Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை... - 4 15

அதிரைநிருபர் பதிப்பகம் | November 13, 2012 | ,

தொடர் - 4

விமானம் சென்னை விமான நிலையத்தை தொட்டதோ இல்லையோ நம் தமிழ் ‘குடி’மகன்கள், எல்லோரும் ஓட்டப் பந்தய வீரர்கள் என்ற நினைப்பில் பந்தயத்துக்கு தயராக, விமானமோ ஓடுதளத்தில் இன்னும் ஓடிக் கொண்டிருந்தது.

சென்னை விமான நிலையம் இன்னும் மாறவில்லை அதே வெந்தயக் கீரை மணம், தூசு படிந்த சன்னல்கள், ஒழுங்கில்லாத மேசை நாற்காலிகள்.


இமிகிரேசன் கவுண்டரில் நாம் சொன்ன ஹலோவுக்கும், அங்கிருந்து நகரும்போது சொன்ன நன்றிக்கும் எவ்வித சலனமும் இல்லை அந்த அதிகாரியிடமிருந்து பதிலும் இல்லை. எல்லோருக்கும் இதே கதிதான் ஏதோ எந்திரத்தனமாக முடிந்தது.


கஸ்டம்ஸில் எதுவும் கேட்கவில்லை நல்ல விதமாக மரியாதையாக நடந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்ல வேண்டும் யாரையும் துன்புறுத்தவில்லை. எல்லாம் இறைவன் அருளால் நலமாக முடிந்து வெளியில் வந்தோம். குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக வரவேற்று அழைத்து சென்றனர்.

மெட்ராஸ் என்ற பெயரைக் கேட்டவுடன் மனம் புளகாங்கிதம் அடையும் முயற்சிக்கு ஏற்ற உயர்வுக்கு வழி உள்ள இடம். முயற்சித்த எவரும், அல்லாஹ்வின் அருளால் சோடை போகாத இடம் நான் ஹையர் செகண்டரியும், கல்லூரியும், படித்தாலும், சகோதரர்களோடு இணைந்து உழைத்த இடமும் சென்னையே!


அந்த சென்னை ரொம்பவும் மாறிவிட்டது. அடுக்குமாடிகளும், பாலங்களும் என்று, ஆனால் மாறாமல் இன்றும் இருப்பது குப்பைகளும், தூசுகளும் சாலை விதிகளை பேனாத மக்களும். என்ன செய்வது அதுதான் இந்தியாவின் ட்ரேட் மார்க் ஆயிற்றே ! சென்னையில் 4 நாட்கள் உறவினர்கள் வீட்டில் தங்கி விட்டு அதிரை நோக்கி எங்கள் பயணம் ஆரம்பமானது.

நாங்கள் சென்ற டிரவேரா அதிரையின் தெருக்களில் நுழைந்து வீட்டில் வெளியே நின்றது. தாய் தந்தையைக் கண்டவுடன் அன்று தான் பிறந்தது போன்ற ஒரு உணர்வு நெஞ்சம் பனித்தது. சொந்தக்காரர்கள் சுற்றி நிற்க ! எங்கும் மகிழ்ச்சி வெள்ளம் ! அல்லாஹ் அக்பர் ! அல்லாஹ் அக்பர் !.


எங்கள் செக்கடிப்பள்ளி, முகைதீன் ஜும்ஆ பள்ளியின் இஷாவுக்கான பாங்கோசை கேட்டவுடன் மெய்மறந்தேன். அமெரிக்காவில் எந்த மதத் தளத்தின் சப்தமும் வெளியே வரக்கூடாது என்பது அந்நாட்டு சட்டம் நம் இறை இல்லத்தின் அழைப்பை எனக்குள் ஈமானின் உத்வேகம் அளித்தது.

தொடரும்...
A.R.அப்துல் லத்தீஃப்

15 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

சென்னை விமான நிலையத்தை எல்லோர் மனதும் சொல்லும் ஒரே உண்மையில் விவரித்தது கரெக்ட். எனக்கும் அந்த வாடை எல்லாம் அப்படியே உணர முடிந்தது.

புதிதாக கட்டியிருக்கிரோம் என்று பெருமைப்பட்டாலும் டாய்லட் கதவை திறந்தவுடன் டாய்லட் பவுலில் காலை வைக்கும் அளவுக்கு மிக பக்கத்திலேயே கதவை வைத்திருக்கும் எஞ்சினீயரிங் திறமை!!பேங்க் லாக்கருக்கு போடுகிறமாதிரி பெரிய தாழ்ப்பாள் [சின்ன பிள்ளைகள் டாய்லெட் பயன்படுத்த மாட்டார்களா?]ரிசீவ் பன்ன வந்தவர்களை ஏதோ அரசியல் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மாதிரி வெளியில் நிற்கவத்து செய்யும் கொடுமை. [ முதியவர்கள் ;/ பிள்ளைகள் / பெண்கள் யாருக்கும் முக்கியத்துவம் இல்லாத ஊர்]

இப்படி அடுக்கி கொண்டே போகும் காரணங்களை படித்து தெரிந்து கொள்ள முடியாத வெளிமாநிலத்தவர்கள் வேலை பார்க்கும் " ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா"






மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இப்படி அப்படை வசதிகள் எல்லாவற்றிலும் சீர் கெட்டு நிற்கும் நம் நாடு அது என்னம்மோ தெரியவில்லை மத நம்பிக்கையில் மட்டும் மேலோங்கி நிற்கிறது அன்று முதல் இன்று வரை. புது ஏர்ப்போர்ட்டு ஒன்று கட்டச்சொன்னால் அதற்காக இப்படியா? யாரோ ஒரு பூனூல் பொறியாளரிடம் பணி ஒப்படைக்கப்பட்டு அவர் பணியை அவர் பாணியிலேயே (செவ்வனே) செய்து முடித்திருக்கிறார் திருச்சி விமான நிலையத்தில். ஏர்போர்ட்டை விட்டு வெளியே வரும் பொழுது நமக்கு தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலிலிருந்து வெளியேறுவது போன்றிருக்கும் முகப்புத்தோற்றம். இல்லை இது இந்து பெருங்குடி மக்கள் வெளியேறும் பகுதி, இது சிறுபாண்மையினத்தவர்கள் வெளியேறும் பகுதி, இது சீர்மரபினர் வெளியேறும் பகுதி, இது பழங்குடியினர் வெளியேறும் பகுதி என பேசாமல் தனித்தனியே கட்டித்தொலைச்சிடலாம்.........

இல்லை ம‌த‌ச்சார்ப‌ற்ற‌ நாடு என்ப‌தை பாராளும‌ன்ற‌த்தில் ஒரு உட‌ன‌டி ச‌ட்ட‌ம் போட்டு அவர்கள் சந்தோசத்தோடு தூக்கிட‌லாம்.

sabeer.abushahruk said...

welcome to Adirai
where there is
memories preserved as treasure
emotions retained as a tradition

signs are there on the streets
signs that were left by our grandies, parents, friends
and even by us
just before we left

pick them up
take 'em with you
to Sanfrancisco
where you miss them a lot.

welcome back to Adirai!

Abdul Razik said...

Nice journey, nice article, nice pictures …Is this real picture of chekkadi? There is a small bridge crosses over the pond . Fantastic look. You can click Dissimilar images of chekkadi pond cause of your house situated there. No one image can beat chekkadi forever. Carryon your remaining moments.

Abdul Razik
Dubai

அலாவுதீன்.S. said...

///சென்னை விமான நிலையம் இன்னும் மாறவில்லை அதே வெந்தயக் கீரை மணம், தூசு படிந்த சன்னல்கள், ஒழுங்கில்லாத மேசை நாற்காலிகள்.///

சர்வதேச தரத்திற்கு விமானநிலையத்தை மாற்றப்போகிறேன் என்று சொன்னார்கள். மாற்றுவார்களா?

திருச்சி விமான நிலையத்தை கோவிலாக மாற்றிவிட்டார்கள். இந்த விமான நிலையமும் சர்வதேச தரத்திற்கு வரப்போகிறதாம்.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும் .

அன்பதிராப் பட்டினத்துக்கு ( அன்பு அதிராப் பட்டினம்) வருக! வருக! தாங்கள் வரவு நல் வரவு ஆகுக.

சான்பிரான்சிஸ்கோவில் கிடைக்காத கொடுவாப் பிசுக்கும், இலேசாக அடிக்கருகிய நானக்கத்தானும், நினைத்தாலே நெஞ்சு இனிக்கும் , கையும் மணக்கும் பீட்ரூட் ஹல்வாவும், முட்டை லாப்பையும், இடியப்பம் ஆட்டுத்தலை ஆணமும் , விடியற்காலையிலேயே நாயக்கர் கடையில் சுடச்சுட இட்லியும் தேங்காய் சட்னியும் அன்புடன் கிடைக்கும் ஊர்.

உங்களுக்கு எவ்வளவுதான் இனிப்பும் , கொழுப்பும் இருந்தாலும் வற்புறுத்தி வாயில் ஊட்டும ஊர் இது.

ஒரே நேரத்தில் ஒன்பது பள்ளிகளின் பாங்கோசை காதுகளில் ஒலிக்கும் இறைவனின் கருணை பெற்ற ஊர்.

நடந்து செல்லும்போதெல்லாம் நாற்பது பேராவது ஸலாம் சொல்லும் அற்புத ஊர்.
பலருக்கு பிடரியும் முழங்கையும் அடிக்கடி அரிக்கும் ஊர். (அதுவும் வெளிநாட்டுப் பயணிகளைக் கண்டால் உடனே அரிக்கும்).

Shameed said...

//சென்னை விமான நிலையம் இன்னும் மாறவில்லை அதே வெந்தயக் கீரை மணம்//

இத்தனை நாளும் (அந்த நாத்த) மணத்திற்கு பெயர் தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன் சரியாக சொன்னீர்கள்

அப்துல்மாலிக் said...

சென்னை ஏர்ப்போர்ட்டை விட்டுவெளியே வந்தவுடன் நம் கண்கள் மங்கிவிட்டதோ என்ற எண்ணம் நிச்சயம் எல்லோருகும் வந்திருக்கும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த பதிவுல கல்லூரின்னு வந்துச்சா... அதான் புதுக்கல்லூரி கண் முன்னாடி வந்திடுச்சு ! :)

மறக்க முடியுமா !?

KALAM SHAICK ABDUL KADER said...

//இமிகிரேசன் கவுண்டரில் நாம் சொன்ன ஹலோவுக்கும், அங்கிருந்து நகரும்போது சொன்ன நன்றிக்கும் எவ்வித சலனமும் இல்லை அந்த அதிகாரியிடமிருந்து பதிலும் இல்லை. எல்லோருக்கும் இதே கதிதான் ஏதோ எந்திரத்தனமாக முடிந்தது.//

ஆம். உண்மை தான்.

இப்னு அப்துல் ரஜாக் said...

கருத்திட்ட எல்லா சகோதரர்கள் நண்பர்களுக்கும் மிக்க நன்றியும் துவாவும்.கட்டுரையை விட ஒவ்வொரு கருத்தில் ஒரு நல்ல தீம் இருந்தது அதை வைத்தே ஒரு விழிப்புணர்வு கட்டுரை பண்ணலாம் என்ற அளவுக்கு மிக தரம் . மீண்டும் நன்றிகள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பயணம் இனிமை!
பயணம் சார்ந்த காரணிகள் காலத்திற்கேற்ப முன்னேறாமை இன்னும் வேதனை தரக்கூடியது.
இன்னும் இப்பயணம் பற்றிய மீத தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Iqbal M. Salih said...

புகைப்படங்கள் அருமை.
குறிப்பாக, எங்கள் காலேஜ்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Ebrahim Ansari காக்கா சொன்னது…

//உங்களுக்கு எவ்வளவுதான் இனிப்பும் , கொழுப்பும் இருந்தாலும் வற்புறுத்தி வாயில் ஊட்டும ஊர் இது.

ஒரே நேரத்தில் ஒன்பது பள்ளிகளின் பாங்கோசை காதுகளில் ஒலிக்கும் இறைவனின் கருணை பெற்ற ஊர். //

குறையில்லா நிறைகள் நிறைந்த ஊர் - மிகச் சரியே !

அர அல சொன்னது…

//ஒவ்வொரு கருத்தில் ஒரு நல்ல தீம் இருந்தது //

இதுதன் அங்கீகாரம் அந்த கட்டுரையின் படைப்பாளிக்கு ! :)

ajmal hussain said...

IT IS A TRUE FACT WHAT YOU HAD EXPRESSED ABOUT THE STATUS OF CHENNAI ANNA INTERNATIONAL AIRPORT. HIGHER AUTHORITIES FIGHT FOR THEIR POST TO RETAIN AND DO NOTHING TO IMPROVISE THE BASIC NECESSITIES OF THE PASSENGERS WHO FREQUENTLY TRAVEL. THIS HAS BECOME A COMMON MOURN REGARDING THE AIRPORT BY THE PASSENGERS . AT LEAST LET THEM SEE THE NEIGHBOURING COUNTRY AIRPORT AND LET THEM LEARN TO IMPROVISE IT. POOR AND PATHETIC STATUS OF CHENNAI ANNA INTERNATIONAL AIRPORT.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு