Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

Dynamic Cellcom - அதிரை தொழில் முனைவோர் - தொடர்கிறது... 15

அதிரைநிருபர் பதிப்பகம் | October 19, 2012 | ,


அதிரை சகோதரர்களின் புதிய தொழில் முனைவோர் என்ற வரிசையில் தொடர் பதிவுகளாக பதிந்து வருகிறோம், இவ்வாறான பதிவுகள் சுயதொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதற்கே அன்றி தனிப்பட்ட விளம்பரமாக அல்ல.

இன்றைய இளைய சமுதாயத்தினரை நாம் நிச்சயம் வரவேற்பதிலும் ஊக்கப்படுத்துவதிலும் முன் நிற்க வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.

Dynamic Cellcom என்ற பெயரில் செல்ஃபோன் பழுபார்க்கும் பணிமனை - சர்விஸ் செண்டர் மற்றும் விற்பனை நிலையம் ஒன்றை அதிரையில் நடத்தி வருகிறார், சகோதரர் A.G. தாஜுதீன்.  2006ம் ஆண்டில் பழைய போஸ்டாபிஸ் அருகில் ஒரு கடையையும், 2008ம் ஆண்டில் கடைத்தெருவில் மற்றுமொரு கடையை தொடங்கி உள்நாட்டிலும் சம்பாதித்துக் காட்ட முடியும் என்ற நம்பிக்கையில் சிறப்பாக தன்னுடைய தொழிலை நடத்தி வருகிறார்,

இது போன்ற உள்ளூர்க்காரர்களின் சுயதொழில் முயற்சியினை ஊக்கப்படுத்த வேண்டும்.

Dynamic Cellcom சிறப்பம்சங்கள்:

அனைத்து விதமான செல்ஃபோன்களும் இங்கு சர்விஸ் செய்து தரப்படும்.

செல்ஃபோன்களின் உதிரி  பாகங்களின் விற்பனையும் இங்கு உணடு.

கணினி மயமாக்கப்பட்ட சர்விஸ் செண்டர், செல்ஃபோன்களுக்கான சாப்ட்வேர்கள் நிறுவித்தரப்படுகிறது.

செல்ஃபோன்  charger, data cable, panel, memory card and etc., இங்கு கிடைக்கும்.

அனைத்து செல்போன் சேவை நிறுவனங்களின் சிம்கார்டு, ரீசார்ஜ் கார்டு விற்பனையும் உண்டு.

ஸ்பெசல் ஆடர் செய்தால் எல்லாவித புதிய மற்றும் உபயோகப்படுத்தட்ட செல்ஃபோன்கள் இங்கு கிடைக்கிறது.

வாடிக்கையாளர்களின் வசதிற்காக மூன்று டெக்னிசியன்கள் செல்ஃபோன் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் அதோடு வாடிக்கையாளார்களுக்கு சேவையை விரைவாகவும் செய்து தரப்படுகிறது.

ஒன்று மேற்பட்ட சர்விஸ் செண்டர் இருப்பதனால் மேலும் துரித சேவையை நிறைவாக உடனுக்குடன் செய்து தருகிறார்கள்.







மேலதிக விபரங்களுக்கும், கீழ் உள்ள முகவரியை தொடர்புகொள்ளலாம்.

A.G. THAJUDEEN,
DYNAMIC CELLCOM,
Computerised Cell Phone Service, Sales & Accessories.
5/1 Old post office road (அல் அமீன் பள்ளிவாசல் அருகில்)

மற்றும்

54-A Market (கடைத்தெரு, கிராணி மளிகை எதிரில்),
Adirampattinam.
Phone: 98656 97574

சுய தொழில் செய்து தாயகத்திலேயே சம்பாதிக்க முனையும் இவர்களைப் போன்ற சகோதரர்களை ஊக்கப்படுத்துவதில் முன்னிருப்போம். இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் குழு

15 Responses So Far:

Shameed said...

இதுபோன்ற தொழில் துறைகள் நம் ஊரில் வந்தால் நாம் தேவை இல்லாமல் பட்டுக்கோட்டை அலைவது குறையும்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாஷா அல்லாஹ், சிறு வயதுக்க்காரர்களாக இருந்து வந்தாலும் இவர்கள் துடிப்புடன் தங்கள் வியாபாரத்தை நடத்தி வருவது சந்தோசமளிக்கக்கூடியதே.

இவர்கள் போல் உள்ளூரிலேயே ஏதேனும் தங்களால் இயன்ற வியாபாரத்தை ஆரம்பிக்க ஏகப்பட்டபேருக்கு ஆசை இருக்கத்தான் செய்கிறது. சிலருக்கு அது கைகூடுகிறது, பலருக்கு அந்தக்கையே பாஸ்போர்ட், டிக்கட் எடுத்து (ஊட்லெ கொமருவொலெ வச்சிக்கிட்டு உள்ளூர்லெ வியாபாரம் செய்யும் ஆளைப்பாரு என்று சொல்லி) வெளிநாடு நல்லபடி (நல்லாபடிக்காமல்) அனுப்பிவைத்துவிடுகிறது.

ஆண்கள் என்று சொல்லிக்கொள்ளும் சில மக்களே, தயவு செய்து மாமனாரு வீட்டை கடைசிவரை சக்கைப்பிழிய வேண்டும் என சபதமெடுத்து அலையாதீர். இறைவனின் சாபக்கேடுதான் மிஞ்சும் இறுதியில்.

sabeer.abushahruk said...

வாழ்த்துகளும் துஆவும்.

ZAKIR HUSSAIN said...

May Allah bless you for more prosperity.

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

பாரக்கல்லாஹு லக யா அபூ ஹஃப்ஸா....

அல்லாஹ் என் நன்பனின் வியாபர்த்தில் பரக்கத் செய்வானாக...ஆமீன்

Anonymous said...

இந்த இளைங்கர்களுடைய தொழில் வளரட்டும் அதிரையில் உள்ள இளைங்கர்களுக்கு தொழில் ஆரம்பிப்பதற்கு ஆசையாக இருந்து வருகிறார்கள். அந்த இளைங்கர்கள் தொழில் ஆரம்பிக்க முடியாத ஒரு சில காரணமாக ஆகிவிடுகிறது. வீட்டில் ஒரே ஒரு மகனும்,பெண் பிள்ளைகள் நிறைய இருந்து வருவதால் அந்த சகோதரனுக்கு மிக பெரிய பொறுப்பாக இருந்து வருகிறது. தன்னுடைய சகோதரிக்கு கல்யாணம் பண்ணிவைக்கணும்,வீடுகட்டனும் என்றுல்லாம் நினைத்து வெளிநாட்டிற்கு சென்று விடுகின்றனர் இளைங்கர்கள். இந்த இளங்கர்கள் எப்படி உள்ளுரில் தொழில் நடத்துவார்கள் மாமியா வீட்டில் தேவையானதை கேட்டு வாங்குகிறார்கள்.

நமது ஊரில் ஒரு சில கலாச்சாரங்கள் எப்பொழுது மாறுகிறதோ அப்பொழுது தான் இளங்கர்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முடியும். இளைங்கர்கள் தொழில் தொடங்க முயன்றாலும் ஒரு சில பெருசுகள் விடுவதில்லை. வெளி நாட்டிற்கு போய் சம்பாதிக்க வேண்டியது தானே என்றல்லாம் அந்த இளைங்கர்களை அனுப்பி வைத்து விடுகின்றன. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு பணம் என்று கேட்டால் கிடைக்காது ஆனால் வெளி நாட்டிற்கு விசா வந்து இருக்கிறது என்று சொன்னால் போதும். அப்படியா வாப்பா நல்ல படியா போய்விட்டுவா என்றல்லாம் வாழ்த்தி அனுப்புவார்கள். தொழில் வைப்பதற்கு பணம் என்று கேட்டால் அடை கல்ச்சலவோவா என்று தாழ்த்தி அனுப்புவார்கள். இது தான் நமதூர் மக்கள் பழக்க வழக்கங்கள் இந்த நிலை மாறவேண்டும் என்றால் இளைங்கர்கள் துடிப்புடன் இருக்க வேண்டும். அப்பொழுது தான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வழி கடக்கும்போது கடையைப் பார்த்திருக்கிறேன்... உள்ளே நுழைந்து பார்க்க அவகாசம் கிடைக்கவில்லை !

வாழ்த்துகளும் துஆவும் இன்ஷா அல்லாஹ்...

அப்துல்மாலிக் said...

வல்ல இறைவன் இந்த தொழிலில் பரக்கத்தை கொடுப்பானாகவும், சகோ. தாஜுதீனின் அயராத கடும் உழைப்பே இதற்கு காரணம், விரைவில் தொழிலதிபராக வாழ்த்துக்கள்...

Yasir Salafi said...
This comment has been removed by the author.
Yasir Salafi said...

தொழில் முனைவோர் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?

பள்ளியிலோ கல்லூரியுளோ சிறந்த மாணவர்களாக இருந்தவர்களால் பொதுவாக தொழில் முனைவோர் ஆக முடியாது.

இந்த சிறந்த மாணவர்கள் சிறந்த பணியாலர்களாகத்தான் ஆக முடியும்
இன்றைய பள்ளி/கல்லூரி என்பது நடைமுறை வாழ்விற்கு வேண்டிய பல விசயங்களை கற்றத்தராது. அதில் ஒன்று "Financial Intelligence"
( இதுப்பற்றிய விவரங்களுக்கு https://www.richdadworld.com.)

சகோதரர் தாஜுதீன் போன்ற தொழில் முனைவோர்கள் இதுபோன்ற பள்ளிப்படிப்பில் அதிக அக்கறை செலுத்துவதில்லை. இது அவர்கள் " சொந்த தொழில்" தொடங்க மிக முக்கிய காரணங்களில் ஒன்று.

நமக்கு தேவை டிகிரி அல்ல,நமக்கு தேவையெல்லாம் "an Islaamic Personality", "Good/Halaal Earning capabilities" "Marco Vision to Benefit the community"

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

//நமக்கு தேவை டிகிரி அல்ல,நமக்கு தேவையெல்லாம் "an Islaamic Personality", "Good/Halaal Earning capabilities" "Marco Vision to Benefit the community"//

நீங்க சொல்றது வாஸ்த்தவமான பேச்சு... இப்புடி இங்லீஸ்லெ எழுத பழவுறதுக்காவது பள்ளி/கல்லூரிக்கு போகனுமா? இல்லையா? யாசிர் சலஃபி அவர்களே.

Yasir Salafi said...

ஸலாம்அலைக்கும் @மு.செ.மு. நெய்னா முஹம்மது அவர்களுக்கு

சிலப்பள்ளிகள் பலன் தரக்கூடியவைகளாக இருகின்றபோதிலும்.
12 வருடங்கள் "English Medium" பள்ளியில் பயின்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவுவோ எழுதவோ முடியாத எண்ணற்ற பட்டதாரிகளை காண்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ் நான் ஆங்கிலைத்தை நல்ல முறையில் கற்க என் தந்தையின் முயற்சி/அறிவுரைகள் முக்கிய காரணம்.

பள்ளிக்கு/கலூரிக்கு செல்லவேண்டாம் என்று கூறவில்லை. இன்றைய பள்ளிகள் தாங்கள் வாங்கும் "Fees"கு நீதமாக மாணவர்களை உருவாக்குவதில்லை. நல்ல ஆங்கிலம் பேச 6 முதல் 12 மாதங்கள் போதும் . ஆனால் 12 வருடங்கள் "English Medium" பள்ளியில் பயின்றும் ஆங்கிலத்தை சரியான முறையில் வாசிக்ககூட முடியவில்லை பெரும்பாலானவர்களுக்கு.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

வலைக்குமுஸ்ஸலாம் சகோ. யாசிர் சலஃபி அவர்களுக்கு,

இதெத்தாங்க நானும் அப்பொவுலேர்ந்து சொல்லிக்கிட்டு/நெனச்சிக்கிட்டு ஈக்கிறேன். நல்ல ஆங்கில புலமை ஈந்தா தான் உலகில் ஒசந்த வேலெவெட்டி கெடக்கும்ண்டு ஈக்கிம் பொழுது அதை நெறப்பமா கத்துக்கிட 12 மாசங்களே போதும்ண்டு ஈக்கிம் பொழுது இப்படி புள்ளையல்வோ ஸ்கூலு, காலேஜின்டு 12 இல்லாட்டி 15 வருசங்களை அநியாயமா வேஸ்ட் பண்ணி சரியா ஆங்கிலம் பேச, எழுத, படிக்கத்தெரியா இப்படி வந்து நிக்கிறதெ பாத்தா மனசுக்கு ரொம்ப சல்லையாத்தான் ஈக்கிதுங்க......

Yasir said...

May Allah bless you for more prosperity.

KALAM SHAICK ABDUL KADER said...

//பள்ளிக்கு/கலூரிக்கு செல்லவேண்டாம் என்று கூறவில்லை. இன்றைய பள்ளிகள் தாங்கள் வாங்கும் "Fees"கு நீதமாக மாணவர்களை உருவாக்குவதில்லை. நல்ல ஆங்கிலம் பேச 6 முதல் 12 மாதங்கள் போதும் . ஆனால் 12 வருடங்கள் "English Medium" பள்ளியில் பயின்றும் ஆங்கிலத்தை சரியான முறையில் வாசிக்ககூட முடியவில்லை பெரும்பாலானவர்களுக்கு.//



அதெப்படிங்க, என் மனசில உள்ளதெல்லாம், சகோ.யாசிர் ஸலஃபி அவர்களின் எண்ணத்திலும் எழுத்திலும்....

தொழிலில் பர்கத் பெற்று, அதிரையர்கள் முந்தைய பொற்காலத்தை அடைவார்களாக!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு