Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் – தொடர் முகவுரை ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | July 11, 2013 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
உலகைப் படைத்தவனின் மிகப்பெரும் கிருபையால் “அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்” தொடர் நம் சகோதர சகோதரிகள் அனைவரின் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாது அவர்களின் அன்பான வேண்டுகோள் மேலும் மற்றுமொரு தொடரை எழுத தூண்டியது அல்ஹம்துலில்லாஹ். “அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும்” என்ற ஒப்பீட்டுத் தொடரை என்னுடைய அறிவுக்கு உட்பட்ட தேடலில் கிடைக்கும் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் அடிப்படையில் இஸ்லாமிய வரலாற்று தகவல்களை இன்றைய நம் அனைவரின் அன்றாட வாழ்கை நிகழ்வுகளோடு ஒப்பீட்டுடன் கூடியதாக அமைத்திட முயற்சி செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன் நினைவூட்டுகிறேன், மார்க்க கல்வி கற்றறிந்த அறிஞனோ, அல்லது அனுபவமிக்க எழுத்தாளனோ அல்ல, இறைவன் வழங்கிய வாய்ப்புகளைக் கொண்டு இஸ்லாமிய அறிவுத் தேடலில் கிடைக்கும் தகவல்களை தொகுத்து பகிர்ந்தளிக்கிறேன். அவைகள் அனைவருக்கும் பயனளிப்பவைகளாக இருந்தால் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

இனி தொடருக்கான அறிமுகவுரைக்குள் செல்வோம் இன்ஷா அல்லாஹ் !

இஸ்லாமிய குடும்பம் என்ற பாரதூரமான வார்த்தைக்கு ஏகப்பட்ட அர்த்தங்களை முஸ்லீம்களும் பிற சமூகத்தவர்களும் வரையறுத்து வைத்துள்ளார்கள். ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் ஏக இறைவனை மட்டும் வணங்குபவர்களாக இருக்க வேண்டும், அந்த குடும்பத்தவர்களின் சொல், செயல், வருமானம், செலவு, நடை, உடை, பாவனை, உணவு, இன்னும் பிற செயல்பாடுகள் யாவுமே அல்லாஹ் மற்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட குடும்பங்களைத் தான் இஸ்லாமிய குடும்பம் என்று நாம் சொல்வோம், இதுவே மிகப்பொருத்தமாக இருக்கும். 

அதே சமயம் ஒரு குடும்பத்தில் உள்ள சிலரோ அல்லது பலரோ அல்லாஹ்வுக்கு இணைவைத்துக் கொண்டு பிற நல்ல காரியங்கள் செய்தால் அந்த குடும்பத்தை இஸ்லாமிய குடும்பம் என்று சொல்வது நிச்சயம் பொருத்தமாகாதவை, மேலும் ஒரு குடும்பத்தில் உள்ள சிலரோ அல்லது பலரோ அல்லாஹ்வுக்கு இணையாக எதனையும் எவரையும் துணைக்கு வைத்துக் கொண்டு, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிகளை புறக்கனித்து இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத புதினங்களையும் பிறசமய கலாச்சாரங்களையும் வணக்கம் என்று எண்ணி செய்து வருவபவர்களின் குடும்பத்தை இஸ்லாமிய குடும்பம் என்று சொல்லுவது பொருத்தமாகாத ஒன்று. இங்கு குடும்பம் என்று குறிப்பிடுவது தாய், தந்தை, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவரையும் சேர்த்தே குறிக்கும். ஆகவே தான் முன்பு குறிப்பிட்டது போல் இஸ்லாமிய குடும்பம் ஒரு மகத்தான, சிறப்பான, கண்ணியமான  பாரதூரமான வார்த்தை என்பதை நாம் முதன் முதலில் நம்முடைய மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்கு முன்பு வாழ்ந்த இறைத்தூதர்கள் மற்றும் ஏகத்துவவாதிகளின் குடும்பங்களின் வாழ்வு, நபி(ஸல்) அவர்களின் வாழ்வு, அவர்களின் குடும்பத்தினர்களின் வாழ்வு, சத்திய சஹாபாக்களின் வாழ்வு, கண்ணியமிக்க மார்க்க மேதைகளின் வாழ்வு, என்று இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்தவர்களின் வரலாற்றுச் சம்பவங்களின் சிறு சிறு தொகுப்புகளைக் கொண்டு, நம்முடைய வாழ்வோடு நடைபெற்று வரும் சம்பவங்களை ஓப்பீடு செய்து நாம் எவ்வாறு படிப்பினை பெறவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் உங்கள் அனைவரின் எதிர்பார்ப்போடும் அதற்கு ஏற்றவாறும் அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை வைத்து இந்தத் தொடரை தொடர்கிறேன்.

நாம் எல்லோரும் நம்முடைய பிள்ளைகளுக்கு நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்த அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), பிலால்(ரலி), யாசிர்(ரலி), அனஸ்(ரலி), அம்மார்(ரலி), காலித் பின் வலீத்(ரலி), ஹதீஜா(ரலி), ஆயிசா(ரலி), சுமைய்யா(ரலி), உம்மு சுலைம்(ரலி), உம்மு ஹபீபா(ரலி) போன்றோரின் பெயர்களை வைக்க ஆசைப்படுகிறோம், மேலும் நம் பிள்ளைகள் அவர்கள் போல் வரவேண்டும் என்று ஆசையும் படுகிறோம் இன்ஷா அல்லாஹ். மேற்சொன்ன அனைவரும் ஏதோ வானத்திலிருந்து நேரடியாக வந்தவர்கள் அல்ல, நம்மை போல் வாழ்ந்து மரணித்த சத்தியம் போற்றிய மனிதர்கள். இவர்கள் அனைவரின் வாழ்வுக்கு பின்னால் வலிமை மிக்க இஸ்லாத்தின் தாக்கம் இருந்ததினால் இன்று வரை நம் அனைவரின் உள்ளத்திலும் நிலைத்து நிற்கிறார்கள். இது போன்ற அர்த்தமுள்ள தியாகச் செம்மல்களின் வரலாறுகளை அறிந்துள்ள நம்மிடம் எந்த அளவுக்கு இஸ்லாமிய தாக்கம் உள்ளது என்பதைப் பரிசோதித்து பார்க்க வேண்டிய அவசியம் நமக்கு வேண்டும்.

நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் முதல் நபி(ஸல்) அவர்களின் வரலாறு தொட்டு, சத்திய சஹாபாக்களின் வரலாறு, மேலும் இன்று ஏகத்துவத்துக்காக தங்களின் வாழ்நாட்களை அர்பணித்து இஸ்லாமிய சேவை செய்து வருபவர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்புகள் நிச்சயம் நம்மை நெறிப்படுத்தும். இன்ஷா அல்லாஹ்.

பொதுவாக பயான் என்றால்,  ஹதிஜா(ரலி), பிலால்(ரலி), யாசிர்(ரலி), சுமையா(ரலி), அம்மார்(ரலி), அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) போன்ற சஹாபாக்களின் வரலாற்றைத் தவிர வேறு என்ன உள்ளது என்று நினைத்தால் அது நம்முடைய அறியாமையே. ஆனால் லட்சக்கணக்கான இஸ்லாமிய் வரலாற்றுச் சம்பவங்கள் நிறைய உண்டு. நம்முடைய இஸ்லாமிய அறிவுத்தேடலை நாம் விரிவுபடுத்த வேண்டும்.

இந்த தொடருக்கான முன்னுரையாகவே இதுவரை நான் குறிப்பிட்டுள்ளவைகள்.

முந்தைய காலங்களில், இஸ்லாமிய விழிப்புணர்வு கட்டுரைகள் புத்தக வடிவிலிருந்து, இணையத்தில் வெளிவந்தது அவைகளும் ஆவனங்களாக இருக்கின்றன. சமீப காலங்களில் ஒலி மற்றும் காணொளி (ஆடியோ, விடியோ) என்று பதிக்கப்பட்டுச் செல்கிறது. எமது விருப்பம், நாம் கேட்கும் ஒவ்வொரு மார்க்க சொற்பொழிவுகளில் அனைத்தும் எழுத்து வடிவில் ஆவனப்படுத்தப்பட வேண்டும் என்பதே இன்ஷா அல்லாஹ்!. இதன் தொடர்ச்சியாக இதுபோன்ற இஸ்லாமியத் தொடர் பதிவுகளைத் தொகுத்தளிக்க இயன்றவரை முயற்சிக்கிறேன். உங்கள் அனைவரின் மேலான ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.

எதிர்வரும் புதன்கிழமை தோறும் தொடர் பதிக்கப்படும் இன்ஷா அல்லாஹ் !

M. தாஜுதீன்

13 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நிய்யத் மற்றும் வேண்டுதல் படி தொடர் துவங்கியமைக்கு நன்றி. தொடர் இலக்குவரை செல்ல இறைவன் அருள்வானாக!

குறிப்பிட்டது போல நாமும் இஸ்லாமிய குடும்பம் என்று சொல்லும் அளவுக்கு செயல்படுவோமாக!

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்ததொடரும் ஒரு சிறந்த தொடராக் எழுதப்பட்டு வாசகர்களால் படிக்கப் பட்டு இறைவனருளால் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை உண்டு. இன்ஷா அல்லாஹ். இறைவன் தங்களுக்கு வல்லமை தருவானாக!

Unknown said...

நிய்யத் மற்றும் வேண்டுதல் படி தொடர் துவங்கியமைக்கு நன்றி. தொடர் இலக்குவரை செல்ல இறைவன் அருள்வானாக!

குறிப்பிட்டது போல நாமும் இஸ்லாமிய குடும்பம் என்று சொல்லும் அளவுக்கு செயல்படுவோமாக!

Abdul Razik said...

இந்ததொடரும் ஒரு சிறந்த தொடராக் எழுதப்பட்டு வாசகர்களால் படிக்கப் பட்டு இறைவனருளால் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை உண்டு. இன்ஷா அல்லாஹ். இறைவன் தங்களுக்கு வல்லமை தருவானாக..ஆமீன்

نتائج الاعداية بسوريا said...

இன்ஷா அல்லாஹ் இத்தொடர் தொடர்ந்து நம் ஒவ்வருவரின் வாழ்வையும் செம்மைப்படுத்த உதவும் என்று நம்புவோமாக !

ஆமீன்.!

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

புதிய தொடருக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்.

Anonymous said...

தம்பி தாஜுதீன் எழுதும் 'அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும்' தொடரின் முன்னுரையே இடியுடன் கூடிய மழையோடு இல்லாமல் அமைதியான நதியினிலே ஓடம்போல் அசைந்தும் அழையாமல் இதமாக ஓடுகிறது.

அதுபோல "அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும்" வாழ்ந்த வாழ்வின் வழியில் நாமும் சிறக்க நம்மை எல்லாம் ஓடம் ஏற்றி செல்ல எல்லாம் வல்ல அல்லாஹ் துணை செய்வானாக.. ஆமீன்.

தொடர் சிறப்புற அதன் குறிக்கோள் நிறைவுற எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன்.

S. முஹம்மதுபாரூக். அதிராம்பட்டினம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

புதிய தொடர் எவ்வித இடர்களின்றி சிறப்புடன் தொடர் என் துஆ ! இன்ஷா அல்லாஹ் !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த முகவுரையை வாசித்து கருத்திட்ட சகோதரர்களுக்கும், வாசித்த பிற சகோதர சகோதரிகளுக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா..

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
புதிய தொடர் எவ்வித இடர்களின்றி சிறப்புடன் தொடர் என் துஆ ! இன்ஷா அல்லாஹ் !

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

தாஜுதீன் காக்கா அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்ஹம்துலில்லாஹ், புதிய தொடர் வரவேற்க்கதக்கவை..எந்தொரு இடையிருமின்றி இத்தொடர் முழுமை பெற வல்லோன் தாங்களுக்கு நேரத்தையும்,வல்லமையும் தருவானாக..ஆமீன்

Shameed said...

புதிய தொடர் எவ்வித இடர்களின்றி சிறப்புடன் தொடர் என் துஆ ! இன்ஷா அல்லாஹ் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு