அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அல்ஹம்துலில்லாஹ் ! தொடரின் முகவுரையில் பதிக்கப்பட்ட பின்னூட்டங்களில் ஆர்வமுடன் ஊக்கமும் உற்சாகமும் வழங்கி துஆ செய்த அன்புச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹும் ஹைரா.
இஸ்லாத்திற்காக இவ்வுலக வாழ்வைத் தியாகம் செய்த எத்தனையோ நபிமார்கள், நல்லடியார்களில் ஆண்கள் பெண்கள் இருபாலரின் வரலாற்று சம்பவங்கள் இங்கு குறிப்பிடப்படும். இதில் ஈமானிய ஆண்கள் பற்றிய வரலாற்றுச் சம்பவங்களைக் குறிப்பிட்டிருந்தால் ஆண்களுக்கு மட்டும் தானே, அல்லது ஈமானிய பெண்கள் பற்றிய வரலாற்றுச் சம்பவங்களைக் குறிப்பிட்டிருந்தால் அது பெண்களுக்கு மட்டும் தானே என்ற எண்ணம் கொள்ள வேண்டாம். ஈமான் கொண்ட ஆணாக பெண்ணாக இருந்தாலும், இஸ்லாத்தின்படி வாழ்ந்த அந்த நல்லவர்களிடமிருந்து நமக்கு என்ன படிப்பினை இருக்கிறது என்ற எதிர்பார்ப்பை உள்ளத்தில் நிறுத்திக் கொண்டு இந்த தொடரை வாசிக்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.
அல்லாஹ் தன்னுடைய அருள்மறையாம் திருமறை அல்குர்ஆனில் இறை விசுவாசிகளுக்கு உதாரணமாக சொல்லும் போது யாரைக் குறிப்பிடுகிறான் தெரியுமா? ஒரு ஆணைச் சொல்லவில்லை மாறாக இரு பெண்களை உதாரணமாக காட்டுகிறான். அதில் பிர்அவ்னுடைய மனைவியையும், மரியம்(அலை) அவர்களையும் இறை விசுவாசிகளுக்கு முன்மாதியாக சுட்டிக்காட்டுகிறான். திருக்குர்ஆனின் பின் வரும் வசனத்தை நிதானமாக அதன் பொருளுணர்ந்து வாசியுங்கள்.
وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِن فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் “இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ
மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்; நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.(1)
இங்கு அல்லாஹ் ஏன் ஃபிர்அவுனுடைய மனைவியை ஓர் எடுத்துக்காட்டாக எடுத்து வைக்கிறான் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அந்தப் பெண்மணி சாதாரண பெண்மணியல்ல. உலகத்திலே தான் மட்டுமே மிகப்பெரிய இறைவன் என்று சூளுரைத்த அந்த ஃபிர்அவுனின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள மாடமாளிகையில் வாழ்ந்து வந்த பட்டத்து ராணி தான் அந்த பெண். இவர் எப்படி இந்த உலகத்தில் வாழ்ந்திருப்பார் என்று நாம் சிந்தனை செய்து பார்க்க வேண்டும். இன்று ஒரு ஜனநாயக நாட்டின் அதிபரின் மனைவியர் எப்படி ஒரு கவுரமான வாழ்க்கை, நிம்மதியான வாழ்க்கை, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார்கள். அந்த அதிபர் தவறு செய்தால் அந்த அதிபரை மாற்ற முடியும். ஆனால் அன்றைய ஃபிர்அவுன் தன்னை எதிர்த்த அனைத்து மக்களையும் கொன்று குவித்தான், கொடுமை படுத்தினான். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நபி மூஸா(அலை) அவர்களின் ஏகத்துவ அழைப்புப் பணியைக் கேட்டு இஸ்லாத்தை ஏற்றார் அந்த ஈமானிய பெண்மணி. யாஅல்லாஹ்! எனக்காக உன்னிடத்தில், சுவர்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக, இந்த ஃபிர்அவுனிடமிருந்து, அவன் கூட்டத்தாரிடமிருந்தும் என்னை காப்பாற்றுவாயாக என்று அல்லாஹ்விடம் துஆ செய்து, இந்த உலகத்தில் கொடுங்கோலன் ஃபிர்அவுனின் மாட மாளிகை, சொகுசு வாழ்வு எனக்கு தேவையில்லை என்று அவைகளை தூக்கி தன் காலுக்கடியில் வீசிய அந்த உறுதிமிக்க ஈமானுடைய பெண்ணை உலக முஸ்லீம்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக அல்லாஹ் எடுத்துரைக்கிறானே, ஆனால் உலக ஆதாயத்திற்காக இன்று நம்மில் பெரும்பாலோர் வாழ்வு எப்படி உள்ளது என்பதை சிந்திக்க வேண்டும்.
இந்த உலகின் அற்ப ஆதாயத்திற்காக இன்றையச் சூழலில் படைத்தவன் அல்லாஹ்வை மறந்து எதையும் செய்ய துணிந்திருக்கிறோம். வட்டி வாங்குகிறோம், வட்டி கொடுக்குகிறோம், அடுத்தவனின் சொத்தை மிக எளிதாக திருடி விடுகிறோம். இஸ்லாத்தை ஆசாபாசங்களுக்காகவும் அற்பத்திற்காகவும் விற்று விடுகிறோம். உலகத்தின் அற்பமான இலாபத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சீதனக் கொள்ளை, வரதட்சனைக் கொடூரங்கள் இவைகளுக்கு முன்னின்று இருப்பது நம் சமுதாயத்து பெண்கள் அல்லவா அதில் நிறைந்து இருக்கிறோம். நம்மைச் சுற்றியிருக்கும் ஒவ்வொரு வீடுகளிலும் அதற்கான காட்டுகளைக் கண்டுவருகிறோம்.
இவ்வுலக அற்ப சுகத்திற்காக கேடுகெட்ட சினிமா, தொலைக்காட்சி தொடர் நாடகங்களைப் பார்த்து இன்பம் கண்டவர்களாக, அல்லாஹ்வை மறந்து வாழும் சமுதாயமாக அல்லவா நம் பெண்மக்கள் சிக்கியிருக்கிறார்கள்.
பல தியாகங்களின் வரலாற்றுக்கு உரிமையுடைய மார்க்கத்தில் இருந்து கொண்டு, அந்த தூய இஸ்லாம் எப்படி போனாலும் எனக்கு கவலையில்லை என்று வாழும் நாம், ஈமானில் உறுதிமிக்க பெண் (ஃபிர்அவுனின் மனைவி) அவர்களின் வாழ்விலிருந்து அவசியம் படிப்பினை பெற வேண்டும்.
அடுத்த பெண் நகை ஆபரணம் அணிந்திருந்தால், நான் அவளைவிட அதிகமாக நகை ஆபரணங்கள் அணிய வேண்டும் என்று தன் கணவனைத் தீய வழியில் சம்பாதிக்கத் தூண்டும் பேராசை கொண்ட நம் பெண் சமூகம் எப்படி முன்னுதாரன சமூகமாக இருக்க முடியும்?
ஒரு சாதாரண ஆண்மகனோ மிக எளிதாக அல்லாஹ்வுக்காக உலக ஆசையைத் தூக்கிப் போட்டுவிட்டு போய்விடுவான். அவனுக்கு எந்த பிரச்சினையும் வராது. ஆனால் ஓர் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசனின் மனைவி, பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்த அரசி, அல்லாஹ்வுக்காக இந்த உலக வாழ்வை தூக்கி எறிவது என்பது ஒரு சாதாரண காரியமல்ல. மூஸா(அலை) அவர்களை ஏற்றுக் கொண்டவர்களைக் கால் மாற்றி கை மாற்றி வெட்டுவேன் என்று சொன்னவன்தான் அந்த ஃபிர்அவுன். மூஸா(அலை) அவர்களுக்கு ஆதரவளித்த ஒரே காரணத்திற்காக ஆண் மக்களையெல்லாம் கொன்று குவித்தவன் ஃபிர் அவுன். இஸ்லாத்தை ஏற்ற ஒரே கரணத்திற்காக எவ்வளவு கொடுமைகளை ஃபிர்அவுனிடமிருந்து அந்த உறுதிமிக்க ஈமானை பெற்ற பெண் சந்தித்திருப்பார்? என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அல்லாஹு அக்பர்.
நாம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அல்லாஹ்வின் சுவனத்தை அடைந்து கொள்வதற்காக, பிர்அவுனின் மனைவி ஈமானில் உறுதிமிக்க அந்தப் பெண் தன் கணவனின் மாடமாளிகைகள் தேவையில்லை என்று தூக்கி விசினார்களே, அது போல் அல்லாஹ்வின் சுவர்கத்தை அடைந்து கொள்வதற்காக உலகத்தில் ஹராமாக்கப்பட்ட அனைத்து காரியங்களையும் தூக்கி விசியிருக்கிறோமா நாம் உள்ளச்சத்துடன் சிந்தனை செய்து பார்க்க வேண்டும்.
மார்க்க விசயத்தில் ஹக்கை (உண்மையை) எடுத்துச் சொல்லுகிறார் கணவன், அவருக்கு எதிராக பிரச்சினைகள் உருவாகிறது. உடனே மனைவி பதிலுரைக்கிறாள் “ஏன் உங்களுக்கு தேவையில்லாத வேலை, அதை வேறு யாராவது பார்த்துக் கொள்வார்கள்” என்று இவ்வுலக இன்பத்திற்காக யாரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது என்று இஸ்லாத்தை தூக்கி ஓரம் கட்டும் மனப்பான்மை அல்லவா நம்மிடம் உள்ளது. இந்தச் சூழல் நம்மில் பெரும்பாலோருக்கு இருக்கத்தான் செய்கிறது.
உலக ஆதாயத்திற்காவும், அற்ப இன்பங்களுக்காகவும் அல்லாஹ்வின் மார்க்கத்தைத் துச்சமாக நினைத்து புறக்கனிக்கும் வாழ்வு நம்முடையது என்றால், அல்லாஹ்வின் சொர்கத்திற்காக உலக இன்பங்களை தன்னுடைய காலுக்கடியில் போட்டு மிதித்த ஈமானில் உறுதி கொண்ட பெண்மணியை, அல்லாஹ் உதரணமாக காட்டும் அந்த ஃபிர்அவுனுடைய மனைவியின் வாழ்விலிருந்து நாம் படிப்பினைகள் பெற வேண்டும்.
வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாகவும் இறைத்தூதரின் தூய வழியில் நிலைத்து நின்ற நல்லோர்களிடமிருந்து படிப்பினை பெரும் நன்மக்களாகவும் ஆக்கி, அவனுக்கு மட்டுமே அஞ்சி அடிபணியும் நல்லவர்களாக்கி வைப்பானாக. ஆமீன்.
ஆதாரங்கள்:
(1) திருக்குர் ஆன் (66:11, 12)
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
M. தாஜுதீன்
13 Responses So Far:
அவர்கள் வாழ்வு பற்றிய அழகிய தகவல்கள்!
அதையே நாமும் படிப்பினையாக்கி அல்லாவுக்கு அஞ்சி நடப்போமாக!
ஜஸாக்கல்லாஹ் ஹைர் சகோ. தாஜுதீன்.
படிப்பினைகளை தாங்கி வரும் மற்றுமொரு ஒப்பீட்டு தொடர் ! இது நம் அனைவருக்குமே ஒர் உரைகல் ! நம்மை நாமே உரசிப் (ஒப்பீட்டுப்) பார்க்க வேண்டும்...!
அன்பின் தம்பி தாஜுதீன் ! அஸ்ஸலாமு அலைக்கும்.
மிகவும் அருமையான கருப்பொருளைக் கையில் எடுத்து இருக்கிறீர்கள். மிக கவனத்துடன் நடை போட்டு வருகிறீர்கள். அற்புதமாக இருக்கிறது. பாராட்டுக்கள். தொடர்ந்து சிறப்புடன் அமைய து ஆச் செய்கிறேன்.
அன்பின் தம்பி தாஜுதீன் ! அஸ்ஸலாமு அலைக்கும்.
மிகவும் அருமையான கருப்பொருளைக் கையில் எடுத்து இருக்கிறீர்கள். மிக கவனத்துடன் நடை போட்டு வருகிறீர்கள். அற்புதமாக இருக்கிறது. பாராட்டுக்கள். தொடர்ந்து சிறப்புடன் அமைய து ஆச் செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.அருமையான உதாரணங்களுடன் தம்முடைய எழுத்துத்தோரனை எச்சரிக்கைமூடுவதாகவும், நினைவுபடுத்தி நேர்வழி நடக்க உதவுவதாகவும் அமையப்பெற்றாதாக இருப்பது இந்த தொடரின் சிறப்பு. மேலும் பல ஆதாரண உதாரணங்களுடன் தொடருங்கள். அல்லாஹ் துணைனிற்பான்.,ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அழகிய உதாரணங்களுடன் அழகிய ஹதீஸ்கள், வாழ்க்கையை, நேராணப் பாதையில் அமைத்துக் கொள்வதற்கு நல்ல தகவல்களுடன் கூடிய தொடர். மாஷா அல்லாஹ்.
ஆழமாக சிந்திக்கத்தூண்டும் எழுத்து / சிந்தனை
எல்லா நலமும் வளமும் தங்களுக்கு கிடைக்க வல்லோனிடம் பிரார்த்திக்கிறேன்
ஒரு அழகிய வாழ்க்கைத்தொகுப்புகளை அள்ளித்தர இருக்கின்ற ஒரு தொடர்.
அதுவும் கற்ப்புக்கு இலக்கணமாக அல்லாஹ் குரானிலே கூறுகின்ற இரண்டு பெண்மணிகளை குறித்து ஆரம்பித்தலே தொடரின் ஆரம்பத்திற்கு வலு.
ஏனனில், பெருமானார் (ஸல்) அவர்கள் மி'ராஜ் பயணம் மேற்கொண்ட சமயம் அல்லாஹ் நரகம் சொர்க்கம் இரண்டின் அற்ப்புத விஷயங்களை காட்டி பின்னால் நடக்க இருக்கின்ற, தண்டனைகள், , சொர்க்கத்தின் ஆனந்த இன்பங்கள் அனைத்தையும் காட்டியபொழுது, நரகத்தில் மட்டும், பெண்கள் அதிகமாக இருப்பதாக அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு காட்டப்பட்டது. ஏன் பெண்கள் அதிகமாக நரகில் இருக்கின்றார்கள் என்று வினவிய பொழுது,
அவர்கள் அதிகமாக சபிக்கிறார்கள். வீணான விஷயங்களில் பொழுதை அதிகமாக கழிக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது
இப்பேர்ப்பட்ட பெண் சமுதாயம் , இன்ஷா அல்லாஹ் இந்த தொடரை படிக்கும் பொழுதாவது, ஈமான் உறுதியாகி, மற்றவர்களை சபிப்பதை விட்டும், விலகி நிற்கட்டும், தன் கணவனுக்கும், தன் பெற்றோருக்கும் , மார்க்கம் சொன்ன ஹலாலான விஷயத்தைத்தவிர , மற்றெதிலும் அடிபணியாமல் இருக்கட்டும்
அல்லாஹ் இத்தொடரை படிக்கும் அனைவரின் உள்ளத்திலும், ஈமான் என்ற வெளிச்சம் பரவ காரணமாக அமைக்கட்டும்.
ஆமீன்.
அபு ஆசிப்.
.
//அடுத்தவீட்டுபெண் நகைகள்அணிந்து இருந்தால் அவளைவிட நான் அதிகம் நகை அணிய வேண்டும்/
அஸ்ஸலாமு அலைக்கும்,
பிரச்சனைகளின் ஆணி வேறை தொட்டு இருக்கிறீர்கள். இன்றைய இஸ்லாமிய சமூக பிரச்சனைகளுக்கு பிறப்பிடமாக பெண்களின் போட்டியும் பொறாமையும் அமைந்து இருக்கிறது. இவர்களின் எல்லை மீறிய பேராசை சமுகத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பது அல்லாவே அறிவான். இதுபோன்ற நல்ல தொடர்கள் பெண்களின் இதயங்களை தொட்டால் நல்ல விளைவுகளை காணலாம்.
மென்மையான இனிய மொழி நடை கருத்துகளை மனதில் எளிதில் பதிக்கிறது. இதுபோன்ற இன்னும் பல தொடர்கள் எழுதும் பாக்கியத்தை அன்புத் தம்பி தாஜூதீனுக்கு அருள எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன். ஆமீன்.
S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்
அஸ்ஸலாமு அலைக்கும்,
வாசித்து கருத்திட்ட என்னுடையை மூத்த சகோதரர்கள் அனைவருக்கும் வாசித்த அனைத்து சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி... ஜஸக்கல்லாஹ் ஹைரா..
ஒவ்வொரு பதிவிலும் நிறைய சுவாரஸ்யமானதாக நிச்சயம் இருக்கும். இன்ஷா அல்லாஹ்.
Exellent article bro tajudeen may Allah shower his blessings on you keep going bro
அழகிய தொகுப்பு பல அறிய வேண்டிய தகவல்கள்
Post a Comment