Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நவீன மவ்லூது 13

அதிரைநிருபர் பதிப்பகம் | November 03, 2012 | , , ,

நவீன மவ்லூது - கண்டனங்களுக்கு அப்பாற்பட்டது !

முன்னுரை:

மெளலாய சல்லி வசல் லிம்தாயி மன் அபதா
அலா ஹபீபிக்க கைரில் ஹல்க்கி குல்லி ஹிமி 

என்று ரிதம் அமைய....

நார்சா - கம்பன் எக்ஸ்பிரஸில் வருகிறது....

---------------------------------------------------------------------------------

ஏக இறையோனே... எல்லாம் வல்ல அல்லாஹ்வே !
என் ஊரு நிலைமைகளை... சொல்லுகிறேன் நீ கேளு !

தயாளம் நிறைந்தோனே... தங்கடம் நீக்கிவிடு!
இணையில்லாப் பெரியோனே... இம்முசை போக்கிவிடு !

ஆட்டைக் கழுதையாக்கி அசர வச்ச எங்கூரு...!
கோட்டை போல பள்ளி கட்டி தொழுது வரும் நல்லூரு..!

கான்வெண்ட், ஹைஸ்கூலு, கல்லூரி போனாலும்...
புளியமரம், ரேவடின்னு புள்ளேபோய் படிச்சாலும்

பாஸ்போர்ட்டு எண்ணத்தாலே... படிப்பு ஆச்சு...
கல்லி வல்லி

அப்போ ! இடுப்பு வலிச்ச அடுத்த கணம் நாசுடு...
சுத்திக் குலவை விட்டு... சுயமாகப் பெப்பாங்க...
இப்போ வலின்னா... ஏறுராங்க தஞ்சாவூரு
கத்தாமே பெக்கனும்னு கத்தி போட்டு பெத்துக்குறாங்க...

(ஏக இறையோனே....)

எறச்சியினு வாங்கப்போனா... வெலகிலோ நானூறு
மத்தபடி, மீனெல்லாம் மனை விலையாயிடுச்சு - சரி
மனையாச்சும் வாங்கலாம்னா... மண்ணுவெல கூடிடுச்சு!
வரதட்சனை கூடாதுன்னு... கண்டிப்பாக சொன்னாலும்
உண்டிப்பணம் போல... ஒளிச்சுகிட்டு வாங்கிடுறாங்க...

நேரான மார்க்கம் சொல்ல... வந்தாரு ஒருவர்
"மார்க்கம் இதுதான்"ன்னு சொல்லிட்டாரு அவரும்!
அவரை,ஒரு மார்க்கம் பண்ண... நிலுவையில ஒரு வழக்கு !

(ஏக இறையோனே....)

கூட்டாளி வீட்டு வைபவன்ம்னு... கொண்டாட வந்த பாலகரை
கொடுமை ரொம்ப படுத்திடுச்சு... கொலைகாரக் கொசுக் கூட்டம்...
கொசு பேட்டுச் வச்சிருந்தும் பாலகரு தூங்கலையே...!
சிட்டாகப் பறந்துட்டாரு... பச்ச பெல்ட் ஊரு பக்கம் !

வரப்பு பக்கம் போனாக்கா... அந்தப் பக்கம் ஆளிருக்கும்...
காட்டுப் பக்கம் ஒதுங்கலாம்னா... கணைப்பு சப்தம் கேட்கும்...
வெட்டவெளி வேனான்னு... வீட்டிலேயே கக்கூஸ்....
பொட்டுத் தண்ணியில்லாமே... வச்ச பைப்பு இத்துடுச்சு....

(ஏக இறையோனே....)

பச்சைத் தண்ணி குளங்களெல்லாம்... பள்ளிக்குன்னு ஆனதாலே...
சீர்போல வந்த தண்ணி... CMP வறண்டு போச்சு....
CMP தண்ணி வந்தாலே... அஞ்சு குளம் நிறைஞ்சிருக்கும்...
அக்க-பக்க கிணறல்லாம்... அலையடிச்சு தண்ணி இருக்கும்...

(ஏக இறையோனே....)

எங்க கவி வேட்டிடுத்தி...!? விளையாண்ட வெட்டிக்குளம்
வெடி பொருக்கு வெளஞ்சு... வேலிக்குருவை நிக்கிதங்கே !
தப்படிச்சு குளிச்ச குளம்... தரைமட்டமாகிடுச்சு....
முட்டை கட்டி குளிச்ச குளம்... பொட்டக்கரையாயிடுச்சு....
தாந்தோண்டி குளம் தூத்து… வீடு கட்டி வாழுறாக…
தண்ணிக் கடைகளெல்லாம்... ஊரைச் சுத்தி வந்துடுச்சு..

(ஏக இறையோனே....)

இன்பம் நிறைந்தவனே.... இம்முசுகளைக் கலைந்துவிடு...
உன்னையே வணங்குகிறோம்... உம்மிடத்தே ஏகுகிறோம்

(ஏக இறையோனே....)

ZAEISA

13 Responses So Far:

Shameed said...

மொளத்துக்கு கை நார்சா பிரியாணி பொட்டலமே கொடுக்கலாம்!!

Shameed said...

ஊரே மறந்து போன ரேவடி ரயிலடி தாந்தோண்டிகளை
நெனப்புகாட்டி ஏக்கத்தை உண்டுபன்னிடியலே

இப்னு அப்துல் ரஜாக் said...

ஊர் நெலமையை ஒரு பாட்டு மூலம் சொல்லி இருப்பது அருமை. ஆனால் ஏக இறைவனை அழைத்தும் சூரத்துள் பாத்திஹாவை வைத்தும் இப்படி செய்வது நையாண்டி போல் உள்ளது.என் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

// சூரத்துள் பாத்திஹாவை வைத்தும் இப்படி செய்வது நையாண்டி போல் உள்ளது.என் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்//

இதையே நானும் நினைத்து எதுவும் எழுதாமல் யோசிச்சுக் கிட்டு இருந்தேன்.

sabeer.abushahruk said...

நானெல்லாம் மெளலுது ஓதியிருக்கேன்.

கஜல் கவாலி பாடல்களைப்போல சுற்றி உட்கார்ந்து ஜோரா ஓதுவோம். கல்சர செட்டு டக்கு டக்குனு ராகத்தை மாற்றும்.

ஒருமுறை "ஆற்றோரம் மணலெடுத்து அழகழகா வீடுகட்டி" என்னும் ராகத்தில் ஒரு செட்டு துவங்க...அடுத்த கல்சர செட்டு...

"போடு, மாலீசீ வாக்கவலா" என்று உற்சாகம் காட்ட, பிடறியில் போட்டாக காரிமியப்பா.

"பழைய நெனப்புதான் அப்பா பழைய நெனப்புதான்"

sabeer.abushahruk said...

//சிட்டாகப் பறந்துட்டாரு... பச்ச பெல்ட் ஊரு பக்கம் !//

என்று ஜாகிரையும்

//எங்க கவி வேட்டிடுத்தி...!? விளையாண்ட வெட்டிக்குளம்//

என்று என்னையும் நக்கல் செய்திருப்பதும் கண்டிக்கத்தக்கதுதான்.

இருந்தாலும் சிறப்பான சிரிப்பு வரிகளுக்காக ச்சும்மா விட்றோம்.

அது சரி, எங்கே பேரன்/அப்பா உரையாடல்களைக் காணோம்?

கம்ப்பெனி படுத்துடுச்சா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கண்டனங்களுக்கு அப்பாற்பட்டது என்று முன்னுரையில் இட்டிருந்தும்... கண்டனத்துக்கு ஆளாகி விட்டது இந்த நவீன மவ்லூது... ! :)

ஊர் நடப்பை ஊரில் இருப்பவர்கள் மட்டும்தான் சொல்லனுமா என்ன... அமெரிக்காவில் இருந்தாலும் சொல்லலாம் தானே, அவர்களால் அறியப்பட்ட தகவல்களின் அடிப்படையில் !

அப்பா புகழ் 'ஜயிசா' (அ.ஜ.) காக்கா அவர்களின் பேரன் ! :)

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

சூரத்துல்பாத்திஹாவை வைத்து இப்படி எழுதுவது கண்டனதுகுரியதே ஏக இறைவன் மன்னித்து அருள்வானாக

Ebrahim Ansari said...

//பாஸ்போர்ட்டு எண்ணத்தாலே... படிப்பு ஆச்சு...
கல்லி வல்லி//

சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது .

ஆனாலும் ரிதம் இல்லாமல் பொதுவாகவே எழுதி இருந்தாலும் நன்ர்ராகவே இருந்து இருக்கும்.

ZAKIR HUSSAIN said...

Remove the word
அல்ஃபாத்திஹா ! in last line of the poem with IMMEDIATE EFFECT

ZAKIR HUSSAIN said...

//சிட்டாகப் பறந்துட்டாரு... பச்ச பெல்ட் ஊரு பக்கம் !//


ஃபிளைட்டில் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து ஃபார்ம் எழுதிக்கேட்டது நீங்கதானா....அது எப்படி கையில் கொசுஅடிக்கும் பேட் வச்சிருந்தது முதல் கரெக்டா எழுதியிருக்கீங்க...

கொசுப்பிரச்சினை பற்றி எழுதலாம்னு நினைக்கும்போது
MSM Naina Mohamed ம், சபீரும் எழுதி விட்டதால் வாசகர்கள் என்னிடமிருந்து தப்பித்தார்கள்.

Yasir said...

நல்லாத்தான் எழுதுறாங்கப்பா..பிரச்சனைகளில் அலசல் சாரி குவியல் மெள்லீது என்றாலே பிரச்சனைதானே :))) வாழ்த்துக்கள் சகோ.

அலாவுதீன்.S. said...

அர அல சொன்னது…
////ஏக இறைவனை அழைத்தும் சூரத்துள் பாத்திஹாவை வைத்தும் இப்படி செய்வது நையாண்டி போல் உள்ளது.என் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்////
************************வழிமொழிகிறேன்!*****************************

இறைவனையும், பாத்திஹா சூராவையும் கேலி செய்வது போல் உள்ளது என்பது உண்மை!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு