Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மூன்றாம் உலகப்போர் அதிரையிலிருந்தா ?? 24

அதிரைநிருபர் பதிப்பகம் | July 26, 2013 | , , , , , ,

அல்லாஹ் இந்த உலகிற்கு அளித்த அருட்கொடைகளில் ஒன்றான தண்ணீர், நாளுக்குநாள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.எந்த அளவுக்கெனில் இனியொரு உலகப்போர் அதாவது - மூன்றாம் உலகப்போர் வருமானால் அது தண்ணீருக்காகதான் என விஞ்ஞானிகள் சமூகவியளாலர்கள் எச்சரித்து வருகின்றனர்.

குடிநீர், சுகாதாரம், விவசாயம், கால்நடைகளுக்கு என பல வழிகளில் தண்ணீரின் பயன்பாடு அதிகம், ஏன் இந்த நீர் இல்லையேல் உலகில்லை. இதைத்தான் "நீரின்றி அமையாது உலகு” என்பார்கள். அந்த நீர்தான் இன்று கானல் நீராகி வருகிறது.

பாசனத்திற்கு, கண்மாய்கள்; பொதுப் பயன்பாட்டுக்கு, குளங்கள்; குடிநீர் தேவைக்கு, ஊருணிகள் என்று, இனம்பிரித்து வளமாக வாழ்ந்தனர் அன்றைய மக்கள். இன்று..? எல்லாம் தலைகீழ் மாற்றம். மேற்சொன்னவைகள் இன்றைய தலைமுறைகளுக்கு என்னவென்றே தெரியாது!

அதிரையின் நிலை?

அதிரையில் முன்னொரு காலத்தில் குளத்தில் குடிநீர் எடுத்து வருவார்கள். அந்த குளங்கள் அவ்வளவு சுத்தமாகவும் முழு பாதுகாப்பு வசதி கொண்டதாகவும் இருக்கும். காலம் மாறியது. குளங்களின் சுத்தமும் போனது; வரண்டும் போனது. வீட்டிற்கு வீடு கிணறு வெட்டி அதில் வீட்டுத் தேவைகளுக்கும் குடிநீருக்கும் பயன் படுத்தினார்கள். இருபது வருடங்களுக்குமுன் அதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு, அப்போது நிலத்தடி நீர் வெகுவாக குறைந்தது. இதனால் ஆள்துளை கிணறுகளை வீடுகள் தோறும் போட்டு நீர் உரிஞ்சினார்கள். தேவைகளை விடவும் அதிகமாகவே பயன்படுத்தினார்கள் விழலுக்கு இறைத்த நீராகிப் போனது.

மீண்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட துவங்கியுள்ளது. இப்போதும் நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால்... நீருக்காக பெரும் கஷ்ட்டத்தை அனுபவிக்க வேண்டி வரும் என்பது நிதர்சனமான உண்மை!

அதிரையில் இப்போது இருக்கும் நிலத்தடி நீர் அளவு (இந்த அளவுகோளில் ஏற்ற / இறக்கமான அளவு அல்லது இதில் சில அடிகள் கூடலாம் குறையலாம்)

சி.எம்.பி.லேன், மிலாரிக்காடு அதை சுற்றியுள்ள பகுதிகள்  100-110 அடியும்

செக்கடிப் பள்ளிவாசலை சுற்றியும் புதிய,பழைய ஆலடிக்குளம் பகுதிகளில் 90-100 அடியும்

ஆஸ்பத்திரித் தெரு, புதுத்தெரு, பழஞ்செட்டித் தெரு பகுதிகளில் 50-60 அடியும்

கடைத்தெரு, நடுத்தெரு கீழ் மற்றும் மேல் பகுதிகளிலும் மேலத்தெரு, சானவயல் பகுதிகளில் 65-75 அடியும்,

கீழத்தெரு, பிலால் நகர் பகுதிகளில் 40-50 அடிகள்

ஆதம் நகர், அதன் தாழ்வானப் பகுதிகள் மற்றும் கடற்கரைத் தெரு தரகர் தெரு பகுதிகளில் 40-30 அடிகள் இருப்பதாக ஆள்துளை கிணறு போடுபவர்கள், பிள்மபிங் வேலை செய்பவர்கள் சொல்கிறார்கள்.

இந்த பகுதிகளில் ஏற்கனவே அதாவது 2,3 வருடங்களுக்கு முன்பு வரை இப்போதுள்ள நிலத்தடிநீர் மட்டம் இருபத்தைந்து,முப்பது அடிகள் உயர்ந்திருந்தது என்பது இங்கு கவனிக்க வேண்டியது அவசியமாகும்!

அல்லாஹ் தனது திருமறையில் எடுத்துரைக்கிறான்:

"மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்." (அத்தியாயம் : 23 வசனம் : 18)

நிலத்தடி நீர் குறைவதற்கு மழை பற்றாக்குறை என்பது உண்மைதான். ஆனால், அதற்காக அதையே காரணம் சொல்லி கொண்டிருப்பது அறிவுடமையாகாது.

வீட்டிற்கு வீடு இதற்கான முயற்சி எடுத்தாலே குறைந்து வரும் நீர் மட்டத்தை காக்க முடியும்! இன்ஷா அல்லாஹ்!! 

நம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் கிணறு, ஆள்துளை கிணறு பக்கத்தில் நாம் பயன்படுத்தும் நீர்களை (மழை நீர் சேகரிப்பு தொட்டி போன்று) தொட்டி அமைத்து அதில் விடலாம். தேவையற்ற முறையில் தண்ணீர் பயன்படுத்தாமலும் இருக்க வேண்டும்.

இன்னும் சில வழிமுறைகள் உள்ளன.எல்லாவற்றிர்க்கும் மேலாக இறையருள் நிறம்பிய இந்த ரமளான் மாததில் அல்லாஹ்விடம் கையேந்துவோம்! இன்ஷா அல்லாஹ் !

அ.ர.ஹிதாயத்துல்லாஹ்

24 Responses So Far:

முகவைத்தமிழன் said...

எதிா்கால சந்ததிகளை மனதில் கொண்டு எழுதப்பட்ட ஆக்கபட்புா்வமான கட்டுரை. எஸ்.பி. பட்டினம் தொண்டி போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீா் கினற்றில் விழுவது போல் சில ஏற்பாடுகளை செய்துள்ளாா்கள் அதன் மூலம் நிலத்தடி நீா் மட்டம் உயர வழி செய்யலாம் அதுபோல் ஊரை சுற்றியுள்ள தோட்டங்களில் பண்ணை குட்டைகள் தோண்டுவதன் மூலமும், ஊரில் பழைய குளங்களை துாா் வாரி ஆழமாக்கி இன்னும் புதிய குளங்களை தோண்டுவதன் மூலமும் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்திட இயலும் உங்கள் பகுதி பஞ்சாயத்து அல்லது நகராட்சியில் சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம்....வாழ்த்துக்கள்!!

sabeer.abushahruk said...

சமூகப் பொறுப்போடும் தொலை நோக்குப் பார்வையோடும் எழுதப்பட்டிருக்கும் தரமானப் பதிவு.

ஹிதாயத்துல்லாஹ்,

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

adiraimansoor said...

மச்சான்
இனி தலையங்கம் தினசரி பத்திரிக்கைகள் கொடுப்பதுபோன்று கொடுக்க வேண்டாம்
அவர்கள்தான் தன் பத்திரிக்கை அதிகமாக விற்க்கவேண்டும் என்று ஈரை பேனாக்கி பேனை பெருமாலாக்கி பட்டை எழுத்தில் கொட்டையாக எழுதுவார்கள் இந்த யுத்தி உண்மையை உரக்க சொல்லும் நமக்கு வேண்டாம்


அதிரை எக்ஸ்பிரசில் இந்த தலையங்கத்தை பார்த்தவுடன் முடிவு செய்துவிட்டேன் இந்த தலையங்கம் அமைத்தவர் ஏதோ ஒரு தினசரி பத்திரிக்கையில் வேலை பார்த்தவராக இருக்கக்கூடும் என்று பின்னூட்டமிட்டுள்ளேன்

மற்றபடி ஆக்கத்தில் ஒன்றும் குறைவில்லை
மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தும் ஆக்கம்
வாழ்த்துக்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தூர நோக்குப் பார்வை எப்போதுமே தம்பி ARHக்கு சிந்தனையில் ஓடிகிட்டே இருக்கும், தேர்ந்த பத்திரிகை அனுபவம் வாய்ந்த நிறைய எழுதனும் என்பதே என் அவா ! சூழ்நிலைகளை நன்கறிவேன் பொருளீட்டலுடனும் அறிவூட்டலுக்கும் அடிக்கடி பார்வையை திருப்ப வேண்டும் இன்ஷா அல்லாஹ் !

நல்லதொரு சிந்திக்கவும் செயல்படுத்தவும் தூண்டும் பதிவு, இலகுவாகவும் செயல்படுத்தப்பட வேண்டிய ஆலோசனைகள் !

ஒரு நாள் பைப்பில் தண்ணீர் வரவில்லை என்றால் கண்களிலிருந்து கண்ணீர் வராத குறைதான் நம்மக்களுக்கு !

அவசியம் சிந்த்திக்க வேண்டும், செயல்படுத்த வேண்டும் !

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

சிறப்பான கட்டுரை.முதலில் என் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் சகோ. தண்ணீர் அரசியலே இனி எதிர்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். உலக பேரரசாக கனவுகள் உடன் இருக்கும் அமெரிக்கா இதை சரியாக பயன்படுத்திக்கொள்ள இன்று அல்ல பல ஆண்டுகளுக்கு முன்பே அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியது இங்கு எத்தனை பேருக்கு தெரியும்..? பனாமா கால்வாயில் தனக்கான ஆதிக்கத்தையும், ஈராக்கில் வற்றாத ஜீவநதியாக பாய்ந்தோடும் யூப்ரடீஸ்,டைக்ரீஸ் என்ற இரண்டு ஆறுகள் ஈராக் வழியாக பாய்ந்தோடியும். அதன் கட்டுப்பாட்டை ஈராக் வைத்திருந்ததும் முதலில் அமெரிக்காவின் கண்ணை உருத்தியது என்றால் மிகையாகாது.1980களிலேயே அரசியலிலும், பொருளாதரத்தில்லும் தண்ணீருக்கான முக்கியத்துவம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வரப்போகும் தண்ணீர் மசோதா தண்ணீரையும் தனியாருக்கு தாரைவார்க்கப்போகிறது. நமது வீட்டு தண்ணீருக்கு கூட தனியார் நிறுவனங்களுக்கு காசு கொடுக்கவேண்டிய அவலம் விரைவில் வரப்போகிறது. அடுத்த உலக யுத்தம் தண்ணீருக்கு என்றால் ஆம் அதுவாக இருக்க அனைத்து சாத்தியமும் உள்ளது என்றே சொல்லலாம்...

daruttibyan said...

தண்ணீர் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தும் எல்லாம்வல்ல அல்லாஹ்வால் தரப்படுபவை. அவற்றை சரியாக பயன்படுத்தாமல் - பாதுகாக்காமல் வீண் விரயம் செய்வோமாயின், அதற்கான பலனையும் நாம் அனுபவித்தேயாக வேண்டும்.

எனினும், மனதில் பட்ட சில ஆலோசனைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்...

எங்கள் ஊர் காயல்பட்டினத்தில், அனைத்து வீடுகளிலும் செப்டிக் டேங்க் அமைக்கப்பட்டிருக்கும். இதன் காரணமாக, வீடுகளிலுள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவு நீர் அனைத்தும் இந்த செப்டிக் டேங்க்கில் சென்று சேர்கிறது. பின்னர் அது பூமி வழியே படிப்படியாக சுத்திகரிக்கப்பட்ட நிலையில் ஊடுருவிச் சென்று, நிலத்தடி நீர் மட்டத்துடன் இணைகிறது.

இப்படியாக அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தப்பட்ட கழிவு நீர் - சாக்கடையாக கடலில் கலக்கப்படாமல், அங்கங்கேயே நிலத்தில் சேர்வதால் நிலத்தடி நீர் மட்டம் பெரும்பாலும் பாதுகாக்கப்படுகிறது.

இத்தனையும் இருந்தும் எங்கள் ஊரின் ஓரப்பகுதியில் தற்போது நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. அதற்குக் காரணம், எங்கள் ஊர் வட்டத்திற்குள் தெரிந்தோ - தெரியாமலோ 50 ஆண்டுகளுக்கு முன் இயங்கிட அனுமதிக்கப்பட்ட டி.சி.டபிள்யு. எனும் நாசகார வேதியல் தொழிற்சாலையால் நிலத்தடி நீர் திருட்டுத்தனமாக நாள்தோறும் பல கேலன்கள் உறிஞ்சப்படுவதாகும்.

தயவுசெய்து, உங்கள் ஊரையாவது தொழிற்சாலைகளற்ற இயற்கை வளம் நிறைந்த ஊராகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
நிறுவனர்
தாருத்திப்யான் நெட்வர்க்
(செய்தியாளர், www.kayalpatnam.com
மற்றும் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர், மணிச்சுடர் நாளிதழ்)

Unknown said...

ஒரு எச்சரிக்கையுடன் கூடிய ஒரு தொலை நோக்கு பார்வை இந்த பதிவு.
படிக்கும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை செய்வதோடு, தண்ணீர் என்பது அல்லாஹ்வின் நி'மத். அதை வீண் விரயம் செய்யும்போது, அல்லாஹ்வின் கோபப்பார்வையில் கூட இந்த நிலத்தடிநீர் குறையவைப்பான்.

ஏன் ஒரு சமூகத்தை மலட்டுக்காற்றைக்கொண்டு அழிக்கவில்லையா ?
ஆதலால் அவன் சோதனை எந்த விதத்திலும் எந்த நேரத்திலும் அவன் யாருக்கு நாடுகின்றானோ அவர்களை வந்தடைய வெகு நேரம் ஆகாது

ஆதலால் இந்த தண்ணீரின் விஷயத்தில் , யா அல்லாஹ் எங்களுக்கு சோதனையை நாடி இருந்தால் எங்களை அச்சோதனையிளிருந்து எங்களை காப்பாயாக என்று வேண்டுவதோடு, நாமும் அவன் கட்டளைப்படி, வீண் விரயம் என்னும் வீணான வழியை விட்டும், பொது நலனில் அக்கறை கொண்டும், எல்லா விஷயத்திலும் வாழ்வோமேயானால் , அல்லாஹ்வின் எல்லாவித கோபப்பார்வையிளிருந்தும் தப்பிக்கலாம்.

அல்லாஹ் நம் அனைவரையும் அவன் பூரண நி'மத்துகள் அனைத்தையும் பெரும் பாக்கியசாலிகளாக ஆக்குவானாக !

ஆமீன்

அபு ஆசிப்.

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர் முகவைத்தமிழன்,ஷபீர் காக்கா(கவி காக்கா) மன்சூர் மச்சான்,அபூஇப்ராஹீம் காக்கா,மனித உரிமைபோராளி சகோ.உமர்,எஸ்.கே.ஸாலிஹ் காக்கா (காயல் எஸ்.கே. காக்காவின் இளவல்)அபு ஆசிப் ஆகியோருக்கு நன்றி!

அன்புடன் ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்

KALAM SHAICK ABDUL KADER said...

சமூக அக்கறையில் சளைக்காமல் பாடுபடும் அன்புத் தம்பி ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் இது போன்ற ஆக்கங்களின் மூலம் சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதே நோக்கமாக இருப்பவர் என்பதால் பாராட்டுகிறேன்; மேன்மேலும் ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

இனிய நண்பர் மன்சூர் அவர்களே! “மூன்றாம் உலகப்போர்” என்னும் தலைப்பை இக்கட்டுரையாசிரிய ஏன் இட்டார் தெரியுமா? அவர் ஒரு சிறந்த படிப்பாளி ; படிப்பாளி தான் படைப்பாளியாகிறான் (இங்குப் படைப்பாளி என்பது ஆக்கங்கள் படைப்பவர் - இதில் “ஷிர்க்” என்று எழுதி விடாதே) ஆம். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதி ஆனந்த விகடன் வார இதழில் வெளியான “மூன்றாம் உலகப்போர்” என்னும் தலைப்பிலான ஒரு தொடர் கட்டுரையில் செயற்கை உரங்களாலும், இப்படிப்பட்ட நீர் வளம் குன்றுவதாலும் வேளாண் தொழில்
வெகுவாகப் பாதிக்கப்படுவதை முன்னிட்டு “மூன்றாம் உலகப் போர்” என்ற அதே தலைப்பையும் இந்தத் தண்ணீர்ப் பற்றாக்குறைக்குப் பொருத்தமாகவே தலைப்பிட்டுள்ளார். வாழ்த்துவோம்; எழுத்தாளரின் ஆளுமை மிக்க எழுத்தாற்றலைப் புகழ்ந்துப் போற்றுவோம்; ஊக்கம் என்பதே இப்பின்னூட்டங்களாகும்

“ஊக்கு விற்பவரையும்
ஊக்குவித்தால்தான் - அவர்
தேக்கு விற்பார்”

மறைந்த கவிஞர் வாலியின் ஓர் அற்புதமான கவி வரிகள்.

Yasir said...

Great and timely article brother hithyathullah I think the war started already in Adirai :)

adiraimansoor said...

நன்பா

ஹிதாயத்துல்லாஹ் தேக்குவிப்பரோ இல்லலையோ மாக்களை தேற்றுவிப்பார். அதில் ஒன்றும் சந்தேகமில்லை
நான் சொல்லவருவது பொய்யர்களின் உருட்டும் பெரட்டும் உண்மையை உரக்கச்சொல்லும் நமக்கு வேண்டாம் என்றுதான் கருத்திட்டேனே தவிற அவரின் ஆக்கத்தை நான் சாடவில்லை தலையங்கத்தை மட்டும்தான் சாடினேன்
ஏனெனில் தினசரிகளின் தில்லுமுல்லுகளினால் தலைப்பு செய்திகள் நெஞ்சு வெடிக்கும் அளவுக்கு வரும் இதாயத்துல்லாவுக்கே தெரியும்.

என் கருத்தூட்டத்தை ஹிதாய்த்துல்லா கண்டிப்பக
அசட்டை செய்யமாட்டார் என நான் நம்புகின்றேன்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். தம்பியின் எச்சரிக்கை ஆக்கம் காலத்தின் ஓட்டத்தில் நீரின் ஓட்டமும் நின்றுவிடாமலிருக்க ஒரு முன்னேற்பாடு தேவை என்பதே! நமக்கு வீன்விரயம் என்பது தண்ணிப்பட்டபாடு! இதிலும் கட்டுப்பாடு இல்லாவிட்டால் தண்ணீருக்கு வரும் பெரும்பாடு!பிறகு சாப்பாடு?????? காற்றைமட்டும் சுவாசித்து வாழமுடியுமா?

Ebrahim Ansari said...

பாராட்டுக்குரிய விழிப்புணர்வு கட்டுரை.

ஒரு காலத்தில் நீர் நிலைகளால் சூழப்பட்ட அதிரைப் பட்டினம் இன்றுள்ள நிலை எண்ணிப்பார்த்தால் கண்களில் அருவி கொட்டும்.

ஊரில் எல்லையில் உள்ள வெள்ளைக் குளம் ஏன் விதவையாகிப் போனது? கரிசமணி ஏரி என்று மங்கலமான பெயர் பெற்ற ஏரி இன்று காட்டாமணக்கு செடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் அவலம் ஏன்? அடுத்து இருக்கும் ஆலடிக் குளம் ஒரு அடையாளச்சின்னமாக ஆகிப்போனதேன்? ஊருக்கே குடிநீர் தந்த மன்னப்பன் குளம் வறண்டு கிடைப்பதேன்? செழித்துக் கிடக்கும் செக்கடிக்குளம் இன்று மூளிஅலங்காரியாய் முடங்கிக் கிடைப்பதேன்? வரலாறு படைத்த செடியன் குளத்தின் நிலை என்ன? பள்ளிகுடத்தான் குட்டை இன்று பிளாஸ்டிக் குட்டையாகிப் போனதேன்? செட்டியா குளம் இன்று சாக்கடைகளின் ஊற்றுக்கண்ணாக ஆகிப் போனதேன்? இரட்டைப்பிள்ளைகள் எனத்திகழ்ந்த பிள்ளைமார் குளமும் அம்பட்டர் குளமும் அனாதைகளாக ஆனதேன்? சைனாங்குளமும், கினியாங்குளமும் , வெட்டிகுளமும் அன்று இருந்து இன்று மறைந்த வாழைக்குளமும் இன்று இருக்கும் நிலைகளை ஒருமுறை ஊரைச்சுற்றிப் பாருங்கள்.

ஊரில் உள்ள எல்லாக் குளங்களிலும் ஆற்றில் நீர் வரும் காலத்தில் நிரப்பாமல் விட்டுவிட்டு , அப்படியே நிரப்பினாலும் அவற்றை பாதுகாக்காமல் கற்பழித்துவிட்டு நிலத்தடி நீர் குறைந்துவிட்டது என்று ஊளையும் ஓலமும் இடுவதால் புண்ணியம் இல்லை.

வெட்டி வம்பு பேசித்திரியும் இயக்கங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணை திறக்கப் பட்டதும் ஆறுகளில் நீர் வரும்போது அவற்றை தாங்கள் தாங்கள் சார்ந்திருக்கும் தெருக்களில் உள்ள நீர்நிலைகளுக்கு உரிய பங்கை கொண்டு வந்து சேர்க்க ஒன்று திரள்வார்களா?

நமக்கு விரல்களை ஆட்டுவதைப் பற்றி விவாதிக்கவே நேரம் இருக்கிறது. நமக்கு தொப்பி போடுவது கூடுமா கூடாதா என்று கை கலப்பில் ஈடுபடவே நேரம் இருக்கிறது. நமக்கு மிம்பரின் படிகளை எண்ணவே நேரம் இருக்கிறது.

தம்பி ஹிதாயத்துல்லா அவர்களின் இந்த உணர்ச்சி மிகுந்த உருப்படியான சிந்தனைக் கட்டுரை நம்மை இனியாவது உசுப்பேத்திவிடுமா?

ஒரே பைக்கில் நாலு பேர் ஏறிக்கொண்டு ஓவென்று கத்திக்கொண்டு பட்டுக்கோட்டைக்கு நடுச்சாமத்தில் செல்லும் இளைய சமுதாயமே உன் ஊரைக் காப்பாற்று. உன்னையும் காப்பாற்று.

ZAKIR HUSSAIN said...

Bro. ஹிதாயத்துல்லாஹ் எழுதியிருக்கும் விசயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது. இல்லாவிட்டால் அதிராம்பட்டினம் 'தண்ணியில்லாக்காடு" லிஸ்ட்டில் சேர்க்கப்படும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ZAKIR HUSSAIN
Bro. ஹிதாயத்துல்லாஹ் எழுதியிருக்கும் விசயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது. இல்லாவிட்டால் அதிராம்பட்டினம் 'தண்ணியில்லாக்காடு" லிஸ்ட்டில் சேர்க்கப்படும். //

அப்படின்னா நிறைய அதிகாரிங்க மாற்றலாகி வருவாங்கன்னு சொல்லுங்க, நம்ம அரசியல் வாதிங்களுக்கு பிடித்த இடமாக போய்விடுமே !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

Assalamu alaikkum


சமூகப் பொறுப்போடும் தொலை நோக்குப் பார்வையோடும் எழுதப்பட்டிருக்கும் தரமானப் பதிவு.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

இன்று நீரின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை உலக மக்களிடையே பெரும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. இன்று உலகில் தங்கம், வைரம், வைடூரியம் என மதிப்புமிக்க பல பொருட்களாகக் கருதி அவற்றையெல்லாம் சேமிக்கின்றோம். இருப்பினும் இந்த சேமிப்புக்கள் ஒரு போதும் எமது அடுத்த சந்ததியினைக் காப்பாற்றப்போவதில்லை.

உடலில் மட்டுமல்ல உலகிலும் மூன்றிலிரண்டு பங்கு நீர்தான் காணப்படுகிறது. பூமியில் மொத்தம் 71 சதவீதம் நீரின் பகுதியாகும். இதில் 97.5 சத வீதம் சமுத்திரங்களில் காணப்படுகிறது. எஞ்சிய 2.5 சத வீதமான நீரே நிலத்தடி நீராகவுள்ளது. இதிலும் பனிப்பாறைகள், பனித்தரைகளிலிருந்து மிச்சமான 0.26 வீதமான நீரையே உலகிலுள்ள சுமார் 7 பில்லியன் மக்களும் பயன்படுத்துகின்றனர்.

தற்போது இவ்வுலகில் வாழும் ஜனத்தொகையில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றித் தவிக்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 2025ஆம் ஆண்டளவில் உலக ஜனத்தொகை 8 பில்லியன்கள் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அப்போதைய நிலைமையை சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ் காப்பற்றவேண்டும்.

உலகம் மனிதனுக்கானதல்ல. உலகில் ஓர் அங்கமே மனிதன் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவேண்டியதொன்று.

நாம் உலகுக்கு உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரவம் இல்லாமல் இருக்கலாமே.

இனியும் வேண்டாம் ஓர் உலகப்போர். காரணம் ஏற்படப்போவது அணுகுண்டால் அல்ல அதனை விட ஆபத்தை விளைவிக்கக் கூடிய "நீரினால்" என்பதனால்.

KALAM SHAICK ABDUL KADER said...

முனைவர் இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களின் “மனோகரா” வசனம் மனதுக்குள் ஒரு போர் (ஆம் மூன்றாம் உலகப்போர்) மூள வைத்த்து மூளையின் ஒரு மூலைக்குள் தங்கி என்னைப் படாத பாடுபடுத்திவிட்டது! உண்மையில் விழிப்புணர்வு ஆக்கங்களை அதிகம் எழுதியுள்ள முனைவர் இ.அ. காக்கா அவர்களால் அன்புத் தம்பி அதிரை போஸ்ட் ஹிதாயத்துல்லாஹ்(அதிரடியான ஆக்கங்கட்கும் ஆய்வுக்கும் உரியவர்)அவர்கள் பாராட்டுப் பெறுகின்றார்கள் என்பதே அவர் பெறும் பேறாகும்!

பேரூராட்சி நிர்வாகம் மற்றும் எல்லா இயக்கம் - கட்சியினரும் இவ்விடயத்தில் ஒன்றுபடுவோம்- நன்று பெறுவோம் என்ற தண்ணீர் தாகத்துடன் செயல்பட்டால், அதிராம்பட்டினம் என்றும் தண்ணீர்க்காக அதிராப் பட்டினமாகும்.

அதிரைக்கு அப்பால் அக்கரையிலிருந்து,
அதிரையின்பால் அக்கறையுடன்....

KALAM SHAICK ABDUL KADER said...

//அப்படின்னா நிறைய அதிகாரிங்க மாற்றலாகி வருவாங்கன்னு சொல்லுங்க, நம்ம அரசியல் வாதிங்களுக்கு பிடித்த இடமாக போய்விடுமே !\\

நகைச்சுவையைப் படித்து வயிறு குலுங்க சிரித்து விட்டேன், அன்புநெறியாளர் அவர்களே! “டைமிங் ஜோக்” நன்றாகவே உங்களிடம் காண்கிறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

கணினியைத் தட்டி நீ ஆயிரம் மென்பொருளைத் தயாரிக்கலாம். ஆனால், உன்னால் ஒரு நெல்மணியைக் கூட தயாரிக்க முடியாது. ...!!
அனைத்து நாடுகளும் விவசாயத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றன..!
ஆனால், நம் நாடோ விவசாய நிலங்களை அழித்து கொண்டிருக்கிறது...!

உணவு வாங்க பணம் வேண்டும் அதற்காக விவசாய நிலத்தை விற்றாய், நாளை உன் கையில் பணம் இருக்கும்...
ஆனால், உண்ண உணவு இருக்காது..
பணத்தையும் உண்ண முடியாது...
இந்த உண்மையை நாம் என்றுதான் உணரப் போகிறோமோ தெரியவில்லை..?!

kumaresan said...

தண்ணீர் குறித்த கவலையும் எச்சரிக்கையுணர்வும் மக்களிடையே பரவலாக வேண்டும். அதற்கு உதவிடும் எந்த ஒரு முயற்சியும் வரவேற்கத்தக்கது. உங்கள் முயற்சியையும் அப்படியே பார்க்கிறேன். அதே நேரத்தில் இயற்கை வளம் எப்படியெல்லாம் அரசின் கொள்கைகளால் தனியார் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறது என்ற உண்மைகளையும், மத்திய அரசின் புதிய தண்ணீர்க்கொள்கை எப்படி ஆபத்தானது என்பதையும் விளக்குவது அவசியம். இப்படிப்பட்ட நாசகரக் கொள்கைகளுக்கும் சுரண்டலுக்கும் எதிராக அனைத்துப் பகுதி மக்களும் மதம், சாதி, அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி ஒன்றுபட்டுப் போராடினால்தான் தீர்வு ஏற்படும்.

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் காக்கா,யாசீர் காக்கா,கிரவுன் காக்கா,இப்ராஹிம் அன்சாரி காக்கா,ஜாஹீர் ஹூசைன் காக்கா,தாஜுதீன் காக்கா,தம்பி அதிரை தென்றல் (Irfan Cmp),தீக்கதீர் பொறுப்பாசிரியர் சகோதரர் குமரேசன் அண்ணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!
உங்கள் அனைவரின் கருத்துகள் அனைத்தும் கட்டுரைக்கு கூடுதல் தகவல்களையும் விழிப்புணர்களையும் சேர்த்தது.அல்ஹமதுலில்லாஹ்
அன்புடன் ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு