Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள்... ஏற்றம் - 22 27

ZAKIR HUSSAIN | November 11, 2012 | , , ,


தலைமைத்துவம் [Leadership]  என்பது ஏதோ கட்சிக்கும், நிறுவனங்களுக்கும் , ஏதோ ஒரு குழுவுக்கும் என்றோடு இல்லாமல் தலைமைத்துவம் என்பது நம் வாழ்வில் நிழல்போல் வரக்கூடிய ஒர் தன்மை.

ஒரு மனிதனின் தலைமைத்துவத்தின் தொடக்கம் அவனது மனைவியின் அங்கீகாரத்தில் ஆரம்பிக்கிறது. கல்யாணமான புதிதில் தான் ஒரு ஹீரோ என சொல்கிறமாதிரி நடப்பதை [அல்லது நடிப்பதை]நம்ப ஆரம்பிக்கும் மனைவியிடம் அங்கீகாரத்திற்கு மனிதன் தன்னை சில கஷ்டங்களுக்கும் உட்படுத்தி தன் சாதனையை நிலை நாட்ட ஆரம்பிக்கிறான். சிலர் முயற்சிகள் அற்றுப்போய் 'காமெடி பீஸ்" மாதிரி  நடக்க ஆரம்பித்தவுடன்  'என்ன நீங்க சொன்ன மாதிரி நடந்துக்க தெரியலையே' என்று என்று சொல்லும்போதே தலைமைத்துவத்தின் ஆணிவேரில் ஹைட்ரோகுலோரிக் ஆசிட் ஊற்றப்படுகிறது என்று அர்த்தம். 

சில சமயங்களில் குடும்பத்தில் நீங்கள் பெரிதாக நம்பியிருக்கும் சிலர் பேசுவதை எதிர் கொள்ளும்போது அந்த வார சீரியல் 'தொடரும்" போடும் போது உறைந்து நிற்கும் கேரக்டர் மாதிரி பல சமயங்கள் உங்களுக்கு கிடைக்கும். இதெற்கெல்லாம் கலங்கி நிற்பது ஒரு நல்ல லீடர்ஷிப் குவாலிட்டி அல்ல.

இது தெரியாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் 'ஙே" என்று விழிக்க ஆரம்பித்தால்  கால ஒட்டத்தில் "ஒப்புக்கு" அழைக்கப்படும் பெரியவர்கள் லிஸ்ட்டில் மட்டும்தான் நம் பெயர் இருக்கும். குடும்பத்தில் எடுக்கப்படும் பல முடிவுகளை நீங்கள் கேள்விப்படும் நேரத்தில் அந்த முடிவுகள். முடிவுக்கே வந்திருக்கும்.

இது உங்களை பயங்காட்டும் ட்ரைலர் அல்ல. "தூங்காத நிலை" என்று ஒரு நிலை வாழ்க்கையில் இருக்கிறது. மனிதன் படுத்து தூங்கும் செயலுக்கும் இதற்கும் புலிமார்க் சீயக்காய்தூளுக்கும் புலிக்கும் உள்ள சம்பந்தம்தான் அது. இதை சிலர் மதத்தோடு சேர்த்து கோடி கோடியாக பணம் பன்றாங்க. இதைப்பற்றி வேறு சமயத்தில் விவாதிக்கலாம்.

Qualities of Good Leaders. 

வாழ்க்கையில் எப்போதும் உற்சாகம் குறையாமல் இருப்பார்கள். சரி இவர்களுக்கு சோகமே வராதா என நீங்கள் நினைக்களாம் , வரும்..ஆனால் ஒரு சராசரி மனிதனுக்கு எப்போது பார்த்தாலும் எதிலும் சோகமாய் வந்து கொட்டும் சோகம் அவர்களிடம் இருக்காது. சோகமான நிகழ்வுகளிலும் 'இதிலும் நான் ஏதோ கற்றுக்கொள்ள தான் இறைவன் இந்த சோதனையை எனக்கு தந்து இருக்கிறான்' என்று ஏற்றுக்கொள்வார்கள்.
 
 
      Leadership by ACTION, not by Position:  

எங்கும், எதிலும் இப்போது உள்ள சமுதாயம் தனக்கு செய்தி தெரிவிக்கப்படுகிறதா என்பதில் கவனமாக இருக்கிறது. இதை விட்டு 'பெரியவங்க செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும்" என்ற கி.மு வில் உள்ள விசயங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. எப்படி சரியாக இருக்கும் என்ற விளக்கமும் இப்போது உள்ள சமுதாயத்துக்கு கிடைக்க வேண்டும். அப்படியானால் தலைமைத்துவம் என்பது "எனக்கு தெரியாததா...எத்தனை வருசங்களை கடந்து வந்திருப்பேன்" என்ற ஸ்டேட்மென்ட் அவ்வளவு எடுபடாமல் இன்றைவரை அதற்காக உங்கள் செயல்பாடு என்பது என்ன என்பதில்தான் இருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து செயலிழந்து போன தலைவர்கள் குடும்பமாக இருந்தாலும் சரி, நிறுவனமாக இருந்தாலும் சரி இயற்கையாகவே ஓரங்கட்டப்படுகிறார்கள்.

கற்றுக்கொள்ளும் அறிவுத்தாகம் என்பது ஒரு நல்ல தலைவனின் தரம் சார்ந்தது. உங்கள் நிறுவனத்தில் நீங்கள் தலைவரா...சாதாரண ஊழியரிடம் கூட ஒரு நல்ல விசயத்தை கற்றுக்கொள்ள தயங்கவேண்டாம். அப்படியே கற்றுக்கொண்டாலும்  உங்கள் இமேஜ் உயரும், அதைவிட டாப் மேனேஜ்மென்ட்டுக்கும் ,கடை நிலை ஊழியருக்கும் உள்ள உறவு இன்னும் பலப்படும். இதனால் எதிர்காலத்தில் வரும் விரிசல்கள் சரி செய்ய இந்த உறவுப்பாலம் உதவியாக இருக்கும். இதற்குத்தான் ஒரு மிகப்பெரிய மந்திரச்சொல் என்று ஒன்று உண்டு அது. I need your help?.... எவ்வளவு பெரிய கோபக்காரனையும் உங்களுக்கு சாதகமாக்க இந்த ஆரம்ப வார்த்தைகள் உதவியாக இருக்கும். குடும்பங்களிலும் அப்படித்தான், வெகுநாட்களாக ஒத்துவராத அண்ணன் , தம்பி பிரிவில் கூட  மனசங்கடங்கள் வரும் சூழ்நிலையில்' எனக்கு ஏன் நீ உதவி செய்யக்கூடாது ? ' என்று கேட்டு விட்டால் இன்னும் உறவு கெடாமல் காப்பாற்றப்படலாம்.  

ஒரு சிறந்த தலைமத்துவத்தில் இருக்கும் ஒரு மனிதன் எப்போதும் நிஜத்தோடு ஒன்றியிருப்பான் [ Being relevant ] எப்போது பார்த்தாலும் பழையபுராணம், டெலிஃபோன் எக்ஸேஞ்சில் ஒயரை கழட்டி மாட்டி கனெக்சன் கொடுத்த டெலிபோன் காலத்தில் சாதித்தையெல்லாம் இப்போது உள்ள கேலக்ஸி நோட் சமுதாயத்துடன் கதைத்துகொண்டு [ அதையும் அவர்கள் காது கொடுத்துதான் கேட்கிறார்கள் என்று நம்பி] தன்னை ஒரு தலைவராகவே கற்பனையில் வளம் வருவது அரசியல் கட்சிகள் ஊழலை ஒழிக்கப்போகிறேன் என்று சொல்வதுமாதிரி 'ஒட்டாத உண்மை".

ஒரு சிறந்த தலைவருக்கான தரங்களில் ஒன்று எப்போதும் பொறுப்பு எடுத்துக்கொள்வது. 'நான் உண்டு என்வேலை உண்டுனு இருப்பேன் பேர்வழிகள்' இந்த லிஸ்டில் வராது. காரணம் இப்படி தன்வேலையை மட்டும் பார்த்து, தன் குடும்பம் என்று  மட்டும் வாழ்ந்தவர்களால் மற்றவர்களின் கஷ்டங்களை ஆழமாக புரிந்து கொள்ள முடியாது.

ஒரு நிறுவனத்தில் ஒரு சேல்ஸ்மேனின் கஷ்டம் எது என்று தெரிந்தால்தான் அந்த தலைவர் விற்பனையை எப்படி அதிகரிக்க முடியும் என யோசிக்க முடியும். இல்லாவிட்டால் பண்டிகை நேரங்களில் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டில் பொருள்களை அனுப்ப அட்டு ஐடியா கொடுக்க நேரிடலாம்.

ஒரு தலைவனாக இருக்க முதலில் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று காது கொடுத்து கேட்கும் தன்மை முதலில் இருக்க வேண்டும். அதனால்தான் இரண்டு காது , ஒரு நாக்கு கொடுத்திருக்கிறான் இறைவன் என்ற சொல்லே இருக்கிறது. சிலர் ஒரு நாக்கை வைத்து , அதற்குள் பிளேடு, அரிவாள் எல்லாம் எக்ஸ்ட்ரா பிட்டிங்க் செய்து பல குடும்பத்தில் குழப்பத்தையும், பல ஆட்களின் சோற்றில் மண் அள்ளிப்போடும் வேலையை செவ்வனே செய்து வருகிறார்கள். பின் காலத்தில் கஷ்டம் என்று வந்தவுடன்.."எனக்கு ஏன் இப்படி?" என்று யோசிக்கும் இவர்கள். 'நான் எப்படி?" என்று யோசிப்பதே இல்லை.  சரியாக காது கொடுத்து கேட்காமல் தான் வைத்ததுதான் சட்டம், அறிந்தது அறியாதது அனைத்தும் அறிவோம் என்று நடந்தால் சீக்கிரம் படமாக தொங்கிவிடுவோம்.

உங்களிடம் சரியான தலைமைத்துவம் இருக்கிறதா என்பதின் முதல் படிகளில் ஒன்று . "கெளரவம்" இது அகந்தை அல்ல. 'இந்த மாதிரி கேவலமான வேலையெல்லாம் இந்த ஆள் செய்ய மாட்டான்" என்று சமூகம் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு உங்கள் நடத்தை இருந்தால் அதற்கு கிடைப்பதுதான் கெளரவம்.

தலைமத்துவத்தில் உங்களுக்கென்று தனிவழி வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது தேவைப்பட்ட ரிசல்ட்டை கொடுக்கவில்லை என்றால் அந்த தனிவழியை காரணம் காட்டியே நிறைய 'துப்பு" வாங்களாம். பெரிசா கிழிக்கிறதா சொன்னே" யிலிருந்து நீங்கள் கஷ்டப்பட்டு படித்த டிகிரியை முதற்கொண்டு உங்களின் ஃபைலை திறக்காமல் எடுத்து வந்து துப்புவார்கள். இதன் அளவு ரிசல்ட்டை பொறுத்து...நீங்கள் சொன்ன தனிவழி குறைவாக ரிசல்ட் தந்தால் திட்டோடு அட்வைசும், எதிர்மறையான ரிசல்ட்டுக்கு எக்கச்சக்கமான துப்பும் கிடைப்பது கியாரன்டி.

தலைமத்துவ குணங்களில் முக்கியமானவை: தனிப்பட்ட விறுப்பு வெறுப்பு இல்லாமல் எந்த மனிதரையும் எந்த பிரச்சினையும் அனுகுகுவது. எப்போது தனிப்பட்ட விறுப்பு / வெறுப்பு இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் தீர்ப்பும் இருக்கும். பிரச்சினைகளின் தீவிரத்தை கண்டுபிடித்து அதற்கு தகுந்தாற்போல் சிந்திப்பதுதான் நல்லது.

இன்னும் மிகச்சிறந்த தலைமைத்துவங்களில் ஒன்று, தனக்கு பின்னும் இன்னொருவர் இருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு மற்றவருக்கு பயிற்சிதருவது.
 

மேற்ச்சொன்ன அனைத்தையும் ஏதோ பிஸினஸ் சம்பந்தப்பட்டது என மட்டும் நினைக்காமல் ஓவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பயன்படுத்த முடியும்.   தெரிந்து கொள்வதை விட நாம் எப்படி என்று  Self Analysis  செய்து கொள்வது நல்லது. தொழிலிலும் / குடும்பத்திலும்.

ZAKIR HUSSAIN

27 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//I need your help?....//

Please ! :)

//ஒரு தலைவனாக இருக்க முதலில் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று காது கொடுத்து கேட்கும் தன்மை முதலில் இருக்க வேண்டும். அதனால்தான் இரண்டு காது , ஒரு நாக்கு கொடுத்திருக்கிறான் இறைவன்//

சாட்சாத் ! நட்சத்திரங்களால் எழுதப்பட வேண்டிய வரிகள் !

//இன்னும் மிகச்சிறந்த தலைமைத்துவங்களில் ஒன்று, தனக்கு பின்னும் இன்னொருவர் இருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு மற்றவருக்கு பயிற்சிதருவது. //

இது என்னோட பாஸ் அடிக்கடி சொல்வது, ஆனால் அவர் சொல்வதை கேட்பவர்கள் அவ்வாறு செய்வதில்லை அடுத்த வன் ரெடியானால் எங்கே ஆப்பு அடிச்சுடுவாங்களோன்னு பயம் ஒட்டியிருப்பதால்!


//அனைத்தையும் ஏதோ பிஸினஸ் சம்பந்தப்பட்டது என மட்டும் நினைக்காமல் ஓவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பயன்படுத்த முடியும். //

ஆம் ! ஜஸாக்கல்லாஹ் ஹைர் காககா !

Anonymous said...

இந்த கருத்து எல்லோருக்கும் பொருந்தும் இப்பொவல்லாம் யாரும் யாருக்கும் எந்த செய்திகளையும் சொல்ல முடியவில்லை. ஏன் என்றால் அதை கேட்பதற்கு யாரும் முன் வருவதில்லை. நீ பெரியவனா நான் பெரியவனா என்று போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். வேலை செய்யும் ஊழியர்களிடமும் அவர்களுடைய கருத்துக்களை கேட்டு அறிந்தால் அதிலும் ஒரு நல்ல கருத்துக்கள் இருக்க தான் செய்யும்.

ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை பரிமாரிக்கொண்டாலே போதும் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் வராது. நமக்கு தெரியாத விஷயங்களை கேட்டு தெரிந்துக்கொள்வதில் வெட்கப்படவோ, கூச்சப்படவோ கூடாது அப்படி கூச்சப்பட்டாள் வெட்கமோ,கூச்சமோ பட்டால் நம்மால் ஒன்றும் தெரிந்துக்கொள்ள முடியாது.

Unknown said...

Assalamu Alaikkum

Good article.

There is huge difference between a manager and a leader.
Manager cannot be aleader, manager just manages the resources(including human resource). But leader is a visionary, lead by example, have will power to realize the vision by inspiration and effective coordination of people's minds and systems.

Prophet Mohammed Sallalahu Alaihi WaSallam (was) is a leader.

There are few true leaders in the world. Most of the so called leaders are managers not leaders.

In a family a father could advice effectively to a son not to smoke by the father already be a non smoker.

sabeer.abushahruk said...

தலைவா,

மனவள மேம்பாட்டுக்கான எல்லா வழிமுறைகளையும் சொல்லித்தரும் "படிக்கட்டுகள்" இத்தளத்தில் தனித்தன்மையோடு பீடுநடை போடுகிறது.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா -டா!

அப்புறம், 

தலைமைப் பொறுப்புக்கு அல்லது தலைவன் என்றாக தலையாயத் தகுதி "தன்னலமற்ற தொண்டுள்ளம்" ஆகும். இதை நீ அடுத்த அத்தியாயத்தில் தொடும் திட்டத்தில் இருந்தால் சரி. இல்லையேல், சகோ அமீன் கோடிட்டுக் காட்டியதுபோல் "நிர்வாகி"யைப்பற்றித்தான் நீ இங்கு அதிகம் பேசியிருக்கிறாயோ என்று தோன்றுகிறது.

விளக்கம் ப்ளீஸ்.

ZAKIR HUSSAIN said...

To Bro B Ahamed Ameen,

If a person 'lead" by his initiative, innovative with the by products of his action can be a leader. There fore in my opinion a manager can be a leader. Even bro Ahamed Ameen stated in his comets "Effective C-ordination of People Mind and System" which clearly indicates an act of "managing".

I do agree with Nabi Muhammad S.A.W and his wonderful leadership as you have mentioned. In My previous episode of Padikkattukal, i have clearly stated that if any body want to follow as leader Nabi Muhammad S.A.W is the ONLY person to be followed. And I re-affirmed that nobody have that kind of qualification, which until today it is still admired by his ummath as well as other religious people.

ZAKIR HUSSAIN said...

TO Sabeer,

Hope i answer your clarification [ refer the my reply comments to Bro B Ahamed Ameen]

"தன்னலமற்ற தொண்டுள்ளம்" this one in my opinion

= Depends on where a person represents: If a person represent Non-Profitable organisation it is 'yes' most of the time.

BUT i give you a situation where a CEO of a financial sector become a leader of his sector, he can do his duty or introduce new 'operational changes" which can eventually can bring lot of financial profits to him.

example: I have a customer base who can earn millions even though despite they are currently industry leaders /as well contribute to their industry as a form of corporate responsibility.



sabeer.abushahruk said...

Zakir,

For the sake of argument, why shouldn't I find a BEST CEO in your example, yet not a leader?

sabeer.abushahruk said...

To Bro A. Ameen and Zakir,
 
We don’t want to have any option in accepting our holy prophet (PBUH) as a leader for salvation  of human.  But, why shouldn’t we consider any other person as a leader for any exclusive concept?  For instant, if a person wants to know and learn theory of any field, shouldn’t he choose and take an expertise in that particular field as his leader?
 
I think this chapter talks about such leaders only.  These leaders are nowhere equal to our Prophet but are individually experts or scholars in their field of interest.  And that type of leaders should have the characteristics of what Zakir describes.  I commented to remind the author to consider the ‘sacred heartedness’ as a prime quality of such leader.
 
 

Yasir said...

எழில் மிகு எத்தியோப்பியாவின் அழகிய அடிஸ் சபாபா நகரில் இருந்து கொண்டு தங்களின் படிக்கட்டுகள் படித்து, உள்வாங்கி கொண்டு இருப்பது வாழ்க்கைக்கு பயனாகவும்..தனிமையில் சிந்திக்க ஏதுவாகவும் உள்ளது...வாழ்த்துக்கள் காக்கா நல்ல பொலைட் மக்கள் இங்குள்ளவர்கள்
ஒரு வாரம் கழித்துதான் திரும்பி வருவேன் என்பதால் கருத்துகள் குறைவாகவே இருக்கும்

sabeer.abushahruk said...

// கருத்துகள் குறைவாகவே இருக்கும்//

கருப்புகள் அதிகமாக உள்ள நாடாச்சே. குற்றங்கள் பெருகிய நாடாச்சே. கவனமாக இருங்கள் யாசிர்.

சென்ற வேலை வெற்றிகரமாக முடிய வாழ்த்துகளும் துஆக்களும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

படிக்கட்டுக்கள் பல விஷயங்களை அழகாக அலசும் விதம் இன்னும் உற்சாகம் தருகிறது

KALAM SHAICK ABDUL KADER said...

தலைகுனியும் பொழுது
நிலை உயரும்

I NEED YOUR HELP
MAY I HELP YOU
COULD YOU PLEASE TELL ME..

இப்படிப்பட்ட- பண்பட்ட- பணிவானச் சொற்கள் தலைமையை மிளிர வைக்கும் வைரகற்கள்!

Unknown said...

Assalamu Alaikkum,

Poeple in general misinterpret leaders and managers. Hence my previous comment distinguishes the leaders and managers. True leadership inspires the followers.If a manager(in title, eg Human Resource Manager, Financial Manager) has true leadership qualities, then he is a capable leader, but not a manager(title can be a manager in organizational chart).

The father mentioned in my previous comment is a manager who is not an inspiration to the son by his good characters, but just gives advice or force to do this and that. Would it be effective.? Would it make influence in the son's behaviour? No. So, a manager personality cannot be a leader personality.

True leadership is necessary not only in business but in families, religions, communities, educational institutions, politics, for profit/non profit oganizations, governments of countries.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

படிக்கட்டுக்கள் பல விஷயங்களை அழகாக அலசும் விதம் இன்னும் உற்சாகம் தருகிறது.

Iqbal M. Salih said...

I have gone through a book few months ago in Nagercoil entitled as 'A truth about being a Leader' written by Dr.Karen Otazo. I can absolutely refer such a wonderful writings fetching you to reveal a profoundest 'success formula'. Moreover,I find some similarity from your concept, the way you deliver such a tidings about the success formula of the real leadership personality.

Simply appreciate you Zakir!

Ebrahim Ansari said...

அன்புத் தம்பி!

அத்தனையும் கரும்பு . அதில் இது அடிக்கரும்பு.

//தலைமைத்துவ குணங்களில் முக்கியமானவை: தனிப்பட்ட விறுப்பு வெறுப்பு இல்லாமல் எந்த மனிதரையும் எந்த பிரச்சினையும் அணுகுவது. எப்போது தனிப்பட்ட விறுப்பு / வெறுப்பு இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் தீர்ப்பும் இருக்கும். பிரச்சினைகளின் தீவிரத்தை கண்டுபிடித்து அதற்கு தகுந்தாற்போல் சிந்திப்பதுதான் நல்லது.//

Unknown said...

ஜாகிர் காக்கா ,அஸ்ஸலாமு அலைக்கும் ........

உங்கள் படிக்கட்டின் பாடங்கள், ஒரு பல்கலை கழகம் .
அதில் மாணவர்களாக நாங்கள் இருப்பது எங்கள் பாக்கியம் .

---------------------------------------------------------------------------------------------

எழில் மிகு எத்தியோப்பியாவின் அழகிய அடிஸ் சபாபா நகரில் இருந்து கொண்டு தங்களின் படிக்கட்டுகள் படித்து, உள்வாங்கி கொண்டு இருப்பது வாழ்க்கைக்கு பயனாகவும்..தனிமையில் சிந்திக்க ஏதுவாகவும் உள்ளது...வாழ்த்துக்கள் காக்கா நல்ல பொலைட் மக்கள் இங்குள்ளவர்கள்
ஒரு வாரம் கழித்துதான் திரும்பி வருவேன் என்பதால் கருத்துகள் குறைவாகவே இருக்கும்

----------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ யாசிர் .......

எனக்கு மிகவும் பிடித்த மக்களில் முதன்மையானவர்கள் எத்தியோப்பியர்கள் .நேர்மையானவர்கள்
அவர்களுடன் 90ரின் பிற்பகுதியில் நாங்கள் நிறைய வியாபாரம் (textiles & electronics ) செய்து இருக்கிறோம் .அவர்கள் நாட்டிற்கு
வாங்கி செல்வார்கள் ..தக்ரின்ஜான் ,ஹமாரின்ஜான் ,afar , போன்ற மொழிகளை பேசுபவர்களை கொண்டது .''சமாஸ்கி '' என
அவர்கள் அன்போடு அழைப்பது மிகவும் பிடிக்கும் .''கமில்லக ?'' என நலம் விசாரிப்பும் மறக்க முடியாதவை .




அப்துல்மாலிக் said...

Today I had received an email call for Training "Leadership & Management Skill" which 3 whole day class offered cost with USD 1750.00

இந்த பதிவிலே தலைமைத்துவம் பற்றி இவ்வளவு தெளிவா ஜாகிர்காக்கா சொல்லிதந்தது போல் இவனுங்க பாடம் நடத்துவாங்களா என்பது சந்தேகமே...

Shameed said...

//சொன்ன மாதிரி நடந்துக்க தெரியலையே' என்று என்று சொல்லும்போதே தலைமைத்துவத்தின் ஆணிவேரில் ஹைட்ரோகுலோரிக் ஆசிட் ஊற்றப்படுகிறது என்று அர்த்தம்.//
//பல முடிவுகளை நீங்கள் கேள்விப்படும் நேரத்தில் அந்த முடிவுகள். முடிவுக்கே வந்திருக்கும்.//


//இதற்கும் புலிமார்க் சீயக்காய்தூளுக்கும் புலிக்கும் உள்ள சம்பந்தம்தான் அது.//

//பெரியவங்க செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும்" என்ற கி.மு வில் உள்ள விசயங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை.//

//டெலிஃபோன் எக்ஸேஞ்சில் ஒயரை கழட்டி மாட்டி கனெக்சன் கொடுத்த டெலிபோன் காலத்தில் சாதித்தையெல்லாம் இப்போது உள்ள கேலக்ஸி நோட் சமுதாயத்துடன் கதைத்துகொண்டு //

//பண்டிகை நேரங்களில் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டில் பொருள்களை அனுப்ப அட்டு ஐடியா கொடுக்க நேரிடலாம்.//

//சிலர் ஒரு நாக்கை வைத்து , அதற்குள் பிளேடு, அரிவாள் எல்லாம் எக்ஸ்ட்ரா பிட்டிங்க் செய்து பல குடும்பத்தில் குழப்பத்தையும், பல ஆட்களின் சோற்றில் மண் அள்ளிப்போடும் வேலையை செவ்வனே செய்து வருகிறார்கள்.//

படிக்கட்டுகளின் அசத்தல் வார்த்தைகள்

sabeer.abushahruk said...

ஜாயிரு,

எம் ஜி ஆர், அண்ணா, காமராஜ் போன்றோரை ஒரு நாட்டின் (மாநிலத்தின்) அதிகப்படியான மக்கள் பின் தொடர்ந்தனரே இவிங்கள்லாம் தலைவர்கள் இல்லையா?

இப்பவும் ஒரு கூட்டம் தல, தளபதி, கேப்ட்டன் என்று கொடிபிடிக்கிறதே இந்தத் தொண்டர்களின் நிலை என்ன?

சகோ. அமீன், ஒரு நிர்வாகி மிகச் சிறந்த நிர்வாகியாக வேண்டுமானால் ஆகலாமேத் தவிர, அவர் நிர்வாகி என்னும் தரத்திலிருந்து தலைவர் ஆகிவிட்டார் என்பதற்கான அலவுகோள் என்ன?

அலாவுதீன்.S. said...

சகோ. ஜாகிர்:
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

///தலைமத்துவ குணங்களில் முக்கியமானவை: தனிப்பட்ட விறுப்பு வெறுப்பு இல்லாமல் எந்த மனிதரையும் எந்த பிரச்சினையும் அனுகுகுவது. எப்போது தனிப்பட்ட விறுப்பு / வெறுப்பு இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் தீர்ப்பும் இருக்கும். பிரச்சினைகளின் தீவிரத்தை கண்டுபிடித்து அதற்கு தகுந்தாற்போல் சிந்திப்பதுதான் நல்லது.

மேற்ச்சொன்ன அனைத்தையும் ஏதோ பிஸினஸ் சம்பந்தப்பட்டது என மட்டும் நினைக்காமல் ஓவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பயன்படுத்த முடியும். தெரிந்து கொள்வதை விட நாம் எப்படி என்று Self Analysis செய்து கொள்வது நல்லது. தொழிலிலும் / குடும்பத்திலும்.///
**************************************************

சிந்திக்க வைக்கும் -
சிந்தனை வரிகள்!
வாழ்த்துக்கள்!

Unknown said...

To brother Sabeer Abushahruk

The following transformation is vital to a person (manager) to become a leader.

Become Visionary.

Have willingness to work for the sake of great cause, realizing the vision, not money motive.

Give attension to details - eg. should know each and every detail of company, product, service, and is able to define each and every aspect in those(company, product, service).

Inspiring through his excellent characters. Character is defined by scholars as 'always even in privacy(we say Allah is seeing us in privacy - Thaqwa) stick to the moral values'.

Lead by example or a model to be followed.

Become innovative and pursuing excellence.

Be able to direct the whole organization to a competent, successful, committed to stakeholders.

Be bold in making decision, experimenting capability, if failure happpened take full responsibilities, not finger at others.

Give credits to the people involved.

ZAKIR HUSSAIN said...

சகோ அபு இப்ராஹிம்..உங்கள் நெறியாள்கையில் என் ஆக்கம் என்று எடுத்துகொள்வதால் உங்களுக்கும் என் நன்றி.

சகோ அபுபக்கர் [அமேஜான்] , உங்கள் கருத்து இன்னும் இந்த ஆக்கத்துக்கு உதவியாக இருக்கிறது.

யாசிர், அடிஸ் அபாபா எழில்மிகு இடம் என்று சொல்லிவிட்டதால் உங்களிடமிருந்து படங்களை எதிர்பார்க்கிறோம்


சகோதரர்கள் இப்ராஹிம் அன்சாரி, அர அல , அப்துல் வாஹித், அபுல்கலாம் , எம் ஹெச் ஜே அனைவருக்கும் என் நன்றி ..உங்களைப்போன்றவர்கள் & நீங்கள் எல்லாம் தொடர்ந்து வாசித்து வருவதாலோ என்னவோ என் எழுத்தில் இன்னும் கவனம் செலுத்துகிறேன்.

ஹார்மி அப்துல்ரஹ்மான் என்ன வெகுநாட்களாக உங்களை வலைத்தளத்தில் காண முடிவதில்லை.

அப்துல் மாலிக் & அலாவுதீன் உங்கள் கருத்துக்கும் நன்றி.

Bro Ahamed Ameen...உங்கள் விளக்கத்திலிருந்து சில பாயின்ட்ஸ் எனக்கு அடுத்த எபிசோட் எழுத சில 'தூண்டுகோள்" கிடைத்தது.
Terima Kasih [ Thanx]








ZAKIR HUSSAIN said...

To Sabeer,

//இப்பவும் ஒரு கூட்டம் தல, தளபதி, கேப்ட்டன் என்று கொடிபிடிக்கிறதே இந்தத் தொண்டர்களின் நிலை என்ன?//


கனவுத்தொழிற்சாலையில் உருவாகும் இந்த அலுமினியப்பாத்திரங்களுக்கு கிடைத்திருக்கும் 'பளிச்" வெளிச்சம் லைட்பாய்கள் பிடித்திருக்கும் விளக்கிலிருந்துதான் வருகிறது என்பது கூட தெரியாத விட்டில் பூச்சிகள்.


crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நான் லேட்டா வந்தாலும் நீங்கதான் லேட்டஸ்டா இருக்கீங்க!தலைமைதுவத்தின் நுணுக்கம் அலசி ,அராய்ந்து இப்படி ஒவ்வொரு படியாய் கட்டி உச்சிக்கு கொண்டுபோய்விட்டுவிடுகிறீர்கள். பாராட்ட எல்லா யோசனையையும் பாராட்டித்தான் ஆகனும். இது காலத்தின் கட்டாயம் என கட்டியம் கூறுகிறது.அல்ஹம்துலில்லாஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு