Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நோன்பு கஞ்சி செய்யாதிருப்பது எப்படி..! 55

அதிரைநிருபர் பதிப்பகம் | July 18, 2013 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

முதலில் நம்மூர் வழக்கப்படி ‘கொருத்துப்போட்டு’விடுவோம்.  வாங்க… அமீரகத்தில் பள்ளிக்கூடங்களின் விடுமுறை மாதங்களான ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வீட்டுக்கார அம்மாக்களால்  அம்போ என்று விடப்பட்ட தற்காலிக பிரமச்சாரிகள் எல்லாம் என் பக்கம் வந்துவிடுங்கள்.  விடுப்பு கிடைத்தாலும் விடுவதாயில்லை என்று ஊருக்குப் போகாமல் வீட்டுக்காரம்மாக்கள் இங்கேயே தங்கிவிட்ட, அட்டைப்பூச்சிகளை மணந்த,  நிரந்தர சம்சாரிகள் அந்தப் பக்கமாக என்று கொருத்துப்போட்டுக்கொண்டால் ஆட்டத்தைத் துவங்கி விடலாம்.

நோன்பு என்றாலே எனக்கு அமல்களுக்குப் பிறகு சட்டென்று அடிப்பது நோன்புக் கஞ்சி வாடைதான்.  தங்கத்தைவிட நோன்புக் கஞ்சியின் மஞ்சள்தான் எனக்கு மனோரஞ்சிதம்.  அதுவும், பரிமாறும் தருணத்தில் கஞ்சியின் ஆடை மல்லாவின் மேல்புறத்தில் உறைந்துபோய் கிடக்க, பிய்த்துப்போட்ட வாடாத் துண்டுகள் அந்த ஆடையின் பரப்பு இழுவிசையைத் துளைக்க முடியாமல் மிதக்க… நகரா அடிப்பது போலல்லாமல் அனைப்பதுபோல் ஆனந்தமாக இருக்கும்.  நோன்புக் கஞ்சி இல்லாமல் நோன்பு துறப்பது என்பது ஏர் அரேபியாவில் பயணிப்பதைப் போல, பயணம் வசதியாக இருந்தாலும் பட்டினி போட்டுறுவாய்ங்க.  விவரமானவர்கள் எல்லாம் விமானம் பறந்தெழுந்தவுடன் (flight take off) பொட்டலங்களைப் பிரித்துவிடுகிறார்கள்.  அதென்னவோ, விமானத்தில் தரும் சாப்பாடு என்னவாக இருந்தாலும், நமக்கு முன் வைக்கப்படும் சாப்பாடு மீனாகவேக்கூட இருந்தாலும் கொஞ்சம்கூட உணவு வாசம் நாசி தொடாது; மணமே இருக்காது.  ஆனால், ஏர் அரேபியப் பயணிகள் பொட்டலங்களைத் திறந்தவுடன் பலதரப்பட்ட உணவு வாசம் மூக்கைத் துளைக்கும். அதிலும் குறிப்பாக சாம்பார் வாடை சட்டையைப் பிடித்து உலுக்கும்.  சாதாரண சான்ட்விச் (sandwich) கூட செழிப்பாக மணக்கும்  இப்படியாகத்தான் யாருக்கு ஃபோன் பண்ணினாலும், எங்களிடம் உணவுப் பொட்டலங்கள் இருக்கின்றன என்னும் ஏர் அரேபியத் திமிரோடு,  தாம் நோன்புக் கஞ்சி காய்ச்சித்தான் நோன்பு துறப்பதாகச் சொல்லவே உசுப்பேத்தப்பட்ட நான், “நானும் கஞ்சி காய்ச்சப் போகிறேன்” என்று சூளுரைத்தேன்.

சொன்னதுதான் தாமதம், என் நளபாதத் திறமைகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கும் நண்பர்கள் என்னைக் கஞ்சி காய்ச்ச ஆரம்பித்துவிட்டார்கள்.  “தலைப்பிறையில் கஞ்சி காய்ச்சப் போகிறாயே, தலைக்கறிக் கஞ்சியா?’ என்று ரைமிங்கில் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.  தலக்கஞ்சியா? தலையா? மூச்!  கோலாலம்ப்பூர் பார்ட்டி ஏற்கனவே எச்சரித்தது நினைவில்லையா? (ஆட்டு மூளை வறுவலும் ஆஸ்பத்திரி டோக்கனும்) “ஆட்டுக்கரியாவது ஒரு ரெட்டைக்கிளி தீப்பட்டி சைஸில் சாப்பிட்டுக்கோ ஆனால், பார்ட்ஸ் (organs of animal) சாப்பிட்டே உன்னோட பார்ட்ஸ் கெட்டுடும்” என்ற எச்சரிக்கை எனக்கு ஆட்டை முழுசாப் பார்க்கும்போதுகூட நினைவில் வரும்.

ஆனால், நான் கோலால்ம்பூர் போயிருந்தபோது கவனித்த வகையில் மலேசியக்காரவுக ஒன்னும் ஆரோக்கியமான உணவு உண்பதாகத் தெரியவில்லை.  ஒரு நாள் தங்கியிருந்ததில் கவனித்த வகையில் ஜங்க் ஃபுட்(junk food)டைத்தான் விரும்பி சாப்பிடுகிறார்கள்.  என் நண்பர்களோடு தங்கியிருந்த ஓட்டலின் கீழ்த்தளத்தில் அமைந்துள்ள ரெஸ்ட்டொரென்டில்  சாப்பிட போனபோது, நம்மூர்ல ‘லொக்கடா’ன்னு சொல்வோமே ஒரு ப்ரெவுன்(brown) நிறக் கவர், அதைக்கொண்டு பொட்டலம் பொட்டலமாக மடித்து வைத்திருந்ததைக் காட்டி, “ரெண்டு” ஆர்டர் பண்ணினான் ‘கலிஃபோர்னியா’ பார்ட்டி.  வந்ததும் பிரித்துப் பார்த்தால் அருமையான புலாவ் சாதத்தை அப்படியே தராமல் அதில் நெத்திலிக்கருவாட்டைப் போட்டு ‘நாசமாப்போச்சி’ என்று ஏதோ பேர் வைத்துத் தந்தார்கள். எனக்கு அந்தப் ‘பொட்டலத்தில் சாதம்’ பார்த்ததும் ஏனோ ‘பட்டணத்தில் பூதம்’ நினைவுக்கு வந்தது.  இதற்கிடையே மீ கொரிங்க் வாங்கி சாப்பிட்டுகொண்டிருந்த எனக்கு வாயில் வைத்ததும் காலை வரை காத்திராமல் ‘எங்கேயோ’ எறிந்தது. என் சிங்கப்பூர் நண்பனுக்கு தலையில் எஞ்சியிருந்த நான்கைந்து உரோமங்களும் உறைப்புத் தாழாமல் கண்முன்னே உதிர்ந்து விழுந்தன.  மலேசியர் சாயலில் இருந்த மற்றொரு நண்பன் ஏற்கனவே ச்செக்கச்செவப்பே, முகம் மெத்தச் செவந்து செவ்விந்தியராகிப்போய் ‘உறைப்புத் தாங்க முடியலே. கொஞ்சம் குறைத்துத் தரமுடியுமா?’ என்று தட்டைத் திருப்பிக் கொடுக்க, அவர்கள் குறைத்துக் கொடுத்த மீ கொரிங்க் சாப்பிடுகையில் கண்ணீர் சிந்தினான் கத்தார் பார்ட்டி.  இந்தக் களேபர நாடகங்கள் முடிந்து திரையிறங்கும் நேரத்தில் எங்களைப் பார்க்க வந்த ஜாகிருக்கு உறைப்பை மறைத்து இனிமையாகச் சிரித்து வைத்தோம். “உனக்கும் ஒன்னு ஆர்டர் பண்ணவா?’ என்று கேட்ட கலிஃபோர்னியக்காரனுக்கு “வேண்டாம் வேண்டாம்” என்று பதறிய ஜாகிரின் மறுப்பு எனக்கொன்றும் புதிராகத் தோன்றவில்லை.

கஞ்சி மேட்டருக்கு வருவோம்.  கஞ்சி காய்ச்சப்போறேன் என்று சொன்னதும் என்னைக் கஞ்சி காய்ச்சத் துவங்கிய பார்ட்டிகளுக்கு சவாலாக களத்தில் இறங்கினேன்.  எப்படி காய்ச்சுவது என்று நான் எத்தனை பேரிடம் கேட்டேனோ அத்தனை பேரிலும் ஒருத்தர்கூட மற்றொருவருடைய முறையை ஒத்துச் சொல்லாதது என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது, மன உளைச்சலுக்கு உள்ளானேன், வேதனைப்பட்டேன்.  எனக்கு ஏனோ எல்லாக் கருத்துகளிலும் வேறுபட்டு நிற்கும் இயக்கக் காரர்களின் மார்க்க விளக்கங்கள் சட்டென்று நினைவுக்கு வந்தது.  

முதலில் மனைவிக்கு ஃபோன் போட்டு, “நீ சூப்பரா நோன்புக் கஞ்சி காய்ச்சித்தருவியே, எப்படி செய்தே?” என்று கேட்டேன்.  “ உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை.  கஞ்சி குடிக்கனும்னு தோணினா கடைல வாங்கிக் குடிங்களேன்” என்றவளிடம் கட்டாயப்படுத்தி கேட்டதில், “இன்னென்ன பொருட்களையெல்லாம் போட்டு ப்ரெஷெர் குக்கரில் 4 விசில் வச்சா கஞ்சி ரெடி” என்றாள்.  அடுப்பங்கரையில் தேடிப்பார்த்ததில் ப்ரெஷர் குக்கரின் விசிலைக் காணவில்லை. “விசில் எங்கே?” என்று மீண்டும் ஃபோனில் கேட்டால், ‘இல்லாட்டி என்ன? நீங்களே 4 விசில் அடிச்சிட்டு இறக்கிடுங்க” என்று சொல்வாளோ என்கிற பயத்தில் என் காக்காவுக்கு ஃபோன் பண்ணினேன். அவர், “அரிசி இந்தா இம்புட்டு, கடலைப்பருப்பு இம்புட்டு” என்று ஆரம்பிக்க, “காக்கா, இம்புட்டுன்டா அளவு பிடிபடமாட்டேங்குதே. இத்தனை கிராம் என்று சொன்னால்தானே விளங்கும்” என்றேன். “நோன்பாளிகளைச் சித்ரவதை செய்யாதே” என்று ஃபோனை வைத்துவிட்டார் .  அதிரை நிருபரின் அபு இபுவோ, “காய்ச்சி வைத்தால் நெறிப்படுத்த மட்டுமே தெரியும்” என்று தன்னைத் தற்காத்துக்கொண்டார்.  தம்பி தாஜுதீனுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி அல்லவா, அந்த நினைப்பில் எனக்கு உதவ முன்வந்தார்.

“ஒரு சட்டியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கிக்கொள்ளுங்கள். இன்னொரு சட்டியில் அரிசி பருப்பு வெந்தயம் இவற்றை ஊர வைத்துக் கொள்ளுங்கள். மூன்றாவது சட்டியில்” என்று துவங்க, “இருங்க இருங்க. ஒக்கே ஒக்கடு மல்லா கஞ்சி காய்ச்ச இத்தனை சட்டிகளா? ஒரு சட்டியை ‘அட் எ ட்டைத்ல ஹேன்ட்ல் (handle at a time)’ பண்றதே எனக்கு பெரிய விஷயம்.  மூன்றெல்லாம் ட்டூ மச், வீண் முயற்சி’ என்று அந்தத் திட்டத்தைக் கை விட்டேன். “ஏங் காக்கா சிரமப்படுறிய? நோன்பு திறக்க இங்க வந்துடுங்களேன்” என்ற தாஜுதீனின் அழைப்பில் அன்பிருந்தது; கஞ்சி மணத்தது.  “துபையில் அந்தரத்தில் காரை பார்க்கிங் செய்யும் வசதி வரும்வரை அங்கு வருவதாயில்லை” என்று மறுத்து விட்டேன்.

அப்பத்தான் எனக்கு சவுதியில் ஜுபைலில் வசிக்கும்போது இதுபோன்றொதொரு சூழலில் ‘எப்படி நோன்புக் கஞ்சி காய்ச்சுவது’ என்று ரஹிமாவில் வசித்த, பெரிய கண்களோடு கண்ணாடிக்கடையில் இருந்த நண்பன் ஆஷிக்கின் ரெசிப்பி(recipe) நினைவுக்கு வந்தது.

“உனக்கு மட்டும்தானேடா? ஒரு முறை செய்து ரெண்டு நாட்களுக்கு வைத்துக்கொள்” என்று வழக்கம்போல் சிக்கனத் தொனியில் புத்தி சொல்லிவிட்டு,”கைப்பிடியளவு அரிசி, அரைக்கைப்பிடியளவு கடலைப் பருப்பு, காற்கைப்பிடியளவு வெந்தயம் மூன்றையும் அலசி ஆறு மடங்கு தண்ணீரில் அதே சட்டியை அடுப்பில் வைத்து கொதிக்கவை. அது கொதிக்கும்போதே வரிசையாக வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, முட்டைக்கோசு, காரெட், பீன்ஸ் ஆகியவற்றை வரிசையாக நறுக்கிப் போட்டுக் கொண்டே வா.  அத்துடன் மசாலாவை ஸ்பூனில் எடுக்காதே. ஒரு கத்தியை எடுத்து அதைக்கொண்டு, அதாவது கத்தி முனையளவு மஞ்சள், இரண்டு கத்திமுனையளவு சீரகத்தூள், இரண்டு கத்தி முனையளவு மிளகுத்தூள், தேவைக்கேற்ப உப்பு போட்டு கொதிக்கவை.  இடையில் மல்லி மற்றும் புதினாத் தழைகளின் இலைகளை மட்டும் பறித்துப் போடு. கொஞ்சம் தேங்காய்ப்பால் ஊத்தி இறக்கினால் கஞ்சி ரெடி” என்றான்.

எம்ப்பி 3 யில் ஒரு ஜூஸ் குர் ஆன் ஓதிக்கொண்டிருக்கும்போதே இவையாவையும் செய்து பார்த்ததில் தஞ்சாவூர் ஆத்தங்கரை பள்ளியில் தரும் பால் கஞ்சி ரேஞ்சுக்குத்தான் கஞ்சி வந்தது, துவையல் இல்லாததுதான் குறை. நம்மூர் நோன்புக் கஞ்சிக்கு நாக்கைத் தொங்கப் போட்ட என்னைப்பார்த்து ‘பெப்பே’ என்றது பால் கஞ்சி. ஏனோ கஞ்சியில் எல்லாப் பொருட்களும் கொஞ்சம் கொஞ்சம் குறைவாகவே எனக்குப் பட்டது.  அவனிடம் கேட்டபோது, “இதுதான்டா ‘சிக்கன’க் கஞ்சி; கோழி போட்டேன்னா ‘சிக்கன்’ கஞ்சியாயிடும்” ன்னான்.

“நீ ஏன்டா யார் யார்ட்டேயெல்லாம் கேட்டே. நான் சொல்றபடி செய்” என்று முன்வந்த என் நண்பன் அஸ்லம் என் சமையல் திறமைகளைப் பற்றி முன்பின் அறியாததால் முதலில் மேலோட்டமாகச் சொல்லத் தலைப்பட்டவன், நான் கிரகிக்கத் தடுமாறுவதைப் பார்த்து சற்றே மிரண்டு போனான்.  “நான் வேணா வந்து காய்ச்சித் தரவா?” என்று தப்பிக்க முயன்றவனை என்னோடான நட்பு ஆட்டிப்படைக்க, ஆனா ஆவன்னாவிலிருந்து துவங்கினான்.  அவன் சொன்ன குறிப்புகள் இலகுவாக இருந்ததோடு கற்பனையில் செய்யும்போதே நம்மூர் நோன்புக்கஞ்சி வாடை வீசியது.  இறங்கி விட்டேன்.

ஆஷிக் சொன்ன அதே பொருட்களை “மொத்தமாக வெட்டி வைத்து சட்டியில் போட்டு வேகவை” என்கிற இலகுவான முறை என்னைக் கவர்ந்ததால் அப்படியே செய்தேன். .  கஞ்சியின் திடப்பொருட்கள் அனைத்தும் அணிதிரண்டு ஒரு பக்கமாக ஒதுங்கிக் கிடக்க மேலே தெளிவாகத் தண்ணீர்மட்டும் தனித்துக் கிடந்தது.  கரண்டிகொண்டு கலக்கிவிட்டாலும் சுழன்று முடிக்கும்போது மீண்டும் தனித்தனியாகவே திரண்டு கொண்டன.  காய்ச்சி முடித்த நோன்புக் கஞ்சியை நான் குடித்தபோது என் எதிரில் இருந்திருக்க வேண்டும் நீங்கள்.  இஞ்சி தின்ற குரங்குபோலானது கஞ்சி குடித்த என் மூஞ்சி. என்ன செய்ய? வேறு வழியில்லாமல்,  கிரிக்கெட்டில் தோற்ற அணியின் மிகவும் பிரசித்தி பெற்ற வசனமான, “வி வில் லேன் ஃப்ரம் அவர் மிஸ்ட்டேக்ஸ் (we will learn from our mistakes) என்னும் தாரக மந்திரத்தின்படி என் கஞ்சி காய்ச்சும் தினங்கள் தொடர்கின்றன.  

உருப்படியான நோன்புக்கஞ்சி உங்களிடம் இருப்பின் ஷார்ஜாவுக்கு ஒரு மல்லா பார்சே….ல்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

55 Responses So Far:

Shameed said...

நோன்பு கஞ்சியை இப்புடி போட்டு கஞ்சி காச்சின முதல் ஆள் நீங்களத்தான் இருக்கணும்

Ebrahim Ansari said...

ஹஹஹ்ஹஹா.

தம்பி சபீர்! அஸ்ஸலாமு அலைக்கும்.

வரிக்கு வரி அதிரை கடல்கரைத்தெரு ஆட்டுத்தலைக் கஞ்சியை ( அந்தக் கால வா. மு. , சேகு உதுமான் ஹாஜியார் வீட்டாரின் உபயம் )குடித்து போல சுவை. நீங்கள் காய்ச்சிய கஞ்சியின் சுவையை விட எழுத்தின் சுவை எகிறி அடித்துவிட்டது.

இவ்வளவு அவதி ஏன்? காக்கா எதற்கு இருக்கிறேன். ஒரு ஈ மெயில் விட்டு இருந்தால் குரூப் முழுமைக்கும் சேர்த்து ஒரு ரெசிப்பியை நான் அனுப்பி இருப்பேனே. இதை சாக்காக வைத்து இப்போது கேட்டுவிட வேண்டாம்.

இப்போ தெரிகிறதா கசப்பாகவே இருந்து போக நேரிட்டாலும் இனிக்க வைக்கும் கைப் பக்குவம் என்றால் என்ன என்று? யாரால் என்று?

அங்கேயே தங்கிவிட்ட அட்டைப் பூச்சிகளின் மகத்துவம் இப்போதாவது புரிந்து இருக்கும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கஞ்சி செய்வதெப்படி -ன்னு இப்படி எல்லார் ரெசிப்பியையும் தந்து குழப்பி எங்களையும் கஞ்சி காய்ச்சி விட்டீர்கள்.

விசில் அடிச்சு மெத்தேடெ மட்டும் கேளுங்க "உங்களுக்கு கஞ்சி ரெடி"

காச்சின கஞ்சியை dry பண்ணி மீண்டும் சுடுதண்ணி ஊத்தி புதுப்பித்தால் மாறாத taste கிடைக்கும் என்றால் test பண்ணி parsal அனுப்ப தயார்.

மொத்தத்தில் கஞ்சி சூப்பரு! இப்தார் எப்படியாவது சிறக்க வாழ்த்துக்கள்!

ZAEISA said...

நோன்புக் கஞ்சிதானே....அப்படி ஒன்னும் சீனத்துவித்தயல்ல.ஸஹரில் மிஞ்சிய ஆணத்தில் மிஞ்சிய சோத்தப்போட்டு தேவையான கொஞ்சம் கடலபருப்பு கலந்து ஒரு ஆளுக்கு 3 க்ளாஸ் தண்ணி என்ற விகிதத்தில் கலந்து கொதிக்க வைத்தால் நோன்புக் ..கஞ்சி.ரெடி "கவிப்புலமோங்கி கஞ்சி காச்ச தெரியாவிடின் அதிரைக்கு வருமாம் இழுக்கு"










ZAKIR HUSSAIN said...

பாஸ் ..அந்த போட்டோவில் போட்டிருக்கும் பிஸ்கட் எங்கே கிடைக்கும் பாஸ்?

sabeer.abushahruk said...

//நோன்புக் கஞ்சிதானே....அப்படி ஒன்னும் சீனத்துவித்தயல்ல.ஸஹரில் மிஞ்சிய ஆணத்தில் மிஞ்சிய சோத்தப்போட்டு தேவையான கொஞ்சம் கடலபருப்பு கலந்து ஒரு ஆளுக்கு 3 க்ளாஸ் தண்ணி என்ற விகிதத்தில் கலந்து கொதிக்க வைத்தால்...//

பிச்சிக்கும்!



அதிரை.மெய்சா said...

நண்பா .. ஏன் இவ்வளவு சிரமப்பட்டாய். என்னிடம் ஒரு வார்த்தை கேட்கிருந்தால் சிம்பிள் அன்ட் பெஸ்ட் யோசனை சொல்லியிருப்பேனே.!

sabeer.abushahruk said...

நேற்றைய நிலவரப்படி, கலவர பூமியில் (அதாங்க, கிட்ச்சனில்) எனக்கு நிகழ்ந்தவற்றையும் கஞ்சியைப் போலவே பகிர்ந்துவிடுகிறேன்.
 
ரொம்ப ஸ்மார்ட்டுன்னு நெனச்சி, ரெண்டு அடுப்பிலே ஒன்னுல கஞ்சியும் மற்றொன்றில் இஞ்சிட்டீயும் போட்டுக் கொண்டிருந்தேன். (டைம் மேனேஜ்மென்ட்டாம்).  ரெண்டு சட்டிகளுக்கும் அஃப் கோர்ஸ் ரெண்டு அகப்பைகள் பிரயோகித்தேன்.  ஏதோவொரு பாடாவதி ஃபோன் காலை அட்டென்ட் செய்து பேசிக்கொண்டே தவறுதலாக கஞ்சி ஆப்பையை ட்டீ சட்டியில் விட்டு கலக்க…
 
இஞ்சி ட்டீ
கஞ்சி ட்டீ ஆகிப்போனது, அந்தோ!
 
அத்துடன் பாலின் மூலக்குறுகள் யாவும் படைவீரர்கள் போல் திரண்டு… டீ தெறஞ்சி போச்சுது  மக்களே !
 
 
 
இப்படித்தான் மற்றொரு தினம், கஞ்சி காய்ச்சிக்கொண்டிருக்கும்போது ஃபோனில் பேசிக்கொண்டே ஏதோ மிஸ்ட்டேக் செய்துவிட்டேன்.  அப்புறம் எவ்வளவு நினைவுபடுத்தி பார்த்தும் செய்த மிஸ்ட்டேக் ஞாபகத்திற்கு வரவே மாட்டெங்குது.  அப்படி என்ன மிஸ்ட்டேக் செய்தேன் என்று தெரிந்தால் கஞ்சி காய்ச்ச கற்றுக்கொண்டதாக ஆகிவிடும்.  காரணம், என்னிக்கு மிஸ்ட்டேக் பண்ணினேனோ அன்னிக்கி, வல்லாஹி, கஞ்சி நல்லாருந்ததுங்கானும்.
 
 
கஞ்சித் தத்துவம்!
 
தேவைக்கேற்ப
அரிசி உடைஞ்சா
குடிக்கக் கஞ்சி ருசியாயிருக்கும்
 
தேவையில்லாமல்
வார்த்தைகள் உடைஞ்சா
படிக்கக் கவிதை சகிக்காது
ரெட்டை நோன்பு வைத்தக் களைப்பை
வாசகனுக்குத் தந்து விடும்.
 
 
(இன்னும் இருக்கு சேட்டை)
 
 

sabeer.abushahruk said...

ஊடால பின்னூட்டங்களுக்கு பதிலும் கொடுத்துக்கொண்டே வருவோம். அப்புறம் நேரம் கிடைக்காமல் போய்விடும்.
 
மூன்றாம் பிறையில் காய்ச்சிய கஞ்சியை முப்பதாம் பிறைவரை வைத்திருக்காமல் ஒன்பதாம் பிறையிலேயே ஊத்திக் கொடுத்த…(வேணாம்) பகிர்ந்துகொடுத்த அதிரை நிருபருக்கு ரெண்டு மல்லா நன்றி.
ஹமீது,
இங்கே சிலதுகள் என்னய ‘தலைவரே’ன்னுதான் விளித்துக்கொண்டு திரியுதுகள்.  ஜாகிரும், ஜெய்சங்கர் படத்தின் வில்லன்களைப்போல ‘பாஸ்’னுதான் கூப்பிடுறான்.  அதயும் எம்மக்கள் சுருக்கி ‘தல’ன்னு கூப்பிடுதுகள்.  அதனால நான் காய்ச்சிய கஞ்சிய ‘தலக்கஞ்சி’னு அடையாளப்படுத்தினால் தப்பில்லதான்.  மற்றபடி தலைலாம் போட்டுக் காய்ச்சல. நான் காய்ச்சிற கஞ்சி எனக்கும் பிடிக்கல உங்களுக்கும் பிடிக்காது. அதெப்பெடி சட்டிக்கு மட்டும் நல்லா ‘புடிச்சிப் போயிடுது?’
 
இ.அ. காக்கா அவர்கள்:
வ அலைக்குமுஸ்ஸலாம் காக்கா.
நீங்கள் ரொம்பதான் எங்கூட்டம்மாவைப் புகழ்கிறீர்கள்.  “என்னதான் செய்ய. கஞ்சி ட்டேஸ்ட்டே வரமாட்டேங்குதே” என்ற வினாவுக்கு விடை தருமுன் சில ஆப்ஷனல் கொஸ்ட்டின்ஸ் கேட்டார்கள்.  நான் பதில் சொல்லிக்கிட்டே வந்தேன். சீரகத்தில் வந்தது எனக்கு ஆப்பு.
“சீரகம் தீர்ந்து போயிருந்ததே. தூள் வாங்காதீர்கள். முழு சீரகத்தை மிக்ஸியில் அரைச்சி வச்சி யூஸ் பண்ணுங்க”ன்னாங்க.
“சீரகம் இருக்கே”ன்னேன். “இருக்காதே”ன்னாங்க
“அப்ப, க்ராஃப்ட் ச்சீஸ் பாட்டிலில் உள்ளது என்ன?” என்றேன்.
“அல்லாஹ், அது சோம்புங்க. அப்ப இத்தனை நாளா சீரகம்னு நெனச்சி சோம்பையா போட்டு வந்தீங்க. கஞ்சி வெளங்கிடும்”னு சிரிச்சாங்க.
“எல்லாம் உன்னாலதான்.  போனமுறை நீ ஊருக்குப் போயிருந்தபோது எல்லா போத்தல்லேயும் ‘மிளகா, சீரகம், சோம்பு, மல்லி’ என்று லேபில் எழுதி ஒட்டி வச்சிருந்தேனே நீ ஏன் கிழிச்சி போட்டே” ன்னேன்.
“ஏன்னா, அது கிட்ச்சன் –ங்க. கெமிஸ்ட்ரி லேப் இல்ல” ன்னாங்க.
எங்க வீட்டுக்காரம்மா மொத்தமா மசாலா தூள்களை பெரிய் ஜார்களிலும் உடனடி பிரயோகத்திற்காக சிறிய அளவுகளில் காலி செய்யப்பட்ட காஃபி பாட்டில், ச்சீஸ் க்ளாஸ், ந்யூட்டெல்லா பாட்டில், ஜாம் பாட்டில், மியோனிஸ் பாட்டில் போன்றவற்றிலும்; பருப்பு வகைகளை ஓட்ஸ் டப்பா, பிஸ்கெட் ட்டின் போன்றவற்றிலும் நிரப்பி வைத்திருப்பார்கள். அதற்காக ‘அடடா சூப்பர். சிக்கனம்’ என்றெல்லாம் நினைக்கவேண்டாம்.  ஏற்கனவே இந்தத் தேவைகளுக்காக ஷாப்பிங் செய்த…கவனிக்க…ஷாப்பிங் செய்த ப்ளாஸ்ட்டிக் ஜார்கள் பத்திரமாக காலியாக வைக்கப்பட்டிருக்கும்.
 
(சேட்டை இன்னும் இருக்கு)
 

Ebrahim Ansari said...

http://feedproxy.google.com/~r/Satyamargam/~3/AS_O41kSY78/627-627.html?utm_source=feedburner&utm_medium=email

இதைக் கூடவா படிக்கவில்லை?

Ebrahim Ansari said...

தம்பி இன்று அரட்டை தினம் என்று தம்பி அபூ இபு அறிவிக்கட்டும்.

விஷயத்துக்கு வருவோம்.

இந்த மளிகை சாமான் பாட்டிலில் பேர் ஒட்டுவது பற்றி ஒரு ஜோக் நீங்களும் கேள்விப்பட்டு இருக்கலாம். ஒரு இன்னோசன்ட் மனைவி சீனி டப்பாவில் மிளகாய் என்று எழுதிவைத்திருந்தாராம்.

ஏன் இப்படி எழுதிவச்சிருக்கே?
அப்போதாங்க எறும்பு ஏறாது. ?
ஏண்டி எறும்பெல்லாம் தமிழ்ப் பல்கலைக் கழகத்திலேயா படிச்சுட்டு வருது?

Abdul Razik said...

//உனக்கு மட்டும்தானேடா? ஒரு முறை செய்து ரெண்டு நாட்களுக்கு வைத்துக்கொள்” என்று வழக்கம்போல் சிக்கனத் தொனியில் புத்தி சொல்லிவிட்டு,”கைப்பிடியளவு அரிசி, அரைக்கைப்பிடியளவு கடலைப் பருப்பு, காற்கைப்பிடியளவு வெந்தயம் மூன்றையும் அலசி ஆறு மடங்கு தண்ணீரில் அதே சட்டியை அடுப்பில் வைத்து கொதிக்கவை. அது கொதிக்கும்போதே வரிசையாக வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, முட்டைக்கோசு, காரெட், பீன்ஸ் ஆகியவற்றை வரிசையாக நறுக்கிப் போட்டுக் கொண்டே வா. அத்துடன் மசாலாவை ஸ்பூனில் எடுக்காதே. ஒரு கத்தியை எடுத்து அதைக்கொண்டு, அதாவது கத்தி முனையளவு மஞ்சள், இரண்டு கத்திமுனையளவு சீரகத்தூள், இரண்டு கத்தி முனையளவு மிளகுத்தூள், தேவைக்கேற்ப உப்பு போட்டு கொதிக்கவை. இடையில் மல்லி மற்றும் புதினாத் தழைகளின் இலைகளை மட்டும் பறித்துப் போடு. கொஞ்சம் தேங்காய்ப்பால் ஊத்தி இறக்கினால் கஞ்சி ரெடி” என்றான். //

எப்படி ரெடியாகும்? சப்புனு இருக்கும், ஹீரொ லெமன் அல்லது புலி ஊத்தலையே?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ZAEISA (அடிகளார்) சொன்னது…
"கவிப்புலமோங்கி கஞ்சி காச்ச தெரியாவிடின்
அதிரைக்கு வருமாம் இழுக்கு" //

இத இதத்தே எதிர்பார்த்தோம் !

//Ebrahim Ansari (காக்கா) சொன்னது…
தம்பி இன்று அரட்டை தினம் என்று தம்பி அபூ இபு அறிவிக்கட்டும். //

ஓ தாரளமாக ஏற்கனவே எதையோ உடைக்கப்போயி கவிதைய உடைச்ச கதையெல்லாம் வெளியாவுதே !?

காக்கா அந்த மிளாக் பொடி மேட்டரு சுப்பரு ! பாவம் எரும்பும் என்னைபோல்தான் போலும் ! :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா: இதுக்குத்தான் "தம்பி" சொன்னா கேட்கனும்கிறது :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//“சீரகம் தீர்ந்து போயிருந்ததே. தூள் வாங்காதீர்கள். முழு சீரகத்தை மிக்ஸியில் அரைச்சி வச்சி யூஸ் பண்ணுங்க”ன்னாங்க.

“சீரகம் இருக்கே”ன்னேன். “இருக்காதே”ன்னாங்க

“அப்ப, க்ராஃப்ட் ச்சீஸ் பாட்டிலில் உள்ளது என்ன?” என்றேன்.

“அல்லாஹ், அது சோம்புங்க. அப்ப இத்தனை நாளா சீரகம்னு நெனச்சி சோம்பையா போட்டு வந்தீங்க. கஞ்சி வெளங்கிடும்”னு சிரிச்சாங்க.

“எல்லாம் உன்னாலதான். போனமுறை நீ ஊருக்குப் போயிருந்தபோது எல்லா போத்தல்லேயும் ‘மிளகா, சீரகம், சோம்பு, மல்லி’ என்று லேபில் எழுதி ஒட்டி வச்சிருந்தேனே நீ ஏன் கிழிச்சி போட்டே” ன்னேன்.

“ஏன்னா, அது கிட்ச்சன் –ங்க. கெமிஸ்ட்ரி லேப் இல்ல” ன்னாங்க.//

ஸோ ஸ்வீட்(டாக) இருந்திருக்குமே ! :)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உடைத்த வெள்ளை உளுந்தை பாஸிபெயராக நினைத்து முருங்கக்கா போட்டு குழம்பு ஆக்கியவர்களும் , சதகுப்பையை ஜீரகமாக நினைத்து வாங்கி வந்து கறி ஆணத்தில் கலந்து சமைத்தவர்கள் என இப்படிப் பட்டவர்களையும் நான் பார்த்ததுண்டு.

Iqbal M. Salih said...

அட அல்காபு! நான் ஆர்டர் செய்த ஐட்டம் பெயர் 'நாசமாப்போச்சி' அல்ல! அதன் பெயர் 'நாசிலிமா" அதாவது, 'நாசிகண்டா, 'நாசிகொரின்'போல ஒரு சுவையான பொறித்த கூனிக்கருவாட்டுச்சோறு!

பினாங்கு'க்காரர்களிடம் கேள். 'நாசிலிமா'வுக்காக காலங்காத்தால நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைவார்கள்!

உனக்குப் பிடிக்கவில்லை என்றால்,

'அப்பாலா! பீக்கி தீடொர்லா! இனி மச்சாம் ச்சக்காப் தடா பக்கூஸ் லா!'

Ebrahim Ansari said...

தம்பி இக்பால்!

அஸ்ஸலாமு அலைக்கும் . பினாங்கு போனவர்களும் நாசி லிமா வாங்கித்தா என்று அடம பிடித்து வீட்டில் சுட்ட (ஆபத்தை)அப்பத்தை வேண்டாமென்று ஓடியதும் உண்டு.

என்னதான் இருந்தாலும் அதெல்லாம் ரசித்து சாப்பிடக் கொடுத்து வைக்க வேண்டும். பாருங்களேன் கண் சிமிட்டும் நேரத்தில் கவியருவி கொட்டும் கவிமகனுக்கு தன் சொந்த கலவர பூமியில் ஒரு கஞ்சி காய்ச்சத் தெரியவில்லை?

இதற்குத்தான் அந்த அப்பப்ப அடுப்பங்கரைப் பக்கமும் தலைகாட்டி வீட்டுப்பாடமும் விபரமாய் படித்துக் கொள்ள வேண்டும் என்பது.

இப்போது படகில் போன சாஸ்திரி கதை எனக்கு நினைவுக்கு வருகிறது.

sabeer.abushahruk said...

//இப்போது படகில் போன சாஸ்திரி கதை எனக்கு நினைவுக்கு வருகிறது.//

அதென்ன காக்கா? மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி கத கணக்காவா?

Unknown said...

நோன்புக் கஞ்சியால் அவதிப் பட்டு இதை எழுதியிருக்கிறீர்களோ என நினைத்தேன்... நல்லா ஹுயூமர் சென்சோட எழுதியுள்ளீர்கள்.

நான் முதலாவதாக தயார் செய்த நோன்புக் கஞ்சியை பலர், " என்னடா சோறு ஆக்கி வச்சிருக்கா?" என்றனர்.

Ebrahim Ansari said...

தம்பி சபீர்! // மெக்சிகோ// இல்லை. நான் நோ என்ட்ரியில் உங்களைப் போல் தம்பிகளுடன் கை கோர்த்துப் பயணிப்பதில்லை.

இந்த சாஸ்திரியின் வேதம் புதிது. உங்களுக்குப் புரியும். புரியாவிட்டால் இப்போது வேண்டாம். வேறு ஒரு சமயம்.

Unknown said...

Assalamu Alaikkum,

Dear brother Mr. Sabeer AbuShahruk,

நோன்பு கஞ்சி செய்யாதிருப்பது எப்படி..! is a nice and funny write up.

//முதலில் மனைவிக்கு ஃபோன் போட்டு, “நீ சூப்பரா நோன்புக் கஞ்சி காய்ச்சித்தருவியே, எப்படி செய்தே?” என்று கேட்டேன். //

While I was reading the above lines, interepretating as "முதல் மனைவிக்கு ஃபோன் போட்டு, “நீ சூப்பரா நோன்புக் கஞ்சி காய்ச்சித்தருவியே, எப்படி செய்தே?” என்று கேட்டேன்."

Then I made sure that its "முதலில் மனைவிக்கு ஃபோன் போட்டு,...".

Anyway I will make my first "Nonmbuk Kanchi" by tomorrow, inshaAllah.

And I will update the quality & taste by tomorrow. InshaAllah.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

نتائج الاعداية بسوريا said...

சபீர்,

இப்படி உன்னை நீயே சித்திரவதை செய்து கொண்டு
தயார் செய்த கஞ்சியை குடிக்கத்தான் வேணுமா ?

உன்னைப்போல் ஆட்களுக்கெல்லாம், மனைவி இருக்கணும்,
அல்லது கடையே கதி.

இனிமேல் இப்படி விஷப்பரிட்சையில் இறங்காதே.

அபு ஆசிப்.

نتائج الاعداية بسوريا said...

கஞ்சியின் படத்தை போட்டதுதான் போட்டே,
கோப்பையில் கஞ்சியை வைக்காமல் , கீழே கொட்டிய கஞ்சியை
படத்தில் போட்டிருக்க .

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

எம் ஹெச் ஜே,

உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி. ஆனால், ட்ரை கஞ்சியெல்லாம் பார்சல் அனுப்ப வேண்டாம். ஏற்கனவே ட்டீயே இன்னும் வரல. இப்ப கஞ்சி கேட்டா எக்குத்தப்பா பெருநாள் அன்னிக்கு அனுப்பி வைக்கப் போறிய!

மெய்சா,

உன் உதவிக்கு மிக்க நன்றி. 14வது ரெஸிபியாக நீ சொல்வதையும் ட்ரை செய்ய நான் தயார்; அப்படி காய்ச்சப்போகும் கஞ்சியை என்னோடு சேர்ந்து குடிக்க நீ தயாரா?

இக்பாலு,

நீ நாக்கைச் சப்புக்கொட்டி சாப்பிடும்போதே கவனித்தேன் அந்த உறைப்பு உன்னை ஒன்னும் செய்யலேன்னு. அதுக்காக கோலாலம்புர்காரனே சும்மா இருக்கும்போது நீ நாசிலிமாவுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்கத்தான் வேண்டுமா?

//இனி மச்சாம் ச்சக்காப் தடா பக்கூஸ் லா!//

என்னாது!? மினி மச்சம் உள்ளவய்ங்க கக்கூஸ் போக தடையா?

ஓ மலாய் பேசுறியா?
சத்து ரிங்கிட் லிமா கட்டி அராங்-லா.

அபு இபுறாகிம், குடிக்கத்தான் கஞ்சி சரியா அமைய மாட்டேங்குது. பார்க்கவாவது நம்மூர் கஞ்சி ஃபோட்டோ போட்டிருக்கப்படாதா? இப்ப பாருங்க, ஜாகிர் அத பிஸ்கெட்டான்னு கேட்கிறான்.

டியர் சகோ அஹ்மது அமீன்,

வேர் டிட் யு கோ வென் ஐ கொருத்துப்போடிங்? ஓ! யு நவ் ஒன்லி பேச்சுலரா? ப்ளீஸ் அப்டேட் ஒன்ஸ் யு ட்ரைட் யுவர் கஞ்சி

(அப்பாடா இங்லீஷில் எழுதல)

ஒன் ஸ்மால் ட்டிப்ஸ்: வாட்டெவர் லுக்ஸ் ஸ்பைஸ் இன் தி கிட்ச்சென் இஸ் நாட் ரியலி வாட் இட் இஸ். பெட்டர் கன்ஃபர்ம் வித் 'அட்டைப்பூச்சி' ஏஸ் ட்டு 'வாட் இஸ் வாட்' பிஃபோர் யூஸிங் இட்.

ஜாஃபர்,

கை குடுங்க. எனக்கும் அப்படித்தான் ஆரம்பத்ல வந்த்துச்சு. சவுதி ரஹிமா நண்பர்கள், "என்னடா பிரியாணி ட்ரை பண்ணினாயா? கப்ஸா மாதிரி ஏதோ வந்திருக்கே" ன்னாங்க.

அப்புறம், ரொம்ப ஹார்ட் வொர்க் பண்ணித்தான் அத கஞ்சி லெவலுக்குக் கொஞ்சமாவது கொண்டு வர முடிஞ்சிது.

அப்புறம் எப்பதான் கஞ்சி சக்ஸஸ் ஆனதுன்னு சொல்லவே இல்லயே.

காதரு, மன்சூரு எங்கே? அங்கே நோன்புக்கஞ்சி காய்ச்சித்தானே நோன்பு துறக்குறீங்க. என் சமயற்திறமையை 'விஷப்பரீட்சை' என்றெல்லாம் குறிப்பிடுவது சரியான எதிர்கட்சிக்காரங்களின் விபரீத விமரிசனம் லெவலுக்கு இருக்கு. இல்லேன்னா அடுத்த முறை உன்னைச் சந்திக்கும்போது காய்ச்சிப்புடுவேன் ஆமா.



sabeer.abushahruk said...

//கீழே கொட்டிய கஞ்சியை
படத்தில் போட்டிருக்க //.

ஏன் இப்டி பண்ணுனீங்கன்னு அதிரை நிருபரைக் கேட்டேன்.

"காக்கா, இது நீங்க வச்சக் கஞ்சி. கீழே ஊத்தாம? குடிப்போம்னு பகல் கனவு கண்டீங்களா?"ன்றாய்ங்கடா.

Riyaz Ahamed said...

சலாம்
பெரியண்ணா ரெண்டே மெதேடு தான் ஒன்னு ஆஷிக் சொன்னது போல் உன் நாக்கு ருசிக்கு தக்க மசாலா கொஞ்சம் கூட சேர்க்கலாம்.அடுத்து கஞ்சி உன் இஷ்டம் போல் செய்யலாம் போஸ்டர் ஓட்ட யார் அட்வைசும் தேவையில்லை

sabeer.abushahruk said...

ரியாசு,

பசை காய்ச்சிறேன்றியா? இதெல்லாம் ட்டூ மச் டா.

அப்புறம், கேட்க மறந்துட்டேன். மலேசியாவில மீகொரிங்கின் உறைப்பில் உதிர்ந்த உரோமங்கள் மீண்டும் முளைத்தனவா? இல்லே...

எதுக்குக் கேட்கிறேன்னா. சும்மா வெறுமனே விட்டு வைக்காதே. "இங்கே விளம்பரம் செய்யுங்கள்" என்று எழுதி வை. என்ன நான் சொல்றது?

Unknown said...

//"காக்கா, இது நீங்க வச்சக் கஞ்சி. கீழே ஊத்தாம? குடிப்போம்னு பகல் கனவு கண்டீங்களா?"ன்றாய்ங்கடா.//

அதான்
காரணமாத்தான் கஞ்சிக்கு கோப்பை தரவில்லையோ A.N.

இருந்தாலும் அதிரை நிருபரை கேட்டுக்கொள்கின்றேன் . என் நண்பன் வச்ச கஞ்சி தயவுசெய்து , ஒரு கோப்பை கொடுத்து, கஞ்சியை அள்ளி கோப்பையில் ஊத்துங்கள். . நோன்பு நேரம் வீண் விரயம் செய்யக்கூடாது. சபீர் காச்சிய கஞ்சியாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் குடித்தே ஆகவேணும்

சபீர், உன் கஞ்சிக்கு நான் எப்போதும் ஆதரவு . கவலைப்படாதே.

அபு ஆசிப்.

Unknown said...

சபீர்,
இங்கே நோன்பு கஞ்சிஎல்லாம் காய்ச்சவில்லை
ஒரு நாளைக்கு ஒரு பள்ளிவாசல் என்ற ரீதியில் போய்க்கொண்டு இருக்கின்றது
எங்கள் "இப்தார் "

தினமும் கோழி இல்லாமல் இப்தார் இல்லை இங்கே.

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

//ஹீரொ லெமன் அல்லது புலி ஊத்தலையே?//

Razik,

லெமனை ஊத்திடலாம். புலியை எப்படி ஊத்துவது என்று விளக்கவில்லையே ப்ரதர். ஏன்னா, புலியை ஊத்தனும்னா முதலில் காட்டுக்குப் போய் புலியை வேட்டையாடனும். அவ்வேளையில் அது என்னய காய்ச்சாமல் சமைக்காமல் ராவாவே கடிச்சித் திண்ணுடுமே. அப்புறம் எப்படி அதை பிடித்து பிழிந்து ஊத்தி... வேணும்னே மாட்டி வுட்றியலா? :-)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கடைசில கஞ்சி காய்ச்சிட்டியலா..... நீங்கள் கஞ்சி சூடு கையில வாங்கல அதான் தண்ணீர் திடப்பொருட்களின் கூட்டனி காங்கிரஸ் திமுக கூட்டனியாகி இருக்கு.

கஞ்சி காய்ச்சும்போது கையில சூடு வாங்குற அளவுக்கு கிண்டினாதான் அந்த கஞ்சி ருசியா இருக்கும் காக்கா.. ருசியான கஞ்சி காய்ச்சிபவர்களிடம் கேளுங்க காக்கா..

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் கையில் சூடு வாங்கி ருசியான கஞ்சி காய்ச்சி தர நான் ரெடி காக்கா, அநி நெறியாளரோடு நெறிபடுத்த நீங்கள் ரெடியா?

:)

Anonymous said...

இந்த வருஷம் நோம்பு கஞ்சிக்கு போறாத காலம் போல. மருமகன் சபீர் கையில் மாட்டி ரெம்பத்தான் அவஸ்தை பட்டு விட்டது... சுபுஹானல்லா! அந்த நோம்பு கஞ்சி பட்டபாடு அல்லாஹ் ஒருத்தனுக்கே தெரியும் .பாவம் கஞ்சியே போட்டுபாடாய் படுத்தபடாது. இந்த நோம்பு கஞ்சி இனி சபீரு கஞ்சியே நடக்கும்.

அடுத்த வருஷம் கஞ்சி காச்ச இப்பவே ஜாஹிரிடம் சொல்லி மலேசியாவிலிருந்து நல்ல பண்டாரியா பாத்து அனுப்ப சொல்லவும். இதை விட சுலபமான இன்னொரு வழி கோலாலம்பூர் கம்போங்பாரு பள்ளி நோம்பு கஞ்சியை முப்பது நாளைக்கும் கூரியார் சர்வீசில் அனுப்ப ஏற்பாடு செய்வது சாலச் சிறந்ததாகும். அந்த Bubur Puasa banyaa Sedaplah !Kalu Anda Cuba satukali Anda Selaalu mau Makkan Itu.Thaukka!

Too many cooks spoil the porridge

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

KALAM SHAICK ABDUL KADER said...

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி
......கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்
துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற
........தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவு
இஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்
.......இரண்டிரண்டு வெங்காயம் தக்காளி யுடனே
கொஞ்சமாக பச்சைநிற மிளகாயும் எடுத்துக்
......கச்சிதமாய் வெட்டிவைத்துக் கொள்ளுங்கள் கவியே!

பச்சைப்பட் டாணியுடன் கேரட்டும் சேர்த்துப்
...பக்குவமாய் வெட்டிவைத்துக் கொண்டவுடன் பின்னர்ப்
பிச்சுப்போ டுவதற்கு மணந்தருமாம் மல்லிக்கீ ரையையும்
...பிரித்துவைத்துக் கொண்டவுடன் பாத்திரத்தை அடுப்பில்
உச்சமிலாச் சூட்டினிலே காயவைத்துப் பின்னர்
....ஊற்றுங்கள் எண்ணெயையும் அப்பாத்தி ரத்தில்
உச்சமாய்ச் சூடேறி கொதிக்கும் எண்ணெய்
...உடனிடுக வெங்காயம் பச்சைநிற மிளகாய்!

வாசனைக்கூ ட்டுமேலம் கிராம்புடன் பட்டை
..வகையறாவும் இஞ்சிபூண்டு விழுதையையும் சேர்த்து
ஓசையுடன் எண்ணெயிலே தாளிக்கும் வேளை
...ஓரமாய் நிற்கின்ற தக்காளி சேர்த்து
மேசையிலே காத்திருக்கும் பட்டாணி கேரட்
...மெதுவாகக் கொட்டுங்கள் எண்ணெயின் சூட்டில்
வாசனையும் நாசியையும் துளைக்கின்ற வரைக்கும்
..வாணலியில் கரண்டியினால் துடுப்பைப்போல் துழாவு!

ஆட்டிறைச்சிக் கழுவியதைத் தேவைக்குக் கணக்காய்
...அடுப்பிலிருக் கின்றஎண்ணெய்க் கொதியலில் கலந்து
போட்டுவிட்டப் பின்னர்தான் ஊறியுள்ள கலவை
...பருப்புவெந்த யத்துடனே அரிசியையும் கொட்டி
தேட்டமுடன் வண்ணம்சேர்; அதற்காக ஒற்றைத்
.....தேக்கரண்டி அளவுக்கு “மசாலாவின்” பொடியை
போட்டவுடன் தண்ணீரைப் பாத்திரத்தின் பாதி
....பரப்பளவில் நிற்குமாறு ஊற்றியதும் மூடு!

ஒருகொதியில் புகைமண்டி வருகின்ற வேளை
...ஓரெலுமிச் சைப்பழத்தின் சாற்றையையும் பிழிந்து
ஒருமுறையில் கிண்டியதும் பாத்திரத்தை மூடு
...ஒருகுவளைத் தேங்காயின் பாலெடுத்துக் கொட்டு
மறுமுறையில் இன்னும்வே கமாகவே துழாவு
...மறுபடியும் தண்ணீரும் குறைவாகிப் போனால்
மறுகொதியும் வருமளவுத் தண்ணீரை ஊற்று!

மணக்குமல்லிக் கீரையிலை மேற்பரப்பில் கொட்டு
....மயக்கும்வா சனையுடனே புகைமண்டிக் காட்டும்
கணக்காகத் தண்ணீரும் கலந்திட்டால் நோன்பு
...கஞ்சியென்னும் அமிர்தமும் சொல்லிடுமே மாண்பு
பிணக்கின்றிச் சுவைகூட்ட உப்பையும் அளந்து
....பிரியமுடன் இட்டுக்கொள்; மறவாமல் கலந்து
சுணங்காமல் அடுப்பின்கண் சூட்டையும் குறைத்தால்
...சுவைகுன்றா நோன்புகஞ்சி ஆயத்தமாகும் நிறைவாய்

KALAM SHAICK ABDUL KADER said...

குறிப்பு:

“குக்கர் “ வேண்டாம்; பாத்திரமே போதும். குக்கர்தான் உங்களைக் கவிழ்த்தி விட்ட மகாதுரோகி! பிரியாணி செய்வதிலும் இந்தக் குக்கர்தான் கவிழ்த்தி விடும்; காரணம்: தண்ணீரின் அளவை அடிக்கடிச் சோதிக்க் முடியாது. விசில் சப்தம் எண்ணிக்கை மறந்து விட்டால் எல்லாம் வீணாகிவிடும்.

உங்களின் “கஞ்சி”யில் கொஞ்சி விளையாடிய நகைச்”சுவைகள்”

\\நோன்புக் கஞ்சி இல்லாமல் நோன்பு துறப்பது என்பது ஏர் அரேபியாவில் பயணிப்பதைப் போல

எல்லாக் கருத்துகளிலும் வேறுபட்டு நிற்கும் இயக்கக் காரர்களின் மார்க்க விளக்கங்கள் சட்டென்று நினைவுக்கு வந்தது.

தம்பி தாஜுதீனுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி அல்லவா,

இஞ்சி தின்ற குரங்குபோலானது கஞ்சி குடித்த என் மூஞ்சி. என்ன செய்ய?//
--

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் கவியன்பன்,

இப்படியாகத்தான் காய்ச்சப்பட்டால் கஞ்சி ருசியாயிருக்குமோ இல்லையோ தெரியாது ஆனால், கவிதை அமிர்தமாய் ருசிக்கின்றது.

மரபுச்சட்டியில் தேமா புளிமாக்களோடு தங்களின் இலக்கண அகப்பையால் விலாவி படைத்திருக்கும் இந்த நோன்பின் கவிதைக்கஞ்சி சுவையோ சுவை.

"கவித்தீபம்"தனைக் கச்சிதமாய் தூண்டி விட்டதால் சட்டியின் அடி பிட்க்காமல் காய்ச்சச் சொல்லும் கவிதையின் அடிகள் மிகவும் பிடித்துப் போயிருக்கின்றது.

வாழக தங்களின் புலமை.

மேலும் இந்தக் கஞ்சி களேபரத்தில் கலந்துகொண்ட தம்பி தாஜுதீனுக்கும் ஃபாரூக் மாமா அவர்களுக்கும்

"ஹேப்பி கஞ்சி இஃப்தார்!"

KALAM SHAICK ABDUL KADER said...

வ அலைக்கும் ஸலாம்,
ஜஸாக்கல்லாஹ் கைரன் கவிவேந்தே!

உங்களின் வஞ்சியுடன் கொஞ்சியோ, கெஞ்சியோ இந்தக் கஞ்சியின் மகாத்மியங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். எனக்குச் சிறு வயது முதல் சமையலில் படிப்புச் சொல்லிக் கொடுத்த என் உம்மா(மர்ஹூமா)வுக்கு நான் துஆ செய்கிறேன்; அபொழுதெல்லாம் எம் “டைனிங் ஹால்” சமையலறை என்னும் “அடுப்படியும்” , “பாத்ரூம்” என்னும் கிணற்றடி தானே! தாயிக்குப் பின் தாரம் என்பதை உண்மைப் படுத்தும் வண்ணம் மனைவி என்னும் துணைவியுடன் கற்றுக் கொண்டவைகள் சமையல் கலையில் ஏராளம். குறிப்பாக, இவ்விடுப்பில், இடியாப்பம் செய்யக் கற்றுக் கொண்டு அதற்கான எல்லா உபகரணங்களையும் அங்கிருந்தே எடுத்து வந்து இந்நோன்பில் இடியாப்பம் செய்து இரவு உணவுக்கு இன்பமாய்ச் சுவைத்துக் கழிகின்றது இனிய ரமலானும்! என்னிருப்பிடத்தில் இருக்கும் யான் இடியாப்பம் செய்வதை வேடிக்கைப் பார்க்கின்றனர்; பட்டிக்காட்டான் மிட்டய்க்கடையைப் பார்த்தது போல்!

உங்களின் அன்பான வாழ்த்துக்கும், இலக்கண உபகரணங்களுடன் இணைத்துக் காட்டிய உவமை கவிநயத்துக்கும் என் உளம்நிறைவான நன்றிகள்!

இன்ஷா அல்லாஹ் இன்று உங்களை அபுதபியில் சந்திக்கும் அந்த இன்பமான நேரத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். தாமததுக்கு மன்னிக்கவும் கவிவேந்தே! கஞ்சி வெந்துவந்ததா? வேந்தே! நீங்கள் கஞ்சிக்காச்சு'வதை" விவரித்தது கிச்சு,கிச்சுமூட்டியது! நீங்கள் காய்ச்சிய கஞ்சியை இப்படி கோப்பையில் தராமல் தரையில் வார்த்த அபு.இபு காக்காவை கண்டிக்கிறேன். அவர் கோப்பையில் தருகிறாரோ இல்லையோ நான் வெற்றிக்கோப்பை தருகிறேன்.கவி தீபத்தின் கவிதைச்சுடர் பிரகாசம்!அட்டகாசம்!அனையா விளக்கு!

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். கவிவேந்தே!கவனித்தீரா! கவிதீபத்தின் கவிவிருந்து!களிப்புடனே இருப்பதை! சிலவரிகள் அதிலிருந்து சிலாகித்ததை பகிர்கின்றேன், மற்றவருடன் சுவைக்கவே!

crown said...

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி
......கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்
துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற
........தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவு
இஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்
.......இரண்டிரண்டு வெங்காயம் தக்காளி யுடனே
கொஞ்சமாக பச்சைநிற மிளகாயும் எடுத்துக்
......கச்சிதமாய் வெட்டிவைத்துக் கொள்ளுங்கள் கவியே!
---------------------------------------------------------
துஞ்சபோகும் முன்பு செய்யவேண்டிய பணியையும் பின் அந்தியில் செய்யவேண்டிய பணியையும் சொல்லியவிதம் தூக்கம்(துஞ்ச)இல்லாமல் தவிக்கசெய்யும் செய்யுள் செயல் இது! இப்படியெல்லாம் எழுத முடியும்? அல்ஹம்துலில்லாஹ்!

crown said...

உச்சமிலாச் சூட்டினிலே காயவைத்துப் பின்னர்
....ஊற்றுங்கள் எண்ணெயையும் அப்பாத்தி ரத்தில்
உச்சமாய்ச் சூடேறி கொதிக்கும் எண்ணெய்
...உடனிடுக வெங்காயம் பச்சைநிற மிளகாய்!
----------------------------------------------------------
இப்படி தூயதமிழில் உச்சமில்லா சூடு(அடுப்பை மிதமாக வைக்க கையளப்பட்ட வார்த்தை உச்சரிக்கும்போதே உச்சுகொட்டவைக்கும் 'அட!அட!சிலர் இப்படி எழுதும் போதும் இலக்கணத்தில் கையை சுட்டு கொள்வர் இவரோ, தீபம் ஏற்றி இறக்கி சமைக்கிறார் எந்த வித கைசேதமும் இல்லாமல்.

crown said...


வாசனைக்கூ ட்டுமேலம் கிராம்புடன் பட்டை
..வகையறாவும் இஞ்சிபூண்டு விழுதையையும் சேர்த்து
ஓசையுடன் எண்ணெயிலே தாளிக்கும் வேளை
...ஓரமாய் நிற்கின்ற தக்காளி சேர்த்து
மேசையிலே காத்திருக்கும் பட்டாணி கேரட்
...மெதுவாகக் கொட்டுங்கள் எண்ணெயின் சூட்டில்
வாசனையும் நாசியையும் துளைக்கின்ற வரைக்கும்
..வாணலியில் கரண்டியினால் துடுப்பைப்போல் துழாவு!
-----------------------------------------------------------
கிராம்பு,பட்டையுடன் பட்டையை கிளப்பி அடுப்பிலும் துடுப்பு போடும் கவிஓடம் ஓட்டியிருக்கிறார்!அல்ஹம்துலில்லாஹ்!

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Kaviyanban

Nombukkanji recipe in poetic style is simply amazing.
And brother crown's interpretation is superb as usual.

Jazakkallah khairan,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் மகுடமே!
பண்பின் சிகரமே!!
வார்த்தை சித்தரே!!
பார்த்:தேன்”
படி”தேன்”
உருசி”தேன்”

கவிவேந்தர் கணித்தபடி எங்களுடன் தென்றலாகவே உன்றன் கவிவிமர்சங்கள் வீசும்; பதத்துக்குள் “பதம்” பதமாகவும் இதமாகவும் பேசும்!

என்ன தவம் யான் செய்தேன்?
என்னைப் போல் ஒருவனை யான் சக கவிஞனாய்ப் பெற்றேன்!

என்றும் உங்களின் அன்பை யான் மறவேன், ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா.

KALAM SHAICK ABDUL KADER said...

Dear Brother Ameen,

wa alaikkum salam

Jazakkallh khairan

Actually, we have to thank Mr.Sabeer (kavivender) as he is always inducing me by giving some hints ore points to write a poem. For example, before I had written a poem on title, "கவிதைச் சமையற் குறிப்பு” based on his poems அழகுக் குறிப்பு”. Now I have got an idea to give him answer for his questions how to prepare nonnukanji thru poem only. Hence, he is the main cause for my poem which reached well in all sites wherever it has been posted since last night.

Thanks for your comments and wish you RAMADHAAN KAREEM with nice nonbukanji for iftar daily!

Ebrahim Ansari said...

கவியன்பன் கலாம் அவர்கள் உம்மாவிடம் கஞ்சி காய்ச்சக் கற்றுக் கொண்டது என்று சொல்வது அவையடக்கம் கருதியே என நினைக்கிறேன்.

அண்மையில் ஊருக்குப் போய் வந்தவர் வந்த வேகத்தில் அங்கு கற்று வந்ததை கஞ்சி அருவியாய் கவிதையாய்க் கொட்டி இருக்கிறார்.


பின்னூட்டம் தந்த தம்பி கிரவுன் இந்தக் கஞ்சிகள் தந்த ஊட்டத்தில் கவிதை மழை பிளந்து கட்டுகிறது.

என்ன பாக்கியம் செய்தோமோ இந்த நோன்பில் நாம். கஞ்சி காய்ச்சத் தெரியாவிட்டாலும் சுவைக்கிறது. கஞ்சி காய்ச்சினாலும் சுவைக்கிறது.இரண்டையும் உரைப்பு உப்புப் பார்த்தாலும் சுவைக்கிறது.

நாக்கில் சுவை நரம்புகளுக்கு உச்சவரம்பு இல்லாமல் படைக்கப்பட்ட அதிரைப் பட்டினத்தோரே என்ன பாக்கியம் செய்தோமோ நாம்.

KALAM SHAICK ABDUL KADER said...

\\அண்மையில் ஊருக்குப் போய் வந்தவர் வந்த வேகத்தில் அங்கு கற்று வந்ததை கஞ்சி அருவியாய் கவிதையாய்க் கொட்டி இருக்கிறார். //


அண்மையில் அடியேன் கற்றுக் கொண்டவைகள் என்பதிலும் உண்மையில் மறுக்க முடியாத உண்மைகள் தான் முனைவர் அவர்களே! ஆயினும், உம்மாவுடன் அடுப்பங்கரையில் அடுத்திருந்துக் கற்ற மீன் கறி ஆனத்தின் மகிமையை- சுவையை 1983 முதல் அல்கோபாரில் சுவைததவர்களில் ஒருவர் தான் இங்கு அதிரடிப் பின்னூட்டமிடும் அதிரை மன்சூர் ஆவார்கள்; அவர்க்ளுடன் என் ஆருயிர் ந்ண்பர் தலைத்தனையன் தமீமும் சுவைத்தவர்களில் அடங்குவர்.

கவிதையும் கை வந்த கலை
சமையலும் கை வந்த கலை

அதனாற்றான சமையலையும் கவிதையில் காட்டும் கலையில் இறங்கினேன்; அதுவும் அண்மையில் என் யாப்பிலக்கண வகுப்பாம் “சந்த வசந்தம்” என்னும் குழுமத்தின் நிறுவனர்/ என் மதிப்பிற்குரிய ஆசான் இலந்தையார் என்னும் இராமசுவாமி சுப்பையர் அவர்கள் “மாவடுவின் மகிமை” என்னும் தலைப்பில் அவர்கட்கு “பார்சலில்” வந்த மாவடு எவ்வாறெல்லாம் நாக்கை ஈர்த்தது என்ற போக்கை இப்படியான “எண்சீர் விருத்த கழிநெடிலடி விருத்தம்” என்னும் பாடலின் அமைப்பில் எங்கட்குப் பாடமாய் நடத்தியதன் எதிரொலிதான், தமியேன் இயற்றிய இப்பாடலும் ஆகும், யான் கவிதைகள் யாத்துக் கொண்டிருக்கின்றேன் என்பதை விட இப்படிப்பட்டப் புலவர்கள் ஆசானகளாகி எனக்குத் தரும் “வீட்டுப்பாடங்கள்” தான் கவிதைகளாய்ப் பதிவுக்குள் கொணருகிறேன்; இன்னும் சாதிக்க எவ்வளவோ தூரம் பயணிக்க வேண்டும்; அதற்கும் அல்லாஹ்வின் அருளால் ஆயுளும் இருக்க வேண்டும்!

KALAM SHAICK ABDUL KADER said...

//அதிரைப் பட்டினத்தோரே என்ன பாக்கியம் செய்தோமோ நாம்.//

அதிரைப்பட்டினத்தாரில் “பாட்டினத்தார்” அதிகம் உளர் என்பதை அண்மையில் யான் கண்டு கொண்டேன்.

adiraimansoor said...

நகைச்சுவை நகைச்சுவை நகைச்சுவை முழுதும் நகைச்சுவை நீகாச்ச முற்பட்ட கஞ்சியினால் நான் காச்சிகுடுத்த கஞ்சி என் வயிற்றைவிட்டு வெளியாகாத குறை. சிரித்து சிரித்து வயிரே வலித்துவிட்டது, சின்ன வயசுல விசுவின் மனல் கயிறு படம் பார்த்து சிரித்ததற்கு பிறகு நீ காச்ச முற்பட்ட கஞ்சியினால் மீண்டும் அதே சிரிப்பு
கஞ்சியிலும் இவ்வளவு நகைச்சுவையா?

இ.அ.காக்கா சொல்வது போன்று
" காய்ச்சிய கஞ்சியின் சுவையை விட எழுத்தின் சுவை எகிறி அடித்துவிட்டது."
இனி எனக்கு நோம்பு கஞ்சி வேண்டாம் சபீர் நீ காச்சிய கஞ்சே எனக்கு போதும் நான் நோன்பு திறக்க
ஆஹாஹாஹா எத்தனை சுவை என்னிலலன்கா.

adiraimansoor said...


ஆஹாஹாஹா எத்தனை சுவை என்னிலடங்கா

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer Abushahrukh,

Since the Nombukkanji attempt is the first one, I am eligible to join in now only bachelor temporarily attempting to make nombukkanji.

Here is my updates,

First ever Nonbukkanji is amazing. Alhamdulillah.

I was supervising bandari(first ever attempt to make nombukkanji) by keeping strategy of just making liquid vegetable+mutton biriyani. Missing things, no beans, no green peas. So in the next attempt(20 more ramadan days) those ingredients will be added inshaAllah.

The masala is our usual biriyani masala in a small quantity.

Turmeric powder just to make sure improved yellow color,

one fist of ground dal(kadalai paruppu),

mutton 500 gm, 2 cups rice,

enough salt to bring out the taste,

malli keerai for nice smell.

Added more and more water when the kanji become thicker.

And made sure that rice become near the paste level in liquid form. Thats all.

Took the risk and now confident enough to make tasty Nonbukkanji for coming 20 more day inshaAllah.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

adiraimansoor said...

நாக்கில் சுவை நரம்புகளுக்கு உச்சவரம்பு இல்லாமல் படைக்கப்பட்ட அதிரைப் பட்டினத்தோரே என்ன பாக்கியம் செய்தோமோ நாம்.

இபுராஹீம் அன்சாரி காக்கா,
நீங்கள் சொல்வதுபோல் நமதூரின் ருசியில் நோன்பு கஞ்சியும்சரி இதர பொருட்களும் சரி நான் எங்கேயும் சுவைத்த ஞாபகமில்லை.

நாசுவைபட்டினத்தாரின் படைப்புகள் அரேபிய தீப கர்பங்களில் கிடைக்குது என்றால் அதற்கு 50 ரியாலோ 50 தீனாரோ செலவு செய்து போய் சாப்பிட
நாசுவைபட்டினத்தார்கள் யாரும் தயங்குவதில்லை

நாசுவைபட்டினத்தாரின் நாக்குகளை அருத்து ஒரு பொரியல் போட்டால் எப்படி இருக்கும் என்று எப்பொழுதோ
அபூ ஆசிப் சொன்னது எனக்கு இந்த நேரத்தில் ஞாபகம் வந்துவிட்டது.
வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு என்று விட்டுவிட்டேன்.

கலாம் 83ல் அல்கோபாரில் ஆக்கித்தந்த மீனைவிட இப்பொழுது கவியால் காச்சிதந்த நோன்பு கஞ்சி மிகவும் பிரமாதம்

கலாம் 84ல் நான்குவரி கவிதை ஒன்று எழுதியது என் மனதில் ஆனி அடித்தார்போல் பதிந்துவிட்டதை எடுத்துவிடலாமா வேண்டாமா என்று என் மனது ஊசலாடிக்கொன்டே இருக்கின்றது.
கலாம் அனுமதித்தால் மட்டும். அரங்கேறு

அதிரை முஜீப் said...

இவ்வளவு சிரமப்பட்டதற்கு பதில், தங்களின் இல்லத்து அரசி சொன்னது போல் கடையில் யாருக்கும் தெரியாமல் கஞ்சியை வாங்கிவந்து அதை அப்படியே சட்டியில் ஊத்தி கொதிக்க வைப்பது போல நடித்து பின் நன்பர்களை அழைத்து தான் காய்ச்சுவது போல காட்ட வேன்டியது தானே....! என்ன எங்களுக்கு ஒரு ஆர்ட்டிக்கள் மிச்சமாகி இருக்கும்...!)

KALAM SHAICK ABDUL KADER said...

சாரி. மன்சூர் நீ என் பின்னூட்டத்தைக் கண்டிருக்கவில்லை என்று நினைத்து அ.எ.வில் “ஏன் என் சமையற் சுவையைச் சுவைத்த நீ அதுபற்றி எழுத வில்லை என்று கேட்டு விட்டேன்” இப்பொழுது தான் உனது பின்னூட்டங்கள் நோக்கினேன்.

நீயும், தமீமும், தமியேனும் அப்துஸ்ஸமத் ரூமில் வியாழன் மாலை(வெள்ளி இரவு)தங்கி மீன் கறி ஆனம் அடியேன் சமைக்க நாம் ஒன்றாய் உணவருந்தி உறங்கிய அந்தப் பொன்னான காலம் வாராதா? என்று ஏங்குகிறேன். தமீம்-அமெரிக்காவில், நீயோ- சவுதியாவில், அப்துஸ்ஸமத்= ஜப்பானில், யான் - அபுதபியில் இப்படி நம்மை இரணம் தரும் இறைவன் பிரித்துப் போட்டாலும் அன்று சமைத்து ருசித்துச் சாப்பிட்ட நாக்கின் உணர்வு என்றும் மாறாது நண்பா!

குறிப்பு: வேண்டாம்; வேண்டாம்; “அந்த நாலு வரி கவிதையை” அவிழ்த்து விட வேண்டா. அஃது ஓர் இளமைக் காலம்; இன்றோ இறையருளால் கவுரவிக்கப்படும் ஓர் அந்தஸ்தில் இருக்கும் முதியவன்; எனவே அந்தக் கவிதை எல்லாம் எடுத்து பொது இடத்தில் போட்டு விடாதே. ஆயினும், அன்றொரு நாள் சொன்ன அக்கவிதை இன்றும் உன் நெஞ்சில் ஆழமாய்ப் பதிந்து விட்டதே என் கவிதைக்குக் கிடைத்திட்ட அங்கீகாரம்! சர்வதேச அளவின் அங்கீகாரத்தை விட சக தோழனின் அங்கீகாரம் எனக்கு மாபெரும் வெகுமதி; அதற்கான என் உளம்நிறைவான நன்றியை அனுமதி!

adiraimansoor said...

கலாம் நான்கு வரியானாலும்
நாசூக்கான வரியல்லவா
மறந்திட முடியுமா என்ன?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு