தொடர்கிறது - 6
ஊரிலிருந்து (தற்போது நிறுத்தப்பட்டு விட்ட) பட்டுக்கோட்டை-திருவாரூர் இரயிலில் புறப்பட்டு, திருவாரூரிலிருந்து கம்பன் எக்ஸ்பிரஸில் சென்னை வந்து சேர்ந்தோம்.
ஊரிலிருந்து கிளம்பிய முதல் திருவாரூர் வரை அந்த இரயில் நிறைய பள்ளிக் குழந்தைகள், அலுவலகம் செல்வோரைக் காண முடிந்தது. அந்த இரயில் நிறுத்தப்பட்டு விட்டதால் இனி அவர்களுக்கு சிரமம்தான். அதேவேளை, நமக்கு அகல இரயில் பாதை கிடைப்பதை எண்ணி சந்தோஷப்பட வேண்டிய நேரம், அது முடிய ஆறு அல்லது ஏழு வருடங்கள் ஆகும் என்ற செய்தியும் அது மிக கூடுதலான காலம் என்றே புலப்படுகிறது. காரணம், ஆட்சி மாறினாலோ, அல்லது அரசியல் சூழ்நிலைகளால், சூழ்சிகளால் பல திட்டங்கள் நம் இந்தியாவில் முடக்கப்பட்டு விடுகின்றன.
எனவே, துரிதமாக முடிந்தால் நம் நாடு அல்ல, அமெரிக்கா, மலேஷியா, சீனா போன்ற நாடுகளிடம் காண்ட்ராக்ட் விடால் துரிதமாக முடியும் !?!!
அதிகாலை 5:30 மணிக்கு கம்பன் எக்பிரஸ் சென்னை வந்து சேர்ந்தது. சென்னையிலிருந்து மறுநாள் அதிகாலைப் பயணம். பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் மூலம் லண்டன் வழியாக லண்டனிலிருந்து டால்லாஸ் / சான்பிரான்ஸிஸ்கோ வரை அமெரிக்கா ஏர்லைன்சில் டிக்கெட் புக் செய்திருந்தேன்.
பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் புறப்பட்டது, சில நேரங்களிலேயே "muslim food for you" என்று எனக்கு உணவு பரிமாறப்பட்டது. சுடச்சுட மீன் உணவு மிகவு ருசியாக இருந்தது. அவித்த உருளைக் கிழங்கு, பழங்கள் அதன் சர்வீசும் உணவும் எனக்கு மிகவும் பிடித்து போயிருந்தது.
சுமார் 10:30 மணி நேரப் பயணம், லண்டன் நேரம் காலை 11:20 மணிக்கு ஹித்ரோ விமான நிலையம் வந்து சேர்ந்தேன்.
டிரான்சிட் பயணம் என்பதால் லண்டன் ஏர்போர்ட்டை சுற்றி வந்து கொண்டிருந்தேன். அடுத்த விமானம், பகல் 03:20க்குதான் எனவே, நேரம் இருந்தது நிறைய முஸ்லிம்களை அங்கே காண முடிந்தது.
இதற்கிடையில், லுஹர், அசரை ஜம்மு கசராக முடித்து விடலாம், என்றெண்ணித் தொழுவதற்கு இடம் தேடும்போது Prayer Hall for All faith மேல் மாடியைச் சுட்டிக் காட்டிய அடையாள சின்னத்தை நோக்கிச் சென்றால் "மாஷா அல்லாஹ்" அங்கிருந்தவர்கள் அனைவரும் முஸ்லிம்களாவே இருந்தார்கள்.
ஏக இறைவன் அல்லாஹ்வை வணங்க உலகின் எந்த விமான முனையத்திலிருந்து வந்தாலும், அங்கு வந்து தொழுதுவிட்டு செல்லும் காட்சி, நமக்கு இஸ்லாம் ஒரு universal way of life என்பதை இங்கும் காட்டுகிறது அல்லவா ?
அந்த prayer hallலின் உள்ளே நுழைந்தவுடன், சிலர் தொழத் தயார் நிலையில் இருந்தனர், சரி தயம்மும் செய்து கொள்வோம் என்று எண்ணி சுவற்றின் மேல் கைவைக்கப் போகும்போது அங்குள்ள ஒருவர் 'அதை' கை காட்டி இதில் தயம்மும் செய்யும்படி சொன்னார், நானும் செய்தேன். ஆனால், அப்படி 'அது' அங்கு இருப்பது எனக்கு அதிர்ச்சியாகவே உள்ளது.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
A.R.அப்துல் லத்தீஃப்
16 Responses So Far:
சுவராஸ்யமான பயணக்கட்டுரை..அருமை...நான் லண்டன் செல்லும் போது பிரிட்டிஸ் ஏர்வேஸ்ஸில் சென்றேன் சர்வீஸ் நன்றாகவே இருந்தது....நான் “முஸ்லிம் உணவை”:) முன் கூட்டியே புக் செய்யாததால் ஏர் பெண்மனியிடன் இது ஹலாலா என்று கேட்டேன் அவர் புரியாமல் “சாரி லெட் மீ மேக் சூர்” என்று யார் யாரிடமோ கேட்டுவிட்டு “தெரியவில்லை” என்றார், நானும் அவர்கள் தந்த அசைவ பொருட்களை சாப்பிடவிலை..இதனை நீண்ட நேரம் கவனித்துகொண்ட்டிருந்த ஒரு பிரிட்டிஷ் மருத்துவ சகோதரி ஏன் சாப்பிடுவதில்லை என்று வினவ..நான் விளக்கம் கொடுக்க,அது அவரை கவர்ந்தது போல உணர்ந்தேன்...அவர் மேலும் நம் மார்க்கத்தை தெரிந்து கொள்ள ஆசைபட சில குறிப்புகளை கொடுத்துவிட்டு வந்தேன்...அந்த சகோதரி சன்மார்க்கத்தை ஏற்று கொண்டு இருக்க அல்லாஹ்விடம் துவாச்செய்கின்றேன்..அந்த தருணத்தில் ”தாவா” பணிகளை கற்காததை நினைத்து வேதனைப்பட்டேன்..இன்னும் விளக்கம் கூறி இருந்தால் விமானத்திலயே ஒரு”ஷஹாதா” கூறப்பட்டு இருக்கும்..அல்லாஹ் கரீம்
மாலை நேரத் தென்றல் மேனியை வருடுவது போன்ற மென்மையான உணர்வு இந்த ஆக்கத்தைப் படிக்கும்போது . மாஷா அல்லாஹ்.
மாஷா அல்லாஹ் ! பயணம் துவங்கியதிலிருந்து தொழுகைக்கான நேரம், இடம் தேடுவதில் காட்டிய மும்முரம் !
வாழ்த்துக்கள் தம்பி, பயணங்களில் சிரமங்களையும் சிந்திக்க வைக்கும்படியான எழுத்து நடை... அருமை !
பயணக் கட்டுரை மட்டுமன்று (ஏற்கனவே எப்படி எழுதுவாய் என்று எனக்குத் தெரியும்) நாம் தனி மின்னஞ்சலில் உரையாடும் கருவை வைத்து மெருகூட்டிக் கொண்டு இன்னும் கட்டுரைகளை எழுதவேண்டும் என்று கேட்டு வைக்கிறேன் இங்கே இன்ஷா அல்லாஹ் !
தங்களின் பயண கட்டுரையில் மார்க்க விசயங்களும் சேர்ந்தே வருவதில் மகிழ்ச்சி
தம்பீ!
உன்னோடு நாங்களும் பயணித்தோம்
உன்றன் பயண வானூர்தி வேகத்தை விட
மனமென்னும் வாகனத்தில்
சிந்தையென்னும் சிறகுக் கட்டிக் கொண்டு..
தங்களின் பயண கட்டுரையில் மார்க்க விசயங்களும் சேர்ந்தே வருவதில் மகிழ்ச்சி
அஸ்ஸலாமுஅலைக்கும். இப்ப செக்கடி(கொசுக்கடி?)மோட்டிலிருந்து,சான்பிரான்சிஸ்கோ நோக்கிய பயணம்.பின்னோக்கி பார்த்தால் கண்ணீர் மாலை கோர்த்து வரும்! உறவுகளின், சொந்தங்களின், நட்புகளின் மூச்சு காற்று நசுங்கிவிடாமல் எங்காவது உம்முடைய சட்டை பையிலோ, எடுத்து வந்த பெட்டியிலோ பதுங்கி இருக்கா நான் சுவாசிக்க என ஏங்க வைத்தது! நீ சுவாசித்து வந்த காற்றில் கலந்திருப்பதால் நானும் கொஞ்சம் கணத்த மனதுடன் நீ விட்ட சுவாசம் இழுத்து விட்டேன்!
நானும் பயணம் போய் வர அல்லாஹ்வின் அருளை வேண்டுகிறேன்.
//உறவுகளின், சொந்தங்களின், நட்புகளின் மூச்சு காற்று நசுங்கிவிடாமல் எங்காவது உம்முடைய சட்டை பையிலோ, எடுத்து வந்த பெட்டியிலோ பதுங்கி இருக்கா நான் சுவாசிக்க என ஏங்க வைத்தது!//
\
இதைப்படித்தவுடன் நான் நினைத்தது.... சொந்தம் / நட்பு இவைகளின் மீதான் பாசம் எவ்வளவு ஆழமானது!!.
இதை விட அன்பை படம்பிடிக்கும் வார்த்தைகள் தான் வேண்டுமா?
மாஷா அல்லாஹ் ! அண்ணன் தம்பிகள் இப்படி இனிமையாகப் போட்டுத் தாக்குகிறீர்களே!
//ஆனால், அப்படி 'அது' அங்கு இருப்பது எனக்கு அதிர்ச்சியாகவே உள்ளது.//
என்ன இப்படி பயணக்கட்டுரையை த்ரில்லெர் ஆக்கிட்டீங்க?
அது என்னவென்று அறியாவிட்டால் மண்டை வெடிச்சிடும்போல இருக்கே!
//நானும் பயணம் போய் வர அல்லாஹ்வின் அருளை வேண்டுகிறேன்.//
இன்ஷா அல்லாஹ்!
ஆனால், வழி சிங்கப்பூரல்ல, துபை என்பது நினைவிருக்கட்டும்.
தம்பி அர அல ...
பயண கட்டுரை அதிரைக்கு
சென்று வந்த திருப்தி ...!
யாசிர் நீங்கள் ஹலால் உணவா
என்று பார்த்ததன் விளைவு
தங்கள் உருகில் உள்ளவருக்குஇஸ்லாத்தின்
மீது கவனம் வந்திருக்கும் நீங்கள்
அழைப்பு பணியை கொடுத்து விட்டீர்கள்
இன்சா அல்லாஹ் அவர் இஸ்லாத்தை
ஏற்றால் அதில் உங்களுக்கும் பங்குண்டு
இன்ஷா அல்லாஹ்!
ஆனால், வழி சிங்கப்பூரல்ல, துபை என்பது நினைவிருக்கட்டும்
-------------------------------------------------------------------------அஸ்ஸலாமுஅலைக்கும்,அப்படியே ஆகட்டும்.
அன்புக் கருத்திட்ட எல்லா நல உள்ளம்களுக்கும் மிக்க நன்றியும் துஆவும்
பயணகள் முடிவதில்லை..........நல்ல தகவலும் முடிவதில்லை,,,,, உணர்வூட்டும் அனுபவம் பலருக்கு உயிர்வூட்டும் நல்ல தகவல் ..... தூஆகள். மாஷா அல்லாஹ்.எ.ர .நூருல்ஹசன்.
Post a Comment