அன்பு நண்பர்களே அஸ்ஸலாமு அலைக்கும்,
எனது திருப்பூர் அனுபவத்தில் நிகழ்ந்த ஒரு சம்வத்தை உங்களனைவரோடும் பகிர்ந்து கொள்ள விருப்புகிறேன்.
அப்துல் காதருக்கும், அமாவாசைக்கும் அடுத்தடுத்த வீடுகள் வீடுகளென்றால் 10க்கு-10 சைஸ் அளவுல்ல அறை தான் மொத்த வீடும் அடுப்படி, பெட்ரூம், விருந்தாளி உபசரிப்பு ஹால் எல்லாமே 10க்கு10 ரூம்தான். வாடகை ஓட்டு வீடாகயிருந்தால் ருபாய் 750/= கான்கிரீட் வீட்டுக்கு ருபாய் 1000/= லிருந்து 1200/= வரை.
அமாவாசைக்கு நவராத்திரியென்றால் அப்துல் காதர் வீட்டு வாசல்களும் ஆக்கிரமிக்கப்படும் கோலங்களால். அதுபற்றி அப்துல் காதருக்கு கவலையில்லை. வீடு குடி வரும் பொழுதே நல்ல நாள் பெரிய நாள் வந்தால் வாசலுக்கு சானி மொழுக வேண்டும் என்று வீட்டு உரிமையாளரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டுதான் குடியே வந்தார் அப்துல்காதர்.
தொழுகை? பெருநாள் ரமளான் மாதம் போன்ற முக்கிய நாட்களில் களை கட்டும் பள்ளி வாசல்கள் மற்ற நாட்களில் தொழுகைக்கு கூப்பிட்டல் 'என் மகளுக்கு இன்னும் 2 வருசத்தில் திருமணம் செய்யயிருக்கிறேன் என்னுடைய கடமை முடிந்ததும் பள்ளியிலேயே என் பொழுதை கழிப்பேன்' என்பார். தொழுகையில் அவ்வளவு அசட்டையாக.
கொடுமையிலும் கொடுமை விநாயகர் சதூர்த்திக்கு விழாக் குழுவினர் என்ற வினையல் தட்டியில்(!!) அப்துல் காதரும் தன் முகத்தை காட்டி அலங்கரிப்பார்.
எம்மதமும் சம்மதம் என்ற 3 மத(ங்களின்) அடையாள போட்டோக்கள் சில இஸ்லாமியர்களின் கடைகளில் காணலாம் கேட்டால் வியாபாரத்தில் இதெல்லாம் சகஜமென்பர்.
இவர்களை பார்த்தால் ஒருவிசயம் ஞாபகத்திற்கு வருகிறது.
சாக்கடையில் உயிர் வாழும் புழு நினைக்குமாம் நமக்கு வாழத் தகுதியான இடம் இதுதான் எல்லா வகையான உணவுகளும் ஒரே இடத்தில் கிடைக்கிறது குளிர்ச்சியாகவும் இருக்கிறது. மனிதர்களெல்லாம் வேகாத வெயிலில் எப்படித்தான் வாழ்கிறார்களோ என்று நினைக்குமாம்.
சாக்கடை புழுவை பட்டு மெத்தையில் கொண்டு வந்து கிடத்தினாலும் சொகுசை அறியாது துடிதுடித்து சாகும். ஆரம்பமோ அல்லது பிறகோ இஸ்லாத்தின் அருமையை உணராதவர்களின் நிலை சாக்கடை புழுவிற்கு சமம்.
காட்சி மாற்றம் !
இது வேறு ஊர் அதே சமுதாயம் வேறு கலாச்சாரம் படித்தவர்களும், படிக்காத மேதைகளும், பட்டம் பெறாத ஆலிம்களும், பட்டம் பெற்ற ஆலிம்களும் நிறைந்த ஊர், ஹாஃபில்களுக்கு பஞ்சமில்லை பயான்களில் தவறாக ஆலிம் ஏதேனும் செய்திகளை சொல்லி விட்டால் உடனே எதிர்ப்பு கிளம்பி விடும் சாமான்ய மனிதரிடமிருந்தும். அவ்வளவு மார்க்க அறிவு மிக்க ஊர்.
வீட்டு வருமானத்திற்கு வெளிநாட்டயே 80 சதவிகிதம் நம்பியிருக்கும் ஊர். 5 வருடங்கள் ஆனாலும் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ மனதை திடப்படுத்திக் கொண்ட ஊர்.
தாய் தகப்பனின், சுகக்குறைவிற்கு தொலைபேசி ஆறுதலும் மாதம் ஒரு தொகையும் சமாதானம் செய்து விடுகிறது அந்த தாய் தந்தையருக்கு.
பிள்ளை படிப்பிற்கு பணம் காசு போதும், பண்பட்ட தந்தையின் நேரடி அறிவுரை பிள்ளைக்கு கிட்டுவதில்லை. ஆகயால் தந்தையின் மனோநிலைக்கு தனையன் ஒத்துப் போவதும் இல்லை.
தாயோடு பிள்ளை சரிசமமாக பழகி ‘வா-போ’ என்ற மரியாதையற்ற பேச்சுக்கள். தாய்க்கு அதுபற்றி கவலையும் இருப்பது இல்லை. உரிமையோடு அழைக்கிறான் பிள்ளை என்று சந்தோசப்படுகிறாள்.
மற்றுமொரு சம்வத்தோடு நிறைவுக்கு கொண்டு வருகிறேன்…
ஆற்றோரமாக கணவனும் மனைவியும் நடந்து செல்கின்றனர் அப்பொழுது ஆற்றின் மத்திய பகுதியில் கம்பளி மூட்டை மிதந்து செல்கிறது. மனைவி சொல்கிறாள் “அதோ பாருங்கள் கம்பளி மூட்டை ஆற்றில் மிதந்து செல்கிறது நீங்கள் ஆற்றில் இறங்கிச் சென்று எடுத்து வாருங்கள் நான் கரையில் இருந்து உங்களுக்கு உதவி செய்கிறேன்” என்கிறாள். உடனே கணவனும் தண்ணீருக்குள் இறங்கிச் சென்று நீந்திப்போய் கம்பளி மூட்டையை அடைகிறான்.
கம்பளி மூட்டையும் தண்ணீரில் இறங்கிய கனவனும் தண்ணீருக்குள் கட்டிப் புரண்டு கொண்டிருகிறார்கள், கரை வந்த பாடில்லை ஆற்றில் தண்ணீர் பெருக்கும் அதிகமாகிக் கொண்டிருந்தது. மனைவிக்கோ பயம் வந்து விட்டது கரையிலிருந்து சப்தமிடுகிறாள். கணவரைப் பார்த்து “வந்து விடுங்கள் தண்ணீர் பெருக்கு அதிகமாகி விட்டது கம்பளி மூட்டை போனாலும் பரவாயில்லை அதை விட்டு விடுங்கள்” என்று அலறுகிறாள்.
மனைவி கதறுவதை கேட்ட கணவன் சொன்னான் “இவ்வளவு நேரமாக அதை விட்டு விடத்தான் முயற்சிக்கிறேன் அதுதான் என்னை பிடித்துக் கொண்டது” அவன் பிடித்தது கம்பளி மூட்டையல்ல 'ககக......ரரர.....டிடிடி(கரடி)' !
சம்பாத்தியத்திற்காக வெளிநாடு சென்றவர்கள் அந்த இடத்தின் ஆடம்பர வாழ்க்கை, கலாச்சார மாற்றம், பேராசை, இன்னபிற காரணங்களால் அயல்நாட்டிலேயே அதிக காலம் தங்கி விடுகின்றனர் அவ்வாறு தங்கி விடுகின்றவர்களின் காரனங்கள்தான் மேற்சொன்ன கரடி பிடி.
சம்பாதித்த பணம் காசுகளை வைத்து குடும்பத்தோடு சந்தோசமாய் வாழ்வோமாக இன்ஷா அல்லாஹ் !
மு.செ.மு.சஃபீர் அஹ்மது
13 Responses So Far:
வெளிநாட்டு மோகம் யார காக்கா விட்டுச்சு, சின்ன வயசா இருக்கும்போது முன்னோர்கள் சென்று வந்து செய்யும் அட்டகாசம் (சிரிப்பாகவும்/சிந்திக்கவும்) நாமும் வெளிநாடு செல்லனும் இது மாதிரி சொகுசு வாழ்வு வாழனும் என்று அப்போவே பேராசை(?) வந்துடுது, அதுக்குமேலே நம்மவீட்டு பெரிசுகளும் விசாவுக்காக எவ்வளவு பணம் புரட்டவும் தயாராக இருக்காங்க (அந்த மனைவி சொன்னதுபோல் கம்பளி மூட்டையை எடுத்துவாருங்க நான் இருக்கேன் என்று)அனுப்பி வைக்க. கரடி பிடியால் தப்பிக்கவும் முடியாமல்/அதற்கு தீனியாகவும் முடியாமல் அல்லல்படுபவகள் தான் அதிகம்
பி.கு. வெளிநாடு வேண்டாம் என்று அட்வைஸ் செய்தாலும் நீ அனுபவிச்சிட்டே நாங்களும் வெளிநாட்டை பாக்கவேணாமா என்று (இதைதான் நாங்களும் முன்னோர்களுக்கு சொன்னோம்) கரடி வாயில் போய் மாட்டிக்கிட்டிருக்கோம்................
சகோதரர் மு.செ.மு.சஃபீர் அஹமது , மாற்றி யோசித்து இரு வித்தியாசமான கட்டுரையை தந்து ஒருக்கின்றீர்கள்...ஆக்கம் எளிமை ஆனால் அதன் மெசஜ் ரொம்ப வலிமை...வாழ்த்துக்கள் காக்கா
//பிள்ளை படிப்பிற்கு பணம் காசு போதும், பண்பட்ட தந்தையின் நேரடி அறிவுரை பிள்ளைக்கு கிட்டுவதில்லை. ஆகயால் தந்தையின் மனோநிலைக்கு தனையன் ஒத்துப் போவதும்// கண்கூடாக காணும் உண்மை
//ஒருக்கின்றீர்கள்// மனித தட்டச்சு பிழை :( ”இருக்கின்றீர்கள்” என்று வாசித்துவிடுங்கள் பிலீஸ்
இதத்தான் கரடி விடுறதுன்னு சொல்றாங்களா
கரடி பிடிக்கு காரணம்
மனைவியின் பேராசை ..
சிறுக கட்டி பெருக வாழ் ..
என்ற நெறி முறை என்று வரும்
நம்மவர்க்கு அல்லாஹ் அருளட்டும்
சஃபீர் பாய்,
திருப்பூர் தீனோருக்கு ஸ்பெஷல் க்ளாஸ் எடுக்கனும்போல இருக்கே!
எப்படி சமாளிக்கிறீர்கள்?
கரடி யாருங்க ? எங்க முதலாளியா ? யூ.ஏ.இ. யா ?
இது 'கடி'க்காத கரடி
அஸ்ஸலாமு அலைக்கும்.முதலில் அப்துல் காதர் நல்ல பாதராக இருந்தேரே ஒழிய நல்ல மூமீனாக இல்லாத பதராகவே இருந்திருக்கிறார். இவர் வாழ்வு என்றும் அம்மாவாசைதான். இஸ்ஸாத்தின் வெளிச்சம் பட இறை அச்சம் வரணும். அந்த மச்சம் இல்லாதவர் என்பதால் இவர் எச்சமும்(வழித்தோன்றலும்)கேடு கெட்ட வழியில் செல்லாமல் இருந்தால் சரி!மேலும் ஆத்துக்காரிதான் ஆத்துல இறங்க சொல்கிறார், பெரும்பாலும் இந்த பாழும் ஆறாகிய அயல் நாட்டிற்கு அனுப்பி வைப்பதும் அந்த ஆற்றா துயர் அடையும் ஆத்துகாரிதான். பின் தன் கவலையை ஆத்த முடியாமல் தவிப்பவளும் அவள்தான்.
Class ......
Jazakallaah........
என் (கருத்துக்கு)கட்டுரக்கு ஆதரவு அளித்த அத்துனை அதிரையாருக்கும் நன்றிகள்(அல்ஹம்துலில்லாஹ்)
// 5 வருடங்கள் ஆனாலும் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ மனதை திடப்படுத்திக் கொண்ட ஊர்//
அருமையானகட்டுரை காக்கா!....5 வருடம் இல்லே.... காக்கா 9 வருடம் மனைவி மற்றும் அவரின் குழந்தை, மற்றும் அவரின் தாய் வீட்டின் குடுபம் எல்லாவற்றையும் இழந்து குளிர்ச்சியான நாட்டில் போய் இருக்கார் நமது ஒரு சகோதரர்.
Whatever u said nothing will happen.becoze think so like that.mostly adiraies full fill their commitment thats way its happened.ABROAD IS STILL VALUABLE.
Post a Comment