Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை... - 5 17

அதிரைநிருபர் பதிப்பகம் | November 20, 2012 | ,


நம்மவர்களுக்கே உரித்தான விருந்தோம்பல், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்தும். விருந்தாக யாராவது மீன் உணவு அல்லது வெறும் காய்கறி உணவு என தரமாட்டார்களா? ஏக்கம் !


எல்லோரும் சொல்லி வைத்தார் 'மே மே'யும் 'பே பே'யும் சாப்பாட்டுக்கு துணைக்கு வைத்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். எல்லாம வல்ல அல்லாஹ் அவர்களின் விருந்தோம்பலுக்கு மிகச் சிறந்த கூலி தருவானாக !


ஊர் நன்றாக வளர்ந்து விட்டது ! சகோதரர்களின் பைக்கில் ஊரை வலம் வந்தேன், விவசாய நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறிப் போயிருந்தன. பள்ளி வாசல்கள் பெருகிவிட்டன மாஷா அல்லாஹ் !

என்னால் முடிந்த அளவு சுமார் 17 பள்ளிவாசல்களில் தொழுதேன். எல்லாப் பள்ளிகளிலும் ஒன்றை நன்றாக கவனிக்க முடிந்தது. அது மனதை கரைத்தது கனக்க செய்தது. 

தொழுகையில் சஃபில் ஒழுங்கு இல்லை, ஒவ்வொருவர் பாதத்திற்கிடையே நிறைய இடைவெளிகள் காண முடிந்தது. ஆறுதலான விஷயம் தக்வா பள்ளி. இங்கு மட்டுமே ஹதீஸ் எப்படி போதிக்கிறதோ அப்படி சஃபில் நெருக்கமாக நின்றார்கள். இதன் முக்கியத்துவத்தை இமாம் எடுத்துச் சொன்னால் நலமாக இருக்கும்.

கவனத்தில் கொள்ளவேண்டியது:


உங்கள் ஸஃப்பை சீர்படுத்திக் கொள்ளுங்கள், நிச்சயமாக ஸஃப்பை சீர்ப்படுத்திக் கொள்வது தொழுகையை முழுமைப்படுத்தக்கூடிய விஷயங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்) கூறினார்கள்: (புகாரி, முஸ்லிம்)

புகாரியின் அறிவிப்பில்: ஸஃப்பை சீர் செய்வது தொழுகையை நிலைநாட்டும் விஷயங்களில் ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புகாரியின் மற்றொரு அறிவிப்பில்: (ஸஃப்பில் நிற்கும்பொழுது) எங்களில் ஒருவர் தம் தோள்பட்டையை அருகிலுள்ளவரின் தோள்பட்டையுடனும், தம் பாதத்தை அவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்வோம் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஊரில் ஹைதர் அலி ஆலிம், சித்தீக் பள்ளி விஷயம் பரவலாகப் பேசப்படுவதை அவதானிக்க முடிந்தது. இதற்கு ஒரு சுமூக, ஒரு நல்ல தீர்வு கிடைக்க அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.

ஊரில் அஹ்மது சாச்சா, இபுராஹீம் அன்சாரி காக்கா, சகோதரர்கள் தாஜுதீன், லெ.மு.செ.அபூபக்கர், சேக்கனா நிஜாம், இப்ராஹிம் மவ்லவி இன்னும் பலரை சந்தித்து உரையாடியதில் உவகை கொண்டேன்.

இன்னும் எல்லாத் தெருக்களிலும் குப்பைகளும், கூலங்களும் நிரம்பி இருந்ததை பார்க்கும் போது வேதனையாக இருந்தது.

செக்கடிக் குளத்தில் ஒரு ஹெர்பல் பூங்கா அமைக்கலாம் என்ற நல்ல யோசனையை என் உறவினர் (புகாரி மச்சான் அவர்கள்) சொன்னார்கள். சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் கவனிக்க வேண்டும். இரண்டு பள்ளிகளும், வீடுகளும் சுற்றி இருந்தது போன்ற ஒரு அமைப்பு ஊரின் செக்கடிக் குளத்திற்கே இருக்கிறது.

மக்களிடையே சுகாதார விழிப்புணர்வு அவசியம் தேவை. இது விஷயத்தில் பேரூராட்சி மன்றத் தலைவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பது மிக அவசியம். அதிரை பைத்துல்மால் நிர்வாகம், பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் குறித்து மார்க்கெட்டில் விழிப்புணர்வு பயணம் செய்தமை பாரட்டுக்குரிய ஒன்றாகும்.

அஹ்மது சாச்சாவை பார்க்கும்போது ஒரு புத்தகம் தந்து படிக்கச் சொன்னார்கள் "The miserable revolution" என்பது அந்த புத்தகத்தின் பெயர். இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்திற்கு எதிரான முறையில் ஆட்சி செய்த கொமேனியின் கொடுங்கோன்மை ஆட்சி குறித்தும், அவர் செய்த அட்டூழியம், இரான் இராக் போர் ஏன் ஏற்பட்டது என்ற விவரம் அடங்கிய நூல் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் எனில் அதில் மிகையில்லை. அஹ்மது சாச்சா அவர்களை அவர்கள் வீட்டில் சந்திக்கும்போது நான் கேட்ட்து "இதுதான் உங்கள் ஓய்வுக் கூடமா?" என்று, உடனே அவர்கள் சொன்னார்கள் "அல்ல இது அடியேனின் ஆய்வுக் கூடம்" என்று.

எப்படி நாட்கள் வேகமாக நகர்ந்தது என்று தெரியவில்லை மீண்டும் புறப்படும் நாள் நெருங்கியது...
தொடரும்...
A.R.அப்துல் லத்தீஃப்

17 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பயண நாட்களோ குறைவு... பயணித்த தூரமோ அதிகம்... பாதம் பதித்த இடங்களோ நிறைய... மாஷா அல்லாஹ் !

வெகேஷனை நல்ல முறையில் பயன்படுத்தியிருக்கிறீர்கள் தம்பி ARA.

அமெரிக்காவிலிருந்து வந்து அதிரை(யின்) ஆய்வுக் கூடம் வரை சென்று இருக்கிறீர்கள் ! :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரைநிருபரில்...

விரைவில் !

ஆணுக்கும் பெண்ணுக்கும் - மெருகூட்ட

அழகுக் குறிப்புகள்

அதென்னங்க !?

sabeer.abushahruk said...

அர அல,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பே பே மே மே படித்ததும் சிரித்துவிட்டேன். காடையும்தானே? மீ மீ சாப்பிடவே இல்லையா?

யாரைவிட்டுப் போனாலும்
ஊரைவிட்டது போலாகுமா

ச்சின்ன பயணமாயினும் நினைவுகளைப் பதிந்து நீர் பெரிய பயணமாக்கிவிட்டீர்.

நீங்கள் சந்தித்த அதிரையின் செலிப்ரெட்டிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டுமெனில் அ.நி.யில் மேற்கொண்டு எழுத வேண்டும். 

எழுதுவதற்கு தமிழ் பஞ்சமெனில் உங்கள் கலிஃபோர்னியத் தமையன் கிரவுனிடம் கொட்டிக்கிடக்கிறது. கட்டி எடுத்து வரவும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

என்ன தான் பிறந்த மண் சில சமயம் மேனியில் புழுதி வாரி இரைத்தாலும் அதை கடந்து வந்த பாதை எங்கோ ஓரிடத்தில் ஆற,அமர இருந்து கொண்டு அதை அசை போடுகையில் அது உள்ளத்திற்குள் நிச்சயம் வசந்தத்தை வீசாமல் இருப்பதில்லை.

முதன் முதலில் சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து சவுதியிலிருந்து பிறந்த மண்ணுக்கு திரும்புகையில் சிறு வயதில் அகன்றிருந்த தெருக்களெல்லாம் சிறிய முடுக்குகளாகவும்,

வாலிபர்களாய் சுற்றித்திரிந்தவர்கள் வயோதிகர்களாகவும்,

சக‌ நண்பர்களெல்லாம் திருமணங்கள் முடித்து பிள்ளைகளுக்கு வாப்பாமார்களாகவும்,

க‌ம்பு ஊண்டிய‌ அப்பாமார்க‌ள் காண‌ம‌ல் போயும்,

பெற்ற‌ தாய், த‌ந்தைய‌ரே தளர்ந்து ஒஹ‌ப்பான‌ அப்பா, பெரிய‌ம்மா போலும்,

என்றுமே அப்ப‌டி இருக்கும் க‌டைத்தெருக்க‌ள் அன்று க‌ண்க‌ளுக்கு அல‌ங்கோல‌மான‌தாக‌வும்,

அம்பாசிட‌ர் கார்க‌ளெல்லாம் கொஞ்ச‌ம் அள‌வு சிறிதாகி புதிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் சொகுசு கார்க‌ளாக‌வும்,

அங்குமிங்கும் ஓடிய‌ சைக்கிள்க‌ளெல்லாம் இருச‌க்க‌ர‌ வாக‌ன‌ங்க‌ளாக‌வும்,

நாட்டு,கொழிக்கி ஓட்டு வீடுக‌ளுக்கெல்லாம் வேட்டு வைத்து த‌ரைம‌ட்ட‌மாக்கி அதன் மேல் சிமெண்ட் க‌ட்டிட‌ங்க‌ள் த‌ன் இருப்பிட‌த்தை அமைத்துக்கொண்ட‌து போலும்,

தொள‌,தொள‌வென்று போட்டுக்கொண்ட‌ ச‌ட்டைக‌ளெல்லாம் உட‌லை இறுக‌க்க‌ட்டிக்கொண்ட‌து போலும்,

குதிரை வ‌ண்டிக‌ளுக்கெல்லாம் ப‌ணி ஓய்வு கொடுத்து மக்கள் ஆட்டோக்க‌ளுக்கு போட்டாபோட்டி போடுவ‌து போலும்,

இப்படி இன்னும் எத்த‌னை, எத்த‌னை மாற்ற‌ங்க‌ளை என் க‌ண்க‌ளாலேயே க‌ண்டு நின்றேன். அப்ப‌டி இருக்க‌, சுமார் 10 ஆண்டுக‌ள் க‌ழித்து ஊர் திரும்பிய‌ ச‌கோ. அர‌. அப்துல் ல‌த்தீஃபிற்கு அள‌ப்ப‌ரிய‌ மாற்ற‌ங்க‌ள் க‌ண்க‌ளுக்கு தென்ப‌ட்ட‌தில் ஆச்ச‌ர்ய‌ம் ஒன்றும் இல்லை தான்.

த‌ம்பியுடையான் ப‌டைக்க‌ஞ்சான் என்ப‌து போல் உங்க‌ள் த‌ம்பி ச‌கோ. த‌ஸ்த‌கீர் ஊர் வ‌ந்து சென்றால் எப்ப‌டியெல்லாம் எழுதி முடிப்பாரோ? என‌ கொஞ்ச‌ம் நினைத்துப்பார்த்தேன்.

உங்க‌ள் வாழ்க்கைப்ப‌ய‌ண‌மும், வாக‌ன‌ப்ப‌ய‌ண‌மும், எழுத்துப்ப‌ய‌ண‌மும் முச்சக்கர வாகனம் போல் இனிதே என்றும் தொட‌ர‌ட்டும் இன்ஷா அல்லாஹ்.......

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பயணம் இனிமை!

//சஃபில் நெருக்கமாக நின்றார்கள். இதன் முக்கியத்துவத்தை இமாம் எடுத்துச் சொன்னால் நலமாக இருக்கும்//
இங்கு ஒரு இமாம் முறையாக எடுத்து சொல்லிவிட்டு பின், தன் முஸல்லாவை விட்டு வெளியேறி வந்து 2,3 ஸஃப் வரை அவர்கள் பார்த்து விட்டு தான் ஜமாத் ஆரம்பிப்பார்கள்.

Shameed said...

ஊர் வாசம் மூக்கை துளைக்கின்றது கூட எறச்சி ஆனமும் இடியப்பமும் சேர்ந்து

அலாவுதீன்.S. said...

///தொழுகையில் ஸஃப்பில் ஒழுங்கு இல்லை, ஒவ்வொருவர் பாதத்திற்கிடையே நிறைய இடைவெளிகள் காண முடிந்தது.///

ஸஃப்பில் ஒழுங்கற்று நிற்பது எல்லா இடங்களிலும் நிறைய இருக்கிறது. அரபு நாடுகளில் எல்லா பள்ளிகளிலும் இடைவெளியும், முன் பின் நிற்பதும் அதிகமாகவே இருக்கிறது. பார்த்தால் மனதிற்கு வேதனையாகத்தான் இருக்கும்.

தொழுகையை முறையாக கடைபிடித்துத் தொழுவதற்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த பயிற்சி அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ZAKIR HUSSAIN said...

சகோதரர் அர அல அல அவர்களின் ஊர்பயண அனுபவங்கள் , சகோதரர் எம் எஸ் எம் அவர்களின் ஊரைப்பற்றிய ரன்னிங் கமென்ட்ரி எல்லாம் ஊருக்கு போய்வர வேண்டும் என்ற உணர்வைத்தருகிறது, இருப்பினும் பல்லை தீட்டி வைத்துக்கொண்டிருக்கும் கொசுக்கூட்டத்தை நினைத்தால் "மனசுக்குள் கரண்ட் போய்விடுகிறது".

KALAM SHAICK ABDUL KADER said...

// கூட எறச்சி ஆனமும் இடியப்பமும் சேர்ந்து//

சுட்டும் விழிச்சுடர்க்கு வட்டுலப்பம்/கடப்பாசியையும் காட்டி விடுங்கள்.


\\"அல்ல இது அடியேனின் ஆய்வுக் கூடம்"\\



ஆசான் அதிரை அஹ்மத் காக்கா அவர்களுடன் உரையாடினால் கவிதை எழுத்துக்களையும், கவிதை எண்ணங்களையும் நாம் சுமந்து வரும் ஓர் ஆத்ம திருப்தியை அடியேனும் இம்முறை அவர்களை என் விடுமுறையில் , ஊரில்-நேரில் சந்தித்த வேளையில் பெற்றுக் கொண்டேன். எது கை எது கால் என்று உணரும் பருவத்திலிருந்தே எதுகை, மோனையுடன் விளையாடியிருப்பார்கள்; அதனாற்றான், இவ்வண்ணம் “சமயோசிதமாக” அவர்களால் கவிதையாக மறுமொழி அவர்களின் நாவிலிருந்து தமிழருவியாகக் கொட்டியுள்ளது.

இப்னு அப்துல் ரஜாக் said...

இன்னும் பலரையும் மேலும் சகோதரர்கள் அட்வகேட் முனாப் பஷீர் காக்கா நெய்னா நிஜாம் புதுதெரு நிஜாம் மேலதெரு அப்துல் காதர் (அபூ ஈசா )ஜே அமீன் ராஜிக் துபை எம் ஒ தாஜ் ஷமீம் என்று பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதில் மகிழ்வு கொண்டேன் ஆனால் அவர்களிடம் நேரம் செலவிட முடியாமை குறித்து மிக்க துயர் கொண்டேன்.
நண்பன் புது தெரு நிஜாம்,எனக்கு முதன் முதலில் தூய இஸ்லாம் இதுதான் என போதித்தவர் .அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக

இப்னு அப்துல் ரஜாக் said...

கருத்திட்ட இன்ஷா அல்லாஹ் இனி கருத்திட விழையும் எல்லாருக்கும் நன்றியும் துவாவும் ஜசாக்காஹ் க்ஹைரன்

Unknown said...

you make me to bring hungry. let me know when will be solved idiyappa Complication. wish you keep continued to post travel experience.
jazakallah khair

அப்துல்மாலிக் said...

மாற்றம் ஒன்றே மாறாதது, அது நம்ம ஊரிலே இருந்துக்கிட்டே இருக்கும்.. நல்ல தொடர் காக்கா..

Ahamed irshad said...

உங்கள் தொடர் நல்லா இருக்குது காக்கா.... அதுவும் இடியாப்பத்தோடு இறைச்சி ஆனமும் படம் மாதிரி இல்லை ஒரிஜினல் மாதிரி இருக்குது... அற்புதம்...


//ZAKIR HUSSAIN சொன்னது…

சகோதரர் அர அல அல அவர்களின் ஊர்பயண அனுபவங்கள் , சகோதரர் எம் எஸ் எம் அவர்களின் ஊரைப்பற்றிய ரன்னிங் கமென்ட்ரி எல்லாம் ஊருக்கு போய்வர வேண்டும் என்ற உணர்வைத்தருகிறது, இருப்பினும் பல்லை தீட்டி வைத்துக்கொண்டிருக்கும் கொசுக்கூட்டத்தை நினைத்தால் "மனசுக்குள் கரண்ட் போய்விடுகிறது".//

கொசு கடிச்சாலும் ஊர் ஊர்தான் ஜாகிர் காக்கா..இங்கே மூட்டப்பூச்சி கடி அதைவிட மோசமா இருக்குது... ஆக எங்க போனாலும் கடி உறுதி..இஃகி.. :)

ajmal hussain said...

GOOD LUCK TO GOOD HISTORIAN. KEEP WRITING YOUR EXPERIENCES. ALL THE BEST AND KEEP GOING AHEAD. COULD YOU PLEASE STATE YOUR RETURN JOURNEY EXPERIENCE PLEASE. Take care . BYE.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு