Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை ‘அர்ரவ்ழா’ பெண்கள் கல்லூரியில் சிறப்பு நிகழ்ச்சி 6

அதிரைநிருபர் பதிப்பகம் | July 20, 2013 | , ,

நமதூர் ‘குல்லியத்துர் ரவ்ழத்துல் இஸ்லாமிய்யா லில்பனாத் என்னும் பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி தாருத் தவ்ஹீத் அமைப்பின் கீழ் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.  அண்மையில் அதன் பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றதையும் வலைத்தளங்கள் மூலம் தெரிந்திருக்கலாம்.

இக்கல்லூரியில் இன்று பகல் சிறப்பு நிகழ்ச்சியொன்று ‘Ramadhan with Nutrition and Women’s Health’ ( ரமளானில் சத்துணவும் பெண்கள் ஆரோக்கியமும் ) என்னும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதனை முன் நின்று நடத்தியவர், நமதூர் மருமகள் ஆமினா ஹஸ்ஸான் M. Sc. (Nutrition & Dietetics) ஆவார்.

ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சிறப்பு நிகழ்ச்சியின்போது, மாணவிகளின் ஆர்வம் பாராட்டத் தக்க முறையில் இருந்ததை, சொற்பொழிவை நிகழ்த்திய ஆமினா ஹஸ்ஸான் வியந்துரைத்தார்.  கல்லூரி ஆசிரியைகளும் ‘மாஷா அல்லாஹ்’ என்று கூறித் தம் மகிழ்வைத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சி ஒரு முன்னுதாரணம் என்பது குறிப்பிடத் தக்கது.  இதைப் போன்று நமதூரில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற பெண்கள் பலர் இருக்கக் கூடும்.  அவர்களையும் இது போன்று, தம் கலைத் துறையை மார்க்க நெறிப்படிப் பயன்படுத்தும் வகையில் தமது பங்களிப்பைச் செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.  திறமையும் தகுதியும் பெற்ற பெண்கள் எமது ‘அர்ரவ்ழா’ கல்லூரியில் வந்து, தமக்கும் பிறருக்கும் பயன்படும் விதத்தில் தாம் பெற்ற அறிவைப் பகிர்ந்துகொண்டு பயனளிக்குமாறு இக்கல்லூரி நிர்வாகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

கைவினைப் பொருள்கள் தயாரிப்பது, அறுசுவை உணவு தயாரிப்பது, பொது சுகாதாரம், குடும்பவியல், குழந்தை வளர்ப்பு முதலான துறைகளில் தமது பங்களிப்பைச் செலுத்த முன்வரும் பெண்கள், கல்லூரி நிர்வாகத்தை அல்லது ஆசிரியைகளைத் தொடர்பு கொள்ளலாம்.

தலைவர் : 9894989230
செயலர் : 9043727525
கல்லூரி முதன்மை ஆசிரியை : 8754582966

நிகழ்ச்சி நடத்த வருபவர்கள் தக்க ஆண் / பெண் துணையுடன் வரும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதிரை அஹ்மது
தலைவர்
அதிரை தாருத் தவ்ஹீத்

6 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நல்லதொரு அரிய வாய்ப்பு ! பட்டம் படித்த நிறைய நம் பெண்மக்கள் இந்த சந்தர்பத்தை நன்மையின் பக்கம் செயல்பட பயன்படுத்திக் கொள்ள வேண்டும் !

இந்தப் பதிவை நமதூர் பெண்கள் ஏராளமானோர் வாசிப்பதை நன்கறிவோம், முடிந்தவரை இந்த தகவலை உங்களுக்குள் எத்தி வைத்துக் கொள்ளுங்கள்... மாணவிகளும் பட்டதாரிப் பெண்டிரும் நற்பயன்கள் அடையட்டும் இன்ஷா அல்லாஹ் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அர்ரவ்லா அரபிக் கல்லூரியின் நல் நிய்யத் நிறைவேறட்டுமாக! அது அல்லாஹ்வுக்கு பொருத்தமாக மட்டுமே அமையட்டும்!

அப்துல்மாலிக் said...

படித்த பெண்களும் சரி, படிக்காத திறமையுள்ள பெண்களும் சரி சீரியல்களுக்கு அடிமையாகி நேரத்தையும் திறமையும் வீண்விரயம் செய்வதைவிட இது மாதிரி தத்தமது திறமைக்கு தீணி கொடுக்கும் தானாக முன்வரும் அர்ரவ்லாவில் இணைந்து பயன்பெற நம் அனைவரின் பேராவல். இன்ஷா அல்லாஹ்

adiraimansoor said...

மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ் காக்கா
Mrs.ஹஸ்ஸான் M. Sc. (Nutrition & Dietetics) என்பது உங்கள் மருமக்கள் என என் கற்பனையில் ஓடுகின்றது
வரவேற்கத்தக்க ஏற்பாடுகள்
வளரட்டும் உங்கள் சமுதாயப்பணி

பென்கள் தங்களின் திறமைகளை முன் கொண்டுவரவும்
தம்மிடம் இருக்கும் திறமைகளை மற்ற சகோதரிகளிடம் பகிர்ந்து கொள்ளவும் அறிய ஏற்பாடு.

சகோதரர்களே திறமையுள்ள உங்கள் சகோதரிகளை இதுபோன்ற நிகழ்ச்சிககளில் அறிமுகப்படுத்தி அந்த திறமைகளை மற்ற சகோதரிகளிடம் பகிர்ந்து நம் சமுதாய பெண்கள் திறமை மிக்கவர்களாக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஊக்குவிங்கள்

KALAM SHAICK ABDUL KADER said...

அருமையான ஏற்பாடு; அருமையான வழிகாட்டுதல்!

சீரியல்களில் சீரழியும் பெண்ணினத்தைச் சீர்படுத்தும் சீர்மிகு முயற்சி!

Adiraipirai.in said...

அர் ரவ்லா அரபிக் கல்லூரியின் நல்ல எண்ணம் நிறைவேர வாழ்த்துக்கள்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு