவர்களிடம் அவள் செய்தது பற்றிக் கூறினேன். அதற்கு அவர்கள் ''நிச்சயமாக அல்லாஹ், அவளின் இந்த செயலுக்காக அவளுக்கு சொர்க்கத்தைக் கட்டாயமாக்கி விட்டான். அல்லது அவளை இதற்காக நரகத்திலிருந்து விடுதலை செய்துவிட்டான்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 269)

'இறைவா! அனாதைகள், பெண்கள் ஆகிய இரண்டு பலவீனமானவர்களின் உரிமையில் (அநீதமாக நடப்போரை) எச்சரித்துள்ளேன் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆபூஹூரைஹ் என்ற குவய்லித் இப்னு அம்ரு அல் குஸாஈ(ரலி)  அவர்கள் (நஸயீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 270)

''என் தந்தை ஸஹ்து(ரலி) அவர்கள் தன்னை மற்றவரை விட சிறந்தவராகக் கருதிக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் பலவீனர்களாலே  தவிர நீங்கள் உதவி செய்யப்படவில்லை. நீங்கள் (அவர்களால் தவிர) உணவளிக்கப்படவில்லை''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: முஸ்அப் இப்னு ஸஹ்து இப்னு அபீவகாஸ் (ரலி) அவர்கள் (புகாரி  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 271)

''எனக்காக, பலவீனமானவர்களைத் தேடுங்கள். நீங்கள் உதவி செய்யப்படுவதும்,  நீங்கள் உணவளிக்கப்படுவதும் உங்களில் உள்ள பலவீனர்களால்தான் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்தா என்ற உவய்மீர்(ரலி) அவர்கள் (அபூதாவூது).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 272)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன்.S

5 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்லாஹு அக்பர் அல்லாஹ்வின் கருணை மெய் சிலிர்க்கிறது.இன்னும் நிறைய வேண்டும் இது போல இன்ஷா அல்லாஹ்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.அல்லாஹு அக்பர் அல்லாஹ்வின் கருணை மெய் சிலிர்க்கிறது.இன்னும் நிறைய வேண்டும் இது போல இன்ஷா அல்லாஹ்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அல்லாஹு அக்பர்!

அல்லாஹ்வின் கருணை மெய் சிலிர்க்கிறது...

இன்னும் நிறைய வேண்டும் இதுபோல இன்ஷா அல்லாஹ் !

என் பிரதர்ஸ் சொன்னதையே நானும் வேண்டுகிறேன்...

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.அல்லாஹு அக்பர் அல்லாஹ்வின் கருணை மெய் சிலிர்க்கிறது.இன்னும் நிறைய வேண்டும் இது போல இன்ஷா அல்லாஹ்

Shameed said...

அல் குரானையும் ஹதிசையும் பின்பற்றி நடந்தால் உள்ளமும் அமைதி அடையும் உலகமும் அமைதி அடையும்

அலாவுதீன் காகாவிற்கு எங்களின் துவா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு