இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறும் மூட நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் மக்களிடம் தெளிவாக்கப்பட்டு, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயத்தை உண்மையான இஸ்லாத்தின் வழியில் வாழவைக்க, ஏகத்துவக் கொள்கையுடைய மார்க்க அறிஞர்கள் மேற்கொண்ட முயற்சியில் இறைவன் உதவியால் மிகப்பெரிய மாற்றம் இஸ்லாமியர்களிடையே ஏற்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்! ஆயினும் எல்லா இஸ்லாமிய மக்களையும் அப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளிலிருந்து இன்னும் முழுமையான அளவில் வென்றெடுக்கவில்லை என்பது வருத்தமான ஒரு உண்மைதான்.
இஸ்லாமிய மாதங்களில் இப்போது நடந்துக் கொண்டிருக்கும் மாதம் 'ரஜப்' மாதமாகும். இந்த மாதத்தில் சில இஸ்லாமியர்கள் மூட நம்பிக்கைகளை வணக்கமாக செய்துவருகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் தங்களுக்கு செல்வம் கொழிக்கவேண்டும் என்பதற்காக மூட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வணக்கமான(?) 'பூரியான் ஃபாத்திஹா' என்று சொல்லப்படும் ஒன்றாகும். ஷியாக்களின் 12 இமாம்களில் ஒருவரான 'ஜாஃபர் சாதிக்' என்பவரின் பெயரை முன்னிறுத்தி, இந்த ரஜப் மாதம் 22 வது பிறையில் 'பூரியான் ஃபாத்திஹா'வை ஓதுவதற்காக வீட்டின் ஒரு அறையை பிரத்தியேகமாக கழுவி சுத்தம் செய்து, மேலே வெள்ளைத் துணியினால் பந்தல் அமைத்து, அதில் பூக்களைத் தொங்கவிட்டு அலங்கரித்தவுடன் அந்த அறைக்கே ஒரு புனிதம் வந்துவிட்டதாக எண்ணி, ஃபாத்திஹா ஓதி முடிக்கும்வரை யாரையும் உள்ளேகூட அனுமதிக்கமாட்டார்கள்! (ஓதுபவர்கள் மட்டும் உள்ளே செல்லலாம்). தயாரித்து வைத்துள்ள பூரியான்களில் 22 பூரியான்கள் மட்டும் ஓதுவதற்காக (படைப்பதற்காக) வைக்கப்படும். வணக்கம் என்ற பெயரில் அல்லாஹ்வும் அவனுடைய தூதர்(ஸல்)அவர்களும் காட்டித்தராத ஒன்றை சிந்தித்து சுயமாக உருவாக்கிக் கொண்டு, அதன்மூலம் நன்மையை அடைந்து விடலாம் என்ற தவறான எண்ணத்தில் இவ்வாறு ஏதேனும் ஒரு புதுமையை மக்கள் அவ்வப்போது நிறைவேற்றுகிறார்கள். அதிலும் 'சீரணி/நார்ஸா' என்ற பெயரில் அதற்கு வகை வகையான காம்பினேஷன் கொண்ட உணவு வகைகளும், பதார்த்தங்களும் வேறு! ஃபாத்திஹா முடிந்தவுடன் அவற்றை ஓதியவர்களுக்கும் அதை ஏற்பாடு செய்தவர்களுக்கும் (பயபக்தியுடன்) 'ரவா கஞ்சி' என்ற பாயசத்துடன் பூரியான் பரிமாறப்படும். சில பகுதிகளில் இவற்றிற்கு பதிலாக 'கீர் பூரி'யும் 'கோடா கஞ்சி'யும் படைப்பதற்கு வைத்திருப்பார்கள். (ஒருவேளை 'இவற்றில் நன்மை' என்று சொல்வதில் 'நாவிற்கும் நன்மை' என்று அர்த்தமும் உள்ளதோ? இந்த ஃபாத்திஹாவில் பூரியான் மட்டும் இல்லாவிட்டால் அதை ஓதுவதற்கு ஆலிம்கள் யாரும் வருவார்களா பாருங்கள்? 'பூரியானைப் பாத்தியா?' என்று தனக்குள் முதலில் கேட்டுக்கொண்டுதான் வந்து ஓதுவார்கள்.)
அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லியவை மட்டுமே மார்க்கம் என்பதை அறியாமல், கற்பனைக் கதைகளையே மார்க்கம் என்று நினைத்து பழகிப்போன சில பகுதி மக்கள், பூரியான் ஃபாத்திஹாவுடன் சேர்ந்த 'விறகு வெட்டி கிஸ்ஸா'வை விடிய விடியப் படிப்பதும், கேட்பதும்கூட வணக்கம் என்று எண்ணி, அதைக் கேட்பதற்காக பக்தி பரவசத்துடன் இரவெல்லாம் கண்விழித்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது? இவையனைத்தும் தங்களைப் பணக்காரர்களாக ஆக்கிவிடும் என்ற எண்ணத்தில் செய்யும் இந்த மூடப்பழக்கத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? நிதானமாக சிந்தித்துப் பாருங்கள் சகோதர, சகோதரிகளே! நீங்கள் உண்மை இஸ்லாத்தை சிந்திக்காமலும் உங்களை திருத்திக் கொள்ளாமலும் இருந்தால் அதனால் யாருக்கு நஷ்டம்... உங்களுக்குதானே? பூரியான் பாத்திஹா செய்வதால் உண்மையிலேயே ஒருவருக்கு செல்வம் வரும் என்றிருந்தால் ஏன் உங்கள் வீட்டு ஆண்களை வேலைக்கு அனுப்புகிறீர்கள்? பல ஆயிரங்கள் செலவு செய்து, உங்களைப் பிரிந்து ஏன் வெளிநாடுகளுக்கு அவர்கள் செல்லவேண்டும்? நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் பூரியான் தயாரித்து, பாத்திஹா ஓதி செல்வத்தை தலைவழிய கொட்டச் செய்யலாமே? ஆனால், பூரியான் பாத்திஹாவிற்காக கடன்பட்டும், கஷ்டப்பட்டும் அதை நிறைவேற்றுபவர்கள் எத்தனையோ பேர்!
காலமெல்லாம் ஓதிவிட்டோமே என்பதற்காகவும், இதை விட்டால் இன்னும் மோசமான நிலைக்கு ஆகிவிடுவோமோ என்று அஞ்சியும் கடன் வாங்கியாவது தொடர்ந்து ஓதிக் கொண்டிருப்பவர்களும் உண்டு. அதேபோல், இதை நடத்தாமலேயே பணக்காரர்களாக ஆனவர்களும் உண்டு. இல்லையென்று சொல்லமுடியுமா? ஆக, பணக்காரர்களாக ஆகவேண்டுமென்று இந்த பூரியான் பாத்திஹாவுக்காக பணத்தை செலவு செய்தவர்களும், அதை ஓதவென்று வீடு வீடாகச் சென்றவர்களும் அதனால் பணக்காரர்களாக ஆகவில்லை. அப்படியே அவர்களுக்கு எப்படியோ வசதி வாய்ப்பு ஏற்பட்டு செல்வந்தர்களாக ஆகியிருந்தாலும் அது பூரியான் பாத்திஹாவின் புண்ணியத்தால்தான் என்று யாரேனும் நம்பிக்கை வைத்தால், அவர்களின் 'ஈமான்' என்ற இறைநம்பிக்கையே பாழாகி, இஸ்லாத்தை விட்டும் அவர்கள் வெளியேறிவர்களாக ஆகிறார்கள். ஏனெனில், செல்வத்தைத் தருபவனும் அல்லாஹ்தான், அதை தடுத்து வைத்திருப்பவனும் அல்லாஹ்தான். அல்லாஹ் மீது வைக்கவேண்டிய இந்த நம்பிக்கை தடம் மாறினால்..? (அல்லாஹ்தான் நம்மை காப்பாற்றணும்!) தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தை கொடுக்கிறான். தான் நாடியோருக்குக் குறைக்கிறான். இதுபற்றி அல்லாஹ்தஆலா, திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்களில் 'தான் நாடியோருக்கு செல்வத்தை வழங்குவதாக' கூறுகிறான்.
"அல்லாஹ் தான் நாடியவருக்கு ஏராளமாகக் கொடுக்கிறான். (தான் நாடியவருக்கு) அளவோடு கொடுக்கிறான்.எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் அற்பமேயன்றி வேறில்லை". (அல்குர்ஆன் 13:26)
"நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான். ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்தபோதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான். மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே) நீர் கூறும். (34:39)
ஆனால் இந்த 'பூரியான் ஃபாத்திஹா'வைப் பொருத்தவரை குறுகிய காலத்தில் செல்வந்தராவதற்காக மாற்று மதத்தவர்கள் செய்யும் 'லட்சுமி பூஜை'யைக் காப்பி அடித்ததாக இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. மூட நம்பிக்கையையும், கண்மூடிப் பின்பற்றும் மடமையையும் ஒழிக்க வந்த பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்துக்கொண்டு, 'முன்னோர்கள் சொன்ன வழிமுறை' என்று அதே இஸ்லாத்தின் பெயராலேயே நாம் அத்தகைய மூடச்செயல்களை செய்துக் கொண்டிருக்கலாமா? இது உங்களுக்கு கைசேதமில்லையா? இதுபோன்ற ஒரு வணக்கத்தை அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டுள்ளானா? நபி(ஸல்) அவர்கள்தான் இதுபோன்று நமக்குக் கற்றுத்தந்தார்களா? அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கற்றுத்தந்த வழிமுறை அல்லாமல் முன்னோர்கள் செய்தவைகள் என்றோ, காலம் காலமாக நடைமுறையில் வந்தவை என்றோ நாம் ஒன்றை செய்வோமேயானால் நாளை மறுமையில் அவற்றிற்கு எந்த பலனும் கிடைக்காது என்பது மட்டுமல்ல, மார்க்கத்தில் சொல்லாத புதுமையை ஏற்படுத்திய குற்றத்திற்காக தண்டனைதான் கிடைக்கும்.
இப்னு மஸ்வூத்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்,
வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம்; நடைமுறையில் சிறந்தது நபி(ஸல்)அவர்களின் நடைமுறை; காரியங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்); பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி
ஆகவே என்னருமை இஸ்லாமிய சொந்தங்களே! திருக்குர்ஆனும் ஏராளமான நபிமொழிகளும் தமிழ் மொழியில் எப்போதோ வந்துவிட்டன. தயவுசெய்து அதைப் படித்துப் பாருங்கள். அவற்றைப் படித்து, நீங்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டால், பூரியானுக்காக பாத்திஹா ஓத வருபவர்களுக்கு இனி பூசைதான் கொடுப்பீர்கள். வணக்கம் என்று சொல்லி இன்னும் இதுபோன்ற ஏராளமான மூட நம்பிக்கைகளாலும் வழிகேடுகளாலும் உங்கள் பணத்தை சாப்பிட்டு பொருளாதார சுரண்டல் பண்ணியவர்களை/உங்கள் மறுமை வாழ்வை பாழாக்க வருபவர்களை நீங்களே திருத்த முன்வாருங்கள். இத்தகைய வழிகேடுகள், தான் காணும் கட்டுக் கதைகளை எல்லாம் தங்கள் இஷ்டம்போலக் கூறி, மக்களை வழக்கம்போல் நம்பவைத்து ஏமாற்றி, ஓசியில் தங்கள் வயிறு வளர்க்க சில ஆலிம்கள்(?) உருவாக்கியவைதான் என்பதை புரிந்துக் கொண்டு, சிறிதும் தாமதிக்காமல் உங்களை நபிவழியின் பக்கம் மாற்றிக்கொண்டு நேரான வழியில் செல்லுங்கள். ஏனெனில் மரணம் என்பது எப்போது, எந்த நொடியில் நம்மை வந்தடையும் என்பது நம் யாருக்குமே தெரியாது. அதற்குமுன் நாம் திருந்திக் கொண்டாலே தவிர, வழிதவறி வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் மரணம் சம்பவித்தால் வல்ல இறைவனின் தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. அல்லாஹ் நம்மைக் காப்பானாக! நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக! நேர்வழியில் இருப்போரை அதைவிட்டும் தடம் புரண்டுவிடாமல் காப்பானாக!
நன்றி : பயணிக்கும் பாதை - http://payanikkumpaathai.blogspot.com/2011/06/blog-post_24.html பதிக்கப்பட்ட நாள் 18-மே-2013
பரிந்துரை : அதிரைநிருபர் பதிப்பகம்
21 Responses So Far:
பூரியான் ஃபாத்திஹாவில் எனக்கு நினைவுக்கு வருவது பூரிதான்; ஃபாத்திஹாவல்ல. அந்தப் பூரியின் வடிவமும் சுவையும் பிரத்யேகமானது. சாப்பிட த்ரில்லான இனிப்பு வகை அது. (த்ரில்? பாஸ், ஹிட்ச்காக் அளவுக்குப் பேசுறிய பாஸ் – ன்னு மலேசியாக்காரன் கமென்ட்டாம இருக்கனும்)
த்ரில் எப்படியா? பொரித்த பூரியை கண்கள் பார்க்க, கடித்த வாய்க்குள் உள்ளடம் இனிக்குமே அது த்ரில் அல்லவா?
ஃபாத்திஹா ஓதாம பூரி தயாரிக்க திட்டம் வகுத்தால் தேவலாம்.
பிகாஸ், ஐ ஜஸ்ட் டோன்ட் வான்ட் டு மிஸ் தட் பூரி, யு னோ?
பணக்காரர்கள் வீடுகளில் மட்டும் இந்த நல்ல(?) காரியத்தை செய்வாங்க. ஆனாலும் அந்த் பூரி/ரவாகஞ்சியில் உள்ள டேஸ்ட் மெய்யாலுமே ஓதுரவங்க வீட்டுக்காரவங்க மறந்தாலும் இல்லாததை சொல்லி இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்ய வெச்சிடுவாங்க...
//விறகு வெட்டி கிஸ்ஸா'வை விடிய விடியப் படிப்பதும், கேட்பதும்கூட வணக்கம் என்று எண்ணி, அதைக் கேட்பதற்காக பக்தி பரவசத்துடன் இரவெல்லாம் கண்விழித்துக் கொண்டிருப்பதை// இது அவங்க செய்யும் சிவராத்திரி பூஜைமாதிரியா?
//அதை ஓதவென்று வீடு வீடாகச் சென்றவர்களும்// சாப்பிட்டு வயத்தை நிறப்பிருப்பாங்க...
"பூரியான் பாத்தியா"
தலைப்பிலேய ஒரு உணவுப்பண்டம் தலை தூக்கி நிர்ப்பதைப்பார்க்கும்போதே இந்த பாத்தியா அல்லாஹ்விடம் பொருத்தத்தை பெறுவதற்கான பாத்தியா அல்ல . பூரியான் பெறுவதற்காக உள்ள பாத்தியா என்று தெரிகிறதல்லவா ?
பூரியானை முன் வைத்தால்தான் பாத்தியா இல்லையேல் இல்லை. என்று சொல்வதுபோல் இந்த பித்அத்தான சடங்கு இன்றளவும் நம் சமுதாயத்தை விட்ட பாடில்லை. இதை ஓதி வயிறை நிரப்புவதில் அப்படி என்ன சுகத்தை காண்கின்றார்கள் என்று தெரியவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நேரிடையாக வந்து சொன்னால் கூட இவர்கள் இந்த உணவோடு சம்பத்தப்பட்ட பித் அத்தான பழக்கங்களை விடுவார்களா என்பது சந்தேகமே.
மார்க்க விஷயங்களில் பித் அத் என்று தெரிந்தும் அவர்கள் இதே போன்று சாப்பாட்டோடு, அல்லது உணவு பதார்த்தங்களோடு, அல்லது பண விவகாரங்களோடு சம்பத்தப்பட்ட சிறு சிறு பித் அத்களை விட மனமில்லாத காரணம், ஒருவனுடைய, வருமானத்தில் கை வைத்தால் , அல்லது அவனுடைய சாப்பாட்டு விஷயத்தில் கை வைத்து அவன் வயிற்றில் அடித்தால் அவனுக்கு கோபம் வருமல்லவா ? ஆதலால் , இவர்கள் மார்கத்தை விற்று பிழைப்பு நடத்துபவர்களாக இருப்பதால், இவர்கள் வயிற்றில் அடிப்பதாக நினைத்துக்கொண்டு நம் மீது எரிந்து விழுவார்கள்.
இவர்களாக திருந்தி , இது அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் அங்கீகாரம் பெறாத ஒன்று என்று நினைத்து மீண்டு வரவேண்டும் அல்லது இதற்காக அழைப்பவர்கள், இந்த பித் அத் ஆன விஷயம் ஒன்றுக்கும் உதவாதது என்று புரிந்து திருந்தி, இதற்காக மற்றவர்களை அழைப்பதை நிறுத்தவேணும் .
செல்வம் வருவதற்கான உண்மையான வழியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் சென்று பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவேணும், செல்வம் வருவதும் போதும், ஒருவனை ஏழையாக்குவதும், பணக்காரனாக்குவதும், அவனுக்கு வாரிசு கொடுப்பதும், ஒன்றும் இல்லாமளாக்குவதும், ஏக இறைவனான அல்லாஹ்வின் உரிமையின் பாற்பட்டதாகும். ஆதலால் அவனிடம் கையேந்துவதை தவிர்த்து இதேபோன்று மாற்று வழியில் செல்வத்தை தேட நினைப்பது அறிவீனத்திலும் அறிவீனமும், மார்க்க ஞான மின்மையும் , இறுதியாக நரகில் கொண்டு சேர்க்கும் , ஆரம்பமான பித் அத்தின் அஸ்திவாரங்களில் ஒன்றாகும்.
ஆதலால் உலகாதய லாபங்களை பின்னுக்குத்தள்ளி, அல்லாஹ் அனைத்திற்கும் போதுமானவன் என்ற ஆணித்தரமான நம்பிக்கையோடு செயல்பட்டால் , செலவத்தைத்தர அவன் போதுமானவன்.
அவன் கொடுத்தால் அதை தடுப்பதற்கோ,
அவன் தடுத்தால் கொடுப்பதற்கோ,
எந்தக்கொம்பனும், பிறந்ததில்லை, பிறக்கவுமில்லை , பிரக்கப்போவதுமில்லை.
அபு ஆசிப்.
பூரியான் பாத்திஹா ஓதினால் பணம் வராது....அதனை சாப்பிட்டுவிட்டு இனிப்பு நீரும் , இஸ்லாத்திற்க்கு விரோதமான காரியமாதலால்”தரித்திரமும்” தான் சேர்ந்து வரும்...அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்....ஆனாலும் பூரியானின் சுவை நாக்கில் மாறாமல் உள்ளது
பூரியான் பாத்திஹா.
பூரி யான்?
பாத்திஹா யான்? யான்?யான்?
ஒரு வாரம் முன்பு ஊரெங்கும் விராத்து சோறு. பல வீடுகளில் ஹத்தம்.
மவுத்தாப் போன பச்ச்புள்ளைகள் பெயரால் பாலில் வாழைப்பழத்தை வெட்டிப் போட்டு ரோட்டில் போற பிள்ளைகளுக்கு கரண்டியில் அள்ளி அள்ளிக் கொடுத்து .... இதெல்லாம் யான்????????????
ஓதுற லொடுத்தம்பிய போட்டு எல்லாரும் இங்கு பதயத்து படுத்துறியளோ? இல்லையோ? ஆனால் திண்ங்கிற சாமானை மரியாதைக்குறைவா அவன், இவன் என்று சொல்லாமல் மரியாதையுடன் "பூரியார்" என அழைக்குமாறு அன்போடும்,நாக்குருசியோடும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அடுத்த பதிவில் கலியாண சீர்வரிசையின் ஒரு அங்கமான "அரியதரம்" பற்றி கொஞ்சம் போட்டு தாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
my comments published some time ago in other blog regarding this matter.
எனக்குத்தெரிந்து எங்கள் ஊரில் [ அதிராம்பட்டினம் ] இதை செய்பவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் இது வரை ஒதிய "பூரியான் ஃபாத்திஹா" வுக்கு இதுவரை அவர்கள் பில்கேட்ஸ் / அம்பானி களின் வசதியை மிஞ்சி இருக்க வேண்டும். இதுவரை அப்படி நடந்ததாக தெரியவில்லை.
என் பெயர்க் காரணம்;
ஜாஃபர் சாதிக் இமாம் பிறந்த மாதத்தில் நானும் பிறந்ததால்,
அன்னாரின் நற்குணங்களை நாயன் எனக்கும் தந்தருள்வானாக.
(அதற்காக அதெல்லாம் ஓதி பேர்வைத்தார்களா என்று யாரும் கேட்டு விட வேண்டாம். அதெல்லாம் இல்லை, ஜஸ்ட் பெயர் மட்டுமே காப்பி செய்யப்பட்டேன்.)
//பாத்தியா ஓதாமே பூரி திங்க திட்டம் வகுத்தால் தேவலை//
பாத்தியா ஓதாமே பூரி திங்க ஆசையா? ''மனசு' பட்டுட்டே இந்தா திண்ணு' ன்னு வாப்பா'ன்னு கொடுக்கும் 'பறந்த' எண்ணம் கொண்டவர்கள் யாரும் இல்லை. இல்லவே இல்லை. அட்லீஸ்ட் ஒரு' ஆ......மீ.........ன் 'னாவது போட்டால்தான் பூரி! இல்லையேல் ஸாரி!
பாத்தியா ஓதிட்டு பூரி திங்கிறாங்களா? 'பூரியெ உள்ளே தள்ளிட்டு பாத்தியா ஓதுறாங்களா?' ப்ளீஸ் கிளியர் மைடவுட்டு [பூரிக்கு சின்ன'ரி'யா பெரிய'றி'யா தெரியலியே].
இது மாதிரியான மூடத்தனம் ஒழிய வேண்டுமானால் பள்ளி வாசல்களில்' மைக்' போட்டு கத்தி ஒன்னும் கதைக்கு ஆகாது.' அடுப்பங்கரை'க் காதுகளுக்கு எட்டினால் தான் ஏதோ கதை கொஞ்சம் ஓடியடையும். 'ஆட்சி அடுப்பங்கரையிலிருந்தே ஆரம்பிக்கிறது''!?
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.
//[பூரிக்கு சின்ன'ரி'யா பெரிய'றி'யா தெரியலியே].//
சின்ன' ரி '
இதில் எனக்கு ஒரு' மன வருத்தம்' என்னவென்றால் இந்த பாத்தியாவை ஒரு சிறுபயலை கூப்பிடுவது போல 'பூரியான்!'என்று 'மரியாதை குறைவாக' சொல்கிறார்களே? என்பதுதான்.'
'பூரியார்' பாத்திஹா 'என்று மரியாதையாக சொன்னால் குறைந்தா போய் விடுவார்கள்?
பெயர் கூட இந்துக்களின் புனித நகரான' பூரி-'யை குறிப்பது போல் இருக்கிறதே.?
மற்றொன்று தமிழ்நாட்டு டி-க்கடை காலை உணவு பூரி கிழங்கின் வாசனையை மூக்கும் ருசியை நாக்குக்கும் பசியை வயிற்றுக்கும் நினைவு படுத்துகிறதே!
S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்
இந்த 106வரியைதிதிரும்ப,திரும்ப படித்தாலும் அந்த மசாலாவுடன் தெரியிற பொட்டுக்கடலை யாவ்தான்.....போங்க.......
//[பூரிக்கு சின்ன'ரி'யா பெரிய'றி'யா தெரியலியே].//
சின்ன' ரி '
காதரு,
நம்ம நியூ காலேஜ் மெஸ்ல போடுவாய்ங்களே இம்மாம்பெரிய மஹா பூரி, அதுக்குக்கூட சின்ன 'ரி'தானா?
சைஸுக்குத் தகுந்த மாதிரி 'ரி' கெடையாதா?
//நம்ம நியூ காலேஜ் மெஸ்ல போடுவாய்ங்களே இம்மாம்பெரிய மஹா பூரி, அதுக்குக்கூட சின்ன 'ரி'தானா?
சைஸுக்குத் தகுந்த மாதிரி 'ரி' கெடையாதா?//
அதற்கு வைக்கப்படும் துணையும் அதோடு திருப்பிப் போடப்பட்ட முட்டையின் மெது மெதுப்பும்... 'குட்டன்' தருவாரே !
அந்த பூரிக்கு முட்டைய சாஃப்டாக்கி டேஸ்ட்டை காட்டிவிட்டது அவய்ங்கதான் காக்கா இன்னும் தொடருது !
பணம் தருமா பூரியான் ஃபாத்திஹா? ....
எப்படித்தரும் அது என்ன ஏ.டி.எம் மெஷினா?
//எனக்குதெரிந்துஎங்கள் ஊரில் .......பில்கேட்ஸ் அம்பாணி வசதிகளை... அப்படி தெரியவில்லையே!/
மருமவனே ஜாஹிரு!
அதுராம்பட்டணம் பொலிடிக்கை தெரிஞ்சுகிடனுமுனா இங்கேயே அஞ்சாறு வருஷம் கெடந்து ஊரனும். அப்பத்தான் ஊருன்னா என்னானு தெரியும்.
பூரியான் பாத்தியா பாய்தாவா வந்ததெல்லாம் அப்படியே சுவிஸ் வங்கியில் சுகமா துயில் கொள்ளுது. நான் ஹார்-வார்டில் படிக்கும்போது சுவிஸ் வாங்கி சேர்மன் என்கிளாஸ் மேட். அடிக்கடி 'கால்போட்டு' பேசுவார். '[கால்போட்டு' என்றதும் ஆட்டு கால் சூப் நினைவு வருதா? அதே இப்போ நினைக்காதே! இது பூரி-சீசன்] விஷயம் மனசோடு இருகட்டும்.
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
//சைஸுக்கு தகுந்த மாதிரி 'ரி'கிடையாதா?//
மருமவனே சபீரு!
நல்லா கேட்டிய' நச்'ன்னு ஒருகேள்வி!
அகத்தியர் முதல் ஒளவை பாட்டி வரை நாக்கை புடுங்கிகிட்டு சாவுற மாதிரி சரியான கேள்வி!
படிக்கப் போன பசங்களை பூரி டேஸ்ட் காட்டி கட்டிப் போட்ட இந்த நியூ காலேஜு கூட Big'றி' போடாமே உட்டுட்டாங்களே? அதனாலே தான் நான் காலேஜ் பக்கமே கல் வச்சு நடக்கலே! சமுதாயத்துலே ஏற்ற தாழ்வு ஒழிக்க சோஷலிசம் வந்தது போல தமிழ்லேயும் ரிறி லள னந இவைகளை ஒழிக்க அல்லது ஒலிக்க அல்லது ஒளிக்க ஒரு வழி அல்லது வளி அல்லது வலி காண அல்லது கான வேண்டும் அல்லது வேன்டும். சரி அல்லது / அள்ளது சறிதானே அல்லது தாநே.
முஹம்மதுபாரூக் அல்லது/அள்ளது முகம்மது பாறுக் அதிராம்பட்டினம் அல்லது/அள்ளது அதிறாம்பட்டணம்'
//பணம் தருமா பூரியான் ஃபாத்திஹா? ....
எப்படித்தரும் அது என்ன ஏ.டி.எம் மெஷினா?//
A.T.M. மெஷினோ இல்லையோ, லெப்பைகலுக்கு, பூரி மூலம்
பூரிப்பை கொடுக்கின்றது இந்த பூரியா பாத்தியா.
அபு ஆசிப்.
பணம் தருமா பூரியான் ஃபாத்திஹா?
எண்ணையில் பொரித்த பூரி பணத்தை தராது உடலில் கொழுப்பைத்தான் தரும்
//Shameed சொன்னது…பணம் தருமா பூரியான் ஃபாத்திஹா? // சாரி காக்கா ஏன் இவ்வளவு லேட்டு...பூரியான் முடிஞ்சி போச்சே காக்கா கொஞ்சம் ராவா பாயசம் தான் இருக்கு...
Post a Comment