Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தண்ணீர்… தண்ணீர்… அதிரையில் (குடி)தண்ணீர்…!!? 14

அதிரைநிருபர் பதிப்பகம் | July 25, 2013 | , , ,

அதிராம்பட்டினம் பேரூராட்சியின் முக்கிய அறிவிப்பாக இந்த வாரம் ஞயிற்று
கிழமை மற்றும் திங்கள்  கிழமைகளில் பேருராட்சியின் குடி தண்ணீர் தொட்டியில்  வால்வு (valve) மாற்றம் செய்ய இருப்பதால் இரண்டு நாட்களுக்கு பைப்பில் தண்ணீர் விநியோகம் இருக்காது என்று முறையாக ஆட்டோவில் மைக் கட்டி அறிவிப்பு செய்தார்கள் (பாரட்டத்தக்கச் செயலே).

நிற்க !

அறிவிப்பை கேட்ட பொதுமக்கள் நோன்பு நேரம் என்பதால் வீட்டில்  இருந்த அனைத்து பாத்திரங்களிலும்  குடிநீரை  நிரப்பி வைத்துக் கொண்டனர். ஆனால் பேரூராட்சியின் அறிவிப்பில் குடிநீர் விநியோகம் இருக்காது என்று அறிவித்த தினங்களில் வழமையை விட அதிக அளவில் குடி தண்ணீர் விநியோகம் இருந்தது அதனால் பொதுமக்கள் அடுத்தடுத்த மற்ற தினங்களில் (அறிவிக்கப்படாத நாட்களில்) குடிநீர் சேமித்து வைக்காது வழமை போல் தங்களது அன்றாட வேலைகளில் ஈடுபட்டு வந்த வேலையில் செய்வாய் கிழமை புதன் கிழமை ஆகிய தினங்களில் அறிவிப்பின்றி குடி தண்ணீர் விநியோகம் தடைபட்டு நின்று போய்  விட்டதால் நோன்பு நேரத்தில் பொது மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினார்.

முறையான அறிவிப்பு இல்லாததால் பள்ளிவாசல்களில் மாற்று  நடவடிக்கைகளும் எடுக்கப்படாத ஹவ்திலும்   நீர் மாட்டம் குறைந்து  கைக்கு  எட்டாத அளவுக்கு தண்ணீர்  அளவு  குறைந்ததால்  ஒழு செய்வதிலும்  பிரச்சனைகள் ஏற்ப்பட்டது.

இப்படி நோன்பு நேரத்தில் வால்வை (valve) மாற்றுவதாக முன்னுக்குப் பின் முரணான தகவலை அறிவிப்பு செய்துவிட்டு மக்களின் அன்றாட வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டதை பற்றி பேருராட்சி நிர்வாகம் கவணத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. 

அன்றாட வாழ்வை  பாதித்த  இந்த வால்வு (valve) பணியை  நோன்பு காலம் நிறைவடைந்த பின்னர் செய்தால்  என்ன?

தவறான அறிவிப்பையும்  கொடுத்து விட்டு தண்ணீருக்காக மாற்றுவழி செய்யாதது ஏன் ?

பேரூராட்சித் தலைவர் ஊரில் இல்லாத காரணத்தை வைத்து அதிகாரிகளால் தன்னிச்சையாக இந்த தடங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் அவைகள் கண்டிக்கப்பட வேண்டியவையே.

இந்த எதிர்பாராத குடிநீர் விநியோகத் தடங்களுக்கான காரணத்தை பேரூராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதிரைநிருபர் பதிப்பகம்

14 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இப்படி செயல் வடிவம் இல்லாமல் நிர்வாகம் செயல் படுதல் மிகவும் கேவலம்!இப்படி நீர்த்துபோன நிர்வாகம் இனிமேலும் இப்படி கோரிக்கையை தண்ணீரில் எழுதியதுபோல எடுத்துக்கொண்டால் இனி அவர்களின் ஆட்சியின் வாழ்(ல்)வு எண்ணப்படும்.

Shameed said...

நோன்பு நேரத்தில் வால்வு மாற்றிய செயல் கண்டிக்கத்தக்கது
இந்த வால்வு மாற்றும் சம்பவத்தால் தொழுகைகளுக்கு நிறைய இடைஞ்சல் கொடுத்து விட்டது

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இந்த புனித ரமளான் மாதத்தில் ஏதேனும் மத துவேச நோக்கில் நம் ஊர் குடிதண்ணீர் வால்வை யாரேனும் மாற்றி இருந்தால் அவர்கள் வாழ்வை தலைகீழாக மாற்ற அந்த அல்லாஹ்வுக்கு கண் சிமிட்டும் நேரத்தை விட குறைந்த நேரமே போதுமானது.

Anonymous said...

முன்னால் பே.ஊ.ஆ உதவி தலைவர் ஒரு ருசி கண்டபூனை.. அஸ்லமும் ஜெயிப்பார் தாமும் ஜெயிப்போம் அஸ்லத்தை 'டம்மி' யாக்கி விட்டு' நாமே தர்பார் நடத்தலாம் எ'ன்று கனவுக் கணக்கு போட்டாராம் அவர் போட்ட கணக்கை ஊர் போட்ட கணக்கு தவறாக்கி விட்டது. ஆதலால், ஆளும் கட்சியே சார்ந்த பே.ஊ.ஆ துணை தலைவருடன் சேர்ந்து' சேம்சைட் கோல்' அடிக்கலாம் என்று செய்திகள் கசிகிறது.. ருசி கண்டபூனை இப்போ பசி கண்ட பூனையாம்.

ஊர்சுற்றும் உமர்கயாம்

Ebrahim Ansari said...

இங்கே கேள்விப்படும் செய்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதை ஒரு தொடக்கமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போதே விழித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் ஊரின் முக்கியமான மாதத்தில் பேரூராட்சித்தலை வருக்குத்தெரியாமல் இப்படி சில்மிஷங்கள் செய்யப்படும் நிலை ஏற்படுமானால் அதற்கு அரசியல் ரீதியில் தோற்கடிக்கப்பட்ட சக்திகள் சேர்ந்து தலையீடு செய்யுமானால் சம்பந்தப் பட்ட கட்சியின் தலைமைக்கு இதை எடுத்துச்சொல்வதுடன் இதே நிலை தொடர்ந்தால் காலகாலமாக அந்தக் கட்சிக்கே எல்லா நெருக்கடியான காலத்திலும் ஆதரவு அளித்து வரும் அதிரையின் பெரும்பான்மை மக்கள் தங்களின் ஆதரவை வாபஸ் பெற்று வரும் தேர்தல்களில் அதிர்ச்சித்தோல்விவியை அளிப்பார்கள் என்பதை சுட்டிக் காட்ட வேண்டும்.

Yasir said...

Rompa kastap padorom kulichi 2 naal achu

adiraimansoor said...

இது போன்ற விஷமத்தனக்களை சும்மா விட்டுவிடக்கூடாது அனைத்து இயக்கங்களும் இது போன்ற விஷயத்தில் ஒன்றாக கைகோர்த்து அடக்கவேண்டும். இல்லை என்றால் இது தொடர் கதையாகிவிடும் இஸ்லாமியரை பேரூராட்சி தலைவராக உள்ள ஊரே இப்படி என்றால் அதுவும் நோன்பு நேரத்தில் இந்த விஷமத்தனம் நடக்குமென்றால் அதை கண்டிப்பாக தட்டிக்கேட்டே ஆகவேண்டும்
யார் இப்படி செய்தார்களோ அவர்களை இனம் கண்டு இனிமா கொடுத்தே ஆகவேண்டும் இல்லை என்றால்
இத்தனைஇயக்கங்கல் அதிராம்பட்டினத்தில் இருப்பதி அர்த்தமில்லை.

sabeer.abushahruk said...

இதன் பின்னணியை அவசியல் ஆராய வேண்டும். சம்மந்தப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்டு உண்மை நிலை அறியப்பட வேண்டும்.

இது தொடக்கம் எனில் மேலும் நடக்காமல் முடக்க ஆவண செய்ய வேண்டும்.

யாசிர்,

அங்கு நீங்கள் 2 நாளா குளிக்கல. இங்கு நாங்கள் இரண்டு வகையில் குளிக்கிறோம்.

ஒன்று தண்ணீரில்

மற்றொன்று வியர்வையில்

Unknown said...

பேரூராட்சி தலைவர் முஸ்லிம்மாக இருந்தாலும், நடைமுறையில் , செயல்பாடுகள் அனைத்தும் பெரும்பாலும் மாற்றுமத சகோதரர்களே. சாதாரண நாட்களில் கூட இந்த பிரச்சினை ஒரு கண்டிக்கத்தக்க ஒன்று.

ஆனால் இப்புனித மாதமான ரமலானில் எத்தனை குடும்பங்கள் அவதிப்பட்டிருக்கும். தண்ணீர் இல்லாமல். இது மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

முறையான அறிவிப்பு செய்ய ஆள் இல்லையா ? அல்லது நிர்வாகக்குளறுபடியா ? அல்லது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்த சதியா ? இதில் எதுவாக இருந்தாலும்

கண்டிக்கப்படவேண்டியதே !

Shameed said...

அதிராம் பட்டினம் பேரூராட்சி சார்பா டேங்கர் லாரி மூலம் ஒரு சொட்டு தண்ணீர் கூட விநியோகம் செய்யப்படவில்லை டேங்கர் லாரி உரிமையாளர்(நோன்பில்) மக்கள் படும் அவஸ்தையை பார்த்து அவர் ஏரியாவிற்கு மட்டும் தண்ணீர் விநியோகம் செய்தார் ஏதோ அவரால் முடிந்தது !!

பொது மக்களின் வரிப்பணத்தை சம்பளமாக பெற்று வைரை நிறைக்கும் பேரூராட்சி அதிகாரிகளுக்கு இப்படி ஒரு யோசனை உதிக்காமல் போனது ஏனோ ??

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கண்டிக்க வேண்டிய சம்பவம்!
இந்த தவறுக்கு பேரூராட்சி பொறுப்பேற்று இம்மாத தண்ணீர் வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!

Ebrahim Ansari said...

ஒரு சகோதர வலைதளத்தில் வந்துள்ள செய்தியின்படியும் புகைப்படம் போட்டிருந்தபடியும்

குடிநீர்ப் பற்றாக்குறையான பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் பேரூராட்சியே ஏற்பாடு செய்து கொடுத்ததாகத் தெரியவில்லை. அந்த டேங்கர் லாரியின் உறிமையாளரே செய்ததாகவே தெரிகிறது. அவரால் முடிந்த அறப்பணி.

இதைக்குறிப்பிட்டு அவரைப் பாராட்டி செய்தி வெளியிட்டு இருக்கலாம். பேரூராட்சியே ஏற்பாடு செய்ததுபோல் வெளிவிடுவது சரியல்ல. ஊரெங்கும் எந்தத்தெருவிலும் இப்படி தண்ணீர் தரப்படவில்லை. ஊடகத்திரிபுகளுக்கு உள்ளூரும் தப்பவில்லையா?

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உங்களுக்குக்கிடைய அழகிய பெர்களைக் கொண்டு அழைத்துக் கொள்ளுங்கள் - நபிமொழி !

பின்னூட்டமிடும் சகோதரர்கள் தாங்கள் விரும்பும் பெயர்களை வைத்துக் கொண்டு கருத்தாடல்களில் ஈடுபடுகிறார்கள், ஹைர் !

இருப்பினும், அதிரைநிருபர் நெறியாளுமைக்குட்பட்டு தங்களை நெறியாளருக்கு editor@adirainirubar.in என்ற மின்னஞ்சலுக்கு சுய அறிமுகம் செய்துவிட்டு தொடர வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களால் பதியப்படும் அனைத்து கருத்துகளும் மட்டுறுத்தப்படும் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

அப்துல்மாலிக் said...

ஒவ்வொரு வருடமும் மின்சாரம் கழுத்தையறுக்கும் இப்போ பஞ்சாயத்து போர்ட்.. எப்பவுமே ஒன்னுக்கு முரனாக செயல்படவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கிட்டிருக்காங்க போல..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு