Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பயணங்களில் பரவசம் - தொடர் நிறைவு 18

அதிரைநிருபர் பதிப்பகம் | November 14, 2012 | , , , , , ,


பால் அருவி சொல்ல திரும்பவும் தமிழ்நாடு எல்லை வந்து குற்றாலத்தை நெருங்கி விட்டுத்தான் கேரளா போகவேண்டும். குற்றாலம் அருகில் வந்ததும் ஒரு பெரிய மாம்பழ கடையை கண்டதும் வண்டி அனிச்சையாக அங்கு போய் நின்றது. அதிக வகையில் மாம்பழங்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. கடைக்குள் சென்று விலையை கேட்டதும், கடைகாரர்  'சலாம்' சொன்னார். நாமும் பதில் சலாம் சொல்லிவிட்டு சும்மாயிருக்காமல் "ஆஹா! நாம பாய் கடைதான் என்று நல்ல பழமா வெட்டி தாங்களேன்" என்று சொன்னதும் பலவகை மாம்பழங்களை 'வெட்ட வெட்ட' நாங்கள் தொடர்ந்து அதனை 'வெட்டினோம் (சாப்பிட்டோம்)'.

நண்பகல் என்பதால் நண்பரோ "பகல் சாப்பாட்டிற்கு பதில் மாம்பழங்களை போட்டு சாத்திவிட வேண்டியதுதான்" என்றார். அதற்கு மற்றொரு நண்பர் "மாம்பலம் சூடுப்பா" என்றார். உடனே மற்றவர் "சூடா இருந்தா பரவாயில்லை பால் அருவியில் குளித்தால் சூடு எல்லாம்  பறந்து விடும்" என்று ஒரு கூலிங்க் டெக்னிக்கை சொன்னார். அவ்வாறு  சொன்னது தான் தாமதம் பழங்கள் எல்லாம் பஞ்சாய் பறந்தன.

கணக்கை முடித்து விட்டு கிளம்பும்போது கடைக்காரர் ஏக்கமாக கேட்டார் "நீங்கள் மட்டும் சாப்டா போதுமா வீட்டிற்கு வாங்கலையா?" என்று சொன்னவர் அரை காயாக இருந்த மாங்கைகளை கொட்டாயில் (பெட்டியில்) வைத்து கட்டி கொடுத்தார். வயற்றுக்குள்ளும் மாம்பழத்தை ஏற்றிக்கொண்டு காருக்குள்ளும் மாம்பழத்தை ஏற்றிக்கொண்டு கார் கேரளா எல்லையை நோக்கி புறப்பட்டது.

கேரளா செக் போஸ்ட்டில் வாகன நெருக்கடி அதிகமாக இருந்தது 'கொறைச்ச நேரம் வெயிட் செய்து' (மலையாள வாடை அடிக்குதுன்னு எப்படி காட்டுறது) செக் போஸ்ட்டை கடக்க வேண்டி இருந்தது. அப்படி காத்திருந்த நேரத்தில் தமிழ்நாடு எல்லையில் இருந்து கேரளா எல்லைக்கு கால் நடையாக நிறையபேர் போவதும் போனவுடன் திரும்பி வருவதுமாக இருந்தனர். இதனைப் பார்த்த நமக்கு ஒன்றும் புலப்படவில்லை. நாங்களும் செக் போஸ்டை தாண்டியதும் தான் விவரம் புரிந்தது கேரளா எல்லையில் எல்லா மாநிலமும் குவிந்து கிடந்தது "அதாங்க லாட்டரி சீட்டு."

நாம் எல்லை தாண்டி கேரளா உள்ளே சென்றதும்  இருபுறமும் தேக்கு மரங்களின் நிழல் அடர்ந்து படர்ந்து கிடந்தது, அதன் நடுவே வகுந்து எடுத்தது போல் சாலைகள் போடப்பட்டு இருந்தது. அங்குள்ள தேக்கு மரங்கள் நல்ல வனப்பகவே இருந்தது. ஒரு சிறிய காட்டு பயணத்திற்கு பின் பால் அருவி வந்தது. காரை நிறுத்தி விட்டு அருவி நோக்கி நடந்தபோது ஒரு பரிச்சயப்பட்ட உணவின் மனம் வந்த திசையை நோக்கி நம் கால்கள் திருப்பி அங்கு சென்றது. மலையாளத்தில் கப்பா என்றும் நம் தாய் மொழியில் மரவள்ளி கிழங்கு என்று சொல்லும் அந்த கிழங்கை மஞ்சள் ஊற்றி பூ போல் அவித்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.





அசத்தும் அழகான குளிரூட்டிய இடத்தில் அந்த கிழங்கு கிடைத்த மகிழ்ச்சியில் எங்களுக்கு பிறகு வந்த பயணிகளுக்கு கிழங்கு இல்லாமல் செய்து விட்டு அருவியை நோக்கி நடையை கட்டினோம். இப்போ மூன்றாம் கண் நம் இரண்டு கைகளும் தவழ்ந்து அருவியை படம் பிடித்தது. ஒரு நீண்ட குளியலை போட்டு விட்டு காருக்கு வந்ததும் மறு பசி(!!!!?) வந்து விட்டது வரும் வழியில் சூடான பழம் பூரி (வாழைப்பழத்தை பச்சி மாவில் போட்டு பொரிப்பது) உள்ளே தள்ளி விட்டு நண்பர்களை கார் உள்ளே தள்ளி விட்டு குற்றாலத்தை நோக்கி கார் புறப்பட்டது.

இரவு குற்றாலம் வந்து பழங்கள் மற்றும்  தைலம் இன்னும் சில பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பவும் செங்கோட்டை ரஹ்மத் ஹோட்டலில்(திரும்பவுமா !!) இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு நாட்டுக்கோழி ருசி நாக்கை விட்டு அகலும் முன் ஊர் வந்து சேர்ந்தோம்.


Sஹமீது

18 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

சுட்டும் விழிச் சுடரே!
"பிசி”யாக இருந்தாலும் பசியாறாமல் இருப்பது இல்லை என்பதை, ஸ்ரீலங்கன்ஏர்வேய்ஸில் ஆட்டுத்தலையும் இறைச்சியும் “பார்சல்| கட்டி எடுத்துக் கொண்டு தம்மாமில் வைத்து ருசித்துச் சாப்பிட்ட அனுபவம் எழுதக் கண்டேன்; இப்பொழுதுக் கேரளா, தமிழ்நாட்டு எல்லைகளிலும் பசியாற்றுப் படலம் இப்பயணக் கட்டுரையில் படித்ததும், இன்ஷா அல்லாஹ் உங்களோடு ஒருநாள் மட்டும் பயணித்தாலோ, உங்களிருப்பிடத்தில் ஒரு நாள் மட்டும் தங்கினாலோ பசியாற வைப்பதில் நீங்கள் மிகச் சிறந்த பண்பாளர் என்று நம்புகிறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

மலைப்பால் பார்த்தேன்
மலைப்பால் மகிழ்ந்தேன்
அருவிகளின் சத்தமும்
குருவிகளின் சத்தமும்
காணொளியில் இல்லாமல்
வீணாகிப் போனதேனோ?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பயணம் முடிஞ்சிருச்சா, இன்னும் நீளலையா?
தமிழை தேனாய் வர்ணித்த இனிய தொடர்.
இன்னும் வேறொரு வடிவில் தொடர் என்றும் தொடர ரசிகனாய் வேண்டுகிறேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

பயணத்தின் குளுமையிலும்
மலை சாரலிலும்
மாம்பழ ருசியிலும்
நாட்டுக் கோழி வறுவலில்
கூட இருந்தது போன்ற
உணர்வு
உங்கள் பயணம் முழுதும்

Ebrahim Ansari said...

எனக்கென்னவோ இந்தத் தொடரின் கடைசிப் பாராவை இன்னும் இரண்டு எபிசொடுகளுக்கு நீடித்து இருக்கலாமே அதற்குள் முடிந்து விட்டதே என்றே எண்ணத் தோன்றுகிறது.

ZAKIR HUSSAIN said...

மறுபடியும் பாலாறு அருவிக்கு போய் வந்த சந்தோசம். மறுமுறை ஊர் போகும்போது நாம் எல்லாம் போய் வருவோம்..ஒரு டூர் ஏற்பாடு செய்வோம்.

sabeer.abushahruk said...

தீனிப் பண்டாரங்களா, உட்டுட்டு திண்டுட்டியல்ல?

வாழ்க வளமுடன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பயணங்கள் நிறைவுறுவதில்லை !

அடுத்த மலைத் தொடர் விரைவில் இன்ஷா அல்லாஹ் ! :)

என்ன இருந்தாலும் இந்த மாதிரி சாப்பாட்டுக்கு போட்டி போடும் தொடராக எழுத உங்களால் முடியும் ! :)

அதென்ன கவிக் காக்கா மேலே என்னமோ சொல்லியிருக்காங்க !? என்ன அவ்வொளையும் கூட்டிகிட்டு போகலன்னதுக்காக இப்புடியா ?

Shameed said...

அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…

//உங்களிருப்பிடத்தில் ஒரு நாள் மட்டும் தங்கினாலோ பசியாற வைப்பதில் நீங்கள் மிகச் சிறந்த பண்பாளர் என்று நம்புகிறேன். //

வாங்க வாங்க பசியற என்ன பந்தியோ பரத்திடுவோம்

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//தீனிப் பண்டாரங்களா, உட்டுட்டு திண்டுட்டியல்ல?

வாழ்க வளமுடன்.//

முதலில் பின்னுடத்திற்கு நன்றி

Thameem said...
This comment has been removed by the author.
Thameem said...

ருசித்த நாக்கு சும்மாவா இருக்கும். அதான் கட்டுரையாக வெளிவந்து பலரது நாக்கில் எச்சை ஊரவைக்கிறது .என்னையும் சேர்த்து

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அருவியில் வெள்ளம் கூடும், குறையும். அனால் ஹமீத் காக்காவின் எழுத்து நடை மெருகேறிக்கொண்டே செல்கிறது. வாழ்த்துக்கள்.

Anonymous said...

ருசித்த நாக்கு மட்டுமல்ல ருசித்த உடம்பும் குற்றலாம்,கேரளா என்று சுற்றுல்லா தளத்திற்கு கூட்டிக்கொண்டு போகும். அதை நம்மால் தடுப்பதற்கு சிரமமாகத்தான் உள்ளது. இந்த சுற்றல்லாவிற்கு செல்வதெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை தான்.

KALAM SHAICK ABDUL KADER said...

//வாங்க வாங்க பசியற என்ன பந்தியோ பரத்திடுவோம்//

எப்பொழுது வரலாம்? இன்ஷா அல்லாஹ் அடுத்த விடுமுறையை மே 2013ல் வைத்துக் கொள்க. அதிரையில் உங்கள் விருந்தோம்பலைக் காணலாம்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். கண்ணுக்கும் விருந்து! பசித்த வயிறுக்கும் விருந்து!இப்படி சுவையாக கட்டுரை படைக்க உங்களுக்கு நல்லா வருது! அருவிகள் அருகிவரும் காலத்தில் இந்த அருவி பால் வார்த்தது வயிற்றில். சுகமான தாலட்டு இந்த தொடர்.வாழ்த்துக்கள்.

Shameed said...

crown சொன்னது…

//அஸ்ஸலாமு அலைக்கும். கண்ணுக்கும் விருந்து! பசித்த வயிறுக்கும் விருந்து!இப்படி சுவையாக கட்டுரை படைக்க உங்களுக்கு நல்லா வருது! அருவிகள் அருகிவரும் காலத்தில் இந்த அருவி பால் வார்த்தது வயிற்றில். சுகமான தாலட்டு இந்த தொடர்.வாழ்த்துக்கள்//

பால் அருவிக்கு கடைசியா குளிக்க வந்தாலும் வார்த்தையால் பால் வார்த்துவிட்டீர்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு