காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி பின்னர் உதவித் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்து சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்ற ஹாஜி M. முகம்மது அலியார் அவர்கள் கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவாக இருந்து வருகிறார்கள். ஆகவே அவர்கள் பூரண குணம் அடைந்து விரைவில் நலமடைய இப்புனித மிக்க ரமளான் மாதத்தில் நாம் அனைவரும் துஆச் செய்வோமாக!
இப்புனித மிக்க ரமளான் மாதத்தில் மனமுவந்து கேட்கப்படும் துவாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில் கொடையாளன். படைத்தவன் அல்லாஹ்விடம் நாமும் அவர்களின் நலனுக்காக பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ் !
தகவல் : M. அப்துல் ஜலீல்
அமீரக கீழத்தெரு முஹல்லா தலைவர்
19 Responses So Far:
எனக்கு கல்வி தந்த பல ஆசிரியர்களில் இவர்களும் ஒருவர்.
அல்லா இவர்களுக்கு நீண்ட ஆயுளைக்கொடுக்க போதுமானவன்.
ஆமீன் !
அபு ஆசிப்.
//எனக்கு கல்வி கற்றுத்தந்த பல ஆசிரியர்களில் இவர்களும் ஒருவர் ஆவார்கள்.
ஆங்கில வார்த்தைகளில் கடந்தகால விணைச்சொற்களை (verbs in past tens) உச்சரிக்கும்போது வாக்குடு டாக்குடு (walked talked) என்று டு வில் முடிக்காமல் ஸ்டைலாக வாக்ட் டாக்ட்(d) என்று உச்சரிக்கச் சொல்லித்தந்ததே சார் அவர்கள்தான்.
அதற்குப் பிறகு ராசாமடம் ரோட்டில் வாக்கிங்கின்போது அடிக்கடி பார்ப்பேன். மடித்த கைலியை தளர்த்திவிட்டு சலாம் சொல்வேன். என் மாணவன் என்னும் பூரிப்பை அவர்கள் முகத்தின் காண்பேன். நமதூரைப் போல மாணவர்களுடன் நெருங்கி பழகும் ஆசிரியர்கள் எல்லா ஊர்களிலும் இருப்பார்களா என்பது சந்தேகமே.
அல்லா இவர்களுக்கு பூரண ஆரோக்யத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கப் போதுமானவன்.
ஆமீன் !
இப்புனித மிக்க ரமலான் மாதத்தில் நம் அனைவர்களின் துவாவையும் அல்லாஹ் கபூல்ச் செய்து அவர்கள் பூரண நலம் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். ஆமீன்
எங்கள் மரியாதைக்குறிய ஹாஜி. எம். முஹம்மது அலியார் சார் அவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
எங்கள் மரியாதைக்குறிய ஹாஜி. எம். முஹம்மது அலியார் சார் அவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவர்கள் பூகோளத்தின் வரைபடத்தை மனைபோட்டு பெயர் வைப்பது போன்று பாடம் நடத்துவது ஸ்டைலே தனிதான் !
நான் அவர்களிடம் படித்ததில்லை ஆனால் பழகி இருக்கிறேன்,அன்புடன் நடந்து கொள்வார்.அல்லாஹ் அவர்களுக்கு நல் சுகத்தை தருவானாக ஆமீன்!
எங்கள் மரியாதைக்குறிய ஹாஜி. எம். முஹம்மது அலியார் சார் அவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அஸ்ஸலாமுஅலைக்கும்.எங்கள் மரியாதைக்குறிய ஹாஜி. எம். முஹம்மது அலியார் சார் அவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவர்கள் பூகோளத்தின் வரைபடத்தை மனைபோட்டு பெயர் வைப்பது போன்று பாடம் நடத்துவது ஸ்டைலே தனிதான் !
இன்சா அல்லாஹ் சார் நலம் பெறட்டும்!
நலமே வேண்டி துஆவுடன்....
என்னை மாணவர்த்தலைவனாக ஆக்கியும்; வகுப்பில் முதல் மாணவனாக வருவதற்குண்டான அனைத்து வழிகளையும் காட்டியும்; இன்று வரை ஆங்கிலத்தில் புலமையுடனும், பிறர்க்குக் கற்பிக்கும் திறனுடனும் ஆவதற்கும் முழுமுதற்காரணமாகவும் அடிப்படைத் தளம் அமைத்துக் கொடுத்தும் என்றும் என் வாழ்வில் மறக்கவியலாத என் மரியாதைக்கும், மதிப்பிற்குமுறிய ஆசான் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளுக்காக இந்தப் புனித ரம்லானில் துஆ செய்கிறேன்.
என்னை ஏற்றி விட்ட ஏணி; கரை சேர்த்திட்டத் தோணி; கல்வியிற் சிறந்த ஞானி அல்ஹாஜ் அலியார் சார் அவர்கட்கு யான் பட்டிருக்கும் நன்றிக் கடனுக்கு இதை அவசியம் செய்கின்றேன்.
இன்ஷா அல்லாஹ் அவர்கள் நலம் பெறுவார்கள்(ஆமீன்)
நான் அலியார் சார் அவர்களின் மாணவன் அல்ல. ஆனாலும் சிறந்த நட்புப் பாராட்டி வருபவன். அடிக்கடி சந்திப்பவன்.
அண்மையில் அவர்கள் இழந்த ஈடுசெய்ய முடியாத இழப்பு அவர்களின் உடல் நலத்தையும் பாதித்துவிட்டது. இறைவன் அவர்களுக்கு தாங்கிக்கொள்ளும் சக்தியைதருவானாக்.
விரைவில் நலம்பெற து ஆச செய்வோம்.
பலபேரால் நீங்கள் அலியார் சாரின் தம்பியா என்று வழிமறித்துக் கேட்கப்படுபவன் நான். அப்போது என் " இல்லை மகபூப் அலி சாரின் காக்கா " என்று சொல்வேன்.
எனக்கும் அலியார் சாருக்கும் இருந்த முக ஒற்றுமையின் காரணமாகவோ என்னவோ நேற்று ஒரு அன்புச் சகோதர வலைதளத்தில் என் படத்தைப் போட்டு அலியார் சாருக்காக உடல் நலம் வேண்டி து ஆச செய்யும்படிக் கேட்டிருந்தார்களாம் . எனக்கு நிறைய அலைபேசித் தொடர்புகள் அடுக்கடுக்காய் வந்தன. நான் பள்ளியில் இருந்ததால் பார்க்க முடியவில்லை.
நான் சொன்னேன் " எனக்கும் இரண்டு நாட்களாக உடல் நலம் சரியில்லை . அலியார் சாருக்காக செய்திக்கும் படத்துக்காக எனக்கும் இந்த து ஆ சென்று சேர்ந்தால் மகிழ்ச்சியே " என்று .
ஆனால் உள்ளுக்குள் நல்ல வேளை , உடல்நலம் பற்றிய செய்தியில் போட்டோ வந்தது. வேறு இளைஞர்களின் தொடர்புடைய எதுவும் காதல், திருமணம், காவல்துறை போன்றசெய்திகளுடன் நம் போட்டோ வராமல் போனதே என்று சந்தோசம்.
நான் பள்ளியில் இருந்து வந்து பார்ப்பதற்குள் என் போட்டோ நீக்கப் பட்டு இருந்தது.
இதில் ஒன்றும் வருத்தமில்ல. ச்ச்சும்மா பதிவு செய்ய விரும்பினேன்.
//எங்கள் மரியாதைக்குறிய ஹாஜி. எம். முஹம்மது அலியார் சார் அவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவர்கள் பூகோளத்தின் வரைபடத்தை மனைபோட்டு பெயர் வைப்பது போன்று பாடம் நடத்துவது ஸ்டைலே தனிதான் !//
வகுப்பறையில் பாடம் நடத்தும் சமயம் அக்கம்பக்கத்தில் கொலையே விழுந்தாலும் திரும்பி பார்க்கக்கூடாது என்ற இவர்களின் கண்டிப்பு வருடங்கள் பல உருண்டோடியும் இன்னும் நினைவில் நிழலாடிக்கொண்டிருக்கின்றன. அல்லாஹ், ஜனாப் அலியார் சார் அவர்களுக்கு நீடித்த ஆயுளையும், ஆரோக்கியத்தையும் இப்புனித ரமளான் மாதத்தின் பரக்கத்தால் தந்தருள்வானாக...ஆமீன்.
எனக்கு கல்வி தந்த பல ஆசிரியர்களில் இவர்களும் ஒருவர்.
அல்லா இவர்களுக்கு நீண்ட ஆயுளைக்கொடுக்க போதுமானவன்.
ஆமீன் !
பாடம் நடத்தும்போது பில்டிங்கே இடிந்து விழுந்தாலும் கவனம் முழுதும் பாடத்தில்தான் இருக்கனும் என்று சொல்லி மாணவர்களை தன் பால் ஈர்த்து வைக்கும் திறன் படைத்த துடிப்பான ஆசிரியர். அலியார் சார் அவர்களின் சேவை நம் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு என்றென்றும் தேவை. வல்ல இறைவன் இவர்களின் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக்கி வைப்பானாகவும் - ஆமீன்
எங்கள் மரியாதைக்குறிய ஹாஜி. எம். முஹம்மது அலியார் சார் அவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்
நாங்கள் படிக்கும் காலத்தில் பள்ளி கட்டிடங்களுக்கு கதவு கிடையாது .
அப்பொழுது நாங்கள் பாட்டு பாடுவோம் எப்படி என்றால்,
"காதிர் முகைதீன் பள்ளியிலே கதவுகள் இல்லை
அதை காவல் காக்க காசிமை தவிர ஒருவரு மில்லை.( அப்பொழுது காசிம் காக்கா என்பவர்கள் தான் இரவுக்காவலாளி)
ஓஹோ ஓஹோ ஓஹோ ...................................
இப்படி பாடிக்கொண்டிருக்கும்பொழுது
அலியார் சார் வருவது தெரிந்தால் போதும், அவ்வளவுதான் , பாடிய வாய் அனைத்துக்கும் திண்டுக்கல் பூட்டுதான்.
அப்பொழுது மரியாதைக்குரிய அலியார் சார் அவர்கள் வருவது தெரிந்தாலே,
அரட்டை அடித்துகொண்டிருக்கும் மாணவர்கள் அனைவரும் கப் சிப் என்று வாயடைத்து விடுவார்கள் . அவ்வளவு கண்டிப்பு.
பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போழுது, யாராகிலும் வெளியில் பார்த்தால்,
இறால் விற்ப்பனைக்கு கடைக்கு இறாலை எடுத்து செல்லும் ஆச்சிகள், இறாலில் மண்ணைக்கலப்பார்கள் அது தெரியும்.
அப்பொழுது அலியார் சார் அவர்கள் , இறால் காரி இறாலில் மண்ணைக்கலந்தால் உனக்கென்ன,நீ பாடத்தைக்கவனி. என்று ஒரே மிரட்டலில்வெளியில் சென்ற நம் கண்கள் வகுப்பறைக்கு வந்துவிடும். அப்படி நகை சுவையோடு, கண்டிப்பும் கலந்த ஆசிரியர் ஜனாப் அலியார் சார் அவர்கள்.
அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்தோடு வாழ இறைவனை வேண்டி,
அபு ஆசிப்.
I praying the Almighty for our beloved sir for his speedy recovery
அன்பிற்குரிய ஆசிரியரும் என் உறவினருமான அலியார் சார் அவர்களுக்கு நீண்ட வாழ்நாளையும் பூரண சுகத்தையும் அளிக்க அல்லாஹ் போதுமானவன்.
(ஆச்சர்யம்: இருவாரங்களுக்குமுன் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது நல்லபடி கலகலப்பாகத்தானே இருந்தார்கள்!)
எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு நற்சுகத்தை தருவனாக ஆமீன். என்னுடைய அருமையான ஆசிரியர்களில் அவர்களும் ஒருவர். எனக்கு பூளோகமும் கற்று தந்தார்கள். புட்பாலும் கற்றுத்தந்தார்கள், அவர்களின் கால் சுகத்தையும் பொருட்படுத்தாது. அவர்களின் நீண்ட நாள் அயுளுக்கு இறைவனை பிரார்த்திக்கிறேன்.
--
Aslam
Post a Comment