Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 12, 2012 | , , ,


கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சரியாக 1900 வருடங்களில் அதிரைப்பட்டினத்திலிருந்து குறிப்பாக நெசவுத்தெரு வாசிகள் தொழில் மற்றும் சம்பாத்தியம் தேடி பர்மா நாட்டை நோக்கி படையெடுத்தனர் (அன்று அவர்கள் துவங்கி வைத்தது இன்றும் தொடர்கிறது. ஆனால், நாடுகள் வெவ்வேறு), சொந்த தொழில் செய்தும், சம்பளத்துக்கு வேலை செய்தும் நல்ல சம்பாத்தியம் செய்தார்கள். நிறைய பணம் சம்பாதித்தார்கள். ஓரளவு பணம் சேர்ந்தவுடன் நாம் பிறந்து வளர்ந்த ஊருக்கு / தெருவுக்கு அதன் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கம் (இன்றும் முஹல்லாவுக்கு ஒரு அமைப்பு இருந்து ஊரில் பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்) அனைவரிடையே இருந்தது. இவர்களின் முயற்சியால் பொது வசூல் முலம் சில ஆயிரங்கள் சேர்ந்தன. அந்த பணத்தை ஊருக்கு எடுத்து சென்று எதாவது நல்ல காரியங்களில் ஈடுபடுத்த முயற்சி செய்தார்கள். அதன் விளைவாக தெருவாசிகள ஒன்றுகூடி விவாதம் செய்தார்கள்.

அதன்படி 1910 ம் வருடங்களில் அம்பலகார வீடு இபுறாகீம் ஷாகிப் அவர்கள் தலைமையில் கமிட்டி அமைக்கபட்டு எந்த விதமான நல்ல காரியம் செய்வது என்று ஊரில் உள்ள மற்ற தெரு பெரியவர்களிடம் யோசனை கேட்கப்பட்டது. அதில் சிலர் தோப்பு-வயல் வாங்கி போடுங்கள் வரும் சந்ததியர்களுக்கு பயன்படும் என்று ஆலோசனை சொன்னார்கள். மற்றவர்கள தெரு முஹல்லாவுக்கு ஒரு சங்கம் கட்டுங்கள் அதுவே சமுதாயக் கூடமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள்.

இரு வேறு கருத்து எழுந்ததால் தெருவிலும் இரன்டு பிரிவாக ஆகி சங்கமா, தோப்பா எனறு குழப்பத்தில் இருந்து கொண்டிருந்தது. எனவே இதற்கு சுமுக தீர்வுக்காண மேலும் வெவ்வேறு தெரு நபர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அந்த ஆலோசனை படி சங்கம் கட்டினால் அது ஒரு சமுதாய கூடமாக அனைத்து மக்களும் பயன்படுத்த ஏதுவாக அமையும் என்ற மெஜாரிட்டியான நபர்களின் கருத்தால் சங்கம் கட்டுவது என்று முடிவாகியது. அவ்வண்ணமே நெசவுத்தெரு வாழ் பர்மாவாசிகளுக்கு தெரிவிக்கப்பட்டு மஆதினுல் ஹஸனாத்தில இஸ்லாமிய சங்கம் என்ற பெயரையும் அங்கேயே தீர்மானித்தார்கள். 



(முக்கிய குறிப்பு: இதற்கு பதில் ஒரு பள்ளிவாசல் கட்டி தொழ ஏன் ஆலோசிக்கவில்லை என்று நாம் நினைக்கலாம் ஆனால் இன்று உள்ள “மரைக்காயர் பள்ளி” நெசவுதெரு முஹல்லாவின் எல்லைக்குள் அடங்கி இருந்த காரணத்தினால்அது பற்றி யாரும் விவாதிக்கவில்லை)

சரியாக 1913-16 ஆம் வருடங்களில் சங்கத்திற்கு அஸ்த்திவாரம் போடப்பட்டது. சங்கம் கட்ட மண் குளத்திலேயே (மரைக்கா பள்ளிக்கும் சங்கத்துக்கும் இடையில் உள்ளது)  வெட்டபட்டது..மரஙகள் மற்றும் இரும்பு பீம் பர்மாவிலிருநது நேரடியாக கப்பலில் வந்தது. மரங்கள் மற்றும் பீம் களை இன்று கிரேனின் உதவியால் மட்டுமே சாத்தியம் ஆனால் அந்த உதவி இல்லாமலே கட்டி முடித்தார்கள்.

சரியாக 10 ஆண்டில் (கட்டிடப்பொருட்கள் பர்மா மற்றும் கேரளாவிலிருந்து வந்து சேருவதுக்கு அதிகநாள் எடுத்துக் கொண்டதாம்). 1926ம் ஆண்டு ஆரம்பத்தில் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாரானது. இதன் திறப்பு விழாவை மிரமாண்டமாக செய்தார்கள். விழாவுக்கு பர்மாவிலிருந்து எல்லாரும் ஊர் வந்தார்கள். அவர்களை ரயில்வே ஸ்டேஷன் சென்று பூமாலை போட்டு வரவேற்று அழைத்து வந்தார்கள். பிறகு திரும்பி போகும் போதும் மாலை போட்டு அனுப்பி வைத்தார்களாம். இதே மரியாதைய ஊர் வந்து செல்லும் அனைவருக்கு செய்தார்கள், இது சில காலம் தொடர்ந்ததாம்..

சங்கத்தின் முதல் தலைவர் இபுறாகிம்ஷா அவர்களாலும்., செயலாளர் கு.மு. காசிம். அவர்களாலும் நிர்வாகக்குழு அமைக்கபட்டது

சஙகத்தின் சார்பாக எல்லா வருஷமும் மீலாதுநபி விழா சிறப்பாக கொண்டாடுவார்கள். அதன்படி ஒரு வருடம் மீலாது விழாவுக்கு அறிஞர் அண்ணா சிறப்பு பேச்சாளராக அழைப்பு விடுக்கப்பட்டது. அன்று இரவு விடிய விடிய மழை பெய்த காரணத்தால் நடு இரவு தாண்டி வந்து சேர்ந்தார். அதற்குப்பிறகு விழா ஆரம்பித்து சிறப்பாக முடிந்தது, மேலும் விழா முடிந்தவுடன்தான் அண்ணாவுடன் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டு இரவு விருந்து நடந்தது. இந்த மீலாது விழா 1985 வரை அதே சிறப்புடன் நடந்தது.




அதிராம்பட்டினத்தில் முதன்முதலில் நெசவு தெருவில்தான் சஙகமும், ஜமாத்தும் உருவானது. அன்று எல்லா வருடமும் மவுளுது  நடக்கும், அதன் கடைசி நாள் அன்று பெரிய அளவில் ஒமல் சோறு தப்ரூகாக வழங்கபடும். (இன்று சந்ததியினரிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு முடிந்தளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது)

சங்கத்தின் சிறப்பு
  • கட்டிட அமைப்பு களிமண்ணால் கட்டபட்டது.  
  • சுவர்களுக்கு சுண்ணாம்பு மற்றும் முட்டை கலந்து பூச்சு பூசப்பட்டது. 
  • பாடர்கள் (சுவர் ஓரங்கள்) வர்ண கலர்களால் வண்ணம் செய்து பல பொன்மொழிகள் எழுதபட்டு இருக்கும். 
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் 
உன் கடமையை செய்.

எழுதப்பட்டிருந்த பொன்மொழிகளில் மேலே உள்ளது ஒரு உதாரணம்
  • சங்க கட்டிடம் முழுவதும் தேக்கு மரங்கள் , ஓடுகள் கேரளாவிலிருந்து வந்தது..
தெருவெல்லாம் குடிசைகள், சஙகம் மட்டும் பெரிய கட்டிடம்.

சங்க கட்டிடத்தை பாதுகாப்பதற்காக காவலுக்கு ஆள் போடபட்டது. அவரை எல்லாரும் சங்கத்து அப்பா என்று அழைத்தார்கள்.

இன்றும்... சங்க கட்டிடத்தில் நடக்கும் சில முக்கிய விடயங்கள்....
  • நோன்பில் காலை முதல் லுஹர் வரை பெண்களுக்கான பயான்.
  • இரவில் பெண்களுக்கான தராவீஹ் தொழுகை.
  • நோன்பு கஞ்சி காய்ச்சி ஊர் முழுதும் வினியோகம்.
  • வாரந்தோறும் ஜனாப் ஹாஜி (அதிரை கவிஞர்) மு.மு தாஹா அவர்களின் பெண்களுக்கான சிறப்பு பயான்.
  • நாள் தோறும் காலை/மாலை சிறுவர்களுக்கான குரான் மதரஸா.
  • நாள் தோறும் இரவில் பெண்களுக்கான சிறப்பு குரான் & ஹதீஸ் மதரஸா
  • திருமண நிக்காஹ் வைபோகம்.
  • திருமண விருந்து சமையல் மற்றும் விருந்து சாப்பிடும் கூடம்.
  • தெரு ஜமாத் கூட்டம் நடக்கும் இடம்.
  • ரேஷன் பொருள் விணியோகம் அதிக வருஷம் இருந்த்து. உணவுப்பொருட்களின் இருப்பிடமாக (Stock) இருந்ததால் எலி மற்றும் அனைத்து ஜந்துக்களால் கட்டிடம் பழுதடைந்தபடியால் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
  • அரசாங்கம் சம்பந்தப்பட்ட அலுவல்கள் (ஓட்டு கணக்கெடுப்பு, தடுப்பூசி, போலியோ, சிகிச்சை முகாம், மற்றும் பல....)
இது பற்றி ஆலோசிக்க தொடங்கி 110 ஆண்டு காலங்களுக்கு மேல் ஆகிவிட்டது, மேலும் அஸ்திவாரம் போடப்பட்டு 100 ஆண்டுகள் ஆகி ஒரு சரித்திரம் கண்டிருக்கிறது. இது நம்மூருக்கு ஒரு பெருமையே....!

சங்க கட்டிடம் திறப்புவிழா 1926ம் வருடம் கண்டு செயல்பட தொடங்கி கடந்த 86 வருடங்களாக இந்த சங்கத்தை நிர்வகித்து வரும் தெரு ஜமாத் தலைவர்கள் விபரம்....

சங்க தலைவர்கள்
  • இபுறாகிம்ஷா
  • கு.மு. காஷிம்
  • மு.மு.மீராஷாகிபு
  • மு.செ. பெரியதம்பி
  • மீ.ப. பக்கீர் முகமது
  • மு.செ. சேகுதாவூது
  • மு.சே. சேக்காதியார்
  • மு.சே. சம்சுதீன்.
  • அ.யி.செ. முகமது தம்பி
  • அ.யி.செ உமர்
  • மு.செ. அப்துல் சமது.
  • கா.மு.கலுஙகு முகமது
  • மு.மு. சம்சுதீன்
  • ப.அ.அப்துல் கரீம்
  • மு.சே. நூர் முகமது
  • செ.மு.முஸ்தபா
  • கா.மு.அகமது ஜலாலுதீன்
  • ப.அ.அப்துல் ஸமது
  • மு. மீ. தாஹா
  • மு. சேகுதாவுது
  • அ.யி.செ. முகைதீன் அப்துல் காதர்
  • அ.யி.செ. அப்துல் கபூர்
  • அ. முகமது முகைதீன்.
அப்துல் மாலிக்
தகவல் உபயம்: ஜனாப். ஜெகபர் அலி மற்றும் நெசவுதெருவாசிகள்

கடந்த கால நிகழ்வுகளையும் முக்கிய சம்பவங்களையும் குறிப்பேடுகளில் கானும்போது கிடைக்கும் சந்தோஷம் வித்தியாசமானதே. இங்கே இடம் பெற்றிருக்கும் தகவல்கள் அனைத்தும் கட்டுரையாளர் மற்றும் நெசவு தெருவாசிகளின் கூட்டு முயற்சியே. இதில் இருக்கும் நிறை குறைகள் அவர்களையேச் சாரும்.

-நெறியாளர்

24 Responses So Far:

Ebrahim Ansari said...

அறியத் தகுந்த அறிந்து மகிழத்தக்க அருமையான வரலாற்றுக் குறிப்புகள்.

அண்ணா அவர்கள் கலந்து கொண்ட மீலாது விழாக் கூட்டம் எனது நினைவில் இருக்கிறது. அதே போல் மர்ஹூம் இக்ராம் டாக்டர் தலைமையில் மர்ஹூம் பேராசிரியர் கா. அப்துல் கபூர் அவர்கள் கலந்து கொண்ட மீலாது விழாவும் நினைவில் இருக்கிறது. இரண்டு நிகழ்ச்சிகளும் மரைக்காயர் பள்ளியின் வாயிலில் நிகழ்ந்தது. அங்கிருந்து நடுத்தெரு ரோடு சந்திப்புவரை மக்கள் கூட்டம். அழியாத கோலங்கள் .
நன்றி ஜனாப். அப்துல் மாலிக் அவர்களே!

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
சங்கம் என்றாலே அது நெசவுத்தெரு சங்கம்தான் என்னவலையில் பின்னபட்டதாக இருக்கிறது.இதன் நிகழ்வுகள் அறுந்துவிடாதவாரு இன்றும் நினைவில் நிற்பதே சிறப்பு! கம்பீரமான கட்டிடம் அதன் பயன் பாடு பலவாறு இருந்துள்ளது. நல்லதொரு சமுதாயக்கூடமாக திகழ்ந்த சங்கம். பிறசங்கத்து வாதிகளும் சந்திக்கும் சங்கமாகவும், சற்று தள்ளி உள்ள எங்கள் தெருவாசிகளும் தன் சங்கமாக பாவிக்கும் படி இந்த சங்கம் எங்களுடன் ஒரு அங்கமாகவே இருந்து வந்திருக்கு. நல்ல நினைவூட்டல். "மீலாது" விழா இப்ப இல்லாமல் மீண்டு இருப்பதே நலம்.

Unknown said...

ஒரு அதிரை வரலாற்றுப் பதிவு!

'மாஆதினுல்...' இல்லை. 'மஆதினுல்' என்பதே சரி.

//அதே போல் மர்ஹூம் இக்ராம் டாக்டர் தலைமையில் மர்ஹூம் பேராசிரியர் கா. அப்துல் கபூர் அவர்கள் கலந்து கொண்ட மீலாது விழாவும் நினைவில் இருக்கிறது.// -இப்ராஹீம் அன்சாரி

இல்லை. அந்த விழா, நான் உயர்நிலைப்பள்ளி மாணவனாக இருந்தபோது நாங்கள் 'இக்பால் நூலகம்' சார்பாக நடத்திய 'அல்லாமா இக்பாலின் நூற்றாண்டு விழா.' சின்னப் பையன்கள் நடத்திய நூற்றாண்டு விழா...!

இப்னு அப்துல் ரஜாக் said...

அதிரை பட்டினத்து வரலாற்றில் ம ஆதினுள் ஹசனாத் சங்க செய்தியும் ஒரு அரிய தகவலை அறியத் தந்த சகோ அப்துல் மாலிக் அவர்களுக்கு மிக்க நன்றி இதுபோல மற்றைய சங்க செய்திகளை தொகுத்தால் தெரிந்து கொள்ளலாமே?சரி ம ஆதினுள் ஹசனாத் என்பதன் பொருள் என்ன என விளக்க முடியுமா ?

sabeer.abushahruk said...

சுவாரஸ்யமானத் தகவல்கள் அடங்கிய பகிர்வுக்கு நன்றி, அப்துல் மாலிக்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மற்றுமொரு அதிரை வரலாற்றில் ஓர் ஏடு !

எல்லாமே புதுத் தகவலகள் (எனக்கு) கருத்துரையில் மூத்தோர் சொன்ன விஷயங்களும் !

Shameed said...

நெசவு தெரு சங்கம் பற்றி பல அறிய தகவல்கள்.மேலும் நெசவு தெருவில் உள்ள பழைய வீடுகளில் இன்னும் பர்மா தேக்கால் கட்டிய வீடுகள் இருப்பதாக என் நெசவு தெரு நண்பர் கூற கேட்டுள்ளேன்

வாழ்த்துக்கள் அப்துல் மாலிக்

Shameed said...

போட்டோக்கள் நீர் சொட்ட சொட்ட அருமை

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

அதிரை வாசியாக இருந்தும் இந்த விசயங்கள் தெரிந்து கொள்ள இவ்வளவுகாலம் ஆயிற்றே மாசாஅல்லாஹ்

abraarhussain said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
நெசவுத்தெரு சங்கத்தை பற்றி அருமையான தகவலகள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அரிய அருமைத் தகவல்கள்!
களங்கமில்லா சங்கமாய் என்றும் மிளிர வாழ்த்தும் துஆவும்.

அப்துல்மாலிக் said...

பதிவிட்ட நெறியாளருக்கு மிக்க நன்றி..

பாரம்பரியம் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த சங்கத்தின் வரலாறு அதை அனுபவிக்கும் நபர்களுக்கே முழு வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, எமக்கு தெரிந்த வரலாற்று உண்மைகளை நம்மூர் மக்கள் அறிந்துக்கொள்ளவே இந்த பதிவு

அனைத்து கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.. Jazakkallah...

அப்துல்மாலிக் said...

//சரி ம ஆதினுள் ஹசனாத் என்பதன் பொருள் என்ன என விளக்க முடியுமா ?//
சகோ. அர அல, நானும் தேடிக்கிட்டிருக்கேன், விரைவில் விளக்கம் தருகிறேன், நன்றி

Unknown said...

MashaAllah,

Nice to know about one of the pioneer Islamic
Community Organizations in our town. Thanks a lot brother Abdul Malik for your effort to share this information. May Allah increase rewards for the philanthropists who built it with great intention and forsight.

Its name can be translated into "Deenul Islam Charity Association", "Deenul Islam Sangam", or "Religious Charity Association", "معا دين الحسنات"

Thank you.

அப்துல்மாலிக் said...

அருமை, நன்றி சகோ அகமது அமீன்..معا دين الحسنات

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நெசவுத் தெரு சங்கம் பற்றிய நல்ல பல அறிய தகவல்கள்.
சகோ. அப்துல் மாலிக் - வாழ்த்துக்கள்!

Ebrahim Ansari said...

ஜனாப் அஹமது காக்கா அவர்கள் சொல்வது சரியே. அந்த விழா மரைக்காயர் பள்ளி வாசலில் நடந்ததும் அப்துல் கபூர் சாஹிப் அவர்கள் இக் - பால் என்று விளக்கம் சொன்னதும் பசுமரத்தாணிபோல் நினைவில் உண்டு காக்கா.

Unknown said...

//மஆதினுல் ஹசனாத் என்பதன் பொருள் என்ன என விளக்க முடியுமா?//

معدن என்றால் சுரங்கம் என்று பொருள். معادن என்பது, அதன் பன்மை (சுரங்கங்கள்). حسنات = நன்மைகள். ஆகவே, 'நன்மைகளின் சுரங்கங்கள்' எனப் பொருள் கொள்ளலாம்.

ZAKIR HUSSAIN said...

இந்த கட்டிடத்தின் போட்டோவை பார்த்தவுடன் ஏதோ கேரளாவில் உள்ள வீடாக இருக்குமோ என்று நினைத்தேன்.

இந்த சங்கம் பற்றி என் வாப்பாவின் மிக நெருங்கிய நண்பரும் எங்கள் மரியாதைக்குறிய A.E.S முஹைதீன் அப்துல் காதர் B.A மாமா அவர்களும் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

அதிரையரின் அயரா உழைப்பு
அதியழகுக் கட்டிடக்கலை வனப்பு
தேக்குமரமாய் உறுதியான மார்க்கப் பிடிப்பு
நோக்குமிடமெலாம் நற்றமிழ்ப் படிப்பு
நெசவுத் தெருவின் இச்சங்கம்
நெசமாகவே அதிரையின் அழியாத அங்கம்!

அதிரை சித்திக் said...

அன்பு தம்பி அப்துல் மாலிக் அவர்களின்

தகவல்கள் மதிக்க தக்கவை ..பாராட்ட தக்கவை

சுற்றியுள்ள வீடுகள் குடிசை சங்கம் மட்டுமே

கட்டிடடம் ...ஆகா ...!என்ன தியாக சிந்தை

ஒற்றுமைக்கு பெயர் பெற்ற சங்கம்

மெம்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ....!

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

நெசவுதெருவில் சங்கமிருப்பது கேள்விப்பட்டதுண்டு இச்சங்கத்தை விரிவான பல தகவல்களை தாங்கிய சங்கம் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது அல்ஹம்துலில்லாஹ்..

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
சகோதரர் அப்துல் மாலிக் அவர்கள் இங்கு பதிந்த வரலாற்றை, அதிரை வரலாறு தளத்தில் "அதிரை வரலாற்றில் மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம்!"http://adiraihistory.blogspot.in/2012/11/blog-post.html என்ற தலைப்பில் நன்றியோடு பதிந்துள்ளோம்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கத் தலைவரின் நன்றி அறிவிப்பு

'மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் - என்ற தலைப்பை படித்துவிட்டு சிந்தித்துப் பார்த்தேன். கட்டுரையாளர் ஆசிரியரின் மகன் என்பதால், தம்பி அப்துல் மாலிக் [ப.அ.நெ ] அவர்கள் ஒரு பேராசிரியரைப் போல ஆய்வு செய்து வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை தொகுத்து தந்திருந்தார். இதற்கு வலுவூட்டும் விதத்தில் வரலாற்றுத் தகவல்களை திரட்டிக்கொடுத்த சகோ. ஜஹபர் அலி மற்றும் மஹல்லாவாசிகள் அனைவரும் தொலை நோக்குத்திட்டத்தில் சமுதாய வளர்ச்சியின் மேல் உள்ள அக்கரையைக்காட்டுகின்றன. தங்களின் சமூக சேவைகள் என்றென்றும் தொடர நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் இறைவன் மேலும் மேலும் தரவேண்டும் என துஆச் செய்கிறேன்...

மேலும் இப்பதிவுக்கு எங்கள் சங்கத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்திய அனைத்து சகோதரர்களுக்கும் எங்கள் மஹல்லா சார்பாக நன்றியும் துஆ வையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற பழமொழி அதற்கிணங்க கடல் கடந்து பர்மா நாட்டில் உழைப்புக்காக நமது மஹல்லாவாசிகள் சென்றார்கள். கடின உழைப்பில் தினக்கூலியாகவும் வாரக்கூலியாகவும் மாதக்கூலியாகவும் உழைத்து வந்தார்கள். இவர்களின் முழுமுயற்சியும் உழைப்பு, உண்மை, உயர்வு இந்த மூன்றும் கொள்முதளுக்கு மூலதனமாக நினைத்து நடத்திவந்தார்கள். தொழிலாளி – முதலாளி ஆனார்கள். அந்த நினைவுச் சின்னம் தான் மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம்.

தோப்பா ? – சங்கமா ? விவாதத்திற்கு முடிவு சங்கம் தான் ! அந்த சங்கத்தில் இன்று வரை 10 அம்ச திட்டங்கள் நிறைவேற்றி வருகின்றோம். இன்ஷா அல்லாஹ் நமக்கு பிறகு அந்த திட்டம் இளைய சமுதாயத்தினர் தொடர்ந்து நடத்தி வர வேண்டும்.

சங்கத்தின் சிறப்பு :
1. களி மண்ணால் கட்டப்பட்டது
2. முட்டை கலந்து பூச்சு பூசப்பட்டது
3. பொன் மொழிகள் எழுதப்பட்டது.

இவ்வாக்கியத்தை கட்டுரையிலிருந்து நான் திரும்ப திரும்ப படித்தேன். இந்த மூன்றும் நம் மஹல்லாவாசிகள் அனைவரும் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும், பாதுகாக்க வேண்டும்.

கட்டிட அமைப்பு 100 ஆண்டுகளுக்கு முன்பு களிமண்ணால் கட்டப்பட்டது என்றாலும் பருவ கால சூழ்நிலையால் காற்றாலும் மழையாலும் வெயிலாலும் ஓடுகள் வெடித்தும் – உடைந்தும் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே சுவர் வழியாக வருவதால் கரை படிந்து கட்டிடத்தின் பாதுகாப்புக்கு பங்கம் விளைத்திடுமோ என்ற அச்சமடையச் செய்கின்றன, அல்லாஹ் பாதுகாக்கனும்.

இவற்றை நாம் ஆரம்ப நிலையிலே கவனத்தில் எடுத்துக்கொண்டு பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமை மட்டுல்ல அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்
உன் கடமையை செய்.


சங்கத்தை கட்டி முடித்தது – பர்மா !
சங்கத்தை கட்டிக் காப்பது – வளைகுடா !!

என்றும் அன்புடன்,
A.முஹம்மது முஹைதீன்
தலைவர் - மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம்
நெசவுதெரு, அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு