Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வாழ்கைப் பயணத்தில் உறவுகள் - 10 19

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2012 | , ,

தந்தை வழி உறவு...

ஐந்து வயதில் அண்ணன் தம்பி பத்து வயதில் பங்காளி அதன் பின் பகையாளி என்பது முதுமொழி இது பல இடங்களில் பரம்பரை சொத்துக்கள் பிரித்து கொள்வதில் ஏற்படும் பகை. இவைகளால் பிரியும் சகோதரர்கள் கூட அண்ணனின் பிள்ளைகளை வழியில் கண்டால் பாசமாக பேச எத்தனிப்பார்கள்.

அண்ணனின் மகன் நல்ல நிலையில் இருப்பதை, புகழ் பெற்ற மருத்துவராகவோ, வழக்குரைஞராகவோ திகழும் போது என் அண்ணனின் மகன் என்று புளங்காகிதம் அடையும் சித்தப்பர்களை காண முடியும். தாய் வழி சொந்தம் போல் நெருங்கிய பாசப் பிணைப்புகள் காணப்படவில்லை என்றாலும், சில சமயங்களில் கஞ்சி ஊற்ற ஆளில்லை என்றாலும் கச்சல் கட்ட ஆளுண்டு என்ற பழமொழிக்கு தகுந்தார் போல் தார்மீக ஆதரவு என்றும் கிடைக்கும்.

அண்ணன் குடும்பத்தில் இடர்பாடுகள் ஏற்படும் போது தம்பிமார்களின் உதவி அபரிதமானது.

*தாய் வழி சொந்தம் தானே வந்து ஒட்டிக்கொள்ளும் சொந்தம்.

*தந்தை வழி சொந்தங்களை நாம் சென்று வளர்த்துக்கொள்ள வேண்டும்.

*தந்தையோடு உடன் பிறந்த சகோதரி, அத்தை (மாமி) இவர்களின் பாசம் தானாக வராது ஆனால் நாம் சென்று பார்க்கும் போது. அவர்கள் காட்டும் பாசம் இனிமையானது, இறகுகளால் வருடும் வசந்தம் அது சொல்லில் அடங்காது மாமி என்று நமதூரில் அழைக்கப்படும் அற்புதமான உறவு.

மாலை நேரங்களில் சென்று மாமி(மார்களை)யை பார்க்கும் சிறு பிள்ளைகளுக்கு கிடைக்கும் உபசரிப்புகளும் அவர்களால் வழங்கப்படும் தின்பண்டங்கள் அல்லது காசு என்று கொடுத்து மகிழும் மாமி என்ற அழகிய உறவு. உடன் பிறந்த சகோதரனின் பிள்ளை என்ற பாசம் சொந்த சகோதரனிடம் பாசம் காட்டுவது போல் உணர்வாக இருக்கும்.

*தாய் வழி உறவு என்றும் கிடைக்கும் உணவு, தந்தை வழி உறவு சிறப்பு பதார்த்தம் போன்றது. எபோதாவது ஒரு முறை சாப்பிடுவது போல் தந்தை வழி உறவையும் எப்போதாவது ஒரு முறை சந்திப்பதே நலம்.

*தந்தை வழி சொந்தத்தின் அருமை, நமக்கு ஏதாவது ஆபத்தான நிலை வரும்போது புரியும்.

*தந்தையை இழக்க நேரிட்டால் தந்தையின் உடன்பிறனந்தவர்கள் அண்ணனின் பிள்ளைகளை கவனித்துக் கொள்ள முன்வரும் நிலை இன்றி அமையாத ஒன்று.

*ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு எல்லா வகையான உறவின் ஆதரவும் இருக்க வேண்டும் என்ற என்னத்தை ஊட்ட வேண்டும் பெரிய தன்தை, சிறிய தந்தை, மாமி ஆகியோர் பற்றிய நல்ல எண்ணம் ஏற்படும் வகையில் பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் பிள்ளைகளும் உறவை நாடி செல்லும் 

*தாயில்லா பிள்ளை, தந்தையை இழந்த பிள்ளை என்று இரண்டில் ஒன்றுக்கு ஏற்படும் பேரிழப்பு தாய் வழியே தாங்கி நிற்கும் என்றாலும் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு தந்தை வழி சொந்தங்கள் உதவ முன் வருவார்கள் என்பதை காண முடிகிறது.

*தாய் வழி சொந்தங்களின் பாசம் தானே வரும், தந்தை வழி  சொந்தங்கள் நாம் தேடி சென்று பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை பதிய விரும்புகிறேன்.

*ஒரு வாசகர் என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசினார் தாய் வழி சொந்தம் இயற்கையாக அன்பு செலுத்த கூடியவை என்று கூறி இருந்தீர்கள்.ஆனால் இடர்பாடுகள் வந்தால் காக்கை கூட்டத்தில் கல் எறிந்தால் கலைவது போல் கலைந்து விடுவார்கள். தந்தை வழி சொந்தங்கள் தந்தைக்கு இடர் பாடுகள் வந்த போது அவர் சகோதரர்  முன் வந்து அவர் கஷ்டத்தை நீக்க முன் வந்தது மட்டுமல்லாமல் அவர் பிள்ளைகள் வளர்ப்பதற்கு உறுதுணையாய் இருப்பார்கள் என்பதை தாங்கள் பதிய வேண்டும் என கேட்டுகொண்டார். பெரும் இடர்பாடு வந்தால் தந்தை வழி சொந்தம் உதவும் என்பதை உணர முடிகிறது.

*பிள்ளைகளிடம் பகையை மிகை படுத்தி கூறி தந்தை வழி மீது துவேசம் கொள்ள செய்வதும். நல்லதை கூறி பாசம் பெற செய்வதும், தாயிடமே உள்ளது கூடுதல் சொந்தங்கள் இருத்தல் நலம் தானே!!.
உறவுகள் தொடரும்...
அதிரை சித்தீக்

19 Responses So Far:

Yasir said...

”ஆய்வு” உறவின் அகலத்தை ஆழ உழுது இருக்கின்றது....சிறந்த தொடர் ...அலசப்படவேண்டியவை

//ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு எல்லா வகையான உறவின் ஆதரவும் இருக்க வேண்டும் என்ற என்னத்தை ஊட்ட வேண்டும் பெரிய தன்தை, சிறிய தந்தை, மாமி ஆகியோர் பற்றிய நல்ல எண்ணம் ஏற்படும் வகையில் பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் பிள்ளைகளும் உறவை நாடி செல்லும்// எக்ஸ்சலண்ட்

ZAKIR HUSSAIN said...

To Brother அதிரை சித்தீக்

//ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு எல்லா வகையான உறவின் ஆதரவும் இருக்க வேண்டும் என்ற என்னத்தை ஊட்ட வேண்டும் பெரிய தன்தை, சிறிய தந்தை, மாமி ஆகியோர் பற்றிய நல்ல எண்ணம் ஏற்படும் வகையில் பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் பிள்ளைகளும் உறவை நாடி செல்லும்//



உங்கள் தொடரில் ஹைலைட் ஆன விசயம் இதுதான். எனக்கு தெரிந்து ஒரு குடும்பத்தில் தகப்பன் வழி உறவை தவறாக எடுத்து சொல்லி வளர்த்த தாயினால் இப்போது டிஸ்கனக்ட் ஆகி நிற்பது பிள்ளைகள்தான். தாயும் தகப்பனும் இல்லாத நிலையில் இவர்கள் பெரிய குடும்பத்தில் பிறந்தும் கொண்டாட உறவுகள் இல்லாமல் இருக்கின்றனர்.

தவறான தகவல்களை சொல்லி வளர்த்த தாயும் இப்போது இல்லை, தட்டிக்கேட்காத தந்தையும் இல்லை.

இப்படி "பொய்யாக" வெறுப்புகளை மட்டும் ஊட்டும் சிலர் ஒரு "உண்மையான" ஒன்றை மறந்து விடுகின்றனர். அதுதான் "மரணம் எல்லோருக்கும் உண்டு" என்பதை.



இப்னு அப்துல் ரஜாக் said...

”ஆய்வு” உறவின் அகலத்தை ஆழ உழுது இருக்கின்றது....சிறந்த தொடர் ...அலசப்படவேண்டியவை

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

வெளிநாட்டிருந்து திரும்பும் கணவனை பிள்ளைக்கு காட்டி இவர்தான் உன் வாப்பா என்று அறிமுகம் செய்வதே தாய்தான்.//ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு எல்லா வகையான உறவின் ஆதரவும் இருக்க வேண்டும் என்ற என்னத்தை ஊட்ட வேண்டும் பெரிய தந்தை, சிறிய தந்தை, மாமி ஆகியோர் பற்றிய நல்ல எண்ணம் ஏற்படும் வகையில் பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் பிள்ளைகளும் உறவை நாடி செல்லும்//ஜாகிர் எழுதியது போல் உங்கள் தொடரில் ஹைலைட் ஆன விசயம் இதுதான் குடும்பத்தின் உறவுகள் அனைத்தையும் சொல்லி வளர்த்தால்தான் பாசமுள்ள பிள்ளையாக வளரும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உறவுகளில் இன்று உயர்வான கருத்துக்கள்!

KALAM SHAICK ABDUL KADER said...

மரணத்திற்குப் பின்னர் நம் வாரிசுகளைக் கவனிக்க யார் இருக்கின்றார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்; அப்பொழுது உறவுகளின் அவசியம் புலப்படும்; நம் எண்ணத்தில் உறவுகளின் மீதானப் பாசம் பலப்படும்.

அதிரை சித்திக் said...

அருமை தம்பி யாசிர் ,அன்பு சகோ அர அல .,
சகோ.ஜாகிர் காக்கா ,அன்பு தம்பி ஜாபர் சாதிக்
சகோ அப்துல் வாகித் அண்ணாவியார் ..,
கவியன்பன் கலாம் காக்கா தங்களின்
மேலான கருத்திற்கும் வருகைக்கும் நன்றி

sabeer.abushahruk said...

அருமை அருமை.
மொத்தமாக உள்ளிறங்கி அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள். தங்களுக்கு சமயம் வாய்த்தால் பிறிதொரு நேரத்தில் பலரது அனுபவங்கள், அதன்மேல் தங்களின் பார்வை, நடைமுறைச் சிக்கல்கள், தங்களின் தீர்வுகள் என்று இதேத் தொடரை மீண்டும் ஓர் ஆய்வாக விரிவுபடுத்தி எங்களுக்குத் தரவேண்டும் என்று அதிரை நிருபர் வாசகனாகக் கேட்டுக்கொள்கிறேன்.

//இவைகளால் பிரியும் சகோதரர்கள் கூட அண்ணனின் பிள்ளைகளை வழியில் கண்டால் பாசமாக பேச எத்தனிப்பார்கள்.//

ஆஹா ஆஹா.

அதிரை சித்திக் said...

தங்களுக்கு சமயம் வாய்த்தால் பிறிதொரு நேரத்தில் பலரது அனுபவங்கள்,

அதன்மேல் தங்களின் பார்வை, நடைமுறைச் சிக்கல்கள், தங்களின் தீர்வுகள்

என்று இதேத் தொடரை மீண்டும் ஓர் ஆய்வாக விரிவுபடுத்தி எங்களுக்குத்

தரவேண்டும் என்று அதிரை நிருபர் வாசகனாகக் கேட்டுக்கொள்கிறேன்.///
இன்ஷா அல்லாஹ் காக்கா

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

நன்பரின் கட்டுரை அதிரை வாசிகளுக்கு மட்டும் பொருந்தலாம்
பொதுவாகதிருமணம் ஆன பெண்கள் கனவன் வீட்டுக்கு செல்வது தான் அதிகப்படியான ஊர்களின் வழக்கம் அப்புழுது தந்தை வளி உரவுதான் ஆதரவு உரிமை அதிகம் தாய் வழி உரவு விருந்தாளி உரவுதான்
*தாய் வழி உறவு என்றும் கிடைக்கும் உணவு, தந்தை வழி உறவு சிறப்பு பதார்த்தம் போன்றது. எபோதாவது ஒரு முறை சாப்பிடுவது போல் தந்தை வழி உறவையும் எப்போதாவது ஒரு முறை சந்திப்பதே நலம்.///////
இது தவரான கருத்தாய் படுகிரது

இது தவரான கருத்தாய் படுகிரது

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

மாமன் நல்லவனாய் இருந்தால் தாய் வழி உரவு பளப்படும் பெரியப்பா சாச்சா(சித்தப்பா) நல்லவர்களாய் இருந்தால் தந்தைவழி உரவு பளப்படும் அவ்வளவுதான் தந்தை வழி உரவை விட தாய் வழி உரவு சிரப்பாக கருத இயலாது

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

தாயின் தந்தை வசதியானவராய் இருந்து சொத்துக்களையெல்லாம் பிரிக்காமல் வைத்திருந்தால் என் தம்பி மகளுக்குத்தான் என் பிள்ளையை கள்யானம் செய்து கொடுப்பேன் என்று உரவை கொண்டாடுவார்கள்
அதே சமயாம் கனவரின் தகப்பனாருக்கு சொத்துக்கள் அதிகமாக இருந்தல் என் கொழுந்தனாரின் மகளுக்குத்தான் என்மகனை கொடுப்பேன் என்று அடம்பிடிப்பர் நன்பரே

Unknown said...

அஸ்ஸலாமு அலைகும்
இந்த தொடர் சிறப்பாய் வளர்கின்றது (தவறுகள் சில இருப்பின் அது கலையபட வேன்டியது) வாழ்துக்கள்.

//மாமன் நல்லவனாய் இருந்தால் தாய் வழி உரவு பளப்படும் பெரியப்பா சாச்சா(சித்தப்பா) நல்லவர்களாய் இருந்தால் தந்தைவழி உரவு பளப்படும் அவ்வளவுதான் தந்தை வழி உரவை விட தாய் வழி உரவு சிரப்பாக கருத இயலாது//

மு செ மு சபீர் காகாவின் இந்த கருத்து தவறானது எப்படி

உங்கள் தாய் இறந்து விட்டால் உங்கள் தாயிக்கு செய்யும் பனிவிடைகளையும் பரிவுகளையும் நீங்கள் உங்கள் சிறிய தாயிக்கு(சாச்சி) செய்யுங்கள் என்பது ஹதீஸ் அப்படி இருக்க தாய் வழி உறவுகளை புறக்கனிப்பது ஏற்புடையது அல்ல.
என்றாலும் தந்தை வழி உறவுகளும் பேனவேன்டியதும் போற்ற வேன்டியதும் கடமையானதே.

Unknown said...

Assalamu Alaikkum

Nice series of articles on relationships. Yes, Mother's influence on developing children's healthy relationship is paramount importance. Similar to this, mother is a key in developing whole personality in children. So if mothers are well educated(in Sharia and Wordly) and broad minded then children would benefit more and more, and a strength in family bond would improve.
Anyway, relationship is sentimental out of true love and developed by frequent communications.

Meerashah Rafia said...

//*தாய் வழி சொந்தம் தானே வந்து ஒட்டிக்கொள்ளும் சொந்தம்.

*தந்தை வழி சொந்தங்களை நாம் சென்று வளர்த்துக்கொள்ள வேண்டும்.//

நிதர்சன உண்மை.

அதிரை சித்திக் said...

பொதுவாகதிருமணம் ஆன பெண்கள் கனவன் வீட்டுக்கு செல்வது தான்

அதிகப்படியான ஊர்களின் வழக்கம் அப்புழுது தந்தை வளி உரவுதான்

ஆதரவு உரிமை அதிகம் தாய் வழி உரவு விருந்தாளி உரவுதான்///

உளவியல் ரீதியாக பார்க்கும் போது தாய்மீது காட்டும் அன்பு தாயிடம்

நாம் எடுத்துகொள்ளும் உரிமை .. அதன் அடிப்படையில் தான் தாய் வழி

சொந்தங்களிடமும் காணபடுவது இயற்கையே ..இந்துக்கள் கூட தாய் வழி

சொந்தங்கள் விட்டு போக கூடாது என்பதற்காக சடங்குகள் தாய் வழி

சொந்தங்களே நடை முறை படுத்த செய்வர் ..,தாய் மாமன் மடியில்

வைத்து காது குத்துதல் ..கிராமங்களில் சடங்கான பெண்ணுக்கு

பச்சை ஓலை வேலி மறைத்தல் இன்னும் பிற சடங்குகள் காண முடிகிறது

ஒரே வீட்டில் அண்ணன் தம்பி கூட்டு குடித்தனம் என்பது இந்த காலத்தில்

அரிதாகி விட்டது .அதன் சூச்சமம் ..சகோதரர்கள் பிள்ளை களிடம் காட்டும்

பாசங்களில் வேறுபாடு இவைகளால் தனி குடித்தனம் என்ற நடைமுறை

கூடுதலாகி தாய் வழி உறவுகள் மட்டுமே தொடர்பு கொள்ளும் நிலை

காண முடிகிறது ..

அதிரை சித்திக் said...

மாமன் நல்லவனாய் இருந்தால் தாய் வழி உரவு பளப்படு

ம் பெரியப்பா சாச்சா(சித்தப்பா) நல்லவர்களாய் இருந்தால்

தந்தைவழி உரவு பளப்படும் அவ்வளவுதான் தந்தை வழி

உரவை விட தாய் வழி உரவு சிரப்பாக கருத இயலாது////

நல்லவர் கேட்டவர் என்ற அடிப்படையில் அல்ல உறவுமுறை

தாய் மாமன் நல்ல வசையாக இருந்து மருமக்களை கவனிக்கவிலை

என்றால் அது பிரிய குறை மாறாத வடு ..அதே சந்தர்பத்தில்

சித்தப்பன் வசதியாக இருந்து நல்லமுறையில் கவனித்தால்

கூடஏதோ ஒரு சங்கடம் தாய்க்கு இருக்கும் தன கணவனால்

இயல வில்லையே என்று அது பிள்ளை களிடமும் தொற்றிகொள்ளும்

அதிரை சித்திக் said...

தாயின் தந்தை வசதியானவராய் இருந்து சொத்துக்களையெல்லாம்

பிரிக்காமல் வைத்திருந்தால் என் தம்பி மகளுக்குத்தான்

என் பிள்ளையை கள்யானம் செய்து கொடுப்பேன் என்று உரவை கொண்டாடுவார்கள்
அதே சமயாம் கனவரின் தகப்பனாருக்கு சொத்துக்கள் அதிகமாக இருந்தல்

என் கொழுந்தனாரின் மகளுக்குத்தான் என்மகனை கொடுப்பேன் என்று அடம்பிடிப்பர் நன்பரே ///

பணமல்ல பிரச்சனை தனது சொந்தங்களோடு தன பிள்ளை இணைய வேண்டும் என்று

தாய் நினைப்பதும் அதற்கு மகன் ஒத்து போவதுமே காரணம் ..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு