Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒருங்கிணைந்த மருத்துவ உதவி திட்டம்! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | July 15, 2013 | , ,

“மைக்ரோ காயல்” அமைப்பின் ரமளான் வேண்டுகோள்!! 

அன்பிற்கும், பாசத்திற்குரிய அதிரை சகோதரர்களுக்கு, “மைக்ரோ காயலின்" (ஒருங்கிணைந்த மருத்துவ உதவி திட்டம்) அமைப்பின் அஸ்ஸலாமு அலைக்கும்!! எங்களுடைய இதயம் கனிந்த புனித ரமழான் நல்வாழ்த்துக்கள்! 

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எதிர்பாராத மருத்துவ செலவினங்களினால் அல்லல்படும் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகளை மைக்ரோ காயல் (www.microkayal.com) அமைப்பு தன் இணைய தளம் மூலம் (Online Fundraising) சேகரித்து வழங்கி வருகின்றது.  அத்துடன் நம் மக்களிடையே "மாற்றுமுறை" மருத்துவம் (Alternative Medicine) பற்றிய தகவல் பரிமாற்றத்தை விழிப்புணர்வை இணைய தளங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றது.

நம் சேவைகளில் சில உங்கள் பார்வைக்கு :-
  • மைக்ரோகாயல் மூலம் செய்த மொத்த உதவி தொகை: ரூபாய் 9,04,300
  • பாலகர் முதல் முதியவர் வரை இத்திட்டத்தின் மூலம் சுமார் 34 பேர் பயனடைந்துள்ளனர்
  • கடந்த ரமழானில் எமர்ஜென்சி மற்றும் குழந்தை நல நிதிகள் (fund) மூலம் திரட்ட பட்ட தொகை: ரூபாய் 1,71,900. இதன் மூலம் 17 பேர் பயனடைந்துள்ளனர். 
  •  எலும்பு முறிவு, கான்செர் நோய், கிட்னி பாதிப்பு என பலதரப்பட்ட நோய்களுக்கான உதவிகள் வழங்கப்படுள்ளன
  • நோயால் அவதிபடும் நோயாளிகளை இவ்வுதவி தக்க நேரத்தில் முழுமையாக சென்றடைந்துள்ளது
  • நோயாளிகளின் மருத்துவ செலவை குறைப்பதற்காக, விலைக்குறைந்த அதேநேரத்தில் தரமான மருத்துவத்தை பெறுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றது
  • உதவி பெறுபவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களை பற்றி சுய விபரங்கள் மறைக்கப்பட்டு மருத்துவ உதவிகள் சேகரித்து வழங்கப்பட்டு வருகின்றது
  • வெளியே சொல்ல முடியாத கஷ்ட சூழ்நிலையில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரையும் இவ்வுதவி சென்றடைந்துள்ளது
அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் பேரருளாலும் உங்களை போன்ற நல்லுள்ளங்களின் பேராதரவாலும் மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கும் மைக்ரோ காயல் அமைப்பிற்கு சென்ற வருடம் போல் இவ்வருடமும் உங்களுடைய ஜகாத், சதக்கா நன்கொடைகளை நம்  அமைப்புக்கு அதிகம் அதிகமாக வழங்கி, இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் கிருபை செய்வானாக ஆமீன். 

இவ்வருடம் ஜகாத் மற்றும் சதக்கா மூலம் திரட்டப்படும் நிதிகளை, அவசரத்தேவை மற்றும் குழந்தை பள்ளிமாணவர்கள் மருத்துவ தேவைகளுக்காக ஒதுக்கி, அவர்களுக்கு 'இஸ்லாமிக் மெடிக்கல் கார்ட்' (அதாவது இந்த அடையாள அட்டையை கொண்டு குறிப்பிட்ட மருத்துவ மனைகளில் இலவச மருத்துவத்தை பெறுதல்) ஒன்றையும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

எல்லாம் வல்ல இறைவன் இப்புனித மிகு ரமளானில் உங்களுடைய அனைத்து துஆக்களையும் அங்கிகரித்து நோய் நோடியற்ற வாழ்வையும் வியாபாரத்தில்  அபிவிருத்தியையும் தருவானாக ஆமீன் !

தங்கள் ஜக்காத்/சதக்கா நன்கொடைகளை மைக்ரோ காயல் இணையதளம் http://microkayal.com/UserLogin.aspx?page=register என்ற இணைப்பைச் சொடுக்கி ரெஜிஸ்தர் செய்து PayPal மூலம் வழங்கலாம்  அல்லது கீழ்கண்ட வங்கிக் கணக்கு வழியாக செலுத்தலாம்.

வங்கி கணக்கு விபரம் :
வங்கி எண் : 615305021044
Acct Name: RIDA FOUNDATION
Bank: ICICI Kayal Patnam Branch
Wasalam.

முஹம்மத் முஹிய்யதீன்,
ஒருங்கிணைப்பாளர், மைக்ரோகாயல்
www.microkayal.com 

பரிந்துரை : அதிரைச் சகோதரர்கள்

இவ்வருடம் கடந்த ஃபிப்ரவரி மாதம் 4ம் தேதி பதிக்கப்பட்ட பதிவினையும் இங்கே மீள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது

இறைவன் அருளால் இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ள மைக்ரோகாயல் அமைப்பை பற்றி அதிரை சகோதரர்களிடம் அறிமுக படுத்துவதில் ஆனந்தமடைகின்றோம். 

வசதி படைத்தவர்களையே விழிப் பிதுங்க வைக்கும் இன்றைய மருத்துவ செலவுகளினால், முறையான மருத்துவ உதவி உதவிகள் ஆரம்ப சிகிச்சையிலேயே தங்களுக்கு கிட்டாததினால் முற்றிவரும் பிணியுடன் குடும்பம் நடத்தி வரும்  ஏழை எளியவர்களின் நிலை நாமறிந்ததே.

‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்ற காரணியை மூலதரமாக வைத்து பொருளாதாரத்தில் அல்லல்படும் நலிவுற்றவர்களின் துயர் துடைப்பதற்க்காக, இணைய தளம் (Online Fundraising) மூலம் மருத்துவ உதவிகளை சேகரித்து வழங்குவதற்காக தன்னார்வமிக்க சில சகோதரர்களால் கடந்த வருடம் மைக்ரோகாயல் அமைப்பு தொடங்கப்பட்டது, 

உதவி கோருபவர்களின் நோய் மற்றும் ஏழ்மை நிலை உறுதி செய்யப்பட்ட பின்னர், அவர்களுடைய விண்ணப்பங்கள் (சுய விபரங்கள் மறைக்கப்பட்டு) இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, உறுப்பினர்கள் பார்வைக்கு வைக்க படுகின்றது. பின்னர், அனைவருக்கும் ஈமெயில் அலெர்ட்-ம் அனுப்ப படுகின்றது. அவ்விண்ணப்பங்களுக்கு உறுப்பினர்கள் இணைய தளம் வாயிலாகவே (PayPal / Bank Transfer) உதவி செய்யும் வசதியும் ஏற்படுத்த பட்டுள்ளது.  

எலும்பு முறிவு, கான்செர் நோய், கிட்னி பாதிப்பு என பலதரப்பட்ட நோய்களின் சிகிச்சைகளுக்காக இவ்வமைப்பின் இணையதளம் வாயிலாக ரூபாய் 5,05,120 திரட்டப்பட்டு, பாலகர் முதல் முதியவர் வரை என இருபதுக்கும் மேற்பட்ட நோயாளிகள் பலனடைந்துள்ளனர். அது மட்டுமன்றி எமர்ஜென்சி மற்றும் குழந்தை / பள்ளி மாணாக்கர்களுக்கென தனி நலநிதிகள் (fund) உருவாக்கப்பட்டு அதன் மூலம் ரூபாய் 99,900 திரட்டபட்டு அவ்வகை காரணங்களுக்கு பயன்படுத்தபட்டு வருகின்றது. 


நம் சகோதரர்களை  ஊக்குவிப்பதற்காக  கீழே உள்ள  இரு திட்டங் களையும்  மைக்ரோகாயல் இணையதளம் இரண்டாம் வருடத்தில் அறிமுக படுத்தியுள்ளது.    


மைக்ரோகாயலில் புதிதாக இணையும் உறுப்பினர்களுக்கு ரூபாய் 500 இலவசமாக  மைக்ரோகாயல் இணையதளம் வழங்குகின்றது . இப்பணம் புதிய உறுப்பினர்களின் மைக்ரோகாயல் அக்கௌன்டில் வரவு (Credit ) வைக்கப்பட்டு, அதனை அவ்உறுப்பினர்கள்  தேவையுடைய விண்ணபங்களுக்கு முதலில் பயன்படுத்திக் கொள்ளலாம். 



மைக்ரோகாயலில்  உள்ள இரண்டு நிதிகளுக்கு (அதாவது EMERGENCY  அல்லது  CHILD CARE FUND) உதவும் நபர்களின் பங்கிற்கு ஏற்ப, அதே மடங்கு தொகையை (Matching Funds)  மைக்ரோகாயல் இணையதளமும் அந்த FUND  களுக்கு வழங்குகின்றது. உதாரணத்திற்கு ஒருவர்  இதன் மூலம் ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு செய்தால் அதே தொகை (ஆயிரம் ரூபாய்) மைக்ரோகாயல் இணையதளம் அன்பளிப்பு செய்யும். இதன் மூலம் ஒருவர் வழங்கும் அன்பளிப்பு / உதவி இரட்டிப்படைகின்றது.


மறுமைக்கு பயன்தரும் மூன்று விடயங்களில் முதன்மையானது, பிறருக்கு செய்யும் நிலையான தர்மம். இந்த நற்சேவையில் நல்லுள்ளம் கொண்ட சகோதரர்கள்  உறுப்பினராக இணைந்து, தன்னால் இயன்ற உதவியை (அது இருநூறோ அல்லது ஐநூறோ) ஏழை எளியவர்களுக்கு  உதவி வருகின்றார்கள். அது மற்றுமன்றி  மாதந்தோரும் சந்தாக்களை மைக்ரோகாயல் அமைப்பிற்கு கொடுத்தும் வருகின்றார்கள். இது போன்ற தொடர்   ஆதரவு & உதவிகளை  என்றும் வாரி வழங்கிட நம் சகோதரர்களை மைக்ரோ காயல் இணையதளம் அன்புடன் அழைக்கின்றது

மேலதிக விபரம் வேண்டுபவர்கள் மைக்ரோகாயல் அமைப் பை ஈமெயில் மூலமாக அணுகலாம்.

தகவல் : சாளை முஹம்மத் முஹியத்தீன், ஒருகினைப்பாளர் மைக்ரோ காயல் அமைப்பு - www.microkayal.com 

பரிந்துரை : A.R.அப்துல் லத்தீஃப்

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு