அதிரையில் ரமளான் அதற்கான ஆயத்தங்கள், ரமளான் காலங்களில் பரபரப்பாகும் மாலை நேர இஃப்தார் தேவைகளுக்கான கடைகளின் அணிவகுப்பு அவர்களின் வியாபாரம் இப்படியாக அதிரைசார்ந்த வலைப்பூக்களில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
ரமளான் என்றால் எண்ணெயில் பொரியும் அயிட்டங்களில் சற்றே அதிகமான மக்களால் விரும்பிச் சுவைக்கும் உணவு வகைதான் 'வாடா, சமோசா'. நோன்பு கஞ்சிக்கு பெரும்பாலான நேரங்களில் பக்கபலமாகவும் கம்பீரமாகவும் இருக்கும் இந்த இரண்டு அயிட்டங்களும் கண்களை மட்டுமா ஈர்க்கும், நபுசையும் அசைக்கும் !
எல்லோரும் கடை போட்டுட்டாங்க இன்னும் நீங்கதான் ரமளான் கடை போடலையான்னு கேட்டுவிடக் கூடாது அல்லவா ! அதனால பசிக்கு ஏற்ற ருசியிருக்கும் சட்டியை நோக்கியது எமது மூன்றாம் கண் அதன் பளிச் கிளிக்தான் 'வாடா இங்கே' !
'வாடா இங்கே' உருவாகிறது !
மென்மையான கூட்டாளிகள் !
புது மாப்பிள்ளை முறுக்குடன் கம்பீரமாக செக்கசெவேலென்று பளிச்சென்று இருக்கும் மற்றுமொரு கூட்டாளிகள் கூட்டம்!
Sஹமீது
30 Responses So Far:
வாடாவில் ரால்தான் எலச்சாப்லெ ஈக்கிது!!
//வாடாவில் ரால்தான் எலச்சாப்லெ ஈக்கிது!!//
வாடாவில் உள்ள ராலுக்கு ஒரு சோடா வாங்கிக் கொடுக்கலாமா?
கஞ்சிக்குப் பின் வாடா!
என்ன ஒரு “காம்பினேஷன்” வைத்துப் பதிந்தார்கள்; அப்பப்பா!
இட்லிக்கு சாம்பார்
தோசைக்கு சட்னி
கஞ்சிக்கு வாடா
கண்டுபிடித்த கனவான் எவரோ?
கணியைத் திறந்தேனா
நோன்பைத் திறந்தேனா
நோன்பென்பதையும் மறந்தேனா
நாக்கில் ஊறும் இந்த உமிழ்நீரால் (நான் வாடாவையும் மெதுவடையையும் ருசித்துப் “பார்த்ததால்)என் நோன்பு முறிந்து விடுமா? அதன் பாவம் யாருக்குச் சாரும்?
மார்க்கம் அறிந்தவர்கள் மறக்காமல் பின்னூட்டத்தில் மறுமொழி தருக!
ஆயினும், இக்கணியின் இப்பக்கத்தைத் திறந்து வைத்துக் கொண்டே இன்றைய நோனபைத் துறக்கலாம் என்று நினைத்தேன்; ஆனால், கவிவேந்தருடன் இன்ஷா அல்லாஹ் அபுதபியில் அதிரை பைத்துல் மால் கிளை திறப்பு நிகழ்வில் நோன்பு துறப்பும் இருப்பதால் விட்டு விட்டேன்; ஆயினும் தொடர்ந்து வரிசையாக அடியேனுக்கு “இஃப்தார்’ விருந்தழைப்புகள் அபுதபியின் அனைத்துத் தமிழ் முஸ்லிம் சங்கங்கள் மற்றும் தமிழ் அமைப்புகளிடமிருந்து வந்து கொண்டிருப்பதாலும் என்றைக்காவது ஒரு நாள் நோன்பு முடிவதற்குள், இந்தப் பக்கத்தைப் பார்த்து கொண்டே நோன்புகஞ்சியுடன் ருசிக் கலாம்!
என்னதான் கஞ்சிக்குப்பின் வாடாவக இருந்தாலும் அந்தக்கஞ்சி (டூப்ளிகேட் கஞ்சி ) ஆனால் இந்த வாடவோ படங்களைப் பார்க்கும்போதே தக்வா பள்ளி பிரதான வாயில் ஞாபகத்தில் நிழலாடுகின்றது .
ஆனால் ஏன் ஒரு வாடா மட்டும் அவசரகோலத்தில் பொரித்தது போல் வாடாவின் அசல் வடிவத்தில் இருந்து மாறு பட்டு இருக்கின்றது. வந்த வாடிக்கையாள அவசரப்பட்டிருப்பாரோ என்னவோ தெரியவில்லை.
வாடாவின் ஆரம்ப ஆயத்த நிலையிலிருந்து அது வாடிக்கையாளர் கைக்கு போகும் வரை உண்டான படங்கள் உண்மையிலே என்னை அதிரை நகருக்கு ரியாதிலிருந்து அள்ளி சென்றுவிட்டது. (பாஸ்போர்ட் , விசா இல்லாமல் )
இங்கெல்லாம் இந்த நோன்பு காலத்தில் கனவில் கூட இதுபோன்ற வாடாவை நினைத்துப்பார்க்க முடியாத எங்களைப்போன்றவர்களுக்கு உண்மையிலயே இந்தப்படங்கள் ஒரு ஆறுதல்.
மேலே உள்ள தின் பண்டகளுக்கு என்னுடைய மதிப்பெண்கள் :
1) வாடா = 100 க்கு = 90
2) மெதுவடை = 100 க்கு = 80
3) சமூசா = 100 க்கு = 70
ஆதலால் முதல் மாணவனாக வந்த வாடா என்பவனுக்கு
முதல் பரிசாக ஹரிக்கன் லாம்ப் .
இரண்டாவதாக வந்த மாணவன் மெதுவடைக்கு தட்டு புலா
மூன்றாவதாக வந்த மாணவன் சமூசாவுக்கு அஞ்சரப்பொட்டி கொடுத்து
பெருமைப்படுவதில் சந்தோஷமடைகின்றேன்
அபு ஆசிப்..
ஒரு மரியாதைக்குறைவான தின்பண்டம் இந்த "வாடா"
உன் கடை வாடா, சமுசா, வடை, பஜ்ஜியை அதிரை நிருபரில் போட்டுக்காட்டுகிறேன் அதற்கு பதிலா எனக்கு ஒவ்வொன்னுலயும் பத்து பத்து தந்துருன்னு பேரம் எதும் பேசியிருப்பாரோ?
//ஒரு மரியாதைக்குறைவான தின்பண்டம் இந்த "வாடா"//
அப்போ மிக மரியாதையான தின்பண்டம் என்ன பஜ்ஜி யா?
ஜீஹான்.
யார் அந்த சாகுல் ஹமீது அவருக்கு தங்கமோதிரம் அணியக்கூடாது என்பதால் வெள்ளிமோதிரம் தயாராக உள்ளது.
இதிலும் இத்தனை ரசனையோடு படம்பிடித்திருப்பது மிகவும் அருமை ரசைனையோடு எடுக்கப்பட்டவரிடம் வாடா சுடச்சொன்னால் கண்டிப்பாக மிகவும் சுவைமிக்கதாக இருக்கும். வாடாவுக்கு பதில் போட்டோவையே திண்டுவிடலாம் போல இருக்கு எத்தனை ரசனை?
தின்பண்டங்கள் பார்ப்பதற்கும் , சுவைப்பதற்கும் அருமையாகத்தான் இருக்கும் கண்டிப்பாக. ஆனால், தின் பண்டங்களை பொரிக்கும் சட்டி ஏன் கரிப்பிடித்து , அழுக்காகவே இருக்கின்றது. நோன்புக்காக வேண்டியாகிலும் புது சட்டியில் போட்டு
பொரித்தால் என்ன ?
என்னதான் வாடா என்று எல்லோரும் சொன்னாலும் கடைசியாக இருக்கும் சட்டை கசங்காத புதுமாப்பிள்ளை கம்பிராத்துடன் இருக்கும் சமோசாதான் நம்ம ஃபேரவைட் !
என்ன வருத்தம் இப்போ இருக்கும் சமோசாவில் இரண்டு வெங்காயக் கீற்று, ஒரு கேரட் இதுமட்டும்தான் ஊரில் இருக்காமே !? சமோசா வாங்கிச் சாப்பிட்டது ஒரு காலம் என்று எழுதவைத்து விட்டார்களே என்பதுதான் !
இறால் இளைத்து விட்டதா ? இதைவிட பெரிசா வச்சா வாடா எண்ணெயில் மிதக்காதே மூழ்கிடுமே ! :)
//நாக்கில் ஊறும் இந்த உமிழ்நீரால் (நான் வாடாவையும் மெதுவடையையும் ருசித்துப் “பார்த்ததால்)என் நோன்பு முறிந்து விடுமா? அதன் பாவம் யாருக்குச் சாரும்?//
இந்த பாவம் யாரையும் சாராது.
ஏனனில் இது பாவமே அல்ல. நோன்பை முறிக்கும் காரியங்கள் என்று சில விஷயங்கள் இருக்கின்றன. அவைகளில் நாக்கில் எச்சில் ஊரும் விஷயமெல்லாம் அடங்காது.
தலைப்பில் ஒரு மரியாதைக் குறைவு தொனித்தாலும், உள்ளே உள்ள படங்கள் ராஜகம்பீரமாகவும் அதற்குண்டான பின்னூட்டங்கள் வெண்சாமரம் வீசிக்கொண்டும்(பேசிக்கொண்டும்) இருக்கின்றனவே!
இந்த வாடா(காமிராவில்)”சுட”த்தான் தவறாமல் நோன்பில் பார்த்து விடுப்பில் போவீரோ சுட்டும் விழிச் சுடரே?
\\ அவைகளில் நாக்கில் எச்சில் ஊரும் விஷயமெல்லாம் அடங்காது.\\
ஆம். இனிய நண்ப, இந்த விடயமெல்லாம் தெரியாமல் பள்ளிப்பருவத்தில் நாக்கு உலர உலர உமிழ்நீரைத் துப்பிக் கொண்டிருந்ததெல்லாம் ஞாபகம் வருதே!
//ஆம். இனிய நண்ப, இந்த விடயமெல்லாம் தெரியாமல் பள்ளிப்பருவத்தில் நாக்கு உலர உலர உமிழ்நீரைத் துப்பிக் கொண்டிருந்ததெல்லாம் ஞாபகம் வருதே!//
எந்த ஆன்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் கஷ்டப்படுத்துவது இல்லை - அல்-குரான்.
நம் சக்திக்கு மீறி நான் செயல்படுவேன் என்று தன்னிச்சையாக முடிவெடுத்தால் அது தற்கொலைக்கு சமம் என்றாகிவிடும்.
இ.அ.காக்கா........... உங்கள் கூற்றுப்படி ஜி ஹா
பஜ்ஜிதான்
வாடா என்று ரொம்ப உரிமையோடு கூப்பிடும் திண்பண்டம் ஒன்று இருக்கின்றதே என்று பெருமை படுங்கள்
ZAKIR HUSSAIN சொன்னது…
//வாடாவில் ரால்தான் எலச்சாப்லெ ஈக்கிது!!//
அதுக்குத்தான் பூதக்கண்ணாடி வச்சி காட்டிகிரகலே அதிரை நிருபர் காரவுக
Abdul Khadir Khadir சொன்னது…
//ஒரு மரியாதைக்குறைவான தின்பண்டம் இந்த "வாடா"//
என்னதான் மரியாதைகுறைவான பெயரா இருந்தாலும் இந்த "வாடா"களுக்கு நம் மனதில் ஒரு மரியாதை உண்டு
அபுஇபு நல்ல வேலை யாரும் கவனிக்கலே பத்தாய் கைலி உடுத்துன வாடாவை
அதிரை பைத்துல்மாலுக்காக அபுதபி போய்ட்டேன். இப்பத்தான் வந்தேன்.
நல்ல வேளை கடை இன்னும் காலியாகல.
காதர் ஊத்துன ஜொள்ளு துபை வரை ஈரமாயிருக்குது. மன்சூரு, ஹமீது தெரியாதா? உனக்குத் தெரியும் ஆனால் நினைவில்லை என்று நினைக்கிறேன். ஆள பார்த்தா ஞாபகம் வந்துடும்.
இதத்தான் ரெட்டைச்சூடி என்கிறார்கள். சுட்டு வைத்ததையே காமிராவில் சுட்டு வைத்திருப்பதை.
ஹமீது, இவ்வளவு தெளிவாக நான் இதுவரை இந்தப் பலகாரங்களின் ஃபோட்டோக்களைக் கண்டதில்லை.
வெல் டன்.
கஞ்சி காய்ச்சி வாடா போட்டது ரொம்ப நல்லாயிருக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும் . கொஞ்சம் தாமதமாய் வரலாமா? ரொம்ப அலைச்சல் மற்றும் கலைப்பு!கடைய மூடிவிடாதிய வந்து நல்ல வெட்டு வெட்டனும்.
எல்லாம் நல்லார்க்கு ஆனால் வாடா தான் அந்த பழைய பத்தாய்க்கைலியில் கொஞ்சம் படுத்துக்கெடந்துட்டு வருது...அதுனாலெ ஹைனீஜிக்கை மனதில் கொண்டு இனிமே வாடா சுடுறவங்களுக்கு யாராச்சும் குதிரை மார்க் வெள்ளை வேட்டி ஒன்று புதுசா எடுத்துக்கொடுத்தால் தேவல.......இல்லாட்டி அந்த வேட்டிக்கு உள்ள செலவை வாடா கலியாவுடன் கொஞ்சம் சேத்து உட்ற வேண்டியது தான்......
//M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)சனி, ஜூலை 20, 2013 4:08:00 AM
கஞ்சி காய்ச்சி வாடா போட்டது ரொம்ப நல்லாயிருக்கு!//
Yes
அஜ்மான் கஞ்சி
அதிரை வாடா
MSM(n):
வாடா சாப்பிடும்போது 'பத்தாயக்கைலி' ஞாபகத்திற்கு வருமா ? இல்லை குதிரை மார்க் கைலி ஞாபகத்திற்கு வருமா ?
குதிரைச்சாப்புன்னாதான் "வாடா"
பத்தாய்க்கைலின்னா...? "வாடி"
வாடா வுக்கு ஓட்டை மிஸ்ஸிங்....
ஒட்டைப்போட சடப்பா வந்துச்சா இல்லே இப்போ உள்ள வாடாவுக்கெல்லாம் ஓட்டை யில்லை....
அதிரை வலைத்தளங்கள் யாவற்றிலும் ஒரே வாடா சட்டியாத்தான் இருக்கிறது.கஞ்சி காச்ச முயற்சி செய்தவர் வாடாவும் செய்ய முயற்சிக்கலாம்.ஆகவே,வாடா எடுக்க ஒரு குடைக் கம்பி தேவைப்படும்.யாரிடமாவது உடைந்த குடையிருந்தால் கம்பி அனுப்பி உதவி செய்யலாம்.{மலேசியா குடைக் கம்பியாகயிருந்தால் உத்தமம்}
பூவோடசேர்ந்த நாறும் மணக்கும் என்பதுபோல் வாடா கடையோட சேர்த்து கைலிக்கும் விளம்பரம்
ZAEISA சொன்னது…
//அதிரை வலைத்தளங்கள் யாவற்றிலும் ஒரே வாடா சட்டியாத்தான் இருக்கிறது.கஞ்சி காச்ச முயற்சி செய்தவர் வாடாவும் செய்ய முயற்சிக்கலாம்.ஆகவே,வாடா எடுக்க ஒரு குடைக் கம்பி தேவைப்படும்.யாரிடமாவது உடைந்த குடையிருந்தால் கம்பி அனுப்பி உதவி செய்யலாம்.{மலேசியா குடைக் கம்பியாகயிருந்தால் உத்தமம்}//
கம்பிய தம்பிட்டே கேட்டிகலாம்
Post a Comment