Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இப்போது எல்லோரும் எழுதலாம்... 68

ZAKIR HUSSAIN | July 28, 2013 | , , , , ,

வலைத்தளங்களில் எழுதுவது என்பது எல்லோராலும் முடியும் என்பதை தமிழ்கூறும் நல்லுலகுக்கு சொல்லவே இந்த நோக்கம். 

இது 70 களின் நடுவருடங்களாய் இருப்பதால் கொஞ்சம் நம் ஊரை பற்றி சொல்லும்போது கூடவே நிலக்கரி எல்.ஜி எஞ்சின், தலை நரைக்காத நம் ஆசிரியர்கள், டெலிவிசன் இல்லாத வீடுகள், ரேடியோவில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தின் தமிழ்ச்சேவை 2. , பைப் வசதியில்லாததால் ஒரளவு சுத்தமான தெருக்கள். ஆட்டோ / கேபில் டி வி /  இல்லாத நம் ஊரை கற்பனையில் காண்க:

Riaz Ahamed
உன் கதை கிடைத்து விட்டால் வெளியிட்டு விடலாம் என்று அன்புடன் சொன்ன எங்கள் ரியாஸ். டேய் உன் கையெழுத்தை பார்த்தால் திட்டுவாங்க நானே உன் எழுத்தை பிரதி எடுக்கிறேன் என்று சொன்ன எங்கள் ஹாஜா இஸ்மாயில்.

உன் எழுத்தில் ஆங்கிலம் அதிகம் தெரிகிறது. தமிழில் எழுதித் தொலைடா என்று திட்டும் எங்கள் பாஸ் சபீர். எங்கள் பத்திரிக்கை வெளியிட முழுப் பொறுப்பும் ரியாஸ்தான் எடுத்துக் கொள்வான். சின்ன வயதிலிருந்தே ரியாஸிடம் பொறுப்பை   ஒப்படைத்து விட்டு ஊர்சுற்றுவதே எங்கள் வேலையாக இருந்தது. 

இப்படித்தான் தேன் துளி என்ற கையெழுத்து பத்திரிக்கை வெளியிட்டோம். [இதில் கையெழுத்தில் பிரதிகள் வேறு-நோ போட்டோஸ்டேட்]

எப்படியோ ஒருத்தனை ஒருத்தன் திட்டிக் கொண்டு பத்திரிகை வெளியிடுவதில் கண்ணும் கருத்துமாக இருப்போம். வரும் வருமானத்தில் பரோட்டாவும் டீயும் குடிக்கும் சந்தோசம் [பந்து விளையாட்டுக்குப் பிறகு] ஏதோ ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடும் சந்தோசம் இருக்கும்.

Sabeer Ahamed
பிறகு சரித்திர நாவல் எழுத எங்கள் அஸ்லம் மாமா வர இன்னும் களை கட்டியது. பிறகு இக்பால் [இக்பால் சாலிஹ் ] வெளியிட்ட தேடல் கவிதையுடனும், புதிய பாதையில் பயணித்தது. "என் ஆக்கத்தை அப்படியே போட்டு 'எடிட்' பன்றதுக்கு எனக்கு நீ வேலையே கொடுக்கல" என்று சொன்னான். பிறகு என் தம்பி நசீர் ஹுசேன் வெளியிட்ட நியூ இந்தியாவில் எழுதி ஸ்கூலில் ஆசிரியர்களிடம் அட்வைஸ் வாங்கியது எல்லாம் அப்படியே காற்றோடு கலந்து மறைந்து விட்டது. நியூ இந்தியாவில் என் நண்பன் சரபுதீன் நூஹ் உடைய தம்பி அஸ்ரப் பங்களிப்பும்  இருந்தது.   

Haja Ismail
இப்போது அந்த வேலைகள் ரியாஸ் இறைமார்க்கம்  என்ற வலைதளம் தொடங்கவும், ஹாஜா இஸ்மாயில் ' ஹாஜாவின் கைவண்ணம்" என்ற வலைத்தளம் தொடங்கவும் உதவியது என நினைக்கிறேன். ஹாஜா கைவண்ணம் என்று எழுதினாலும் பிளாக் இங்க்-தான் அதிகம் உபயோகிப்பான்.  நாங்கள் எல்லோரும் சேர்ந்து "தேன் துளி" என்று வலைத்தளம் உருவாக்கினோம், எங்களுக்கே பாஸ்வேர்ட் மறந்து போர அளவுக்கு நாங்கள் இப்போ அதை கண்டுக்கிறது இல்லே.

பின்னாளில் படிக்கும் பழக்கத்தை சின்ன வயதில் ஏற்படுத்திக் கொண்டதும், தொடர்ந்து ஏதாவது படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் சமயங்களில் எழுத உதவியாக இருக்கிறது.

நான் சமீப காலமாக சிலரின் கருத்துக்களை பார்த்து வருகிறேன். அவர்கள் கருத்துப் பகுதியுடன் நிற்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவர்களும் எழுதுவதற்கு நிறைய விசயம் வைத்து இருக்கிறார்கள். அவர்களில் என் கண்ணுக்கு பட்ட ஆட்கள். நண்பர் அப்துல்காதர், ZAEISA ,

எம். ஹெச். ஜே.,  மற்றும் கிரவுன் இருவரும் எழுதினாலும் எப்போதாவது வரும் பள்ளி மாணவர்கள் போல் இல்லாமல் ஆக்கங்கள் தருவதிலும் 'அடிக்கடி" இருக்க வேண்டுவது அவர்களின் திறமையே.

அதிரை மன்சூர் [நான் படிக்கும்போது படித்த நண்பர்] இவரிடமும் நிறைய விசயம் இருக்கிறது. சரியான ட்ராக்கில் இவரது எழுத்து தொடர்ந்து பதியப்படுமானால் ஒரு சிறந்த பங்களிப்பாளர் கிடைத்துவிடும்.

அடுத்து நமக்கு கிடைத்த பொக்கிஷம் எங்கள் மரியாதைக்குறிய எஸ். முஹம்மது ஃபாரூக் மாமா அவர்கள்

நமது வயது அவர்களின் அனுபவம்..இதைவிட எதுவும் எழுதத் தேவையில்லை. மலேசியாவில் அவர்கள் சொந்தமாக நடத்தியதே ஒரு பப்ளிசிங் கம்பெனி.

தனியாக ப்ளாக் வைத்திருப்பவர்களின் ஆக்கமும் நாம் சமயங்களில் அவர்களின் அனுமதியோடு வெளியிடலாம். எனக்கு தெரிந்து அஹமது இர்ஷாத், முஜீப், இவர்களின் ஆக்கங்களை நான் எப்போதும் படித்து வருகிறேன். இருவரிடமும் நல்ல ஜர்னலிசம் சென்ஸ் அதிகம் இருக்கிறது.

சரி... ஏன் எல்லோரையும் எழுதச் சொல்கிறேன். எழுத்து ஒரு வெளிப்படுத்தும் கலை. இதற்கு நீங்கள் வில்லியம் வேர்ட்ஸ் வொர்த் , கீட்ஸ், கம்ப ராமாயணம், மணிமேகலை , வலையாபதி, குண்டல கேசி... எந்த மண்ணும் படித்திருக்க தேவையில்லை. சொந்தமாக தபால் எழுதத் தெரிந்தாலே போதுமானது.  4 பேர் 30 வயதைத்தொட்டவர்கள் எழுதினால் ஏறக்குறைய 120 வருடத்தின் நிகழ்வுகளை எழுதப்போகிறீர்கள். இதை விட என்ன பெரிய விசயம் இருக்கப்போகிறது.

பொதுவாகவே எழுதுபவர்கள் அதிகம் வாசிப்பவர்களாக இருப்பது நல்லது. ஏனெனில் எப்படி மற்றவர்கள் எழுதுகிறார்கள் என்ற ஒரு அவதானம் கிடைக்க வாசிப்பே உதவி செய்யும்.

இப்போது சில தமிழ் வலைத்தளங்களை பார்த்தால் எந்த அளவு மெச்சூரிட்டி இல்லாமல் எழுதுகிறார்கள் என்பதும் புரியும். சிலர் ஜாதிச்சண்டை, ஒருத்தனை பத்து பேர் திட்டித்தீர்ப்பது எல்லாம் பார்க்கும்போது இவர்கள் பள்ளிக்கூடத்தில் படித்தது போல் தெரியவில்லை, ஏதோ பேட்டை ரவுடிகளின் "ரோட்டோரக்கல்வி" கற்றவர்கள் என்றுதான் எடுத்து கொள்ள முடியும்.

முக்கியமாக சினிமாவை பற்றி எழுதும் வலைத்தளங்களில் "பேட்டைத்தமிழ்" பின்னி விளையாடும். சில கவிதை வலைத்தளங்களில் சில விவாதங்கள் அழகாய் இருந்தாலும் ஒரு கவிஞரை மனம் திறந்து பாராட்டும் மற்றொரு கவிஞர் என்பது அறிதாகிவிட்டது. ஒரு கவிஞர் 'நிலா' என்று எழுதிவிட்டால் 'என்னுடைய நிலாவை காப்பி அடிச்சிட்டான்யா" என்று கமென்ட் போட சில கவிஞர்கள் இருக்கிறார்கள்.
 
முன்பு பள்ளியில் படிக்கும்போது தமிழ் - 2 பரீட்சை எழுதும் தெனாவெட்டு ஆர்ட்டிக்கிள் எழுதும்போது ரொம்பவும் உதவுகிறது.

வலைத்தளம் வைத்திருப்பவர்கள் சிறுகதைகளை வெளியிட யோசிக்கலாம். சமயங்களில் கதைகளின் மூலமும் ஒரு நல்ல கருத்தை சொல்ல முடியும்.

Shahul Hameed
உலகம் நவீனமயமாதலில் விவசாயத்தை இழந்து வரும் அபாய மணியை ஆனந்த விகடன் ஒரு 20 வருடத்துக்கு முன் ஒரு கதைப்போட்டியின் மூலம் உலகத்துக்கு சொன்னது [முதல் பரிசும் அந்த கதைக்குத்தான்]. கதையை கதையாக படித்ததால் இன்றைக்கு ஒரு படி அரிசிக்கு இவ்வளவு பெரிய விலை நாம் கொடுக்கிறோம்.

சம்பவங்களை விவரிக்கு முன் இப்போதைய நடைமுறையுடன் ஒன்றியிருப்பது நன்று. நடைமுறைக்கு ஒவ்வாத சென்டன்ஸை யாரும் கண்டு கொள்வதில்லை.

ஒரு இளைஞனை அறிமுகப்படுத்தும்போது ' கல்லூரி மாணவன் ராமு ஒரு "கட்டிளங்காளை" என்றெல்லாம் எழுதாதீர்கள்,  "எங்கே கழுத்திலெ கறுப்பு கயிற்றில் கட்டிய சங்கை காணவில்லை?'- என்று கமெண்ட் போட நிறைய பேர் இருக்கிறார்கள்.

அதே போல் 'காலம் உருண்டோடியது....' என்று எழுதினால் ' அப்படி எப்படி கரெக்டா சொல்றீங்க காலம் 'உருண்டையா" தான் இருந்ததுன்னு-  ஏன் அது ஹெக்ஷாகன் ஆக இருக்ககூடாது" என கேள்வி வரும்.

முதலில் எழுத நம்மைச் சுற்றி நடக்கும் இன்டர்ஸ்டிங் ஆன விசயங்களை எழுதுங்கள். ஒரு சின்ன விசயத்தை எப்படி ஒரு ஆர்டிக்கிள் ஆக எழுத முடியும் என்று யோசிக்க வேண்டாம். பல சின்ன விசயங்களை எழுதலாம் அல்லவா? . பல விசயங்கள் ஒரு ஆர்டிக்கிள் ஆக எழுதினாலும் வெளியிடுவோம். இப்போதைக்கு எழுதுவதற்கு பல விசயங்கள் இருக்கிறது.

இவ்வளவு பேர் வெளிநாட்டில் இருக்கிறீர்கள், நீங்கள் பல போராட்டங்களுக்கு இடையேதான் விசா கிடைத்து போயிருக்க வேண்டும். எப்படி நீங்கள் விடாமல் முன்னேறத் துடித்தீர்கள் என்று எழுதலாம். எனக்கு தெரிந்து சபீர் பம்பாயில் ஏறக்குறைய ஒரு தந்தூரி அடுப்பு மாதிரி புழுங்கும் ஒரு ரூமில் பல மாதம் தங்கியிருந்து, ஒரு டாய்லெட்டுக்கு காலையில் 20 பேருடன் க்யூவில் நின்று, பழக்கமில்லாத ஊரில் பணப்புழக்கம் இல்லாத சூழலில்தான் சவூதிக்கு முதலில் சென்றான். இதுபோல் எத்தனையோ பேரின் அனுபவம் இப்போது கேட்ஜெட்டில் கேம் விளையாடும் இளைஞி / இளைஞர்களுக்கு ஒரு முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை அறியத்தரலாம்.  ஊரில் நடந்த பல விசயங்கள் இப்போதைக்கு உள்ள சூழ்நிலையில் படிப்பை தரலாம்.
 
உங்கள் மனதை பாதித்த நெகிழ்ச்சியான விசயத்தை எழுதலாம். இப்படி நிறைய விசயங்கள் இருக்கிறது எழுத.

கூடிய விரைவில் எங்கள் மரியாதைக்குறிய எஸ்.முஹம்மது ஃபாரூக் மாமா தனது அனுபங்களை எழுத இருக்கிறார்கள். அவர்களின் ஆக்கத்திற்கு வரும் கமென்ட்ஸ் நிச்சயம் பெரியவர்கள் சொல்வதை கேட்கும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தும்.

Iqbal Salih
இந்த ஆக்கத்தில் என் நண்பர்களை படத்துடன் உங்களுக்கு அறிமுகப் படுத்தியதற்கு நியாயமான காரணம் இருக்கிறது.

காலம் அதன் வழக்கத்தோடு ஓடிக் கொண்டிருந்தாலும் எங்களுக்குள் நாங்கள் சேமித்து வைத்த 'சிறுவர்களை' நாங்கள் இப்போது எங்களை சுற்றி வளர்ந்திருக்கும் பொறுப்புகளுக்கு பலி கொடுக்கவில்லை.

சாகுல் சின்ன வயதில் உருவாக்கிக் கொண்ட ஃபோட்டோகிராஃபி தான் இன்று அவர் எழுத காரணம். அதுபோல் எங்கள் ஹாஜா இஸ்மாயிலின் காமிக்ஸ் ஆர்ட் திறமை அவனை ஒரு மிகப்பெரிய வாசக வட்டத்தை உருவாக்க உதிவியிருக்கிறது. சபீரின் கவிதைகள் பாராட்டப்பட காரணம் அவன் வாழ்வில் சந்தித்த நிஜங்கள் அவனுக்கு கற்றுத்தந்த "ஞானிகளின் கல்வி".

என் நண்பன் இக்பால் சாலிஹ் உடைய மார்க்க அறிவின் விசாலம் அவன் தனது அத்தனை கஷ்டங்களிலும் கொஞ்சம் கூட அலுத்துக்கொள்ளாமல் மார்க்கத்தின் மீது அவன் செலுத்திய அசைக்க முடியாத ஈடுபாடு, அல்லது மார்க்கத்தின் மீது 'கல்வித்தாகம்"

உங்களுக்கு உள்ளேயும் பல திறமைகள் இருக்கும், அதை எழுத்தில் கொண்டு வர வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.

ZAKIR HUSSAIN

68 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்னொட நிலாவைத் திருட்டான்னு புலம்புறது ஒருபக்கம் இருக்கட்டும்....

என்னோட மைண்ட்ல யோசிச்சு வைச்சத திருடிட்டான்னு புதுப் புலம்பலெல்லாம்ல வரும்... அதெப்படி சமாளிக்கிறது !

அனுபவங்களைச் சொல்லித் தரும் அற்புதமான நண்பர்களின் முன்னுதாரனம் இந்த வரவேற்பு பதிவு !

வாருங்கள் எழுதலாம், தண்ணீரில் எழுதிப் பழக இயலாது தன்னம்பிக்கை ஊட்டுபவர்களோடு கலந்திருந்து எழுதப் பழகினால் எட்டுதிசைக்கும் எட்டும் !

அசத்தல் காக்காவின் அசத்தலான, எழுத அழைக்கும் வரவேற்புப் பதிவு !

sabeer.abushahruk said...

ஜாகிரு,

என்னடா திடீர்னு கருப்பு வெள்ளைல?

அது யாருடா? குட்டிக்குட்டி கண்களுக்குள் கோடிகோடி கனவுகளோடு? பார்க்க ரொம்ப ஸ்மார்ட்டா... க்யூட்டா...கலக்கலா... ( காதரு, செருப்ப கீழே போடு / ரியாஸு, மொறைக்காதே, ஹமீது, எங்கே கெளம்பிட்டீங்க வெய்ட் ப்ளீஸ்)

நானா அது? ஹய்யோ ஹய்யோ...

sabeer.abushahruk said...

கொசுவர்த்தியை கண்ணுக்கு முன் சுத்த்விட்டுட்டியே நண்பா.

ஒரு தூக்கமிழந்த இரவின் அவஸ்தைகளின் தீர்வுதான் "தேன்துளி". நம் கனவுப் பத்திரிகை! அந்தக் கனவு கைகூடிய தினங்களே நம் வாழ்க்கையின் வசந்த தினங்கள். ஒரு அடையாளத்துக்குச் சொல்ல வேண்டுமானால் (ரியா, கோபிச்சுக்காதே) அப்போவெல்லாம் ரியாஸுக்கு மண்டைல நிறைய கேசம் இருந்த காலம். சீரியல் ஹீரோ மாதிரி இரூப்பான். நம் எல்லோரிடமும் ஓர் உத்வேகம் இருந்தது. பத்திரகைத் துரையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்னும் வெறியே இருந்தது.

தேன்துளியில் ஹாஜா வரையும் படங்களுக்கு ரசிகர்கள் இருந்தார்கள். அவ்வழியே இன்று அவன் காமிக்ஸில் ஒரு ஜீனியஸ் லெவலுக்குப் பேசப்படுகிறான்.

ரியாஸ் கதை எழுதுவான். நானும் கதை எழுதுவேன். தமிழ்வாணன், பி.டி.சாமி போன்றோரைப் படித்து ஒரே மர்மமாகத்தான் எழுதுவேன். கல்லூரி காலத்தில்தான் கவிதை எழுதும் நோய் தொற்றியது. நம் புதுக்கல்லூரி அறையில் நான் எழுதி வைத்திருந்த கவிதை நினைவிருக்கா உனக்கு:

I feel you
in breath
will feel you
till my death!

நீ தேன்துளியில் பயணக்கட்டுரை எழுதியது நினைவிருக்கு. அப்போதெல்லாம் மலேசியாவுக்க் அடிக்கடி போய் வந்தது நீதான். ஆச்சரியமாக் இருக்கும் மலேசியா நீ விவரிக்க விவரிக்க. உன் ஹேஸ்யமான எழுத்துக்காக உன்னை "வசந்த்" என்று அழைத்தது. ஹ்ம்ம்ம்...

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்

ஜாஹிர் ரியலி யு ஆ ர் கிரேட்

மீண்டும் மலர்ந்த நினைவுகள் சோ எக்ஸலன்ட்

அப்பொழுதே பத்திரிக்கைத் துறையில் ஆர்வமிக்க வர்களாக திகழ்ந்ததையெல்லாம் ஒன்று விடாமல் சும்மா புட்டு புட்டு வைத்துவிட்டாய் எவ்வளவு இன்பமான காலங்கள் இப்பொழுது கை நிறைய பனமிருந்தும் செலவழிக்க ஒரு கட்டுப்பாடு இல்லமல் இருந்தும் கையில் காசில்லாத அன்றைய இன்பம் இன்று கிடைக்குமா?
இப்படி பட்ட வாழ்க்கையெல்லாம் இந்த காலத்தில் உள்ள இளைஞர்களுக்கு கனவிலும் கிடைக்க்காது
சோ எக்ஸலன்ட்.
ஒகே என்னை பற்றிய தன்னுடைய நம்பிக்கைகளுக்கு மிகவும் நன்றி நீ சொல்வது பொன்று நானும் எதாவது எழுதி என்னுடைய பங்களிப்பையும் தரலாம் என்று நினைத்தால் நேரமின்மையின் காரணமாக ஏற்கனவே நண்பர் இக்பால் சாலிஹும் நீ சொன்ன வார்த்தையையே என்னிடம் நேரடியாகவே கூறினார் உன் இப்போது எல்லொரும் எழுதலாம் என்று என்னை போன்றோருக்கு டானிக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைத்தால் என்னுடைய பங்களிப்பும் வரும்

மேலும் நீ வெளியிட்டிருக்கும் நிழல் படங்கள் மிகவு அருமை ஓல்டு ஈஸ் கோல்டு

இதிலே நீயு சபீரும் வெரி ஸ்மார்ட் அந்த காலமுதல்

ரியாசை கண்மாயா காணோம் நல்ல நன்பன்
ஜாஹிர் ரியாசை பற்றியும் ஹாஜா இஸ்மாயில் பற்றியும் கொஞ்சம் தகவல் தரவும்

ஹாஜா இஸ்மாயிலின் போட்டோ எம் ஆர் ராதாவின் பேரப்பில்லை மாதிரி இருக்கூன் அருமை பாரூக் மாமாவின் நிழல் படம் ஒன்று இதில் போட்டிருக்கலாம்

உன் பாரூக் மாமாவின் எழுத்துக்களில் இளமை மிளிர்வதால் நான் உன் மாமாவை என்னில் சிறியவனாக நினைத்துவிட்டேன்
அதை கண்ணியகிகு இபுராஹீம் அன்சாரி அவர்கள் தெளிவு படுத்தி என் கண்களை திறந்துவிட்டார்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கேமாரவின் குறுந்தொடர் பகுதியிலே பின்னூட்டமிட்டிருந்தேன் அவர்களுக்கு தென் பட்டதா என்பது தெரியவில்லை

///அன்பின் தம்பி மன்சூர் அவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம்.

இந்தத் தளத்தில் அவ்வப்போது ஒரு இளைஞர் போல வந்து கருத்திடும் எஸ். முகமது பாரூக் அவர்கள் இந்தப் பதிவைத்தந்து இருக்கிற சாகுல் ஹமீது அவர்களின் வாப்பா ஆவார்கள். எனக்கு மச்சான்.
ஜாகீருக்கு பாசமுள்ள மாமா .

சி. எம். பி. லைனில் குடி இருந்து வருகிறார்கள். சின்ன வயது முதல் மலேசியாவில் தொழில் செய்துவிட்டு ஒய்வு பெற்று கோலூன்றி நடந்து வருகிறார்கள். அதிரை நிருபருக்காக இப்போது எழுதுகோலூன்றி தனது அனுபவங்களை அற்புதமாக வடித்த ஒரு தொடரின் அறிவிப்பு வர இருக்கிறது. அவர்களின் கருத்துக்களில் இளமை பளிச்சிடுவதால் அப்படி எண்ணி விடக் கூடாது என்பதற்காகவே இந்த அறிமுகம் தங்களுக்கு

சபீர் சொன்னது போன்று சகோதரர் சாஹுலும் பரிட்ச்யமானவர்தான். இதில் உள்ள போட்டோவைப்பாத்து தெரிந்து கொன்டேன்.

adiraimansoor said...

கண்ணியமிகு இப்ராஹீம் அன்சாரி கக்கா என்று மேலே உள்ள என்னுடைய பின்னுட்டத்தில் திருத்தி படித்துக்கொள்ளவும்

Ebrahim Ansari said...

அன்புத் தம்பிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

தம்பி ஜாகீரின் இந்தப் பதிவு ஒன்றை உரக்கச்சொல்கிறது. இன்று புகழை அறுவடை செய்து கொண்டிருக்கும் சபீர் அவர்களும், சா. ஹமீதும், ரியாஸ் அவர்களும், ஹாஜா அவர்களும், ஜாகீரும் கூட அன்றே இதற்காக விதைத்திருக்கிறார்கள்; உழைத்து இருக்கிறார்கள். இக்பால் அன்றே புடம் போடப் பட்டு இருக்கிறார்.

வெட்டிக் கதை, வீண்வம்பு, வெட்டிக்குளம், புளிய மரம் ,சுமைதாங்கி, ராஜாமடம் ஏரி , பட்டுக்கோட்டை தியேட்டர்கள் , தோப்பில் பாட்டி வீட்டுப் பையனோடு கோழி புரட்டிய கூட்டாஞ்சோறு என்றெல்லாம் சுற்றாமல் தங்களின் இலக்கியப் பசிக்கு விடை தேடி இருக்கிறார்கள் என்பதை அறியும்போது மகிழ்ச்சி மகிழ்ச்சி மட்டற்ற மகிழ்ச்சி.

தேன் துளிகளில் ஒரு துளி கூட நம் நாவில் படவில்லையே என்ற ஏக்கம் இப்போது ஏற்படுகிறது.

தம்பி ஜாகிர் பட்டியல் இட்டுக் காட்டி இருக்கிற அபூ ஆசிப், மன்சூர் போன்றவர்கள் பதிவுகளைத் தருவது பற்றி சீரியஸாக சிந்திக்க வேண்டும். தம்பி அபூ இப்ராஹீம் அவர்கள் இதற்காக ஒரு நெறியாள்கையை மேற்கொள்ள வேண்டும்.

ஜாகீர் தந்துள்ள பூஸ்ட் உங்களின் எதிர்கால எழுத்தின் எனர்ஜியின் சீக்ரெட் ஆக விளங்கட்டும் . வரவேற்கிறோம்.

தம்பி மன்சூர்: உங்கள் பின்னூட்டம் அந்தப் பதிவிலேயே நான் படித்தேன்.

இதில் பதியப் பட்டுள்ள இளமைக்கால புகைப் படங்களுக்கிடையில் போட்டி வைத்தால் முதல் பரிசு ஜாகீருக்கு.

அதிரை முஜீப் said...

சகோதரர் ஜாஹிர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். தங்களின் ஆக்கத்தில் என்னையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி..!

தாங்கள் என் ஆக்கங்களை தவறாது படித்து வருவதை தாங்கள் என் இனையதில் பதியும் கருத்தின் மூலம் அறிவேன்.

மேலும் தங்களின் கட்டுரையையும் நான் தவராது அதிரை நிருபரில் படிக்க தவறியது இல்லை. நச் என்று ஒரு கட்டுரையை எழுதி அதில் குறும்புத்தனத்துடன் படிப்பினை தரும் ஒரு செய்தியை தங்களின் பதிவில் நான் கான தவறியதில்லை. வாழ்த்துக்கள்.

Anonymous said...

அன்பு மருமகன் ஜாகிருக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்! எழுதுவது ஒரு கலை. அதற்கு பள்ளிப் படிப்போது பல எழுத்தாளர்களின் ஆக்கத்தையும் படிக்க வேண்டும். துரதிர்ஸ்டவசமாக இஸ்லாமியர்ளிடம் படிக்கும் பழக்கம் கொஞ்சமும் இல்லை என்பதோடு மட்டுமல்ல படிப்பவரையும் கிண்டல் செய்யும் பழக்கமும் நிறையவே உண்டு. தமிழ் முஸ்லிம்களை பொறுத்தவரை நாடறிந்த எழுத்தாளர்களாக இருப்பவர்கள் மிகச்சிலரே.
முன்னாள் அதிபர் மாண்புமிகு A.P.J.அப்துல்காலம் அவர்கள் மற்றும் கவிஞர் க.முஷரிபு, J.M.சாலி [1975களில் ஆனந்த விகடன் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர்] இவரின் சகோதரர் J.M.ஹுசைன் 60-ஆண்டுகளில் [மலேயாவில் பினாங்கில் வசித்தவர்], கவிக்கோ அப்துல் ரஹ்மான், மு.மேத்தா கீரனூர், ஜாஹிர் போன்றவர்களை குறிப்பிடலாம் [இதில் ஒன்று இரண்டு பெயர் விட்டு போய் இருக்கலாம்} நம் இஸ்லாமியர்கள் மறந்த ஒரு இஸ்லாமியப் புலவர் ஒருவர் இருந்தார் அவர்தான் 'சீறப்புராணம்' தந்த உமறுப் புலவர். இவரை ஏனோ தமிழ் முஸ்லிம்கள் குப்பையில் போட்டு விட்டார்கள்! இளய சமுதாயத்தை எழுதத் தூண்டும் உன் கட்டுரை இன்று காலை அஞ்சரை மணிக்கு படித்தபின் 5.35am எழுதத் தொடங்கியது 10.00am. முடிவு பெற்றது. இந்த Computerயுகத்துக்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஒரு தமிழ் பழமொழி உண்டு அது "சுள்ளி பொறுக்கதான் நேரம் இருந்தது, குளிர்காய நேரம் இல்லை". இதன் பொருளை நீயே தெரிந்துகொள். இல்லை என்றால் கேள் சொல்கிறேன். என் மீது உன் பாசத்திற்கும் மரியாதைக்கும் நன்றியுடையவனாக இருக்கிறேன் மீண்டும்சந்திப்போம்.

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா ஃபோட்டோவில் (பாஸ்போர்ட் சைஸ்) காது அருகில் ரோசாப்பு இருக்கிறமாதிரி தெரியுதே ! :)

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Jakir Hussain,

Narration about your and your friends' young times passions for expression through arts and writing is interesting to go through and surely kindles enthusiasm.

All of you have identified your passions very earlier days, and have been pursuing till date. MashaAllah.

I feel and identify your young time pictures seems little bit familiar faces even though all of you are seniors. Brother Mr. Sabeer AbuShahruk is looking very nice in casual picture without any touch ups.

Thanks for the article.

Jazakkallah khairan,

B. Ahamed Ameen from Dubai,
wwww.dubaibuyer.blogspot.com.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். எழுதுவது ஒரு கலை! அது பலபேர் எழுதுகிறேன் என்கிறபெயரில் செய்வது கொலை!(டீ.ராஜெந்தர் என நினைக்கவேண்டாம்)ஆனால் உங்களுக்கு எழுதுவது நண்பர்களுடன் அலாவலாவி(உங்க ஸ்டைலில் கேட்டாள் என்ன ஆவிப்பா அது?)க்கொண்டே கையில் சொடுக்குப்போடுவது போல் எழுதுகிறீர்கள்.உங்கள் எழுத்தின் சாயல் முன்பு நீங்கள் படித்த எழுத்தர்களின் சாயலில் இல்லாவிட்டாலும் அதுவே உங்களை உந்தும் சக்தியாக இருக்கும் என நம்புகிறேன். சில இடங்களில் ஆங்காங்கே சுஜாத்தாவின் சாயல் மிக லேசா வெளிப்படுதலை உங்களால் மறைக்க முடியும் காலம் நீங்கள் முழுமையான தனித்துவ எழுத்தாளராக மிளிரலாம்.(என் மனதில் தோன்றியதை பதிந்துள்ளேன்,தவறு இருப்பின் மன்னிக்கவும்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

கிரவ்னு! உன்னையத்தானே எழுதச் சொல்லியிருக்காங்க ! அதுக்கு என்னா சொல்றே இப்போ !?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மனதெல்லாம் மணக்கும் நல்ல மலரும் நினைவுகள். ஜாஹிர் காக்காவின் எழுத்து வழக்கம் போல் மினுக்குது....

எப்படியெல்லாம் எழுதுகிறார்கள் பாருங்கள். சமீபத்தில் மரணமடைந்த கவிஞர் வாலி அன்று ஒரு நாள் பாபர் மசூதி காவிக்கூட்டத்தால் இடித்துத்தரைமட்டமாக்கப்பட்டபின் இப்படி எழுதி இருந்தார்:

நான்கு காலிகள் சேர்ந்து நாற்காலிகளுக்காக
பாபர் மசூதியை இடித்தார்கள். அத‌னால்
அவ‌மான‌ப்ப‌ட்டுப்போன‌து நபிநாயக‌ம‌ல்ல‌ ஜ‌ன‌நாயகம்..

ச‌மீப‌த்தில் த‌ம்பி ஷ‌ஃபாத் த‌ன் முக‌ப்புத்த‌க‌த்தில் இப்ப‌டி கேட்டிருந்தார்:

ம‌ன‌தில் மாறாத‌ ர‌ண‌த்தை விட்டுச்செல்வ‌த‌னால் தான்
ம‌-ர‌ண‌ம் என்று பெய‌ர் வ‌ந்த‌தோ....

இப்ப‌டி ஏராள‌ம் ந‌ம்மைச்சுற்றியே பொக்கிஷ‌ங்க‌ள் ப‌ர‌ந்து கிட‌க்கின்ற‌ன‌. அதை ர‌சிக்க புறக்க‌ண்க‌ளும், ருசிக்க‌ அக‌க்க‌ண்க‌ளும் அவ‌சிய‌ம் இருக்க‌த்தான் வேண்டும்.

ZAEISA said...

அந்த நாலுபேரு இருக்கிற ஃபோட்டோவுல ஒருத்தர் அம்மா கட்சி எம்.எல்.எ மாதிரி இருக்காரே.....அது யாருங்க....?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உங்களின் இன்றைய எழுத்தாற்றலுக்கு அன்றே உங்கள் அங்கங்களுடன் தரமான விதையிட்டு இன்று அதன் பலனை காண்கிறோம்.
இளமையின் அழகான பிக்சர்கள் வரலாற்று பொக்கிசம். அருமை.
நம்ம கவிஞரும் காதுல பூவோடு ரொம்ப ஸ்டைலு தான்.
என்னையும் தொடர்ந்து கவனித்து நல்லதை எழுத தூண்டலுக்கு நன்றியும் மகிழ்வும்!
இன்சா அல்லாஹ்!
ரப்பி ஜித்னி இல்மா!

sabeer.abushahruk said...

//நாங்கள் எல்லோரும் சேர்ந்து "தேன் துளி" என்று வலைத்தளம் உருவாக்கினோம், எங்களுக்கே பாஸ்வேர்ட் மறந்து போர அளவுக்கு நாங்கள் இப்போ அதை கண்டுக்கிறது இல்லே.//

இப்ப அங்கே மவுஸை க்ளிக் செய்ததும் தூசு கிளம்பி நெடியேறி தும்மல் வருது. அந்த ப்ளாக்குக்குத் தனியாப் போகவே பயமா இருக்கு. துணைக்கு ஆளில்லாமல் நான் அங்கே போறதே இல்ல. கோவாலு மட்டும்தான் இருக்கான்னு நெனக்கேன்.

இப்படித்தான், எழுதும் ஆர்வக்கோளாறு வந்து நிறைய ப்ளாக்குகள் துவக்கப்பட்டு மராமத்து பார்க்கப் படாமல் பாழடைந்து போய் கிடக்கிறது.

பரவால்லேன்னு உள்ளே போனா, " காந்தியை சுட்டதை ஃப்ளாஷ் நியூஸ்ல" ஓடவிட்டிருப்பதுதான் கடைசி பதிவாக இருக்கிறது.

இப்றாகிம் அன்சாரி காக்கா, ஜாகிர் ஃபோட்டோக்கு முதல் பரிசு அறிவிச்சிருக்காகலே, மேட்ச் ஃபிக்ஸிங்கா? அப்படியே கொடுத்தாலும் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் இருக்கும் அசோக் ஸ்டுடியோ ட்டச் அப் மேனுக்குத்தான் கொடுக்கனும்

அப்பவே நாங்க அவனை, "டேய் நீ கல்யாணராமன் கமலஹாசன் மாதிரி இருக்கேடா" ன்னு சொல்வோம். பய அப்டியே பறப்பான். ஆனால், கல்யாணராமன்ல் ரெண்டு கமல் இருக்கிற உள்குத்து அவனுக்கு உரைக்காது.

ராப்பகலா உட்கார்ந்து தேன்துளி பிரதிகளை எழுதுவோம். ரெடியானதும் மெயின் ரோடு எம் ப்பி கடை, கடற்கரைத்தெரு புளிய மரம், தர்ஹா ஆகிய இடங்களில் ஒரு பிரது 25 பைசா என்று விற்று லாபம் பார்த்தோம். எங்க குரூப்லயே ஜாகிர்தான் பணக்காரன். நிறைய காசு வச்சிருப்பான். எங்களுக்கு வந்த சொர்ப்ப லாபம் அமிர்தமாக இனித்த காலம் அது.

எங்களைத் தொடர்ந்து நஸீர் ஹுஸேன் "நியூ இந்தியா" என்றும் இக்பால் "தேடல்" என்றும் கையெழுத்துப் பிரதிகள் தொடங்கினர்.

இக்பாலின் முதல் இதழில் அவன் எழுதி கவிதை

தேடல்:

என்னை விற்று
எதையோ பெற்று
பின்
அடைந்ததை அனுபவிக்க
என்னைப் போய்
எங்கே தேடுவேன்!

நான் எழுதியதில் அவனுக்கு மிகவும் பிடித்ததாக இப்பவும் சொல்வது:

எண்ணங்கள் குவிந்து
எதையோ நாடின
கண்ணங்கள் கனிந்து
கவிதை பாடின!

sabeer.abushahruk said...

அன்றைய பம்பாயில் நான் பட்ட கஷ்ட்டங்கள் நிறைய. இடைவேளை வரை எல்லா தமிழ் ஹீரோக்களும் படும் கஷ்ட்டஙகளைவிட அதிகம்.

அங்கு தங்குமிடம் ஒரு பெரிய ஹாலில் நிறைய பேர் நீட்டிப் படுத்திருப்போம். எல்லோருமே அவரவர்கள் கனவுகளைக் கட்டிக்கொண்டே காத்திருப்போம்.

விசா வரும் என்றெண்ணி மிசா கைதிகளைப் போல காலம் கடத்தினோம். மச்சி மார்கெட்டில் 50 பைசாவுக்குக் கொட்டும் தண்ணீரில் பத்தோடு பதினோராவது ஆளாக நின்று குளிப்போம். ரெக்ரூட்மென்ட் அலுவலகத்துக்கும் இருப்பிடத்திற்கும் அலையாய் அலைவோம். எக்குத்தப்பான ஒரு நாளில் இன்ட்டர்வியு முடிந்ததும் "ஊருக்குப் போ. தந்தி வரும்" என்று அனுப்பும்போது லக்கேஜில் துணி சுவர்க்காரமும், சீமை எழந்தப்பழமும் உடம்பில் மஞ்சட்காமாலையும் ஏற்றிக்கொண்டு ஊருக்கு வந்து காத்திருப்போம்.

அந்தக் காத்திருப்பு கணங்கள் கொடுமையானவை.

எல்லாவற்றிலும் மீண்டெழும்போதுதான் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்னும் கொள்கை வெறியாகிப்போய் முன்னேற்றம் கைவசப்பட்டது.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer AbuShahruk,

//எல்லாவற்றிலும் மீண்டெழும்போதுதான் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்னும் கொள்கை வெறியாகிப்போய் முன்னேற்றம் கைவசப்பட்டது.//

A great principle of personal success which should be adopted by any individual who wants success and prosperity.

Its an experience to be felt in addition to repeat the above principle.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். ஜாஹிர்காக்கா! என் பிளாக்கை இப்ப ஒட்டடை அடித்து தூசி தட்டி வைத்துள்ளேன் விரைவில் அலங்காரம் ஆரம்பிக்க உங்கள் ஆக்கமே எனக்கு ஊக்கமாய் இருந்தது.

Shameed said...

எழுதுவதற்கு கொடுத்த அழைப்பு 1970பதுகளில் மண் சட்டியில் சமைத்த தேச பொடி ஆனத்தைப்போல் அத்தனை சுவை !!

Shameed said...

பழைய போட்டோக்களை எங்கே இருந்து தூசி தட்டி எடுத்தீர்கள்

نتائج الاعداية بسوريا said...

நண்பன் இக்பால் நிழர்ப்படத்திர்க்கும் , சாகுல் ஹமீது என்று ஒரு நண்பருடைய நிழர்ப்படத்திர்க்கும் இடையில் ஸ்மார்ட்டாக ஒரு புகைப்படம் இருக்கின்றதே அது யாருடையது ?

ரொம்ப smartta இருக்கின்றாரே அவர் பள்ளி காலங்களில் நாடகத்தில் குரவ வேசம் போட்டவர்தானே ? எனக்கு இந்த உண்மை இப்பொழுது தெரிஞ்சாகனும் ?

sabeer.abushahruk said...

//ரொம்ப smartta இருக்கின்றாரே அவர் பள்ளி காலங்களில் நாடகத்தில் குரவ வேசம் போட்டவர்தானே ? //

அது வேஷம் இல்லடா, மெய்யாலுமே அப்டிதான் இருப்பான். இதான் வேஷம். சொன்னா வைறாய்ங்க.

அப்பாடா காதர் வன்ட்டான்

نتائج الاعداية بسوريا said...

அழகிய மலரும் நினைவுகளோடு பள்ளி பருவத்தை நட்பு வட்டாரத்துடன் அள்ளித்தந்த ஜாகிர்,நீ ஒரு rewinding button .

எனக்கும் எழுத முடியும், சாபீர் ஏசுவாப்புல . அதனால்தான் யோசிக்கிறேன்.

அபு ஆசிப்.






نتائج الاعداية بسوريا said...

//அது வேஷம் இல்லடா, மெய்யாலுமே அப்டிதான் இருப்பான். இதான் வேஷம். சொன்னா வைறாய்ங்க. //

இந்த உண்மை எனக்கு இப்போதான் தெரியும்.

எப்படியோ உண்மை தெரிஞ்சதில் சந்தோசம்.

அபு ஆசிப்.

Shameed said...

نتائج الاعداية بسوريا சொன்னது…
//நண்பன் இக்பால் நிழர்ப்படத்திர்க்கும் , சாகுல் ஹமீது என்று ஒரு நண்பருடைய நிழர்ப்படத்திர்க்கும் இடையில் ஸ்மார்ட்டாக ஒரு புகைப்படம் இருக்கின்றதே அது யாருடையது ?

ரொம்ப smartta இருக்கின்றாரே அவர் பள்ளி காலங்களில் நாடகத்தில் குரவ வேசம் போட்டவர்தானே ? எனக்கு இந்த உண்மை இப்பொழுது தெரிஞ்சாகனும் ?//



அந்த இடைப்பட்ட படத்தில் எல்லா அப்பும் அதவாது மேக்கப் டச்அப் இப்படி பல அப்பும் அப்பி இருக்குமோ

sabeer.abushahruk said...

காதரு, நான் ஏன்டா ஏசுறேன். எழுதுடா. கண்டிப்பாக நீ எழுத வேண்டும். காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்.

நாம் சந்திக்கும்போதெல்லாம் நேயர் விருப்பமாக ஈ எம் ஹனீஃபா பாட்டையே பாடச்சொல்லி கேட்டு அதிலேயே மயங்கிப் போனதால் உன் மற்ற திறமைகள் என்ச்க்குத் தெரியாமலே போய்விட்டது.

அந்த குறவன் வேஷம் மேட்டரைச் சொன்னபோதுதான் உன் மேல் நம்பிக்கை வருகிறது. எழுதுடா

adiraimansoor said...

///இப்ப அங்கே மவுஸை க்ளிக் செய்ததும் தூசு கிளம்பி நெடியேறி தும்மல் வருது. அந்த ப்ளாக்குக்குத் தனியாப் போகவே பயமா இருக்கு. துணைக்கு ஆளில்லாமல் நான் அங்கே போறதே இல்ல. கோவாலு மட்டும்தான் இருக்கான்னு நெனக்கேன்.///

///அப்பவே நாங்க அவனை, "டேய் நீ கல்யாணராமன் கமலஹாசன் மாதிரி இருக்கேடா" ன்னு சொல்வோம். பய அப்டியே பறப்பான். ஆனால், கல்யாணராமன்ல் ரெண்டு கமல் இருக்கிற உள்குத்து அவனுக்கு உரைக்காது.///

சபீர் மேலே உள்ளவற்றை படித்து வயிறு குலுங்க சிறித்தேன் நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டே இருக்கின்றேன் இப்படி நகைச்சுவையாக எழுத எனக்கும் கொஞ்சம் கற்றுக்கொடேன்
பாக்கியராஜையும் ஹாஜா சரீபையும் அந்த 7 நாட்களையும் மறக்க முடியுமா?

ZAKIR HUSSAIN said...

ச்சே ..எல்லாருக்கும் என் ஃபோட்டோ மீது இவ்வளவு காண்டு!!!
" பாஸ் ..நான் அழகா பொறந்தது தப்பா பாஸ்??"

Unknown said...

சபீர்,

நாம் அல்ஜுபைல் மற்றும் ரஹீமாவில் எடுத்த பழைய புகைப்படங்கள் இருந்தால் அள்ளி உடேண்டா

நானும் என் மலரும் நினைவுகளில் திளைப்பேனல்லவா ?

அபு ஆசிப்.

Unknown said...

//" பாஸ் ..நான் அழகா பொறந்தது தப்பா பாஸ்??"//


இதையெல்லாம் கேட்டும் நாம் உயிரோட வாழனுமா ?

சொல்லு சபீர் சொல்லு.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நல்ல மோடிவெசன் இந்த பதிவு. ஜஸக்கல்லாஹ் ஹைரா..

//இவ்வளவு பேர் வெளிநாட்டில் இருக்கிறீர்கள், நீங்கள் பல போராட்டங்களுக்கு இடையேதான் விசா கிடைத்து போயிருக்க வேண்டும். எப்படி நீங்கள் விடாமல் முன்னேறத் துடித்தீர்கள் என்று எழுதலாம்.இவ்வளவு பேர் வெளிநாட்டில் இருக்கிறீர்கள், நீங்கள் பல போராட்டங்களுக்கு இடையேதான் விசா கிடைத்து போயிருக்க வேண்டும். எப்படி நீங்கள் விடாமல் முன்னேறத் துடித்தீர்கள் என்று எழுதலாம்.//

அனுபவசாலிகள் எழுதவேண்டும், முன்னேறத் துடிக்கும் பலருக்கு பயனுல்லதாக இருக்கும்.

Shameed said...

Abdul Khadir Khadir சொன்னது…
//" பாஸ் ..நான் அழகா பொறந்தது தப்பா பாஸ்??"//


//இதையெல்லாம் கேட்டும் நாம் உயிரோட வாழனுமா ?

சொல்லு சபீர் சொல்லு. //



நோன்பு நேரம் யாரும் தப்பான முடிவு எடுத்துர வேணாம் பொறுமையை கையாளுங்கோ !

sabeer.abushahruk said...

//" பாஸ் ..நான் அழகா பொறந்தது தப்பா பாஸ்??"//

தப்பில்ல ஜாயிரு, நாம ரெண்டுபேருமே அழகா பொறந்தது தப்பேயில்லதான்.

ஆனா,இத கேள்விப்பட்டுட்டு நாலு பேரு நாண்டுக்கிட்டு சாகக்கூட தயாராகிட்டாய்ங்கன்றப்பதான் நம்ம அழகில ஏதோ குறையிருக்கிறது மாதிரி தோனுது.

(ஹமீது, இவன் போட்டோவை கவனிச்சீங்களா? பெண் கைல கொடுத்து,"மாப்பிள்ளை பிடிச்சிருக்கான்னு பாத்து சொல்லும்மா" என்று கல்யாணப் பொன்னுட்ட கொடுப்பாங்களே அந்த ஃபோட்டவை போட்டுட்டு, நமக்கெல்லாம் தமிழ் ஹீரோகூட சுத்துவாங்களே சல்லிப்பசங்க அவிங்க மாதிரில ஃபோட்டோ போட்டிருக்கான். இந்த சதிக்கு அ.நியும் உடந்தை. ஏன் சொல்றேன்னா உங்க ஃபோட்டோவை ட்டக்குன்னு பார்த்துட்டு "என்ன ஓணான் ஃபோட்டோ மாரி ஈக்கிதுன்னு பார்த்தா உங்க ஃபோட்டோ. என்னய பார்த்தியலா காதில் பூ வச்சிக்கிட்டு ஒட்டாண்டி மாரி, ரியாஸ்தான் நம்ம குருப்லேயே சூப்பரா இருப்பான், அவனுக்கு மூஞ்சில தார் ஊத்தி...கடைசியிலே நெனச்ச மாரி ஈனா ஆனா காக்காட்ட முதல் பரிசும் வாங்கிட்டான். காதர் மட்டு அந்த குறவன் மேட்டர சொல்லலே றெக்கை மொளச்சிடும் இவனுக்கு)

sabeer.abushahruk said...

இன்னொன்னு,

இக்பால் ஃபோட்டோவை கண்ணாடி போடாம பார்த்துட்டு சவுரு பக்கிரிசாவோன்டு நெனச்சிட்டேன்.

sabeer.abushahruk said...

////" பாஸ் ..நான் அழகா பொறந்தது தப்பா பாஸ்??"//


இதையெல்லாம் கேட்டும் நாம் உயிரோட வாழனுமா ?

சொல்லு சபீர் சொல்லு.//

காதரு அழகிய பொறுமையைக் கையாள்டா. மனச தளர வுட்டுடாதே.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மம்மி கட்சியில இருக்கிற எம்.எல்.ஏ.மாதிரி ஒருத்தார் இருக்கார்னு ஜயிஸா காக்கா சொன்னது இந்தியா பாகிஸ்தான் பார்டரில் காவல்காக்கும் கட்சியிலிருந்து பிரிந்து வந்து மம்மிகிட்டே சேர்ந்த எம்.எல்.ஏ. வாய் திறக்கலை !

யாருமே கண்டுக்கலையே... !?

sabeer.abushahruk said...

ஓ... ஜய்ஸா காக்கா, இவன் பரிதி இளம்வழுதி அல்ல. ரியாஸ்இளம்வழுக்கை.

அந்தக் காலத்திலே இவன்தான் எங்க குருப்லேயே அழகா செவப்பா இருப்பான். முடிமட்டும்தான் கருப்பா இருக்கும். அதுக்குள்ளேயும் செவப்பாத்தான்டா இருக்கேன்று நிருபிக்க முடியையெல்லாம் உதிர்த்திட்டான். இப்ப எடம் சும்மாத்தான் இருக்கு. விளம்பரம் ஏதும் எழுதி வைக்கலாமான்னு யோசிக்கிறோம்.

sabeer.abushahruk said...

//இப்படி நகைச்சுவையாக எழுத எனக்கும் கொஞ்சம் கற்றுக்கொடேன்//

ஏன் மன்சூர், காதர் கைவசம் இருக்கானே. அவனுக்கு வராத நகைச்சுவையா? அவன் பேசப்பேச சிரிச்சிக்கிட்டே இருக்கலாமே அவ்ளோவ் ஜோக்ஸ் சொல்வான். அவன் பேசாத நேரத்ல நைஸா தொப்பியைக் கெளட்டிட்டு பாருங்கள். சிரிப்போ சிர்ப்புத்தேன்.

ZAKIR HUSSAIN said...

Message To Sabeer from my wife.

"தேடித்தேடி பல போட்டோவை வேண்டாம்னு இந்த போட்டோவெ எடுத்துப்போட்டாக காக்கா.."

KALAM SHAICK ABDUL KADER said...

உளவியலார் அவர்களே!
உங்கள் உற்ற நட்புகளின் பெட்புகளில்
பயிற்சி
முயற்சி
வளர்ச்சி
மகிழ்ச்சி

KALAM SHAICK ABDUL KADER said...

//எண்ணங்கள் குவிந்து
எதையோ நாடின
கண்ணங்கள் கனிந்து
கவிதை பாடின!\\

அளவொத்தக் கண்ணிபாவாக, நெஞ்சத்தில் பதியும் வஞ்சிப்பாவாக வனையப்பட்டுள்ள கவிவேந்தரின் கனியிலும் இனிய பாவில் ‘கண்ணத்தில்” ஏன் மூன்று சுழி; ஆங்கு உண்டானதோ ஓர் அழகிய குழி?!

KALAM SHAICK ABDUL KADER said...

\\இக்பாலின் முதல் இதழில் அவன் எழுதி கவிதை

தேடல்:

என்னை விற்று
எதையோ பெற்று
பின்
அடைந்ததை அனுபவிக்க
என்னைப் போய்
எங்கே தேடுவேன்!\\

காணாமற் போன தன்னிலையை பேனாவின் கூர்பார்வையினால் தேடும் ஓர் அற்புதமான தேடல்; அறிவும் ஆழமும் கூடிய பாடல்!

அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் அவர்கள் தன்னைத் தேடுகிறர்; நானோ அவரின் “இட்லிக்கனஙகளும்;அதில் விழும் குழிகளுடன் ஓர் ஈர்ப்புடன் கூடிய எழில் மிகுத் தோற்றத்துடன் கழுத்துப் பட்டியுன வலம் வரும் அந்த இளமை இக்பால் எங்கே என்பதே என் தேடல்!

sabeer.abushahruk said...

கவித்தீபம்/கவியன்பன்,

என் எழுத்துப் பிழையைக்கூட பிழைக்க வைத்துவிட்டீர்கள் கன்னக்குழி சேர்த்து.
நன்றி.

Unknown said...

//அவன் பேசாத நேரத்ல நைஸா தொப்பியைக் கெளட்டிட்டு பாருங்கள். சிரிப்போ சிர்ப்புத்தேன்.//

என் மண்டையில் கை வைக்கலேனா உன் மண்டை வெடிச்சுடுமே



Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//(ஹமீது, இவன் போட்டோவை கவனிச்சீங்களா? பெண் கைல கொடுத்து,"மாப்பிள்ளை பிடிச்சிருக்கான்னு பாத்து சொல்லும்மா" என்று கல்யாணப் பொன்னுட்ட கொடுப்பாங்களே அந்த ஃபோட்டவை போட்டுட்டு, நமக்கெல்லாம் தமிழ் ஹீரோகூட சுத்துவாங்களே சல்லிப்பசங்க அவிங்க மாதிரில ஃபோட்டோ போட்டிருக்கான். இந்த சதிக்கு அ.நியும் உடந்தை. ஏன் சொல்றேன்னா உங்க ஃபோட்டோவை ட்டக்குன்னு பார்த்துட்டு "என்ன ஓணான் ஃபோட்டோ மாரி ஈக்கிதுன்னு பார்த்தா உங்க ஃபோட்டோ. //

உங்க போட்டோவாவது தேவலை பூவெல்லாம் வச்சு போட்டுகிது எனக்கு மட்டும் போட்டோவே போடுறோம்னு வெறும் "நெகடிவ்வே" போட்டு வச்சி நோன்புலே எங்க ஊட்டுகாரவுக வதுவ பேரை வாங்கி கட்டிகிட்டக அது பாத்தாதுன்னு நீங்க வேற எரியுற கொல்லிலே என்னைய ஊத்துரமாதிரி பல்லி ஓனான் பாம்புன்னு போட்டு கெளப்பி உடுரியலே இதெல்லாம் நல்லதுக்கில்லே ஆமா!

Unknown said...

ரியாஜ்,

எப்பொழுது பார்த்தாலும் உங்க மண்டையும் என் மண்டையும் சபீர் கையில் மாட்டிக்கொண்டு இந்த உருளு உருளுதே இதற்க்கு ஒரு வழியே இல்லையா ?

இவனுக்கு எப்ப முடி நெறைக்கும்? எப்பொழுது முடி கொட்ட ஆரம்பிக்கும்?, .பார்ப்பவர்கள் உடன் தெரிவிக்க வேண்டிய முகவரி,

ரியாஜ் , கடல் கரை தெரு,
அப்துல் காதர் - C.M.P., புது மனை தெரு.

Shameed said...

Abdul Khadir Khadir சொன்னது…
ரியாஜ்,

//எப்பொழுது பார்த்தாலும் உங்க மண்டையும் என் மண்டையும் சபீர் கையில் மாட்டிக்கொண்டு இந்த உருளு உருளுதே இதற்க்கு ஒரு வழியே இல்லையா ?

இவனுக்கு எப்ப முடி நெறைக்கும்? எப்பொழுது முடி கொட்ட ஆரம்பிக்கும்?, .பார்ப்பவர்கள் உடன் தெரிவிக்க வேண்டிய முகவரி,//

ரியாஜ் , கடல் கரை தெரு,
அப்துல் காதர் - C.M.P., புது மனை தெரு



சும்மா சும்மா மண்டை மண்டை என்று சொல்லாதிய இங்கே ஊரில் கஞ்சுக்கு மண்டை (தலை )கிடைக்காமல் அவனவான் ( தலைக்கு )மண்டைக்கு அலை மோதுரானுவோ பாத்துகிடுங்க அப்பறம் மண்டை இருக்காது

sabeer.abushahruk said...

// எனக்கு மட்டும் போட்டோவே போடுறோம்னு வெறும் "நெகடிவ்வே" போட்டு வச்சி நோன்புலே எங்க ஊட்டுகாரவுக வதுவ பேரை வாங்கி கட்டிகிட்டக//

ஹாஹ்ஹாஹ, இவன எங்கே காணோம்?

sabeer.abushahruk said...

//உங்க போட்டோவாவது தேவலை பூவெல்லாம் வச்சு போட்டுகிது//

பாராட்றியலா வெடக்கிறியலான்னே தெரியலயேப்பா. கவனிச்சியலா, இன்னும் சூப்பர் ஸ்லோ மோஷன் வரலே.

sabeer.abushahruk said...

Dear bro. Ahamed Ameen,

you did not update your kanji making efforts. What happened? Don't tell me that you have managed to prepare tasty kanji at first attempt only.

My attempts are still going on. By the time I could have learnt making kanji it probably would be the last day of Ramadan.

The last kanji I made came in green colour. I was told that I used excess amount of Pudhina and Malli. Then, I dont know what should I do with my friend who told me to use too much Pudhina Malli to make tasty kanji.

Please share your kanji with us, I mean kanji making with us.

KALAM SHAICK ABDUL KADER said...

ரியா|ஸ் அஹ்மத் என்னும் ரீங்காரமிட்டு என் வலைப்பூந்தோட்டத்துக் கவிமலர்களில் தினமும் தேன் பருகும் வாசக வண்டு, அவரை நான் கண்டு ஆனந்தமடைந்தேன் இன்று. விடுப்பில் இருந்த பொழுதும் என் செல்லிடைப் பேசியில் செல்லமாய்ப் பேசி நான் பின்னியக் கவிமாலைக்கு அன்னியநாட்டிலிருந்து கொண்டே அழகு தமிழில் வாழ்த்துரை வழங்கியவர்; குடிக்காடு என்ற குடியேறிக்காட்டுக்கு வ்ருவதற்கு முன்னர் என் உம்மா அவர்கள் வாழ்ந்த அதிரையின் நுழைவாயிலாம் அழகிய கடற்கரைத் தெருவில் தான் அவர் வீடும் உள்ளது என்பதையும் முழங்கினார். செவிகளில் தேன்பாயும் தேமதுரக் குரலோனின் செழிக்கும் இளம்வயது நிழற்படம் கண்டேன் உங்களின் முயற்சியால்,

இப்பொழுது எனக்கும் ஓர் அவா ஏற்பட்டுள்ளது. ஆம். என் கல்லூரிக் கால நிழற்படம் (அது 1980ல் எடுக்கப்பட்ட கடவுச்சீட்டில் தான் காண முடியும்) அதை பிரதி எடுத்து என் சுயவிவரப் படமாகச் சில காலத்திற்குப் பதியலாமா என்ற ஓர் எண்ணம், உங்களின் இந்த “நினைத்தாலே இனிக்கும் நிழற்பட கண்காட்சி” யைக் கண்டதும் உண்டாகி விட்டது.

முடிவேந்தராம் எம் கவிவேந்தரின் முடியைப் பற்றிச் சொல்லித்தான் ஊரில் எல்லாருக்கும் அறிமுகமான ஒருவர் என்னிடம் விசாரித்தார்கள் என்றால், கவிவேந்தரை முடிவேந்தர் என்றும் சொல்லலாம் தானே!

KALAM SHAICK ABDUL KADER said...

\\ச்சே ..எல்லாருக்கும் என் ஃபோட்டோ மீது இவ்வளவு காண்டு!!!
" பாஸ் ..நான் அழகா பொறந்தது தப்பா பாஸ்??"\\

மலேசியாக்காரர் என்பதைக் காட்டவா பூச்சட்டை? அல்லது “ஹோம் மினிஸ்டர்” அவர்களின் தெரிவா? உண்மையில் நீங்க ஹீரோ தாங்க அப்பொழுதும்; இப்பொழுதும்; இப்பொழுதும்!

சினிமா என்பது ஹராம் இல்லை என்றால்,

நீங்கள் ஹீரோவாகவும்;
கவிவேந்தர் பாடலாசிரியராகவும்;
சுட்டும் விழிச்சுடர் ஷாஹூல் ஹமிதி புகைப்படக் கலைஞராகவும்;
அன்புச் சகோ. ஹாஜா இஸ்மாயீல் கலைவண்ணக் கலைஞராகவும்;
அன்புச் சகோ.இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் வசனகர்த்தாவாகவும்
அன்பு நெறியாளர் அபுஇபு இயக்குநராகவும்

அமைக்கப்பட்டு ஓர் எழில் மிகு வண்ணப்படம் உருவாக்கலாம்.

ஆகுமெனில், ஆவணப்படம் உருவாக்கலாம்.

KALAM SHAICK ABDUL KADER said...

கவிவேந்தரின் “பம்பாய்” வாழ்க்கை முற்றிலும் எனக்கும் அன்புடன் புகாரி (கனடா கவிஞர்) அவர்கட்கும் 1980-81 ல் ஏற்பட்ட ஓர் அனுபவம் என்பதும் அதைவிட மோசமான அனுபவங்களும் உள. நானும் அன்புடன் புகாரி அவர்களும் 1980ல் “சப்-ஏஜெண்ட்” என்ற பெயரில் நமதூர் பிரபல்யமான குடும்பத்தைச் சார்ந்தவரிடம் கடவுச்சீட்டும் அப்பொழுது ரூபாய் 15,000\== (விசாவைப் பார்க்காமல் முன்கூட்டியே) கொடுத்து விட்டு சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் ஏமாற்றப்பட்டு, “வெர்சோவா- அந்தேரி” காட்டுப் பகுதியில் அடைக்கப்பட்டிருந்தோம். பின்னர் அடியேனும், அன்புடன் புகாரியும் (இருவர் மட்டும் தான் ஆங்கிலம் தெரிந்தவர்கள்) தப்பித்து “மெய்ன் ஏஜண்ட்” யார் என்று அறிந்து எங்களின் கடவுச்சீட்டுகளும் பணமும் வேறொரு ஏஜண்ட்(சிங்)இடம் கைமாறி - அவனும் ஒளிந்து கொண்ட விவரங்களைச் சொல்லி எங்களைக் காப்பாற்ற வேண்டினோம்.

எனக்கு அந்த மெய்ன் ஏஜெண்ட் சலீம் பாஷா அவர்கள் கணக்கர் பதவி கொடுத்துச் சில காலம் அவருடைய அலுவலகத்தின் முக்கிய பணிகளில் ஈடுபடுத்தி எனக்கு முதன் முதலில் கிடைத்த முதலாளியானார். பின்னர். என்னைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் ஊரில் உள்ள அந்த முக்கியக் குடும்பத்தாரின் பஞ்சாயத்தில் கொடுத்தத் தொகையைத் திருப்பிப் பெற்றுக் கொண்டனர்.
அன்புடன் புகாரி அவர்களும், அவர்களின் தம்பியும் தம்மாம் வந்து விட்டார்கள்; அடியேனுக்கு அல்கோபாரில் பெரிய நிறுவனத்தில் கணக்கர் பதவிக்கான பணிக்கு அந்த முதலாளி சலீம் பாட்சா அவர்கள் அனுப்பி வைத்தார்கள்; அவர்களிடம் சொல்லித் தான் என் மச்சான் தாஹிருக்கும் அவருக்கும் ஓர் இணைப்பை ஏற்படுத்தி கொடுத்தேன்.

”படிக்கட்டுகள்” கட்டுரையாசிரியரே!
படிக்கட்டுகளில் ஒவ்வொரு நாளும் ஏறிச் சென்று என் அலுவலகத்தில் இன்று வரைக்கும் பணி செய்ய நுழையும் வேளையில் அந்த பம்பாய்க் கால கஷ்டங்களை மனத்தினில் எண்ணிக் கொள்வேன்.

இப்பொழுது தமியேனின் எண்ண ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அடுத்த என் கவிதை “வலிகள்” என்னும் தலைப்பிற்கான கருவும் இதுவாகவே இருக்கும்!

KALAM SHAICK ABDUL KADER said...

என் வாழ்வில் நான் சந்தித்த இந்த “பம்பாய்” கஷ்டங்களை என் குழந்தைகளிடமும் சொல்லிக் காட்டியிருக்கிறேன் ( இன்று வாப்பா வளமாக இருப்பதாக அவர்கள் எண்ணலாம்; ஆனால் என் ஒவ்வொரு காசும், என் கஷ்டங்களைப் பேசும் என்று அவர்களும் அறிய வேண்டும் என்பதற்காக)

என் மகளார் அவர்கள் பள்ளிப் பருவத்தில் (ப்ளஸ் டூ வில்) ஆங்கிலத்தில் (இமாம் ஷாஃபி ஸ்கூல்) பேசும் பயிற்சிக்கு அப்பொழுதிருந்த தலைமை ஆசிரியை அவர்கள் சொன்னதன்படி தானாக ஒரு தலைப்பெடுத்துப் பேசும்படி இட்டக் கட்டளைபின்படி. நான் பட்ட அந்த ”பம்பாய்” அனுபவங்களை எல்லாம் சரளமான ஆங்கிலத்தில் பேசி எல்லாரையும் உருக வைத்திருக்கின்றார்கள்.

Iqbal M. Salih said...

அன்பின் கவியன்பன் அவர்கட்கு, மிக்க நன்றி!

'தேடலின் தீவிரம்' தத்துவச் சிந்தனையில் பயணித்தபோது தொடர்ந்த தேடலில் அடுத்தஒன்று 1982ல்:

தாழ்ப்பாளில்
யாதுவென
தனித்தனியே
யோசிக்கும்போது.....

தாழ்ப்பாளும் திறப்பும்
வீடும் வெளியும்
சொந்தமும் அந்நியமும்
நானாகவே இருக்க......

நான் யார்?

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//உங்க போட்டோவாவது தேவலை பூவெல்லாம் வச்சு போட்டுகிது//

//பாராட்றியலா வெடக்கிறியலான்னே தெரியலயேப்பா. கவனிச்சியலா, இன்னும் சூப்பர் ஸ்லோ மோஷன் வரலே.//

அது அவுக (ரியாஸ் )போட்டோ இல்லைன்னு அவுக வீட்டுலே சத்தியா கிரகம் நடக்குதாம் மொதல்லே அத சால்வ் பண்ணிட்டு பைய வருவாக

adiraimansoor said...

இக்பால் எனக்கு தலை சுற்றுகின்றது
விளக்கத்தை நீயே தந்துவிடு
நான் இன்றிலிருந்து பெருநாள் வரையும் ஜூட்
அனேகமாக நாலையிலிருந்து கியாமுல் லைல் ஆரம்பம்

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
ஜாஹிர் ஹுசைன் காக்கா
அருமையான பதிவு

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்
காக்காமார்களின் மலரும் நினைவுகள் தெவிட்டாதே 'தேன் துளி'களின் சுவையில் தேன்அருவியாய் அள்ளி பருக வைத்து விட்டீர்கள்.கருத்துரைகள் கட்டுரையை விட சுவாரசியமாய் இருக்கின்றது.70 களின் மத்தில் அதிரையர்களின் அபார அறிவு வளர்ச்சி என்னை அதிசயக்கவைகின்றது.எனது அன்பிற்குரிய சிறிய தந்தை இக்பால்.M சாலிஹ் அவர்களின்
'தேடல்' எனக்கு தெரியாத (தேடாதே)விஷயம்.
அதிரை நிருபர் மற்றும் ஜாஹிர் காக்காவிற்கு நன்றி
------------------
இம்ரான்.M.யூஸுப்
மக்கள் தொடர்பு செயலாளர்
அமீரக சமூகநீதி அறக்கட்டளை

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் சகோ, இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ்,.
அஸ்ஸலாமு அலைக்கும், ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா.

தண்ணீருக்குத் தாகம் வேண்டும்
தாகத்திற்குக் தண்ணீர் வேண்டும்

என்ற வரிகளுடன் அடியேனும் அடியெடுத்துத் “தேடல்கள்” என்னும் தலைப்பில் தான் கவிவரிகளைக் கோத்து வைத்துள்ளேன் என் எண்ணத்தின் அணுக்களில்; இப்பொழுது நேரமின்மையினாலும், ரமலானின் புனித அமல்களின் முக்கியத்துவம் கருதியும் என் சிந்தனை அறைக்குள் பூட்டி வைத்திருக்கும் கீழ்க்காணும் கவிதைகளில் எதனை எழுதி முடிப்பது என்றே யோசிக்கிறேன்

1) வலிகள்
2) தேடல்
3) எழுதுகோல்
4) ”சந்த வசந்தம்” என்னும் அடியேன் யாப்பிலக்கணம் கற்றுக் கொள்ளும் இணைய வ்குப்பின் ஆசான் தந்துள்ள “வீட்டுப்பாடங்களான: , ஒரு பா ஒரு ப்ஃது என்னும் அந்தாதி, ஈற்றடிகள் பத்துக்கு முழு வெண்பா, கதைப் பயிற்சியுடன் கவிதைக் கட்டுதல்
5) வாரந்தோறும் தவறாமல் இலண்டன் வானொலிக்கு வழங்க வேண்டியதுடன் , தற்பொழுது அமெரிக்க ஹூஸ்டன் வானொலிக்கும் வழங்க வேண்டிய அவர்கள் கேட்கும் தலைப்பிலான கவிதைகள்

இப்படியாக என் முன்னால் வரிசையில் நிற்கும் என் படைப்பின் கருக்களில் இப்பொழுது உங்களின் “தேடல்” படித்ததும் , அடியேனும் முதலில் சொன்ன

//தண்ணீருக்குத் தாகம் வேண்டும்;
தாகத்திற்குத் தண்ணீர் வேண்டும்\\

என்று துவங்கும் அப்பாடலையே வனையலாம் என்று எனக்கு அறிவிப்பைக் கொடுத்து விட்டது உங்களின் தேடல்.

ஆயினும், நீங்கள் ஊரில் சந்தித்த வேளயில் சொன்ன ஓர் அறிவுரையும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. “உடல்நிலையையும் கவனித்துக் கொள்ளுங்கள்” என்ற அந்த நலம் நாடு உங்கள் உளம்நிறைவான அக்கறையும் எனக்கு உடன்பாடே!

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் சகோ. இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ்,

இதோ என் “தேடல்” என்னும் பாடல்

தண்ணீர் தாகத்தைத் தேடும்
தாகம் தண்ணீரைத் தேடும்

உணவு பசியைத் தேடும்
பசி உணவைத் தேடும்

காற்று சுவாசத்தைத் தேடும்
சுவாசம் காற்றைத் தேடும்

நிலம் மழையைத் தேடும்
மழை நிலத்தைத் தேடும்

வானம் நிலவைத் தேடும்
நிலவு வானத்தைத் தேடும்

நெருப்பு அடுப்பைத் தேடும்
அடுப்பு நெருப்பைத் தேடும்

மூளைக் கல்வியைத் தேடும்
கல்வி மூளையைத் தேடும்

ஞானம் தேடலைத் தேடும்
தேடல் ஞானத்தைத் தேடும்

பசி வயிற்றைத் தேடும்
வயிறு பசியைத் தேடும்

வாழ்க்கை சுகத்தைத் தேடும்
சுகம் வாழ்க்கையைத் தேடும்


நோய் நிவாரணத்தைத் தேடும்
நிவாரணம் நோயைத் தேடும்

இரணம் மனிதனைத் தேடும்
மனிதன் இரணத்தைத் தேடுகின்றான்

மண் மனிதனைத் தேடும்
மனிதன் மண்ணைத் தேடுகின்றான்

Iqbal M. Salih said...

//அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் அவர்கள் தன்னைத் தேடுகிறர்; நானோ அவரின் “இட்லிக்கனஙகளும்;அதில் விழும் குழிகளுடன் ஓர் ஈர்ப்புடன் கூடிய எழில் மிகுத் தோற்றத்துடன் கழுத்துப் பட்டியுன வலம் வரும் அந்த இளமை இக்பால் எங்கே என்பதே என் தேடல்!//


உண்மைதான் கவியன்பன்!

எல்லோருக்கும் இளமைக்கால ஃபோட்டோக்களும்
ஆனால், எனக்கு மட்டும் இப்போதைய நோன்பாளி ஃபோட்டோவும் போட்டிருப்பதில் ஓர் உலகளாவிய சதியிருப்பதாகவே தெரிகிறது! இதைப்பார்த்து நம்ம 'தொந்தியப்பா சபீர்' கூட என்னை 'சவுரு பக்கிர்சா' என்றும் கிண்டலடிக்கின்றான், பார்த்தீர்களா?

இத்தனைக்கும் அந்த ஜாகீர் பயலின் சீகல் கேமராவில் நானும் அவனும் எடுத்துக்கொண்ட கருப்பு வெள்ளை ஃபோட்டோக்கள் இன்னும் ஏராளமாக ரெங்குப் பெட்டியில் சும்மா அடுக்கிக் கிடக்கின்றன!

ஹ்ஹ்ம்! இது திட்டமிட்ட சதிதானே, கவியன்பன்?

அப்துல்மாலிக் said...

நம்மை சுற்றி நடப்பவை, தனக்கு ஏற்பட்ட அனுபவம் இப்படிபட்டவைகளை கொஞ்சமேனும் எழுத்தில் மெருகேற்றி எழுதினால் அதுவே ஒரு சின்ன ஸ்டேடஸ் மெசெஜ் தான், ரெண்டு வரி எழுத்தில் நிறைய அர்த்தங்களை புதைத்துவைத்து சொல்லாம். இப்படியாகதான் எழுத்தாளர்கள் உருவாகிருக்காங்க.

Unknown said...

sabeer.abushahruk சொன்னது…
//Dear bro. Ahamed Ameen,
you did not update your kanji making efforts. What happened?//


Dear brother Mr. Sabeer Abushahruk,

Everything was OK, and our sister's family also visiting our home on the same day. But my cousine told that And I had updated in that post.

My cousine's feedback was that the kanji was "sour".

நோன்பு கஞ்சி செய்யாதிருப்பது எப்படி..!

I guessed that my mistake was to add lemon juice in addition to
tamarind.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

ZAKIR HUSSAIN said...

அபு இப்ராஹிம்- சிறந்த நெறியாழ்கை தெரிகிறது வலைத்தளம் நடத்துவதில்

அதிரை மன்சூர்- எழுதுங்கள் காத்திருக்கிறோம். [ ஸ்போர்ட்ஸ் நடக்கும்போது நடந்த சுவாரஸ்யங்களை எழுதுங்களேன்]

சகோதரர் இப்ராஹிம் அன்சாரி- உங்களுடைய கமென்ட்ஸும் எங்களுக்கு "பூஸ்ட்' தான்.

அன்பு மிக்க முஹம்மதுஃபாரூக் மாமா அவர்களுக்கு. நீங்கள் சொன்ன உவமானம் புரிந்து கொண்டேன். நீங்கள் சொன்ன முஸ்லீம் எழுத்தாளர்களில் ஜே.எம் சாலி எழுதுக்களை சின்ன வயதில் படித்ததுண்டு. [ சமயங்களில் குமுதத்திலும் அவர் "ஒரு பக்க கதை" எழுதுவார்.


To bro. Ahamed Ameen,

//எல்லாவற்றிலும் மீண்டெழும்போதுதான் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்னும் கொள்கை வெறியாகிப்போய் முன்னேற்றம் கைவசப்பட்டது.// Sabeer

A great principle of personal success which should be adopted by any individual who wants success and prosperity.
நானும் வழிமொழிகிறேன்.

கிரவுன் ..என் ஆக்கம் உங்கள் வலைத்தளத்தை ஒட்டடை அடிக்க உதவியதில் எனக்கு மகிழ்ச்சி.

MSM Naina உங்கள் ஆக்கம் வந்து நாளாகி விட்ட மாதிரி ஒரு உணர்வு

ZAEISA….அவன் எம் எல் ஏ மாதிரி தெரியலெ...சேட் வீட்டு ஆட்கள் மாதிரி இருக்கான்.

MHJ ..when you are going to write…it’s long over due you know.

சாகுல் ...நீங்கள் அனுப்பிய போட்டோவும் கிடைத்தது. இருப்பினும் நான் பதிந்த போட்டோதான் சிறப்பாக இருக்கிறது.

அப்துல் காதிர்...சமயங்களில் பிரபலமானவர்கள் கெட்-அப் ஐ மாற்றி புதிய வேசம் போடுவது இயற்கை அப்படி போட்டதுதான் அந்த குரவன் வேசம்....[ இப்படி பதில் எழுதியதற்கே கடுப்பாயிருப்பியே...]

தாஜூதீன்..ரொம்ப பிசியா..

கவியன்பன் அவர்களுக்கு...சட்டை என் திரைவுதான். இங்கு எல்லோருக்கும் நான் தான் காஸ்ட்யூம் டிசைனர். என் ஆக்கத்துக்கும் அழகாக வார்த்தைகளில் வர்ண ஜாலம் செய்திருக்கிறீர்கள்.

இம்ரான் எம்.யூசுப் ...என் அண்ணன் மகனின் எழுத்தில் ஒரு நெருக்கம் உணர்ந்தேன்.

இக்பால் நீ சொன்ன அந்த சீகல் கேமரா “படாளம் ஆரிஃபிடம் கொடுத்து விட்டேன். நாம் எடுத்த பழைய படம் இருந்தால் அனுப்பி வைடா.

அப்துல் மாலிக் ..இப்படி இவ்வளவு லேட்டா வந்தால் எங்கள் ரியாஸ் கட்சியின் தளபதி என்று உங்களுக்கு பட்டம் கிடைக்கும்..பரவா இல்லையா?

அதிரை முஜீப். உங்கள் வலைத்தளத்தில் சில மாற்றங்களை [ தோற்றத்தில் ] கொண்டு வாருங்கள். உங்கள் ஆக்கங்கள் எப்போதும் நன்றாக இருக்கிறது.

Bro ஹிதாயத்துல்லாஹ்...நன்றி என் ஆக்கம் படித்து கருத்திட்டமைக்கு. எப்படி இருக்கீங்க? நலம்தானே.

சபீர்...இந்த போட்டோ விவகாரம் இப்படி தெஹல்கா மாதிரி போகும்னு தெரியாது. எதேச்சையாத்தான் போட்டேன்னு எழுதுனா மண் அள்ளி தூத்த நிறைய பேர் இருக்கீங்க என்பதால் .....வர்ரேன்...திரும்பி இது விசயமா எழுதமாட்டேன்னு சொல்ரேன்!!!

Ebrahim Ansari said...

இளையோர் அடித்த இந்த லூட்டி போல் முதியோர்க்காக வேண்டும் இன்னொருவாட்டி.

சந்தோசமாக இருங்கள் அதுவே எங்களுக்கும் சந்தோசம்.

Riyaz Ahamed said...

என் பூந்தோட்டத்தின் பூக்களை பார்க்கிறேன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு