Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ரமளானுக்காக தயார்படுத்திக் கொள்வதில் முந்திக் கொள்வது ஆண்களா / பெண்களா ? :: விவாதக்களம் 13

அதிரைநிருபர் பதிப்பகம் | July 01, 2013 | , , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ரமளான் / நோன்பு என்ற சொற்றொடரை கேட்டாலே உடலெல்லாம் சிலிர்க்கும் சீக்கிரம் வராதா என ஏங்க வைக்கும். அத்தனை சுகந்தமும் வசந்தமும், கருணையும், பண்பும் உலகுக்கு பரைசாற்றும் அந்த ஒற்றை உச்சரிப்பு !

இன்ஷா அல்லாஹ் !

நாமும் வர இருக்கும் ரமளானுக்கென்று தயார் படுத்திக் கொண்டிருக்கிறோம், சிலரின் விடுமுறையை ரமளானுக்கென்றே ஒதுக்கி வைத்திருப்போம், மேலும் சிலர் ரமளானை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள ஆயிரமாயிரம் எண்ணங்களோடு காத்திருக்கலாம்.

சற்றே வித்தியாசமாக, வழமையான ரமளானை நமதூரில் இருக்கும் ஆண்களும் பெண்களும் வரவேற்பதில் எவ்வகையிலும் சலைத்தவர்கள் அல்ல. சிலர் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களிலிருந்தே திட்டங்களை போட்டு செயல்படுத்த காத்திருப்பார்கள், வேறு சிலரோ சில வாரங்களே இருக்கும் சூழலில் ரமளானை எதிர்பார்க்கும் பரப்புக்குள்ளாவர்கள். இன்னும் சிலரோ பிறை கண்டாச்சு என்றதுமே சுறுசுறுப்படைவார்கள் !

புதிய டிரஸ் வருடத்தில் எந்த மாதம் எடுத்திருந்தாலும் நோம்பு தலைப் பிறைக்கு என்றும் நோன்பு பெருநாளைக்கு என்றும் தனித் தனியாக பிரித்து வைத்து ஆனந்தம் கொள்ளும் பெண்களும் நிரம்ப உண்டு ! அதே நேரத்தில் சில சங்கடங்களையும் அவர்கள் சந்திக்கவும் வாய்ப்புகள் ஏராளம் இருக்கிறது, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் நிதியாதாரம் ரமளானில் எப்படி கையாளலாம் என்பதுமாகும்.

இவற்றையெல்லாம் விட, ரமளானில் நன்மைகளை கொள்ளையடிக்க காத்திருக்கும் பெரிசுகளிலிருந்து, சிறுசுகள் வரை அவர்களின் ஆர்வமும் குதுகலிக்கும்.

இவ்வகையில் அதிகமதிகம் ரமளானை எதிர்பார்த்து காத்திருப்பதிலும், அதற்கென தயார்படுத்திக் கொள்வதில் ஆனந்தம் கொள்வதிலும் நமதூர்க் காரர்களில் ஆண்மக்களா / பெண்மக்களா ?

வாருங்கள் விவாதிக்கலாம்...

அதிரைநிருபர் பதிப்பகம்

13 Responses So Far:

Unknown said...

ரமலான் வருவதற்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாததிற்கு முனபாகவே ரஸுலுல்லாஹி (ஸல்) அமல்கள் செய்வதற்கு தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்வார்கள்.

தலை பிறைக்கு புதிய உடை வாங்குவதோ அல்லது சம்மந்தில் வீட்டிலிருந்து கோழி வாங்கி கொடுப்பதோ அல்லாது இறைச்சி வாங்கி கொடுப்பதோ மார்க்கத்தில் இல்லாதா புதிய காரியம் (பித்அத்)

அடுத்து ஒரு முக்கிய விடயம் இந்த ஆயுள் அல்லாஹ் நமக்கு கொடுத்த அமானிதம் ரமளானாலும் சரி அல்லது ரமளான் அல்லாத காலஙளானும் சரி இந்த காலங்களை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடைசியாக ஒரு முக்கியமான நம்முடைய அதிகமான் நேரங்களை இன்டர்நெட்டில் சாட்டிங் செய்வதிலிருந்து தவிந்துக்கொள்வது நல்லது குர்ஆன் ஒதுவது திக்ரு செய்வது தான தர்மங்கள் கொடுப்பது குர்ஆன் ஹதீஸில் சொல்லப்பட்ட நல்ல காரியங்களில் ஈடுபடுவது. குர்ஆன் மொழிபெயப்புகளை நாம் தனியாகவோ அல்லாது குடும்பத்துடன் படிப்பது இன்னும் குர்ஆன் ஹதீஸில் சொல்லப்பட்ட நல்ல காரியங்களில் சொல்லப்பட்ட என்னென் நல்ல காரியங்கள் இருக்கின்றதோ நம்மால் முடிந்தளவு செய்ய அல்லாஹ் நமக்கு உதிவி செய்வானாக பாவமான காரியங்களிலிருந்து தவிந்த்துக்கொள்ள அல்லாஹ் நமக்கு உதிவி செய்வானாக

இன்சா அல்லாஹ் இந்த ஆண்டு ரம்லானில் தராவிஹ் தொழுகை முடிந்தவுடன் சித்தீக் பள்ளியில் மெளலவி ஹைதர் அலி ஆலிம் பயான் நடைபெறும் அனைவரும் கலந்துக்கொள்ளவும்


Unknown said...

"புனித ரமழான்"

இதில்தான் எத்தனை எத்தனை ஆனந்தம்.
இதை வரவேற்பதில் முந்திக்கொள்வது "ஆண்களா"? அல்லது "பெண்களா" ?
என்ற விதத்தில் , நோக்கத்தையும் இரண்டு வகையாகப்பிரிக்கலாம்,
அமல் செய்வதில் முந்திக்கொள்வதில் ஆண்களா ? அல்லது பெண்களா ?
அமல் அல்லாத மற்ற விஷயங்களில் முந்திக்கொள்வதில் ஆண்களா ? `அல்லது `பெண்களா ?

சொற்ப வருமானமுள்ள குடும்பமாக இருந்தால்

இந்த ஒருமாத காலத்தையும் எப்படி இந்த சொற்ப வருவாயில் சமாளிக்க இருக்கின்றோம் என்று முதலில் அடுப்பங்கரை சிந்தனையிலிருந்து , ஆரம்பித்து நோன்பு முடியும் வரை உண்டான செலவுகளில் இருந்து சமாளிக்க முன் யோசனையுடன் முந்தி செயல் பட ஆரம்பிப்பது பெண்களே. இது நிதர்சன மான உண்மை. ஏனனில் கடந்த மாதங்களை விட இந்த சிறப்பிற்குரிய மாதத்தில், அமல்களின் அபரிமிதமான நன்மைள்கைகள் ஒரு பக்கம் யோசனையில் இருந்தாலும், குடும்பத்தின் வரவு செலவு வகைகளை பிரித்துப்பார்த்து அதன்படி குடும்ப செலவை கணக்கெடுத்து செய்ய , முன் யோசனையுடன் முந்தி செயல் படுவது பெண்களே.

ஆனால்,
அமல்கள் விஷயத்தில்தான் பெண்களைவிட ஆண்கள் அபரிமிதமான நன்மைக்கு தங்களை தயாற்படுத்திக்கொள்கின்றனர். ஏனனில் பள்ளிவாயில் சென்று அமல் செய்யும் வாய்ப்பு பொதுவாக ஆண்களுக்குதான் அதிகம். அந்த வகையில் , ரமலான் மாதம் மிகப்பெரிய நன்மைகளை அள்ளித்தரும் சுரங்கமாக ஆண்களுக்கு வாய்ப்பதால்,பெண்களைவிட நன்மையில் முந்திக்கொள்கின்றனர்

ஆனால் உலகாதய விஷயங்களில் ,புது ஆடை, மற்ற உற்றார் உறவினர் பரஸ் பர கொடுக்கல் வாங்கலில் எந்தக்குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்வதில் பெண்கள் முந்திக்கொண்டு அந்த ஒருமாத காலத்தையும் சந்தோஷமாக முடிப்பதில் முந்திக்கொள்கின்றனர்.

மொத்தத்தில் இரண்டு முன் யோசனைகளும் அல்லாஹ்விடம் பொருத்தத்திர்க்குரியதே.

அல்லாஹ் இரண்டு நோக்கத்தையும் பொருந்தி , எதிர்வரும் புனிதமிக்க ரமலானை அது எந்த நோக்கத்திற்காக(இறை அச்சம் என்னும் "தக்வா") அல்லாஹ் இறக்கினானோ அந்த நோக்கத்தையும் பூர்த்தி செய்யும் நன் மக்களாக நம்மை இறைவன் ஆக்கி அருள்வானாக ஆமீன் !

அபு ஆசிப்.

Unknown said...

கடைசியாக ஒரு முக்கியமான விடத்தை நான் கூறுவது நம்முடைய அதிகமான் நேரங்களை இன்டர்நெட்டில் சாட்டிங் செய்வதிலிருந்து தவிந்துக்கொள்வது நல்லது குர்ஆன் ஒதுவது திக்ரு செய்வது தான தர்மங்கள் கொடுப்பது குர்ஆன் ஹதீஸில் சொல்லப்பட்ட நல்ல காரியங்களில் ஈடுபடுவது. குர்ஆன் மொழிபெயப்புகளை நாம் தனியாகவோ அல்லாது குடும்பத்துடன் படிப்பது இன்னும் குர்ஆன் ஹதீஸில் சொல்லப்பட்ட நல்ல காரியங்களில் சொல்லப்பட்ட என்னென் நல்ல காரியங்கள் இருக்கின்றதோ நம்மால் முடிந்தளவு செய்ய அல்லாஹ் நமக்கு உதிவி செய்வானாக பாவமான காரியங்களிலிருந்து தவிந்த்துக்கொள்ள அல்லாஹ் நமக்கு உதிவி செய்வானாக

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வணக்கம், உணவு, உடை, மூன்றையும் ஒரு சேர தயார்படுத்துவதில் அதிக பங்கு பெண்களுக்கே இருக்கும்.

எனவே இப்புனித மாதத்திற்கு தேவையான நிதியாதாரத்தை அல்லாஹ் போதிய அளவில் தந்து முழு வணக்கத்துடன் செய்ய வேண்டிய அனைத்தையும் திருப்தியாய்ச் செய்ய அல்லாஹ் நாடிடுவானாக ஆமீன்.

---------------------------------------
ஷஃபான் பிறை அதிரையில் 21
ரமலானை அடைய 8 / 9 நாட்கள்

Anonymous said...

ரமலான் மாதம் வறுவதற்கு முன்பே பெண்கள் தான் தயாராகி விடுகின்றனர். நல்ல அமல்கள் செய்வதிலும்,அடுப்பாங்கரையில் வேலை செய்வதிலும் மற்றும் குடும்பத்தாரர்களுக்கு நோன்புக்கஞ்சி காய்ச்சி பரிமாற்றம் செய்வதிலும் பெண்கள் தான் மும்மரமாக இருப்பார்கள். ஆண்கள் பள்ளியில் ஐந்து நேரம் இமாம் ஜமாத்துடன் தொழுது விட்டு குர் ஆன் ஓதுவதில் ஆர்வமும் செலுத்துகின்றனர்.

ரமலான் மாதத்தில் பெரும்பாலான ஆண்கள் வெட்டி பேச்சி பேசுவதிலும் கடைதெருவில் மற்றும் திண்ணையில் உட்கார்ந்து பேசுவதிலும் இடுபடுத்திக் கொள்கின்றனர். புனித மிகு ரமலான் மாதத்தில் எவ்வளவு அதிகமாக குர் ஆன் ஓதுவதிலும்,திக்கிர் மற்றும் தான தர்மங்கள் செய்வதிலும் ஈடு படுத்தி இருக்கிறமோ அதைக்கொண்டு அல்லாஹ் நம்மவர்களுக்கு நன்மைகளை நிரப்பமாக அள்ளி அள்ளி தந்தருள்வனாகவும் ஆமீன். பெண்கள் இன்னொரு விசையத்திலும் ஆண்களை விட முதல் அமலாக செய்பவர்கள் சமந்தி வீட்டுக்கு முட்ட ரொட்டி,கோழி குருமா,கடற்பாசி மற்றும் காஞ்சி காச்சி கொடுப்பது போன்ற காரியங்களில் ஈடு படுகிறார்கள். இந்த (பிதஃஅத்) எல்லாம் எப்பொழுது தான் ஒளியிமோ அப்பொழுது தான் பெண்களும் இன்னும் நிறைய அமல்கள் செய்வதற்கு மிக ஏதுவாக இருக்கும். சென்ற மாதம் நமதூரில் 100 கல்யாணம் முடிந்து இருக்கிறது அத்தனை சமந்தி வீட்டியிளிருந்தும் சீர்,சீராட்டு என்று இந்த புனித மிகு ரமலானில் ஆரம்பித்து விடுவார்கள். அது மட்டுமல்ல ஒரு சிறுவனுக்கு பொண்ணு பேசியிருந்தாலும் அந்த பெண் வீட்டிலிருந்து முட்ட ரொட்டிம்,கோழி குருமா,கடற்பாசி அல்லது நோன்பு காஞ்சி,வடை,சமுசா,இறால் வைத்த வாடா,பீட்ருட் அல்வா என்றால்லாம் கொடுப்பார்கள். இந்த சீர்,சீராட்டுக்களை முற்றியிலும் ஒழிக்க வேண்டும். அப்பொழுது தான் பெண்கள் ரமலான் மாதத்தில் நல்ல அமல்கள் செய்ய முடியும்.

வரும் இந்த புனித மிக்க ரமலானை வீணடிக்காதீர்கள். எல்லாம் வல்ல இறைவன் ரமலான் மாதத்தில் நல்ல அமல்கள் செய்வதற்கு அருள் புரிவனாகவும் ஆமீன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ரமளானுக்கென்று முன்கூட்டியே ரெடியாவதிலும் அதற்கென்று ஆண்களை உசுப்பி விடுவதிலும் பெண்களின் பங்கே அதிகம் !

ரமளான் காலங்களில் வீடுசார்ந்த அனைத்து வேலைகளையும் முன்கூட்டியே திட்டமிட்டு, வழமையான பழக்க வழக்கங்களாகட்டும், வீட்டு பெரியவர்கள் செயல்படுத்தி வந்த தர்மம் என்ற ஈகைக்கான காரியங்களாகட்டும், ஃபித்ரு ஜகாத்திற்கான திட்டமிடல் இன்னும் பிற விடயங்களுக்கும் பெண்களே திட்டமிடலில் முன்னிருக்கின்றனர்.

ஆண்களைப் பொறுத்த மட்டில் வீட்டுத் தேவைகளுக்கும் அவர்களின் ரமளான் அன்றாட தேவைகளுக்கும் இன்னும் தர்மங்கள் செய்வதற்கும் உரிய நிதியாதாரங்களை ஒருங்கினைப்பதில் சிரத்தை எடுக்கின்றனர் முன்கூட்டியே, இருப்பினும் பெண்மக்களின் ஆலோசனைகளும் அங்கே இடம் பிடிக்கும்.

வணக்க வழிபாட்டிற்கு ஆண்களைப் பொருத்த மட்டில் பள்ளிவாயில்களிலும் வீடுகளிலும் ஈடுபட்டாலும் அவர்களாக அதற்கென தனித்து நின்று ஏற்பாடுகள் செய்வதில்லை, ஆனால் பெண்கள் வீட்டுப் பொறுப்பும், அதே நேரத்தில் ரமளான் காலங்களில் வணக்க வழிபாடுகளுக்குரிய ஏற்படுகளும், தனித்தோ அல்லது கூட்டாகவோ முன்கூட்டியே செய்ய வேண்டியிருக்கிறது.

எனக்கு ஒரு அவா ! அபு-ஆசிப் காக்கா, பதிவுகளின் கருத்தாடலில் கருத்துச் செறிவுடனும், மார்க்கம் சார்ந்த ஆழமான கருத்தாடல்கள் இடம் பெறுகின்றன, அவை போன்று தனிப் பதிவுகளாகவும் வெளிவந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் !

KALAM SHAICK ABDUL KADER said...

ரமளானுக்கென்று முன்கூட்டியே ரெடியாவதிலும் அதற்கென்று ஆண்களை உசுப்பி விடுவதிலும் பெண்களின் பங்கே அதிகம் !

1) மளிகை சாமான்கள் பட்டியலிட்டுச் சேகரித்தல்
2) ஜகாத் தொகைக்குக் கணக்குப் பார்க்கச் சொல்லி வற்புறுத்தல்/ அல்லது ஆலோசனைகள் வழங்கல்
3) எத்தனை முறை திருமறையை ஓதி முடித்தல் என்று முற்கூட்டியே திட்டமிடல்
4) அரிசி, மாவு போன்றவற்றை முற்கூட்டியே ஆயத்தமாக்கி வைத்தல்

இப்படி பலவேறு நடவடிக்கைகளில் ஆண்களை விட பெண்களே அதிகம் ஆர்வமுடன் ரமளானுக்கான ஏற்பாடுகளைச் செய்கின்றனர்.

Unknown said...

ரமலானுக்கு தயார் படுத்துவது நாங்கள் தான் என்பதை எந்த ஆம்புளைகளும் மறுக்க மாட்டார்கள்.

இந்த உண்மை இருக்க

இது பற்றி கருத்து தெரிவிக்க தொடர்ந்து இதில் கருத்திடும் ஆம்புளைகள் கருத்திட பின் வாங்குவது ஏன்?

KALAM SHAICK ABDUL KADER said...

மரியாதைக்குரிய சகோதரி, அதிரை அசீனா
அஸ்ஸலாமு அலைக்கும்,

தமியேன் உங்கள் கட்சிக்குத்தான் ஆதரவு அளித்துள்ளேன்;இன்னும் பலர் ஆதரவு தருவார்கள்;பொறுத்திருந்துப் பார்த்து விட்டு உங்களின் வினாக் கணைகளை விடுக்கலாம்.

sabeer.abushahruk said...

ரமலானில் தொழுகை, உபரி வணக்கங்கள் போன்ற அதிக அமல்கள் செய்பவர்கள் ஆண்களே.  இருப்பினும், அப்படி ஆண்கள் அமல் செய்ய வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருபவர்கள் பெண்களே.  நோன்பு பிடிக்க, துறக்க உணவு ஏற்பாடுகள், வீட்டின் நிர்வாகம், தூய்மை, குழந்தைளின் பராமரிப்பு என்று எல்லாவற்றையும் பெண்களே பார்த்துக்கொள்வதால் ஆண்கள் அமல்களில் ஈடுபடுகிறார்கள். 
எனவே, ஆண்களின் எல்லா அமல்களிலும் அதற்கு உதவும் பெண்களுக்கும் நன்மை உண்டாகும் என்றே நினைக்கிறேன்.
 
இருக்கட்டும், வளைகுடாவாசிகளுக்குத்தான் பகலில் சுட்டுப்பொசுக்கும் பகலில் வேலையும் பார்த்துக்கொண்டு இரவில் அமல்களும் செய்துகொண்டு, இதற்கிடையே உணவையும் தயார் செய்துகொண்டு  மிகவும் சிரமமாகிவிடுகிறது.
 
அதிலும் நோன்புக்கஞ்சி என்ற ஒன்றை தயார் செய்ய நான் படும் பாடு சொல்லி மாலாது.  எவ்வளவோ டிமோ பார்த்தும் சுடுகஞ்சி லெவலுக்குத்தான் எனக்கு வைக்கத் தெரியும்.  (காத கொடுங்க: இதுக்குத்தான் நான் நண்பர்களை நோன்பு திறக்கக் கூப்பிடுவதில்லை. வெளிலே ஹோட்டலுக்கு இட்டுன்டு போய்டுவேன்)

Ebrahim Ansari said...

//ரமலானுக்கு தயார் படுத்துவது நாங்கள் தான் என்பதை எந்த ஆம்புளைகளும் மறுக்க மாட்டார்கள்.//

சகோதரி! யாரும் மறுக்கவில்லை. எனக்கென்னவோ நீங்கள் பொறுக்கவில்லையோ எனத்தோன்றுகிறது. என் ஒட்டு உங்களுக்கே.

இந்த முறை விலைவாசி வானத்தில் பறந்து கொண்டு இருக்கிறது. இது இரு சாராரும் படும் கவலை. கடந்த வருடம் தக்காளி கிலோ பதினைந்து முதல் இருபது ரூபாய் வரை - இந்த வருடம் அறுபது ரூபாய் விற்கிறது. இஞ்சி கடந்த வருடம் கிலோ நாற்பது முதல் அறுபது வரை இன்று இருநூற்றி நாற்பது ரூபாய்.

இன்னும், நோன்புக் கஞ்சி காய்ச்சத் தேவையான அனைத்துப் பொருள்களும் விலை ஏறிவிட்டன. கடந்த வருடம் முறைவைத்து பள்ளிகளில் கஞ்சி காய்ச்சுபவர்கள், கொடுத்த அதே அளவுப் பணத்தை இந்த வருடமும் கொடுத்தால் அது பற்றாது. மும்மடங்கு கொடுக்க வேண்டும். ஆண்களின் கவலை இந்த அம்சமாக இருக்கலாம்.

தங்கம் விலை கூட இறங்குது. இஞ்சி விலை எகிறுது.

Yasir said...

ரமலானில் தொழுகை, உபரி வணக்கங்கள் போன்ற அதிக அமல்கள் செய்பவர்கள் ஆண்களே. இருப்பினும், அப்படி ஆண்கள் அமல் செய்ய வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருபவர்கள் பெண்களே. நோன்பு பிடிக்க, துறக்க உணவு ஏற்பாடுகள், வீட்டின் நிர்வாகம், தூய்மை, குழந்தைளின் பராமரிப்பு என்று எல்லாவற்றையும் பெண்களே பார்த்துக்கொள்வதால் ஆண்கள் அமல்களில் ஈடுபடுகிறார்கள்.
எனவே, ஆண்களின் எல்லா அமல்களிலும் அதற்கு உதவும் பெண்களுக்கும் நன்மை உண்டாகும் என்றே நினைக்கிறே

Yasir said...

//நோன்புக்கஞ்சி என்ற ஒன்றை தயார் செய்ய நான் படும் பாடு சொல்லி மாளாது./// கவிக்காக்கா அதைப்பற்றி ஒரு ஆக்கம் போடலாமே

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு