Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அன்னாந்து பார்த்தது கேமரா ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | July 05, 2013 | , , , , , ,

அட ! இதைத்தான் பார்த்துட்டோமேன்னு அலுப்புத் தட்டினாலும் பரவாயில்லைங்க. மெய்யாலுமே பாஸ் இது நானே என் சொந்தக் கைகொண்டு எடுத்த ஃபோட்டோங்க அதுவும் இடதுகை விரல்கள் கேமராவின் பாடியை(!!) பிடித்துக்கொள்ள வலதுகை விரல்கள் கொண்டு விழிலென்ஸை உருட்டி உருட்டி ஒரு நிலைக்குள் வந்ததும் ஆள்காட்டி விரல் கொண்டு கஷ்டப்பட்டு அழுத்தி எடுத்த படங்கள் !

அல்கைல் ரோட்டில் காலைநேரப் பயணத்தில் காரை ஓரம் கட்டி இந்த தூரம் சுருக்கி ரசித்து எடுத்த படம் !


ஒரு மீட்டிங் அட்டெண்ட் செய்துவிட்டு அல்புர்ஜ் கலிஃபா டவரிலிந்து வெளியில் வரும்போது அன்னாந்து பார்த்தேன் அட ! கேமராவும் கையில் இருந்தது... வானம் பார்த்தது கேமரா !


படம் எடுக்க D90 நிக்கானுடன் அங்கே நிக்கனும்னு நிற்கவில்லை எல்லாமே எதேச்சையாக நடந்த நிகழ்வுகள் !

நம்புங்க !

அபூஇப்ராஹீம்

21 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அட! நம்ம அண்ணாத்தே! எடுத்ததா? ஜப்பான் காரன் கட்டியிருந்த என்னா பெயர் வைத்திருப்பான்??? நிக்குமோ நிக்காதோ!!!!(??????).

ZAKIR HUSSAIN said...

கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது படம் எடுத்ததா?...படம் நன்றாக இருக்கிறது. இதுபோல் இனிமேல் ஸ்டண்ட் வேலை எல்லாம் செய்ய வேண்டாம்.

டைம் மேனேஜ்மென்ட்:

# ஒரு வருடத்தின் அருமை தெரிய வேண்டுமா? ஒரு மார்க்கில் ஃபெயில் ஆகி அடுத்த வருடம் வரை காத்திருந்து பரீட்சை எழுதுபவனைக்கேளுங்கள்.



# ஒரு நிமிடத்தின் அருமை தெரிய வேண்டுமா?
" இப்படி திரும்பிட்டு கிராஸ் பன்னுனேன் ரோட்டெ எங்கேயிருந்து வந்தான்னு தெரியலெ அந்த மோட்டோர்பைக்!!!!!!






m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அடடா ! கிரவுனு... நல்ல வேலை ஜப்பான் காரன் கட்டவேயில்லை இதனை :)

காக்கா, காலையில வானம் தெளிவா இருந்த நேரம் அது காரை ஓரம் கட்டிவிட்டு எடுத்தப் பட்டம்... பக்கத்தில் இருந்த பில்டிங்க்ஸை மும்பை மெட்ரோ மாதிரி அப்படியே மறைத்து விட்டேன்... :)

Anonymous said...

மேகத்தை பார்த்து கேமரா நோக்கினால் மேகத்தை தான் பார்க்கும். வாகனத்தில் செல்லாமல் நின்று பார்த்தால் எதற்கும் பயம் இல்லை. வாகானத்தை ஒட்டிக்கொண்டு அன்னார்ந்து பார்த்தால் உயிர் நம்மை பார்த்து விடும். இந்த கேமரா வாகானத்தை ஒட்டிக்கொண்டு எடுத்தது போல் தெறுகிறது.

துபாயில் விபத்துக்கள் அதிகமாக நடந்து வருகிறது வாகனம் ஓட்டுபவர்கள் மிக கவனமாக ஓட்ட வேண்டும். வாகனம் ஓட்டுபவர்கள் இந்த மாதிரியான கேமரா எடுப்பதை விட்டு தவிர்ந்து விடுங்கள்.

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,

புகைப்படங்கள் மெனக்கெட்டு எடுக்கப்படுமாயின் அவை பெரும்பாலும் சாதாரணமாகவே இருக்கும். நாள் முழுக்க பல நேரங்களில் இந்த வானுயர்ந்த கட்டடங்களைக் கண்டு வந்தும் இப்படி மாறுபட்ட கோணங்களில் எடுக்கப்படுபவையே கவர்கின்றன.

கிரவுன்,
அண்ணாத்தே எடுத்தவை அத்தனையும் அன்னாந்தே பார்க்க வேண்டும்

Unknown said...

இதை எடுத்ததற்கு கழுத்தில் சுளுக்கு விழுந்திருக்கனுமே ?

இதைப்பார்த்ததும் ஒரு சிறு ஞாபகம் . அதாவது, இந்தக்கட்டிடம் , பாதி வரையில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கும்போது நான் துபாயில்தான் இருந்தேன்.

முழுதும் கட்டி முடிக்கப்படும் வரை அங்கிருக்க இறைவன் நாட்டமில்லை.
ஆனால் முழுமையான கட்டிடத்தின் புகைப்படத்தை பார்க்க இறைவன் நாடி இருக்கின்றான்.

அருமையான கிளிக்குகள் .

அபு ஆசிப்.

Anonymous said...

நல்லவேளை நீங்க தப்புச்சிங்க! உங்க கேமராதான் அன்னாந்து பாத்துச்சு! .நான் தெரியாத்தனமா அதுராம்படத்துலே இருந்து அன்னாந்து பாத்தேனா ! கழுத்து சுளுக்கி தலையே கீலே குனிஞ்சு பாக்க முடியலே!! மேலேயை பாத்துகிட்டு நடந்தா ''என்ன பகல்லேயே நோன்பு பிறை பாக்குறியலா?''ன்னு போறவன் வர்றவன் யெல்லாம் என்னே பாத்து கிண்டலடிக்கிறான்... சுளுக்கு எடுக்க 'ரெட்டைபிள்ளையா' பொறந்தவங்க யாரவது அங்கே ஈக்கிறாங்களா?

S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அடிலேந்து அன்னாந்து வரை கச்சிதமாய் செய்முறை விளக்கங்களுடன் காட்சி தந்தது நல்லாருக்கு!

Unknown said...

// சுளுக்கு எடுக்க 'ரெட்டைபிள்ளையா' பொறந்தவங்க யாரவது அங்கே ஈக்கிறாங்களா?//

சுளுக்குக்கும் (விஞ்ஞானத்திற்கும் ) ரெட்டைக் குழந்தைக்கும் என்ன சம்பந்தம் ?

ரொம்ப நாளா என் மனதில் உள்ள கேள்வி.

ஏதோ அந்தக்காலத்தில் மூட நம்பிக்கையில், ஒரு மன திருப்திக்காக சொல்லி வைக்கப்பட்ட ஒன்று என்று தான் என் மனதில் தோன்றுகின்றது. இந்த சுளுக்கும் ரெட்டைக் குழந்தை விவகாரமும்.

யாராச்சும் விளக்குங்களேன்.

அபு ஆசிப்.

Shameed said...

D 90 கேமராவ வச்சிக்கிட்டு இம்புட்டு நாளா என்ன செய்தீங்க !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"வெண் மேகத்தாளில் கட்டுரை எழுத முயற்சிக்கும்
பூமியின் மையில்லா உயர்ந்த எழுதுகோல்" என்றே எண்ணத்தோன்றுகிறது இந்த உயர்ந்த கட்டிடத்தை காணும் சமயம்.

துபாயில் அப்படி, இங்கு சவுதியில் நிறைமாத கர்ப்பிணி போல் தன் குலை தள்ளி பிரசவத்திற்காக/அறுவடைக்காக‌ காத்திருக்கும் ஒவ்வொரு பேரீத்த மரங்களின் அழகோ அழகே. அல்லாஹ்வின் அழ‌கிய‌ ஓர் அத்தாட்சி.

ஒரு ம‌ர‌த்திற்கு ச‌ராச‌ரியாக‌ ஆறு குலைக‌ள் இருக்கின்ற‌ன‌. ஒவ்வொரு குலையின் எடையும் சுமார் ப‌த்து கிலோ வ‌ரை இருக்கும். ம‌ன‌க்க‌ண்ணால் குத்தும‌திப்பாக‌ எடை போட‌ நேற்று வாய்ப்பு கிடைத்த‌து.

குருவிக‌ள் வ‌ந்து பேரீத்த‌ங்குலைக‌ளை கொத்தி உண்டு சேத‌ப்ப‌டுத்தாம‌ல் இருக்க‌ ஒவ்வொரு குலையும் புனித‌ ர‌ம‌ழானை முன் கூட்டியே வ‌ர‌வேற்ப‌து போல் ப‌ச்சை வ‌லையால் சுற்ற‌ப்ப‌ட்டிருந்த‌து காண‌ க‌ண்க‌ளுக்கும் குளிர்ச்சியாய் இருந்த‌து. (ந‌ம்ம‌ ஊராக‌ இருந்தால் ப‌க்க‌த்தில் சைக்கிள் மார்க் ஊதுப‌த்தி கொழுத்த‌ப்ப‌ட்டு கை நார்சா ஏதேனும் கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கும் என்று எதையேனும் கெழ‌ப்பி உட்டு அல‌ங்க‌ம‌ல‌ங்க‌ப்ப‌டுத்தி விடாதீர்க‌ள்)

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி!

இந்த புகழ்பெற்ற கட்டிடத்தின் இண்டீரியர் காண்ட்ராக்ட் பணிகள் நான் வேலை செய்த நிறுவனம் செய்தது. அதனை முன்னிட்டு அடிக்கடி இங்கு சென்று வர நேரிடும். எனக்கு ஒருமுறை கூட இதை படம் பிடிக்க வேண்டுமென்று தோன்றவில்லை. சிறப்பாக இருக்கிறது.

இப்படி எல்லோரும் கேமிராவைத்தூக்குவதால்தானோ பேசும்படம் சில நாட்களாக பேசாமலேயே இருக்கிறது?

அப்துல்மாலிக் said...

நீங்களும் ஆரம்பிச்சாசா, வாழ்த்துக்கள் காக்கா, அருமையா வந்திருக்கு

adiraimansoor said...


மு.செ.மு. நெய்னா முஹம்மது
எப்படி எப்படியெல்லாம் யோசிக்கிரீங்கப்பா
மிகவும் அருமையான கற்ப்பனை

"வெண் மேகத்தாளில் கட்டுரை எழுத முயற்சிக்கும்
பூமியின் மையில்லா உயர்ந்த எழுதுகோல்" என்றே எண்ணத்தோன்றுகிறது இந்த உயர்ந்த கட்டிடத்தை காணும் சமயம்.

adiraimansoor said...

ஆரம்பிசிட்டான்யா அபூ அசிப் ஆரம்பிச்சிட்டான்யா

"அதாவது, இந்தக்கட்டிடம் , பாதி வரையில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கும்போது நான் துபாயில்தான் இருந்தேன்."

adiraimansoor said...

அபு இப்ராமின் கேமராவில் பிடித்ததை எனது லேப்பின் ஹார்டிஸ்கில் சிறைபிடித்துள்ளேன்.
இதற்கு ராயல்ட்டியெல்லாம் தரமுடியாது.

Anonymous said...

அம்மாடியோ!.

இப்புடி மாடி மாடியா கட்டி ஒசத்தி வச்சுருக்காங்களே!

ஏறி பாக்க மனசாத்தான் இருக்கு... வந்தா ஏறிபாக்க ஏணி கொடுப்பாங்களா இல்லே இங்கேஈந்து தூக்கிட்டு வரணுமா ?

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வயதில் - மூத்தவர்கள் முதல் இளையவர்கள் வரை அன்னாந்து பார்க்க வைத்த படங்கள் எதேச்சையாக ரசனைக்குள் வரும்போது சிக்கிய காட்சிகள் அப்போது கையில் கேமராவும் இருந்தது.

MSM-அவ்பக்கரு: இந்தப் படம் எடுத்தது கார் ஓட்டும்போது அல்ல, இருப்பினும் தாம் குறிப்பிட்டிருக்கும் வாகன விபத்துகள் என்றதும் நேற்று இரவு எங்கள் ஃபேக்டரி ஒன்றின் புரடெக்ஷன் மேனேஜர் இரவு இஷாத் தொழுக்கு முன்னர் ஜெபல் அலி திரும்பி வரும் வழியில் அவருடைய கார் விபத்துக்குள்ளானது, நேற்று நள்ளிரவு வரை அங்கே இருக்க வேண்டியச் சூழல் எனக்கு ஏற்பட்டது. விபத்தில் பாதிக்கபட்ட மோட்டார் பைக் ஓட்டி வந்தவருக்கு காயங்கள் அதிகம், வண்டி ஓட்டிச் சென்ற இவருக்கு நெஞ்சில் அடிபட்டு இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் காயங்களோடு தப்பித்தனர்.

விபத்துக்கான காரணம் காரின் கண்ணாடிகள் சுத்தப்படுத்தப்படாமல் தூசியுடன் இருந்ததே... சாலை மற்றும் நிறுத்தத்திற்கான சிக்னல் சரிவர காரிலிருந்து பார்க்க முடியாமல் போனதும் முக்கிய காரணம்.

காரின் கண்ணாடிகளை எப்போது சுத்தமாக தெளிவான பார்வைக்கு வைப்பது நல்லது, இரவு நேரங்களிலும் வெயில் அதிகம் அடிக்கும் நேரங்களிலும் சாலையை தெளிவாக பார்க்க முடியாமல் போக நேர்ந்து விடுகிறது.

கவிக் காக்கா (இப்படி எதிர்பாராமல் எடுத்தவைகள் நிறைய இருக்கே என்ன செய்யலாம் !?), அபூஆசிஃப் காக்கா, மன்ஸூர் காக்கா, MHJ, MSM(n), அப்துல் மாலிக் மற்றும் சூப்பர் சீனியர் காக்காஸ் ஃபாருக் காக்கா, இ.அ.காக்கா ஆகியோரின் கருத்துகளுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்....

இ.அ.காக்கா பேசும் படங்கள் இனியும் பேசும், சில தருணங்களில் ஏசவும் வைத்து விடுகிறது (எங்கே என்று கேட்டு விடாதீர்கள்)...

மூன்றாம் கண் அவர்களுக்கு D90 மட்டுமல்ல இப்போ D7000 ம் இருக்கு ! :)

نتائج الاعداية بسوريا said...

//கவிக் காக்கா (இப்படி எதிர்பாராமல் எடுத்தவைகள் நிறைய இருக்கே என்ன செய்யலாம் !?), அபூஆசிஃப் காக்கா, மன்ஸூர் காக்கா, MHJ, MSM(n), அப்துல் மாலிக் மற்றும் சூப்பர் சீனியர் காக்காஸ் ஃபாருக் காக்கா, இ.அ.காக்கா ஆகியோரின் கருத்துகளுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்..//..

நம்மூர்ல மொத்தம் எத்தன காக்கா.
ரெக்க ரெண்டு இல்லாததுதான் குறை போங்க

abu asif.

ZAKIR HUSSAIN said...

//சுளுக்குக்கும் (விஞ்ஞானத்திற்கும் ) ரெட்டைக் குழந்தைக்கும் என்ன சம்பந்தம் ?//

சம்பந்தம் , சீர்வரிசை எல்லாம் பார்க்கனுமா அப்துல் காதர்....சுளுக்கு போயிடுச்சான்னுதான் பார்க்கனும்.

சமீபத்தில் ஒரு டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தேன். [ இந்தியாவில் படித்த சீனர் ] எந்த மருந்தை பற்றி சொன்னாலும் ' மெடிக்கல் கவுன்சில் அங்கீகாரம் ' இல்லாததால் அது தவறான மருந்து என்று சொன்னார்.


எனக்கு வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் டீ & எலுமிச்சை சாறு ஒன்றாய் கலக்கிதரும் என் அம்மாவுக்கு மெடிக்கல் கவுன்சில் எப்படி இருக்கும் என்று தெரியாது....ஆனால் மருந்து நிச்சயம் நிவாரணம் தரும். என் அம்மாவிடம் போய் 'அங்கீகாரம்/மெடிக்கல் கவுன்சில்" எல்லாம் பேசினால் ..." ஏன்டா பொறக்கிறுக்கு வந்த மாதிரி பினாத்துரே' என்ற கேள்விதான் மிஞ்சும்.

Anonymous said...

கடக்கரை தெரு கொடி மரத்தை ஏத்த நாங்க எத்தனை தீதீ போட்டோம் தெரியுமா?

இத்தா தண்டி கட்டடம் அத்தூக்கா நிக்கிறது ஒரு ஹோதரத்துதான்.... ஆமா கட்டடம் தூக்கி நிறுத்தும்போது பாத்தியா ஓதுன பட்டத்து லப்பையாரு?

S.முஹம்மதுபாரூக்அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு