Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் ADT நடத்தும் ரமளான் தொடர் சொற்பொழிவு ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | July 25, 2013 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல்ஹம்துலில்லாஹ் ! அதிரை தாருத் தவ்ஹீத் இப்புனித ரமளான் மாதத்தில் தினசரி காலை 11 மணியிலிருந்து பகல் 12 மணிவரையில் பெண்களுக்கென்று பிலால் நகர் ADT தர்பியா மையத்தில் தனியாக சொற்பொழிவும், இதேபோல் இரவு 10:15 மணி முதல் 11:30 மணி வரை ஆண்களுக்கும் பெண்களும் பொதுமேடை சொற்பொழிவு நிகழ்வு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.


மாஷா அல்லாஹ் ! மவ்லவீ முர்ஷித் அப்பாஸி அவர்களால் வழங்கப்படும் இந்த தொடர் சொற்பொழிவு நல்லதொரு வரவேற்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது !

அதிரையில் பெண்களும் ஆண்களும் ஏராளமாக நேரிலும் தங்களது வீடுகளில் இருந்த வண்ணம் ஒலிபெருக்கி வாயிலாகவும் கேட்டு பயன்பெறுகிறார்கள் என்ற தகவல்கள் மகிழ்வை தருகிறது !

வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் அதிரை சகோதரர்களுக்கும் இந்த அற்புதமான தொடர் சொற்பொழிவை கேட்க அதிரைநிருபர் வலைத்தளத்தில் தினமும் இரவு தொடர் சொற்பொழிவை நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 75லிருந்து 95 வரை பார்வையாளர்கள் நேரலையாக பார்க்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட காணொளியை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ் !



மேலும் மீதமிருக்கும் ரமளானுடைய நாட்களிலும், இவ்வாறான பயனுள்ள சொற்பொழிவுகளை கேட்டு நம் வாழ்விலும் அதற்கேற்றார்போல் பக்குவப்படுத்திக் கொண்டு குர்ஆன் ஹதீஸ் வழியில் நடக்கவும் இறுதிவரை நிலைத்திருக்கவும் அல்லாஹ் அருள்புரிவானாக !

அதிரைநிருபர் பதிப்பகம்

5 Responses So Far:

Unknown said...

அல்ஹம்துலில்லாஹ்!

எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே,

இப்புனித மாதத்தை, பயனுள்ளதாக,,பாக்கியம் நிறைந்ததாக,பரகத் பொருந்தியதாக, அல்லாஹ் நம்மிடம் எதை எதை எதிர்பார்க்கின்றானோ
அதை கேட்டுப்பெறும் நிகழ்வாக இதை ஏற்ப்பாடு செய்த அனைவரின் செயல்களையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக,!

சொர்ப்பொழிவாளர், அதை கேட்கும் ஆண்கள், பெண்கள், அனைவருக்கும்
இதன்மூலம் அல்லாஹ் நல்லதை நாடட்டும், இதன் தாக்கம் அனைவரையும்
தூய மார்க்கம் பேணும் நல்லடியார்களாக ஆக்கட்டும்.

ஆமீன்.

அபு ஆசிப்.

Adirai pasanga😎 said...

அல்ஹம்துலில்லாஹ்

இதன் தாக்கம் நம்மிடயே நல்ல மாற்றத்தை உருவாக்கி ரமலானுக்குப்பின்னும் அதன் பிரதிபலிப்பை வல்ல ரஹ்மான் நம்மிடையே ஏற்படுத்தி தருவானாகவும்.
ஒரு வேண்டுகோள் - பயான் செய்பவருக்கு நான்கு அல்லது ஐந்து பெஞ்சுகளைப் போட்டு அதன் மேல் சேர், டேபிள் வைத்து பயான் செய்ய வைத்தால் பின்னால் இருந்து பார்ப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதற்கு வாய்ப்பிருந்தால் அவ்வாறு செய்துகொள்ளவேண்டியது.

sabeer.abushahruk said...

அல்ஹம்துலில்லாஹ்!

எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே,

இப்புனித மாதத்தை, பயனுள்ளதாக,,பாக்கியம் நிறைந்ததாக,பரகத் பொருந்தியதாக, அல்லாஹ் நம்மிடம் எதை எதை எதிர்பார்க்கின்றானோ
அதை கேட்டுப்பெறும் நிகழ்வாக இதை ஏற்ப்பாடு செய்த அனைவரின் செயல்களையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக,!

சொர்ப்பொழிவாளர், அதை கேட்கும் ஆண்கள், பெண்கள், அனைவருக்கும்
இதன்மூலம் அல்லாஹ் நல்லதை நாடட்டும், இதன் தாக்கம் அனைவரையும்
தூய மார்க்கம் பேணும் நல்லடியார்களாக ஆக்கட்டும்.

ஆமீன்.

adiraimansoor said...

அல்ஹம்துலில்லாஹ்
ரமலானின் மார்க்க சொற்பொழிவின் நிழல் படம் கண்டு மிக்க மகிழ்ச்சியுற்றேன்
இப்படி ஒர் ஏற்பாட்டை செய்த தாருத்தவ்ஹீதின் அமீர் அவர்களுக்கும் ஜமீல் கக்கா மற்றும் நிர்வாகிகளுக்கும் அல்லாஹ் உடல் நலத்தையும் உள வலிமையையும் கொடுத்து இதுபோன்ற நிகழ்ச்சிகள் சகோதரர்களின் பொருளாதார ஒத்துழைப்புடன் தொடர்ந்து தொய்வின்றி நடந்து அதன் மூலியமாக மக்களின் இதயத்தில் உள்ள இருள் அகன்று நேரான பாதையில் எல்லோரும் நடந்திட இறைவன் உதவி செய்வானாக
ஆமீன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மீதமிருக்கும் ரமளானுடைய நாட்களிலும், இவ்வாறான பயனுள்ள சொற்பொழிவுகளை கேட்டு நம் வாழ்விலும் அதற்கேற்றார்போல் பக்குவப்படுத்திக் கொண்டு குர்ஆன் ஹதீஸ் வழியில் நடக்கவும் இறுதிவரை நிலைத்திருக்கவும் அல்லாஹ் அருள்புரிவானாக !ஆமீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு